Monday, November 04, 2013

TNTJ அபுதாபி அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

TNTJ அபுதாபி அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம் 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..
அபுதாபி அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் 01.11.2013 வெள்ளிக் கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 6.45 மணியளவில் அபுதாபி சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது.  அதிரை அபுதாபி TNTJ கிளையின் கடந்த மஷூராவில் (ஆலோசனைக் கூட்டத்தின்) செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம்செய்தும், அதனையடுத்து புதிய முக்கிய தீர்மானங்களும், வருகின்ற 08-11-2013 அன்று நம்மூரில் நடக்கவிருக்கின்ற பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி விஷயமாகவும் பேசப்பட்டன.  கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல பல ஆலோசனைகளும் வழங்கினார்கள்.

ஜசாக்கல்லாஹ்

Sunday, November 03, 2013

மேலத்தெரு சானாவயலில் நடைபெற்ற பெண்கள் பயான்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் (2.11.2013) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மேலத்தெரு சானாவயல் பகுதியில் அமைந்துள்ள சகோதரர் SP பக்கீர் முஹம்மது அவர்களின் இல்லத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை தோறும் S P பக்கீர் முகம்மது இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெறும்.


இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 11) - பேராசை தவிர்த்தல்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 11) - பேராசை தவிர்த்தல்


இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்.

Saturday, November 02, 2013

தவ்ஹீத் பள்ளியில் (குறித்த நேரத்தில்) செல்லப்படும் பாங்கு குழப்பமா? (வீடியோ)

தவ்ஹீத் பள்ளியில் (குறித்த நேரத்தில்) செல்லப்படும் பாங்கு குழப்பமா? (வீடியோ)



அதிராம்பட்டிணத்திற்கான தொழுகை நேரம் குறித்து அறிய இங்கே சொடுக்கவும்.


Friday, November 01, 2013

இடஒதுக்கீடு அளித்தால் பாஜகவை ஆதரிக்கலாமா?

இடஒதுக்கீடு அளித்தால் பாஜகவை ஆதரிக்கலாமா? 

கேள்வி – பா.ஜ.க. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தால், மற்ற பிச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரமுகர் பேட்டியளித்ததும், நிர்வாகத்தின் சார்பில் உடனே அதற்கு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டதும், தவ்ஹீத் ஜமாஅத்தில் முரண்பாடுகள் உள்ளதைக் காட்டுவதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். இதுபோல் வேறு எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாவது கூறியிருந்தால் ட்ர்ஹவ்ஹீத் ஜமாஅத்தினர் அதை லேசில் விட்டுவிடுவார்களா என்றும் முகநூல்களில் கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் செய்யப்பட்டு வருகின்றன. ஏன் இந்த முரண்பாடு? உங்களுக்கு ஒரு நீதி? மற்றவர்களுக்கு வேறு நீதியா?

எம். அக்ரம் பாஷா, அபுதாபி

பதில் – உங்கள் கேள்வியில் மூன்று விஷயங்கள் உள்ளன.

முதலில் இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால் அவ்வாறு அளிக்கும் கட்சி முஸ்லிம்களுக்கு எவ்வளவு அநீதி இழைத்திருந்தாலும் அதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வாக்களிப்போம் என்ற தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பாஜகவுக்குப் பொருந்தாது. இது பாஜக அல்லாத கட்சிகளைக் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நிலைபாடாகும்.

பாஜவைப் பொருத்தவரை சமுதாய உணர்வுள்ள எந்த முஸ்லிமும் இந்த நிலைபாட்டை எடுக்க மாட்டான்.

இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு முக்கியம் என்றாலும், அவர்களின் உயிர், உடமை மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படுவது அதைவிட முக்கியமானதாகும். பாஜக இடஒதுக்கீடு அளித்தாலும் அதன் மூலம் பயன்பெற முஸ்லிம்கள் நிம்மதியாக வாழமுடியாத நிலையை ஏற்படுத்துவார்கள்.

பல்லாயிரம் முஸ்லிம்களைக் கொன்று குவித்தது, கொலையாளிகளைப் பாதுகாக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியது, பாபர் மஸ்ஜிதை இடித்தது மட்டுமன்றி இன்னும் மூவாயிரம் பள்ளிவாசல்களை இடிப்போம் என்று மிரட்டுவது, முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதப்பயிற்சி அளிப்பது, திட்டமிட்டு கலவரங்களை உருவாக்குவது, அப்பாவி முஸ்லிம்களை என்கவுண்டர் என்ற பெயரில் கொன்று குவிப்பது, முஸ்லிம்கள் தங்களது மத நம்பிக்கையின்படி நடத்தும் திருமணம் போன்ற விஷயங்களை ஒழிக்க பொது சிவில் சட்டம் என்று கூப்பாடு போடுவது

இப்படி ஏராளமான கொடுமைகளை பாஜகவினர் செய்துள்ளனர். முஸ்லிம்கள் வாழ்வதும் வழிபடுவதும் இவர்கள் ஆட்சியில் கேள்விக்குறியாகி விடும்.

எனவே இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் பா.ஜ.க.வை ஆதரிக்காது. முஸ்லிம்களும் ஆதரிக்க மாட்டார்கள். இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக இட ஒதுக்கீடு அளித்தால் எல்லா பிரச்சனைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜகவை ஆதரிப்போம் என்று மேலாண்மைக் குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் பேட்டியில் குறிப்பிட்டது ஜமஅத்துடன் முரண்பாடு கொண்டு சொன்னது அல்ல.

இடஒதுக்கீடுதான் முதன்மையானது. இடஒதுக்கீடு வழங்கினால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கடந்த காலங்களில் அவர்கள் செய்த அநீதிகளை மறந்துவிட்டு ஆதரிப்போம் என்று தவ்ஹீத் ஜமாஅத் பல சந்தர்ப்பங்களிலும் தீர்மானத்திலும் சொல்லியுள்ளது. இது பா.ஜ.க.வுக்குப் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ளாமல், செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அப்படிச் சொல்லி விட்டார்.

இது தவறு என்று நாம் சுட்டிக் காட்டுவதற்கு முன்பே செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது இப்படிச் சொல்லிவிட்டேன். இவ்வாறு நான் சொல்லியிருக்கக் கூடாது என்று அவரே நம்மிடம் தெரிவித்தார்.

தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் என்ன தெரிவித்ததோ, அதுதான் அல்தாஃபியின் நிலையுமாகும். நான் சொன்னது சரிதான், அதுதான் எனது கருத்து என்று அவர் வாதிட்டால்தான் அது முரண்பாடு என்று கூற முடியும்.

சில கேள்விகளை திடீரென்று எதிர்கொள்ளும் போது இதுபோன்ற நிலமை சில வேளைகளில் ஏற்பட்டு விடுவதுண்டு. ஜமாஅத்தில் இந்த விஷயத்தில் இரண்டு கருத்துக்கள் இல்லை. முரண்பாடுகளும் இல்லை என்பதை இரண்டாவதாகப் பதிவு செய்கிறோம்.

இது அவரது தனிப்பட்ட கருத்து என்று மற்ற அரசியல் கட்சிகள் கூறுவது போல் நாம் கூற மாட்டோம்.

ஜமாஅத்தின் நிலைபாட்டுக்கு எதிராக யாருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்க இந்த ஜமாஅத்தில் அனுமதி இல்லை. சொந்த விஷயங்களில் தான் தனிப்பட்ட கருத்து இருக்கலாம்.

இது என் தனிப்பட்ட கருத்து என்று இதன் பின்னர் அல்தாபி சொல்லி இருந்தால் தான் அது முரண்பாடு என்று சொல்ல முடியும். அப்படி சொல்லி இருந்தால் ஜமாஅத் தாட்சண்யமில்லாமல் நடவடிக்கை எடுக்கும். கவனமின்மையால் திடீரென கேள்வி கேட்ட போது தவறுதலாக இப்படிச் சொல்லி விட்டேன் என்பதுதான் அல்தாபியின் பதில் என்பதால் ஜமாஅத்தில் முரண்பாடு என்று அறிவுடையோர் கூறமாட்டார்கள்.

வேறு இயக்கத்தின் தலைவர்கள் இப்படிச் சொல்லியிருந்தால், தவ்ஹீத் ஜமாஅத் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுமா என்ற கேள்வியும் தவறாகும்.

ஒரு இயக்கத்தின் முக்கியப் பிரமுகர் ஒருவர் பாரதூரமான கருத்தைச் சொல்கிறார். அதை அவரும் மறுக்கவில்லை. அவரது இயக்கமும் மறுக்கவில்லை என்றால், அதைத்தான் தவ்ஹீத் ஜமாஅத் விமர்சித்துள்ளது.

அல்தாபி இவ்வாறு கருத்து சொன்ன பின் தவ்ஹீத் ஜமாஅத் அதை ஆதரித்து இருந்தால் அப்போது தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கலாம்.

அல்லது ஜமாஅத் இதுபற்றி வாய் திறக்காமல் மவுனம் சாதித்தால் அப்போதும் ஜமாஅத்தை விமர்சிக்கலாம்.

அல்லது அல்தாபியின் பேட்டி வெளியாகி முகநூல்களில் பலவித விமர்சனங்கள் வந்த போது தான் கூறியது சரிதான் என்று நியாயப்படுத்தி அறிக்கையோ மின்ன்ஞ்சலோ அல்தாபி அனுப்பி இருந்தால் அப்போதும் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கலாம்.

அல்தாஃபி அவர்கள் இப்படிக் கூறியவுடன் ரியாதில் பொதுச் செயலாளர் இருக்கும் நிலையில் அங்கிருந்தே அனைவரிடமும் ஆலோசனை பெற்று அங்கிருந்தே ஜமாஅத்தின் கருத்து என்ன என்று அறிக்கை வெளியிட்டார்.

ஜமாஅத்தின் கருத்து இதுதான் என்று அந்த அறிக்கை தெளிவாக அறிவித்தது. அல்தாபி சொன்னது ஜமாஅத்தின் கருத்து அல்ல என்ற விஷயமும் அதற்குள் அடங்கி இருந்தது.

அவ்வாறு அறிக்கை வெளியிட்ட பின்னர், ஜமாஅத்தின் கருத்து தவறு, நான் சொன்னதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று அல்தாஃபி சொல்லி இருந்தால் தான் ஏன் அவருக்கு ஒரு நிலை மற்றவருக்கு ஒருநிலையா என்று கேள்வி கேட்கமுடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடந்து கொண்டதுபோல் வேறு இயக்கம் நடந்து அதை தவ்ஹீத் ஜமாஅத் விமர்சித்துள்ளதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மா அவர்கள் அள்ளிக் கொடுத்ததைப் பார்த்து, தமிழகத்தில் தானே புயல் வராத பகுதிகளில் வசிக்கும் மக்கள் புயல் தமது பகுதிக்கும் வராதா என்று ஏங்குகின்றனர் என்று மமக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் சொன்னார்.

இது அவரது கருத்து. இதை மமக மற்றும் தமுமுக ஆதரிக்கவில்லை என்று அதன் நிர்வாகிகள் அறிக்கை விட்டிருப்பார்களானால் தவ்ஹீத் ஜமாஅத் அந்த இயக்கத்தினை இந்த விஷயத்தில் விமர்சனம் செய்திருக்காது.

அதுபோல் பேசிய சட்டமன்ற உறுப்பினரும் தான் அவ்வாறு பேசியிருக்கக்கூடாது என்று உடனே மறுத்து இருந்தால், அப்போதும் நாம் விமர்சித்து இருக்க மாட்டோம்.

(அனைத்து முஸ்லிம்களின் கடும் கண்டனத்துக்குப் பிறகு பல மாதங்கள் கழித்து ஒரு பொதுக்கூட்டத்தில் தான் கூறியது தவறு என்று மென்மையாக அவர் ஒப்புக் கொண்டார்.)

பெரும்பாலான முஸ்லிம் இயக்கங்களில் இதுதான் நடக்கிறது. அந்த இயக்கத்தின் முக்கியப் பிரமுகர்கள் சிலை திறந்தாலும், இறந்தவரின் படங்களுக்கு மூத்த தலைவர்கள் மலர் தூவினாலும், பா.ஜ.வு.டன் ஒரே மேடையில் தோன்றினாலும், அந்த இயக்கங்கள் அதை எதிர்க்க முடியாமல் மவுனம் காக்கின்றன.

பா.ஜ.க. தலைவருடன் போஸ் கொடுத்ததை எங்கள் இயக்கம் கண்டிக்கிறது என்று அந்த இயக்கங்களால் சொல்ல முடியவில்லை. சொன்னால் அந்த மூத்த தலைவர் மனஸ்தாபம் அடைவார் என்று மௌனம் சாதிக்கிறார்கள்.

ஏராளமான சம்பவங்கள் மூலம் தெரிந்து இதை தெரிந்து கொள்ளலாம்.

மூத்த தலைவர்களும் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய மனநிலையில் இல்லை. நிர்வாகிகளுக்கும் அதைத் தட்டிக் கேட்கும் துணிவு இல்லை.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை ஒரு தலைவர் இப்படிக் கூறினால், அது ஜமாஅத்தின் கருத்துக்கு எதிராக இருந்தால், வாய் மூடி இருக்காமல், கருத்து சொன்ன நபரைப் பார்க்காமல், கருத்தை மட்டும் பார்த்து உடனே மறுப்புச் சொல்கிறது.

அதுபோல் யாருடைய கருத்துக்கு எதிராக ஜமாஅத் கருத்துச் சொல்கிறதோ, அவரும் சரியானவராக இருக்கிறார். கவனக்குறைவாக நான் சொன்ன சொற்களால் ஜமாஅத்திற்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுவிட்டதே என்று சொல்லி அவரும் வருந்துகிறார்.

நான் சொன்ன கருத்துக்கு எதிராக உடனே எப்படி மறுப்பு வெளியிடலாம் என்று அவரும் நினைக்கவில்லை.

அவர் மேலாண்மைக்குழு உறுப்பினராக இருப்பதால் எப்படி எதிர்க்கருத்து சொல்வது என்று நிர்வாகமும் நினைக்கவில்லை.

இது ஆட்களைச் சார்ந்த இயக்கமல்ல. கொள்கை சார்ந்த இயக்கம். மார்க்க விஷயத்தில்கூட பெரிய பெரிய இமாம்கள் சொன்ன கருத்தாக இருந்தாலும், அது தவறு என்றால், அதை விட்டுவிட வேண்டும் என்ற சரியான, உறுதியான அடித்தளத்தில் இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த வித்தியாசத்தை விளங்கினார்கள் என்றால், இந்தப் பிரச்சனையில் தவ்ஹீத் ஜமாஅத் நடந்து கொண்டதை அவர்கள் பெருமிதத்துடன் பார்ப்பார்களே தவிர குறைகூற மாட்டார்கள்.

எத்தனையோ இயக்கங்களைப் பார்க்கிறோம். அதன் மாவட்ட நிர்வாகிகள் கட்டப்பஞ்சாயத்து செய்தாலோ, மோசடி செய்தாலோ, சமுதாய நலனுக்கு எதிராக நடந்தாலோ, அவர்களை எதிர்த்து கருத்துச் சொல்லவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ தலைமைக்குத் துணிவு இல்லை.

அந்த மாவட்டத்தில் அந்த நபரை நம்பித்தான் இயக்கம் உள்ளதால், நடவடிக்கை எடுத்தால், எல்லோரும் அவருடன் சென்று விடுவார்கள் என்று அஞ்சும் அளவிற்கு கொள்கையற்றவர்களாக உள்ளனர்.

ஆனால் அதிகச் செலவில் நடத்தப்பட்ட திருமணங்களில் கலந்துகொண்ட சின்ன விஷயத்துக்காக மாநில நிர்வாகிகள் மீதே நடவடிக்கை எடுக்கும் ஜமாஅத்தாக தவ்ஹீத் ஜமாஅத் உள்ளது.

இந்த ஜமாஅத்தில் இருக்கும் மக்கள் இதன் தெளிவான கொள்கைக்காகவே இருக்கிறார்கள்.

எனவேதான் தலைமையும் சரியாக உள்ளது. நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்களும் சரியாக உள்ளனர்.

நம்மை இந்த விஷயத்தில் விமர்சிப்பவர்கள் இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் மேலும் உயர்வாகத்தான் இந்த ஜமாஅத்தை மதிப்பார்கள்.

ஒரு பேச்சுக்காக நான் சொன்ன கருத்து தான் சரி என்று அல்தாபி வாதிட்டு இருந்தாலோ, அறிக்கை வெளியிட்டு இருந்தாலோ இந்த ஜமாஅத் இவர்களைப் போல் வாய்பொத்தி இருக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
 நன்றி உணர்வு


Wednesday, October 30, 2013

தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி (வீடியோ)

29.10.2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மார்க்க சம்மந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி  தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்று இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.


 
தவ்ஹீத் பள்ளியில் (குறித்தநேரத்தில்) செல்லப்படும் பாங்கு குழப்பமா?

   
00019 from Jahir on Vimeo.



 


  

Tuesday, October 29, 2013

மனித உயிர்களை நேசிப்போம் (வீடியோ )

மனித உயிர்களை நேசிப்போம்

ஹஜ் பெருநாள் உரை 2013

ஜிஹாத்


ஜிஹாத் -ஹஜ் பெருநாள் உரை 2013 from Adiraitntj on Vimeo.

Sunday, October 27, 2013

மேலத்தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான் !

நேற்று [ 26-10-2013 ] அஸர் தொழுகைக்குப்பின் நமதூர் மேலத்தெரு சானாவயல் பகுதியில் அமைந்துள்ள சகோதரர் SP பக்கீர் முஹம்மது அவர்களின் இல்லத்தில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் சகோதரர் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'கேள்வி இல்லாமல் மார்க்கம் இல்லை' என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



முஸ்லீம் பெண்களே உன்னில் இஸ்லாம் எங்கே? (வீடியோ)

முஸ்லீம் பெண்களே உன்னில் இஸ்லாம் எங்கே? (வீடியோ)


இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 10) - கிடைத்ததில் மனநிறைவு கொள்ளல்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 10) - கிடைத்ததில் மனநிறைவு கொள்ளல்


இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்.


Wednesday, October 23, 2013

தெரு வெறியை தூண்டிவிடும் போலி தவ்ஹீத்வாதிகள்

ஒரு காலத்தில் அதிராம்பட்டிணத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியிலேயே தெரு வெறியின் காரணமாக பல கலவரம் நடந்துள்ளது. தவ்ஹீத் புரட்சியினால் அதிரையில் நிலவிய தெரு வெறி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுஇ தெரு வெறியின் காரணமாக மோதியவர்களை ஒரே பள்ளியில் நிர்வாகிகளாக ஆகும் அளவுக்கு புரட்சி ஏற்பட்டுள்ளது.

தவ்ஹீத் போர்வையில் நாடகமாடிய சிலர் இன்று தெருவெறியை தூண்டிவிடும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு பக்கம் எல்லா முஹல்லாக்களையும் ஒன்றினைக்க போகிறாம் என்று நாடகம். மறுபுறம்இ நமது தெருவிற்கு தான் செய்ய வேண்டும் என்று வெறி ஏற்றி வருகிறார்கள். இவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்ள கீழ்காணும் வீடியோவை பாருங்கள்...

தெரு வெறியை தூண்டிவிடும் போலி தவ்ஹீத்வாதிகள் from Adiraitntj on Vimeo.


Tuesday, October 22, 2013

நபியை படைக்காவிட்டால் உலகமே இல்லையா?


தவ்ஹீத் போர்வையில் இருக்கும் சிலர் சமீபத்தில் நடத்திய மத நல்லிணக்க நிகழ்ச்சியில் 'நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் படைக்காவிட்டால் இந்த உலகையே படைத்து இருக்க மாட்டான் என்ற இட்டுக்கட்ட பட்ட செய்தியை ஹதீஸ் என்ற பெயரில் எடுத்துக் கூறினார்கள்'. இது தவறு என்று பலருக்கு தெரிந்து இருந்தும், இதை தவறு என்று சொல்லவில்லை. இது பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கீழ்காணும் விளக்கம் வெளியிடப்படுகிறது.

நபியை படைக்காவிட்டால் உலகமே இல்லையா?

இந்த நபியை படைக்காவிட்டால் உலகையே படைத்திருக்கமாட்டேன் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்வதாக பயான் கேட்டேன். இதற்கு ஆதாரம் உள்ளதா?

முஹம்மதே நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தை நான் படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி இப்னு அசாகீர் என்ற நூலில் இடம்பெற்றிருக்கின்றது. 

اللآلي المصنوعة - (1 / 249) 

وفضل شهر رمضان والشفاعة كلها لك حتى ظل عرشي في القيامة على رأسك ممدود وتاج الملك على رأسك معقود ولقد قرنت اسمك مع اسمي فلا أذكر في موضع حتى تذكر معي ولقد خلقت الدنيا وأهلها لأعرفهم كرامتك علي ومنزلتك عندي ولولاك ما خلقت الدنيا موضوع أبو السكين وإبراهيم ويحيى البصري ضعفاء متروكون وقال الفلاس يحيى كذاب يحدث بالموضوعات 

الموضوعات لابن الجوزي - (1 / 290) 

ويحيى البصري متروكان. قال أحمد بن حنبل: حرقنا حديث يحيى البصري. وقال الفلاس: كان كذابا يحدث أحاديث موضوعة. وقال الدارقطني: متروك. 

இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனமானவர்களும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்களான இப்ராஹீம் அபுஸ்ஸிக்கீன் மற்றும் யஹ்யா ஆகியோர் பலவீனமானவர்கள் என்று இமாம் தஹபீ இமாம் தாரகுத்னீ இமாம் இப்னுல் ஜவ்ஸீ மற்றும் இமாம் அஹ்மது ஆகியோர் குறைகூறியுள்ளனர். 

تلخيص كتاب الموضوعات للذهبي - (1 / 37) 

195-حديث محمد بن عيسى بن حبان المدائني ثنا محمد بن الصباح ثنا علي بن الحسن عن إبراهيم بن اليسع عن العباس الضرير عن الخليل بن مرة عن يحيى البصري عن زادان عن سلمان قال أتى أعرابي جاف بدوي فذكر خبراً طويلاً سمجاً وآخره يا محمد لولاك ما خلقت الدنيا 

قال ابن الجوزي موضوع بلا شك ويحيى البصري تالف كذاب والسند ظلمة 

இந்த செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் இதன் அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் பெரும் பொய்யர் என்றும் இமாம் இப்னுல் ஜவ்ஸீ தெரிவித்துள்ளார். மேலும் இதே கருத்தில் திர்மிதீ மற்றும் ஹாகிம் ஆகிய நூல்களிலும் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆதம் அலை அவர்கள் படைக்கப்பட்டவுடன் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் 'லாயிலாஹ இல்லல்லாஹூ' என்பதுடன் 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்றும் எழுதப்பட்டிருந்ததாம். ''இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்'' என்று ஆதம் (அலை) கேட்டர்களாம். அதற்கு இறைவன் ''அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்'' என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறிய போது சொர்க்கத்தில் பார்த்தது நினைவுக்கு வந்ததாம். ''இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக'' என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம். 

இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களிலும் பதிவு செய்யப்பட்டடுள்ளது. இச்செய்தி அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகிறது. இவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர். 

மேலும் இந்த செய்தியின் கருத்து குர்ஆனுடன் முரண்படுகிறது. அல்லாஹ் திருக்குர்ஆனில் இந்த உலகத்தை படைத்ததற்கான காரணத்தை பற்றி கூறும் போது அவனை வணங்குவதற்காகத் தான் இந்த உலகத்தை படைத்ததாக குறிப்பிடுகிறான். 

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِي(56)51 

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. 

அல்குர்ஆன் (51:56) 

இறைவன் தன்னை வணங்குவதற்காகத்தான் மனிதனையும், ஜின்களையும் படைத்திருப்பதாக கூறிக்காட்டும் போது, முஹம்மது நபி(ஸல்) அவர்களை படைக்காவிட்டால் இந்த உலகத்தையே படைத்திருக்கமாட்டேன் என்று கூறுவதாக சொல்லுவது இந்த வசனத்தோடு நேரடியாக மோதுகின்றது. எனவே இந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பது இதன் மூலம் மேலும் உறுதியாகிறது.

எல்லாரையும் மேடை ஏற்றுவது எப்படி தவறாகும்? என்று கேட்டவர்கள் இப்போதாவது அது தவறு என்று புரிந்து கொண்டால் போதுமானது. 

Monday, October 21, 2013

மூடநம்பிக்கைகளை ஒழிப்பதே முதல் பணி - இறுதிச்சடங்குகள் செய்யும் முஸ்லிம் பெண்



பாத்திமா தாகிரா... சென்னை மதுரவாயல் பகுதியில் வசிக்கிறார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புடன் இணைந்து கடந்த 15 வருடங்களாக ஆன்மிகப் பிரச்சாரம் செய்து வருகிறார். பலரது புருவங்களை உயர்த்தும் வகையில், இறந்தவர்களுக்கான இறுதி சடங்குகளைச் செய்து வருகிறார். அதன்மூலம் 'இஸ்லாம், பெண்களுக்கு எந்தச் சுதந்திரத்தையும் வழங்கவில்லை' எனும் தவறான கற்பிதங்களைக் கட்டுடைக்கிறார். 

"மனிதநேயத்துடன் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டும்’ என்ற நபிகளின் மொழிதான் நான் இந்தப் பணியைச் செய்ய உந்துதலாக இருந்தது” என்று நிதானமாகத் தன் பார்வையை முன்வைக்கிறார் ஃபாத்திமா. 

"சிறு வயதிலேயே அரபு மொழி கற்றுக்கொண்டேன். அதனால் இஸ்லாத்தின் வேத நூல்களை மூல மொழியிலேயே படிக்க முடிந்தது. அவற்றை ஆழ்ந்து கற்கும்போது மதத்தின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளைப் பற்றிய தெளிவும் கிடைத்தது.‘மரணித்த எந்த உயிரும் எவ்வகையிலும் (பேயாகவோ, ஆவியாகவோ) இந்த உலக வாழ்வைத் திரும்பப் பெற இயலாது’ என்று குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பலர் அதைப் புரிந்துகொள்ளாமல் பேய் என்றும் ஆவி என்றும் சொல்லி, உறவினர்கள் இறந்துவிட்டால்கூட அவர்களுக்கான இறுதிச் சடங்குகளைத் தாங்களே முன்வந்து நடத்தாமல் கூலிக்கு ஆட்களை அமர்த்தி சடங்குகளைச் செய்கிறார்கள். இது தவறு. 

இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கவே, பெண்களுக்கான இறுதிச் சடங்குகள் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினோம். முதலில் நான் கற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகள் செய்ய ஆரம்பித்தேன். கடந்த ஐந்து வருடங்களாக 'ஜனாசா' எனும் இறுதிச் சடங்கு செய்யும் முறையை பல பெண்களுக்குக் கற்றுக்கொடுக்கத் துவங்கினேன். 

தாய் இறந்துவிட்டால் மகள்கூட இறுதிச் சடங்கு செய்ய முன்வரமாட்டார். அப்படி இருந்த பலர் இன்று இறுதிச் சடங்குகள் செய்யப் பழகி இருக்கிறார்கள். இதுவரை சுமார் 5,000 பெண்களுக்கு மேல் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு, தங்கள் பகுதிகளில் இஸ்லாமியப் பெண்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்கள் முன்நின்று இறுதிச் சடங்குகளைச் செய்கிறார்கள். 

எங்களது இந்தப் பணியை எங்கள் சமூகத்தினரே சிலர் எதிர்க்கிறார்கள். காரணம், இறுதிச் சடங்கில் நடைபெறும் ஒவ்வொரு சடங்குமே இவர்களுக்கு வருமானம்தான். நாங்கள் இலவசமாக இறுதிச் சடங்கு நடத்துவதால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் தடைபடுகிறது. அதனால் எதிர்ப்புகள். ஆனால் எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து இதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு. 

பெண்களுக்கு ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களிடையே உள்ள பல தவறான கற்பிதங்களை, மூட நம்பிக்கைகளை ஒழிப்பதைத்தான் எங்களின் முதல் பணியாகக் கொண்டுள்ளோம். என்னுடைய இந்தப் பணிக்கு என் கணவர் ஆதரவாக இருக்கிறார். 

இறுதிச் சடங்கு செய்வதால் எந்தப் பிரதிபலனையும் நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. அதில் கிடைக்கும் பூரண மன நிறைவு போதுமே என்று புன்னகைக்கிறார் ஃபாத்திமா. 

நன்றி தி இந்து


 

C.M.P லைனில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

அதிராம்பட்டிணம் C.M.P லைனில் சார்ந்த சகோதரர் Y அன்சாரி அவர்களின் மகன் முஹம்மதின் திருமணம் 19.10.13 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மணமகனின் இல்லத்தில் நடைபெற்றது. திருமணத்தில் துவக்கமாக சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்கவேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அதனை தொடர்ந்து மணமகன் 38 கிராம் தங்கத்தை மஹராக கொடுத்து நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் எழிமையாக திருமணம் முடிந்தது மணமகன் சார்பாக வலிமாவாக டீ மற்றும் பிஸ்கட் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்









Sunday, October 20, 2013

ஆவணத்தில் கள்ள சுன்னத் வல் ஜமாஅத் ரவுடிகள் வெறியாட்டம்!


தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக போலீஸ் அனுமதியுடன் தெருமுனை பிரச்சாரம் 19.10.13 அன்று நடைபெற்றது. இதில் சகோதரர் முஜாதிர் உரை நிகழ்த்தினார் தெருமுனை பிரச்சாரத்தை முடித்துவிட்டு மாவட்ட நிர்வாகிகளும் உள்ளுர் மக்களும் திருப்பி கொண்டுயிருக்கையில் சுன்னத் ஜமாஅத்தை சார்ந்த 40க்கு அதிகமான ரவடிகள் உருட்டுக்கட்டை அறிவாளுடன் தவ்ஹீத் சகோதரர்களை வழிமறைத்து கட்டையாலும் அறிவாளிலும் கடுமையாக தாக்கினார் இதில் 5 சகோதரர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர் இதில் ஒருவர் தஞ்சை மருத்துவக்கல்லூரியிலும் மற்ற நான்கு பேர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.






Saturday, October 19, 2013

அதிரை தவ்ஹீத் ஜமாஅத் கூட்டுக் குர்பானி வினியோகம்

அதிரைக்கிளை சார்பாக பெருநாள் அதை தொடர்ந்து இரண்டு நாட்கள் குர்பாணி தோல்கள் வசூல் செய்யப்பட்டது ஆதே போல் கூட்டு குர்பாணி 17.10.13 மற்றும் 18.10.13 இரண்டு நாட்கள் தவ்ஹீத் பள்ளியில் வைத்து குர்பாணி பங்குகள் வினியோகம் செய்யப்பட்டது.







Wednesday, October 16, 2013

ஹஜ் பெருநாள் உரை (வீடியோ)

அசத்தியம் அழிந்துபோகும் சத்தியம் வெல்லும்



ஹஜ் பெருநாள் தொழுகை (புகைப்படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நபி வழி பெருநாள் திடல்தொழுகை இன்று (16.10.13) காலை 7.15 மணிக்கு E C R ரோட்டில் அமைந்துள்ள பெட்ரேல் பங்க் எதிரில் கிராணி மைதானத்தில் நடைபெற்றது இதில் மாநில செலயாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி சத்தியமே வெல்லும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் 1500க்கு அதிகமான மக்கள் கலந்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்














Monday, October 14, 2013

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் புதன்கிழமை (16.10.13)அன்று நபி வழி ஹஜ் பொருநாள் திடல் தொழுகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சென்ற நோன்பு பெருநாளில் நடைபெற்ற E C R ரோட்டில் அமைந்துள்ள பெட்ரேல் பங்க் எதிரில் கிராணி மைதானத்தில் காலை சரியாக 7.15 மணிக்கு நடைபெறும் பொருநாள் உரை சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள்

கூட்டு குர்பாணி இன்ஷா அல்லாஹ் வியாழக்கிழமை (17.10.13) தவ்ஹீத் பள்ளியில் கொடுக்கப்படும். 

Sunday, October 13, 2013

புகாரி சரீப் ஓதினால் பிளேக் நோய் வராதா ?

புகாரி சரீப் ஓதினால் ஓதினால் பிளேக் நோய் வராதா ?

புகாரி சரீப் ஓதினால் பிளேக் நோய் வராதா? from AdiraiTNTJ on Vimeo.

Saturday, October 12, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 11.10.13(வீடியோ) - புகாரி மஜ்லிஸ் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கப்சாக்களும் நாடகங்களும்!

புகாரி ஹதீஸை தொகுத்தவரின் உண்மையான பெயர் என்ன?
சஹாபாக்கள் காலத்தில் இருந்து யார் யார் எல்லாம் ஹதீஸ்களை தொகுத்தார்கள் அவர்களின் பெயர் என்ன? 

புகாரி மஜ்லிஸ் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கப்சாக்களும் நாடகங்களும்!

 

தொடர்புடையவை:

புகாரி மஜ்லிஸில் படிக்கப்படாத புகாரி ஹதீஸ்கள்!

இஸ்லாத்தில் இல்லாத பூமி பூஜை செய்யும் மௌலானா மௌலவி ஹஜ்ரத் கிப்லா முஹம்மது குட்டி (?)!




இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 9) - தேடிவரும் செல்வத்தைப் பெற்றுக் கொள்ளுதல்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 9) - தேடிவரும் செல்வத்தைப் பெற்றுக் கொள்ளுதல்


இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்.

Friday, October 11, 2013

TNTJ அதிரை கிளையின் சார்பாக கூட்டுக்குர்பானி திட்டம் !

TNTJ அதிரை கிளையின் சார்பாக எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு கூட்டுக்குர்பானி திட்டத்திற்கான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் தொகையை அதிரை வாழ் ஏழை எளியோரின் வாழ்வாதார உதவி மற்றும் மருத்துவ உதவிக்காக மாத்திரம் செலவிடப்படும் 
 

 

Thursday, October 10, 2013

நெசவுத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் 9.10.13 புதன்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு நெசவுத்தெரு கிராணி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் அன்வர் அலி ஜனவரி சிறை நிறைப்பும் போராட்டம் ஏன் என்ற தலைப்பிலும் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி இப்ராகீம் நபியின் ஏகத்துவ பிரச்சாரம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் இதில் 50க்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்