மஸ்ஜிதுத் தவ்ஹீத்

மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியின் தேவை:

[இந்த பள்ளியின் கட்டிடப் பணிகளுக்கு உங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்]

அதிராம்பட்டிணத்தில் பள்ளிவாசல்களுக்கு பஞ்சமில்லை. எங்கு திரும்பினாலும் பள்ளிவாசல்கள். இப்படி பள்ளிவாசல்கள் நிறைந்த ஊரில், குர்ஆன் சுன்னா அடிப்படையில் செயல்படும் பள்ளிவாசல் உருவாக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டிணம் கிளை முயற்சியை மேற்கொண்டது. அல்லாஹ்வின் உதவியினால் இந்த பணி வெற்றியடைந்தது.

அதிராம்பட்டினம் ECR ரோட்டில் (காதிர் முகைதீன் கல்லூரிக்கு எதிரில்) நிலம் வாங்கப்பட்டு, கீற்று கொட்டகையில் தவ்ஹீத் பள்ளி செயல்பட ஆரம்பித்தது. இந்த பள்ளிக்கு 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜும்ஆ தொழுகை மட்டும் முதலில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது, ஐவேளை தொழுகையும் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

தவ்ஹீத் பள்ளியில் ஜும்ஆ தொழுகை நடத்த ஆரம்பித்தவுடன் பெரும் கூட்டம் கூட ஆரம்பித்தது. மேற்சொல்லப்பட்ட பள்ளிகளில், கூட்டம் குறைய ஆரம்பித்தது. ஊரின் கடைசியில் உள்ள தவ்ஹீத் பள்ளியில் தூரத்தைக் கூட பார்க்காமல் மக்கள் குழும ஆரம்பித்தனர். ஜும்ஆ தொழுகையின் போது தவ்ஹீத் பள்ளி நிறைந்து, இடப்பற்றாக்குறையால் மக்கள் கடும் பெயிலில் கூட நின்று தொழுதனர். அல்ஹம்துலில்லாஹ்.

கடந்த ரமலானில் (2009) பல்வேறு தடைகளையும் மீறி ஸஹர் பாங்கு சொல்லப்பட்டது. சூரியன் மறைந்தவுடன் விரைந்து நோன்பு திறப்பதற்கும் பாங்கு சொல்லப்பட்டது. இந்த நபிவழிகளை தடுக்க முயன்ற அசத்தியவாதிகள் தோல்வியை தழுவினர். அல்ஹம்துலில்லாஹ்.

தவ்ஹீத் பள்ளியின் மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவை:

1. ஐவேளை தொழுகை

2. ஜும்ஆ தொழுகை

3. ரமலானில் இரவு தொழுகை மற்றும் பயான்

4. ரமலானில் நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு

5. ரமலானில் ஸஹர் சாப்பாடு

6. தர்பியா நிகழ்ச்சி

7. கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

8. இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

9. பெண்களுக்கு ஜூம்ஆ தொழுகை

இப்படி பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் இந்த பள்ளியின் கட்டுமானப்பணி முடிந்தால் இன்னும் பல பணிகளை விரைவாக செய்ய முடியும். மேலும் ஜும்ஆ தொழுகையின் போது வெயிலில் தொழும் சகோதரர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும். பள்ளிவாசல் சிறியதாக உள்ளதால் பெண்கள் இந்த பள்ளியில் தொழுவதற்கு முடியவில்லை.

மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியின் தற்போதைய நிலவரம்:

அதிராம்பட்டினம் ECR ரோட்டில் உள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளி தற்சமயம் கீற்று கொட்டகையில் தான் நடந்து வருகிறது.

பள்ளியின் கட்டுமான பணி துவக்கம்:


அல்லாஹ்வின் அருளால், 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியின் கட்டிட பணி துவங்கி, இரண்டாம் தளத்தின் கான்கீரிட் வரை முடிந்துள்ளது.



பள்ளியின் கட்டிட செலவு மதிப்பீடு:

இந்த பள்ளியின் கட்டிட பணிகளுக்கு ரூபாய் 35 லட்சம் செலவாகும் (35,00,000) என்று பொறியாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது (இது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட  மதிப்பீடு).

குறிப்பு:

கட்டிட பொருட்களின் விலை மற்றும் கூலி ஆட்களின் சம்பள உயர்வின் காரணமாக கட்டிட பணியின் தற்போதைய மதிப்பீடு 56 லட்சம் அளவுக்கு உள்ளது.

மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியின் தற்போதைய புகைப்படங்கள்:

உள்பள்ளியின் புகைப்படங்கள்:


உள்பள்ளியில் இட பற்றாக்குறையால் பள்ளியின் பின்புறம் நீட்டிப்பு செய்யப்பட்ட பகுதியின் புகைப்படம்:


உள்பள்ளியில் இட பற்றாக்குறையால் பள்ளியின் இடது புறம் நீட்டிப்பு செய்யப்பட்ட பகுதியின் புகைப்படம்:


உள்பள்ளியில் இட பற்றாக்குறையால் பள்ளியின் வலது புறம் நீட்டிப்பு செய்யப்பட்ட பகுதியின் புகைப்படம்:


ஜும்ஆ தொழுகையின் போது வெயிலில் தொழும் மக்கள்:


ஜூம்ஆ தொழுகையில் பெண்கள்:

அதிரை தவ்ஹீத் பள்ளியில் இடம் பற்றாக்குறையால் இதுவரை ஆண்கள் மட்டுமே தொழுது வந்தனர்.  கடந்த 20.1.2012 முதல் பெண்களுக்கு ஜூம்ஆ தொழ, புதிய கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் புதிய கட்டிடத்தின் முதல் தளத்தை முழுமையாக நிரப்பினார்கள். இரண்டாம் தளத்தையும் சரி செய்து தாருங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டார்கள். இதை இன்றைய முஸ்லிம்கள் தடுக்கிறார்கள். அதிராம்பட்டிணத்தில் பெண்களை பள்ளியில் அனுமதிக்கும ஒரே பள்ளி, மஸ்ஜிதுத் தவ்ஹீத் என்பது குறிப்பிடத்தக்கது.



'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியின் கட்டிட பணிக்கு உதவுங்கள்:

அல்லாஹ்வின் இந்த ஆலயத்தை கட்ட உங்களின் நன்கொடைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"யார் அல்லாஹ்விற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான்".

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)
நூல்: முஸ்லிம், அஹமது, புகாரி

இந்த பள்ளியின் கட்டிடப் பணிகளுக்கு உங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில் தலைமையின் பரிந்துரை கடிதம்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக கட்டப்பட்டு வரும், 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியின் கட்டிட பணிக்கு நன்கொடை வழங்கும்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை வழங்கிய பரிந்துரை கடிதம்: