Wednesday, September 22, 2010

'மாமனிதர் நபிகம் நாயகம்' புத்தகம் ரியாத் ஜாலியாத் மூலம் மீண்டும் வெளியீடு!

அல்லாஹ்வின் கிருபையால், மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. பிஜே அவர்களின் பல நூல்களை சவூதி அரசின் அங்கீகாரம் பெற்ற ஜாலியாத்துகள் (இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையங்கள்) பல சமயங்களில் வெளியிட்டுள்ளன.

அவற்றுள் 'இதுதான் பைபிள்', 'இயேசு இறைமகனா?', 'பித்அத் ஓர் ஆய்வு', 'திருமறையின் தோற்றுவாய்', 'நோன்பு', 'மாமனிதர் நபிகள் நாயகம்' மற்றும் 'அர்த்தமுள்ள இஸ்லாம்' போன்றவையும் அடங்கும்.

சில வருடங்களுக்கு முன்பாக நஸீம் ஜாலியாத் மூலம் 'மாமனிதர் நபிகள் நாயகம்' இலவச பதிப்பாக வெளியிடப்பட்டது. புத்தகத்தின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம் – முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளிடம் அந்த புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, ரப்வா ஜாலியாத், இந்த வருடம் மீண்டும் அப்புத்தகத்தை மீள்பதிப்பு செய்து வெளியிட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!

மேலும் படியுங்கள்: பிஜே சவூதியில் நுழைய தடையா? 

'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்.

Sunday, September 19, 2010

அதிரையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

கடந்த 10.09.2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக அதிரை ECR ரோட்டில் உள்ள 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளி அருகில் உள்ள திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார். இதில் பெண்கள் உள்பட திரளாக மக்கள் கலந்துகொண்டனர்.

Friday, September 10, 2010

'இஸ்லாம் கூறும் குடும்பவியல்' தொடர் உரை வீடியோ

சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கடந்த ரமலானில் 'இஸ்லாம் கூறும் குடும்பவியல்' என்ற தலைப்பில் உரையாற்றிய தொடர் உரைகளை காண கீழே சொடுக்கவும்.

Sunday, August 29, 2010

ஃபித்ராவின் சட்டங்கள்

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.

ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.

நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்:

இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது. நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.

கொடுக்கும் நேரம்:

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி 1503, 1509

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.

பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.

பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.

ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

“இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை” என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.

ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ‘ரமளான் ஜகாத்’ என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.

இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்” என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது. எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.

எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.

ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.

நபித்தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.

எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது. 

நன்றி: www.tntj.net

Tuesday, August 24, 2010

நோன்பு துறக்கும் போது ஓத வேண்டிய துஆ என்ன?

தமிழக்கத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து.. என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹும்ம லக்க சும்த்து... என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூ ஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும் முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு தாபியி வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவைகள் அனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து

இந்த வாசகத்தை முஆத் பின் ஸஹ்ரா என்ற தாபியி அறிவிக்கும் செய்தி 

அபூதாவூத் (2011)
முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511
பைஹகீ பாகம்: 4, பக்கம்: 239
ஷுஅபுல் ஈமான் - பைஹகீ 3747
அத்தஃவாத்துல் கபீர் - பைஹகீ (426)
அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக் - இப்னுல் முபாரக் (1388,1390)
அஸ்ஸுனனுஸ் ஸகீர் - பைஹகீ (1102)
பழாயிலுல் அவ்காத் - பைஹகீ (141)
அல்மராஸில் - அபூதாவூத் (95)

ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை இடம் பெற்ற அனைத்து நூல்களிலும் முஆத் பின் ஸஹ்ரா என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் அல்ல! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்காத நபர் அறிவிப்பதை நாம் ஏற்கக் கூடாது. எனவே இந்தச் செய்தி பலவீனம் அடைகிறது.

மேலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். எனவே இப்னு ஹிப்பான் மட்டும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை. எனவே முஆத் பின் ஸஹ்ரா என்பவர் யாரென அறியப்படாததால் மேலும் இச்செய்தி பலவீனமடைகிறது.

இதே செய்தி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் மூலம் முஸன்னஃப் அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து ஹுஸைன் பின் அப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமீ என்பவர் அறிவித்துள்ளார்.

இவர், அபூஜுஹைஃபா (ரலி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி), இப்னு உமர் (ரலி), அனஸ் (ரலி), உமரா பின் ருவைபா (ரலி), ஜாபிர் பின் ஸமுரா (ரலி), உபைதுல்லாஹ் பின் முஸ்லிம் அல்ஹள்ரமீ (ரலி) ஆகிய ஆறு நபித்தோழர்களிடமிருந்தும் உம்மு ஆஸிம் (ரலி), உம்மு தாரிக் (ரலி) ஆகிய இரண்டு நபித் தோழியர்களிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். 

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்

அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து எந்தச் செய்தியையும் அறிவித்ததாகக் குறிப்பு இல்லை. எனவே இந்தச் செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை.

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஆனனீ ஃபசும்து வரஸகனீ வஅஃப்தர்த்து

இந்த வாசகம் முஸனஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511, பழாயிலுல் அவ்காத்-பைஹகீ (141) ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இச்செய்தியையும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரே அறிவிக்கிறார். நாம் முன்னர் முஆத் பின் ஸஹ்ரா என்பவர் தொடர்பாக கூறிய அனைத்து விமர்சனங்களும் இந்தச் செய்திக்கும் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியும் பலவீனமடைகிறது.

லக்க சும்த்து வலா ரிஸ்க்கிக்க அஃப்தர்த்து வதகப்பல் மின்னீ இன்னக்கஸ் ஸமீவுல் அளீம்

இந்த வாசகம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீயின் அல்முஃஜமுல் கபீர் பாகம்: 10, பக்கம்: 292ல் இடம் பெற்றுள்ளது.

இதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இவரும், இவருடைய தந்தையும் பலவீனமானவர்கள் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாத்தம் அவர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுபவர் என்று இப்னு ஹிப்பான் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்த செய்தி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் லிஸானுல் மீஸான் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியும் ஆதாரமற்றதாகி விடுகிறது.

பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து

இந்தச் செய்தி அனஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீ அவர்களின் 

அல்முஃஜமுல் அவ்ஸத் பாகம்: 16, பக்கம்: 338லும்
அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம்: 3, பக்கம்: 52லும்
கிதாபுத் துஆ பாகம்: 2, பக்கம்: 488லும்
அபூநுஐம் அவர்களின் அஹ்பார் உஸ்பஹான் பாகம்: 9, பக்கம்: 141லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை இடம் பெற்றிருக்கும் அனைத்து நூல்களிலும் தாவூத் பின் ஸிப்ரிகான் என்பவர் இடம் பெற்றுள்ளார்.

ஜவ்ஸஜானீ அவர்கள், இவர் ஒரு பொய்யர் என்றும் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று யஃகூப் பின் ஷைபா, அபூ ஸுர்ஆ அவர்களும், இவர் நம்பகமானவர் இல்லை என்று இமாம் நஸயீ அவர்களும் பலவீனமானவர் என்று அபூதாவூத் அவர்களும் மேலும் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்

எனவே இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல!

அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலைக்க தவக்கல்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து

இந்த வாசகம் அலீ (ரலி) அவர்கள் மூலம் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் அல்மதாலிபுல் ஆலிய்யா பாகம்: 3, பக்கம்: 408லும், முஸ்னதுல் ஹாரிஸ் பாகம்: 2, பக்கம்: 256லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் ஹம்மாத் பின் அம்ர் அந்நஸீபி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்லும் பொய்யர் என்று கடுமையாகக் குற்றம் சுமத்தப்பட்டவராவார்.

இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் புகாரி அவர்களும், இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸயீ அவர்களும், ஹதீஸ்களை இட்டுக் கட்டுபவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும், முற்றிலும் பலவீனமானவர் என்று இமாம் அபூஹாத்தம் அவர்களும், பொய்யர் என்றும் இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று பிரபலமானவர்களில் இவரும் ஒருவர் என்று இப்னு மயீன் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

நூல்: லிஸானுல் மீஸான்

இதைப் போன்று ஐந்தாவது அறிவிப்பாளர் அஸ்ஸரிய்யு பின் காலித் என்பவர் யாரென அறிப்படாதவர் என்று இமாம் தஹபீ தனது மீஸானுல் இஃதிதால் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்தச் செய்தியும் பலவீனமடைகிறது.

ஆக மொத்தத்தில் அல்லாஹும்ம லக்க சும்து ... எனத் தொடங்கும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை.

தஹபள்ளமவு... என்று ஆரம்பிக்கும் துஆ:

நோன்பு துறந்த பின், தஹபள்ளமவு வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ் எனும் துஆவை ஓதுவது நபிமொழி என்று நாம் கூறி வந்தோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அபூதாவூத், ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம் கூறினோம். நமது உரைகளிலும், கட்டுரைகளிலும், நூல்களிலும் இதைத் தெரிவித்தோம்.

எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்.

ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.

மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதை வழிமொழிந்தோம்.

இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.

ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம் பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம்.

மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.

ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.

ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான் அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது நமக்குத் தெரிய வருகின்றது.

மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.

இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார் என்று குறிப்பிடுகின்றார்.

இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார்.

இதை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர். வேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தவில்லை.

எனவே யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல!

இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது. சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்ப பிஸ்மில்லாஹ் கூறுவது தான் 
சரியான நடைமுறை ஆகும்.

இந்த ஆக்கம் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் 'நோன்பு' என்று நூலில் இருந்து எடுக்கப்பட்டது. 

அந்த நூலை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Tuesday, August 17, 2010

தராவீஹ் இருபதா? எட்டா?


நபி (ஸல்) அவர்கள் இருபது ரக்ஆத்துகள் தொழுதார்களா?

உமர் (ரலி) அவர்கள் இருபது ரக்ஆத்துகள் தொழுதார்களா?

ஸஹாபாக்கள் இருபது ரக்ஆத்துகள் தொழுதார்களா?

இது போன்ற கேள்விகளுக்கு விடை காண ''தராவீஹ் ஒர் ஆய்வு'' என்ற நூலை வாசிக்கவும். 

அந்த நூலை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Friday, August 13, 2010

ரமலான் மாதத்தின் சிறப்புகள்

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்:
“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898), முஸ்லிம் (1956)

“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899), முஸ்லிம் (1957)

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.

இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!

“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.

மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.

இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.

“ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.

இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(நூல்: புகாரீ 1903)

இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.

கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்:

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். “ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்:
ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை:
ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.

“ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), 
நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)

சுவர்க்கத்தில் தனி வாசல்:
நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.

“சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்:
“நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)

“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது:
இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!

இணையதளத்தில் ரமலான் தொடர் சொற்பொழிவு நேரடி ஒளிபரப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில் தலைமையகத்தில் தினமும் இந்திய நேரம் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 'இஸ்லாம் கூறும் குடும்பவியல்' என்ற தலைப்பில் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்தும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஆன்லைன் பிஜே மற்றும் ததஜ இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. 

இணையதள ஒளிபரப்பு நேரம்:
இந்திய நேரம் இரவு 10 மணி முதல் 11 மணி வரை

இமயம் மற்றும் மெகா தொலைகாட்சிகளில் ஒளிபரப்பு நேரம்:
இந்த நிகழ்ச்சி தினமும் இந்திய நேரம் காலை 4 மணி முதல் 5 மணி வரை மெகா டிவியிலும், காலை 5 மணி முதல் 6 மணி வரை இமயம் டிவியிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஒவ்வோரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சி அடுத்த நாள் கீழ்காணும் லிங்கில் பதிவேற்றம் செய்யப்படும்:


பாருங்கள்! பார்க்கச் செய்யுங்கள்!!

Tuesday, August 10, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சி


அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் கடந்த 30.07.2010 அன்று 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' எனும் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் மௌலவி பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு பார்வையாளர்கள் கேட்ட மார்க்க கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் அளித்தார். 


இதில் மக்கள் திரளாக கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, August 04, 2010

மன அழுத்தத்தை தீர்க்க இஸ்லாம் கூறும் வழி

உரை: மௌலவி பி. ஜைனுல் ஆபிதீன்



Wednesday, July 28, 2010

நடுத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 25.07.2010 அன்று நடுத்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக பராஆத் இரவு என்ற பெயரால் நடைபெறும் பித்அத்களை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் சகோதரர் Y.அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள்.

Tuesday, July 27, 2010

ஷிர்க் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார்? சென்னையில் நடந்த பரபரப்பான இரண்டாவது விவாதம்

தொகுப்பு: RASMIN M.I.Sc


நேரடி ரிப்போட்

கடந்த 24.25.2010 அன்று சென்னை தியாகராயர் அரங்கத்தில் வைத்து சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையினருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையிலான இரண்டாவது விவாதம் அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மிகவும் பரபரப்பாக ஆரம்பமாகியது.

இறைவனுக்கு உருவம் உண்டா? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் அல்லாஹ்வையே கடுமையாக விமர்சித்து தான் அல்லாஹ்வின் எதிரி என்பதை பகிரங்கமாக வீடியோவில் பதிவு செய்த அப்துல்லாஹ் ஜமாலி இந்த விவாதத்திலாவது உரிய ஆதாரத்தை முன்வைத்து வாதிடுவார் என்று அரங்கில் கூடியிருந்தவர்கள் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தார்கள்.

விவாதத்தின் இருதியாய் மாறிய ஜமாலியின் ஆரம்பம்:

ஷிர்க் எனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார்? என்ற தலைப்பில் சரியாக காலை 10.30 மணிக்கு விவாதம் ஆரம்பமாகியது.

முதலாவதாக பேச ஆரம்பித்த சகோதரர் பி.ஜெ அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உள்ளிட்ட சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவையைச் சேர்ந்தவர்களும் அவருடைய கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும் தெளிவான இணைவைத்தலில் ஈடுபடுவதால் அவர்கள் அனைவரும் முஷ்ரிக்குகள் தான் என்பதை மிகத் தெளிவாக மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து பேச ஆரம்பித்த அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் பி.ஜெ சொன்னதைப் போல் தான் முஷ்ரிக் என்பதற்கு தானே ஆதாரத்தைக் காட்டி பி.ஜெ அவர்கள் சொன்னதை ஆமோதித்தார் ஜமாலியுடைய முதல் வாதமே விவாதத்தின் கடைசியாக மாறியது என்பதுதான் விவாதத்தின் ஹைலைட்.

தான் முஷ்ரிக் என்பதை நிரூபித்த ஜமாலியின் முதல் கேள்வி:

உலகில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் பல கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவை அனைத்தையும் பிரித்தறிந்து அவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பதில் கொடுக்கக் கூடிய ஆற்றல் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் இருக்கிறது.

ஆனால் அப்துல்லாஹ் ஜமாலியும் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை என்று சொல்லிக் கொள்பவர்களும் இந்த அதிகாரம் நல்லடியார்கள் என அவர்களால் நம்பப் படுபவர்களுக்கும் இருப்பதாக நம்பி ஏற்றுக் கொண்டிருப்பதால் அவர்கள் அணைவரும் இணைவைத்தல் எனும் ஷிர்க்கை செய்து முஷ்ரிக்காக மாறிவிட்டார்கள் என சகோதரர் பி.ஜெ அவர்கள் தெளிவாகக் கூறினார்.

அதை எதிர்த்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் முஷ்ரிக் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜமாலியோ தான் முஷ்ரிக் அல்ல என்று நிரூபிப்பதை விட்டு விட்டு உலகில் உள்ள அணைவரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் பல கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவை அணைத்தையும் பிரித்தறிந்து அவர்கள் அணைவருக்கும் ஒரே நேரத்தில் பதில் கொடுக்கக் கூடிய ஆற்றல் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் இருக்கிறது.என்பதற்கு ஆதாரம் என்ன? என்று கேள்வி கேட்டு அல்லாஹ்வின் ஆற்றலிலேயே சந்தேகத்தை எழுப்பி அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் இந்த அதிகாரம் இருப்பதாக ஒத்துக்  கொண்டு தான் முஷ்ரிக் தான் என்பதை முதல் வாதத்திலேயே ஒத்துக் கொண்டார்.

ஜமாலி தவ்ஹீத் ஜமாத்தின் மேல் வைத்த குற்றச் சாட்டுக்களும் பி.ஜெயின் பதில்களும்:

உலகில் உள்ள அணைவரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் கேட்டாலும் அணைத்தையும் பிரித்தறிந்து அவர்கள் அணைவருக்கும் பதில் தரக்கூடிய ஆற்றல் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் உண்டு என்றால் தசாவதானி ஒரே நேரத்தில் 10 வேலைகளை செய்கிறான் சதாவதானி ஒரே நேரத்தில் 100 வேலைகளை செய்கிறான் இதுவெல்லாம் அல்லாஹ்வுக்கு ஒப்பாகாதா? என்று பி.ஜெயை நோக்கி ஜமாலி கேள்வியைத் தொடுத்தார்.

அதற்கு பதில் அளித்த பி.ஜெ தசாவதானி என்பவன் ஒரே நேரத்தில் 10 காரியங்களை செய்வதும் சதாவதானி ஒரே சந்தர்பத்தில் 100 காரியங்களில் ஈடுபடுவதும் பிறப்பில் உருவாவதோ அல்லது இயற்கையோ கிடையாது மாறாக அது பயிற்சியின் மூலம் பெற்றுக் கொள்வது அப்படி ஒருவர் ஒரே நேரத்தில் 10 அல்லது 100 காரியங்களை செய்வதால் ஒன்றும் அவர் கடவுளாகவோ அல்லது கடவுளின் தன்மைகள் பெற்றவராகவோ மாற முடியாது.

ஒரு வாதத்திற்கு அப்படி வைத்துக் கொண்டாலும் தசாவதானி சதாவதானி என்றவர்களின் பட்டியலில் ஒரே ஒரு முஸ்லிம் தான் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் மற்றவர்கள் அணைவரும் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் தான்.

ஒருவன் தசாவதானியாக அல்லது சதாவதானியாக இருப்பதால் அவன் அவ்லியாதான் என்று நீங்கள் கூறினால் மாற்று மதத்தை சேர்ந்தவர்களைத்தான் அந்தப் பட்டியலில் அதிகமாக இடம் பிடிக்கச் செய்யவேண்டி வரும் என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னார்.

ஜமாலியின் அர்த்தமற்ற கேள்விகளும் பீ.ஜெயின் ஆணித்தரமான பதில்களும்:


முதலாவதாக தவ்ஹீத் ஜமாத்தும் அதன் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களும் முஷ்ரிக்குகள் எனும் இணைவைப்பாளர்கள் என்று உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெரிவித்துள்ளீர்கள் அதற்கு என்ன ஆதாரம் என பி.ஜெ ஜமாலி யைப் பார்த்து கேள்வியை முன்வைத்தார்.

அதற்கு குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளிலிருந்தும் ஆதாரத்தை எடுத்து தனது குற்றச் சாட்டை மெய்ப்படுத்த வேண்டிய ஜமாலியோ நகைச்சுவையை உண்டு பண்ணும் ஒர் ஆதாரத்தை முன் வைத்தார்.

ஜமாலியின் ஆதாரக் கிரந்தங்களாகிய உணர்வுப் பத்திரிக்கையும் அல்ஜன்னத்தும்:

தவ்ஹீத் ஜமாத்தினர் இணைவைக்கின்றனர் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டதற்கு உணர்வுப் பத்திரிக்கையில் இரத்த தானம் செய்வீர் மனித உயிர் காப்பீர் என இரத்ததானத்தை வழியுறுத்தி செய்யப் பட்டிருந்த விளம்பரத்தை ஆதாரமாக காட்டிய ஜெமாலி அவர்கள்

உயிரைத் தருவதும் அதனை எடுப்பதும் இறைவனின் அதிகாரத்தில் உள்ளது அப்படியிருக்க இரத்ததானம் செய்து உயிர் காக்கும் படி விளம்பரம் செய்து மக்களிடம் கேட்பது இணைவைப்பதாகும்.

இப்படி விளம்பரம் செய்தததினால் தவ்ஹீ;த் ஜமாத் இணைவைத்த விட்டது அது போல் 1988 காலப்பகுதியில் வெளியான அல்ஜன்னத் பத்திரிக்கையில் குழந்தையில்லாத தம்பதியினருக்கு ஒரு வைத்தியர் ஆலோசனைகளும் மருந்தும் தருகிறார் என்று ஒரு விளம்பரம் வெளியிடப் பட்டிருந்தது அதை எடுத்துக் காட்டிய ஜமாலி அவர்கள் குழந்தைப் பாக்கியத்தைத் தருபவன் இறைவன் அப்படியிருக்க நீங்கள் எப்படி குறிப்பிட்ட மருத்துவரிடம் செல்லும் படி பத்திரிக்கையில் விளம்பரம் செய்வீர்கள் இதுவும் ஷிர்க் எனும் இணைவைத்தலாகும்.என வாதிட்டார் ஜமாலி.

அப்துல்லாஹ் ஜமாலியும் அவர் சார்ந்திருக்கும் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையினரும் அவர்களின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும் முஷ்ரிக்குகள் என்ற மிகப் பெரிய குற்றச்சாட்டை பி.ஜெ வைத்து அதனை ஆதாரத்துடன் நிருவியும் காட்டியுள்ளார்.

ஆனால் நாங்கள் முஷ்ரிக்குகள் அல்ல என்று நிருவ வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜமாலியோ கோமாலித்தனமாக தனது நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக உணர்வுப் பத்திரிக்கையையும் அல்ஜன்னத்தையும் காட்டியது அவர்கள் தரப்பில் பார்வையாளர்களாக வந்தவர்களையே முகம் சுழிக்க வைத்து விட்டது.

 # அல்லாஹ்விடம் கேட்டால் எப்படி கிடைக்குமோ அது போல ஒரே நேரத்தில் உலகில் எத்தனை பேர் கேட்டாலும் கூகுல் இணையத்தளம் தேவையானதை உடனே தேடித்தருகிறது.இப்படி தேடித்தருவதால் (Google)கூகுலைப் பயன் படுத்துவது ஷிர்க் என்றாகிவிடுமா என கொஞ்சம் கூட சிந்தனையற்ற சிறுபிள்ளைத் தனமான கேள்வியை பி.ஜெயிடம் ஜமாலி கேட்டார்.

கூகுல்(Google) செர்ச் என்ஜினைப் பொருத்தவரை ஒரே நேரத்தில் பலர் கேட்டாலும் தேடித்தருகிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள் அது தேடித்தரும் முறையை முதலில் புரிந்து  கொள்ளுங்கள் கூகுல் செர்ச் என்ஜின் ஒவ்வொரு மைக்ரோ பாயின்டுக்கும் பலரைக் கொண்டு இயக்கப் படுகிறது.அதனால் தான் நாம் கேட்கும் போது அது உடனே தேடித் தருகிறது.

அப்படியே அதனை இயக்குவதற்கு ஆட்கள் இல்லாமலயே அது இயங்கினால் கூட உங்கள் கேள்வியில் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

அல்லாஹ் ஒருவருக்கு எதையாவது கொடுத்தால் அது யாருடைய கண்ணுக்கும் தெரியாது ஆனால் அல்லாஹ் அவர்கள் கேட்டதற்கு  தெளிவாக பதில் கொடுப்பான்.

ஆனால் கூகுல் செர்ச் என்ஜினில் ஏதாவது ஒன்றை தேடும் போது தேடுபவரின் கண்ணுக்கும் அது தெரிகிறது அதே போல் அது தேடிக் கொடுப்பதும் கண்ணுக்குத்  தெரிகிறது.அதனால் கூகுல் செர்ச் என்ஜினில் தேடுவதை யாரும் இணை வைத்தல் என்று சொல்ல முடியாது என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார் பி.ஜெ.

சென்னையில் சிக்க வைத்த களியக்காவிலை ஒப்பந்தம்:

# வெளியில் பல இடங்களில் வலிமார்கள் என்று நம்பப்படுபவர்களிடம் கேட்டால் அல்லாஹ் எப்படி பிரித்தறிந்து உதவுவானோ அப்படி உதவுவார்கள் என பேசித்திரிந்த ஜமாலி சென்னை விவாதத்தில் நாம் அப்படி சொல்ல வில்லை அல்லாஹ்வின் இடத்தில் அவர்களை வைக்கவில்லை என வாதிட்டார்.

ஆனால் களியக்காவிலையில் நடந்த விவாதத்திற்கு போட்ட ஒப்பந்தத்திலோ ஒரே நேரத்தில் எத்தனை பேர் எத்தனை மொழிகளில் கேட்டாலும் எங்கிருந்து அழைத்தாலும் அதனை பிரித்தறிந்து அவற்றுக்கு பதில் கொடுக்கும் ஆற்றல் வலிமார்கள் என நம்பப் படுபவர்களுக்கு இருப்பதாக ஒப்பந்தம் போட்டு அதில் அப்துல்லாஹ் ஜமாலி இது தனது தரப்பு நிலைப்பாடு என கொட்டை எழுத்தில் கையெழுத்தும் போட்டுள்ளார்.

ஆனால் இந்த விவாதத்திலோ தான் அப்படி எங்கும் கூறவில்லை என வாதிட பி.ஜெ அவர்களோ களியக்காவிலை விவாத ஒப்பந்தத்தை எடுத்துக் காட்டியதும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி ஒரே நேரத்தில் எத்தனை பேர் எந்த மொழியில் கேட்டாலும் அவற்றை பிரித்தறிந்து பதில் கொடுக்கும் அதிகாரம் வலிமார்களுக்கு இருப்பதாக தான் கூறுவதாக சொல்ல ஆரம்பித்தார்.

பி.ஜே அவர்களோ அப்படியானால் விவாதத்தின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சொல்லிக் கொண்டிருந்தது உங்கள் நிலைப்பாடா அல்லது களியக்காவிலையில் சொன்னது உங்கள் நிலைப்பாடா? முதலில் தெளிவான ஒரு நிலைப்பாட்டிட்கு வாருங்கள்.என அழகாக ஜமாலிக்கு உபதேசம் செய்தார் பி.ஜெ

உளரி மாட்டிக் கொண்ட அபூ தலாயில்(?):

தனது கருத்துக்கு குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாத இவருக்கு அவருடைய சீடர்கள் வைத்திருக்கும் பெயர் அபூ தலாயிலாம் (ஆதாரத்தின் தந்தை).(சிரிப்பு தாங்க முடியவில்லை)

ஆதாரங்களை அவா்களாக உருவாக்குவதால் இப்படி அழைக்கிறார்களோ தெரியவில்லை.

உண்மையில் இவர் ஆதாரத்தின் தந்தை அல்ல வழிகேட்டின் தந்தை என்பதை சென்னையில் நடந்த இரண்டு விவாதங்களும் அழகாக தெளிவு படுத்திவிட்டது.

இடத்திற்கு ஏற்றது போல் உளரிக் கொண்டு திரிந்த ஜமாலி தான் வலிமார்களை அல்லாஹ்வின் இடத்தில் வைக்கிறேன் வைக்கவில்லை என மாறி மாறி பேசிக் கொண்டிருந்தார் அப்போது நீங்கள் வலிமார்கள் என்று உங்களால் நம்பப்படுபவர்களை அல்லாஹ்வின் இடத்தில் தான் வைக்கிறீர்கள் என்பதற்கு ஆதாரமாக அவர் பேசிய ஒரு வீடியோவின் க்லிப்பிங்கை பி.ஜெ போட்டுக் காட்டினார்.

அந்த க்லிப்பிங்கில் அவ்லியாக்களின் கை அல்லாஹ்வின் கை அவ்லியாக்களின் பார்வை அல்லாஹ்வின் பார்வை அவ்லியாக்களின் கேள்வி அல்லாஹ்வின் கேள்வி என ஜமாலி அவ்லியாக்களை அல்லாஹ்வின் இடத்திற்கு உயர்த்தி பேசும் வீடியோ பதிவாகியிருந்தது.

அதனை பி.ஜெ போட்டுக் காட்டியவுடன் அந்த க்லிப்பிங்கிற்கு பதில் சொல்ல முடியாமல் பந்தியில் குந்திய மந்தியைப் போல் முழித்துக் கொண்டிருந்தார் ஜமாலி பாவம்…….

அடுத்ததாக……

ஒரு கையால் முஸாபஹா செய்தல்,

பெண்கள் ஜும்மாவிற்கு பள்ளிக்கு வருதல்,

அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று எழுதுவது,

காபிர்களுக்கும் ஸலாம் சொல்வது ,

தற்கொலை செய்து கொண்டவர்களை காபிர்கள் என்று சொல்வது 
போன்றவைகள் எல்லாம் தவ்ஹீத் ஜமாத்தினரால் மார்க்கத்தில் புதிதாக நுழைவிக்கப்பட்ட பித்அத்துகள்.இவைகள் அணைத்திற்கும் தவ்ஹீத் ஜமாத் சார்பாக பி.ஜெ பதில் தரவேண்டும் என்று ஜமாலி குற்றச் சாட்டை வைத்தார்.

ஆரம்பித்தார் பி.ஜெ அமைதியாகியது அரங்கம்:

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தார் சகோதரர் பி.ஜெ

1.முஸாபஹா விஷயம் :

ஒரு கையால் முஸாபஹா செய்வது பித் அத் கிருத்தவர்களின் செயல்  என்றால் முதலில் உங்கள் கருத்தை தெரிவித்து எந்த அடிப்படையில் அதனை பித்அத் என்று கூறுகிறீர்கள் என விளங்கப் படுத்துங்கள் அதன் பின் நாம் அதற்கு பதில் கொடுப்போம் என்றார் பி.ஜெ.


அதற்கு பதில் சொன்ன ஜமாலி அவர்கள் முஸாபஹா விஷயத்தில் எங்கள் கருத்து ஒரு கையாலும் முஸாபஹா செய்யலாம் இரண்டு கைகளாலும் செய்யலாம் என்பதாகும்.என்றார்

பி.ஜெ அவர்கள் பதில் சொல்லும் போது அப்படியானால் உங்களுக்குள்ள பிரச்சினை மட்டும் என்ற வார்த்தை தானா? இரண்டு கையால் முடியும் ஒரு கையாலும் முடியும் தவ்ஹீத் ஜமாத் ஒரு கையால் மாத்திரம் தான் முஸாபஹா என்று சொல்கிறது.அதனால் அது பித்அத் கிருத்தவர்களின் செயல்பாடு இதுதான் உங்கள் நிலை என்றால் ஒரு கையாலும் முஸாபஹா செய்யலாம் என்ற உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டு யாராவது அதனை நடை முறைப்படுத்தினால் உங்கள் கருத்துப் படி அவரும் கிருத்தவ கலாசாரத்தை பின்பற்றியவராக ஆவாரே இதற்கு உங்கள் பதில் என்ன? என்று கேட்டதுடன் முதலில் ஏதாவது ஒரு நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் தெளிவு படுத்தினார்.

ஆனால் இந்தக் கேள்விக்கும் கடைசி வரை கோமாலி ஸாஹிப் அவர்கள் பதில் தரவே இல்லை.

2.பெண்கள் ஜும்மாவிற்கு வருவது பெண்களை காட்சிப் பொருளாக்குவதாகும் என்ற ஜமாலியின் குற்றச்சாட்டிற்கு பதில் சொன்ன பி.ஜெ நபியவர்களின் காலத்தில் ஜும்மாத் தொழுகைக்கு பெண்கள் வந்துள்ளார்கள் அதுபோல் யுத்தக் கலத்துக்கே பெண்கள் வந்துள்ளார்கள் அப்படியிருக்க நபியின் வழிமுறையை கையால்வது எப்படி பெண்களை காட்சிப் பொருளாக்குவதாக மாறும் என கேள்வியெழுப்பியதுடன் அப்படியானால் உங்கள் பெண்கள் ஏ.சி போட்ட கடையில் ஒரு ஆண் மாத்திரம் இருக்கும் நேரத்தில் பொருட்கள் வாங்கவே செல்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன?

உங்கள் வீட்டுப் பெண்களை கடைக்கு பொருள் வாங்கக் கூட செல்ல வேண்டாம் என்று சொல்லுங்கள்.

வெளியிலேயே வர விடாமல் வீட்டிட்குள்ளேயே பூட்டி வையுங்கள் என சொன்னார்.

தர்காக்களில் நடை பெரும் விழாக்களுக்கு ஆண்களும் பெண்களும் சென்று கூட்டமாக வெட்க உணர்வே இல்லாமல் கலந்து கொள்கிறார்கள்.

சில தர்காக்களில் பெண்களின் மறைக்கப் பட வேண்டிய பகுதிகளுக்கு அங்குள்ள ஆலிம்கள் குழந்தைப் கிடைப்பதற்கு என்று n;சால்லி எண்ணைகளைப் பூசி விடுகிறார்கள்.

இதுவெல்லாம் பெண்களை காட்சிப் பொருளாக்குவதில்லையாம் நபிவழியைப் பின்பற்றி பெண்கள் பள்ளிக்கு வருவதுதான் பெண்களை காற்சிப் பொருளாக்குவதாம்;.

என்னே தத்துவம் ?

3.தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் விளம்பரங்களிலும் நோட்டீஸ்களிலும் போஸ்டர்களிலும் அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று போடுகிறார்கள் இது பித்அத்தான வழி முறை என்று ஜமாலி அவர்கள் வாதத்தை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த பி.ஜெ அவர்கள் நபியவர்கள் தனது வாழ்நாளில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்) என்றும் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்றும் இரண்டு விதங்களிலும் பயண்படுத்தியுள்ளதால் நாமும் இரண்டு விதங்களிலும் பயண்படுத்திக் கொள்ளலாம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்) என்றோ பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்றோ குறிப்பிடுவதில் பிரச்சினை இல்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.

4.காபிர்களுக்கும் ஸலாம் சொல்வது தற்கொலை செய்து கொண்டவனுக்கு தொழுகை இல்லை போன்ற தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாடு பித் அத் என்று சொன்ன ஜமாலி அவர்கள் அந்த விஷயங்களுக்கும் தன் தரப்பால் எந்த விதமான ஆதாரத்தையும் காட்ட வில்லை.

இருந்தாலும் பி.ஜெ அவர்களோ நாங்கள் செய்வது பித் அத் என்றால் அவற்றை ஆதாரங்களுடன் எடுத்து வையுங்கள் அப்படி நீங்கள் ஆதாரங்களுடன் எடுத்து வைத்தால் நாம் அதற்கு பதில் தரக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார் ஆனால் வழமை போல் ஜமாலி அவர்கள் அதற்கும் பதில் ஏதும் சொல்லவில்லை என்பதே நடந்த உண்மை.

ஸஹாபாக்களை பி.ஜெ சுயமாக விமர்சித்தாரா?

நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற பி.ஜெ அவர்களின் புத்தகத்தில் மறுமையில் சில ஸஹாபாக்களின் நிலை எப்படி இருக்கும் என்பது பற்றி பி.ஜெ அவர்கள் புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை ஆதாரம் காட்டி எழுதியிருந்தார்.


புத்தகத்தின் அந்தப் பகுதியை விமர்சித்த ஜமாலி பி.ஜெ நபித்தோழர்கள் மீது அபாண்டமாக பழி போடுகிறார் என்றார்.

அதற்கு பதில் சொன்ன பி.ஜெ பல தடவைகள் அந்தப் புத்தகத்தில் நான் மேற்கோள் காட்டியிருக்கும் ஹதீஸை மக்களுக்கு வாசித்துக் காட்டி நான் எப்படி தவறு செய்துள்ளேன் என்பதை நிரூபிக்க முடியுமா? என்று பல முறை கேட்டும் ஜமாலி வாசிக்க மறுத்து விட்டார்.

ஆனால் ஹதீஸை வாசித்துக் காட்டினால் தான் சொன்னது பொய்யென்று மக்களுக்கு புரிந்து விடும் என்பதால் அந்த ஹதீஸின் இலக்கத்தை மாத்திரம் மக்கள் மத்தியில் சொன்னார்.

புகாரியில் 3349.3447 இலக்கங்களிலும் பி.ஜெ அவர்களின் நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற புத்தகத்தில் நபியவர்களின் முன்னறிவிப்பு என்ற தலைப்பில் 46ம் பக்கத்திலும் அந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்க ஹதீஸைப் படிப்பவர்கள் பி.ஜெ தனது சுய விருப்பப்படி ஸஹாபாக்களை விமர்சித்தாரா அல்லது நபியவர்களே அப்படித்தான் கூறியுள்ளார்களா என்பதை தெளிவாக புரிய முடியும்.

பி.ஜெயின் கேள்வியும் பதிலின்றி தினறிய ஜமாலியும்:

விவாதத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை சகோதரர் பி.ஜெ அவர்கள் ஜமாலியிடம் திரும்பத்திரும்ப ஒரு கேள்வியை முன் வைத்தார் அந்தக் கேள்விக்கு ஜமாலி அவர்கள் கடைசி வரை பதிலே சொல்லவில்லை.

அதாவது உலகில் உள்ள அத்தனை கோடி பேரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் கேட்டாலும் அல்லாஹ் அதனை பிரித்தறிந்து அதற்கு பதில் சொல்வான் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை அப்படியிருக்க அவ்லியாக்களுக்கும் அந்தத் தன்மை இருக்கிறது என்று வாதிடுவது முஷ்ரிக்கின் பண்பு என்பதை பி.ஜெ அவர்கள் எடுத்த சொன்னவுடன் அதற்கு பதில் சொன்ன ஜமாலி அவர்களோ அல்லாஹ்வின் பார்வை கேள்வி ஆகியவற்றுக்கு எல்லை இல்லை ஆனால் அவ்லியாக்களின் பார்வை மற்றும் கேள்விக்கு எல்லை உண்டு என வாதிட்டார்.

அல்லாஹ்வின் கேள்வி மற்றும் பார்வைக்கு எல்லை இல்லை அவ்லியாக்கலுக்க எல்லை உண்டு என்பது உங்கள் வாதம் அப்படியானால் அந்த எல்லை எது?

அப்படி எல்லை பிரிப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?

அந்த எல்லைகளுக்குறிய குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் என்ன?

அவ்லியாக்களின் கேள்விக்கு எல்லை உண்டு என்றால் ஒரே நேரத்தில் எத்தனை பேர்களின் கோரிக்கைக்கு பதில் தருவார்?

போன்ற கேள்விகளை பி.ஜெ அவர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார் ஆனால் பாவம் இருதிவரை ஜமாலி இந்தக் கேள்விக்கோ வேறு எந்தக் கேள்விக்குமோ பதில் தரவே இல்லை.

சவால் விட்ட பி.ஜெயும் சறுக்கி விழுந்த ஜமாலியும்:

கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது தம்மிடம் தமிழகத்தில் 45 சதவீதம் பள்ளிகள் இருப்பதாக ஜமாலி தரப்பினர் கூறினர்.


அதற்கு பதில் கொடுத்த பி.ஜெ அவர்கள் இந்த விவாதக் கலத்தில் அதிகப் படியாக பில்டப் செய்து சொல்வதற்க்காகத்தான் இப்படி சொல்கிறீர்களே தவிர உண்மையில் உங்கள் கைவசம் தமிழகத்தில் வெரும் இரண்டு சதவீதத்தினர் மாத்திரமே உள்ளனர் என்பதை ஆதாரத்துடன் பி.ஜெ எடுத்து வைத்தார்.

பி.ஜெயின் கருத்துக்கு பதில் சொல்ல தைரியம் இல்லாத ஜமாலியோ உடனே ஜுலை மாநாட்டிற்கு தாவினார்.

மாநாட்டிற்கு கூட்டத்தை வர விடாமல் இருப்பதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தவிடு பொடியாகிவிட்டது.அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டினோம்.என்று பி.ஜெ சொல்ல இல்லை உங்கள் மாநாடு தோழ்வியில் முடிந்து விட்டது எந்தப் பயணும் ஏற்படவில்லை.என்று சிறுபிள்ளைத் தனமாக உளரினார்.

அதே போல் எங்கள் ஜமாத்தின் வீரியம் நாங்கள் சவால் விட்டு ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் பத்தாயிரம் பேரை உடனே கூட்டிக் காட்டுவோம் உங்களால் முடியுமா? என்றார்.

மக்கள் கூட்டத்தை கூட்டிக்காட்ட திராணியற்ற ஜமாலியோ வாய் மூடி மௌனித்துப் போனார் பாவம்.

அது போல் நீங்கள் ஒரு மாநாடு நடத்தி உங்கள் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள் அதே போல் ஒரு மாநாடு நடத்தி நீங்கள் கூட்டிய கூட்டத்தைப் போல் 100 மடங்க கூட்டத்தை நாங்கள் கூட்டிக் காட்டுவோம் சவாலை ஏற்றுக் கொள்கிறீர்களா? என பகிரங்கமாக அறிவித்தார் பி.ஜெ

இந்த சவாலை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இந்த விவாதக் கலத்திலேயே நாம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம் என்றார் பி.ஜெ ஆனால் கடைசி வரை சவாலையும் ஜமாலி ஏற்றுக் கொள்ளவில்லை.

எங்கள் ஜமாத் காலத்திற்கு காலம் ஒரு மாநாட்டை நடத்திக் கொண்டு தான் இருக்கிறோம் எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஒவ்வொரு மாநாட்டிலும் ஆட்சியாளர்களையே அதிர வைக்கும் அளவுக்கு எங்கள் வீரியம் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.என்று கூறி முடித்தார் சகோதரர் பி.ஜெ.

பதிலின்றி வாயடைத்துப் போய் அமைதிகாத்தார் அப்துல்லாஹ் ஜமாலி.

என்றும் வெற்றி ஏகத்துவத்திற்கே என்பது சென்னை விவாதத்தின் மூலம் மீண்டும் உறுதியாகியது.

அல்ஹம்துலில்லாஹ்.


நன்றி: 
இலங்கை ரஸ்மின் அவர்களின் இணைய தளம் (http://www.rasminmisc.blogspot.com)

Saturday, July 24, 2010

சென்னையில் இன்றும் நாளையும் (24.07.2010 & 25.07.2010) மாபெரும் விவாதம்

இன்ஷா அல்லாஹ், இன்றும் நாளையும் (24.07.2010, 25.07.2010) சென்னையில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை போலி சுன்னத் ஜமாஅத்துடன் விவாதம் நடைபெறுகிறது.

தலைப்பு: 
இணைவைப்போரும் பித்அத்வாதிகளும் யார்?

இந்த விவாதம் ஆன்லைன் பிஜே மற்றும் ததஜ இணையதளத்தில் காலை 10 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Friday, July 23, 2010

வந்த வழியில் திரும்பிச் சென்ற ஹாமீத் பக்ரி!

நாம் வாழும் காலத்தில் நாம் மாத்திரம் நேர்வழி பெற்றால் போதாது அனைத்து மக்களும் நேர்வழி பெற்று மறுமையில் சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகும்.

ஆனால் நேர்வழியைக் கொடுப்பதும் வழிகேட்டில் விட்டு விடுவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும்.

அதனைத் தனது திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன் (28:56)


நபியவர்களுக்கு அல்லாஹ் தெளிவாக கூறுகிறான்: நபி நினைத்தவர்களுக்குக் கூட நேர் வழியைக் கொடுத்துவிட முடியாது. அல்லாஹ் நாடினால் ஒருவரை நேர்வழியில் வைப்பான். அவன் நினைத்தால் அவரையே வழிகேட்டிலும் தள்ளி விடுவான்.

அதற்கு மிக அண்மைக்கால நிதர்சன எடுத்துக்காட்டுதான் ஹாமித் பக்ரி அவர்கள்.

ஹாமித் பக்ரியின் ஆரம்ப காலம்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பேரியக்கம் அணைத்து தவ்ஹீத் கூட்டமைப்பாக இயங்கிய காலத்தில் அதன் தலைவராக இருந்தவர்தான் ஹாமித் பக்ரி.

தவ்ஹீத் கொள்கையை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்காக தவ்ஹீத் ஜமாத் ஆலிம்கள் அயராது பாடுபடுகின்ற நேரங்களில் அவர்கள் அணைவருக்கும் தலைவர்  இவர்தான்.

பல இடங்களில் மத்ஹபுவாதிகளை எதிர்த்து குரல் கொடுத்து, தர்கா கந்தூரி உரூஸ் போன்றவற்றை தடுப்பதற்காக பல கஷ்டங்களைப்பட்டு, மத்ஹபுவாதிகளுடன் மத்ஹபுகளில் உள்ள கருத்துக்கள் மார்க்கத்திற்கு முரணானவை என்பதை விவாதங்களின் மூலம் நிரூபித்து இந்த ஏகத்துவத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில அயராது உழைத்தார் இந்த ஹாமித் பக்ரி.

மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போதும் மூட நம்பிக்கைகளை எதிர்த்துக் குரலெழுப்பும் போதும் திருமறை வசனங்களும் நபியவர்களின் பொன் மொழிகளும் அவருடைய நாவில் அணைகடந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும் (இன்று இதே நாவில் மவ்லிதுப் பாடல்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றன). 

திருமறைக் குர்ஆனையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரம் தான் நாம் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை  ஆரம்ப காலத்தில் உடைத்து பேசியவர்களில் இவரும் ஒருவர்.

நடந்தது என்ன?

இடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையில் தவ்ஹீத் ஜமாத் அவருக்கும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அதிரடியாக அறிவித்தது.

வந்த வழியில் திரும்பியதன் காரணம் என்ன?

ஒரு தனி மனிதன் மேல் கொண்ட விருப்பு வெருப்பு தான் அவரின் இந்த நிலைக்குக் காரணம்.

இதை நாமாக சொல்லவில்லை. அவரே வாக்கு மூலம் கொடுத்த வீடியோக்கள் உள்ளன.

அதாவது சகோதரர் பி.ஜெ அவர்களைப் பற்றி ஹாமித் பக்ரி குறிப்பிட்டு பேசும் போது அவர் கருப்பை வெள்ளை என்றார் நாங்களும் வெள்ளை என்றோம் அவர் வெள்ளையை கருப்பு என்றார் நாமும் கருப்பு என்றோம்.

இது பக்ரியின் பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலம்:

அதாவது அவர் இந்தக் கருத்தின் மூலம் சொல்ல வருவது நான் தவ்ஹீதை பிரச்சாரம் செய்யவில்லை. பி.ஜெ என்பவரை தக்லீத் தான் செய்தேன் என்பதாகும்.

ஆனால் இவர் சொல்லும் செய்தி உண்மையானதா? பி.ஜெயின் பிரச்சாரம் தன்னை பின்பற்றச் சொல்வதா அல்லது தவ்ஹீதை எடுத்துச் சொல்வதா?

சகோதரர் பி.ஜெயின் பிரச்சாரக் களத்தில் ஓர் இடத்தில் கூட தான் பிழையே செய்ய மாட்டேன் என்னைப் பின்பற்றுங்கள் என்று சொன்னதற்கு எந்த ஆதாரத்தையும் காட்டமுடியாது. மாறாக நான் சொல்வது அல்குர்ஆனுக்கும் அவனுடைய தூதரின் கருத்துக்கும் ஒத்ததாக இருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மாற்றமாக நான் எதை சொன்னாலும் தூக்கியெரிந்து விடுங்கள் என்பது தான் சகோதரர் பி.ஜெ அவர்களின் இவ்வளவு கால பிரச்சாரத்தின் சுருக்கமாகும்.

உதாரணத்திற்கு சகோதரர் முஜீபுர் ரஹ்மானுக்கும் பி.ஜெக்கும் மத்தியில் கடந்த வருடம் தொண்டியில் வைத்து பி.ஜெ மொழிபெயர்த்த திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் தவறுகளா? என்ற தலைப்பில் விவாதம் நடை பெற்றது.

அந்த விவாதத்தின் இறுதியில் தொகுப்புரை வழங்கிய சகோதரர் பி.ஜெ அவர்கள் அந்த தொகுப்புரையில் தான் செய்யும் தவ்ஹீத் பிரச்சாரத்தில் நான் ஏதாவது தவறாக பேசினால் அதனை யார் எனக்கு சுட்டிக்காட்டினாலும் பாகுபாடு காட்டாமல் ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று அதற்கு பல உதாரணங்களையும் காட்டியதுடன். தனது தர்ஜமாவில் தவறே இல்லை என்று ஒரு காலத்திலும் தான் வாதிடவில்லை, வாதிடவும் மாட்டேன், வாதிடவும் முடியாது ஏன் எனில் தவறுகளுக்கு அப்பாட்பட்டவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்று ஏகத்துவத்தின் அடிப்படையை தான் நினைவூட்டினார் என்பது குறிப்பிடப்த்தக்கது.


தொண்டி விவாதத்தின் தொகுப்புரை வீடியோவின் ஒரு பகுதி.

ஹாமித் பக்ரி அவர்களே! 

அவர் கருப்பு என்றால் நானும் கருப்பு என்றேன் அவர் வெள்ளை என்றால் நானும் வெள்ளை என்றேன் என்று கூறினீர்களே!

அப்படி தான் சொல்வதுதான் சரி என்று பி.ஜெ எங்காவது சொன்னார் என்று ஒரு ஆதாரத்தை காட்டி பேச வேண்டியதுதானே.

நீங்கள் சொன்னதற்கு மாற்றமாக பி.ஜெ சொல்லியுள்ளதை கீழே உள்ள வீடியோவில் பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது இலங்கையில் ஒரு கூட்டம் நீங்கள் எப்படி இருந்ததாக சொல்கிறீர்களொ அப்படி  தற்போதும் இருப்பதாக   பி.ஜெயிடம் கூறப்பட்டதற்கு சகோதரர் பி.ஜெ அவர்கள் இதை கேட்டால் எனக்கே அருவருப்பாக உள்ளது. இப்படியெல்லாம் யாரும் நடக்கக் கூடாது என்று பகிரங்கமாக கூறுகிறார்.  இப்படிப் பட்ட ஒருவர் தன்னை எப்படி தக்லீத் செய்யச் சொல்ல முடியும்?


பக்ரியின் இன்றைய நிலை என்ன?

தவ்ஹீத் ஜமாத்தின் தலைவராக இருந்த ஒருவரின் இன்றைய நிலையைப் பாருங்கள்.

ஒரு தனி மனிதன் மேல் கொண்ட வெறுப்பு இவரை கொள்கையை விட்டே வெளியேற்றி விட்டது.

இது இவருக்கு மட்டும் உரியது அல்ல. யாராக இருந்தாலும் கண்டிப்பாக அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும்.  இவைகளைத் தாண்டி யாரைப் பின்பற்றினாலும் எதைப் பின்பற்றினாலும் அவரின் நிலை ஹாமித் பக்ரியின் நிலைதான்.

ஹாமித் பக்ரி அன்றும் இன்றும்.

அன்று : குர்ஆனும் ஹதீஸும் மாத்திரமே நேர்வழி

இன்று : குர் ஆன் ஹதீஸ் அல்லாதவைகளிலும் நேர் வழி உண்டு.

அன்று : மத்ஹபுகளில் குர்ஆனுக்கும் ஹதீஸ{க்கும் மாற்றமான கருத்துக்கள் உள்ளன.

இன்று : மத்ஹபுகள் தான் நேர்வழி அவை புனிதமானவையே!

அன்று : மரணித்தவர்களுக்கு கத்தம் ஓதுவது கூடாது.

இன்று : மரணித்வர்களுக்கு கத்தம் கொடுப்பதே நேர்வழி.

அன்று : கூட்டு துஆ கூடாது.

இன்று : கண்டிப்பாக கூட்டு துஆ ஓத வேண்டும்.

அன்று : கந்தூரிகள் மார்க்கத்தில் கிடையாது.

இன்று : கண்டிப்பாக கந்தூரிகள் ஓதப்பட வேண்டும்.

அன்று : மவ்லிதுகள் கூடாது.

இன்று : மவ்லிதுகள் மார்க்கத்தில் உள்ளவையே!

அன்று : தர்காக்களில் நடப்பது அணைத்தும் வழிகேடு.

இன்று : அவையணைத்தும் நேர்வழி.

அன்பின் சகோதரர்களே, அணைவரும் புரிந்து கொள்வதற்காகவே ஒரு சில தகவல்களை நாம் குறிப்பிட்டுள்ளோம். மேலதிக விபரத்திற்கு கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.


ஹாமித் பக்ரியின் அவர்களின் இனிமையான குரலில் மௌலுது மற்றும் கூட்டு துவாவை கேட்க கீழே விடியோவை பார்க்கவும் (ஹாமித் பக்ரியின் ஆடியோ கீழே விடியோவில் இணைக்கப்பட்டுள்ளது).



நன்றி: இலங்கை ரஸ்மின் அவர்களின் இணைய தளம் (http://www.rasminmisc.blogspot.com)

தொடர்புடையவை: