தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக இன்று (20.08.2012) ECR ரோட்டில் அமைத்துள்ள NMS ஜெகபர் அலி மைதானத்தில் நடைபெற்றது.
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட நபிவழியை நிலைநாட்ட ஆண்களும் பெண்களும் கடந்த காலங்களை விட மிக அதிகமாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தொழுகை நடத்தி சொற்பொழிவு ஆற்றினார்கள். (பொருநாள் உரை விரைவில் வெளியிடப்படும்)
21 கருத்துரைகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அன்மையில் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்று தன்னுடைய பயானில் சொன்னார்.
அதை தங்கள் இனயதளத்தில் விமர்சிச்சு பேசினார் அன்ஸர்தீன் பிர்தவ்சி அவர்கள்...
அதில் பெண்கள் முகத்தை முடினாலும்
அன்னன் சொல்கிரார் முகத்தை கண்டிப்பாக மூட கூடாது என்று, பிர்தவ்சி சொல்கிரார் முகத்தை முடினாலும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது என்று சொல்கிரார்.
அன்னனின் ஆய்வில் தவாற??? அல்லது பிர்தவ்சியின் ஆய்வில் தவறா???
மேலும் பெருநாள் தொழுகை நபி வழியில் நடாத்தியதற்க்கு அல்ஹம்துலில்லாஹ், ஆனால் பெருநாள் தொழுகை திடலில் பெண்களுக்கு தொழுகை பகுதிக்கு திரையிடுவது நபிவழியா???
சகோதரர் யூசுஃப் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
//அன்மையில் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்று தன்னுடைய பயானில் சொன்னார்.//
ஆம். ஹைதர் அலி அவர்கள் மறைத்தாலும் மறைக்காவிட்டாலும் தவறில்லை என்று சொல்லியிருந்தால் சரி. ஹைதர் அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை. கண்டிப்பாக பெண்கள் முகத்தை மறை வேண்டும் என்ற அவரின் மனோ இச்சை மார்க்காமாக திணிக்க முயல்கிறார். அவரை தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இது சம்பந்தமாக ஹைதர் அலி அவர்களை விவாதிக்க அழைத்துள்ளது. அவர் விவாதிக்க மறுத்து ஒடுகிறார். தான் சொன்னது தவறு என்றும் நிருபிக்கிறார் ஹைதர் அலி அவர்கள்.
//அதை தங்கள் இனயதளத்தில் விமர்சிச்சு பேசினார் அன்ஸர்தீன் பிர்தவ்சி அவர்கள்...
அதில் பெண்கள் முகத்தை முடினாலும்
அன்னன் சொல்கிரார் முகத்தை கண்டிப்பாக மூட கூடாது என்று, பிர்தவ்சி சொல்கிரார் முகத்தை முடினாலும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது என்று சொல்கிரார்.//
பெண்கள் முகத்தை மூடுவதற்கும் அனுமதியிருக்கிறது. மூடாமல் இருப்பதற்கும் அனுமதியுள்ளது. இது தான் பிஜே அவர்களின் கருத்து. இதே கருத்தை தான் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களும் கொண்டுள்ளார். பெண்கள் முகத்தை மூடினாலும் தவறில்லை என்ற அஷ்ரப்தீன் அவர்களின் கருத்து, பிஜேவின் கருத்திற்கு முரணானது இல்லை.
பெண்கள் முகத்தை மூடுவதற்கு அனுமதியிருந்தாலும், இதனால் எற்படும் விளைவுகளால் மூடாமல் இருப்பதே சிறந்தது என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு. உதாரணத்திற்கு, ஒரு ஆண் தனது மனைவி அல்லாத வேறு ஒரு பெண்ணுடன் (அந்த பெண்ணின் முகம் மூடப்பட்ட நிலையில்) சொன்னால் மக்களால் அந்த தவறை கண்பிடிக்க முடியாது. மாற்று மதத்தை சார்ந்த பல பெண்கள் முகம் மூடுவதை தங்களின் தவறை மறைக்க பயன்படுத்துவதால், முகம் மூழுவதை மார்க்கம் அனுமதித்து இருக்கிற போதிலும், அதனால் ஏற்படும் பின் விளைவுகளால், அதை செய்யாமல் (முகத்தை மறைக்காமல்) இருப்பதே சரியானது என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு.
//அன்னனின் ஆய்வில் தவாற??? அல்லது பிர்தவ்சியின் ஆய்வில் தவறா???//
மனிதர்களில் யாரும் தவறுக்கு அப்பாற்ப்பட்டவர்கள் அல்ல என்பதை உறுதியாக நம்புபவர்கள் நாங்கள். தவறு இருந்தால் கண்டிப்பாக திருத்திக்கொண்டு, எங்களின் தவறை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்பும் செய்வோம். நீங்கள் சுட்டிக்காட்டும் விஷயம் முரணனே தவறே இல்லை.
//மேலும் பெருநாள் தொழுகை நபி வழியில் நடாத்தியதற்க்கு அல்ஹம்துலில்லாஹ், ஆனால் பெருநாள் தொழுகை திடலில் பெண்களுக்கு தொழுகை பகுதிக்கு திரையிடுவது நபிவழியா???//
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிகளிலே அல்லது மைதானங்களிலே இவ்வாறு திரை போடும் நடைமுறை இருக்கவில்லை. இவ்வாறு செய்வது கூடாது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இதை செயல்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல் உள்ளது. அதாவது பொதுவாக தமிழகத்தில் பெண்கள் பள்ளிக்கும் மைதானத்திற்கு தொழுகைகாக வருவதும் மிகப்பெரிய பாவமாக இருந்தது. அதை தவ்ஹீத் ஜமாஅத் உடைத்து நபி வழியை நிலைநாட்டியுள்ளது. திரை போடாமல் நாம் இருந்தால் பெண்கள் பள்ளிக்கு வருவதும் மைதானத்திற்கு வருவதும் சற்று தடைபடலாம். எனவே, இன்ஷா அல்லாஹ், நீங்கள் சுட்டிக்காட்டிய நபி வழியை வரும் காலங்களில் செயல்படுத்துவோம்.
வ அலைக்குமுஸ்லாம் வரஹ்...
பாரக்கள்ளாஹ் பீக்,அன்னன் அவர்கள் பெண்கள் முகத்தை மூட வேண்டுமா என்ற்ற கேள்விக்கு பதில் சொல்லும்போது
http://www.youtube.com/watch?v=qJLLPZJQIus முகத்தை மறைக்கவே கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலை என்று அன்னன் சொல்கிரார்.
சகோதரர் பிர்தவ்ஸி அவர்கள் சொல்லும் போது மறைப்பதற்க்கு அனுமதி இருக்கிறது என்று சொல்கிரார்.
நமது ஊரில் காலம் காலமாக முகத்தை பெண்ங்கள் மூடி கொண்டு வெளியில் சென்று வருகிரார்கள், அவர்களை நீங்கள் முகத்தை மூடமல் தான் வெளியில் வரவேண்டும் என்ற சட்டத்தை எவ்வாறு நமது ஊர் பெண்களிடம் தினிப்பது.
அவர்களாக விரும்பி முகத்தை மறைத்து கொண்டு வாழும் எமது சமுக பெண்களை இவ்வாறு தினிப்பது முற்றிலும் தவறு.
மேலும் நாம் குஃப்பார்களின் நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். முஸ்லிம்களைவிட காஃபிர்கள் நீறைந்த நாட்டில் வாழும் நாம் முகத்தை மறைக்காமல் இருப்பது ஃபித்தனாவாக கருதுகிரேன்.
மேலும் அல்லாஹ் குர் ஆனில் ஹிஜாபுடைய சட்டத்தை சொல்லும்போது
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். 24:31
இந்த குர் ஆன் ஆயத்தில் ஹிஜாபுடைய சட்டத்தை சொல்லும்போது முஸ்லிம் அல்லாத காஃபிர்களான பென்களிடமும் ஹிஜாப்பை பேன சொல்கிரான் அல்லாஹ்.
//நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிகளிலே அல்லது மைதானங்களிலே இவ்வாறு திரை போடும் நடைமுறை இருக்கவில்லை. இவ்வாறு செய்வது கூடாது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இதை செயல்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல் உள்ளது. அதாவது பொதுவாக தமிழகத்தில் பெண்கள் பள்ளிக்கும் மைதானத்திற்கு தொழுகைகாக வருவதும் மிகப்பெரிய பாவமாக இருந்தது. அதை தவ்ஹீத் ஜமாஅத் உடைத்து நபி வழியை நிலைநாட்டியுள்ளது. திரை போடாமல் நாம் இருந்தால் பெண்கள் பள்ளிக்கு வருவதும் மைதானத்திற்கு வருவதும் சற்று தடைபடலாம். எனவே, இன்ஷா அல்லாஹ், நீங்கள் சுட்டிக்காட்டிய நபி வழியை வரும் காலங்களில் செயல்படுத்துவோம்.//
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிகளிலே அல்லது மைதானங்களிலே இவ்வாறு திரை போடும் நடைமுறை இருக்கவில்லை.என்று தேரிந்தும் நபி வழி மாற்றமாக எவ்வாறு நீங்கள் செய்திர்கள்...இது பித் அத் இல்லையா?
அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இது போன்ற ஒரு வழிமுறையா காட்டித் தராத நிலையில் நாங்கள் நபி வழியில் பெருநாள் தொழுகை நடாத்திவிட்டோம் என்று சொல்லுவது தவறாகும்.
மேலும் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சஹாபி பெண்கள் முகத்தை முடி இருந்து இருக்கிரார்கள் என்ற சஹிஹ்ஹான ஹதிஸ்கள் கிடைத்த பின்பும் உங்கள் ஜமாத் இந்த நிலைப்பாட்டி இருப்பது தவறாகும்.
ஆகவே சற்று சிந்தித்து பாருங்கள்.......
அல்லாஹ் எனக்கும் உங்கள் ஜமாத் சகோதர்களுக்கும்.... நேர்வழிகாட்டுவானகா....ஆமீன்
யூசுஃப் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
//பாரக்கள்ளாஹ் பீக்,அன்னன் அவர்கள் பெண்கள் முகத்தை மூட வேண்டுமா என்ற்ற கேள்விக்கு பதில் சொல்லும்போது
http://www.youtube.com/watch?v=qJLLPZJQIus முகத்தை மறைக்கவே கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலை என்று அன்னன் சொல்கிரார்.//
சகோதரர் பிர்தவ்ஸி அவர்கள் சொல்லும் போது மறைப்பதற்க்கு அனுமதி இருக்கிறது என்று சொல்கிரார்.
பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் பெண்கள் தங்களின் முகத்தை மறைக்கவில்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் நபிகள் நாயகத்தின் பின்னால் ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அமர்ந்திருந்தார். அப்போது ஹஸ்அம் என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்தார். ஃபழ்ல் அவர்கள் அப்பெண்ணைப் பார்க்கலானார். அப்பெண்ணும் அவரைப் பார்க்கலானாள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபழ்ல் அவர்களது முகத்தை வேறு பக்கம் திருப்பினார்கள். அப்போது அந்தப் பெண், அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை முதியவராக உள்ளார். அவரால் வாகனத்தில் அமர முடியாது. இந்த நிலையில் அல்லாஹ் அடியார்கள் மீது விதியாக்கிய ஹஜ் அவர் மீது கடமையாகி விட்டது. எனவே அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது நடந்ததாகும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1513, 1855
இதே நிகழ்ச்சி புகாரியில் 6228 வது ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளது. அந்த ஹதீஸில், அப்பெண் அழகு நிறைந்தவராக இருந்தார் என்றும் அவரது அழகு ஃபழ்ல் அவர்களைக் கவர்ந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் முகத்தை அறைக்காமல் இருந்த அந்த பெண்னை முகத்தை மறைக்க சொல்லவில்லை. எனவே, மார்க்கத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. எனவே, முகம் மூடுவதை நீங்கள் கட்டாயாகமாக ஆக்க முடியாது.
அதே நேரத்தில் ஒரு பெண் தானாக முகத்தை மூடினால் அதற்கு மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை. இதற்கு தடையில்லை என்றாலும், இதனால் பல கலச்சார சிரழிவுகள் ஏற்படுகிறது. எனவே, விளைவுகளை வைத்து தான் இதில் முடிவு எடுக்க வேண்டும்.
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/pengal_mukathai_marika_atharam_ullathe/
பிஜேவும் ஃபிர்தவ்ஸியும் இதில் முரண்படவில்லை என்பதற்கு கீழ்காணும் வீடியோ சான்றாக உள்ளது. பிஜேவும் மறைத்தால் தவறு இல்லை என்று கூறிவிட்டு, இதனால் எற்படும் விளைவுகளை வைத்து பார்க்கும் போது மூகத்தை மறைக்காமல் இருப்பாதே நல்லது என்கிறார்.
//நமது ஊரில் காலம் காலமாக முகத்தை பெண்ங்கள் மூடி கொண்டு வெளியில் சென்று வருகிரார்கள், அவர்களை நீங்கள் முகத்தை மூடமல் தான் வெளியில் வரவேண்டும் என்ற சட்டத்தை எவ்வாறு நமது ஊர் பெண்களிடம் தினிப்பது.//
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மூடாமல் இருந்து இருக்கும் போது, முகம் மறைப்பதை நீங்கள் ஆதரிப்பது சரியா?
//அவர்களாக விரும்பி முகத்தை மறைத்து கொண்டு வாழும் எமது சமுக பெண்களை இவ்வாறு தினிப்பது முற்றிலும் தவறு.//
நபி (ஸல்) அவர்கள் பெண்கள் முகத்தை மறைக்க சொல்லி இருக்காமல் இருக்கும் போது முகம் மறைப்பதை நீங்கள் ஆதரிப்பது சரியா? நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் திரை போடாமல் இருப்பதை வலியுறுத்தும் நீங்கள், நபி (ஸல்) அவர்கள் பெண்கள் முகத்தை திரை போட்டு மறைக்க சொல்லாமல் இருக்கும் போது, அவர்களை திரை போட சொல்லுவது சரியா?
//மேலும் நாம் குஃப்பார்களின் நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். முஸ்லிம்களைவிட காஃபிர்கள் நீறைந்த நாட்டில் வாழும் நாம் முகத்தை மறைக்காமல் இருப்பது ஃபித்தனாவாக கருதுகிரேன்.//
இதை பற்றி நீங்கள் கவலைபட தேவையில்லை. ஸஹாபாக்களும் காஃபிர்களுடன் தானே வாழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் காஃபிர்கள் அவர்கள் கூட வாழவில்லையா? மார்க்கத்தில் சொல்லப்படும் ஒரு சட்டம் எல்லா காலத்திற்கும் எல்லா இடத்திற்கும் பொருந்தும். முஸ்லிம்கள் காஃபிர்கள் அதிகமாக வாழும் நாட்டில் இருப்பார்கள் என்பது அல்லாஹ்விற்கு தெரியாதா?
தொடரும்.......
//பாரக்கள்ளாஹ் பீக்,அன்னன் அவர்கள் பெண்கள் முகத்தை மூட வேண்டுமா என்ற்ற கேள்விக்கு பதில் சொல்லும்போது
http://www.youtube.com/watch?v=qJLLPZJQIus முகத்தை மறைக்கவே கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலை என்று அன்னன் சொல்கிரார்.//
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் யூசுப் அவர்களே .நீங்கள் கொடுத்த வீடியோவை முழவதும் கேட்டுவிட்டு தான் அனுப்பி இருப்பீர்கள் என்று நினைக்கிறன் .முகத்தை மறைக்கவே கூடாது என்று ஒற்றை வரியில் சொன்னது போல சொல்லி இருக்குறீர்கள் .ஆனால் 9.18 நிமிடங்களில் அவர் சொல்லி இருக்கும் ஹதீஸின் நிலை என்ன? அப்படி ஹதீஸ்கள் இருப்பது உண்மையா? இல்லையா? இதில் உங்களுக்கு முரண்பாடான நிலை இருந்தால் அதை தெரிவிக்கவும்
மேலும் இன்றைய சூழ்நிலைகளில் நடப்பதாக அவர் சொல்லும் ஹதீஸ் இல்லாத நடைமுறை இருக்கின்றதா இல்லையா?
இஸ்லாம் என்பது முரண்பாடு இல்லாதது,இதில் நமது கருத்தை திணிப்பது என்பது வேறு .மார்க்கம் அனுமதிப்பது என்பது வேறு .விருப்பு ,வெறுப்பு இன்றி யோசியுங்கள் சகோதரா
யூசுஃப்,
உங்களுக்கான பதிலின் தொடர்ச்சி...
//மேலும் அல்லாஹ் குர் ஆனில் ஹிஜாபுடைய சட்டத்தை சொல்லும்போது
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். 24:31
இந்த குர் ஆன் ஆயத்தில் ஹிஜாபுடைய சட்டத்தை சொல்லும்போது முஸ்லிம் அல்லாத காஃபிர்களான பென்களிடமும் ஹிஜாப்பை பேன சொல்கிரான் அல்லாஹ்.//
நாம் இங்கு ஹிஜாப் எது என்பது பற்றி தான் விவாதித்து விருகிறோம். முகத்தை மறைப்பது ஹிஜாப் எனிகிறீர்களா? ஆம், எனில் ஆதாரம் தாருங்கள்.
//நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிகளிலே அல்லது மைதானங்களிலே இவ்வாறு திரை போடும் நடைமுறை இருக்கவில்லை.என்று தேரிந்தும் நபி வழி மாற்றமாக எவ்வாறு நீங்கள் செய்திர்கள்...இது பித் அத் இல்லையா?//
இதை எல்லா இடத்திலும் நபி வழிக்கு மாற்றமாக வேண்டுமென்று நாம் செய்யவில்லை. பொதுவாக பெண்கள் வரும் சபைகளில் இவ்வாறு மறைப்பது நமது சமுதாயத்தில் இருப்பதால், இது திரை போடுவது பல இடங்களில் நடந்துவிடுகிறது. இதில் மாற்றப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை.
எதிர்காலத்தில் இன்ஷா அல்லாஹ் இதை நடைமுறைப்படுத்துவோம்.
//அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இது போன்ற ஒரு வழிமுறையா காட்டித் தராத நிலையில் நாங்கள் நபி வழியில் பெருநாள் தொழுகை நடாத்திவிட்டோம் என்று சொல்லுவது தவறாகும்.//
வேண்டுமென்றே செய்த தவறில்லை இது. நீங்கள் சுட்டிக்காட்டியது சரியாக இருக்கும் காரணத்தினால், நாங்கள் தவறு செய்து இருந்தாலும், அது தவறு தான் என்று சொல்லி, இனிமேல் இது நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் என்பதில் என்ன சகோதர தவறு உள்ளது?
பெண்கள் மத்தியில் இன்னும் மார்க்கம் சம்பந்தமான விழிப்புணர்வு எற்படவில்லை. இவ்வாறு செய்யும் பொது பெண்கள் பள்ளிக்கும், மைதானத்திற்கும் வருவதற்கு யோசிக்கலாம். எனவே, இது பற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். பேணுதல் பேணுதல் என்று சொல்லி நமது சமுதாயத்தில் மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் உள்ளவர்கள் பல மார்க்கம் காட்டித்தந்த வழிமுறைக்கு எதிரான பல விஷயங்களை உருவாக்கி வைத்துள்ளார்கள். அவற்றை உடைக்கவே தவ்ஹீத் ஜமாஅத் பல சோதனைகளை தாங்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு, சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறக்க வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளையை நிலைநாட்ட முன்வரும் போதே, அசத்திய கொள்கைகளில் உள்ளவர்களின் ஆட்டம் தாங்கமுடியவில்லை. அல்லாஹ்வின் உதவியால், தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்திய பிரச்சாரத்திற்கு எதிர்ப்புகள் ஆயிரம் வந்தாலும், அதில் சத்தியம் இருப்பதால், அது வெற்றி பெறுகிறது.
தொடரும்.......
//மேலும் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சஹாபி பெண்கள் முகத்தை முடி இருந்து இருக்கிரார்கள் என்ற சஹிஹ்ஹான ஹதிஸ்கள் கிடைத்த பின்பும் உங்கள் ஜமாத் இந்த நிலைப்பாட்டி இருப்பது தவறாகும்.//
நான் ஏற்கனவே சுட்டிக்காட்டிய ஹதீஸும் கீழ்காணும் ஹதீஸும் நபி (ஸல்) பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற கட்டளையிடவில்லை என்பதற்கு ஆதாரமாகும்.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். பாங்கும், இகாமத்தும் இல்லாமல் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகையைத் துவக்கினார்கள். பின்னர் பிலாலின் மேல் சாய்ந்து கொண்டு இறையச்சம் பற்றிக் கட்டளையிட்டார்கள். இறை வனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று ஆர்வமூட்டினார்கள். மக்களுக்குத் தேவையான அறிவுரை கூறினார்கள்.
பின்னர் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கும் அறிவுரை கூறினார்கள். 'தர்மம் செய்யுங்கள். ஏனெனில் நீங்கள் தான் நரகத்தில் அதிகமாக இருப்பீர்கள்' என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது பெண்கள் பகுதியிலிருந்து, இரண்டு கன்னமும் கறுப்பாக இருந்த ஒரு பெண் எழுந்து, 'ஏன்?' என்று கேள்வி கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'நீங்கள் அதிகமாகக் குறை சொல்கிறீர்கள்; கணவனுக்கு நன்றி மறக்கிறீர்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1467
நபிகள் நாயகத்திடம் ஒரு பெண் எழுந்து கேள்வி கேட்டார் என்பதுடன் அப்பெண்ணின் இரு கன்னங்களும் கறுப்பாக இருந்தன என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜாபிர் என்ற ஆண் நபித்தோழர் அப்பெண்ணின் கன்னம் கறுப்பாக இருந்தது என்று கூறுவதிலிருந்து அப்பெண் முகத்தை மறைக்காமல் இருந்தார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம், பிலால், ஜாபிர் பின் அப்துல்லாஹ் ஆகிய ஆண்கள் முன்னிலையில் அப்பெண் முகத்தை மறைக்காமல் இருந்துள்ளார் என்பதை இச்சம்பவத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஸஹாபி பெண்கள் முகத்தை மறைத்து இருந்தால் அது அவர்களாக செய்து இருக்க வேண்டும், காரணம் மேலே நான் எடுத்துக்காட்டிய ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் முன்னால் பெண்கள் முகத்தை மறைக்காமல் இருந்து இருக்கும் போது. நபி (ஸல்) அவர்கள் அவர்களை முகத்தை மறைக்க கட்டளையிடாததது, பெண்கள் முகத்தை மறைக்க தேவையில்லை என்பதை காட்டுகிறது.
எங்களிடம் தவறுகளை கண்டால் இதுபோல் அழகான முறையில் சுட்டிக்காட்டுங்கள். எங்களிடம் தவறு இருந்தால், எங்களை திறுத்தி கொள்வதில் எங்களுக்கு எவ்வித கஷ்டமும் இல்லை.
அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் அவனது நேரான வழியை காட்டி, அதிலேயே நிலைத்து இருக்கு செய்வானாக.
வஸ்ஸலாம்.
@Adirai TNTJ:முதலில் உங்களின் நளினமான, நாகரீகமான பதிலிற்கு நன்றி.
பெண்கள் முகத்தை மூடுவது சம்பந்தமாக இங்கு பதிவாகும் பின்னூட்டங்களை படித்து வந்தேன். உண்மையான அஹ்லுஸ் சுன்னாஹ் மார்க்க அறிஞர்களிடையே இது சம்பந்தமாக இரு வேறு கருத்துகள் இருப்பதைக் காணலாம். 1)பெண்கள் முகத்தை கண்டிப்பாக மூட வேண்டும் (சேஹ் முஹம்மத் இப்னு சாலிஹ் அல் உஸைமின் போன்றோரின் கருத்து)
2)பெண்கள் முகத்தை மூட வேண்டியதில்லை (நம் காலத்தில் வாழ்ந்த பிரபல இமாம் ஹதீஸ் கலை மேதை முஹம்மத் நாசிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்து). எனினும் இந்த இரண்டாவது கருத்தைக் கொண்ட அறிஞர்களும் கூட முகத்தை மூடுவதை தவறு என்றோ, வெறுக்கத்தக்கது என்றோ சொல்லவில்லை. மாறாக இமாம் அல்பானி அவர்களின் குடும்ப பெண்கள் முகத்தை மூடும் வழக்கமுடையோராகவே இருந்தனர்.
எனினும் தாங்கள் கூறும் இந்த மூன்றாவது கருத்தானது (முகத்தை மூடுவது வெறுக்கத்தக்கது) என்பது 1400 வருட இஸ்லாமிய உலகில் நான் அறிந்த வரை யாரலும் சொல்லப்படவில்லை என்பது மட்டுமல்ல இது மேற்கத்திய கலாச்சாரத்தினால் உந்த்தப்பட்டவர்கள் மட்டுமே சொல்லி வந்த கருத்து என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
தாங்களே பித்அத் என்று ஒப்புக்கொண்ட ‘திடல் தொழுகையில் திரை இடுதலை’ செய்த நீங்கள், மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட(முகத்தை மூடுவது அனுமதிக்கப்பட்டது தான் என நீங்கள் ஒப்புக்கொள்கீறீர்கள்) முகத்தை மூடும் வழக்கத்தை கடுமையாக எதிர்ப்பது வினோதமே.
அல்லாஹ் ஹலாலாக்கிய ஒரு விஷயத்தை(முகத்தை மூடுதல்) 1400 வருடங்களுக்குப் பிறகு உங்கள் அறிவிற்கு சரியெனப் படும் காரணங்களைக்(ஓடிப்போகும் பெண்கள், அந்நிய ஆடவரோடு உல்லாசமாக இருக்கும் பெண்கள்) கூறி ஹராமாக்கவோ, வெறுக்கப்பட்ட்தாக்கவோ (மக்ரூஹ்) செய்யும் அதிகாரம் உங்களுக்கில்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
மாஷா அல்லாஹ்...
இறுதியாக ஒத்துகொண்டுவிட்டிர்கள், பெண்கள் முகத்தை மூடினாலும் மூடாவிட்டாலும் மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றது என்று.
//மேலும் உண்மையான அஹ்லுஸ் சுன்னாஹ்வின் மார்க்க அறிஞர்களிடையே இது சம்பந்தமாக இரு வேறு கருத்துகள் இருப்பதைக் காணலாம். 1)பெண்கள் முகத்தை கண்டிப்பாக மூட வேண்டும் (சேஹ் முஹம்மத் இப்னு சாலிஹ் அல் உஸைமின் போன்றோரின் கருத்து)
2)பெண்கள் முகத்தை மூட வேண்டியதில்லை (நம் காலத்தில் வாழ்ந்த பிரபல இமாம் ஹதீஸ் கலை மேதை முஹம்மத் நாசிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்து). எனினும் இந்த இரண்டாவது கருத்தைக் கொண்ட அறிஞர்களும் கூட முகத்தை மூடுவதை தவறு என்றோ, வெறுக்கத்தக்கது என்றோ சொல்லவில்லை. மாறாக இமாம் அல்பானி அவர்களின் குடும்ப பெண்கள் முகத்தை மூடும் வழக்கமுடையோராகவே இருந்தனர்.//
இப்படி உலாமவுசுன்னாவிற்க்கு மத்தியில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்களுடைய அகீதா ஒன்றாக இருந்தது.
ஆனால் இங்கு பீஜே மற்றும் அவரை பின்பற்றும் மொவ்லவிகளும் ஒரு கருத்தில் இருக்கின்றிகள். அதற்க்கு மாற்றமாக மெவ்லவி ஹைதர் அலி அவர்கள் மாற்று கருத்து இருக்கின்றார்.
இதற்க்காக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இவருக்கு விவாத அழைப்பு விடுக்கின்றீர்கள்.
ஆனால் சிந்தித்து பாருங்கள் மார்க்கத்தில் ஒரு விசியத்தில் கருத்து வேறுபாடு வந்ந்தால் (உலமாக்களின் இஜிதிகாத்தின் அடிப்படையில்) அதற்க்காக விவாதம் செய்வது அஹ்லுஸ்ஸுன்னாவின் வழிமுறை அல்ல....
அல்லாஹ் அஃலம்...
சகோதரர் அஹமத் ஃபிர்தவ்ஸ் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
//பெண்கள் முகத்தை மூடுவது சம்பந்தமாக இங்கு பதிவாகும் பின்னூட்டங்களை படித்து வந்தேன். உண்மையான அஹ்லுஸ் சுன்னாஹ் மார்க்க அறிஞர்களிடையே இது சம்பந்தமாக இரு வேறு கருத்துகள் இருப்பதைக் காணலாம். 1)பெண்கள் முகத்தை கண்டிப்பாக மூட வேண்டும் (சேஹ் முஹம்மத் இப்னு சாலிஹ் அல் உஸைமின் போன்றோரின் கருத்து)//
பல நேரங்களில் நமது பக்தி நமது கண்னை மறைக்கும். குர்ஆனிலோஅல்லது ஹதீலோ பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற எந்த விதமான கட்டளையும் இல்லை. அப்படியிருக்க, பெண்கள் முகத்தை கண்டிப்பாக மறைக்க வேண்டும் என்று ஃபத்வா கொடுப்பது சரியா?
பிஜே எதை செய்தாலும் அதை பிரித்து மேய்யும் நீங்கள், மார்க்க கட்டளைக்கு முரணாக ஃபத்வா வழங்கிய இவர்களை என்றாவது பிரித்து மேய்ந்தது உண்டா?
நபி (ஸல்) அவர்கள் சபைகளில் பெண்கள் தங்களின் முகங்களை மறைக்காமல் வந்து இருக்கிறார்கள் என்பதற்கு இரு ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்து காட்டியிருக்கிறோம். அந்த ஹதீஸ்களை வைத்து எது சரி? எது தவறு? என்று முடிவு செய்துயிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அந்த அறிஞர் அப்படி சொல்லி இருக்கிறார்! இந்த அறிஞர் இப்படி சொல்லியிருக்கிறார்!! பிஜே இப்படி சொல்லுகிறார்!!! என்று சொல்லுவதன் மூலம் எதை சொல்ல வருகிறீர்கள்? ஹதீஸ்களை விட அறிஞர்களின் ஆய்வின் முடிவு மேலானாதா? சற்று சிந்தியுங்கள் சகோதரா!
ரசூலுல்லாஹ் காலத்தில் பெருநாள் தொழுகையில் திரை போடப்பட்டது இல்லை. நீங்கள் எப்படி போடலாம் என்று வினவும் நீங்கள்,பெண்களுக்கான பெருநாள் தொழுகையில் இத்தனை ஆண்டுகாலமாக பாராமுகமாக இருந்தது ஏன் ?
நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் அன்றைய சமுதாயத்திற்கு மத்தியில் பெண்கள் தங்களின் முகத்தை மறைக்காமல் வந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் காட்டிய பின்பும், பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்பது சுன்னாவா? அல்லது பித்அத்தா?
//2)பெண்கள் முகத்தை மூட வேண்டியதில்லை (நம் காலத்தில் வாழ்ந்த பிரபல இமாம் ஹதீஸ் கலை மேதை முஹம்மத் நாசிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்து). எனினும் இந்த இரண்டாவது கருத்தைக் கொண்ட அறிஞர்களும் கூட முகத்தை மூடுவதை தவறு என்றோ, வெறுக்கத்தக்கது என்றோ சொல்லவில்லை. மாறாக இமாம் அல்பானி அவர்களின் குடும்ப பெண்கள் முகத்தை மூடும் வழக்கமுடையோராகவே இருந்தனர்.//
அல்பானி அவர்களின் பெண்கள் முகத்தை மறைக்க தேவையில்லை என்பது குர்ஆன் ஹதீஸுக்கு உள்பட்டது. நாங்களும் முகத்தை மறைத்து கொண்டு வந்தால், அது தவறு என்று சொல்லவில்லை. ஆனால், முகத்தை மறைப்பது மார்க்கம் காட்டித்தராத, அதே நேரத்தில் தடுக்கவும் படாத ஒரு காரியம். மார்க்கம் கட்டளையிடாத, தடுக்கவும் செய்யாத ஒரு செயலை, அதனால், எற்படும் அதி பயங்கரமான் விளைவுகளை வைத்து, அதை தவிர்க்க வேண்டும் என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதா? குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரம் தரவும்.
அல்பானி அவர்களின் குடும்ப பெண்கள் முகத்தை மறைத்தால், அது மார்க்கமாகுமா?
//எனினும் தாங்கள் கூறும் இந்த மூன்றாவது கருத்தானது (முகத்தை மூடுவது வெறுக்கத்தக்கது) என்பது 1400 வருட இஸ்லாமிய உலகில் நான் அறிந்த வரை யாரலும் சொல்லப்படவில்லை என்பது மட்டுமல்ல இது மேற்கத்திய கலாச்சாரத்தினால் உந்த்தப்பட்டவர்கள் மட்டுமே சொல்லி வந்த கருத்து என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.//
முகத்தை மறைக்க தேவையில்லை என்பதற்கு ஆதாரமாக காட்டிய ஹதீஸ் மேற்கத்தியவர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.
1400 வருடங்களாக வாழ்ந்த அனைத்து அறிஞர்களின் ஆய்வுகளை அலசி விட்டீர்கள் போலும். 1400 வருடங்களில் வாழ்ந்த அறிஞர்களை விடுங்க, குர்ஆன் ஹதீஸ் தெளிவாக முகத்தை முடுவது தேவையில்லை என்று சொல்லி இருக்கும் போது, நீங்கள் ஆய்வு செய்த 1400 வருட அறிஞர்கள் என்ன சொல்லியிருந்தாலும் என்ன? மேற்காத்திய கலாச்சாரத்தால் உந்தப்பட்டவர்கள் ஃபர்தாவே போடாதீர்கள் என்று தான் சொல்லி கேள்விப்பட்டுயிருக்கிறோம்.
ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு அழகான பெண்னை பார்த்த போது, நபி (ஸல்) அவர்கள் அந்த பெண்மணிடம் முகத்தை மறைத்து கொள்ளுங்கள் என்று சொன்னார்களா? இல்லையே! நபி (ஸல்) இது போன்ற ஒரு சம்பவம் நடந்த போது கூட, பெண்ணின் முகத்தை மறைக்க வேண்டும் என்று கட்டளையிடாத போது, அதை மார்க்கமாக திணிக்க நீங்கள் யார்?
தொடரும்.....
சகோதரர் ஃபிர்தவ்ஸ் அவர்களுக்கான பதிலின் தொடர்ச்சி.....
//தாங்களே பித்அத் என்று ஒப்புக்கொண்ட ‘திடல் தொழுகையில் திரை இடுதலை’ செய்த நீங்கள், மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட(முகத்தை மூடுவது அனுமதிக்கப்பட்டது தான் என நீங்கள் ஒப்புக்கொள்கீறீர்கள்) முகத்தை மூடும் வழக்கத்தை கடுமையாக எதிர்ப்பது வினோதமே. //
உங்களின் நோக்கம் தவறை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும் என்பதல்ல என்று தெளிவாக புரிகிறது. தொழுகையில் திரையிடுவது பற்றி விளக்கமாக சொல்லிவிட்டோம். எங்களின் தவறை திருத்திக்கொள்வோம் என்றும் சொல்லிவிட்டோம். இதை எங்களுக்கு உபதேசம் செய்யும் நீங்கள், நபி (ஸல்) அவர்கள் பெண்களின் முகத்தை மறைக்க எந்தவிதமான கட்டளையும் இடாத போது, பெண்களின் முகத்தை மறைத்தே தீருவேன் என்று அடம்பிடிப்பது சுன்னத்தா? பித்அத்தா? மக்ருகா?
//அல்லாஹ் ஹலாலாக்கிய ஒரு விஷயத்தை(முகத்தை மூடுதல்) 1400 வருடங்களுக்குப் பிறகு உங்கள் அறிவிற்கு சரியெனப் படும் காரணங்களைக்(ஓடிப்போகும் பெண்கள், அந்நிய ஆடவரோடு உல்லாசமாக இருக்கும் பெண்கள்) கூறி ஹராமாக்கவோ, வெறுக்கப்பட்ட்தாக்கவோ (மக்ரூஹ்) செய்யும் அதிகாரம் உங்களுக்கில்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.//
முகத்தை மறைப்பது மார்க்கத்தில் தடுக்கபடவுமில்லை, வலியுறுத்தப்படவுமில்லை. எனவே, அனுமதிக்கப்பட்ட ஒரு செயலை செய்யும் போது, அதனால் பல தவறுகள் நடக்கிறது என்றால், அதை செய்யாதீர்கள் என்று சொன்னால் எவ்வாறு தவறு?
இதில் கேள்வி கேட்கும் உங்களிடம் ஒரு கேள்வி. மார்க்கம் தடுத்த சுயஇன்பத்தை, ஹலாலாக ஆக்கிய உங்களின் அறிஞரின் நிலை என்ன?
உங்களுக்கு குர்ஆன் ஹதீசை விட எத்தனை அறிஞர்கள் இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள் என்ற ஜனநாயக கொள்கையே ஆதாரம் என்பதை தெளிவாக நிரூபிக்கிறீர்கள்.
உங்களின் பதிலை எதிர்பார்க்கிறோம்.
வஸ்ஸலாம்.
சகோதரர் யூசுஃப் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
//மாஷா அல்லாஹ்...
இறுதியாக ஒத்துகொண்டுவிட்டிர்கள், பெண்கள் முகத்தை மூடினாலும் மூடாவிட்டாலும் மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றது என்று.//
நாங்கள் ஆரம்பம் முதலே சொல்லிவரும் ஒரு விஷயத்தை, எதே நீங்கள் ஆதாரங்களை அள்ளிப்போட்டு எங்களை மடக்கி, எங்கள் வாயால் முகத்தை மறைத்தால் தப்பு இல்லை என்று சொல்லவைத்துவிட்டதை போல் பெருமை கொள்ளுகிறீர்கள்.
////மேலும் உண்மையான அஹ்லுஸ் சுன்னாஹ்வின் மார்க்க அறிஞர்களிடையே இது சம்பந்தமாக இரு வேறு கருத்துகள் இருப்பதைக் காணலாம். 1)பெண்கள் முகத்தை கண்டிப்பாக மூட வேண்டும் (சேஹ் முஹம்மத் இப்னு சாலிஹ் அல் உஸைமின் போன்றோரின் கருத்து)
2)பெண்கள் முகத்தை மூட வேண்டியதில்லை (நம் காலத்தில் வாழ்ந்த பிரபல இமாம் ஹதீஸ் கலை மேதை முஹம்மத் நாசிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்து). எனினும் இந்த இரண்டாவது கருத்தைக் கொண்ட அறிஞர்களும் கூட முகத்தை மூடுவதை தவறு என்றோ, வெறுக்கத்தக்கது என்றோ சொல்லவில்லை. மாறாக இமாம் அல்பானி அவர்களின் குடும்ப பெண்கள் முகத்தை மூடும் வழக்கமுடையோராகவே இருந்தனர்.//
நபி (ஸல்) அவர்கள் பெண்களை முகத்தை மறைக்க எந்த கட்டளையும் இடவில்லை. மேலும், நபி (ஸல்) அவர்கள் சபைகளில் பெண்கள் முகத்தை மறைக்காமல் வந்து இருப்பதற்கான ஆதாரத்தையும் எடுத்துக்காட்டியுள்ளேம். அப்படியிருக்க, பெண்கள் கண்டிப்பாக முகத்தை மறைக்க வேண்டும் என்று ஃபத்வா வழங்கிய உத்தைமீன் போன்றவர்களை கண்டு நீங்கள் ஏன் கொதித்து எழவில்லை? உத்தைமீன் அவர்களுக்கு தனியாக முகத்தை கண்டிப்பாக மூட வேண்டும் என்று தனியாக வஹி வந்தது என்று சொல்லுகிறீர்களா?
அந்த அறிஞர் அப்படி சொன்னார், இந்த அறிஞர் இப்படி சொன்னார் என்று சொல்லும் நீங்கள், நபி (ஸல்) அவர்கள் இது பற்றி என்ன சொன்னார்கள் என்று சிந்திப்பது இல்லை. தனிப்பட்ட எந்த அறிஞரின் மீது பக்தி ஏறினால், இப்படி தான் நடக்கும். ஹதீஸ்கள் எல்லாம் உங்களுக்கு பொருட்டல்ல என்பதை அல்லாஹ் உங்கள் வாயாலேயே சொல்ல வைக்கிறான்.
எந்த அறிஞரும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அல்பானி உத்தைமீன் போன்ற அறிஞர்களை நாங்களும் மதிக்கிறோம். ஆனால், அவர்கள் மார்க்கத்திற்கு முரணாக அவர்களின் ஆய்வு இருந்தால், அந்த ஆய்வை நாங்கள் தூக்கி எறிந்துவிடுவோம்.
முகத்தை கண்டிப்பாக மறைக்க வேண்டும் என்ற உத்தைமீன் அவர்களின் கருத்தும், முகத்தை மறைக்க தேவையில்லை என்ற அல்பானி அவர்களின் கருத்தும் நேருக்கு நேர் முரணானது. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தால் அல்பானி அவர்களின் கருத்து தான் சரி. அறிஞர்களின் பக்தி உங்களின் கண்களை மறைப்பதால், உத்தைமீன் அவர்களின் மார்க்க முரணான கருத்து உங்களுக்கு சரியாகப்படுகிறது. ஹதீஸ்கள் எப்படி இருந்தாலும் எனக்கென்ன, உத்தைமீன் அவர்களின் கருத்து மேல் தான் என்று வாதாடுகிறீர்கள்.
பள்ளிகளிலும் மைதானங்களிலும் நபி (ஸல்) பெண்கள் பகுதிக்கு திரையிடவில்லை, நீங்கள் எப்படி திரையிடலாம் என்று பாய்ந்த நீங்கள், நபி (ஸல்) அவர்கள் பெண்களின் முகத்தை மறைக்க வேண்டும் என்ற எந்த கட்டளையும் இடாத போது, பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் கட்டளை போட நீங்கள் யார்? உங்களின் இரட்டை வேடம் இங்கு வெளிப்படுகிறது.
//இப்படி உலாமவுசுன்னாவிற்க்கு மத்தியில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்களுடைய அகீதா ஒன்றாக இருந்தது.//
கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் என்று சொல்லும் ஜமாஅத்தே இஸ்லாமி கொள்கைக்கு தாவிவிட்டீர்கள் போலும். அகீதாவை மட்டும் ஒன்றாக வைத்துக்கொண்டு, மார்க்கம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் சொல்லாலாமா? என்ன தத்துவம் இது? சரி, உங்களின் அகீதா தான் என்ன? உங்களின் அகீதாவை சொன்னால் தான் உங்களின் வழிகேட்டை உடைத்து சொல்ல வசதியாக இருக்கும்.
தொடரும்.....
யுசுஃப் அவர்களுக்கான பதிலின் தொடர்ச்சி,
//ஆனால் இங்கு பீஜே மற்றும் அவரை பின்பற்றும் மொவ்லவிகளும் ஒரு கருத்தில் இருக்கின்றிகள். அதற்க்கு மாற்றமாக மெவ்லவி ஹைதர் அலி அவர்கள் மாற்று கருத்து இருக்கின்றார்.//
இங்கு பிஜே எதிர்க்க வேண்டும் என்ற உங்களின் வெறி எப்படியெல்லாம் உங்களை வழிகேட்டின் பக்கம் தள்ளியிருக்கிறது. பன்றியை மஹராக கொடுக்கலாம் என்று ஹைதர் அலி தூக்கிப்பிடிக்கும் மத்ஹபு நூற்களில் உள்ளது. உங்கள் மத்ஹபில் இந்த அற்புத சட்டம் உண்டா?
இங்கு வழிகேடர்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்க்கிறான். குர்ஆன் ஹதீஸ பெரிதாக உங்களுக்கு தெரிந்தால், ஹைதர் அலி எப்படி பெண்கள் கண்டிப்பாக முகத்தை மறைக்க வேண்டும் என்று சொல்லாலாம் என்று பாய்ந்து இருப்பீர்கள். இனம் இனத்தோடு சேர்வதை யாராலும் தடுக்க முடியாது.
ஒரு வேளை பிஜே ஹைதர் அலி தூக்கி பிடிக்கும் மத்ஹப் கொள்கையில் இருந்து கொண்டு (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்), பெண்கள் முகத்தை மறைப்பதை தவர்ப்பது நல்லது என்று சொல்லியிருந்தால் நீங்கள் எதிர்த்து இருக்க மாட்டீர்கள் (இருவரின் அகீதாவும் ஒன்றாக இருக்கும் அல்லவா!, உங்களின் அகீதாவையும் சேர்த்து).
//இதற்க்காக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இவருக்கு விவாத அழைப்பு விடுக்கின்றீர்கள்.//
இந்த குர்ஆன் வசனம் அஹ்லுச் சுன்னாவிற்கு உண்டா? இல்லையா?
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன். (அல்குர்ஆன் 16:125)
//ஆனால் சிந்தித்து பாருங்கள் மார்க்கத்தில் ஒரு விசியத்தில் கருத்து வேறுபாடு வந்ந்தால் (உலமாக்களின் இஜிதிகாத்தின் அடிப்படையில்) அதற்க்காக விவாதம் செய்வது அஹ்லுஸ்ஸுன்னாவின் வழிமுறை அல்ல....
அல்லாஹ் தெளிவாக விவாதப்பதை அனுமதித்து இருக்க, இது அஹ்லுஸ்ஸுன்னாவிற்கு கூடாது, அப்துர் காதர் கூடாது என்று சொல்ல நீங்கள் யார்? சவூதி உலமாக்களால் வழிகேடர்கள் என்று சொல்லப்பட்ட தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த ஹைதர் அலி அவர்களையும் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தில் சேர்த்த உங்களின் தைரியத்தை பாராட்டுகிறோம். இதை சவூதியில் போய் சொல்லிவிடாதீர்கள், அப்பறம் அண்டர்கிரண்ட் சிறை தான்.
பிஜேவை எதிர்ப்பதற்காக எதையும் செய்வோம் என்ற உங்களின் கொள்கை அற்புதமானது.
வஸ்ஸலாம்.
அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ்...
பர்தாவைப் பற்றியும் அதன் அவசியம் மற்றும் அதன் அளவு பற்றியும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன.பெண்கள் அவர்களுடைய அழகை அந்நிய ஆண்களுக்கு மத்தியில் வெளிப்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.இந்நிலையில் முகத்தையும் முன்கைகளையும் மறைக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதில் உலமாக்களிடையே கருத்து வேறுபாடுள்ளது.
ஆனால் முகத்தையும் முன்கைகளையும் மறைக்கக்கூடாது என்று தமிழகத்தில் ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகின்றது. ஏனென்றால் இஸ்லாத்தில் இதற்கான ஆதாரமில்லை என்றும் இதன் மூலம் திருட்டுஇவிபச்சாரம்இநடிகைகள் தவறாக பயன்படுத்துதல்இதவறு செய்வதற்கு வாய்ப்பு தருகின்றது போன்ற கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.ஆனால் முகத்தையும் முன்கைகளையும் மறைக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் இருக்கின்றது.
அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா கூறுகின்றான்
நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால்இ திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும் 33:53
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும்இ உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும்இ அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க அன்புடையவன். 33:59
இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்..(வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும்இ தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்.24:31
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்.33:33
தொடரும்.....
நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் கூறுகின்றார்கள் இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!'' என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஃஹாரி-1838
மேற்கண்ட ஹதீஸில் பெண்கள் முகத்திரையையும் கையுறைகளையும் பயன்படுத்தியுள்ளார்கள்.அதனாலேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இஹ்ராமில் தடுத்துள்ளார்கள். ஆனால் இந்நேரங்களில் கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மனைவியர்களும் மற்ற முஸ்லிமான பெண்களும் தங்களுடைய முகங்களை மறைத்துள்ளனர். அதற்கான ஆதாரம்
ஆயிஷா ரதியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள்.
நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்க ளுடன் இஹ்ராமில் இருந்தபோதுஇவாகனக்காரர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.அவர்கள் எங்களுக்கு நேராக வருகின்ற போது பெண்களில் ஒவ்வொருவரும் தம் முகமூடிகளைத் தலைகளிலிருந்து முகங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்வார்கள்.அவர்கள் எங்களை கடந்து சென்று விட்டால் முகங்களை திறந்துக் கொள்வோம்.- அபூ தாவூத்
இவ்விஷயத்தில் புரிந்துக்கொள்வதற்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளன.மேலும் இவ்விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்இ எல்லா உலமாக்களும் குழப்பம் ஏற்படுமென்ற பயமிருக்கின்றபோது பெண் தனது முகத்தை மறைப்பது கட்டாயம் என்பதில் ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர்.சில நிர்பந்தமான நேரங்களில் முகத்தைத் திறந்து கொள்ளலாமென்ற விஷயத்திலும் ஒத்துப்போகின்றனர்.(உதாரணத்திற்காக சிகிச்சைக்காக மருத்துவரிடம் தனது முகத்தை திறந்துக் கொள்ளலாம்).
இந்தக் காலத்தில் குழப்பங்கள் அதிகமாக இருக்கின்றன.எங்கும் பரவலாக காணப்படுகின்றது.தீயவர்கள்தான் கடைவீதிகளிலும் மற்ற இடங்களிலும் திரிகின்றனர்.அழகை வெளிப்படுத்துவதில் முகமே முக்கிய பங்கு வகுக்கின்றது.இந்த சூழ்நிலையில் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியில் செல்வதே சிறந்ததாகும்.
குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய ஊர்களில் திருமணமாகாத பெண்கள் இப்பொழுது முகத்தை முழுவதுமாக மறைத்துக்கொண்டே வெளியில் வருகின்றனர்.ஆனால் முகத்தை மூடக்கூடாது என்ற கருத்தின் மூலமாக முஸ்லிம் பெண்களின் கண்ணியம் சீர்குழைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.ஆகையால் இதுபோன்ற விஷம கருத்துக்களுக்கு எதிராக நாம் நம்முடைய பெண்களை பாதுகாப்பது முக்கியமான கடமையாகும்.
இளம் பெண்கள் அந்நிய ஆண்களுக்கு மத்தியில் முகத்தை வெளியில் காட்டக்கூடாது என்பதற்கான ஆதாரம் கீழே உள்ள இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் (எந்த) சில சந்தர்பங்களில் இளம் பெண்கள் அந்நிய ஆண்களுக்கு மத்தியில் முகத்தை வெளிக்காட்டலாம் என்பதற்கான ஆதாரமும் கீழே உள்ள இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
http://www.islamqa.com/en/ref/2198
http://www.islamqa.com/en/ref/98382/niqab
http://www.islamqa.com/en/ref/11774
http://www.islamqa.com/en/ref/13646/niqaab
http://www.islamqa.com/en/ref/117894/niqaab
http://www.islamqa.com/en/ref/21536/niqaab
http://www.islamqa.com/en/ref/21134/niqaab
And ALLAAH KNOWS BEST
சகோதரர் யூசுஃப் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
பெண்கள் முகத்தை மறைக்க தேவையில்லை என்பதற்கு நாங்கள் எடுத்து வைத்த ஹதீஸ்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், முகத்தை மறைக்கு வேண்டும் என்பதற்கு சில குர்ஆன் வசனங்களை எடுத்துவைத்துள்ளீர்கள். நீங்கள் எடுத்துவைக்கும் வாதங்கள் தவறானவை என்பதை முன்னாரே விளக்கப்பட்டுள்ளது. அவற்றை கீழ்காணும் சுட்டியில் காண்க,
http://onlinepj.com/pengal/Pengal_mukam_mooduthal_vimarsanam/
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/pengal_mukathai_maraika_venduma/
கூற்று ஒன்று:
“முகத்தை மறைக்க்க்கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலை. முகம் வந்து கண்டிப்பா என்ன செய்யனும்? தெரியனும்.” –பீ.ஜே (பார்க்க: http://www.youtube.com/watch?v=qJLLPZJQIus நிமிடம்-0:32- 0:39)
Vs
கூற்று இரண்டு:
தவ்ஹீத் ஜமா அத் என்ன சொல்றோம்னா பெண்கள் முகத்தை மறைக்க வேண்டிய தேவை இல்லை…………விரும்பினா மறைச்சுக்கலாம்…மறைக்கவே கூடாதுன்னு நம்ம சொல்ல்ல--அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌஸி (பார்க்க: http://www.youtube.com/watch?v=GvmM-smb2cs&feature=player_embedded# (நிமிடம்-1: 30- 1:52)
Vs
கூற்று மூன்று:
“அஷ்ரப்தீன் அவர்களின் கருத்து, பிஜேவின் கருத்திற்கு முரணானது இல்லை. “ (பார்க்க: Adirai TNTJவின் மேலிலுருந்து 2வது பின்னூட்டம்)
@Adirai TNTJ இந்த மூன்று கூற்றுகளையும் எவ்வாறு விளங்கி கொள்வது. விளக்கம் தேவை
சகோதரர் ஃபிர்தவ்ஸ் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
//கூற்று ஒன்று:
“முகத்தை மறைக்க்க்கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலை. முகம் வந்து கண்டிப்பா என்ன செய்யனும்? தெரியனும்.” –பீ.ஜே (பார்க்க: http://www.youtube.com/watch?v=qJLLPZJQIus நிமிடம்-0:32- 0:39)
Vs
கூற்று இரண்டு:
தவ்ஹீத் ஜமா அத் என்ன சொல்றோம்னா பெண்கள் முகத்தை மறைக்க வேண்டிய தேவை இல்லை…………விரும்பினா மறைச்சுக்கலாம்…மறைக்கவே கூடாதுன்னு நம்ம சொல்ல்ல--அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌஸி (பார்க்க: http://www.youtube.com/watch?v=GvmM-smb2cs&feature=player_embedded# (நிமிடம்-1: 30- 1:52)
Vs
கூற்று மூன்று:
“அஷ்ரப்தீன் அவர்களின் கருத்து, பிஜேவின் கருத்திற்கு முரணானது இல்லை. “ (பார்க்க: Adirai TNTJவின் மேலிலுருந்து 2வது பின்னூட்டம்)
@Adirai TNTJ இந்த மூன்று கூற்றுகளையும் எவ்வாறு விளங்கி கொள்வது. விளக்கம் தேவை//
வார்த்தைக்கு வார்த்தை பிடிக்கிறோன் என்று தங்களின் அதி மேலாவித்தனத்தை காட்டுகிறீர்கள். ஒருவர் விஷயத்தை சொல்லவரும் போது, சொல்லவரும் சாரம்சத்தை விளங்க வேண்டும். உங்களிடம் சரக்கு இல்லை என்பதை தான் இதுவரை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். இதற்கு முன்னர் வந்த உங்களின் கருத்து நாங்கள் அளித்த பதிலுக்கு உங்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு விஷயத்தை பற்றி பேசும் போது, அதற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். எதிர்வாதங்களுக்கு பதில் சொல்ல உங்களுக்கு ஞானம் இல்லை என்பதை தெளிவாக நிரூபித்துவிட்டீர்கள். இப்படி வார்த்தைக்கு வார்த்தை முரண்பாட்டை கண்டுபிடித்தது போல் படம் காட்டினால், உங்களின் வாதம் மேலோங்கிவிட்டது என்று அர்த்தமா? பிஜேவின் கருத்தும் அஷ்ரப்தீன் கருத்தும் முரண் என்று உங்கள் நண்பர் யூசுஃப் சொன்னார். அதை நாங்கள் ஆதாரத்தோடு விளக்கிய பின், அவர் அதை பற்றி பேசாமல் மவுனமாகிவிட்டர். இப்போது அவர் சொன்ன அதே வாதத்தை நீங்கள் சொல்லுகிறீர்கள். பாவம், குழப்பம் அடைந்துள்ளீர்கள்.
விவாதம் செய்து உங்களின் முகத்திரையை கிழிப்போம் வாருங்கள் என்று பிஜே உங்களை அழைத்தால், விவாதம் கூடாது என்கிறீர்கள். ஆனால், எங்களின் இணையதளத்தில் வந்து விவாதம் செய்கிறிர்கள். இப்போது சொல்லுங்கள், விவாதம் கூடுமா? கூடாதா?
முகத்தை மறைப்பது சம்பந்தமாக நீங்கள் வைத்த வாதத்திற்கு நாங்கள் பதில் அளித்துவிட்டோம். திரும்பத் திரும்ப பதில் சொல்லப்ப்பட்ட கேள்வியை கேட்பதால், உங்களின் வாதம் சரி என்றாகிவிடாது. இங்கு நடந்த வாதப்பிரதிவாதங்களை வைத்து யார் சொல்லுவது சரி என்று வாசகர்கள் முடிவு செய்யட்டும். குர்ஆன் ஹதீசை எடுத்துக்காட்டும் போது அதை பற்றி வாய்திறக்காமல், அந்த அறிஞர் சொல்லவில்லையே! இந்த அறிஞர் சொல்லவில்லையே!! என்று உங்களின் வழிகேட்டு வாதத்தை வைக்கிறீர்கள்.
அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் நேரான வழியை காட்டுவானாக.
வஸ்ஸலாம்.
@Adirai TNTJ
//பிஜேவின் கருத்தும் அஷ்ரப்தீன் கருத்தும் முரண் என்று உங்கள் நண்பர் யூசுஃப் சொன்னார். அதை நாங்கள் ஆதாரத்தோடு விளக்கிய பின்....// தயவு செய்து எனக்காக ஒருமுறை மீண்டும் ஆதாரத்தோடு விளக்குங்களேன். அல்லது குறந்தபட்சம் உங்கள் ஆதாரப்பூர்வமான விளக்கம் மேலே எங்குள்ளது என்று குறிப்பிட்டுச் சொல்லுங்களேன்.Please...
(பி.கு: என்னுடைய சிற்றரிவுக்கு எட்டிய வரை, நான் தேடிய வரை உங்களுடைய அந்த ‘ஆதாரப்பூர்வ விளக்கம்’ எனக்கு கிட்டவில்லை. Once more pls)
//@Adirai TNTJ
//பிஜேவின் கருத்தும் அஷ்ரப்தீன் கருத்தும் முரண் என்று உங்கள் நண்பர் யூசுஃப் சொன்னார். அதை நாங்கள் ஆதாரத்தோடு விளக்கிய பின்....// தயவு செய்து எனக்காக ஒருமுறை மீண்டும் ஆதாரத்தோடு விளக்குங்களேன். அல்லது குறந்தபட்சம் உங்கள் ஆதாரப்பூர்வமான விளக்கம் மேலே எங்குள்ளது என்று குறிப்பிட்டுச் சொல்லுங்களேன்.Please...
(பி.கு: என்னுடைய சிற்றரிவுக்கு எட்டிய வரை, நான் தேடிய வரை உங்களுடைய அந்த ‘ஆதாரப்பூர்வ விளக்கம்’ எனக்கு கிட்டவில்லை. Once more pls)//
எங்களின் ஸலாத்திற்கு பதில் சொல்லததன் மூலம் எங்களை காஃபிர்கள் என்று சொல்லும் உங்களின் கூற்றை உண்மைப்படுத்திவிட்டீர்கள். எங்களை காஃபிர்கள் என்று நீங்கள் கருதும் போது, உங்களிடம் விவாதம் (விவாதம் ஹராம் சரியா) செய்வதை நாங்கள் விரும்பவில்லை.
உங்களின் சொத்தை வாதங்களுக்கு நாங்கள் தெளிவாக பதில் அளித்துள்ளாவர்கள் யார்? உளரித்தள்ளியுள்ளது யார்? என்பதை வாசகர்கள் விளங்கிக்கொள்ளட்டும்.
ஒரு விஷயத்தை விவாதிக்கும் போது, நீங்கள் வைக்கும் வாதங்களுக்கு பதில் நாங்கள் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் வைக்கும் வாதங்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். அது தான் சரியான நடைமுறை. நாங்கள் வைக்கும் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடிக்கொண்டு, கேட்ட கேள்வியையே ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி மாதிரி கேட்டால் உங்களின் வாதங்கள் மேலோங்கிவிடுமா? நாங்கள் இதுவரை உங்களை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களின் அறிவுக்கு (?) விளங்கும்படி நாங்கள் எற்கனவே விளக்கியதை மீண்டும் விளக்குகிறோம்.
குளிக்க போய் சொற்றை புசிய கதையாக ஆகிவிட்டது உங்களின் செயல். தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆய்வில் எதே முரண்பாட்டை கண்டுபிடித்ததை போல பாய்ந்து வந்து, உங்களின் பல முகங்களையும், அறிஞரைகளை நபியாக கருதும் உங்களின் அகீதாவையும் பகிரங்கப்படுத்த வேண்டிய ஒரு நிலையை உருவாக்கிவிட்டீர்கள். அல்ஹம்துலில்லாஹ்.
காஃபிர்களிம் விவாதம் செய்வதும் பேசுவதும் கூடாது என்பது உங்களின் கொள்கை என்று கேள்விப்பட்டுயிருக்கிறோம். உண்மையா?
வஸ்ஸலாம்.
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.