Saturday, June 18, 2011

அதிரையில் 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சி


ஆடியோ பாகம்-2

Friday, June 17, 2011

உங்கள் உதவி தேவை

அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியை கட்டிமுடிப்பது எப்போது ?





ஜும்அ உரை நிகழ்த்தினார்.


17-06-2011 வெள்ளிக்கிழமை அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில். தௌஹீத் ஜமாத் மாநில மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல்லுஹா அவர்கள் ஜும்அ உரை நிகழ்த்தினார்.

அதிரையில் 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சி

06.05.2011 அன்று அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' எனும் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடை பெற்றது . யின் நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு சகோதரர் சகோதரி கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள் . அதன் ஆடியோ பாகம்-1


Sunday, June 12, 2011

'ஜும்அ உரை உரை அல்தாஃபி

06.05.2011 அன்று அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் 'ஜும்அ உரை  உரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்



Saturday, June 11, 2011

கோடைகால பயிற்சி பரிசளிப்பு நிஹழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கிளையில் 03.06.2011 அன்று கோடைகால பயிற்சி பரிசளிப்பு நிஹழ்ச்சி நடை பெற்றது இது 15.05.2011 முதல் 25.05.2011 வரை நடை பெற்றது இதில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமி பெரிய பெண்கள் உட்பட 75 பேர் கலந்து கொண்டனர் இந்த முகாமில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் மாநீல செயலாளர்
 அஷ்ராப்தீன் பிர்தௌஸி மற்றும் சேலம் அரப்பி கல்லுரி ஆசிரியர் சகோதரர் ராஜ் முஹம்மத் மற்றும் தௌஹீத்பள்ளி இமாம் சிஹாபுதின் இவர்கள் மார்க்கம் சம்மந்தமான உரைஹல் நிஹல்தினர்

இறுதியில் தேர்வு எழுதிய அனைவருக்கும் துபை இலிருந்து சகோதரர் அதிரை சிக்கந்தர் அவர்கள்  10,000 ரூபாய்யும்
மேலும் பலசகோதரர்கள் பணம்தந்து பரிசுஹல் வழங்க உதவினார்கள்  மேலும்  இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கக்கப்பட்டது.



. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளம்மானோர் கலந்து கொண்டனர் எல்லா புகழும் அல்ல்ஹுக்கே ....

குர்பானி தோல் விற்ற ரூபாய் 21,000.

.. எல்லா புகழும் அல்ல்ஹுகுக்கே ....
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அதிரை கிளையில் இந்த வருடம் குர்பானி தோல் விற்ற ரூபாய் 21000. பணத்தை அதிரை யில் உள்ள 9 ஏழை குடும்பங்களுக்கு பஹிர்ந்து அளிக்கப்பட்டது

மருத்துவ உதவியாக

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அதிரை கிளை யில்   சென்ற 06.05.2011 ஜும்மா வசூல் 2420 ரூபாய்.  பணத்தை பொதக்குடியை சேர்ந்த முஹம்மத் பாருக் என்பவருக்கு மருத்துவ உதவியாக    அளிக்கப்பட்டது.   ஜும்மாவில் பணம்   தந்து உதவிய அதிரையில்  உள்ள சகோதரரர் களுக்கு

அல்லாஹு  அருள்புரிவானாக.ஆமீன் .


நைனா முஹம்மத்  (கிளை துணை செய்ல்லாளர் )

Sunday, May 08, 2011

வாக்காளர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் நன்றி அறிவிப்பு

சமுதாய நலன் கருதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்த கூட்டணிக்கு வாக்களித்த அதிரை மக்களுக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் நன்றி தெரிவித்த வீடியோ:


Wednesday, May 04, 2011

அதிரையில் 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சி

06.05.2011 அன்று அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' எனும் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடை பெற்றது . யின்  நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு சகோதரர் சகோதரி  கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்


ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளம்மான்னோர் கலந்து கொண்டனர்

                       எல்லா புகழும் இறைவனுக்கே




Sunday, May 01, 2011

சுவனம் செல்ல எளிய வழிகள்

தலைப்பு:
சுவனம் செல்ல எளிய வழிகள்
உரை: M.I. சுலைமான்



Friday, April 29, 2011

அல்அமீன் பள்ளி பிரச்சினையில் ததஜ ஏமாற்றியதா? - அதிரை ததஜ செயலாளரின் பேட்டி

அல்அமீன் பள்ளிவாசல் விஷயத்தில், தேர்தலுக்காக வாக்குறுதி கொடுத்துவிட்டு, தவ்ஹீத் ஜமாஅத் அரசியல்வாதிகளை போல மக்களை ஏமாற்றியதா?

கடந்த நாடாளமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல்அமீன் பள்ளி நிர்வாகத்தை அணுகியதா?

அல்அமீன் பள்ளி நிர்வாகம், ததஜவிடம் அல்அமீன் பள்ளி பிரச்சினையை ஒப்படைக்கும் பட்சத்தில், ததஜ அந்த பிரச்சினைக்காக போராட தயாரா?

இது போன்ற கேள்விகளுக்கு விளக்கம் பெற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் செயலாளர் முஹம்மது சாலிஹ் அவர்களின் நேர்காணலை காணுங்கள்.

பாகம்-1

பாகம்-2


பாகம்-3


பாகம்-4

கோடை கால பயிற்சி முகாம்

வழக்கம் போல், மாணவ மாணவியர் தங்களின் விடுமுறைகளை நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை, எதிர்வரும் மே மாதம் 15 தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்தி இருக்கிறது. இந்த பயிற்சி முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிரை ததஜ கேட்டுக்கொள்கிறது.

பயிற்சி நடைபெறும் இடம்:
மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளி, காலேஜ் ரோடு, அதிராம்பட்டிணம்

பயிற்சி அளிப்பவர்கள்:
மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் சகோதரர் ஷிஹாபுதீன்

நாள்:
மே 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை

நேரம்:
ஆண்கள் மற்றும் சிறுவர்கள் - காலை 10 மணி முதல் 12 மணி வரை
பெண்கள்: பகல் 2 மணி முதல் 4 மணி வரை


Wednesday, April 20, 2011

பிஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் - தற்போது ஆங்கிலாத்தில்....

சகோதரர் பிஜே அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் தற்போது ஆங்கில மொழியில் தற்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் தெரிந்த சகோதரர்கள் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பை தமிழ் மொழிபெயர்ப்புடன் ஒப்பிட்டு பார்த்து தவறு இருப்பின், அதை ஆன்லைன் பிஜே இணையதளத்திற்கு தெரியப்படுத்தவும்.


Sunday, April 10, 2011

மற்றவர்கள் விட்டிற்கு செல்லும் போது பேண வேண்டியவைகள் - ஜூம்ஆ உரை

உரை: அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி

தலைப்பு: மற்றவர்கள் விட்டிற்கு செல்லும் போது பேண வேண்டியவைகள்


Tuesday, April 05, 2011

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு பற்றிய கேள்விகளும் பதில்களும்

 - வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்தது ஏன்?

 - இந்த முடிவு எடுக்க தக்க காரணம் உள்ளதா?

 - விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற குற்றச் சாட்டுக்கள் ஆளும் கட்சி மீது சொல்லப்படும் நிலையில் இந்த முடிவு சரியானது தானா?

 - இலவசத் திட்டங்களால் நன்மை உண்டா?

 - அதிமுகவை ஆதரிக்கும் முஸ்லிம் இயக்கங்களின் முடிவு பொது நலம் உள்ளதா?

 - முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரையும் ஆதரித்தால் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை காண:




Sunday, April 03, 2011

TNTJ வின் தேர்தல் நிலைபாடு குறித்த கேள்விகளுக்கு பிஜேவின் அதிரடி பதில்கள்

முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிக்க கூடாதா? என்று போலி ஒற்றுமை கோஷம் போட்டு, முஸ்லிம் வேட்பாளர்களை தோற்கடிக்க வேலை செய்யும் உத்தமர்களின் முகத்திரையை கிழிக்கும் நேர்காணல்.


Sunday, March 27, 2011

திமுகவை ஆதரிக்க என்ன காரணம்?

அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என திருச்சியில் ஜெயலலிதா அவர்கள் திருச்சி மேற்கு வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் செய்த செய்தி வெளியாகியுள்ளது . ஆனால் இந்தச் செய்தி வந்த பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பொதுக்குழுவில் திமுகவிற்கு ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த இரண்டு விசயங்களையும் நோக்கும் பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதாவது ஜெயலலிதா அவர்கள் தான் இடஒதுக்கீட்டை அறிவித்து விட்டார்களே! பின்பு ஏன் இவர்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலுமே எழும். எழவேண்டும்.

இறைவனின் மாபெரும் கிருபை:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எந்த வியசத்தையும் தன்னிச்சையாக எடுக்கக்கூடிய தனிநபர் முடிவுக்கு வேலையே இல்லை என்பதை அனைத்து மக்களும் நன்கறிவார்கள். எங்களுக்கு 2 சீட்டு கிடைத்தால் போதும், நாங்கள் எப்படியாவது எம்எல்ஏ அல்லது எம்பியாக ஆகிவிட மாட்டோமா? அல்லது எனக்கு ஒரு வாரிய பதவியும், அவருக்கு ஒரு காரிய பதவியும் கிடைத்தால் போதுமே! காலத்துக்கும் கொண்டை விளக்கு வைத்த வண்டியிலே ஒய்யார பவனி வரலாமே என தவமாய்த் தவமிருந்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கி சமுதாய மக்களை அடகு வைத்து அதன் மூலம் தங்கள் சுய லாபங்களைத் தீர்த்துக் கொள்ளும் சமுதாய அமைப்புகள் உள்ளன.

இவர்களுக்கு மத்தியில், எங்கள் சமுதாயத்திற்கு மட்டும் நன்மை என்ற ரீதியில் வந்தால் மட்டும் தான் ஆதரவு, மற்றபடி தலைவர்களின் தனிப்பட்ட வேறு எந்த கோரிக்கைகளுக்குமோ அல்லது அமைப்பின் தலைவர்களை தனியாகச் சந்தித்து டேபிளுக்கு கீழே அழுத்தும் வேலைகளுக்கோ துளியளவும் இடமில்லாத காரணத்தால் தான் இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்றைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு தன்னிகரற்ற இடத்தைப்பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.

கொள்கை ரீதியாக மடித்துக்கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கும் யாராக இருந்தாலும் ஏதாவது சமுதாய‌ கோரிக்கை சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தால், இவர்களை நம்பி போகலாம், இவர்கள் யாருடனும் விலை போக மாட்டார்கள் என்ற ரீதியில் தவ்ஹீத் ஜமாஅத் மீது முழு நம்பிக்கை வைத்து அலைகடலென திரண்டு வருவது என்பது ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் கிடைத்த பாக்கியம் எனலாம். சமுதாயப் பணிகளை சளைக்காமலும் சுய நலமில்லாமலும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரப்போகும் தேர்தலையும் சமுதாயத்தின் நன்மையை முன்வைத்து எதிர்கொள்ளத் தீர்மானித்தது.

பொதுக்குழுவும் அவசர செயற்குழுவும்:

மற்ற தேர்தல்களைப் போல அல்லாமல் இந்தத் தேர்தல் கொஞ்சம் வித்தியாசமான அவசரமான தேர்தலாக மாறிப் போனது. இந்த அவசரத்தில் எப்படியாவது துண்டு போட்டு 3 சீட்டு பிடித்து விட வேண்டும் என்ற ரீதியில் இதே சிந்தனையாக, அந்த அமைப்பு சார்ந்த எந்த மக்களின் கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக மற்ற அமைப்பினர்கள் தூது விட்டுக் காத்திருக்க, இந்த அவசரத்திலும் அசராமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழுவைக் கூட்டி மக்கள் முடிவைக் கேட்டது.

அதாவது ஆளும் திமுக இடஒதுக்கீட்டு அதிகரிப்பை இப்போதே சட்டமாக்க வேண்டும். அப்படி சட்டமாக்கினால் திமுகவை ஆதரிப்பது என்ற ஒரே முடிவு. அவ்வாறு நடைபெறா விட்டால் அதிமுக அவர்களின் தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டும். திமுக இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னால் அதிமுகவை ஆதரிப்பது என்ற செயல் திட்டத்தோடு சேலம் பொதுக்குழு நிறைவுபெற்றது.

ஆனால் ஆளும் திமுகவினர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டை அதிகரித்து சட்டமாக்காமல் சென்றதால் பொதுக்குழு முடிவுப்படி அதிமுகவை ஆதரிக்கும் செயல்திட்டத்தோடு சென்னை திநகரில் அவசர செயற்குழு கூட்டப்பட்டது. செயற்குழு அறிவித்த அந்த நேரத்தில் அதிமுக தலைமை தவ்ஹீத் ஜமாத்தோடு இந்த இடஒதுக்கீடு விசயத்தில் நெருங்கி வந்திருந்தது.

அதாவது கட்டாயமாக தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம் என்ற நிலையில் இருந்தது அதிமுக தலைமை. ஆனாலும் அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் அல்வா கொடுப்பார்கள் என்ற ரீதியில் அதே நிலைபாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதாவது அதிமுக இடஒதுக்கீட்டை அறிவித்தால் அவர்களுக்கு சீரிய ஆதரவு என்றும், அறிவிக்காவிட்டால் சும்மா கடமைக்கு தார்மீக ஆதரவு என்றும் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது.

அதிமுகவினர் ஏற்படுத்திய நம்பிக்கை:

செயற்குழு முடிந்தும் கூட திமுகவினர் தலைமையைத் தொடர்ந்து தொடர்புகொண்ட போதும் அவர்களை நிராகரித்து அனுப்பியது தலைமை. ஆனாலும் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்தார்கள் அதிமுகவினர். தேர்தல் அறிக்கை பற்றி அவர்களிடத்திலே தொடர்ந்து கேட்கப்பட்டது. அதெல்லாம் கவலையே படாதீர்கள். உங்கள் கோரிக்கையான சமுதாய இடஒதுக்கீடு அதிகப்படுத்தும் செய்தி ஒரு எழுத்து கூட விடுபடாமல் தேர்தல் அறிக்கையில் தயாராகி விட்டது என சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய செயற்குழு முடிவை மூடியே வைத்து மவுனம் காத்தது.

அதிமுகவின் துரோகமும் சமுதாயக்காவலர்களின் மௌனமும்:

இந்த நிலையில் திருச்சியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த அதிமுக தலைவர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். ஆனால் அதில் இஸ்லாம் அல்லது முஸ்லீம் என்ற ஒரு வார்த்தை கூட இல்லாலது கண்டு கொதிப்படைந்தது தவ்ஹீத் ஜமாஅத் தலைமை. சாதரண துரோகத்தைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் இது பச்சை நம்பிக்கை துரோகம் என்ற ரீதியில் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி இதை மக்கள் மன்றத்தில் வைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் அதிமுகவை ஆதரித்தவர்களும், அவர்களிடத்திலே சீட்டு வாங்கியவர்களும் இதைப் பற்றி ஏதாவது பேசினால் நமக்கு கிடைத்த சீட்டு பறிபோய் விடும் என்ற நிலையில் வாய்மூடி மௌனியாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், பார்த்தீர்களா! ஜெயலலிதா திருச்சி கூட்டத்திலே இடஒதுக்கீடு குறித்து சொல்லிவிட்டார் என்ற ரீதியில் முழக்கமிடவும் துவங்கிவிட்டார்கள்.

தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்த செய்தி இல்லையென்றதும் பதறியடித்து கூட்டணியை விட்டே வெளியே வந்திருக்க வேண்டாமா? அல்லது இடஒதுக்கீடு குறித்த உங்கள் நிலையை தெளிவுபடுத்துங்கள் என அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டாமா? எங்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு கிடைத்தால் போதும் நாங்கள் வெற்றிபெற்றால் போதும் என போகிற போக்கில் காற்றுவாக்கில் சொல்கிற கோரிக்கைகளுக்கு கொடிபிடித்து அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் இவர்களின் செயல் வெறுப்பைத் தான் ஏற்படுத்துகிறது

மீண்டும் கூடிய அவசர பொதுக்குழு:

இந்த விசயத்தில் திருப்தியடையாத‌ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடனடியாக‌ அவசர பொதுக்குழுவைக் கூட்டியது. செய்யவே மாட்டேன் என சொல்பவனும், வாய்ப்பிருந்தால் செய்வேன் என சொல்பவனும் சமமாக மாட்டான். அதே ரீதியில் தான் திமுகவினரின் இன்றைய நிலையும், அதிமுகவினர் இன்றைய நிலையையும் மக்கள் மன்றத்திலே வைப்பது என முடிவுசெய்யப்பட்டு இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கும் எல்லாவற்றையும் அப்படியே காப்பியடித்து அதை இருமடங்காக்கி வழங்குவேன் என தேர்தல் அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, இடஒதுக்கீட்டு விசயத்தை மட்டும் தூக்கி தூர எறிந்தார்.

அதைப் பற்றி பேசுவதற்கோ கேட்பதற்கோ அம்மாவின் நவீன அடிமைகள் தயங்கும் போது, அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் பணிய மாட்டோம், தேர்தல் நட்பு தேர்தல் முடியும் வரை மட்டும் தான். அடுத்த நாள் அவர்களால் ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையாக களமிறங்குவோம், நமக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை, நம் ஆதரவு தான் அவர்களுக்குத் தேவை என்ற ரீதியில் இன்று வரை இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரு கட்சியினர் செய்த துரோகங்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தது.

வாக்கெடுப்பும் மக்களின் தீர்ப்பும்:

இந்த இடத்தில் சமுதாயத்திற்கு அதிமுக செய்த நம்பிக்கை துரோகத்தை விட, திமுகவின் துரோகம் கொஞ்சம் குறைவு என்ற ரீதியிலும், தவ்ஹீத் ஜமாஅத்திடம் வாக்குறுதி கொடுத்து ஒட்டுமொத்த சமுதாயத்தையே ஏமாற்ற நினைத்த ஜெயலலிதாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற ரீதியிலும் இரண்டு விசயங்கள் வாக்கெடுப்புக்கு வைக்கப்பட்டன.

1) இந்த தேர்தலில் நம் சமுதாயத்திற்கு யாருமே நன்மை செய்துவிடவில்லை, இரண்டு கட்சிகளுமே துரோகம் தான் செய்தார்கள். எனவே யாருக்கும் ஆதரவு இல்லை. ஜமாஅத் பெயரையும் கொடியயும் பயன்படுத்தி ய்யாருக்கும் வேலை செய்யக் கூடாது. ஆனால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் சிந்தித்து ஓட்டளிக்கலாம்

2) திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லி இருப்பதும் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் சொல்ல மறுத்ததும் சமமானதல்ல என்பதால் திமிகவுக்கு ஆதரவு அளிப்பது

என்ற இரண்டு விசயங்கள் மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு வைக்கப்பட்டன. மக்களுக்கு வாய்ப்பளித்து முதல் கோரிக்கை சராசரியாக 20 % வாக்குகளைப் பெற்றது. அதே போல இரண்டாவது கோரிக்கை மக்களின் ஏகோபித்த தீர்ப்பாக ஏறத்தாழ 80% வாக்குகளைப் பெற்றது.

மக்களின் ஏகோபித்த முடிவைத்தான் தலைமையே ஏற்றுக் கொள்ளும் என்ற ரீதியில் திமுக அணியை 234 தொகுதிகளிலும் ஆதரிப்பது என்ற மக்களின் முடிவை தலைமை அறிவித்தது. இது எந்த நிலையிலும் தன்னிச்சையான முடிவு அல்ல.

ஆக சமுதாயத்தைக் காட்டி ஒன்று, இரண்டு, மூன்று அதுவும் இல்லைன்னாலும் பரவாயில்லை கிடைத்ததை வாங்கிக்கொண்டு கிடையாய்க் கிடக்கிறோம், நீங்கள் தான் சமுதாய காவலர், நாங்கள் காலங்காலமாக நீங்கள் சமுதாயத்திற்கு என்ன துரோகம் செய்தாலும் கண்டுகொள்ள மாட்டோம், எங்களுக்கு 3 தாருங்கள் நாங்கள் 300க்கு உழைப்போம் என அவர்களுக்கு கொடி தூக்குவதும், இவர்களை ஆதரிக்கும் போது அவர்களைத் திட்டுவதும், அவர்கள் பக்கம் ஓடிவிட்டால் இவர்களைத் திட்டுவதும் என மோடிமஸ்தான் வேலைகளைச் செய்து எப்படியாவது தங்களை சமுதாய காவலர்களாக காட்டிக்கொள்ள துடிக்கும் சமுதாய துரோகிகளுக்கு மத்தியில் மக்கள் முடிவே அமைப்பின் முடிவு என்ற நிலையை மட்டும் கையாளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனித்து விளங்குகின்றது. எல்லா புகழும் இறைவனுக்கே!


Saturday, March 26, 2011

சென்னையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு – TNTJ வின் தேர்தல் நிலைபாடு என்ன?


வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை ( 26.03.11 ) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது.


முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக தேர்தல் அறிக்கையில் அதிமுக வாக்களித்தால் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதன் பின்னர் அதிமுக சார்பில் அதன் மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொன்னையன், அன்வர் ராஜா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய முக்கிய தலைவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு மூன்று தடவை நேரில் வந்து ஆதரவு கேட்டனர். தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க உறுதியளிப்போம் என்று சொன்னால் தவிர நாங்கள் ஆதரிக்க முடியாது என்று நாம் திட்டவட்டமாகச் சொன்னோம். இதன் பின்னர் பல தடவை பேச்சு வார்த்தை நடத்திய பின் தேர்தல் அறிக்கையில் சொல்வதாகவும் அதற்கான வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்று நம்மிடம் கேட்ட போது அந்த வாசகத்தை நாம் எழுதிக் கொடுத்தோம். கட்டாயம் தேர்தல் அறிக்கையில் சொல்வோம் என்று அவர்கள் உறுதி மொழி அளித்தாலும் தேர்தல் அறிக்கையைப் பார்க்காமல் நாங்கள் முடிவு சொல்ல முடியாது என்று கூறினோம்.

இதன் காரணமாகவே அதிமுக வின் தேர்தல் அறிக்கை வரும் வரை யாருக்கு ஆதரவு என்னும் முடிவை எடுக்காமல் தள்ளி வைத்தோம்.

ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவதாக ஒரு வார்த்தையும் இல்லை.

ஆனால் திமுக வின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை அதிகரிப்பது பற்றி கூறப்பட்ட பின்பும் திமுக வின் தேர்தல் அறிக்கையை வரிக்கு வரி காப்பியடித்த ஜெயலலிதாவுக்கு முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த பாராவை மட்டும் காப்பியடிக்கக் கூட மனமில்லை.

தேர்தல் பிரச்சாரத்தின் போது போகிற போக்கில் இது குறித்து பேசினால் அதை முஸ்லிம்கள் நம்ப மாட்டோம், மாறாக தேர்தல் அறிக்கையில் தான் கூற வேண்டும் என்று நாங்கள் கூறியதை ஒப்புக் கொண்ட அதிமுக முஸ்லிம் சமுதாயத்துக்கு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது.

பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் அறிக்கையில் இதைச் சேர்ப்போம் எனக் கூறி, வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்பது உட்பட நம்மிடத்தில் எழுதி வாங்கிச் சென்று விட்டு, நம்மை நம்ப வைத்து ஏமாற்றிய அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவது என்று மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

முஸ்லிம்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று நாம் வைத்த கோரிக்கையும் அதிமுக வால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.

திமுக 120 இடங்களில் 4 இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் 160 இடங்களில் போட்டியிடும் அதிமுக மூன்று இடங்கள் மட்டும் முஸ்லிம்களுக்கு வழங்கி மற்றொரு துரோகத்தையும் செய்துள்ளது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வின் துரோகச் செயலுக்கு தக்க பாடம் புகட்டுவதற்காகவும் திமுக தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு குறித்து சொல்லி இருக்கிற காரணத்துக்காகவும் அதிமுகவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

Friday, March 25, 2011

துன்பங்களுக்கு தற்கொலை தீர்வாகுமா?

தலைப்பு:
துன்பங்களுக்கு தற்கொலை தீர்வாகுமா?

உரை:
மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி


Sunday, March 20, 2011

பொன்னாடை போர்த்தும் தமிழகத்தின் முதன்மையான தவ்ஹீத் (?) அமைப்பு (சாக்)

நாகர்கோவிலில் ஜாக் அமைப்பின் ஆதரவுடன் நடக்கும் இஸ்லாமிக் சானல் என்ற கேபிள் டிவியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருப்பவர் ஐதுரூஸ் ஃபிர்தௌஸி.

சமீபத்தில் பெரியார் தாசன் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி இஸ்லாமிக் சானல் சார்பாக நாகர்கோவிலில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் இறுதியில் வாழ்த்துரை வழங்கியவர்களுக்கு பொன்னாடை(?!) போர்த்தப்பட்டது.

டிவி சானலின் உரிமையாளர் இன்னாருக்கு பொன்னாடை போர்த்துவார் என ஐதுரூஸ் ஃபிர்தௌஸி தொகுத்து வழங்க ஜாக் பேச்சாளர் எம்.சி.முஹம்மது, எஸ்.கமாலுதீன் மதனி, ஃபிர்தெஸியா கல்லூரி முதல்வர் செய்யது முஹம்மது மதனி, தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் காதர் மைதீன் என பலருக்கு அவர் பொன்னாடை போர்த்தி கைகுலுக்கினார்.

இறுதியாக வாழ்த்துரை வழங்கிய -------------- என்ற ஆலிமாவுக்கு பொன்னாடை போர்த்துவார் என ஐதுரூஸ் ஃபிர்தௌஸி அறிவிக்க டிவி உரிமையாளர் தனது கையில் ஆடையை வைத்துக் கொண்டு ஆலிமாவைத் தேட நல்ல வேளையாக அவர் உள்ளே மறைந்து கொண்டார். இல்லையெனில் பலருக்கு மத்தியில் அந்த ஆலிமாவுக்கு அவர் பொன்னாடை போர்த்தி இருப்பார். ஒரு சிறுமியிடம் அந்த ஆடை கொடுக்கப்பட்டது. 

மதீனாவில் படித்த ஜாக் அறிஞர்கள் கூட இந்த புகுழுக்கும் பொன்னாடைக்கும் அடிமையாகி விட்டனர்.

கமாலுத்தீன் மதனிக்கு பொன்னாடை போர்த்தும் கண்கொள்ளாக் காட்சி

ஸையித் முஹம்மது மதனிக்கு பொன்னாடை போர்த்தும் காட்சி

இன்னொரு ஜாக் மவலவிக்கு பொன்னாடை

ஆலிமாவுக்கு பொன்னாடை போர்த்த காத்திருக்கும் கேபிள் டிவி உரிமையாளர் 


ஜாக் தாயிகள் அனைவரும் அந்த நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டுதானிருந்தனர்.

அரசியல்வாதிகளுடன் போட்டி போட்டு புகழ் போதையில் தட்டழியும் இவர்களையும் குர்ஆன் ஹதிஸ் பேசுவோர் என்று நீனைத்து ஆதரவளிப்போர் சிந்தியுங்கள். 


நன்றி: ஆன்லைன் பிஜே

Wednesday, March 16, 2011

ஜூம்ஆ உரை - 04.02.2011 - ஆடியோ

உரை: அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி

தலைப்பு: ஜூம்ஆவின் ஒழுங்குகள்

Monday, March 14, 2011

Sunday, March 13, 2011

ஜூம்ஆ உரை - 04.02.2011 - வீடியோ

உரை: அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி

தலைப்பு: ஜூம்ஆவின் ஒழுங்குகள்


Monday, March 07, 2011

இறை இல்லமும், இஸ்லாமிய கீதமும் (வீடியோ)

உரை: மௌலவி அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி



Friday, March 04, 2011

ஏகத்துவ பிரச்சார சொற்பொழிவுகளுக்காக ஒர் புதிய இணையதளம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க அறிஞர்கள் மௌலவி ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி,  மௌலவி ஷம்சுலுஹா ரஹ்மானி, மௌலவி M.S. சுலைமான், மௌலவி M.I. சுலைமான், மௌலவி அப்துர் நாசர், மௌலவி அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி போன்றவர்கள் உரையாற்றிய வீடியோ பதிவுகளை காண புதிய ஒர் இணையதளம் ஆரம்பமாகியுள்ளது.



Thursday, March 03, 2011

Tuesday, March 01, 2011

Monday, February 28, 2011

தவ்ஹீத் வரலாறு

Friday, February 25, 2011

மவ்லூது ஓதுவதற்கு கூட்டம் குறைந்து விட்டது!!

1980 களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சத்தியப் பிரச்சாரம் தற்போது முழு அளவில் வீரியமடைந்து சீரும் சிறப்புமாக தமிழகத்தில் மாபெரும் எழுச்சி கண்டு வருகின்றது. தவ்ஹீத் ஜமா-அத்தின் வீரியமிக்க பிரச்சாரத்தின் மூலம் தமிழக முஸ்லிம்கள் தங்களைப் பீடித்திருந்த ஷிர்க் மற்றும் பித்அத் போன்ற கொடிய நோய்களிலிருந்து விலகி நரகப் படுகுழியிலிருந்து பாதுகாப்பு பெற்று வருகின்றனர். அல்ஹம்து லில்லாஹ்…

அதற்கு ஆதாரமாக பல பள்ளிவாசல்களைக் குறிப்பிடலாம் என்ற போதிலும் உதாரணத்திற்கு, வடசென்னை மாவட்ட கொடுங்கையூர் முத்தமிழ்நகர் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலில் சென்ற வரம் நடந்த சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

வடசென்னை, கொடுங்கையூர் முத்தமிழ்நகர் அல் அமீன் பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு அந்தப் பள்ளிவாசல் நிர்வாகம் ஒரு அறிவிப்பு செய்துள்ளது. முன்பு போல் மவ்லூது ஓதுவதற்கு ஆட்கள் வருவதில்லை.

மவ்லூது ஓதும் பள்ளிவாசல் இமாமோடு சேர்ந்து சின்னஞ்சிறிய சிறுவர்கள் மட்டும் தான் மவ்லூது ஓதி வருகின்றனர். அத்தோடு மட்டுமில்லாமல் மவ்லூது ஓதிவிட்டு தப்ரூக் – பிரசாதம் வழங்குவதற்கு முன்பு போல யாரும் பணம் வழங்குவதில்லை. இந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் செய்யக் கூடிய பிரச்சாரத்தை யாரும் நம்பி விட வேண்டாம். அவர்கள் எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும் நாங்கள் மவ்லூது ஓதுவதை நிறுத்த மாட்டோம். நீங்களும் தப்ரூக் வழங்க பணம் கொடுப்பதை நிறுத்தி விட வேண்டாம் என்று கெஞ்சாத குறையாக அறிவிப்பு செய்துள்ளனர்.

முத்தமிழ் நகர் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசலில் மவ்லூது பாடல்கள் எத்தகை மாபெரும் பாவம் என்பதை விளக்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்ட கொடுங்கையூர் கிளை சார்பாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதோடு, மவ்லூது ஓதுவதும் மீலாது விழா கொண்டாடுவதும் நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பாவங்களாகும் என்பதை விளக்கி போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.

இதனால் ஆத்திரமடைந்த பள்ளிவாசல் நிர்வாகம் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்த தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களை இந்தத் துண்டு பிரசுரங்களை இங்கு விநியோகிக்க கூடாது என்று விரட்டியுள்ளனர். அந்த ஜமாஅத்தினரின் எதிர்ப்பையும் மீறி அந்தப்பகுதி மக்களுக்கு துண்டு பிரசுரங்களின் வாயிலாக சத்தியப் பிரச்சாரம் எத்தி வைக்கப்பட்டது.

மாபெரும் ஏகத்துவ எழுச்சி:

ஒரு கால கட்டத்தில் மவ்லூது ஓதுவதற்கும், மவ்லூது ஓதிவிட்டு வழங்கப்படும் தப்ரூக்கைப் பெறுவதற்கும் கூட்டம் அலைமோதும்.

12நாள் ஓதப்படும் மவ்லூதுக்கு தப்ரூக் வழங்க மக்கள் பணத்தைப் போட்டிபோட்டு வாரி இரைத்து பணம் செலவழித்து வந்தனர். உச்சகட்டமாக கடைசி நாள் மவ்லூது ஓதிவிட்டு ஸ்பெஷல் தப்ரூக்காக தேங்காய்ச் சோறு ஆக்கி வழங்கும் வழக்கமும் பல பகுதிகளில் இருந்து வந்த நிலை மாறி தற்போது ஒரு சீப்பு வாழைப்பழத்திற்கே பள்ளிவாசல் நிர்வாகம் அல்லோல கல்லோலப்படுகின்றது என்றால் இந்த நிலைமைக்கு எழுச்சிமிகு ஏகத்துவப் பிரச்சாரமே காரணம் என்றால் அதுமிகையல்ல.

மவ்லூது ஓதுவது மிகப் பெரிய பாவம் என்று பிரச்சாரம் செய்து அதில் மூழ்கிக் கிடந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதும், அந்தப் பாவத்திற்கு பணம் மற்றும் தப்ரூக் வழங்கி ஒத்துழைப்பு வழங்குவதும் பாவமாகும் என்று மக்களுக்கு விளக்கியதும், அந்த தப்ரூக்கை வாங்கி உண்பது பாவம் என்று மக்களுக்குத் தெளிவுபடுத்தியதும், தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரியமிக்க பிரச்சாரமும் தான் இந்த மாபெரும் மாற்றத்திற்கு காரணம் என்பதை ஒவ்வொரு சுன்னத் ஜமாஅத்தினரும் உணராமலில்லை. அதிலிருந்து அவர்களும் விடுபடும் காலம் மிக தொலைவிலில்லை. இன்ஷா அல்லாஹ்…

Sunday, February 20, 2011

Thursday, February 17, 2011

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம். மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்க!

சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?

தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

சுப்ஹான மவ்லிதின் பெயர் காரணம்?

இந்த மவ்லித் ”ஸுப்ஹான அஸீஸில் ஃகஃப்பார் என்று தொடங்குவதால் இதன் முதல் சொல்லான ஸுப்ஹான என்பதே இந்த மவ்லிதுக்குரிய பெயராக அமைந்தது. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

‘மவ்லித்’ என்பதின் பொருள்:

‘மவ்லிது’ எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித்)

மவ்லித் ஓதுதலை உருவாக்கியவர் யார்?

மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர், தலைசிறந்த - வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான ‘அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ – பின்- ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்’ என்பவர் ஆவார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

ஆஹா மெகா ஆஃபர்:

உங்கள் நோக்கம் நிறைவேற உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு பெற வருடத்தில் ஒரு மாதம் மெகா ஆஃபர் நாள் வந்துள்ளது என்று மவ்லித் பிரியர்கள் அறிவித்துள்ளனர்.

மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லிதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஈமானின் வெற்றிக்கு இலகுவான வழி:

மறுமையில் வெற்றிபெற தொழுகை நோன்பு போன்ற எந்த கடமையும் செய்யாமல் இலகுவாக செல்லும் வழியை சொல்லுகிறார்கள் மவ்லித் பிரியர்கள்.

”திருநபி (ஸல்) அவர்களின் மவ்லிது சபைக்கு ஒருவர் வருகை தந்து, அவர்களின் மகத்துவத்தை ஒருவர் கண்ணியப்படுத்தினால் அவர், ஈமானின் மூலம் வெற்றி பெற்றுவிட்டார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஆனால் அல்லாஹ்வின் வெற்றிப்பெற்றவர்களை யார்? அவர்களின் நடவடிக்கைள் என்ன?  என்று அல்லாஹ் கூறுவதை பாருங்கள் 

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர், (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.(23 : 1-11)

செலவு செய்யும் முறை

நம்மிடம் இருக்கும் செல்வத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதை மவ்லிது பிரியர்கள் கூறுவதை பாருங்கள் : ”உஹது மலையளவு தங்கம் என்னிடம் இருக்குமானால் நான் அதை நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது ஓதுவதற்காகச் செலவு செய்ய விரும்புவேன்” என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஆனால் திருக்குர்ஆனும் நபி மொழிகளும் கூறுவதை பாருங்கள்

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 214)

மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்?

”மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்காக ஒருவர் உணவு தயாரித்து முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டினார். அந்த மவ்லிதைக் கண்ணியப்படுத்துவதற்காக நறுமணம் பூசினார். புத்தாடை புனைந்தார். தன்னையும் சபையையும் அலங்கரித்தார். விளக்குகள் ஏற்றினாரென்றால் அத்தகையவரை மறுமை நாளில் நபிமார்கள் அடங்கிய முதல் பிரிவுடன் அல்லாஹ் எழுப்புவான். மேலும் அவர் நல்லோரின் ஆன்மா ஒதுங்கும் இல்லிய்யீன் திருத்தலத்தின் உயர்நிலையில் இருப்பார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

அமுத சுரபி மவ்லித்:

அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக செல்வத்தை அள்ளித்தரும் பாத்திரம் மவ்லிதாம்.

”நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைத் தனியாக உண்டியலில் சேமித்து மவ்லிது நிகழ்ச்சி நடத்தியபின் எஞ்சிய நாணயங்களுடன் கலந்து விட்டாரெனில் இந்த நாணயங்களின் ‘பரக்கத்’ ஏனைய நாணயங்களிலும் ஏற்பட்டு விட்டது. இந்த நாணயம் வைத்திருப்பவர் வறுமை நிலை அடையமாட்டார். மாநபி (ஸல்) மவ்லிதின் பரக்கத்தினால் இவரின் கை நாணயங்களை விட்டுக் காலியாகாது”. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

நல்லாடியர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க சுலபமான வழி:

எந்த சிரமமும் இல்லாமல் சுவர்க்கத்திற்கு செல்ல அழகான ஒரு வழியை காட்டுகிறது மவ்லித்.

”எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

”நாயகம் (ஸல்) அவர்களின் மவ்லிதுக்காக ஒருவர் தனியிடத்தை ஒதுக்கி, முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டி உணவு தயாரித்து வழங்கி உபகாரம் பல செய்து மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்குக் காரணமாக இருந்தால் இத்தகையவரை மறுமைநாளில் மெய்யடியார்கள், ஷுதாக்கள் ஸலாஹீன்கள் குழுவினருடன் , அல்லாஹ் எழுப்புவான். மேலும் ‘நயீம்’ எனும் சுவனத்தில் மறுமையில் இவர் இருப்பார்” என்று எமன் நாட்டு மாமேதை இமாம் யாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

படைத்தவன் கூறும் வழிமுறையை கவனியுங்கள் : அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4 : 19)

மலக்குகளின் வருகை:

”எந்தவொரு வீட்டிலோ பள்ளி வாசலிலோ மஹல்லாவிலோ மாநபி (ஸல்) மவ்லிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களைத் தன்கருணையினால் அல்லாஹ் சூழ வைத்துவிடுகிறான்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் : அல்லாஹ்வின் ஏதாவது ஒரு வீட்டில் ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை தங்களுக்குள் பாடம் நடத்தினால் அவர்கள் மீது அமைதி இறங்கும் அவர்களை ரஹ்மத் சூழ்ந்து கொள்ளும் மலக்குமார்கள் அவர்களை போர்த்திக் கொள்ளவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் (4867)

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

மாநபி (ஸல்) மவ்லிதையொட்டி இந்த (அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார்.’ அவ்விருந்தில் சமைக்கப்பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சதம் வெண்ணெய்ப் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

அவர்களுக்கொல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார், மேலும் அன்பளிப்புகளும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார்.

ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்லிதுக்காவே செலவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

- நன்றி tntj.net (http://www.tntj.net/?p=11236)

Wednesday, February 02, 2011

ஜூம்ஆ உரை - 14.01.2011

அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் நடைபெறும் ஜூம்ஆ உரையின் ஆடியோ இங்கு வார வாரம் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ்.

நாள்: 14.01.2011
உரை: மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி

அதிரை இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் (வீடியோ) - பாகம்-3

கடந்த 24.11.2010 அன்று அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் நடைபெற்ற 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சியில் சகோதரர் பி.ஜே அவர்கள் அளித்த பதில்கள்:


பாகம்-3

அதிரை இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் (வீடியோ) - பாகம்-2

கடந்த 24.11.2010 அன்று அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் நடைபெற்ற 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சியில் சகோதரர் பி.ஜே அவர்கள் அளித்த பதில்கள்:


பாகம்-2