Monday, September 07, 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?


ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?



Saturday, July 18, 2015

நபிவழி நோன்பு பெருநாள் திடல்தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைகிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை பிலால் நகர் பெட்ரோல் பங்க் எதிரே கிரானி மைதானத்தில் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. இதில் சென்ற வருடத்தை விட ஆதிகமானவர்கள் கலந்துக்கொண்டு நபிவழி அடிப்படையில் தொழுகையை நிறைவேற்றினர் வருட வருடம் திடல் தொழுகைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது இனிவரும் காலங்களில் அதிரை கிளையின் சார்பாக இரண்டு இடங்களில் பெருநாள் திடல் தொழுகை நடத்துவதற்கு கிளை நிர்வாகம் முயற்சித்துவருகிறது.

திடல் தொழுகை  வசூல்  48720













நோன்பு பெருநாள் உரை P J (18.7.2015)

பெருநாள் உரை (வீடியோ)

Monday, July 13, 2015

Wednesday, July 08, 2015

Sunday, July 05, 2015

உங்களின் ஃபித்ராவை (நோன்புப் பெருநாள் தர்மம்) வாரி வழங்கிடுவீர்

அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை ஒவ்வோரு வருடமும் ஃபித்ரா வசூல் செய்து ஃபித்ராவை பெற தகுதியானவர்களை வீடு தேடி சென்று வினியோகம் செய்து வருகிறது. பெருநாளில் உணவு சமைப்பதற்கான பொருள்கள் உள்பட இறைச்சி வாங்குவதற்கு பணமும் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் கடந்த காலங்களில் சுமார் 600 எழை குடும்பங்கள் பயன்பெற்றன.

நமது ஊரில் வசதி படைத்தவர்கள் சரியான முறையில் ஃபித்ராவை வழங்கினால், நமது ஊரில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களும் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும்.

எனவே, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் நமது அதிரை சகோதரர்கள் உங்களின் ஃபித்ராவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளைக்கு அனுப்பி தாருங்கள். உங்களின் ஃபித்ராவை அனுப்ப கீழ்காணும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்:

ஒரு நபருக்கு ஃபித்ரா தொகையாக ரூபாய் 100 (நூறு) நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.



தலைவர்
பீர் முஹம்மத் (+91-80153-79211)

செயலாளர்:
பக்கீர் முகைதீன்  (+91 95008 21430)

பொருளாளர்:
A.K. மீரா முகைதீன் (+91 99448 24510)

துணைத்தலைவர்
அப்துல் ஜப்பார் (+91-96295-33887)



குறிப்பு: உங்களின் பகுதிகளில் வசிக்கும் ஃபித்ராவை பெற தகுதியான வீடுகள் பற்றிய விபரங்களையும் மேலே உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தலாம். 

ஃபித்ராவின் சட்டங்களை அறிய இங்கே சொடுக்கவும்.


Monday, June 22, 2015

Friday, June 19, 2015

சஹர் பாங்கு நபிவழியை நடைமுறைப்படுத்துங்கள்!

சஹர் பாங்கு நபிவழியை நடைமுறைப்படுத்துங்கள்!
சஹர் பாங்கு நபிமொழியை நிராகரிக்காதீர்!

மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால், ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக்கூடிய ஏற்பாடு நபி (ஸல்) அவர்களால் செய்யப்பட்டிருந்தது.
பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தீன்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சியமாகி இருந்தது. ரமழான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுப்ஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபி (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
‘பிலாலின் அதான் (பாங்கு) ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில், (இரவில்) நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும் உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அதான் (பாங்கு) சொல்வார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), 
நூல்: புகாரி 621

‘பிலால் இரவில் அதான் (பாங்கு) சொல்வார். இப்னு உம்மி மக்தூம் அதான் (பாங்கு) சொல்லும் வரை நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 
நூல்: புகாரி 5299,7247 முஸ்லிம், நஸயீ

மேற்கண்ட நபிமொழியை நடைமுறைப்படுத்தும் முகமாக அனைத்தப் பள்ளிவாசல்களிலும் சஹர் நேரத்தில் பாங்கு சொல்லி நபிவழியை நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அறிவிப்பு:
கடந்த வருடங்களில் அதிரை ECR ரோட்டில் உள்ள 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் ஸஹருக்காக பாங்கு சொல்லப்பட்டது போல், இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் ஸஹருக்கு பாங்கு சொல்லப்படும். 
என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

Wednesday, June 17, 2015

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு

ரமலான் மாதம் ஆரம்பம்!

பிறைதேட வேண்டிய நாளான இன்று 17.06.15 புதன் கிழமை மஹரிபிற்குப் பிறகு பிறை தென்பட்டதாக தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஷாஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து 18.06.15 வியாழக்கிழமை மஹரிபிலிருந்து தமிழகத்தில் ரமலான் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.

Tuesday, June 16, 2015

ஹாஜா நகரில் நடைபெற்ற பெண்கள் பயான்

இன்று 16.6.2015 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைக்கிளை சார்பாக ஹாஜா நகரில் சகோதரர் அப்பாஸ் வீட்டில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் அதனை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 20க்கும் அதிகமான ஆண்களும் 50க்கும் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்



Monday, June 15, 2015

Friday, June 12, 2015

Friday, June 05, 2015

மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை சார்பாக கடற்கரை தெருவை சார்ந்த சகோதரருக்கு மருத்துவ உதவியாக மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி ரூ 6500  வழங்கினார்கள்




Saturday, May 30, 2015

அதிரையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி


பிறையை கண்களால் பார்ப்பது தான் நபிவழியா?

நாளின் துவக்கம் எது? மக்ரிபா? சுபுஹா?

உலகின் ஏதாவது ஓரிடத்தில் பார்க்கப்படும் பிறை அனைத்துப்பகுதிகளுக்கும் பொருந்துமா?

ஓரிடத்தில் பார்க்கப்படும் பிறை எவ்வளவு பகுதியை கட்டுப்படுத்தும்?

அரபா நோன்பை எதன் அடிப்படையில் நோற்பது?

இன்னும் இது போன்று பிறை குறித்த பல சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில்களை நேரில் கேட்டு தெளிவுபெற அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைகிளை


துபையில் நடைபெற்ற அதிரை (TNTJ) அமீரக ஒருங்கிணைப்பு கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை அமீரக ஒருங்கிணைப்பு கூட்டம் துபை தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் 29-5-2015 வெள்ளிகிழமை மதியம் 2:00 மணியளவில் அல்லாஹ்வின் கிருபையால் அமீரக பேச்சாளர் சகோ. சாஜிதுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. 

இதில் அபுதாபி சார்ஜா அஜ்மான் போன்ற பகுதிகளிலிருந்து அதிரை சகோதர்கள் பலர் கலந்து கொண்டனர். அதிரையில் ஏகத்துவ பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும் அல் ஹிக்மா பெண்கள் மதரசா பற்றியும் ஆலோசித்து பல தீர்மானங்களோடு முடிவு செய்யப்பட்டு இறுதியாக அமீரக பேச்சாளர் சகோ. சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் தர்பியா நிகழ்த்தி நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்!