Saturday, March 03, 2012

ஹதீஸ் கலை அறிவோம்: மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்கள்


முந்தைய பகுதிகள்:




2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது) 

ஏற்கப்படாத ஹதீஸ்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது, மவ்ளூவு என்ற வகை ஹதீஸ்களாகும். மவ்ளூவு என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாதவற்றை – செய்யாதவற்றை – அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும். 
  • திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர் முரணாகவும், எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவையாகவும் அமைந்தவை.
  • புத்தியில்லாதவனின் உளறலுக்கு நிகராக அமைந்தவை.
  • அறிவிப்பாளரில் ஒருவரோ, பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.
  • இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி, தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.

மேற்கண்ட அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதன் அடிப்படையில் அமல் செய்யக் கூடாது. 

இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. 

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் பற்றி இந்த விபரம் போதுமென்றாலும் இதில் அதிக விழிப்புணர்வு நமக்கு அவசியம் என்பதால் இது குறித்து இன்னும் சில விபரங்களைப் பார்ப்போம். 

முதலில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் ஏன், எப்படி சமுதாயத்தில் நுழைந்தன? ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டதன் நோக்கம் என்ன? என்பதை அறிந்து கொள்வோம். 

1. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்கு இந்த வளர்ச்சி பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய் தங்கள் தலைமை பறி போய் வருமானம் தடைப்பட்டுப் போய் விடுமோ என்றெல்லாம் கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர். 

இஸ்லாத்தின் பெரு வளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும், எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். 

இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டி விட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே திருக்குர்ஆன் எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்தது. ஆனால் ஹதீஸ்கள் எழுத்து வடிவில் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் வாய்மொழி அறிவிப்புகளாகவே மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வந்தது. எனவே ஹதீஸ் என்ற பெயரில் இட்டுக்கட்டி பரப்பினால் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெறலாம் என்று எண்ணி இட்டுக் கட்டினார்கள். 

நம்ப முடியாத உளறல்களையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் கூறியதாகப் பரப்பலானார்கள். 

இவற்றையெல்லாம் கேட்பவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள். 

كشف الخفاء - (ج 2 / ص 412)

ومن الأحاديث المكذوبة على رسول الله صلى الله عليه وسلم حديث : من قال لا إله إلا الله خلق الله من كل كلمة طائرا له سبعون ألف لسان في كل لسان سبعون ألف لغة يستغفرون الله تعالى له . ومن فعل كذا وكذا أعطي من الجنة سبعين ألف مدينة في كل مدينة سبعون ألف قصر في كل قصر سبعون ألف حوراء

யாரேனும்  லாயிலாஹ இல்லல்லாஹ் என்று  கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதாயிரம்  நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு  நாக்கும் எழுபதாயிரம் பாஷைகளைப்  பேசும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 2)

والباذنجان شفاء من كل داء

கத்தரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 2)

الباذنجان لما أكل له

எந்த நோக்கத்திற்காக கத்தரிக்காய் சாப்பிடுகிறோமோ அந்த நோக்கம் நிறைவேறும். 

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 161)

حديث عليكم بالعدس فإنه مبارك فإنه يرق له القلب ويكثر الدمعة وفي لفظ قدس العدس على لسان سبعين نبيا

பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இதயத்தை மென்மையாக்கும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)

لو كان الأرز رجلا لكان حليما ما أكله جائع إلا أشبعه

நெல், ஒரு மனிதனாக இருந்தால் அது  மிகவும் சகிப்புத் தன்மையுடையதாக  இருந்திருக்கும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)

أحضروا موائدكم البقل فإنه مطردة للشيطان

உங்கள் உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது  ஷைத்தானை விரட்டியடிக்கும். 

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 8)

أسخنت لرسول الله صلى الله عليه و سلم ماء فى الشمس فقال لا تفعلى يا حميراء فإنه يورث البرص

ஆயிஷாவே! சூரிய வெளிச்சத்தால்  சூடாக்கப்பட்ட தண்ணீரில்  குளிக்காதே! அது வெண் குஷ்டத்தை  ஏற்படுத்தும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)

من لم يكن له مال يتصدق به فليلعن اليهود والنصارى

தர்மம் செய்ய ஏதும் கிடைக்காவிட்டால் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும்  சபியுங்கள்! அது தர்மம் செய்ததற்கு நிகராக அமையும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)

ثلاثة تزيد في البصر النظر إلى الخضرة والماء الجاري والوجه الحسن

பசுமையான பொருட்கள், ஓடுகின்ற தண்ணீர், அழகிய முகம் ஆகியவற்றைப்  பார்ப்பது, பார்க்கும் திறனை அதிகரிக்கும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)

النظر إلى الوجه الجميل عبادة

அழகான முகத்தைப் பார்ப்பது ஒரு வணக்கமாகும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)

الزرقة في العين يمن

கண்கள் நீல நிறமாக இருப்பது ஒரு பாக்கியமாகும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)

أكل السمك يوهن الجسد

மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)

من أخذ لقمة من مجرى الغائط والبول فغسلها ثم أكلها غفر له

சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)

 إن الله خلق السموات والأرض يوم عاشوراء

ஆஷுரா நாளில் அல்லாஹ் வானங்களையும் பூமிகளையும் படைத்தான். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)

عليكم بالملح فإنه شفاء من سبعين داء

உப்பை விட்டுவிடாதீர்கள். உப்பில் எழுபது நோய்களுக்கு நிவாரணம் உள்ளது. 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)

ما من رمان إلا ويلقح بحبة من رمان الجنة

எந்த ஒரு  மாதுளம் பழத்திலும் அதன் ஏதோ ஒரு விதையில் சொர்க்கத்தின்  தண்ணீர் இருக்கும். 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)

المجرة التي في السماء من عرق الأفعى التي تحت العرش

ஆகாயத்தில் உள்ள பால்வெளி, அர்ஷின் கீழ் இருக்கும் பாம்பின் வியர்வையினால் படைக்கப்பட்டது. 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)

شكى إلى النبي صلى الله عليه وسلم قلة الولد فأمره أن يأكل البيض والبصل

முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான  சந்ததிகள் பெற முடியும். 

الفوائد الموضوعة في الأحاديث الموضوعة للكرمي - (ج 1 / ص 99)

شاوروهن وخالفوهن -يعني النساء

பெண்களிடம் ஆலோசனை கேளுங்கள் ! ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள்! 

المنار المنيف - (ج 1 / ص 108)

الدجاج غنم فقراء أمتي

கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும். 
 المنار المنيف - (ج 1 / ص 109)

لو يربي أحدكم بعد الستين ومئة جرو كلب خير له من أن يربي ولدا

160 ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தை பெற்று வளர்ப்பதை விட நாய் வளர்ப்பது மேலாகும். 

இப்படி ஏராளமான பொய்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டினார்கள்.

நடைமுறையில் இவை யாவும் பொய் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது.

கத்தரிக்காய் அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இல்லை.

மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தவும் இல்லை.

பருப்பு சாப்பிடுவதற்கும், இதயம் இளகுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

கீரைக்கும் ஷைத்தானுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

அர்ஷுக்குக் கீழே பாம்பும் கிடையாது. அதிலிருந்து பால்வெளி படைக்கப்படவும் இல்லை. 

சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட சிறிய குளம் குட்டைகளில் குளிக்கும் இலட்சக்கணக்கான மக்களில் யாருக்கும் குஷ்டம் வரவில்லை.

ஓடுகின்ற தண்ணீருக்குப் பக்கத்தில் வசிப்பவர்களும், ஊட்டியில் பசுமையான இடங்களை அன்றாடம் பார்ப்பவர்களும், அழகான முகம் படைத்த மனைவியைப் பெற்றவர்களும் பார்வைக் குறைவுக்கு ஆளாகின்றனர். 

நீல நிறக் கண்கள் படைத்தவர்கள் தரித்திரம் பிடித்தவர்களாகவும் இருக்கின்றார்கள்.

வானம், பூமியைப் படைத்து இரவு பகல் ஏற்பட்ட பிறகு தான் ஆஷுரா நாளோ வேறு நாளோ ஏற்படும். அதற்கு முன்னாள் ஆஷுரா நாளும் வேறு எந்த நாளும் இருந்திருக்க முடியாது. 

இவற்றைப் பார்க்கும் போது இவ்வாறு கூறியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீது சந்தேகம் ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் மேற்கொண்ட செய்திகளைப் புனைந்தனர் என்பது தெளிவாகும். 

2. ஆர்வக் கோளாறு:

மார்க்கத்தில் ஆர்வமிருந்தும் அறிவு இல்லாத மூடக் கூட்டத்தினர் நல்ல நோக்கத்தில் ஹதீஸ்களைச் சுயமாகத் தயாரித்தனர். 

மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களுக்கு குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எவ்வளவோ சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. அவை இவர்களுக்குப் போதாததால் அந்த வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கினார்கள். 

இருக்கின்ற வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கியதோடு நின்று விடவில்லை. புதிது புதிதாக வணக்கங்களையும் பொய்யான ஹதீஸ்கள் மூலம் உருவாக்கினார்கள். 

நூஹு பின் அபீ மர்யம் என்பவர் திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனி சிறப்புகளைக் கூறும் ஹதீஸ்களைத் தயாரித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 

أسنى المطالب في أحاديث مختلفة المراتب محمد بن درويش - (ج 1 / ص 29)

أحاديث فضل سور القرآن مائة وأربعة عشر حديثا ذكرها الزمخشري والبيضاوي تبعا للواحدي كلها كذب على رسول الله واتهم المحدثون بوضعها نوح بن ابي مريم وقيل غيره والله أعلم

நூஹ் பின் அபீமர்யம் 114 அத்தியாயங்களின் சிறப்பைக் கூறும்  114 ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்.

اللآلي المصنوعة - (ج 1 / ص 208)

روى نوح بن أبي مريم الجامع في فضائل القرآن سورة سورة عن رجل عن عكرمة عن ابن عباس فقيل له من أين لك هذا قال لأن الناس قد اشتغلوا بمغازي ابن إسحاق وغيره فحرضتهم على قراءة القرآن

இவரிடம் இந்த ஹதீஸ்கள் உமக்கு எப்படிக் கிடைத்தன என்று கேட்கப்பட்ட போது மக்கள் இப்னு இஸ்ஹாக் என்பவர் எழுதிய வரலாற்று நூலில் ஈடுபாடு காட்டினார்கள். அவர்களைக் குர்ஆன் பக்கம் ஈர்ப்பதற்காக நான் தான் இட்டுக்கட்டினேன் என்று கூறினார்

சூரத்துல் பாத்திஹா, சூரத்துல் ஆல இம்ரான், சூரத்துல் பகரா, ஆயத்துல் குர்ஸீ, பகராவின் கடைசி இரு வசனங்கள், கஹ்பு அத்தியாயம், குல்ஹுவல்லாஹு அத்தியாயம், குல்அவுது பிரப்பில் ஃபலக், குல்அவுது பிரப்பின்னாஸ் அத்தியாயங்கள், இதா ஸுல்ஸிலத், குல்யா அய்யுஹல் காஃபிரூன், தபாரக்கல்லதீ போன்றவை தவிர மற்ற அத்தியாயங்களின் சிறப்புகள் பற்றி கூறப்படும் ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப்பட்டவை. 

المنار المنيف - (ج 1 / ص 111)

ومنها أحاديث الاكتحال يوم عاشوراء والتزين والتوسعة والصلاة فيه وغير ذلك من فضائل لا يصح منها شيء ولا حديث واحد و لا يثبت عن النبي صلى الله عليه و سلم فيه شيء غير أحاديث صيامه وما عداها فباطل

ஆஷுரா நாளில் சுருமா இட வேண்டும்; அலங்கரித்துக் கொள்ள வேண்டும்; குடும்பத்துக்கு அன்றைய தினம் அதிகமாகச் செலவிட வேன்டும் என்பது போன்ற ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. ஆஷூரா தினத்தில் நோன்பு வைப்பது பற்றிய ஹதீஸைத் தவிர மற்ற அனைத்துமே ஆதாரமற்றதாகும்

(அந்நாளில் மூஸா நபி காப்பாற்றப்பட்டார்கள். அந்நாளில் நோன்பு நோற்க வேண்டும் எனும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை) 

إحياء علوم الدين ومعه تخريج الحافظ العراقي - (ج 1 / ص 273)

حديث البداءة في قلم الأظافر بمسبحة اليمنى والختم بإبهامها وفي اليسرى بالخنصر إلى الإبهام لم أجد له أصلا وقد أنكره أبو عبد الله المازري في الرد على الغزالي

நகங்களை இன்னின்ன நாட்களில் வெட்ட வேண்டும். முதலில் இந்த விரலில் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவை அனித்தும் ஆதாரமற்றவை

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 193)

حديث صلاة بخاتم تعدل سبعين بغير خاتم قال في المقاصد موضوع

மோதிரம் அணிந்து தொழுவது, மோதிரம் அணியாமல் தொழும் எழுபது தொழுகைகளை விடச் சிறந்தது. 

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 188)

أن الصلاة بعمامة تعدل بخمس وعشرين وجمعة بعمامة تعدل سبعين جمعة بغير عمامة إن الملائكة يشهدون الجمعة متعممين ولا يزالون يصلون على أصحاب العمائم حتى تغرب الشمس قال ابن حجر موضوع

தலைப்பாகை அணிந்து தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் இருபத்தி ஐந்து தொழுகைகளை விடச் சிறந்தது. 

المنار المنيف - (ج 1 / ص 96)

وكل حديث في ذكر صوم رجب وصلاة بعض الليالي فيه فهو كذب مفترى كحديث من صلى بعد المغرب أول ليلة من رجب عشرين ركعة جاز على الصراط بلا حساب

ரஜப் மாத நோன்பு பற்றி கூறப்படும் அனைத்து ஹதீஸ்களும் ஆதாரமற்றவை.

المنار المنيف - (ج 1 / ص 98)

ومنها 15 أحاديث صلاة ليلة النصف من شعبان

 175 - كحديث يا علي من صلى ليلة النصف من شعبان مئة ركعة بألف قل هو الله أحد قضى الله له كل حاجة طلبها تلك الليلة وساق جزافات كثيرة وأعطي سبعين ألف حوراء لكل حوراء سبعون ألف غلام وسبعون ألف ولدان إلى أن قال ويشفع والداه كل واحد منهما في سبعين

ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவில்  நூறு ரக்அத் தொழுவது மற்றும் அந்த இரவின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள் அனைத்துமே ஆதாரமற்றவை 

الموضوعات للصغاني - (ج 1 / ص 72)

ومنها الأحاديث الموضوعة في فضيلة رجب

ரஜப் மாதத்தின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. 

كشف الخفاء - (ج 2 / ص 421)

وباب صلاة الرغائب وصلاة نصف شعبان وصلاة نصف رجب وصلاة الإيمان وصلاة ليلة المعراج وصلاة ليلة القدر وصلاة كل ليلة من رجب وشعبان ورمضان ، وهذه الأبواب لم يصح فيها شئ أصلا . وباب صلاة التسابيح لم يصح فيه حديث . وباب زكاة الحلي لم يثبت فيه شئ

ஷஃபான் பதினைந்துக்கான தொழுகை, ரஜப் பதினைந்துக்கான தொழுகை, மிஃராஜ் இரவுத் தொழுகை, லைலதுல் கத்ர் இரவுக்கான தொழுகை குறிப்பிட்ட பகல் குறிப்பிட்ட இரவுக்கென்று குறிப்பிட்ட வணக்கங்கள் ஆகிய அனைத்து ஹதீஸ்களும் ஆதாரமற்றவை. 

முஹம்மத் என்ற பெயரைக் கேட்டவுடன் கட்டை விரல் நகங்களால் கண்களைத் தடவுதல் 

அமல்களில் ஆர்வமூட்டுவதாக எண்ணி இட்டுக் கட்டப்பட்டவைகளுக்கு இவை உதாரணங்கள். 

3. தனி மரியாதை பெறுவதற்காக:

மார்க்க அறிஞர்களுக்கு மற்ற மதங்களில் உள்ளது போன்ற அந்தஸ்து இஸ்லாத்தில் இல்லை. மற்ற மதங்களில் கடவுளின் ஏஜென்டுகளாக மத குருமார்கள் மதிக்கப்படுகின்றனர். புரோகிதர்களாகச் செயல்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் அதை அறவே ஒழித்து விட்டது. 

இதைக் கண்ட போலி அறிஞர்கள் மற்ற மதங்களில் உள்ளது போல் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என்பதற்காக ஹதீஸ்களை உருவாக்கிக் கொண்டார்கள். 

الؤلؤ المرصوع للقاوقجي - (ج 1 / ص 2)

حديث إذا جلس المتعلم بين يدي العالم فتح الله عليه سبعين بابا من الرحمة ولا يقوم من عنده إلا كيوم ولدته أمه وأعطاه الله بكل حرف ثواب ستين شهيدا موضوع

  تنزيه الشريعة المرفوعة - (ج 1 / ص 283)

حديث إذا جلس المتعلم بين يدى العالم فتح الله تعالى عليه سبعين بابا من الرحمة ولا يقوم من عنده إلا كيوم ولدته أمه وأعطاه الله بكل حرف ثواب ستين شهيدا وكتب الله له بكل حديث عبادة سبعين سنة وبنى له بكل ورقة مدينة كل مدينة مثل الدنيا عشر مرات

ஆலிமுக்கு முன்னால் மாணவர்கள் அமர்ந்தவுடன் அவனுக்கு அல்லாஹ் தனது அருளின் எழுபது வாசல்களைத் திறந்து விடுகின்றான். அவரை விட்டு எழும் போது அன்று பிறந்த பாலகனைப் போன்று அவன் எழுகின்றான். அவன் கற்ற ஒவ்வொரு எழுத்துக்காகவும் ஒரு ஷஹீதுடைய நன்மை அல்லாஹ் தருவான். 

تذكرة الموضوعات للفتني - (ج 1 / ص 8)

إن أهل الجنة ليحتاجون إلى العلماء في الجنة وذلك أنهم يزورون الله في كل جمعة فيقول تمنوا على ما شئتم فيلتفتون إلى العلماء فيقولون ماذا نتمنى على ربنا فيقولون تمنوا كذا وكذا

சொர்க்கத்திலும் உலமாக்கள் தேவைப்படுவார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அல்லாஹ்வை சொர்க்கவாசிகள் சந்திப்பார்கள். வேண்டியதைக் கேளுங்கள் என்று அல்லாஹ் கூறுவான். அவர்களுக்கு என்ன கேட்பது என்று தெரியாததால் உலமாக்களிடம் சென்று கேட்பார்கள். இன்னின்னதைக் கேளுங்கள் என்று உலமாக்கள் சொல்லிக் கொடுப்பார்கள். 

 الؤلؤ المرصوع للقاوقجي - (ج 1 / ص 6)

حديث إن العالم والمتعلم إذا مرا على قرية فإن الله تعالى يرفع العذاب عن مقبرة تلك القرية أربعين يوماً لا أصل له

ஒரு ஆலிமோ அல்லது ஆலிமுக்குப் படிக்கும் மாணவரோ ஒரு ஊரைக் கடந்து சென்றால் அவ்வூரில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நாற்பது நாட்கள் வேதனையை அல்லாஹ் நிறுத்தி விடுவான். 

الؤلؤ المرصوع للقاوقجي - (ج 1 / ص 11)

حديث حضور مجلس عالم أفضل من صلاة ألف ركعة أورد ابن الجوزي في الموضوعات

ஒரு ஆலிமுடைய சபையில் அமர்வது ஆயிரம் ரக்அத்கள் தொழுவதை விடச் சிறந்தது. 

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 286)

حديث علماء أمتي كأنبياء بني إسرائيل قال ابن حجر والزركشي لا أصل له

என் சமுதாயத்தில் உள்ள உலமாக்கள் பனீ இஸ்ரவேலர்களின் நபிமார்களைப் போன்றவர்கள். 

كشف الخفاء - (ج 2 / ص 220)

من أذل عالما بغير حق أذله الله يوم القيامة على رؤوس الخلائق

ஒரு ஆலிமை யாரேனும் அவமானப்படுத்தினால் கியாமத் நாளில் மக்கள் மத்தியில் வைத்து அல்லாஹ் அவரை அவமானப்படுத்துவான். 

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 285)

حديث من زار العلماء فقد زارني ومن صافح العلماء فكأنما صافحني ومن جالس العلماء فكأنما جالسني ومن جالسني في الدنيا أجلس الي يوم القيامة في إسناده كذاب

யாரேனும் உலமாக்களைச் சந்தித்தால் அவர் என்னைச் சந்தித்தவர் போலாவார். உலமாக்களிடம் முஸாபஹா செய்தால் அவர் என்னிடம் முஸாபஹா செய்தவர் போன்றவராவார். 

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 287)

حديث مداد العلماء أفضل من دم الشهداء

ஆலிமுடைய பேனாவின் மைத்துளி ஆயிரம் ஷஹீதுகளின் இரத்தத்தை விடச் சிறந்தது. 

ரகசியமான ஒரு இல்மு (ஞானம்) உள்ளது. அதை எனது நேசர்களுக்கு மட்டும் தான் நான் வழங்குவேன். எந்த மலக்கும் எந்த நபியும் இதை அறிய முடியாது என்று அல்லாஹ் கூறுவதாக அறிவிக்கப்படும் ஹதீஸ். 

இவையெல்லாம் போலி மார்க்க அறிஞர்கள் தங்களது மதிப்பை உயர்த்திக் கொள்வதற்காக இட்டுக்கட்டியவையாகும். 

4. மன்னர்களை மகிழ்விக்க:

மன்னர்களின் தவறுகளை நியாயப்படுத்தவும், அவர்களுக்கு மக்கள் அதிகமான மரியாதை தர வேண்டும் என்பதற்காகவும் போலி அறிஞர்கள் பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள். 

மன்னர் மஹ்தி என்பவரின் ஆட்சியின் போது, அவருக்கேற்ப ஹதீஸ்களை இட்டுக்கட்டிய கியாஸ் பின் இப்ராஹீம் என்பவர் இதற்கு உதாரணமாகக் கூறப்படுகின்றார்.  
  • மன்னர்களுக்குத் தண்டனை இல்லை
  • மன்னரின் அனுமதியின்றி ஜும்ஆ இல்லை

என்பன போன்ற ஹதீஸ்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இது மன்னர்களுக்காகச் சொன்னதால் இவை பிரபலமாகவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இத்தகைய பொய்கள் கிடைக்கின்றன. 

5. இயக்க வெறி:
  • மத்ஹபு வெறி, இயக்க வெறி, இனவெறி, ஒரு மனிதன் மீது கொண்ட பக்தி வெறி போன்ற காரணங்களுக்காகவும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.
  • மத்ஹபு இமாம்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் தயாரிக்கப்பட்ட ஹதீஸ்கள்.
  • அலீ (ரலி) யைப் புகழ்ந்தும் மற்ற நபித்தோழர்களை இகழ்ந்தும் கூறக்கூடிய ஹதீஸ்கள்
  • துருக்கியர், சூடானியர், அபீசீனியர், பாரசீகர் போன்றவர்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் உருவாக்கப்பட்டவை.
  • ஒரு மொழியைப் புகழ்ந்தும், இன்னொரு மொழியை இகழ்ந்தும் கூறுகின்ற ஹதீஸ்கள்.
  • நெசவு, விவசாயம் போன்ற தொழில்களின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஹதீஸ்களும் இந்த வகையைச் சேர்ந்தவையாகும். 
  • இந்த வகையில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஷியாக்கள், அலீ (ரலி) யின் சிறப்பைக் கூறும் வகையில் இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் கணக்கிலடங்காது.

இவை அனைத்தும் இயக்க வெறியின் காரணமாக இட்டுக்கட்டப்பட்டவையாகும். 

6. பேச்சைப் பிழைப்பாக்கியவர்கள்:

மக்கள் மத்தியில் உருக்கமாகவும், சுவையாகவும் உரை நிகழ்த்தி அதன் மூலம் அன்பளிப்பு பெறும் ஒரு கூட்டத்தினர் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் நடமாடி வந்தனர். 

நீண்ட நேரம் புதுப்புது விஷயங்களைப் பேசி மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் தான் இந்த வகையில் அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் எந்த அளவுகோலும், வைத்திருப்பதில்லை. அன்றைய தினம் கைதட்டல் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். இவர்கள் பெரும்பாலும் வரலாறுகளில் தான் கைவரிசை காட்டினார்கள். 

مائة حديث من الأحاديث الضعيفة والموضوعة - (ج 1 / ص 4)

(انطلق النبي صلى الله عليه وسلم وأبو بكر إلى الغار، فدخلا فيه فجاءت العنكبوت فنسجت على باب الغار

ஸவ்ர் குகையில் சிலந்தி வலை பின்னியது. புறா முட்டையிட்டது பற்றிய அனைத்தும் பொய்யானவை 

أسنى المطالب في أحاديث مختلفة المراتب محمد بن درويش - (ج 1 / ص 70)

وأما ما يدور على الألسنة اللهم أيد الإسلام بأحد العمرين قال في الأصل لا أعلم له أصلا

இரண்டு உமர்களில் ஒருவர் மூலம் இஸ்லாத்தைப் பலப்படுத்து என்று நபிகள் நாயகம் (ஸல்) துஆ கேட்டதாகக் கூறுவது ஆதாரமற்றது.. 

المصنوع في معرفة الحديث الموضوع - (ج 1 / ص 170)

حديث مصارعته أبا جهل لا أصل له ذكره الحلبي في حاشية الشفا

அபூஜஹ்லுடன் நபிகள் நாயகம் (ஸல்) மல்யுத்தம் செய்தது பற்றிய செய்தி ஆதாரமற்றது 

المصنوع في معرفة الحديث الموضوع - (ج 1 / ص 261)

وفي المواهب ما يذكره القصاص من أن القمر دخل في جيب النبي فخرج من كمه فليس له أصل

சந்திரன் பிளந்து பூமிக்கு வந்து நபிகள் நாயகத்தின் சட்டைக்குள் நுழைந்து இரு கைகள் வழியாக இரு பாதியாக வெளியே வந்தது என்பது கட்டுக்கதை. 

الؤلؤ المرصوع للقاوقجي - (ج 1 / ص 1)

حديث اجتماع الخضر وإلياس في كل عام في الموسم قال ابن حجر لا يثبت فيه شيء

ஹிழ்ர், இஸ்மாயீல் ஆகிய நபிமார்கள் உயிருடன் இருக்கின்றார்கள். மினாவில் ஆண்டு தோறும் அவர்கள் சந்தித்துக் கொள்கின்றார்கள் என்ற ஹதீஸ்கள் பொய்யானவை

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 350)

حديث كان رسول الله صلى الله عليه و سلم يوحى إليه ورأسه في حجر علي فلم يصل العصر حتى غربت الشمس فقال رسول الله صلى الله عليه و سلم صليت قال لا قال اللهم إن كان في طاعتك وطاعة رسولك فاردد عليه الشمس فقالت أسماء فرأيتها غربت ثم رأيتها طلعت بعد ما غربت

மறைந்த சூரியன் அலீ (ரலி) அவர்களுக்காக மீண்டும் உதித்தது என்ற செய்தி ஆதாரமற்றது. 

الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 471)

حديث من ولد له مولود وسماه محمدا تبركا به كان هو ومولوده في الجنة ذكره ابن الجوزي في الموضوعات

முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டவர் சொர்க்கம் செல்வார் என்பது கட்டுக்கதை. 

المنار المنيف - (ج 1 / ص 63)

ومنها 8 أن يكون في الحديث تاريخ كذا وكذا مثل قوله إذا كان سنة كذا وكذا وقع كيت وكيت وإذا كان شهر كذا وكذا وقع كيت وكيت

எதிர்காலத்தில் இந்த வருடத்தில் இது நடக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அது நடக்கும் என்பது கட்டுக்கதை. 

இப்படியெல்லாம் இட்டுக்கட்டினார்கள். மக்கள் புதுமையாகப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருந்ததால் நல்ல கருத்துக்கள் அடங்கிய பழமொழிகள், தத்துவங்கள் ஆகியவற்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அரங்கேற்றியவர்களும் இவர்களே! 
  • அன்பு அதிகமானால் மரியாதை போய்விடும்.
  • சிறிய கவளமாக உண்ண வேண்டும். மென்று சாப்பிட வேண்டும்.
  • கஞ்சன் அல்லாஹ்வின் பகைவன்.
  • தட்டு சிறியதாக இருப்பதில் பரகத் உள்ளது.
  • சிறிது நேரம் சிந்திப்பது ஒரு வருடம் வணங்குவதை விடச் சிறந்ததாகும்.
  • நாட்டுப்பற்று ஈமானில் ஒரு பகுதி.
  • வறுமை எனக்குப் பெருமை.
  • உண்ணும் போது பேசக் கூடாது.
  • தடுக்கப்பட்டவைகள் இனிமையாகத் தெரியும்.
  • ஒருவனுக்கு எது தெரியவில்லையோ அதற்கு அவன் எதிரியாக இருப்பான்.
  • அடுத்தவனுக்குக் குழி வெட்டியவன் அதில் வீழ்வான்.
  • தெரியாது என்று கூறுவது பாதிக் கல்வியாகும்.
  • நபிகள் நாயகத்தின் வியர்வையிலிருந்து தான் ரோஜா படைக்கப்பட்டது.
  • நல்லவர்கள் செய்யும் நல்ல காரியங்கள் மிக நல்லவர்களுக்குக் கெட்டதாகத் தெரியும்.
  • முஃமினின் உமிழ்நீர் நோய் நிவாரணியாகும்.
  • தனிமையில் தான் ஈமானுக்குப் பாதுகாப்பு.
  • பல் துலக்குவது பேச்சாற்றலை அதிகரிக்கும்.
  • நல்லடியார்களைப் பற்றிப் பேசினால் அங்கே அருள் இறங்கும்.
  • வாதத் திறமையுள்ளவர்களிடம் நல்ல செயல்கள் இருக்காது.
  • எந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருக்கின்றார்களோ அங்கே நிச்சயம் ஒரு வலியுல்லாஹ் இருப்பார். ஆனால் அவர்கள் அதை அறிய மாட்டார்கள் அவரும் கூட தான் வலியுல்லாஹ் என்பதை அறிய மாட்டார். 
  • நோயாளி புலம்புவது தஸ்பீஹ் ஆகும்.
  • சாவதற்கு முன் செத்து விடுங்கள்.
  • அறிவு இல்லாதவனுக்கு மார்க்கம் இல்லை.
  • அலீ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செய்த வஸிய்யத் என்ற பெயரில் கட்டுக்கதைகள்.
இப்படி ஏராளமான ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன. 

7. சுயலாபத்திற்காக இட்டுக்கட்டியோர்:

ஒவ்வொருவரும் தாம் சார்ந்துள்ள துறையைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துச் சொன்னதாக இட்டுக்கட்டியுள்ளனர். 

இவர்களில் மகா கெட்டவர்கள் வைத்தியர்களாவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மருத்துவம் கற்றுக் கொடுக்க அனுப்பப்படவில்லை. தேன், பேரீச்சம்பழம், கருஞ்சீரகம் போன்ற மிகச் சில பொருட்களின் சில மருத்துவ குணம் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

ஆனால் யுனானி வைத்தியர்கள் என்ற பெயரில் உருவான சில பித்தலாட்டக்காரர்கள் நபி வழி மருத்துவம் என பெயர் சூட்டிக் கொண்டு ஏராளமான ஹதீஸ்களை இட்டுக்கட்டியுள்ளனர். 

இவர்கள் செய்யும் எல்லா வைத்தியமும் நபி வழி மருத்துவம் என்றனர். 

ஒவ்வொரு நோய்க்கும் நபி (ஸல்) அவர்கள் மருந்து கூறியதாகச் சித்தரித்தனர். ஒவ்வொரு பொருளின் மருத்துவ குணம் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவும் இட்டுக்கட்டினார்கள். 

இன்னும் கூட இந்த யுனானி வைத்தியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரில் கூறுவதில் தொன்னூறு சதவிகிதம் இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய்யாக இருப்பதைக் காணலாம். 

8. மூளை குழம்பியவர்களின் உளறல்கள்:

சிலர் முதுமையின் காரணமாக – மூளை குழம்பியதன் காரணமாக – நினைவாற்றல் குறைவு காரணமாக பொய் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் பொய்யான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். 

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் சில உதாரணங்களைத் தான் இங்கு குறிப்பிட்டுள்ளோம். இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அம்பலப்படுத்தும் வகையில் நல்லறிஞர்கள் தனியாக நூற்களையே எழுதியுள்ளனர். 

இப்னு ஜவ்ஸீ, முல்லா அலீ காரி, சுயூத்தி, ஸகானி, தஹபீ, சுப்கீ போன்ற அறிஞர்களின் நூற்கள் இவற்றில் பிரபலமானவையாகும். 

தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். 

இந்தப் பொய்களை இவர்கள் களையெடுக்கும் முயற்சியில் இறங்காதிருந்தால் இஸ்லாத்திற்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். 

ஆனால் இன்றைக்கும் கூட மார்க்க அறிஞர்கள் இந்தப் பொய்களை மேடைகளிலும் ஜும்ஆப் பிரசங்கங்களிலும் கூறி வருகின்றார்கள் என்பது தான் வேதனை. 

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய 'சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்த புத்தகத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்.

Friday, March 02, 2012

தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்தன்மை (வீடியோ)

தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்தன்மை (வீடியோ)


மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஜூம்ஆ பயான் (02.03.12)

மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஜூம்ஆ பயான் (02.03.12)

முன்னால் கிருத்தவ கன்னியாஸ்திரி Irena Handono இஸ்லாத்தை ஏற்ற வரலாறு.

இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவகன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்துஎழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.


நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.

பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த Liaision Maria என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா (அலை)அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் Stray Sheeps என்று சொல்லப்படக் கூடிய காணாமல் போன ஆடுகளை தேடுவதாகும். காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல.

மாறாக காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.

ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் உறுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.

சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்ட ஆரம்பித்தான்.

பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன்.அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.

இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள் என்று எங்களுக்கு விளக்கினார்கள்.

இந்தோனேசியாவில்,

# ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

# முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

# வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

# ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
# தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம் என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும் என்று கூறினேன்.

உதாரணமாக,

பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!

அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சிக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை அயர்லாந்தின் தீவிரவாதிகள் என்று கருதுகிறது. அவர்கள் ஐரோப்பிய தீவிரவாதிகள் என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் - இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும்.

அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே எனக் கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அப்போது நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டேன்.

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை பாதிரியார் அவர்கள் போதித்த போது கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் - Trinity என்று போதித்தார்.

அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான் என்றும் கூறிற்று.

மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.

கடவுளின் திரித்துவக் கொள்கை (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.

கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.

அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோணத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.

அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் இதற்கு சாத்தியமே இல்லை என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! என்று கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோணத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், முடியாது என்று கூறினார். முன்பு இதற்கு சாத்தியமே இல்லை என்று கூறிய அவர், தற்போது முடியாது என்று மட்டும் கூறினார்.

அது ஏன்? என்று நான் பாதிரியாரிடம் கேட்டேன்.

அதற்கு பாதியார், இது நம்பிக்கை. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.

இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.
ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், இந்த மேசைகளை உருவாக்கியது யார் என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.

அதற்கு நான் இந்த மேசைகளை உருவாக்கியது தச்சர்கள் (Carpenters) என்றேன்.

அது எப்படி? என்று பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும் தச்சார்களாக (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.

அப்போது நீ என்ன சொல்ல வருகிறாய்? என்றார் பாதிரியார்.

அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.

அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் ஜெனரலாக தேர்தெடுத்தால் அந்த தேர்வு மறுக்கப்பட்டுவிடும்.அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!

நீ என்ன சொல்ல வருகிறாய்? என்று மீண்டும் கேட்டார் பாதிரியார்.

அதற்கு நான், மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுல் என்று ஆக்கினால் அந்த தேர்வு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.
பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார் என்று கூறினேன்.

இப்படி பலவிதமான விவாதங்களை அந்தப் பாதிரியாரிடம் அவர் செய்ததாகக் குறிப்பிடுகிறார்.

மதங்கள் பற்றிய பலவிதமான ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்று ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார் முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள்.

முழு மூச்சுடன் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யும் சகோதரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருக்கிறார்..

சகோதரி Irena Handono அவர்களுக்கு அல்லாஹ் இன்னும் அதிகமான மார்க்கத் தெளிவை கொடுப்பானாக!
நன்றி
Rasmin MISc

Thursday, March 01, 2012

என்கவுன்டர் மூலம் திருட்டை ஒழிக்க முடியாது!

இவர்கள் தான் வங்கியில் கொள்ளையடித்தார்கள் எனக்கூறி காவல்துறையினர் ஐந்து பேரைச் சுட்டுக்கொன்றுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இதுதான் ஊடகங்களில் முதன்மைச் செய்தியாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து தெரிவிக்கும் அனைவருமே தம்மைத் தாமே அறிவீனர்களாகக் காட்டிக் கொள்ளும் வகையில் அந்த விவாதம் தொடர்கிறது.

எல்லா என்கவுன்டர்களும் போலியானவைதான்

இப்போது நடந்தது உண்மையான என்கவுன்டரா, போலியான என்கவுன்டரா என்று இவர்கள் விவாதிப்பதே அர்த்தமற்றதாகும். தமிழகத்திலும் நாடுமுழுவதும் நடத்தப்பட்ட எல்லா என்கவுன்டர்களுமே போலியானவைதான் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இதைப்பற்றி விவாதி்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது தன்னைக் காத்துக் கொள்வதற்காக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொலை செய்து, அது நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அவனுக்கு கொலைக் குற்றத்தி்ற்கான தண்டனை வழங்கப்படாது. மக்களுக்கு உள்ள இதே உரிமை காவல்துறைக்கும் உள்ளது. அவர்கள் தங்களது கடமையைச் செய்யும்போது குற்றவாளிகள் அவர்களைக் கொல்ல முயற்சித்தால், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள துப்பாக்கியால் சுட்டு எதிரிகளைக் கொன்று அது நீதி மன்றத்தில் நிரூபிக்கப்படுமானால், அவர்களுக்கு கொலைக் குற்றத்திற்கான தண்டனை அளிக்கப்படாது.

ஆனால், கொலை செய்தது பொதுமக்களாக இருந்தாலும், போலிசாக இருந்தாலும், தற்காப்புக்காகவே இந்தக் கொலை நடந்திருந்தாலும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும். நீதிமன்றம்தான் இது திட்டமிட்டு நடந்ததா அல்லது தற்காப்பிற்காக நடந்ததா என முடிவு செய்யும்.

ஆனால் காவல் துறையினர் தற்காப்புக்காக கொல்லும் நிலை ஏற்படுவதில்லை. தற்காப்புக்காக கொலை செய்வது என்பது பொதுமக்கள் மட்டுமே சந்திக்கும் பிரச்சனைதானே தவிர, காவல் துறையினர் சந்திக்கும் பிரச்சனை அல்ல. காவல்துறையால் தேடப்படுபவன் சுற்றி வளைக்கப்பட்டால், அவன் ஒரு போதும் காவலர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கவே மாட்டான். எண்ணிக்கையிலும், ஆயுதத்திலும் அதிக பலத்துடன் உள்ள காவல்துறையினர் மீது அவன் துப்பாக்கியால் சுட்டாலோ, வெடிகுண்டை வீசினாலோ அவன் கதை அத்தோடு முடிந்துவிடும். சாதாரண மக்களுக்கே இது நன்றாகத் தெரியும். சாதாரண மக்களை விட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இது இன்னும் நன்றாகவே தெரியும்.

நக்சலைட்டுகளுடன் நடக்கும் ஆயுதப்போரில் மட்டும்தான் நிஜமாகவே என்கவுன்டர் நடக்கும் போலிசாரும் அதில் கொல்லப்படுவார்கள். காயமடைவார்கள், ஏனெனில் போலிசைப் போலவே ஆள்பலமும், ஆயுத பலமும் அவர்களிடம் உண்டு.

இதைத் தவிர எல்லா எண்கவுன்டர்களுமே பொய்யானதுதான். போலியானதுதான. இப்போது நடந்த என்கவுன்டர் போலியா உண்மையா என விவாதித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.

இந்த என்கவுன்டரில் மட்டுமல்லாமல் எல்லா என்கவுன்டர்களின் போதும் காவல்துறையினர் கூறுவது நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் பொய்யானவை.

கிரிமினல்களை மிரட்டும்போது உன்னை என்கவுன்டரில் போட்டுத் தள்ளுவேன் என்று காவல்துறை அதிகாரிகள் மரட்டுவார்கள். இதில் இருந்தே என்கவுன்டரின் அர்த்தத்தை அறிந்து கொள்ளலாம். மதுரையில் என்கவுன்டர் புகழ் அதிகாரி யாரைப் பார்த்தாலும், என்கவுன்டரில் போட்டுவிடுவேன் என்பார். உயிரைக் காப்பாற்றத்தான் என்கவுன்டர் என்றால் எதிர்ப்பைச் சந்திக்காமல் இருக்கும் போது இப்படிச் சொல்ல முடியாது.

பத்திரிகைகளும் பல குற்றவாளிகள் பற்றி செய்தி வெளியிடும்போது என்கவுன்டரில் போட்டுத் தள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்று எழுதி வருகிறார்கள். முன்கூட்டியே முடிவு செய்தால் அது எப்படி என்கவுன்டர் ஆகும்?

ஒரு பிணத்தை வைத்துக்கொண்டு கை அசையவில்லை. அதனால் இது பிணம்தான் என்று ஒருவர் சொல்கிறார் கண்ணே திறக்கவில்லை. அதனால் இது பிணம்தான் என்று இன்னொருவர் சொல்கிறார். உலகத்துக்கே பிணம் என்று தெரிந்த நிலையில் இப்படி விவாதித்துக் கொண்டு இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் மீடியாக்களில் நடக்கும் இந்த விவாதமும் அமைந்துள்ளது.
நாட்டில் சட்டமும் நீதிமன்றமும் இருக்கும்போது காவல்துறையும் அரசாங்கமும் ஏன் என்கவுன்டர் என்ற பெயரில் படுகொலையைச் செய்யும் நிலைக்கு வருகின்றனர்?

அன்றாடம் குற்றச் செயல்கள் நடக்கும் போது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது வெறுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக மிகக் கொடூரமான கொலை கொள்ளை நடக்கும்போது மக்களுக்குக் கோபம் அதிகரிக்கிறது. கொந்தளிப்பு ஏற்படுகிறது. அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்று மக்கள் கோபம் கொள்ளும் நிலை ஏற்படும்போது தங்களின் திறமையைக் காட்டிக் கொள்வதற்காகத்தான் அதிகமான படுகொலைகள் காவல்துறையினரால் என்கவுன்டர் என்ற பெயரில் நடத்தப்படுகின்றன. அதுவும் அரசின் வாய்மொழியான அனுமதி பெற்று இது நடத்தப்படுகிறது. காவல்  துறையைச் சேர்ந்த ஒருவரை ஒருவன் கொல்ல நினைத்தால் அந்தக் காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டு விடுகிறார் என்பதற்கு நெல்லை சேலம் ஆகிய நகரங்களில் போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டது உதாரணமாக உள்ளது. இது போல் வசமாக மாட்டிக் கொள்ளும் போது தான் காவல்துறையினர் தாக்கப்பட்டு கொல்லவும்பட்டுள்ளனர். துப்பாக்கியுடனும் படையுடனும் இருக்கும் போது எந்தக் காவல் துறையினரையும் யாரும் கொல்லவே முயற்சிக்கமாட்டார்.

கோவையைச் சேர்ந்த சிறுமியைக் கடத்தி கற்பழித்து கொலை செய்த சம்பவம் நாட்டு மக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கொலையாளி கையில் கிடைத்தால் மக்களே அவனைக் கொன்றுவிடக் கூடிய நிலையில் இருந்தார்கள். மக்களின் இந்த உணர்வுகளுக்கு ஏற்ப குற்றம் சாட்டப்பட்டவனைக் கைது செய்த காவல்துறையினர் நிராயுதபாணியாக இருந்த அவனைக் கொலை செய்தார்கள். மக்களின் உணர்வுகளுக்கேற்ப இந்தக் கொலை இருந்ததால், இதற்கு மக்களின் ஆதரவும், ஊடகங்களின் ஆதரவும் மற்றும் அனைத்துக் கட்சியினரின் ஆதரவும் இருந்தன. இப்போது நடந்த போலி என்கவுன்ரைக் கண்டிக்கும் பல இயக்கத்தினர் அந்தப் போலி என்கவுன்டரை நியாயப்படுத்தினர், பாராட்டினர்.

அந்த என்கவுன்டரைக் கண்டித்தால் மக்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்ற அளவுக்கு அப்போதைய நிலை இருந்தது. மக்கள் ஆதரவு இருந்தாலும் அது போலி என்கவுன்டர்தான் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.

ஆனால் வங்கிக் கொள்ளையர் மீது சமூதாயத்தினருக்கு அந்த அளவுக்கு கோபம் இல்லை. கையில் கிடைத்தால் கொன்று போடவேண்டும் என்று அவர்கள் கருதவில்லை. பத்துப்பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு இவர்கள் கொள்ளையடித்திருந்தால், அப்போது போலி என்கவுன்டர் அவசியம் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பார்கள். முந்ததைய சம்பவம்போல் இதுவும் மாறிப்போயிருக்கும்.

இதுதான் இரண்டு என்கவுன்டருக்கும் உள்ள வித்தியாசம்.

யாரைத் தண்டிப்பதாக இருந்தாலும், அதை விசாரித்து ஆதாரங்களுடன் நிரூபித்துவிட்டு சட்டத்தின்படிதான் தண்டிக்க வேண்டும். இதுதான் நாகரிகமான சமுதாயத்தின் நடைமுறையாக இருக்க வேண்டும். போலிசார் யாரைக் குற்றவாளி என்று முடிவு செய்து சுட்டுக் கொல்கிறார்களோ, அவர்கள் குற்றவாளிகளாகத்தான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. போலிஸ் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் குற்றவாளி என்று காட்ட முடியும். ஒருவனைச் சுட்டுக் கொன்றுவிட்டு அவனருகில் சில துப்பாக்கிகளைப் போட்டு வைப்பதும், கட்டுக்கட்டாக ரூபாய்களைப் போட்டு வைப்பதும், மிரட்டி சாட்சி சொல்ல வைப்பதும் போலிசுக்கு சாதாரணமானவை. எந்த அப்பாவியையாவது சுட்டுக் கொன்றுவிட்டு மக்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.

சட்டத்தின் பார்வையிலும் அறிவுப்புர்வமாக சிந்திக்கும் போதும் இது ஏற்முடியாதது என்றாலும் மக்களின் அதிகமானவர்கள் பெரும்பாலான என்கவுன்டர்களை ஆதரிக்கிறார்கள் மக்கள் ஆதரவு இருக்கும் போது அறிவுஜீவிகளின் வாதங்கள் எடுபடப் போவதி்ல்லை.
என்கவுன்டர் என்ற பெயரில் கொலை செய்த அதிகாரிகள் யாரும் தண்டிக்கப்படப் போவதும் இல்லை. தற்காப்புக்காகத்தான் செய்தார்கள் என்று நிரூபிக்கும் வகையில் வழக்கையும் சாட்சிகளையும் ஜோடிப்பது அதிகார வர்க்கத்துக்கு கஷ்டமானது அல்ல.

மக்கள் ஏன் என்கவுன்டர்களுக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிறார்கள்? இது தான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் போது இது தங்களையும் பாதித்துவிடுமோ என மக்கள் அஞ்சுகிறார்கள். நிர்வாகமும், சட்டமும் பலவீனமாக இருப்பதை மக்கள் உணர்கிறார்கள். இப்போது இருக்கும் சட்டத்தினால் யாரையும் தண்டிக்க முடியாது என்று அவர்களின் ஆழ்மனதில் பதிந்து விடுகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சில நாட்கள் சிறையில் இருந்து விட்டு சுதந்திரமாக நடமாடுவதையும் மேலும் மேலும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் மக்கள் பார்க்கிறார்கள். வேறு ஏதாவது செய்தால் தான் சரிப்பட்டு வரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

நாலு பேரைப் போட்டுத் தள்ளினால்தான் திருடர்களுக்குப் பயம் வரும், நம்முடைய உயிரும் உடமையும் பாதுகாக்கப்படும் என்று அவர்கள் கருதுகிறார்கள். சுயபாதுகாப்பு என்று வரும்போது, தர்மத்தையும் நியாயத்தையும் மக்கள் பார்ப்பதில்லை. இந்தப் பலவீனம் மற்றும் பயம் காரணமாகவே போலி என்கவுன்டர்தான் எனத் தெரிந்தாலும், அதற்கு எதிராக நிற்க மறுக்கிறார்கள், ஆதரிக்கவும் செய்கிறார்கள் இப்போது நாட்டில் நீதிவழங்கும் இலட்சணத்தை விட என்கவுன்டர் சிறந்தது என்று நினைக்கும் வகையில் தான் நீதிபரிபாலனம் இங்கே உள்ளது.

சட்டத்தால் பாதுகாக்க முடியாதபோது சட்டவிரோதமான முறையிலாவது பாதுகாப்பு கிடைத்தால் சரிதான் என்ற மக்களின் மனநிலை காரணமாகத்தான் என்கவுன்டர்கள் நியாயப்படுத்தப்படுகின்றன.

குற்றங்களை என்கவுன்டர் குறைக்குமா?

குற்றங்களை குறைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் ஆதரித்தாலும். என்கவுன்டர்களால் குற்றங்களைக் குறைக்க முடியாது. இதுதான் நடைமுறையில் தெரிய வரும் உண்மையாகும். அப்போதைய உணர்வுக்கு ஒரு வடிகாலாகவும் ஆறுதலாகவும் தான் இது இருக்குமே தவிர அவர்கள் எதிர்பார்க்கும் நல்விளைவு ஏற்படாது.

குழந்தை கடத்தலுக்காக கோவையில் என்கவுன்டர் நடந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் தலைநகரத்திலேயே சிறுவன் கடத்தப்பட்டான். பணம் கொடுத்து காவல்துறையினர் அவனை மீட்டு கவுரவத்தைக் காப்பாற்றிக் கொண்டார்கள். அதன் பின்னர் இன்று வரை குழந்தை கடத்தலும் குழந்தைக் கொலையும் கொஞ்சமும் குறையவில்லை என்கவுன்டரால் இவர்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை.

வங்கிக் கொள்ளையர்கள் என்று சொல்லி ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட மறுநாளும், அதற்கடுத்த இருநாட்களும் வழக்கம் போல் ஐந்து வங்கிக் கொள்ளைகள் நடந்துள்ளன. வழக்கம்போல் எண்ணற்ற திருட்டுகளும் குறையில்லாமல் நடக்கின்றன.

ஒரு குற்றத்திற்காக என்கவுன்டர் நடந்தால் அதே குற்றத்துக்காக மறு என்கவுன்டர் செய்ய போலிசார் ஐந்து வருடங்களாவது எடுத்துக் கொள்வார்கள் என்பது கிரிமினல்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த என்கவுன்டர் பிரச்சினையிலிருந்து காவல் துறையினர் மீண்டு வரவே ஐந்து வருடம் ஆகும் கொள்ளைகள் தொடர்கின்றன சட்டவிரோதமான என்கவுன்டரைத் தொடர்ந்து செய்ய முடியாது. எப்போதாவது அரிதாகத் தான் செய்ய முடியும்.

குற்றங்களைக் குறைக்க என்னதான் வழி?

என்கவுன்டர்கள் மூலமாக படுகொலைகள் செய்யாமல் உண்மையாகவே கொள்ளை மற்றும் திருட்டுக் குற்றங்களைக் குறைக்க நினைத்தால் திறமையான ஆட்சியாளர்களால் அது சாத்தியமே.

1. விரைந்து வழக்கை முடித்தல்

குற்றங்கள் தொடர்ந்து நடக்கக் காரணம், நீதி மன்றங்களின் அநியாயத் தாமதம். ஒரு கிரிமினல் குற்றத்தை விசாரித்து தீர்ப்பளிக்க பத்து வருடங்களும், அதற்கு மேலும் ஆகிறது. குற்றத்துக்கு சாட்சியாக இருந்தவன் இறந்து விடுகிறான். அல்லது குற்றவாளிகளால் மிரட்டப்படுகிறான். பல வருடங்கள் ஆகும்போது சாட்சி சொல்பவனுக்கே குற்றவாளி மீது அனுதாபம் வந்து விடுகிறது. இதனால் அதிகமான குற்றவாளிகள் விடுதலை ஆகிவிடுகிறார்கள்.

ராஜிவ் காந்தி கொலையானபோது அன்றைக்கு மக்களுக்கு இருந்த ஆத்திரம் ஒரு ஆட்சியையே மாற்றிப்போட்டது. ஆனால் காலம் கடந்த பின்னால் கொலையாளிகளுக்கு ஆதரவு பெருகிவிட்டது ராஜீவ் மறக்கப்பட்டு விட்டார். இதுதான் மனிதனின் இயல்பு

ஒரு குற்றம் நடந்தால், அவன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு பதினைந்து நாட்களில் விசாரித்து முடிக்க இயலும் விரைந்து விசாரிக்கும் போது சாட்சிகள் மிரட்டப்பட முடியாது. சாட்சிகள் சாகும் வாய்ப்பும் குறைவு. குற்றவாளியின் மீது சாட்சிக்கு அனுதாபமும் ஏற்படாது.  இப்படி மிக விரைவாக விசாரித்து தண்டனை வழங்கினால்  அதிகமான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

எந்தப் பிரச்சினையான இருந்தாலும் தயவு செய்து கோர்ட்டுக்குப் போகாதீர்கள். உங்கள் பேரன் காலத்தில் தான் தீர்ப்பு கிடைக்கும் என்று மக்கள் கேவலமாகப் பேசிக் கொள்ளும் வகையில் நீதித்துறையில் அநியாயத் தாமதம் இங்கே உள்ளது.

120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டுக்கு எத்தனை நீதிபதிகளும், நீதி மன்றங்களும் இருக்க வேண்டுமோ அதில் கால்பகுதிதான் இங்கே உள்ளது.  இதனால் வாய்தாக்கள் போட்டு இழுத்தடிக்கின்றனர்.

வழக்கு எதுவும் வராதா என்று நீதி மன்றங்களும், நீதிபதிகளும்
காத்திருக்கும் அளவுக்கு நிலைமை உருவானால்தான் குற்றங்கள் குறையும்.

ஊதாரித்தனமாக பணத்தைச் செலவிடும் அரசுகள், மக்களின் உயிர் உடமைகளின் பாதுக்காப்பு விஷயத்தில் கடும் அலட்சியம் காட்டுகின்றன. அதிகமான நீதிபதிகளை நியமிக்க எத்தனை ஆயிரம் கோடி செலவிட வேண்டிவந்தாலும் செலவிட்டுத் தான் ஆகவேண்டும். ஒரு அரசாங்கத்தின் முதல் கடமை மக்களின் உயிர் உடமைகளைப் பாதுகாப்பது தான் இதைச் செய்யாமல் ஒரு மாதத்தில்  ஒழிப்பேன் ஒரு வாரத்தில் ஒழிப்பேன் என்று ஜம்பம் அடித்தால் அதனால் ஒரு மாற்றமும் ஏற்படாது.

இதில் போதிய அக்கரை செலுத்தாவிட்டால் இன்னும் குற்றங்கள் பெருகிக் கொண்டேதான் இருக்கும் எண்கவுன்டர் நாடகமும் நடந்து கொண்டேதான் இருக்கும்.

2. தண்டனையில் மாற்றம் தேவை

அடுத்து தண்டனை முறைகளும் கூட குற்றங்கள் பெருகக் காரணமாக உள்ளன

பல ஆண்டுகள் இழுத்தடிப்பதாலும், பலவீனமாக வழக்குப் பதிவு செய்வதாலும் பலர் தப்பித்துக் கொண்டாலும் சிலர் தண்டிக்கப்படுகின்றனர். இந்தத் தண்டனைகள் யாவும், பைத்தியக்காரத்தனமாகவும், பணத்தை வீண் விரயம் செய்யக்கூடியதாகவும், குற்றம் செய்யத் தூண்டுவதாகவுமே உள்ளன

சிறையில் அடைத்தால் நம்முடைய வரிப்பணம் பாழாகிறது. கிரிமினல்கள் சிறையில் தங்களது அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், புதுப்பது தீய வழிகளைச் சிந்திக்கவுமே சிறைச்சாலைகள் உதவுகின்றன.

திருடினால் கையை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சொல்வது போல் சட்டம் இயற்றினால் அது என்கவுன்டரை விட குறைவானதாக இருக்கும். குற்றங்களும் குறைந்துவிடும்.

திருடினால் கையை வெட்டு என்று இஸ்லாமியச் சட்டத்தை இவர்கள் கொண்டு வரப்போவதில்லை. அதற்கான திராணி இவர்களுக்கு இல்லை.
இஸ்லாமியச் சட்டத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும், இப்புாது உள்ள தண்டனைகள் குற்றங்களைக் குறைக்காது என்பது கூடவா இவர்களுக்குப் புரியவில்லை.

கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை சில மாதங்கள் சிறையில் அடைப்பதற்குப் பதிலாக அவர்களி்ன் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதுதான் அதற்கான தண்டனை என்று சட்டம் இயற்றினால் எவன் திருடுவான்? சிறைச்சாலையில் சோறு போடும் செலவும் மிச்சமாகும். பறிமுதல் செய்த பணத்தால் அரசு கஜானாவும் நிரம்பும்.

சொத்தே இல்லாதவன் திருடினால், அவன் உழைத்து மாதமாதம் இவ்வளவு தொகையை நீதிமன்றத்தில் கட்டவேண்டும் என்று சட்டம் போட்டால் ஏழையும் திருட மாட்டான்.

பணத்தை பெருக்கவே திருடுகிறான். இருக்கின்ற சொத்தும் போய்விடும் என்றால் எவனுமே திருடமாட்டான். சிறையில் அரசாங்கச் செலவில் மூன்று மாதம் சாப்பிட்டுவி்ட்டு, விடுதலையாகி திருட்டுப் பணத்தில் சொகுசாக வாழலாம் என்று கிறுக்குத்தனமான சட்டத்தை வைத்துக் கொண்டு யாரையும் குறை சொல்ல முடியாது.

இவைகளைச் செய்யாமல் இவர்களால் திருட்டையும், கொள்ளையையும் ஒழிக்கவே முடியாது.

3. கிரிமினல்களுடன் காவல்துறையினர் கூட்டு

குற்றங்கள் பெருகுவதற்கு அடுத்த காரணம் குற்றவாளிகளை ஊக்குவித்து மாமூல் வாங்கும் காவல்துறையினர்தான். சிறிய அதிகாரிகளிலிருந்து பெரிய அதிகாரிகள் வரை முக்கால்வாசிப்பேர் கிரிமினல்களுடன் கூட்டாக உள்ளனர்.

ஒவ்வொரு காவல்நிலையத்திலும் கொடுக்கல வாங்கலை முடித்துத் தரும் கட்டப்பஞ்சாயத்தினர் உள்ளனர். பணம் வாங்கிக் கொண்டு ஒருவன் சொத்தை இன்னொருவனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் இந்த கிரிமினல்கள் காவல்துறையை வைத்து மிரட்டித்தான் காரியம் சாதிக்கின்றனர். இருபத்தைந்து கதவிகிதம் வரை காவல்துறையினர் கட்டப்பஞ்சாயத்தில் கமிஷன் வாங்கிக் கொள்கின்றனர். வில்லங்கச் சொத்துக்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருடன் காவல்துறை உயா் அதிகாரிகள் பலருக்குக் கூட்டு உண்டு.

ஒவ்வொரு பகுதியில் உள்ள கிரிமினல்களுக்கும் அந்தப் பகுதியில் காவல்துறை நண்பர்களும் பாதுகாவலர்களும் உள்ளனர்.  இந்த தைரியத்தில் தான் கொலை கொள்ளைகளில் ஈடுபடுகிறார்கள். அந்த அதிகாரி நம்மை பிடிக்க மாட்டார். யாரையாவது ஒரு அப்பாவியைப் பிடித்து வழக்கை முடித்துவிடுவார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தவிர்க்க முடியாத நிலையில் பிடிப்பட்டாலும், உப்பு சப்பில்லாத வகையில் வழக்குப் பதிவு செய்து நம்மைத் தப்ப வைத்து விடுவார் என்று நினைக்கின்றனர்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையினருக்கும் குற்றவாளிகளுக்கும் உள்ள உறவு அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இது ஊருக்கே தெரிந்த ரகசியமாக இருந்தும் இதை ஒழிக்க எந்த முயற்சியையும் எந்த அரசும் எடுப்பதில்லை. வேலியே பயிரை மேய்கிறது என்ற நிதர்சனமான உதாரணமாக காவல்துறை இருப்பது தான் குற்றங்கள் பெருகவும், குற்றவாளிகள் துணிவு பெறவும் மற்றொரு காரணமாக இருக்கிறது.
இந்த மூன்றையும் செய்தால் திருட்டும் கொள்ளையும் பெருமளவு குறைந்துவிடும் அரசாங்கம் செய்யுமா?

திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டிவிடுங்கள். இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும் அல்லாஹ்வின் தண்டனையும் ஆகும். அல்லாஹ் மிகைத்தவன். ஞானம் மிக்கவன். அல்குர்ஆன் 5 - 38

நன்றி
உணர்வு

Monday, February 27, 2012

ஹதீஸ் கலை அறிவோம்: ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமான) ஹதீஸ்கள்


முந்தைய பகுதி:


1.     ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய ஒரு செய்தியை இன்று நாம் அறிவிக்கும் போது அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. ஹதீஸ்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை. 

ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த ஹிஜ்ரீ இரண்டாவது, மூன்றாவது நூற்றாண்டு கால கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குக் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ் கலை அறிஞர்கள் அந்த ஹதீஸைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.  

தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது, மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் அதை ஹதீஸ் என்று ஒப்புக் கொள்வார்கள். 

எல்லா ஹதீஸ்களும் இந்த வகையில் தான் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்றுள்ள முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம். 

صحيح وضعيف سنن الترمذي - (ج 1 / ص 1)
 حدثنا قتيبة بن سعيد حدثنا أبو عوانة عن سماك بن حرب ح و حدثنا هناد حدثنا وكيع عن إسرائيل عن سماك عن مصعب بن سعد عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول

தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது.என்பது திர்மிதீயின் முதலாவது ஹதீஸ். 

இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர் ஆவார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இதை நேரடியாகக் கேட்டு அறிவிக்கின்றார். 

முஸ்அப் பின் ஸஃது என்பார் இதை இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டவர். 

முஸ்அப் பின் ஸஃதிடமிருந்து இதைக் கேட்டவர் ஸிமாக் என்பார். 

ஸிமாக்கிடம் வகீவு என்பாரும் அபூ அவானா என்பாரும் கேட்டனர்.

வகீவு என்பார் வழியாகவும் அபூ அவானா என்பார் வழியாகவும் இரு வழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதி இமாமுக்குக் கிடைத்துள்ளது.

முதல் வழி:

1.     நபிகள் நாயகம் (ஸல்)
2.     இப்னு உமர் (ரலி)
3.     முஸ்அப் பின் ஸஃது
4.     ஸிமாக் பின் ஹர்பு
5.     இஸ்ராயீல்
6.     வகீவு
7.     ஹன்னாத்
8.     திர்மிதீ

இரண்டாவது வழி:

1.     நபிகள் நாயகம் (ஸல்)
2.     இப்னு உமர் (ரலி)
3.     முஸ்அப் பின் ஸஃது
4.     ஸிமாக் பின் ஹர்பு
5.     அபூ அவானா
6.     குதைபா
7.     திர்மிதீ

மேற்கண்ட இரு வழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்குக் கிடைத்துள்ளது. இவ்வளவு விபரங்களையும் இந்த ஹதீஸில் திர்மிதீ இமாம் கூறுகின்றார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடரை அவர் கூறுகின்றார். அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இப்படித் தான் ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஹதீஸைச் சரியான ஹதீஸ் என்று கூற வேண்டுமானால் கீழ்க்கண்ட அனைத்து விபரங்களும் சரியானதாக இருக்க வேண்டும். 
  • இந்தச் செய்தி இமாம் திர்மிதீ அவர்களுக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
  • அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
  • அவர்கள் ஒவ்வொருவரும் யார் வழியாக அறிவிக்கின்றாரோ அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.
இந்தத் தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான ஸஹீஹான ஹதீஸ் என்பர். அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இருக்கக் கூடாது.

ஆதாரப்பூர்வமான ஸஹீஹான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. 

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய 'சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்த புத்தகத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்.

Sunday, February 26, 2012

தவ்ஹீத் ஜமாத் ஜும்ஆவில் பிற இயக்கங்களை விமர்சனம் செய்கிறதா?

தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்படும் பள்ளிவாசலுக்கு தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தவ்ஹீத் ஜமாத் ஜும்ஆவில் பிற இயக்கங்களை விமர்சனம் செய்கிறதா?
தவ்ஹீத் ஜமாத் ஒற்றுமைக்கு எதிரானவர்களா?  இந்த குற்றச்சாட்டுகள் உணமையா? கீழே விளக்கம்




Saturday, February 25, 2012

பீஜே காட்டிக்கொடுத்தாரா?

கேள்வி:


நீங்கள் கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களை காட்டிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு சொல்கின்றார்களே இது உண்மையா? விரிவான விளக்கம் தேவை
ஹசன்
மேலப்பாளையம்

பதில்:

இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் எனது இணையதளத்தில் அளித்த பதிலையே உங்களுக்கும் பதிலாகத் தருகிறேன்.

கேள்வி : குண்டு வெடிப்பைக் காட்டிக் கொடுக்கவில்லையா?

பதில்:
கோவையில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முன் பீஜே அது குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து காட்டிக் கொடுத்தார் என்ற ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

இது பற்றியும் நாம் தெளிவாக விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கோவையில் காவலா் செல்வராஜ் கொல்லப்பட்டதன் எதிரொலியாக கோவை காவல்துறை ஒட்டுமொத்தமாக அரசுக்குக் கட்டுப்படாமல் ஸ்ட்ரைக் செய்தனர். முஸ்லிம்களுக்கு எதிராக சமூக விரோதிகளை ஏவி விட்டனர். சமூக விரோதிகளுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களைச் சுட்டுத் தள்ளி 19 பேரைக் கொன்று குவித்தனா். இன்னும் சொல்லிமுடியாத கொடுமைகளை எல்லாம் செய்தனர்.

இந்தக் கொடுமையை மனித உரிமைக் கமிஷன் சிறுபான்மைக் கமிஷன் வரை அப்போதைய தமுமுக மூலம் நாம் கொண்டு சென்றோம்.

தமிழக அரசு இந்தக் கொடுமையை நிகழ்த்தியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பட்டமாக முஸ்லிம் விரோதப்போக்கை அப்போதைய முதல்வர் வெளிப்படையாகக் காட்டினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் இதற்குப் பழி தீர்ப்பதற்காக கோவையில் சில இடங்களில் குண்டு வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட தகவல்கள் தமுமுக தலைமைக்குக் கிடைத்தது.

குண்டு வெடிப்பு நடந்தால் அப்பாவிகள் பலர் கொல்லப்படுவார்கள் என்று அப்போதைய தமுமுக நிர்வாகிகள் கவலைப்பட்டோம். மேலும் இதன் விளைவு கடுமையாக இருக்கும் ஏற்கனவே கோவை கலவரம் காரணமாக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள கோவை முஸ்லிம்கள் இன்னும் பல இன்னல்களைச் சந்திக்க நேரும் என்பதையும் நாங்கள் ஆய்வு செய்தோம்.

மேலும் அவசரப்பட்டு இச்செயலைச் செயதவர்கள் காகாலத்துக்கும் இன்னல்களை அனுபவிக்கும் நிலை ஏற்படும் என்பதையும் நாங்கள் உணர்ந்தோம்.

மேலும் குண்டு வெடிப்பு போன்ற சம்பவம் நடந்துவி்ட்டால் அதற்குமுன் நடந்த கலவரம், முஸ்லிம் இனப் படுகொலை ஆகியவற்றுக்கு நீதி கோரும் தார்மீக பலத்தை நாம் இழந்து விடுவோம் என்றெல்லாம் நாங்கள் கவலைப்பட்டோம்.

இந்தச் சமுதாயம் தாங்கிக் கொள்ள முடியாத கடும் விளைவுகளைத் தடுக்க வேண்டும் என்றால் குண்டு வெடிக்காமல் தடுக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

எனவெ எங்கெங்கே குண்டு வைக்கப்படவுள்ளன என்ற தகவலை விரிவாகத் திரட்டினோம்.

அப்போது காவல் துறை டி ஜி பியாக இருந்த அலெக்ஸாண்டர் அவர்களைச் சந்தி்த்து விளக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

நான், ஜவாஹிருல்லா, ஹைதர் இன்னொருவர் (நினைவில் இல்லை அநேகமாக விஞ்ஞானி ஜலீலாக இருக்கலாம்) ஆக நான்கு பேர் டிஜிபியைச் சந்தித்தோம். பொதுவாக நான் இது போன்ற சந்திப்புகளில் பங்கேற்பதில்லை என்றாலும் இதன் முக்கியத்துவம் கருதி நானும் அதில் ஒருவனாகக் கலந்து கொண்டேன்.

இன்னின்ன இடங்களில் குண்டு வைக்கப்படவுள்ளன. அதனால் இன்னின்ன விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம் ஆதாரத்துடன் நாங்கள் எடுத்துச் சொல்லி குண்டு வெடிக்காமல் எப்படியாவது தடுத்து விடுங்கள் என்று வலியுறுத்தினோம்.

கவனமாகக் கேட்டுக் கொண்ட டிஜிபி இந்த தகவலை நீங்கள் கோவை காவல் துறையிடமும் தெரிவியுங்கள் நானும் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். இதன்படி நம்பகமானவர்கள் மூலம் கோவை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முழு விபரமும் சொல்லப்பட்டது.

அவர்கள் நினைத்திருந்தால் பதுக்கி வைக்கப்பட்ட குண்டுகளைக் கண்டு பிடித்து செயலிழக்கச் செய்திருக்க முடியும். ஆனால் நாங்கள் கொடுத்த பட்டியலில் காவலர்கள் குடி இருப்பும் ஒரு இடமாகும். அந்த இடத்தில் மட்டும் குண்டு வெடிக்காமல் காவல் துறையினர் காப்பாற்றிக் கொண்டனர். மற்ற இடங்களில் குண்டு வெடிப்பைத் தடுக்க வாய்ப்பு இருந்தும் அவர்கள் தடுக்கவி்ல்லை தடுக்க அவர்கள் விரும்பவில்லை.

19 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதிலும் மற்றும் பலர் காயப்படுத்தப்படடதிலும் சொத்துக்கள் சூறையாடியதிலும் கோவை காவல் துறையினர் விசாரணையை எதிர் நோக்கி இருந்தார்கள். அதில் இருந்த அவர்கள் தப்பிக்க வேண்டுமானால் அதை விடப் பெரிய கொடுஞ்செயல் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து நிகழ வேண்டும் என்று அவர்கள் கணக்குப் போட்டனர்.

இதன் காரணமாக அவர்கள் குண்டு வெடிப்பைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

குண்டு  வெடிப்பைத் தடுப்பதற்காக நாம் செய்த இந்த முயற்சி யாரையும் காட்டிக் கொடுப்பதற்காகச் செய்தது அல்ல. மாறாக ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நன்மை கருதி செய்த காரியமாகும். இன்னும் சொல்லப்போனால் குண்டு வைத்தவர்களுக்குக் கூட இது நன்மையாக அமைந்திருக்கும்.

இதையும் காட்டிக் கொடுத்தல் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

ஒட்டு மொத்த சமூதாயத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் காரியம் ஒன்று நடக்க இருப்பது தெரிய வந்தால் இப்போதும் அதைத் தடுக்க நான் முயல்வேன். இது காட்டிக் கொடுத்ததில் சேராது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இது பொதுவாக நான் சொல்லும் பதிலாகும்.

குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சிலர் தலைமறைவாகி ஒவ்வொருவராக பிடிபட்டனர். ஒவ்வொருவர் பிடிபடும் போதும் அவர்களைக் காட்டிக் கொடுத்தது பீ ஜே தான் என்றோ தமுமுக என்றோ தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். அவை அனைத்துக்கும் நான் இனைய தளத்தில் பதில் அளித்துள்ளேன்.

ஆனாலும் பல பக்கங்கள் கொண்ட அந்த ஆக்கத்தில் உங்கள் கேள்விக்கான பதிலாக அமைந்த சிறு பகுதியை மட்டும் கீழே தருகிறேன்.

ஆன்லைன் பீஜே இணையதளத்தில் உள்ள கட்டுரையின் ஒரு பகுதி...

“சிறைவாசிகள் தொடர்பாக பலவிதமான அவதூறுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வந்த போதும் தமுமுகவில் இருந்த போது தமுமுக சார்பில் அதிகாரப்புர்வமாக நான் பதிலளித்துள்ளேன். அதில் ஒரு பகுதியைத் தான் மேலே பார்த்தீர்கள்.

ஆனால் அதன் பின்னர் சிறைவாசிகளை பீஜே காட்டிக் கொடுத்தார் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வந்த போதும் நான் அதிகாரப்புர்வமாக அனைவருக்கும் சென்றடையும் வகையில் பதில் அளிக்கவில்லை. தனிப்பட்ட சில சந்திப்புகளின் போது இதுகுறித்து கேள்வி கேட்டவர்களுக்கு விளக்கம் அளித்தது தவிர பரவலாக அனைவரையும் சென்றடையும் வகையில் அது குறித்து நான் விளக்கம் அளிக்கவில்லை இதற்குக் காரணம் இருக்கிறது. இது குறித்து நான் பதில் சொல்லப்போனால் தவறுகள் அனைத்தும் சிறைவாசிகள் மீதுதான் என்பது உறுதியாகும். இதன் காரணமாக சிறைவாசிகளின் குடும்பத்தினருக்குக் கிடைக்கும் உதவிகள் குறைந்து விடக்கூடாது என்று நான் கருதியது தான் அந்தக் காரணம்.

அந்த நிலை இப்போது இல்லை. சிறைவாசிகளி்ல் அதிகமானோர் விடுதலை ஆகி விட்டனர். நான் இது குறித்து விளக்காமல் இருந்தால் பீஜே சிறைவாசிகளைக் காட்டிக் கொடுத்தார் என்ற பொய், வரலாற்றில் உண்மையாகிவிடும். அவ்வாறு ஆகக் கூடாது என்பதாலும், அனைத்தையும் எழுத்து வடிவில் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் அது குறித்து விரிவாக இப்போது விளக்குகிறேன்.

பாஷா அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களைக் காவல்துறை கஸ்டடி எடுத்து விசாரித்த போது அவர்கள் கையெழுத்துப் போட்டு அளித்த சட்டப்புர்வமான வாக்கு மூலத்தி்ல் கோவை குண்டு வெடிப்பு வழக்கிற்கு பீஜே தான் பண உதவி செய்தார் என்று கூறி இருந்தனர்.

இப்படி பீஜேயைச் சம்பந்தப்படுத்தி கூறி இருந்தும் பீஜேயை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை? இதில் இருந்து பீஜே அரசாங்கத்தின் உளவாளி என்பது தெரியவில்லையா? என்று பிரச்சாரமும் செயது வந்தனர்.

நாங்கள் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்கப்படாததால் நாங்கள் காட்டிக் கொடுப்பவர்கள் என்றும் பிரச்சாரம் செய்து வரலாயினர்.

அப்துன்னாஸா் மதானி எங்களுக்கு உதவினார் அடைக்கலம் தந்தார் என்று கைது செய்யப்பட்ட அல்உம்மா இயக்கத்தினர் கூறியதால் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டார். ஆனால் பீஜே மீது வலிமையாக நாங்கள் குற்றம் சுமத்தி இருந்தும் அவர் ஏன் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்படவில்லை என்ற பிரச்சாரம் என்னுடைய எதிரிகள் மத்தியில் நன்றாக எடுபட்டது.

இது குறித்த விளக்கத்தை நான் இப்போது தெளிவுபடுத்துகிறேன்.

பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் எனக்கு எதிராக அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் என்னை நிச்சயம் வழக்கில் சேர்க்க முடியும்.

ஆனால் தமுமுகவுக்கும், அல்உம்மாவுக்கும் இருந்த பகை பற்றியும், அல்உம்மா இயக்கத்தினர் தமுமுக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது பற்றியும், தமுமுக கொடிக் கம்பங்களை அவர்கள் வெட்டிச் சாய்த்தது பற்றியும், எங்களைக் கொல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தது பற்றியும் அனைத்தும் அரசுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததால் எதிரி இயக்கத்தின் மீது பழி சுமத்தவே இதைக் கூறுகின்றனர் என்பது அதிகாரிகளுக்கு எடுத்த எடுப்பிலேயே தெரிந்து விட்டது. இதனால் எங்களில் யாரையும் அவர்கள் வழக்கில் சேர்க்கவில்லை.

ஆனாலும் அரசாங்கம் பீஜேயையும் தமுமுகவையும் வழக்கில் சேர்க்காமல் எங்கள் குற்றச் சாட்டைக் கண்டு கொள்ளாமல் காப்பாற்ற நினைக்கிறது என்று பல முனைகளில் அல்உம்மா தரப்பில் பிரச்சாரம் செய்து வந்ததால் வேறு வழியில்லாமல் இது குறித்து விசாரித்து என்னை வழக்கில் சேர்க்க எஸ்.ஐ.டி (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம்) முடிவு செய்தனர்.

அதன்படி பீஜே, ஜவாஹிருல்லா,  ஹைதர் அலி, பாக்கர் ஆகிய நால்வருக்கு எதிராக நீதிமன்ற அனுமதி பெற்று விசாரனைக்கு அழைத்து வரும் உத்தரவு பெற்றனர். மேலும் தமுமுக அலுவலகம், மற்றும் எனது வீடு ஆகியவற்றைச் சோதனை செய்யும் உத்தரவோடு வந்தனர்.

திடீரென தமுமுக அலுவலகத்தில் ரைடு நடத்தினார்கள். அதே நேரம் எனது வீட்டிலும் ஒரு நாள் முழுவதும் சின்னச் சின்ன துரும்பைக் கூட விடாமல் சோதனை செய்தனர்.

எனது வீட்டில் அவா்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.  தமுமுக அலுவலகத்திலும் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சில ஃபைல்களையும், அலுவலகத்தில் இருந்த அனைத்து வீடியோ கேஸட்டுகளையும் அள்ளிச் சென்றனர்.

அத்துடன் எங்கள் நால்வரையும் விசாரணைக்காக கோவை வருமாறு உத்தரவிட்டுச் சென்றனர்.

இதன் அடிப்படையில் இந்த வழக்கில் நிச்சயம் சேர்த்துவிடுவார்கள் என்பது திட்டவட்டமாக எனக்குத் தெரிந்ததால் குடும்பத்துக்குச் சொல்ல வேண்டிய வஸிய்யத்களைச் செய்து விட்டு மற்ற மூவருடன் கோவை புறப்பட்டேன்.

ஜவாஹிருல்லா,  ஹைதர், பாக்கர் ஆகிய மூவர் மீதும் பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் சாதாரணமான குற்றத்தையே சுமத்தி இருந்தார்கள். அவர்கள் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்படுவார்கள் என்பது என்று எனக்குத் தோன்றியது.. ஆனால் நான் நிச்சயம் கைது செய்யப்படுவேன் என்று உள்ளுணர்வு சொன்னது. அவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுக்களை என் மீது கூறி இருந்தனர்.

நாங்கள் நால்வரும் நான்கு நாட்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவின் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டோம்.

குண்டு வைப்பதற்காக ஒரு துணிப் பையில் வைத்து இரண்டு லட்சம் ரூபாய் பீஜே தந்தார். அதை மேலப்பாளையம் புகாரி, (அல்லது முஹம்மது அலி) பீஜே வீட்டுக்குப் போய் வாங்கி வந்தார். அந்தப் பணத்தில் தான் குண்டு வைப்பதற்கான பொருள்களை வாங்கினோம் என்பது பாஷா என் மீது சுமத்திய முதல் குற்றச்சாட்டு, என்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கிச் சென்றதை புகாரியும் உறுதி செய்துள்ளார். இது பொய் என்பதை நான் தான் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கத் தவறினால் வழக்கில் முதல் குற்றவாளியாகக் கூட நான் சேர்க்கப்படலாம் என்று விசாரனை அதிகாரிகள் தெரிவித்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர்.

பாஷா ஜாமீனில் வெளியே வந்து தமுமுக அலுவலகத்தில் தங்கி இருந்த காலகட்டத்தில் “நான் அடிக்கடி கைது செய்யப்படும் நிலையில் இருக்கிறேன். அப்படி கைது செய்யப்பட்டால் என் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது. எனவே இரண்டு லட்சம் ரூபாய் தருகிறேன். அதை உங்களுக்குத் தெரிந்த தொழில் அதிபரிடம் கொடுத்து மாதாமாதம் இலாபம் வரும் வகையில் முதலீடு செய்து உதவுங்கள்” என்று கூறி பாஷா இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை என்னிடம் கொடுத்து வைத்திருந்தார். அதைத் தொழில் அதிபர் அன்வா் பாஷா அவர்களிடம் கொடுத்து வைத்து மாதாமாதம் லாபம் வரும் வகையில் அவருக்கு உதவினேன். திடீரென ஒரு நாள் அந்தப் பணம் உடனே வேண்டும் என்று பாஷா கேட்டு அனுப்பினார் உடனே நான் அன்வர் பாஷாவிடம் நிலைமையை விளக்கி பணத்தைக் திருப்பிக் கேட்ட போது நாளை தருவதாகச் சென்னார். அதன் படி மறுநாள் புஹாரியை (அல்லது முஹம்மது அலியை) வரச் செய்து அந்தப் பணத்தைக் கொடுத்து விட்டேன்.

மேலப்பாளையம் புகாரியிடம் அதிகாரிகள் விசாரித்த போது உண்மையை உள்ளபடி சொல்லிவிட்டார். தொழில் செய்வதற்காக பாஷா அவர்கள் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தான் வாங்கினாரே தவிர குண்டு வைடிப்புக்காக பீஜே கொடுத்த பணம் அல்ல என்று புகாரி அளித்த வாக்கு மூலமும் என்னைப் பொய் வழக்கில் சேர்க்காததற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.
பாஷா என்னிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தான் திரும்ப வாங்கினார் என்று அதிகாரியிடம் நான் தெளிவுபடுத்தி எனக்கும் அல்உம்மாவுக்கும் உள்ள கடும் பகை, அவர்களின் கொலை மிரட்டல் காரணமாக எனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ஆகியவற்றையும் எடுத்துக் காட்டினேன். எங்களுக்குள் இவ்வளவு பகை இருக்கும் போது நான் எப்படி அவர்களுக்கு உதவ முடியும் என்று கூறினேன்.

என்னிடம் விசாரித்தது போலவே மற்ற மூவரிடமும் தனியாக இன்னொரு டீம் இது குறித்து விசாரணை செய்தது. அவா்களும் நான் கூறியது போலவே கூறினார்கள் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.

ஆனால் காவல் துறையினர் இதை முழுவையாக நம்பாமல் இதை மேலும் உறுதிப்படுத்த முடிவு செய்தனர். நாங்கள் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது மறுநாள் சென்னைக்குத் தகவல் கொடுத்து அன்வர் பாஷா அவர்களின் அலுவலகத்தின் கணக்குப் புத்தகத்தைச் சோதித்தனர். அதில் பாஷா பணம் முதலீடு செய்த விபரம் அவருக்கு திருப்பிக் கொடுத்த விபரம் ஆகியவை இருந்ததால் நான் செய்வது முழு உண்மை என்று போலீசார் கண்டு கொண்டனர்.

அன்வர் பாஷா அவர்கள் இந்த விபரத்தை எழுதி வைத்திருக்காவிட்டால் நானும் 14 ஆண்டுகள் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். அல்லது சிறைக்குச் சென்றவுடன் அங்கேயே கொல்லப்பட்டிருக்கவும் கூடும். அல்லாஹ் எனக்குச் செய்த மாபெரும் கருணையால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றவாளியாக்கப்படுவதில் இருந்து நான் தப்பிக்க முடிந்தது.
அடுத்து பாஷாவின் மைத்துனர் ஜூபைர் என்பவர் ஒரு வாக்கு மூலம் கொடுத்திருந்தார். அது இதை விடக் கடுமையானது.

அவரிடம் கைப்பற்றப்பட்ட ஜெர்மன் துப்பாக்கி பற்றி காவல்துறை விசாரித்த போது நான் பீஜேயை 36 தாக்கர் தெருவில் உள்ள உணா்வு அலுவலகத்தில் சந்தித்த போது ஐம்பதினாயிரம் ரூபாய் பனமும் இந்த ஜெர்மன் துப்பாக்கியும் கொடுத்தார் என்று பாஷாவின் மைத்துனர் கூறி இருந்தார்

இது குறித்தும் அதிகாரிகள் விசாரித்தனர். ஒருவர் மாற்றி ஒருவராக பல வகையில் விசாரித்தனர்.

உண்மையில் இது பொய் என்றால் குற்றம் சுமத்தப்பட்ட நான் தான் இதை பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்று காவல் துறையினா் எதிர்பார்த்தனர்.

இது பொய் என்று என்னால் எப்படி நிரூபிக்க முடியும்? பாஷா மைத்துனர் ஜூபைர் கொடுத்த வாக்குமூலத்தின் நகலைத் தாருங்கள் என்று நான் கேட்டேன் அவர்கள் நகலைத் தந்தனர்.

அவர் பொத்தாம் பொதுவாக இதைக் கூறி இருந்தால் நான் நிச்சயம் பொய் வழக்கில் சிக்கி இருப்பேன்.

ஜூபைர் என்னைச் சந்தித்த மாதத்தையும் வருடத்தையும் குறிப்பிட்டு இருந்தார். (அந்த வருடம் மாதம் இப்போது நினைவில் இல்லை)

அந்த இடத்தில் தான் அல்லாஹ்வின் மாபெரும் அற்பதம் நிகழ்ந்தது எனலாம்.

புரசைவாக்கம் தாக்கா் தெருவில்தான் உணர்வு அலுவலகம் இருந்தது.

பின்னர் இப்ராஹிம்ஷா தெருவுக்கு மாற்றப்பட்டு விட்டது.

அலுவலகம் மாற்றப்பட்டு வி்ட்டாலும் நீதிமன்றத்தில் முகவரி மாற்றம் பற்றிய தீர்ப்பு பெற வேண்டும், அது தாமதமானதால் கடைசி பக்கத்தில் 36 தாக்கர் தெரு என்றே போட்டு வந்ததோம். இதைப் பார்த்துவிட்டுத் தான் ஜூபைர் தாக்கர் தெரு அலுவலகத்தில் என்னைச் சந்தித்ததாகக் கூறி விட்டார். ஆனால் அவர் கூறிய அந்தக் காலத்துக்கு ஆறு மாதத்துக்கு முன்பே நாங்கள் இப்ரா ஹிம் ஷா தெருவுக்கு மாறி வி்ட்டோம்.

அதாவது எந்த மாதத்தில் என்னை தாக்கர் தெரு அலுவலகத்தில் சந்தித்ததாக பாஷாவின் மைத்துனர் கூறினாரோ அந்த மாதத்தில் உணர்வு அலுவலகமே அந்த முகவரியில் இல்லை என்று நான் தெரிவித்தேன்.

எங்களைக் கஸ்டடியில் வைத்துக் கொண்டே சென்னைக்குத் தகவல் கொடுத்து தாக்கர் தெரு முகவரியில் இருந்த உணர்வு எப்போது இடம் மாறியது என்பதை விசாரிக்கச் செய்தனர். அது போல் இப்ராஹீம் ஷா தெருவில் உள்ள உணர்வு அலுவலகத்தில் சென்று சோதித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தைப் பார்த்து நாங்கள் எவ்வளவு காலமாக இந்த முகவரியில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்தனர்.

மறுநாள் நீங்கள் கூறியது உண்மை தான் என அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள். நான்கு நாட்கள் கோவையில் வைத்து விசாரித்துவிட்டு என் மீதும் மற்ற மூவர் மீதும் பொய்யாகத் தான் பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் புகார் கூறியுள்ளனர் என்பதைச் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் உறுதி செய்த பின் எங்கள் நால்வரையும் விடுவித்தனர்.

அப்துன்னாஸர் மதானி தங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டை அவரால் பொய் என்று நிரூபிக்க முடியாததால் அவர் பலகாலம் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு குண்டு வெடிப்பில் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதும் இவர்களால் தான் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டார் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்?

அவரைப் போன்ற பெரிய தலைவர்களையும் வழக்கில் சேர்த்தால் பெரும் போராட்டம் நடக்கும் அதனால் தாங்கள் தப்பிக்கலாம் என்று நினைத்து அவரை வழக்கில் இழுத்து விட்டதாக அவர்களைச் சேர்ந்த ஒருவர் பிற்காலத்தில் என்னிடம் கூறினார். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இப்போது அப்துன்நாஸர் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கும் இது போன்ற ஒருவரின் வாக்குமூலமே காரணம்.

ஆனால் நான் நினைத்துப் பார்க்காத வகையில் அல்லாஹ்வின் உதவி எனக்கு இருந்ததால் இதில் இருந்தும் நான் தப்பித்தேன். அல்லாஹ்வுக்காகப் போராடப் போவதாகச் சொன்னவர்கள் சம்மந்தமில்லாதவர்கள் மீது பழி போடும் அளவுக்குக் கேவலமாக நடந்து கொண்டனர்.

என் மீது இவர்கள் பழி சுமத்தியதால் தான் என்னையும் சாட்சிகள் பட்டியலி்ல காவல்துறை சேர்த்தது. எனக்கும் பாஷாவுக்கும் பகைதான்  இருந்தது என்பதை நீதி மன்றத்தில் சொல்ல வைத்ததற்கு பாஷாவின் பொய்ப புகார் தான் காரணம்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பீஜே மட்டும் தான் சிறைவாசிகளுக்கு எதிராகச் சாட்சி சொன்னார் என்று இதையும் பரப்பினார்கள்.

குண்டு வெடிப்பு தொடர்பாக நான் எந்த சாட்சியமும் அளிக்கவில்லை. என் மீது பழி சுமத்தியதால் எனக்கும் இவர்களுக்கும் பகைதான் இருந்தது என்று சொன்னேன். அதுவும் நானாகப் போய் இதைச் சொல்லவில்லை. சிறைவாசிகளின் வழக்கறிஞர் என்னையும் விசாரிகக வேண்டும் என்று மனு போட்டதன் அடிப்படையி்ல் நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பியதால் தான் நான் என்னைக் காத்துக் கொள்வதற்காக இவா்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்ற உண்மையைக் கூறினேன்.

என் மீது பொய்ப் பழியையும் சுமத்திவிட்டு, எனக்குச் சம்மன் அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுவும் போட்டு விட்டு நீதிமன்ற உத்தரவு காரணமாக பல முறை நீதி மன்றத்துக்கு எனனை அலைய வைத்துவிட்டு, நான் குண்டு வெடிப்பு தொடர்பாக எதுவும் கூறாமல் இருந்தும் நான் குண்டு வெடிப்பு வழக்கில் சாட்சி கூறியதாகவும் பரப்பினார்கள்.

இதற்காக பாஷா அவர்கள் பிற்காலத்தில் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் மற்ற சிலர் இன்னும் திருந்தவில்லை என்பதைக் காண்கிறேன். அவர்களைத் தான் சிலர் உசுப்பி விட்டுள்ளனர்.

மீண்டும் நான் உறுதிபடக்கூறிகிறேன், நான் எந்தக் காலத்திலும் எந்த மிரட்டலுக்கும் பயப்படக் கூடியவன் அல்ல. தவ்ஹீத்வாதியாக் இருப்பவன் யாருக்கும் பயப்படமாட்டான்............

இன்னும் முழுமையான விபரங்கள் அறிய நீங்கள் கட்டாயம் ஆன்லைன் பீஜே இணையதளத்தில் உள்ள அந்த முழுக் கட்டுரையையும் வாசியுங்கள்.

நன்றி
உணர்வு

Friday, February 24, 2012

ஹதீஸ் கலை அறிவோம்: ஹதீஸ்களின் வகைகள்


திருக்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பரவலாக மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொடர்பான செய்திகளை ஏற்கத்தக்கவை எனவும் ஏற்கத்தகாதவை எனவும் வகைப்படுத்தி இருப்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்க இல்லை. இதைச் சிலர் அறிந்திருந்தாலும் ஏன் அவ்வாறு வகைப்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாததை இரண்டாகப் பிரித்து சிலவற்றை நாம் நிராகரிப்பதாக அவர்கள் புரிந்து கொள்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது அனைத்துமே ஏற்கத்தக்கவை என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களா? என்பதில் ஏற்படும் சந்தேகம் காரணமாகவே சில ஹதீஸ்கள் மறுக்கப்படுகின்றன என்பதை விளக்கவே இந்நூல்.

அறிவிப்பாளர் சரியில்லை என்று நாம் காரணம் கூறி ஒரு ஹதீஸை நிராகரிக்கும் போது அறிவிப்பாளர்கள் சஹாபாக்கள் தானே சஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்கும் போது அறிவிப்பாளரை ஏன் குறை சொல்ல வேண்டும் என்றும் சிலர் நினைக்கின்றனர்.

நாம் சஹாபாக்களைக் காரணம் காட்டி எந்த ஹதீஸையும் மறுப்பதில்லை. சஹாபாக்கள் அல்லாத அறிவிப்பாளர்களை மட்டுமே காரணம் காட்டுகிறோம் என்ற உண்மை இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சரியான ஹதீஸ்களையும் தவறான ஹதீஸ்களையும் எவ்வாறு கண்டறிவது என்று ஆசைப்படுவோருக்கு முழுமையான விளக்கம் இன்ஷா அல்லாஹ் இந்நூலில் கிடைக்கும்.

சரியான ஹதீஸ்களும், தவறான ஹதீஸ்களும்:

ஹதீஸ் துறையில் ஸஹீஹ் என்றால் என்ன? லயீஃப் என்றால் என்ன? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்றால் என்ன? என்று தெரிந்து வைத்திருப்பவர்கள் மிகச் சொற்பமே. ஏகத்துவப் பணிகளில் ஈடுபடுவோர் ஹதீஸ் துறையில் உள்ள இந்தக் கலைச் சொற்களை நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

ஹதீஸ் கலை:
  1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள்
  2. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்கள்
  3. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரங்கள்
ஆகிய மூன்றையும் ஹதீஸ் என்பர்.

ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் தகுதி, எண்ணிக்கை, அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர்கள் தரம் பிரித்துள்ளனர்.

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.

1. ஸஹீஹ் (صحيح) - ஆதாரப்பூர்வமானவை

2. மவ்ளூவு (موضوع) - இட்டுக்கட்டப்பட்டது

3. மத்ரூக் (متروك) - விடப்பட்டவை

4. ளயீஃப் (ضعيف) - பலவீனமானவை

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும்.

இவற்றில் ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப்படுத்தக் கூடாது. 

இந்த நான்கு வகைகளையும் பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

குறிப்பு:

சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய 'சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்த புத்தகத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்.

ஜூம்ஆ உரை ஆடியோ - 24.02.2012