Monday, July 05, 2010

வரலாறு காணாத மிகப் பிரம்மாண்டப் பேரணி மாநாடு! மக்கள் வௌ்ளத்தில் மூழ்கிய சென்னை! புகழ் அனைத்தும் இறைவனுக்கே!




தீர்மானங்கள்

ஜூலை 2010ம் ஆண்டு 4ம் தேதி சென்னை தீவுத்திடல் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் எழுச்சியுடன் பங்கேற்ற, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாட்டில்’ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

நீதிபதி மிஸ்ரா, சச்சார் ஆகியோருக்கு நன்றி

1. இந்திய நாட்டை உருவாக்குவதிலும், இந்தியாவின் அடிமைத் தளையை உடைத்தெறிவதிலும் பெரும் பங்கு ஆற்றிய முஸ்லிம்கள் நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு அமைத்த நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிஷனும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் இதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளன. முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மிஸ்ரா கமிஷன் தெளிவான பரிந்துரை யையும் வழங்கியுள்ளது. முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் இதற்காக இம்மாநாடு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

கல்வியில் இட ஒதுக்கீடு

2. முஸ்லிம்களின் இந்த அவல நிலை மாறிட ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.எஸ்.சி. உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து மாநிலங்களில் உள்ள கல்லூரிகளிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க வேண்டும் என்று முஸ்ம் சமுதாயம் சார்பில் இம்மாநாடு மத்திய அரசை வயுறுத்துகிறது.

வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு

3. அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மத்திய அரசுப் பணிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், தனியார்கள் நடத்தும் பெரிய நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க இம்மாநாடு மத்திய அரசை வயுறுத்துகிறது.

பாதுகாப்புத்துறையில் இட ஒதுக்கீடு

4. நாட்டில் நடக்கும் வகுப்புக் கலவரங்களின்போது, காவல்துறை, உளவுத்துறை, மத்தியக் காவல் படை, துணை இராணுவம் மற்றும் இராணுவம் ஆகிய அனைத்து துறைகளும் பாரபட்சமாகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் நடந்துள்ளனர். இதை மத்திய அரசு அமைத்த பல்வேறு கமிஷன்கள் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளன. எனவே மத்திய அரசின் இராணுவம், உளவு உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகளிலும் மாநில அரசுகளின் காவல் மற்றும் உளவுத்துறையிலும் 20 சதவிகிதம் முஸ்லிம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.

அரசியல் அதிகாரத்தில் தனி இட ஒதுக்கீடு

5. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மாநில சட்டமன்றங்களிலும் முஸ்ம்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அனைத்துக் கட்சிகளும், பெரும்பான்மை சமுதாய வேட்பாளரையே நிறுத்துவதால் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெற இயலவில்லை. இந்த நிலை மாறிட தத் சமுதாய மக்களுக்கு ரிசர்வ் தொகுதிகள் இருப்பதுபோல் உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளு மன்றம், மாநிலங்களவை, மாநில மேலவைகள் அனைத்திலும் பத்து விழுக்காடு தொகுதிகளை முஸ்லிம் ரிசர்வ் தொகுதிகளாக அறிவித்து சட்டமியற்ற மத்திய அரசை முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் இம்மாநாடு வயுறுத்துகிறது.

நலத்திட்டங்களிலும் இட ஒதுக்கீடு

6. மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்டங்களிலும், இலவசத் திட்டங்களிலும் அதிகாரிகள் முஸ்லிம்களைப் புறக்கணித்து துரோகம் செய்து வருகின்றனர். எனவே நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரைக்கு ஏற்ப அனைத்து நலத்திட்டங்களிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

முஸ்லிம் பல்கலைக் கழகம்

7. உத்தரப்பிரதேசத்தில் இருப்பதுபோல் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று நீதிபதி மிஸ்ரா அவர்களின் பரிந்துரையை ஏற்று ஆவண செய்ய வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

காங்கிரஸின் தார்மீகக் கடமை

8. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தன் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியது. அதை நம்பி முஸ்லிம்கள் வாக்களித்ததால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ரங்கநாத் மிஸ்ரா அறிக்கைக்காக மட்டுமின்றி காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதிக்காகவும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் தார்மீகப் பொறுப்பு கங்கிரசுக்கு உள்ளது என்பதையும் காங்கிரசுக்கு இம்மாநாடு சொல்லிக் கொள்கிறது.

சட்டத்தில் தடை இல்லை

9. முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிக்க சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை என்பதையும் அதற்கான வமுறைகள் எவை என்பதையும் இந்தியாவின் மாபெரும் சட்டவல்லுனர் ரங்கநாத் மிஸ்ரா தெளிவுபடக் கூறியுள்ளார். எனவே சட்ட ரீதியாக எந்தச் சிக்கலும் இல்லாமல் தனி இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்பதை காங்கிரசுக்கு இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

சட்டமாக்க பெரும்பான்மை உள்ளது

10. மேலும் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க காங்கிரஸ் முன் வந்தால் திமுக, இடதுசாரிக் கட்சிகள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கூட அதைச் சட்டமாக்க ஆதரவு தரும் வாய்ப்பு உள்ளது. பாஜக, சிவசேனா தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வாய்ப்பு உள்ளதையும் காங்கிரசுக்கு நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

தள்ளிப்போட எந்தக் காரணமும் இல்லை

11. முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிப்பதைத் தள்ளிப் போட எந்தக் காரணமும் இல்லை என்பதையும், சாக்குப் போக்கு சொல்வதை முஸ்லிம்கள் இனி நம்ப மாட்டார்கள் என்பதையும் முஸ்ம் சமுதாயத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இட ஒதுக்கீட்டை அடையும் வரை ஓய மாட்டோம்

12. 60 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் முஸ்லிம் சமுதாயம் மற்ற சமுதாய மக்களைப்போல் முன்னேற முஸ்லிம்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு வழங்குவதைத் தவிர வேறு வ கிடையாது என்றும், நாடு முழுவதும் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய முஸ்லிம் சமுதாயம் தயார் என்றும் இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.

முஸ்லிம் வாக்குகளை இட ஒதுக்கீடே தீர்மானிக்கும்

13. அடுத்து வரும் தேர்தல் இந்திய முஸ்ம்கள் வாக்களிக்கும்போது தனி இடஒதுக்கீட்டைத் தவிர வேறு எதையும் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். வேறு எதன் மூலமும் திருப்தி அடைய மாட்டார்கள் என்ற ஒட்டுமொத்த முஸ்ம்களின் குரலை இம்மாநாடு எதிரொக்கிறது.

அனைத்து மாநிலங்களிலும் இட ஒதுக்கீடு

14. முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளித்து வரும் கேரளா, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களை முன்மாதிரியாகக் கொண்டு அனைத்து மாநில அரசுகளும் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

புதுவை ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை

15. 2009 தேர்தன்போது இட ஒதுக்கீடு வழங்குவதாக எழுத்து மூலம் வாக்குறுதி அளித்து விட்டு முஸ்லிம்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் புதுவை அரசை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அடுத்து வரும் தேர்தல் இதற்கான விலையை புதுவை ஆளும் கட்சி கொடுத்தே தீர வேண்டும் என்று இம்மாநாடு புதுவை ஆளும் கட்சியை எச்சரிக்கிறது.

தமிழகத்தில் குளறுபடிகளை சரி செய்க!

16. தமிழக முஸ்ம்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று முஸ்லிம்களில் பிற்பட்டோருக்கு தமிழக அரசு மூன்றரை விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளித்தது. முஸ்லிம் சமுதாயம் இதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டாலும், சில அதிகாரிகள் பிற்பட்டோர் பட்டியல் இல்லாத முஸ்லிம்களின் உரிமையைப் பறித்து வருகின்றனர். எனவே பொதுப் பிரிவில் தகுதி உள்ள முஸ்லிம்கள் வாய்ப்பு பெற அதிகாரிகள் குறுக்கே நிற்காதவாறு தமிழக முதல்வர் தெளிவான கட்டளை பிறப்பிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தில் அதிகப்படுத்துக…

17. நாடு முழுவதும் பத்து சதவீத இட ஒதுக்கீடு அளிக்குமாறு ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை கூறியதை கவனத்தில் கொண்டு தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ஏழு விழுக்காடாக உயர்த்தித் தருமாறு இம்மாநாடு தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறது.

திமுக தலைவருக்கு…

18. இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், மத்திய அரசில் எதையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கவருமான தமிழக முதல்வர் மரியாதைக்குரிய கருணாநிதி அவர்கள் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையைச் சட்டமாக்க மத்திய அரசை வயுறுத்துமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது..

பறிக்கப்பட்ட உரிமை…

19. வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்டபோது முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியிருந்தனர். ஆனாலும், வெள்ளையர் களை விரட்டியடிப்பதற்காக ஆங்கிலம் படிக்க மாட்டோம் என்று முஸ்லிம்கள் முடிவு செய்தனர். மேலும், ஆங்கிலேய அரசில் பெற்றிருந்த வேலை வாய்ப்பையும் உதறினர். தேச விடுதலைக்காக முஸ்லிம் முன்னோர்கள் செய்த தியாகத்தால்தான் முஸ்லிம்கள் இன்று பின்தங்கி யுள்ளனர். இதை கவனத்தில் கொண்டு முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கையை ஆள்வோர் பரிவுடன் பரிசீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இட ஒதுக்கீடுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி!

20. முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவை என்று பல வகையிலும் குரல் கொடுத்து வரும் அனைத்து கட்சி தலைவர்களையும், சமுதாயத் தலைவர்களையும், இயக்கங்களையும், பத்திரிகைகளையும், எழுத்தாளர்களையும், தனி நபர்களையும் மன நிறைவுடன் இம்மாநாடு பாராட்டுகிறது. அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

சட்டத்திருத்தம் செய்திடு!

21. அரசியல் சட்டத்தின் பிரிவு 15(டி) மற்றும் 16(4) பின்தங்கிய – அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் பெறாத வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கியுள்ளது. இதில் வகுப்பினர் என்ற வார்த்தை சிறுபான்மை’ மக்களைத்தான் குறிக்கும் என்று அரசியல் சாசனம் உருவாக்கும்போது விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அதற்கு வேறுவிதமான விளக்கம் அளித்து சிலர் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, “வகுப்பினர்’ என்பதை சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய வகுப்பினர்’ என்று தெளிவாக திருத்தம் செய்யுமாறு இம்மாநாடு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.  நன்றி! நன்றி!! இம்மாநாடு சிறப்புற நடந்திட தனது பேரருளை வாரி வழங்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லா வேறுபாடுகளையும் மறந்து கடும் சிரமங்களுக்கு மத்தியில் எழுச்சியுடன் கலந்து கொண்ட தாய்மார்களுக்கும், பெரியோர்களுக் கும், பொருளுதவி செய்த மக்களுக்கும், வளைகுடாவில் அற்ப ஊதியத்தில் பணிபுரியும் நிலையிலும் சமுதாயத்தின் உரிமைப் போராட்டத் துக்காக வாரி வழங்கிய சொந்தங்களுக்கும், முஸ்லிம்களின் உணர்வை மதித்து பங்கேற்ற சிறப்பு பார்வையாளர்களுக்கும், அனைத்து ஊடகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், கேமராமேன்கள் ஆகியோருக்கும் நன்றிகள். இம்மாநாடு சிறப்புற நடைபெற அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய காவல்துறை, தீயணைப்புத்துறை, உளவுத்துறை, தமிழக அரசின் அனைத்து துறையினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேடை, ஒளி ஒலி அடிப்படை வசதிகள் செய்து தந்த தொல் நுட்ப வல்லுனர்களூக்கும் நன்றிகள். இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற அருள்புரிந்த இறைவனுக்கே புகழனைத்தும்.


நன்றி: www.tntj.net

அதிரையில் பொய்யன் டீஜெக்கு பொதுமக்கள் செருப்படி

அதிரையில் பொய்யன் டீஜெக்கு பொதுமக்கள் செருப்படி

பொய்யன் பாக்கர் மங்கிஸ்கான் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்பதற்காக கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் பாக்கரும் மங்கிஸ்கானும் வடிகட்டிய பொய்யர்கள் என்பதை பொய்யன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையிலேயே அறிந்து கொள்ளலாம். வேலூரில் 5000 பேர் பொய்யன் டீஜே சார்பில் கலந்து கொள்ள அனுமதி கேட்டதாக மங்கிஸ் கான் கூறியது ஒன்றே போதுமானது. இவனுகளுகு மாநிலம் முழுவதும் இந்தியா முழுவதும் 1000 பேர் கூட கிடையாது. வேலூரில் 5000 பேர் வருவதாகக் கூறியுள்ளதில் இருந்து இவனுக்கு நிகரான பொய்யன் உலகில் கிடையாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதிரை கூட்டம் குறித்து செய்தி போடுவதாக இருந்தால் முழுமையாக போட வேண்டும். மங்கி புளுகிக் கொண்டிருக்கும் போது ஆதிரமடைந்த பொது மக்கள் மேடையில் ஏறி கேள்விகள் கேட்டனர். பெண்கள் மாநாட்டுக்கு போகக் கூடாது என்று சொல்லும் பொய்யன் ரதி மீனா பஸ்ஸில் அன்னியப் பெண்ணுடன் பயணம் போகலாமா? என்று கேட்டு பொம்பளப் பொறுக்கி பாக்கரி லீலைகளை பொது ம்க்கள் மைக் பிடித்து அம்பலப்டுதினார்கள். இதனால் பாக்கர் மங்கிஸ்கானை உட்கார வைத்துவிடுகிறேன் என்று கூறி விட்டு பேச ஆரம்பித்தார். பாக்கர் கூட்ட மேடையிலேயே ஏறி பாக்கரி லீலைகளை அம்பலப்ப்டுத்திய அதிரை சம்பவம் இனி எந்த ஊரில் கூட்டம் நட்த்தினாலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். மங்கிஸ்கான் பீஜேயுடன் நெருங்கிய பழக்கம் உள்ளவன் என்றும் மங்கிஸ்கான் கூறி வருகிறான். இவனுடன் பீஜேக்கு எந்த நெருக்கமும் இல்லை. இவனை பீஜே தனியாக ஒரு தடவை கூட சந்தித்தது இல்லை. இவனுக்கும் பீஜேக்கும் எந்த நெருக்கமும் இருந்தது இல்லை. தென் சென்னை மாவட்டத்தி நிர்வாகிகளாக இருந்தவர்களில் இவனைத் தவிர மற்ற நிர்வாகிகளாவது சில தடவை பீஜேயை சந்தித்துள்ளனர். மாவட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் எதிலாவது இவன் பீஜேயை பார்த்திருக்கலாமே தவிர இவனுடன் பீஜெக்கு எந்தப்பழக்கும் கிடையாது என்பதை பொய்யன் பாக்கரே அறிவார். மாநாடு குறித்து பொய்யன் கூறும் குற்ற சாட்டுக்களூக்கு தலமை மூலம் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

பொய்யன்கள் மங்கிஸ்கான், பாக்கர் கூட்டங்களில் இனிமேல் புளுகினால் அதிரை அதிரடி நடவடிக்கை தொடரும் என்று எச்சரிக்கிறோம்.


மன்மத ராசாவின் லீலைகள், ஊழல்கள்  பற்றி அறியவும் மற்றும் மன்மத ராசாவின் பக்தர்கள் பரப்பும் பொய்களுக்கு முதுகெழும்பை முறிக்கும் பதில்களை காணவும் இங்கே சொடுக்கவும்.

Friday, July 02, 2010

ஜூலை மாநாட்டிற்கு தயாராகிவிட்டீர்களா?


ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு



வெள்ளையன் அளித்த இடஒதுக்கீட்டை விடுதலைப்போரில் வீசியெறிந்தது, நம் சமுதாயம். இது முஸ்லிம்களின் தேசாபிமானம்!

விடுதலைக்குப் பின் அந்த இடஒதுக்கீட்டை பிடுங்கி எறிந்தது, இந்திய அரசாங்கம். இது இந்த தேசத்திற்கே அவமானம்!

இன்னும் தொடரலாமா இந்தத் துரோகம்!

முஸ்லிம் சமுதாயமே தீவுத் திடலுக்கு விரைவீர்! திருப்புமுனை காண்பீர்!!

நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல், சென்னை


வளைகுடாவில் இந்திய முஸ்லிம்களின் நிலை




அதிரையில் இருந்து மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் மாநாட்டிற்கு வர கீழ்காணும் நபர்களை தொடர்பு கொள்ளவும்.

ராஜிக் அஹமது (99434-47195)

அப்துல் ஜப்பார் (99769-20828)

ஹைதர் அலி (96776-26656)

அப்துர் ரஹ்மான் (99945-38590)

நெய்னா (97895-82547)

Thursday, July 01, 2010

இந்திய முஸ்லிம்கள் அன்றும் இன்றும்

ஜூலை மாநாட்டிற்கு தயாராகிவிட்டீர்களா?

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு


வெள்ளையன் அளித்த இடஒதுக்கீட்டை விடுதலைப்போரில் வீசியெறிந்தது, நம் சமுதாயம். இது முஸ்லிம்களின் தேசாபிமானம்!

விடுதலைக்குப் பின் அந்த இடஒதுக்கீட்டை பிடுங்கி எறிந்தது, இந்திய அரசாங்கம். இது இந்த தேசத்திற்கே அவமானம்!

இன்னும் தொடரலாமா இந்தத் துரோகம்!

முஸ்லிம் சமுதாயமே தீவுத் திடலுக்கு விரைவீர்! திருப்புமுனை காண்பீர்!!

நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல், சென்னை




















Wednesday, June 30, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற ஜூலை 4 மாநாடு பைக் மற்றும் தெருமுனை பிரச்சாரம்

கடந்த 26.06.2010 அன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற (இன்ஷா அல்லாஹ்) இருக்கும் 'ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு' ஏன் என்பதை விளக்கி, அதிரையின் முக்கிய பகுதிகளில் பைக் பேரணியும் மற்றும் தெருமுனை பிரச்சாரமும் நடைபெற்றது.

பைக் பேரணி

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் மௌலவி கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் உரையாற்றினார்கள்.

கீழ்காணும் பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது:

1. கடல்கரை தெரு
2. தரகர் தெரு
3. பிலால் நகர்
4. மெயின் ரோடு (பஸ் ஸ்டாண்ட் அருகில்)
5. செக்கடிமேடு
6. மேலத்தெரு
7. நெசவுத்தெரு
8. தக்வா பள்ளி அருகில்

கடல்கரை தெரு
பிலால் நகர்
மெயின் ரோடு (பஸ் ஸ்டாண்ட் அருகில்)
செக்கடிமேடு
நெசவுத்தெரு
தரகர் தெரு
மேலத்தெரு
தக்வா பள்ளி அருகில்

Sunday, June 27, 2010

உரிமையை மீட்க உரிமையுடன் அழைக்கிறோம்

உரிமையை மீட்க உரிமையுடன் அழைக்கிறோம்

உரை: பி.ஜைனுல் ஆபிதீன்

ஜூலை மாநாட்டிற்கு தயாராகிவிட்டீர்களா?


Tuesday, June 22, 2010

அதிரையில் இரண்டு இடங்களில் நடைபெற்ற ஜூலை மாநாடு பிரச்சாரம்

கடந்த 19.06.2010 அன்று கடல்கரைத்தெரு ஜூம்மா பள்ளி அருகிலும் மற்றும் கடல்கரைத்தெரு பெண்கள் மார்கெட் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பழைய போஸ்ட் ஆபிஸ் அருகில் நடைபெற்ற ஜூலை 4 பிரச்சாரம்

கடந்த 17.06.2010 அன்று பழைய போஸ்ட் ஆபிஸ் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பேச்சாளர் மௌலவி முஜாஹித் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி ஆகியோர் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலத்தெருவில் தர்ஹா வழிபாட்டை கண்டித்து தெருமுனை பிரச்சாரம்

கடந்த 16.06.2010 அன்று மேலத்தெரு ரஹ்மத் நூலகம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கந்தூரி விழாவை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள்.

இது மேலத்தெருவில் இந்த வருடம் நடைபெறும் கந்தூரி திருவிழாவை கண்டித்து நடைபெறும் முன்றாவது தெருமுனை பிரச்சாரமாகும்.

Monday, June 21, 2010

குர்ஆன் வசனத்தை கிழித்த கப்ர் வணங்கிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக தர்ஹா வழிபாட்டை கண்டித்து மேலத்தெரு தர்ஹா அருகில் கீழ்காணும் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்ட டிஜிட்டல் பேணர் வைக்கப்பட்டிருந்தது. இந்த வசனத்தின் கருத்தை பொறுக்க முடியாத கப்ரு வணங்கிகள் அதை கிழித்தனர்.


மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
திருக்குர்ஆன் 22:73

கிழிக்கப்பட்ட பேணர்


கிழிக்கப்பட்ட பேணரை அகற்றிவிட்டு, மீண்டும் அதே இடத்தில் புதிய பேணர் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

புதிதாக வைக்கப்பட்ட பேணர் கீழே,



குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்ட பேணரை கிழித்த அவ்லியா பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிராம்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Saturday, June 19, 2010

காலத்தால் சிறந்த கல்வி உதவி

ஏகத்துவத்தை, கனி தரும் மரத்திற்கு அல்லாஹ் உவமையாகக் காட்டுகின்றான். இது மனித உள்ளம் என்ற மண்ணில் வேரூன்ற ஆரம்பித்து விட்டால் அது சுவையான கனிகளை, அழகிய அரும் பண்புகளைக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது. அந்தப் பண்புகளில் ஒன்று ஏழைக்கு உதவி வழங்குவதாகும்.

இந்த ஏகத்துவம், ஓர் இறை நம்பிக்கையாளரிடம் குடிகொண்டு விட்டால் அவர் ஏழைக்கு உதவி செய்யும் இனிய பண்புக்குச் சொந்தக்காரராக ஆகி விடுகின்றார். அதுவும் கைமாறு எதிர்பார்க்காமல், நன்றி வார்த்தைக்குக் கூடக் காத்திருக்காமல் அள்ளி வழங்குகின்றார். இந்த தர்மத்தின் காரணமாக அவரிடத்தில் உள்ள எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்று தான். அது தான் இறை திருப்தியாகும்.

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

அல்குர்ஆன் 76:8, 9

அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர். மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது.

அல்குர்ஆன் 92:18-20

ஏழைகளுக்கு வழங்குவதில் இறையன்பு கிடைக்கின்றது என்று இறைவன் கூறியதும் மக்கள் தங்களுக்கும், தங்கள் வாரிசுகளுக்கும் எதுவுமில்லாமல் எல்லாவற்றையும் செலவு செய்து விடக் கூடாது என்பதற்காக தர்மத்திற்கு மார்க்கம் ஒரு வரம்பைக் காட்டுகின்றது.

'விடைபெறும்' ஹஜ்ஜின் போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! நான் மரணத் தறுவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; எனது ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "வேண்டாம்'' என்றார்கள். பின்னர் நான் "பாதியைக் கொடுக்கட்டுமா?'' எனக் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் "வேண்டாம்: மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்து விடும். அதுவும் அதிகம் தான்; ஏனெனில் உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட தன்னிறைவுடையர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. இறைப் பொருத்தத்தையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகின்ற உணவுக் கவளத்திற்கும் கூட உமக்கு நன்மையுண்டு'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: புகாரி 1295

மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியைத் தான் தர்மம் செய்யும்படி மார்க்கம் கட்டளையிடுகின்றது.

மூன்றில் ஒரு பகுதியை வழங்கச் சொல்லி விட்டு மீதியைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. அதை பெற்றோர்கள், கணவன், மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தினருக்கு வழங்கச் சொல்கின்றது. அதற்கு அதிகம் நன்மை என்றும் கூறி ஆர்வத்தை ஊட்டுகின்றது. உறவினர்களுக்கு வழங்குவதில் இரு மடங்கு நன்மை என்று விளக்குகின்றது.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பள்ளிவாசலில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள், "பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்' எனக் கூறி விட்டார். எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், "அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் "ஸைனப்' எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் "எந்த ஸைனப்?'' எனக் கேட்டதும் பிலால் (ரலி), "அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி (ஸல்) "ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது'' எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 1466

உறவினருக்கு வழங்குவதால் வாழ்நாளில், பொருளாதாரத்தில் வளம் பெருகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 2067

இஸ்லாம் கூறும் இந்தப் போதனையை உலக மக்கள் கடைப்பிடித்தால் உண்மையில் யாசகர்கள் பெருக மாட்டார்கள். அவரவர் தங்கள் சுற்றத்தாருக்கும் சொந்தக்காரர்களுக்கும் வழங்கினால் வீதிகளில் வெள்ளமாய் பெருக்கெடுத்து வருகின்ற பிச்சைக்காரர்களை நாம் காண நேரிடாது. மக்கள் உறவைப் பேணாததால் தான் இந்த அவல நிலை!

ஏழைகளுக்கு உணவளித்தல், உறவினர்களை ஆதரித்தல் என்றால் தங்கள் சொந்த பந்தங்களைத் திருமண விருந்தில் அழைத்து விருந்தளித்து விட்டால் போதும் என்று தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள். திருமண விருந்தில் தங்களின் பண பலத்தைக் காட்டியும், வளத்தைக் கொட்டியும் மகிழ்கின்றார்கள். உண்மையில் இஸ்லாம் இது போன்ற காரியங்களை வரவேற்கவில்லை.

ஒரு சிலர், ரமளானுக்கு ரமளான் சில ஆயிரங்களைச் சில்லரையாக மாற்றி வைத்துக் கொண்டு விளம்புகின்றனர். ஒரு சிலர், வேட்டி, சட்டை போன்ற துணிமணிகளை எடுத்து சிலருக்குக் கொடுத்து விட்டு இத்துடன் தங்களுடைய கடமை முடிந்து விடுகின்றது என்று நினைக்கின்றனர்.

இவையெல்லாம் ஒரு தற்காலிக உதவி தான். இதனால் யாருடைய வறுமையும் அகன்று விடாது. இது நிரந்தர உதவியாக ஆகிவிடாது.

உதவி என்பது நிரந்தரமாக அமைய வேண்டும். ஒருவரது வியாபாரத்திற்காக ஏதேனும் உதவி செய்து அவரது பொருளாதார நிலையை மேம்படுத்தலாம். தனது உறவினர்களின் குடும்பத்திலுள்ள மாணவர்களின் கல்விச் செலவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.

இப்போது கல்லூரிகள் திறந்து விட்டன. மாணவர்கள் கலை, பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் கல்லூரிகளில் சேர்வதற்காக, அதற்கான கட்டணத்திற்காக கையறு நிலையில் இருப்பார்கள்.

இவர்களது நிலையைப் பற்றி மற்றவர்களை விட நெருங்கிய உறவினர்களுக்குத் தான் நன்றாகத் தெரியும். அப்படித் தெரிந்து வைத்திருப்பது அவர்களுக்குக் கடமையுமாகும்.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:272

உறவினர்களை மட்டுமின்றி, சமுதாயத்தில் உள்ள அனைவரையும் இது போன்று அடையாளம் கண்டு உதவி செய்யச் சொல்கிறான். இவ்வாறு அடையாளம் கண்டு கொள்ளாதவர்களை, அறியாதவர்கள் என்று இறைவன் குறிப்பிடுகின்றான். சமுதாயத்திலுள்ள பிறருக்கே இந்த நிலை என்றால் உறவினர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

நெருங்கிய உறவினர்களை அடையாளம் கண்டு உதவ முன்வரவில்லை எனில் அவர் உறவைப் பேணாதவர் ஆவார். வசதியிருந்தும் உறவைக் கவனிக்காத குற்றத்திற்கு உள்ளானவர் ஆவார். அல்லாஹ் காக்க வேண்டும்.

கல்வியாண்டின் துவக்கமான இந்தக் கால கட்டத்தில் நம் குடும்பத்தில் ஒரு மாணவனுக்குப் பொறுப்பேற்று நாம் கல்வி உதவி செய்தோம் என்றால் எதிர்காலத்தில் அந்த மாணவன் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பதுடன் மட்டுமல்லாமல் இது போன்று பிறருக்கு உதவவும் முன்வருவான்.

இத்தகைய கல்வி உதவிகள் உண்மையில் காலத்தால் மிகச் சிறந்த உதவியாகும். உலகக் கல்வியைப் போன்றே மார்க்கக் கல்வி கற்பதற்கும் பொறுப்பேற்றுக் கொண்டால் அதனுடைய நன்மையின் பரிமாணம் மிகப் பிரம்மாண்டமானது. இதை உணர்ந்து உறவுகளுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில் உதவிடுவோமாக!

Wednesday, June 16, 2010

தர்ஹா வழிபாட்டை கண்டித்து மேலத்தெரு தர்ஹா அருகில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேணர்

மேலத்தெரு தர்ஹா அருகில் தர்ஹா வழிபாட்டை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக டிஜிட்டல் பேணர் வைக்கப்பட்டுள்ளது.


கந்தூரி திருவிழாவை கண்டித்து மேலத்தெரு தர்கா அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 12.06.2010 அன்று மேலத்தெரு தர்கா அருகில் சமாதி வழிபாட்டை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் சமாதி வழிபாடு எவ்வகையில் தவறு என்பதை விளக்கி பேசினார்.

இதில் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.

Monday, June 14, 2010

அதிரையில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

13.06.2010 அன்று A. அப்துல் (சாகுல்) ஹமீது என்ற சகோதரருக்கு மேலத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நபிவழியில் திருமணம் நடைபெற்றது.

மணமகன் மஹராக 5 பவுன் தங்கம் வழங்கினார். இந்த திருமணம் தஞ்சை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருமண பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.


இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, June 12, 2010

கந்தூரி விழாவை கண்டித்து மேலத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 11.06.2010 அன்று மேலத்தெரு MMS வாடி அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கந்தூரி விழாவை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'வேண்டாம் தர்கா வழிபாடு' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். கந்தூரி நடைபெற இருக்கும் நேரத்தில் நடத்தப்பட்ட இந்த பிரச்சாரத்தை பலர் பாராட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இணைவைக்கும் இமாம்களை பின்பற்றி தொழலாமா?

பதில்-1:




பதில்-2:


மற்ற கேள்வி பதில்களை காண:
http://onlinepj.com/bayan-video/kelvi_pathil/kelvikal_thokuppu/

Wednesday, June 09, 2010

வங்கியில் தரும் வட்டியை வாங்கலாமா?


மற்ற கேள்வி பதில்களை காண:
http://onlinepj.com/bayan-video/kelvi_pathil/kelvikal_thokuppu/

Wednesday, June 02, 2010

ஸலாதுன்னாரியா ஓதலாமா?


மற்ற கேள்வி பதில்களை காண:
http://onlinepj.com/bayan-video/kelvi_pathil/kelvikal_thokuppu/