Tuesday, December 27, 2011

குர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன?


குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற ஒரு புது விதியை பிஜே உருவாக்கிவிட்டார் என்று ஹதீஸ் கலை என்றால் என்ன என்பதை அறியாத சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். 

குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை எவ்வாறு அணுகுவது என்பதை பிஜேவை விட தெளிவாக முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அந்த அறிஞர்களின் கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளது. 

பிஜே ஹதீஸ்களை மறுத்துவிட்டார் என்று விமர்சனம் செய்யும் யாரும் பிஜே மறுத்துள்ள ஹதீஸ்களை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது (தேவைப்பட்டால் ஹதீஸ்களின் பட்டியல் வெளியிடப்படும்). ஹதீஸ்களின் பட்டியலை வெளியிட்டால் பிஜே ஹதீஸ்களை மறுக்கிறார் என்று விமர்சனம் செய்பவர்களின் உண்மை முகம் (ஹதீஸ்களை மறுக்கும் முகம்) தெரியவரும்.

இதற்கு விமர்சனம் செய்யும் சகோதரர்கள் பதில் தர கடமைப்பட்டுள்ளார்கள்.


மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் புத்தகங்களை படிக்கவும்:

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டுமா?

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

குறிப்பு:

இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இவற்றுக்கு பதில் தர விமர்சனம் செய்பவர்களுக்கு முடியவில்லை. 



ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?

குர்ஆனைப் படிக்காத ஒருவர் குர்ஆனில் அல்ஹம்து சூரா இல்லை என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அல்ஹம்து சூரா குர்ஆனில் உள்ளது என்று சொல்பவர்களைப் பார்த்து யாரும் சொல்லாத கருத்தை இவர்கள் கூறுகிறார்கள் என்று பேசினால் எவ்வளவு அறியாமையோ அது போல குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்து ஹதீஸ் கலையில் சொல்லப்படவில்லை என்று யார் கூறுகிறார்களோ அவர்களும் அறியாமையில் தான் இருக்கிறார்கள். 

இவர்கள் ஹதீஸ் கலையை முறையாகப் படிக்காததால் ஹதீஸ் கலையில் இல்லை என்று ஆகிவிடுமா? ஒன்று இரண்டு என்றில்லாமல் அதிகமான ஹதீஸ் கலை நூற்களில் இவ்விதி இடம் பெற்றிருக்கிறது. ஹதீஸ் கலைக்கு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும் நூற்களில் இவ்விதி இடம் பெற்றும் கூட இவர்கள் ஏன் இப்படி செத்துப் போன வாதங்களை வைக்கிறார்கள் என்று புரியவில்லை. 

இமாம் ஷாஃபியின் கூற்று:

المسألة الخامسة خبر الواحد إذا تكاملت شروط صحته هل يجب عرضه على الكتاب قال الشافعي رضي الله عنه لا يجب لأنه لا تتكامل شروطه إلا وهو غير مخالف للكتاب

ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள் கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும் என்று கூறியுள்ளார்கள்.

நூல் : அல்மஹ்சூல் பாகம் : 4 பக்கம் : 438 

இமாம் குர்துபீயின் கூற்று:

والخبر إذا كان مخالفا لكتاب الله تعالى لا يجوز العمل به. 

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்தக் கூடாது.

நூல் : தஃப்சீருல் குர்துபீ பாகம் : 12 பக்கம் : 213

இமாம் ஜுர்ஜானியின் கூற்று:

الحديث الصحيح ما سلم لفظه من ركاكة ومعناه من مخالفة آية

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும். 

நூல் : அத்தஃரீஃபாத் பாகம் : 1 பக்கம் : 113

இமாம் சுயூத்தியின் கூற்று:

أن من جملة دلائل الوضع أن يكون مخالفا للعقل بحيث لا يقبل التأويل ويلتحق به ما يدفعه الحس والمشاهدة أو يكون منافيا لدلالة الكتاب القطعية

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும். 

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 276 

இமாம் இப்னுல் கய்யுமின் கூற்று:

ومنها مخالفة الحديث صريح القرآن

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவதாகும். 

நூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80

فصل مخالفة الحديث الموضوع لصريح القرآن ومنها مخالفة الحديث لصريح القرآن 

இட்டுக்கட்டப்பட்ட செய்தி குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது பற்றிய பகுதி. ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கான அடையாளங்களில் ஒன்று. 

நூல் : நக்துல் மன்கூல் பாகம் : 2 பக்கம் : 218 

இமாம் அபூபக்கர் சர்ஹஸீயின் கூற்று:

فأما الوجه الاول وهو ما إذا كان الحديث مخالفا لكتاب الله تعالى فإنه لا يكون مقبولا ولا حجة للعمل به

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படாது. செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது. 

நூல் : உசூலுஸ் ஸர்ஹசீ பாகம் : 1 பக்கம் : 364 

இந்த விதி பின்வரும் புத்தகங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

وَذَلِكَ أَرْبَعَةُ أَوْجُهٍ أَيْضًا مَا خَالَفَ كِتَابَ اللَّهِ

இதை (நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத ஹதீஸ் என்பதை அறிவதற்கு) நான்கு முறைகள் இருக்கிறது. முதலாவது அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்படும் செய்தியாகும். 

நூல் : கஷ்ஃபுல் அஸ்ரார் பாகம் : 4 பக்கம் : 492 

وَالْأَوَّلُ عَلَى أَرْبَعَةِ أَوْجُهٍ : إمَّا أَنْ يَكُونَ مُعَارِضًا لِلْكِتَابِ 

(செய்தியின் கருத்தை வைத்து நபி (ஸல்) அவர்களுக்குச் சம்பந்தமில்லாத செய்தி என்று முடிவு செய்யும்) முதல் வகையை நான்கு முறைகளில் (அறியலாம் அதில்). ஒன்று அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்பாடாக அமைவதாகும். 

நூல் : ஷரஹுத் தல்வீஹ் அலத் தவ்ளீஹ் பாகம் : 2 பக்கம் : 368

இமாம் இப்னு ஜவ்ஸியின் கூற்று:

وقال ابن الجوزي ما أحسن قول القائل إذا رأيت الحديث يباين المعقول أو يخالف المنقول أو يناقض الأصول فاعلم أنه موضوع

சிந்தனைக்கு மாற்றமாக அல்லது (ஆதாரப்பூர்வமாக) பதிவு செய்யப்பட்ட செய்திக்கு மாற்றமாக அல்லது அடிப்படைக்கே மாற்றமாக ஒரு ஹதீஸைக் கண்டால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று புரிந்து கொள் என்று சொன்னவர் எவ்வளவு அழகாகச் சொன்னார் என்று இப்னுல் ஜவ்ஸீ கூறினார்கள்.!

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 277 

وقال ابن الجوزي الحديث المنكر يقشعر له جلد الطالب للعلم وينفر منه قلبه في الغالب

எதைக் கண்டால் கற்கும் மாணவனின் தோல் சிலிர்த்து அவரது உள்ளம் பெரும்பாலும் அதை (ஏற்றுக்கொள்வதை) விட்டும் விரண்டோடுமோ அதுவே மறுக்கப்பட வேண்டிய செய்தி என்று இப்னுல் ஜவ்ஸீ கூறினார்கள்.!. 

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 275

அர்ரபீஉ பின் ஹய்ஸமின் கூற்று:

عن الربيع بن خثيم قال إن من الحديث حديثا له ضوء كضوء النهار نعرفه به وأن من الحديث حديثا له ظلمة كظلمة الليل نعرفه بها

சில ஹதீஸ்கள் இருக்கின்றன. பகலின் ஒளியைப் போல் அதற்கும் ஒளி உண்டு. அதன் மூலமே (அது சரியானது என்பதை) அறிந்து கொள்ளலாம். இன்னும் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இரவின் இருளைப் போல் அதற்கும் இருள் உண்டு. அதன் மூலமே (அது தவறானது என்பதை) அறிந்து கொள்ளலாம்.

நூல் : மஃரிஃபத்து உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 62

முஹம்மது பின் அப்தில்லாஹ்வின் கூற்று:

இந்த அறிஞரின் கூற்றை இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அல்இஹ்காம் என்ற தன்னுடைய நூலில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள். 

الإحكام لابن حزم ள جزء 2 - صفحة 209 ன 

 وقال محمد بن عبد الله بن مسرة الحديث ثلاثة أقسام فحديث موافق لما في القرآن فالأخذ به فرض وحديث زائد على ما في القرآن فهو مضاف إلى ما في القرآن والأخذ به فرض وحديث مخالف لما في القرآن فهو مطرح

முஹம்மது பின் அப்தில்லாஹ் என்பார் கூறுகிறார் : ஹதீஸ் மூன்று வகையாகும். 

1. குர்ஆனிற்கு ஒத்து அமைகின்ற ஹதீஸ் (முதலாவது வகையாகும்). இதை ஏற்றுக் கொள்வது கட்டாயம். 

2. குர்ஆனில் இருப்பதை விட கூடுதலான தகவலைத் தருகின்ற ஹதீஸ் (இரண்டாவது வகையாகும்). இதையும் குர்ஆனுடன் இணைத்து ஏற்றுக் கொள்வது கட்டாயம்.

3. குர்ஆனுடைய கருத்திற்கு முரணாக வரும் ஹதீஸ் (மூன்றாவது வகையாகும்). இது ஒதுக்கப்பட வேண்டியது. 

நூல் : அல்இஹ்காம் பாகம் : 2 பக்கம் : 209

விதியை செயல்படுத்திய மேதைகள்:

குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை ஏற்கலாகாது என்ற இந்த விதி அறிஞர்களின் ஏடுகளில் எழுத்தளவில் மட்டும் உள்ளதல்ல. அறிவிப்பாளர் தொடரை அலசிப் பார்த்து ஹதீஸின் தரத்தை முடிவு செய்யும் இந்த அறிவு ஜீவிகள் சரியான அறிவிப்பாளர் தொடரில் குர்ஆனிற்கு மாற்றமான கருத்துக்களைத் தருகின்ற ஹதீஸ்களை ஏற்க மறுத்துள்ளார்கள். 

புகாரி முஸ்லிம் போன்ற சிறந்த நூற்களில் ஹதீஸ் இடம் பெற்றிருந்தாலும் செய்தியில் குர்ஆனிற்கு மாற்றமான கருத்து வருகின்ற போது அறிவிப்பாளர் தொடரை இந்த நியாயவான்கள் பொருட்படுத்தவில்லை. இதற்காக நம்மை விமர்சிப்பவர்கள் இவர்களை வழிகேடர்கள் என்று கூற மாட்டார்கள். இந்த அறிஞர் கடைபிடித்த விதியை நாம் கடைப்பிடித்தால் நம்மை வழிகேடர்கள் என்று கூறுகிறார்கள். பின்வரும் செய்திகளைப் படிப்பவர்கள் யார் வழிகேடர்கள் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்வார்கள். 

இமாம் இஸ்மாயீலீ அணுகிய முறை:

சஹீஹுல் புகாரிக்கு முஸ்தக்ரஜ் என்று சொல்லப்படும் ஹதீஸ் தொகுப்பு நூலைத் தொகுத்தவர் இஸ்மாயீலீ என்ற அறிஞர் ஆவார். கல்வி மேதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விரிவுரை தரும் போது இந்த அறிஞரின் கூற்றைப் பல இடங்களில் பதிவு செய்கிறார். 

புகாரியில் விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்கு பதில் தரும் போது இந்த அறிஞரின் கூற்றை இப்னு ஹஜர் எடுத்துக் காட்டாமல் இருந்ததில்லை. இப்படிப்பட்ட அறிஞர் நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கும் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத புகாரியில் இடம்பெற்ற ஒரு ஹதீஸை எப்படி குறை காணுகிறார் என்று பாருங்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும், புழுதியும் படிந்திருக்கும். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நான் உங்களிடம் கூறவில்லையா? என்று அவர்களிடம் கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது? என்று கேட்பார்கள். 

அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம் நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் என்று பதிலளிப்பான். பிறகு இப்ராஹீமே உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3350)

இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கொடுக்கையில் பின்வருமாறு இஸ்மாயீலீ அவர்களின் கூற்றைப் பதிவு செய்கிறார்.

. وَقَدْ اِسْتَشْكَلَ الْإِسْمَاعِيلِيّ هَذَا الْحَدِيث مِنْ أَصْله وَطَعَنَ فِي صِحَّته فَقَالَ بَعْدَ أَنْ أَخْرَجَهُ : هَذَا خَبَر فِي صِحَّته نَظَر مِنْ جِهَة أَنَّ إِبْرَاهِيم عَلِمَ أَنَّ اللَّه لَا يُخْلِف الْمِيعَاد ; فَكَيْف يَجْعَل مَا صَارَ لِأَبِيهِ خِزْيًا مَعَ عِلْمه بِذَلِكَ ؟ وَقَالَ غَيْره : هَذَا الْحَدِيث مُخَالِف لِظَاهِرِ قَوْله تَعَالَى : ( وَمَا كَانَ اِسْتِغْفَار إِبْرَاهِيم لِأَبِيهِ إِلَّا عَنْ مَوْعِدَة وَعَدَهَا إِيَّاهُ , فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوّ لِلَّهِ تَبَرَّأَ مِنْهُ ) اِنْتَهَى

இஸ்மாயீலீ அவர்கள் இந்த ஹதீஸின் கருத்தில் சிக்கல் இருப்பதாகக் கருதி இதனுடைய நம்பகத் தன்மையில் குறை கூறியுள்ளார். அவர் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு (பின்வருமாறு) கூறுகிறார். அல்லாஹ் வாக்கு மீறமாட்டான் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் திட்டமாக அறிந்திருந்தார்கள். இதை அவர்கள் விளங்கியிருக்கும் போது தனது தந்தைக்கு ஏற்பட்டதைத் தனக்கு ஏற்பட்ட இழிவாக அவர்கள் எப்படிக் கருதியிருப்பார்கள்? என்று இஸ்மாயீலீ கூறியுள்ளார். இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர். சகிப்புத் தன்மை உள்ளவர் என்ற இந்த இறைவனுடைய வெளிப்படையான கூற்றிற்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்று இஸ்மாயீலீ அல்லாமல் மற்றவர்கள் விமர்சித்துள்ளார்கள். 

நூல் : ஃபத்ஹுல்பாரீ பாகம் : 8 பக்கம் : 500

மேற்கண்ட ஹதீஸை அறிஞர்கள் விமர்சிக்கும் போது அதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி அவர்கள் பேச்சையே எடுக்கவில்லை. மாறாக அல்லாஹ் வாக்கு மீறுவான் என்று இப்ராஹீம் நபி எண்ணுவது இறைத் தூதரின் தன்மைக்கு மாற்றமானது என்பதனால் இது ஆட்சேபனைக்குரியது என்கின்றனர். 

மேலும் தனது தந்தை அல்லாஹ்வின் எதிரி என்று தெளிவானவுடன் இப்ராஹீம் தன் தந்தையிடமிருந்து விலகிக் கொண்டார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸ் அவர்கள் விலகவில்லை. மறுமையிலும் தன் தந்தைக்காக வாதாடுவார்கள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. 

எனவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்ற அடிப்படையில் நின்று இந்த அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். சொல்லுகின்ற கருத்து நியாயமானதா என்று சிந்திக்காமல் எந்த இமாமாவது நீங்கள் கூறுவதைப் போன்று கூறியுள்ளாரா? என்று குருட்டுத்தனமாகக் கேட்பவர்கள் இந்த அறிஞர்களின் கூற்றுக்களை உற்று நோக்க வேண்டும்.

இமாம் மாலிக் மற்றும் குர்துபீயின் வழிமுறை:

கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின் போது வந்து அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வுடைய ஹஜ் என்னும் கடமை என் தந்தைக்கு விதியாகி விட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) 
நூல் : புகாரி (1854)

இந்த ஹதீஸை இமாம் மாலிக் அவர்கள் நிராகரித்ததை குர்துபீ அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.

وقال القرطبي رأى مالك أن ظاهر حديث الخثعمية مخالف لظاهر القرآن فرجح ظاهر القرآن ولا شك في ترجيحه من جهة تواتره 

குர்துபீ கூறுகிறார் : கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கு முரண்படுகிறது என்று மாலிக் அவர்கள் கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தைக் கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

நூல் : பத்ஹுல்பாரீ பாகம் : 4 பக்கம் : 70 

ஹஜ் செய்வதற்குச் சக்தி பெற்றவர்களுக்குத் தான் ஹஜ் கடமை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸில் வாகனத்தில் கூட உட்கார இயலாத வயதான தன் தந்தைக்கு ஹஜ் கடமையானதாக சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண்மணி கூறியுள்ளார். இதனால் இமாம் மாலிக் அவர்கள் இந்த ஹதீஸைப் பின்தள்ளிவிட்டு குர்ஆனுக்கு முன்னுரிமை தந்துள்ளார்கள்.

அப்படி முன்னுரிமை வழங்குவது முழுக்க முழுக்கச் சரிதான் என்று இமாம் குர்துபீ அவர்கள் ஒப்புதல் தருகிறார்கள். இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரின் மீது கூட குறை கூற முடியாது. அனைவரும் சிலாகித்துச் சொல்லப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறிப் பின்தள்ளுவதால் ஹதீஸின் மீது இந்த அறிஞர்களுக்கு அக்கரை இல்லை என்று பொருளா? 

இமாம் இப்னு தய்மியாவின் வழிமுறை:

இப்னு தய்மியா அவர்கள் அனைவராலும் போற்றப்படும் மிகச் சிறந்த அறிஞர். இந்த அறிஞர் குர்ஆனிற்கு முரண்பட்டால் ஹதீஸை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் நின்று நம்மையெல்லாம் மிஞ்சுகின்ற வகையில் ஹதீஸ்களை விமர்சனம் செய்துள்ளார். 

1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்துக் கூறினார்கள்: கண்ணியமும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். பூமியிலே ஞாயிற்றுக்கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான். புதன்கிழமை ஒளியைப் படைத்தான். வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களைப் பரவச் செய்தான். வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இரவுக்கு மத்தியில் கடைசிப் படைப்பாக ஆதமைப் படைத்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (4997)

وَلَوْ كَانَ أَوَّلُ الْخَلْقِ يَوْمَ السَّبْتِ وَآخِرُهُ يَوْمَ الْجُمُعَةِ لَكَانَ قَدْ خُلِقَ فِي الْأَيَّامِ السَّبْعَةِ وَهُوَ خِلَافُ مَا أَخْبَرَ بِهِ الْقُرْآنُ مَعَ أَنَّ حُذَّاقَ أَهْلِ الْحَدِيثِ يُثْبِتُونَ عِلَّةَ هَذَا الْحَدِيثِ مِنْ غَيْرِ هَذِهِ الْجِهَة

சனிக்கிழமை படைப்பதைத் துவங்கி வெள்ளிக்கிழமை முடித்திருந்தால் திட்டமாக இவ்வுலகம் ஏழுநாட்களில் படைக்கப்பட்டதாகி விடும். இக்கருத்து குர்ஆன் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமானதாகும். ஹதீஸ் கலையில் நுன்னறிவுள்ளவர்கள் இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸில் குறை உள்ளதென நிரூபித்துள்ளார்கள்.

நூல் : மஜ்மூஉ ஃபதாவா இப்னி தய்மியா பாகம் : 4 பக்கம் : 34

வானம் மற்றும் பூமி ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாக திருக்குர்ஆன் சொல்லும் போது ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எனவே இது ஒரு குறை. இது அல்லாமல் அறிவிப்பாளர் தொடரிலும் குறை உள்ளது என்பதே இப்னு தய்மியா அவர்களுடைய கூற்றின் சாராம்சம். 

இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸ் குறை காணப்பட்டுள்ளது என்று இப்னு தைமியா கூறியிருப்பது இதுவும் குறை கூறுவதற்குரிய ஒரு வழி முறை தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. 

2. நபித்தோழர்களைத் திட்டுகின்ற ராஃபிளா கூட்டத்தைச் சார்ந்தவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் அவர்களுடைய பாவமன்னிப்பை ஏற்க மாட்டான் என்பதற்கு பின்வரும் ஹதீஸை ஒரு கூட்டம் சான்றாகக் காட்டுகிறது. 

எனது தோழர்களைத் திட்டுவது மன்னிக்கப்படாத பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதே அந்த ஹதீஸ். இந்த ஹதீஸை இப்னு தய்மியா அவர்கள் இரு கோணங்களில் விமர்சனம் செய்கிறார். அதில் ஒன்று இது குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற விதியின் அடிப்படையில் உள்ளது. 

وَهَذَا بَاطِلٌ لِوَجْهَيْنِ : ( أَحَدُهُمَا أَنَّ الْحَدِيثَ كَذِبٌ بِاتِّفَاقِ أَهْلِ الْعِلْمِ بِالْحَدِيثِ وَهُوَ مُخَالِفٌ لِلْقُرْآنِ وَالسُّنَّةِ وَالْإِجْمَاعِ ؛ فَإِنَّ اللَّهَ يَقُولُ فِي آيَتَيْنِ مِنْ كِتَابِهِ : { إنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ } …وَذَلِكَ أَنَّ اللَّهَ قَالَ : { قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا }

இந்த ஹதீஸ் இரு விதங்களில் பொய்யானதாகும். ஒன்று ஹதீஸ் கலை அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி இது பொய்யான செய்தியாகும். இது குர்ஆனிற்கும் சுன்னாவிற்கும் ஏகோபித்த கருத்திற்கும் முரண்படுகிறது. ஏனென்றால் அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் இரு வசனங்களில் இவ்வாறு கூறுகிறான். தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். (4 : 48) (4 : 116) . . . 

மேலும் தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (39 :53) என்றும் கூறுகிறான்.

நூல் : மஜ்மூஉ ஃபதாவா இப்னிதய்மியா பாகம் : 2 பக்கம் : 185

இப்னுதய்மியா அவர்கள் அறிவிப்பாளர் தொடரில் குறையுள்ள செய்தியைத் தான் இவ்வாறு அனுகியுள்ளார் என்று கூறி இவ்விதியைப் புறக்கணிக்கக் கூடாது. அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத செய்திகளுக்கும் இவ்விதியை இமாம்கள் பொறுத்தியுள்ளார்கள் என்பதை முன்பே பார்த்தோம். 

உதாரணத்திற்காக இரண்டை மட்டும் கூறியுள்ளோம். இது போன்று ஹதீஸின் கருத்தை வைத்து பல செய்திகளை இப்னு தய்மியா அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள். 

இமாம் இப்னுல் கய்யுமின் வழிமுறை:

சஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள உலகம் படைக்கப்பட்டதைக் கூறும் ஹதீஸை இப்னு தய்மியா அவர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறியதைப் போல இப்னுல் கய்யும் அவர்களும் கூறியுள்ளார்கள். இப்னு தய்மியாவை விட ஒரு படி மேலே சென்று இட்டுக் கட்டப்பட்ட செய்திக்கு ஒப்பு என்று இப்னுல் கய்யும் கூறியுள்ளார்.

فصل ويشبه هذا ما وقع فيه الغلط من حديث أبي هريرة خلق الله التربة يوم السبت الحديث وهو في صحيح مسلم . . . لأن الله أخبر أنه خلق السماوات والأرض وما بينهما في ستة أيام وهذا الحديث يقتضي أن مدة التخليق سبعة أيام والله تعالى أعلم

அல்லாஹ் பூமியை சனிக்கிழமை படைத்தான் என்று அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கும் தவறு நிகழ்ந்துவிட்ட செய்தி இதைப் (இட்டுக்கட்டப்பட்ட செய்தியைப்) போன்றதாகும். இது சஹீஹு முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது. ஏனென்றால் வானம் பூமி அவ்விரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றை ஆறு நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். மொத்தம் ஏழு நாட்களில் இவை படைக்கப்பட்டதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. 

இமாம் அல்பானியின் போங்கு :

1. இறைவா உன்னிடத்தில் முஹம்மதிற்குரிய அந்தஸ்தின் பொருட்டால் நான் உன்னிடத்தில் பாவமன்னிப்புக் கேட்கிறேன் என்று ஆதம் (அலை) அவர்கள் கூறியதால் தான் அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. இந்தச் செய்தி குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறி இமாம் அல்பானீ அவர்கள் விமர்சிக்கிறார்கள்.

التوسل ள جزء 1 - صفحة 114 ன 

مخالفة هذا الحديث للقرآن : ومما يؤيد ما ذهب إليه العلماء من وضع هذا الحديث وبطلانه أنه يخالف القرآن الكريم في موضعين منه . . . وثبت مخالفة الحديث للقرآن فكان باطلا

இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படுகிறது. இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது பொய்யானது என்று அறிஞர்கள் முடிவு செய்ததற்குக் காரணம் இந்த ஹதீஸ் இரண்டு இடங்களில் சங்கை மிக்க குர்ஆனுடன் முரண்படுகிறது. . . இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படுவது நிரூபணமாகி விட்டதால் இந்த ஹதீஸ் தவறாகி விட்டது.

நூல் : அத்தவஸ்ஸுல் பாகம் : 1 பக்கம் : 114 

"எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.

அல்குர்ஆன் (7 : 23)

மேற்கண்ட வசனம் கூறும் வார்த்தையை ஆதம் ஹவ்வா ஆகிய இருவரும் கூறியதாகக் குர்ஆன் கூறுகிறது. ஆனால் இதற்கு மாற்றமாக வேறொரு வார்த்தையைக் கூறியதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எனவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அல்பானீ வாதிடுகிறார். 

2. உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பஞ்சம் ஏற்படுகிறது. அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கு அருகில் வந்து அல்லாஹ்வின் தூதரே உங்களது சமுதாயத்திற்காக மழை வேண்டுங்கள். ஏனென்றால் அவர்கள் (பஞ்சத்தால்) அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியதாக முஸன்னஃப் இப்னு அபீ ஷைபாவில் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மழை வேண்டுமானால் அதற்காகத் தொழுகை நடத்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த சரியான வழிமுறைக்கும் உங்கள் இறைவனிடத்தில் பாவமன்னிப்புக் கேளுங்கள். அவன் உங்களுக்கு மழையைத் தருவான் என்ற குôஆன் வசனத்திற்கும் இந்தச் சம்பவம் முரண்படுகிறது. 

மழை வேண்டுமானால் நபியவர்களிடத்தில் சென்று கேட்கும் படி குர்ஆன் கற்றுத் தரவில்லை. மாறாக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கேட்கும் படி சொல்கிறது. எனவே இந்தச் செய்தி குர்ஆனிற்கு முரண்படுவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அல்பானீ வாதிடுகிறார்.

التوسل ள جزء 1 - صفحة 121 ன 

الثاني : أنها مخالفة لما ثبت في الشرع من استحباب إقامة صلاة الاستسقاء لاستنزال الغيث من السماء كما ورد ذلك في أحاديث كثيرة وأخذ به جماهير الأئمة بل هي مخالفة لما أفادته الآية من الدعاء والاستغفار وهي قوله تعالى في سورة نوح : { فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا . . . }

மழை பெய்ய வேண்டுமென நாடினால் மழைத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்து பல ஹதீஸ்களில் வந்துள்ளது. இதையே அதிகமான இமாம்கள் கடைப்பிடித்துள்ளார்கள். மார்க்கத்தில் நிரூபணமான இந்த விஷயத்திற்கு இந்தச் சம்பவம் முரண்படுகிறது. அது மட்டுமல்லாமல் (மழை வேண்டுமென்றால்) பாவமன்னிப்புக் கோர வேண்டும்; துவா செய்ய வேண்டும் என்று குர்ஆன் வசனம் கூறும் கருத்திற்கு முரண்பாடாகவும் இச்சம்பவம் உள்ளது. 

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்''. உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். (71 : 10) என்பதே அந்த வசனம். 

நூல் : அத்தவஸ்ஸுல் பாகம் : 1 பக்கம் : 121

இமாம் புல்கீனீயின் வழிமுறை:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சொர்க்கம் இருக்கிறதே (அதில் தகுதியானோர் நுழைவார்கள்). அல்லாஹ் தன் படைப்புகளில் யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. அவன் தான் நாடியவர்களை நரகத்திற்காகப் படைப்பான். அவர்கள் நரகத்தில் போடப்படும் போது இன்னும் இருக்கிறதா? என்று மும்முறை கேட்கும். இறுதியில் இறைவன் அதில் தனது பாதத்தை வைக்க அது நிரம்பி விடும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். போதும் போதும் போதும் என்று அது கூறும். 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (7449)

இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர் அனைவரும் பலரால் புகழ்ந்து சொல்லப்பட்டவர்கள். மறுமை நாளில் சிலரைப் படைத்து அவர்களை நரகத்திற்குள் அல்லாஹ் கொண்டு செல்வான் என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து சிலர் விளங்குகிறார்கள். 

குற்றம் புரியாதவர்களை அல்லாஹ் நரகத்திற்குள் செலுத்துவது உனது இறைவன் யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டான் (18 : 49) என்ற குர்ஆன் வசனத்திற்கும் ஷைத்தான் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு அல்லாஹ் நரகத்தை நிரப்புவான் (38 : 85) என்று கூறும் குர்ஆன் வசனத்திற்கும் மாற்றமாக இந்த ஹதீஸ் இருப்பதினால் சில அறிஞர்கள் இதை மறுத்துள்ளார்கள். இக்கருத்தை இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலில் பதிவு செய்துள்ளார். 

فتح الباري ج: 13 ص: 437

وقد قال جماعة من الأئمة ان هذا الموضع مقلوب وجزم بن القيم بأنه غلط واحتج بأن الله تعالى أخبر بان جهنم تمتلىء من إبليس واتباعه وكذا أنكر الرواية شيخنا البلقيني واحتج بقوله ولا يظلم ربك أحد

நரகத்திற்கு புதிய படைப்பை அல்லாஹ் படைப்பான் என்று வருகின்ற இந்த இடத்தில் (தவறுதலாக) மாற்றம் நிகழ்ந்து விட்டது என்று இமாம்களில் ஒரு கூட்டத்தினர் கூறியுள்ளார்கள். இப்லீஸ் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களால் நரகம் நிரம்பும் என்று அல்லாஹ் கூறியிருப்பதை ஆதாரமாக வைத்து இந்தச் செய்தி தவறு என்று இப்னுல்கய்யும் உறுதியாகக் கூறியுள்ளார். இவ்வாறே நமது ஆசிரியர் புல்கீனீ அவர்களும் உனது இறைவன் யாருக்கும் அநீதியிழைக்க மாட்டான் என்ற அல்லாஹ்வின் கூற்றை ஆதாரமாக வைத்து இந்த அறிவிப்பை மறுத்துள்ளார். 

நூல் : ஃபத்ஹுல்பாரீ பாகம் : 13 பக்கம் : 437 

இந்த அறிஞர்களின் கூற்றை இமாம் அல்பானீ மற்றும் இப்னுல்கய்யும் அவர்களும் அங்கீகரித்து தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். 

நூல் : அஸ்ஸஹீஹா பாகம் : 6 பக்கம் : 39

அறிவீனர்களின் வழிமுறையல்ல. அறிஞர்களின் வழிமுறை:

இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விளக்கவுரை எழுதியதைப் போல் ஜைனுத்தீன் என்ற இப்னு ரஜப் என்ற அறிஞரும் புகாரிக்கு விளக்கவுரை கொடுத்துள்ளார். அறிவிப்பாளர் தொடரில் குறை காணப்படாத திர்மிதி அவர்களால் சஹீஹானது என்று சொல்லப்பட்ட பின்வரும் ஹதீஸை அறிஞர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற காரணத்தினால் மறுத்துள்ளார்கள். இந்தத் தகவலை இப்னு ரஜப் தனது நூலில் பதிவு செய்கிறார். 

ولهذا المعنى رد طائفة من العلماء حديث قطع الصلاة بمرور الكلب وغيره ، وقالوا: إنه مخالف للقرآن في قوله تعالى : { وَلا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى } ளالأنعام:164ன، 

நாயும், மற்றவைகளும் கடந்து செல்வதினால் தொழுகை முறிந்துவிடும் என்ற கருத்தில் வரும் ஹதீஸை அறிஞர்கள் மறுக்கிறார்கள். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் (6 : 164) என்ற இறைவனுடைய கூற்றுக்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்றும் கூறுகிறார்கள். 

நூல் : ஃபத்ஹுல் பாரீ லிஇப்னி ரஜப் பாகம் : 3 பக்கம் : 342

இக்கட்டுரை ஒரு சுருக்கம் மட்டும் தான். இங்கு குறிப்பிடப்பட்டாத இன்னும் பல தகவல்கள் உள்ளன. வேறு பல கோணங்களிலும் இந்த விமர்சனத்திற்கு பதில் உள்ளது. தேவை ஏற்பட்டால் அதையும் சமுதாயத்திற்கு தெளிவுபடுத்தத் தயாராக உள்ளோம். 

அறிஞர்களின் பார்வை:

ஒரு ஹதீஸைச் சரிகாணுவதற்கு அறிஞர்கள் கடைப்பிடித்த வழிமுறையை நம்மை விமர்சனம் செய்பவர்கள் முறையாக அறிந்து கொள்ளவில்லை. அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இல்லையே என்று பாமர மக்கள் கேட்பதைப் போல் கேட்கிறார்கள். அறிவிப்பாளர் தொடரில் குறை இல்லாவிட்டால் மட்டும் ஹதீஸ் சரியாகி விடும் என்ற தவறான இவர்களின் எண்ணமே இதற்குக் காரணம். ஹதீஸ் கலை மாமேதைகள் ஹதீஸைச் சரிகாணுவதற்கு இரு வழிமுறைகளைக் கடைப் பிடித்துள்ளனர். 

1. அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது

2. அறிவிக்கப்பட்ட செய்தியிலும் எந்தக் குறையும் இருக்கக் கூடாது.

இந்த இரண்டு நிபந்தனைகள் இருந்தால் மட்டுமே ஹதீஸ் சரியாகும். ஆனால் நம்மை விமர்சிப்பவர்கள் இந்த இரு நிபந்தனைகளில் முதலில் உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு இரண்டாவதைக் கவனிக்க மறந்து விட்டார்கள். 

ஒரு ஹதீஸில் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருந்தால் இரண்டு நிபந்தனைகளில் முதல் நிபந்தனைக்கு உட்பட்டதாக அந்த ஹதீஸ் ஆகிவிடும்.. அத்துடன் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக அந்த ஹதீஸின் கருத்து இருக்க வேண்டும். 

1. அதன் கருத்து குர்ஆனுடன் முரண்படும் வகையில் இருக்கக் கூடாது. 

2. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு முரண்படக் கூடாது.

3. நிரூபிக்கப்பட்ட வரலாறுக்கு முரண்படக் கூடாது. 

4. முரண்பாடாக பல விதங்களில் அறிவிக்கப்படக் கூடாது. 

அறிவிப்பாளர் தொடர் சரியானதாக அமைந்து ஹதீஸின் கருத்தில் மேலுள்ள குறைகளைப் போன்று ஏதேனும் இருக்குமானால் இது போன்ற நிலையில் அறிஞ:ர்கள் அந்த ஹதீஸிற்கு (சஹீஹுல் இஸ்னாத்) அறிவிப்பாளர் தொடர் சரியான செய்தி என்று மட்டுமே கூறுவார்கள். செய்தி சரி என்பதற்கு அவர்கள் அங்கீகாரத்தைத் தர மாட்டார்கள். இதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.

இப்னுஸ் ஸலாஹ் அவர்களின் விளக்கம்:

مقدمة ابن الصلاح - (ج 1 / ص 6)

السابع قولهم هذا حديث صحيح الإسناد أو حسن الإسناد دون قولهم: هذا حديث صحيح أو حديث حسن، لأنه قد يقال: هذا حديث صحيح الإسناد، ولا يصح، لكونه شاذا أو معللا " .

இது சஹீஹான செய்தி என்றோ அல்லது ஹசனான செய்தி என்றோ கூறாமல் இது அறிவிப்பாளர் தொடரில் சரியான செய்தி என்றோ அல்லது அறிவிப்பாளர் தொடரில் ஹசனானது என்றோ அறிஞர்கள் கூறுவதுண்டு. ஏனென்றால் (கருத்தைக் கவனிக்கும் போது) வலிமையான செய்திக்கு அது மாற்றமாக இருப்பதினால் அல்லது ஏதோ ஒரு குறை (அதிலே) இருப்பதினால் ஹதீஸ் சரியாகாமல் இருந்தாலும் இது சரியான அறிவிப்பாளர் தொடர் உள்ள செய்தி என்று சொல்லப்படும்.

நூல் : முகத்திமது இப்னிஸ்ஸலாஹ் பாகம் : 1 பக்கம் : 6

அல்குலாஸத் என்னும் நூலில் தய்யிபியின் கூற்று 

 قولهم : حديث صحيح أو حسن ، وقد يصح الإسناد أو يحسن دون متنه لشذوذ أو علةا.هـ..

வலிமையான செய்திக்கு முரண்படுவதினாலோ அல்லது மறைமுகமான குறையினாலோ செய்தி சரியாகாமல் அதன் அறிவிப்பாளர் தொடர் சஹீஹ் அல்லது ஹசன் என்ற தரத்தில் அமைந்ததாக சில வேளை இருக்கும். 

இமாம் நவவீ அவர்களின் கூற்று:

لأنه قد يصح أو يحسن الإسناد ، ولا يصح ولا يحسن لكونه شاذا أو معللاا

வலிமையான செய்திக்கு முரண்படுவதினாலோ அல்லது மறைமுகமான குறையினாலோ செய்தி சரியாகாமல் அதன் அறிவிப்பாளர் தொடர் சஹீஹ் அல்லது ஹசன் என்ற தரத்தில் அமைந்ததாக சில வேளை இருக்கும். 

நூல் : அல்இர்ஷாத் 

இமாம் ஹாகிமின் கூற்று:

معرفة علوم الحديث للحاكم - (ج 1 / ص 261)

وعلة الحديث ، يكثر في أحاديث الثقات أن يحدثوا بحديث له علة ، فيخفى عليهم علمه ، فيصير الحديث معلولا ،

குறை தெரியாத காரணத்தினால் நம்பகமான அறிவிப்பாளர்கள் குறையுள்ள ஹதீஸை அறிவிப்பார்கள். எனவே ஹதீஸ் குறையுள்ளதாக மாறிவிடும். நம்பகமானவர்கள் அறிவிக்கும் செய்திகளில் குறை அதிகமாக இதனால் வருகிறது. 

நூல் : மஃரிஃபது உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 261

இதே கருத்தை இப்னுல் முலக்கன் என்பவரும் இப்னு ஜமாஆ என்பவரும் கூறியுள்ளார்கள்.

நூல் : அல்மன்ஹலுர்ரவீ பாகம் : 1 பக்கம் : 37

நூல் : அல்முக்னிஃ பாகம் : 1 பக்கம் : 89

இப்னு ஜவ்ஸியின் கூற்று:

الموضوعات - (ج 1 / ص 99)

وقد يكون الاسناد كله ثقات ويكون الحديث موضوعا أو مقلوبا 

சில நேரங்களில் அறிவிப்பாளர் தொடர் முழுவதும் நம்பகமானவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட வகையைச் சார்ந்ததாகவோ அல்லது மாற்றிக் கூறப்பட்ட செய்தியாகவோ இருக்கும். 

நூல் : அல்மவ்லூஆத் பாகம் : 1 பக்கம் : 99

இப்னு தய்மியா அவர்களின் கூற்று:

مجموع الفتاوى ள جزء 18 - صفحة 47 ன 

كم من حديث صحيح الإتصال ثم يقع فى أثنائه الزيادة والنقصان فرب زيادة لفظة تحيل المعنى ونقص أخرى كذلك

முழுமையான தொடரில் சரியாக இருக்கும் எத்தனையோ ஹதீஸ்களில் கூட்டுதலும், குறைத்தலும் நிகழ்ந்து விடுகிறது. சில நேரங்களில் ஒரு வார்த்தையை அதிகப்படுத்துவது அர்த்தத்தையே மாற்றி விடும். ஒரு வார்த்தையைக் குறைப்பதும் இவ்வாறே அர்த்தத்தை மாற்றி விடுகிறது. 

நூல் : மஜ்மூஉல் ஃபதாவா பாகம் : 18 பக்கம் : 47

இப்னுல் கய்யும் அவர்களின் கூற்று:

الفروسية ள جزء 0 - صفحة 245 ன 

وقد علم أن صحة الإسناد شرط من شروط صحة الحديث وليست موجبة لصحته فإن الحديث إنما يصح بمجموع أمور منها صحة سنده وانتفاء علته وعدم شذوذه ونكارته 

அறிவிப்பாளர் தொடர் சரியானதாக அமைய வேண்டும் என்பது ஹதீஸ் சரியாகுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று. அறிவிப்பாளர் தொடர் சரியாக இருப்பதினால் (மட்டும்) அந்த ஹதீஸும் சரியானது என்று முடிவெடுக்க முடியாது. ஏனென்றால் பல விஷயங்கள் இருந்தால் தான் ஹதீஸ் சரியாகும். தொடர் சரியாக இருப்பதும் கருத்தில் குறை வராமல் இருப்பதும் வலிமையான தகவலுக்கு முரண்படாமல் இருப்பதும் மோசமான கருத்தைத் தராமல் இருப்பதும் இவற்றுள் அடங்கும்.

நூல் : அல்ஃபரூசிய்யா பக்கம் : 246

حاشية ابن القيم ள جزء 1 - صفحة 77 

 أما قولكم إنه قد صح سنده فلا يفيد الحكم بصحته لأن صحه السند شرط أو جزء سبب للعلم بالصحة لا موجب تام فلا يلزم من مجرد صحة السند صحة الحديث ما لم ينتف عنه الشذوذ والعلة 

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக உள்ளது என்று நீங்கள் கூறுவது அந்த ஹதீஸ் சரியானது என்ற கருத்தைக் கொடுக்காது. ஏனென்றால் தொடர் சரியாக இருக்க வேண்டுமென்பது சரியான செய்தியை அறிந்து கொள்வதற்கான ஒரு நிபந்தனை தான். முழுமையான அளவுகோல் அல்ல. எனவே முரண்பாடும் குறையும் ஹதீஸை விட்டும் நீங்காத வரை அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தால் மட்டும் ஹதீஸ் சரியாகி விடாது. 

நூல் : ஹாஷியதுல் இப்னில்கய்யிம் பாகம் : 1 பக்கம் : 77

சன்ஆனீயின் கூற்று:

توضيح الأفكار ள جزء 1 - صفحة 234 ன 

اعلم أن من أساليب أهل الحديث أن يحكوا بالصحة والحسن والضعف على الإسناد دون متن الحديث فيقولون إسناد صحيح دون حديث صحيح لأنه يصح الإسناد لثقة رجاله ولا يصح الحديث لشذوذ أو علة

ஹதீஸ் கலை அறிஞர்கள் ஹதீஸின் தகவலைப் பற்றி பேசாமல் அறிவிப்பாளர் தொடருக்கு சரியானது ஹசனானது பலவீனமானது என்று தீர்ப்பளிப்பார்கள். இது அவர்களின் வழமை. சரியான ஹதீஸ் என்று சொல்லாமல் சரியான அறிவிப்பாளர் தொடர் கொண்டது என்று சொல்வார்கள். ஏனென்றால் இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருப்பதினால் தொடர் சரியாகி விடும். முரண்பாடு அல்லது நுட்பமான குறை (செய்தியில்) இருப்பதினால் ஹதீஸ் சரியாகாது. 

நூல் : தவ்ளீஹுல் அஃப்கார் பாகம் : 1 பக்கம் : 234

கருத்தைக் கவனித்து நிராகரிக்கப்பட்டவை:

அறிஞர்கள் எத்தனையோ அறிவிப்பாளர் தொடர்களுக்கு தங்கள் புறத்திலிருந்து சரியானவை என்று தீர்ப்பு வழங்கிவிட்டு செய்தியில் உள்ள குறையினால் அதை ஏற்க மறுத்துள்ளார்கள். இந்த விதியைப் பல இடங்களில் கையாண்டுள்ளார்கள். இதற்கான சான்றுகள் பின்வருகிறது. 

இமாம் இப்னு ஹஜர் : 

ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள் நோன்பு வைத்தவராக இரத்தம் குத்தி எடுத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்ற போது இவ்விருவரும் நோன்பை முறித்துக் கொண்டார்கள் என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுப்பதில் நோன்பாளிக்கு சலுகை வழங்கினார்கள். அனஸ் நோன்பு வைத்த நிலையில் இரத்தம் குத்தி எடுப்பவராக இருந்தார். 

فتح الباري - ابن حجر ள جزء 4 - صفحة 178 ன 

ورواته كلهم من رجال البخاري الا أن في المتن ما ينكر لأن فيه أن ذلك كان في الفتح وجعفر كان قتل قبل ذلك

இப்னு ஹஜர் கூறுகிறார் : இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் புகாரியின் அறிவிப்பாளர்கள். என்றாலும் இதில் மறுக்கப்பட வேண்டிய ஒன்று உள்ளது. ஏனென்றால் இந்நிகழ்வு மக்கா வெற்றியின் போது நிகழ்ந்ததாக வந்துள்ளது. ஜஃபர் மக்கா வெற்றிக்கு முன்பே கொல்லப்பட்டு விட்டார். 

நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 4 பக்கம் : 178

இமாம் நவவீ:

நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளிவாசலிலிருந்து (விண்ணுலகப் பயனத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். 

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (3570)

شرح النووي على مسلم جزء 2 - صفحة 209 

وقد جاء فى رواية شريك فى هذا الحديث فى الكتاب اوهام أنكرها عليه العلماء وقد نبه مسلم على ذلك بقوله فقدم وأخر وزاد ونقص منها قوله وذلك قبل أن يوحى إليه وهو غلط لم يوافق عليه فان الاسراء أقل ما قيل فيه انه كان بعد مبعثه صلى الله عليه وسلم بخمسة عشر شهرا... ومنها أن العلماء مجمعون على أن فرض الصلاة كان ليلة الاسراء فكيف يكون هذا قبل أن يوحى إليه 

இது தொடர்பாக ஷரீக் என்பார் அறிவிக்கும் இந்த ஹதீஸில் பல தவறுகள் உள்ளன. இவற்றை அறிஞர்கள் ஏற்க மறுத்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் என்ற வார்த்தையைச் சுருக்கி பதிவு செய்ததன் மூலம் இமாம் முஸ்லிம் இந்த ஹதீஸில் உள்ள தவறைச் சுட்டிக் காட்டுகிறார். அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் என்ற இந்த வார்த்தை தவறாக ஏற்பட்டு விட்டதாகும். இதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏùன்றால் விண்ணுலகப் பயணம் தொடர்பாகக் (கூறப்படும் கால அளவில்) மிகவும் குறைவாகச் சொல்லப்படுவது என்னவென்றால் நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டு 15 மாதங்களுக்குப் பிறகு தான் விண்ணுலகப் பயணம் செய்தார்கள் என்பதாகும். (ஆனால் விண்ணுலகப் பயணம் நடைபெறும் வரை வஹீ அருளப்படவில்லை என்று இந்த ஹதீஸ் கூறுகிறது) இன்னும் தொழுகை விண்ணுலகப் பயணத்தின் இரவின் போது தான் கடமையானது என்று அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளார்கள். அப்படியிருக்க நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்படுவதற்கு முன்னால் விண்ணுலகப் பயணம் எப்படி நடந்திருக்க முடியும்? 

விண்ணுலகப் பயணத்திற்குப் பின்பு தான் வஹீ அருளப்பட்டது அது வரை நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படவில்லை. என்று இந்த ஹதீஸின் வார்த்தை உணர்த்துகிறது. இதனால் அறிஞர்கள் இதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றிப் பேசாமல் இதன் கருத்து உறுதி பெற்ற விஷயத்திற்கு மாற்றமாக இருப்பதினால் இதை மறுக்கிறார்கள். 

இமாம் ஹாகிம்:

معرفة علوم الحديث للحاكم - (ج 1 / ص 94)

حدثناه عبد الرحمن بن حمدان الجلاب بهمدان قال : حدثنا أبو حاتم الرازي قال : ثنا نصر بن علي ، قال : حدثنا أبي ، عن ابن عون ، عن محمد بن سيرين ، عن ابن عمر قال : قال رسول الله صلى الله عليه وسلم : யி صلاة الليل والنهار مثنى مثنى ، والوتر ركعة من آخر الليل ஞீ قال الحاكم : هذا حديث ليس في إسناده إلا ثقة ثبت ، وذكر النهار فيه وهم ، 

1 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரவு மற்றும் பகல் தொழுகை இரண்டு இரண்டு ரக்அத்துகள் தான். வித்ரு என்பது இரவின் கடைசியில் ஒரு ரக்அத் ஆகும். 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : திர்மிதி (543)

இமாம் ஹாகிம் கூறுகிறார் : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் உறுதிமிக்க நம்பகமானவரைத் தவிர வேறு யாரும் இல்லை. இதிலே பகல் என்ற வார்த்தையைக் கூறியிருப்பது தவறாகும். 

நூல் : மஃரிஃபது உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 94

معرفة علوم الحديث للحاكم - (ج 1 / ص 263)

مثاله ما حدثنا أبو العباس محمد بن يعقوب قال : ثنا محمد بن إسحاق الصغاني قال : ثنا حجاج بن محمد قال : قال ابن جريج : عن موسى بن عقبة ، عن سهيل بن أبي صالح ، عن أبيه ، عن أبي هريرة ، عن النبي صلى الله عليه وسلم ، قال : யி من جلس مجلسا كثر فيه لغطه (1) ، فقال قبل أن يقوم سبحانك اللهم وبحمدك ، لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إلا غفر له ما كان في مجلسه ذلك ஞீ قال أبو عبد الله : هذا حديث من تأمله لم يشك أنه من شرط الصحيح ، وله علة فاحشة

  2 . நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கூச்சல் நிறைந்த சபையில் கலந்து கொண்ட ஒருவர் எழுவதற்கு முன்பாக சுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக லாயிலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக என்று சொன்னால் அவரது சபையில் ஏற்பட்ட அந்தத் தீமை அவருக்காக மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை. 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) 
நூல் : மஃரிஃபது உலூமில் ஹதீஸ்

ஹாகிம் கூறுகிறார் : இந்த ஹதீஸை உற்று நோக்குபவர் இது புகாரியின் நிபந்தனைக்கு உட்பட்டது என்பதிலே சந்தேகம் கொள்ள மாட்டார். என்றாலும் இதிலே மோசமான குறை உள்ளது. 

நூல் : மஃரிஃபது உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 263

இமாம் தஹபீ:

تذكرة الحفاظ ள جزء 2 - صفحة 688 

عن عائشة ان رسول الله صلى الله عليه وسلم دخل عليها وعندها حميم لها يخنقه الموت فلما رأى النبي صلى الله عليه وسلم ما بها قال لا تبتئسي على حميمك فان ذلك من حسناتك رواته ثقات لكنه منكر

1 . மரண வேளையில் தவித்துக் கொண்டிருந்த எனது உறவினருக்கருகில் நான் இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னிடமிருந்த கவலையைப் பார்த்த போது (ஆயிஷாவே) உனது உறவினருக்காக நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இந்தச் சிரமமும் அவரது நன்மைகளில் ஒன்றாகி விடுகிறது என்றார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) 
நூல் : இப்னு மாஜா (1441)

தஹபீ கூறுகிறார் : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் நம்பகமானவர்கள். என்றாலும் இது மறுக்கப்பட வேண்டிய செய்தி. 

நூல் : தத்கிரதுல் ஹுஃப்பாள் பாகம் : 2 பக்கம் : 688 

ميزان الاعتدال - (ج 1 / ص 430)

وقال الحاكم: سمعت أحمد بن إسحاق الصبغى: سمعت إسماعيل بن إسحاق السراج يقول: قال لى أحمد بن حنبل: يبلغني أن الحارث هذا يكثر الكون عندك، فلو أحضرته منزلك وأجلستني في مكان أسمع كلامه. ففعلت، وحضر الحارث وأصحابه، فأكلوا وصلوا العتمة، ثم قعدوا بين يدى الحارث وهم سكوت إلى قريب نصف الليل، ثم ابتدأ رجل منهم، وسأل الحارث، فأخذ في الكلام، وكأن على رؤسهم الطير، فمنهم من يبكى، ومنهم من يخن (1)، ومنهم من يزعق، وهو في كلامه، فصعدت الغرفة، فوجدت أحمد قد بكى حتى غشى عليه، إلى أن قال (2): فلما تفرقوا قال أحمد: ما أعلم أنى رأيت مثل هؤلاء، ولا سمعت في علم الحقائق مثل كلام هذا. وهذه حكاية صحيحة السند منكرة، لا تقع على قلبى، أستبعد وفوع هذا من مثل أحمد.

2 . இஸ்மாயீல் பின் இஸ்ஹாக் என்பவர் கூறுகிறார் : அஹம்மது பின் ஹம்பல் அவர்கள் (என்னிடம்) ஹாரிஸ் அவர்கள் உங்களிடம் அதிகமான நேரம் இருக்கிறார். அவரை உங்கள் வீட்டிருக்கு (ஒரு முறை) வரவழைத்து அவரது பேச்சைக் கேட்பதற்காக என்னை ஒரு இடத்தில் அமர வைக்கலாமே என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். ஹாரிஸும் அவரது மாணவர்களும் வந்து சாப்பிட்டுவிட்டு இஷாத் தொழுதார்கள். பின்பு அவர்கள் சுமார் இரவின் பாதிவரை ஹாரிஸின் முன்பு அமைதியாக அமர்ந்தார்கள். அவர்களில் ஒருவர் கேள்வி கேட்டு ஆரம்பித்து வைத்தார். ஹாரிஸ் பேசத் தொடங்கினார். அவர்களுடைய தலையில் பறவை தங்கும் அளவிற்கு (கவனத்துடன் கேட்டார்கள்) ஹாரிஸ் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களில் சிலர் அழுது விட்டார்கள். சிலர் திடுக்கத்திற்குள்ளானார்கள். அப்போது நான் மேல் அறைக்குச் சென்று அஹ்மத் இமாமைப் பார்த்த போது அவர்கள் மயக்கமுறுகிற அளவிற்கு அழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் சென்ற பிறகு அஹ்மத் அவர்கள் நான் இவரைப் போன்று யாரையும் பார்த்ததில்லை . இவரது பேச்சைப் போன்று எவரது பேச்சையும் கேட்டதில்லை என்று கூறினார்கள். 

இமாம் தஹபீ கூறுகிறார் : இது சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்ட சம்பவம் என்றாலும் இது. மறுக்கப்பட வேண்டியதாகும். எனது உள்ளம் இதை ஏற்றுக் கொள்ளாது. அஹ்மத் போன்றவரிடம் இது போன்ற நிகழ்வு ஏற்படுவதை நான் சாத்தியமற்றதாகக் கருதுகிறேன். 

நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம் : 1 பக்கம் : 430

ஹாரிஸ் என்பாரின் பேச்சில் சாதாரண மக்கள் மயங்குவதைப் போல் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்த இமாம் அஹ்மத் மயங்கினார்கள் என்று இச்சம்பவம் கூறுவதால் இதன் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அஹ்மதின் தன்மைக்கு மாற்றமாக இருப்பதினால் இதை ஏற்க மாட்டேன் என்று தஹபீ கூறுகிறார்.

ஞானத்தைத் தொலைத்துவிட்ட அறிஞர்களே. இமாம் அஹ்மதை விட நபி (ஸல்) அவர்கள் அந்தஸ்தில் குறைந்தவர்களா? அஹ்மது இமாமின் கண்ணியத்தைப் பாதுகாக்க அவர்களின் செய்திக்கு இந்த அளவுகோல் என்றால் ஏன் உத்தமத் தூதரின் கண்ணியத்தைப் பாதுகாக்க இந்த அளவுகோலை கையில் எடுக்கத் தயங்குகிறீர்கள்? 

سير أعلام النبلاء - (ج 3 / ص 209)

عن عبدالله بن الحارث بن جزء، قال: توفي صاحب لي غريبا، فكنا على قبره أنا وابن عمر، وعبد الله بن عمرو، وكانت أسامينا ثلاثتنا العاص، فقال لنا النبي صلى الله عليه وسلم: " انزلوا قبره وأنتم عبيد الله " فقبرنا أخانا، وصعدنا وقد أبدلت أسماؤنا. هكذا رواه عثمان بن سعيد الدارمي، حدثنا يحيى بن بكير عنه. ومع صحة إسناده هو منكر من القول، وهو يقتضي أن اسم ابن عمر ما غير إلى ما بعد سنة سبع من الهجرة، وهذا ليس بشئ.

3 . அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் என்பவர் சொல்கிறார் : எனது நண்பர் ஒருவர் பிரயாணியாக இருக்கும் போது மரணித்து விட்டார். அவருடைய மண்ணறையில் நானும் இப்னு உமர் அவர்களும் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களும் இருந்தோம். (அப்போது) எங்களுடைய பெயர் அல்ஆஸ் என்றிருந்தது. அ;ப்போது எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உங்களது பெயர் அப்துல்லாஹ்வாக இருக்கும் நிலையில் இவரது கப்ரில் இறங்குங்கள் என்று கூறினார்கள். நாங்கள் எங்களது சகோதரரை அடக்கம் செய்துவிட்டு எங்கள் பெயர் மாற்றப்பட்ட நிலையில் மேலே ஏறி வந்தோம். 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ்
நூல் : பைஹகீ பாகம் : 9 பக்கம் : 307

இமாம் தஹபீ கூறுகிறார் : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் இது மறுக்கப்பட வேண்டிய கருத்தைத் தருகிறது. (ஏனென்றால்) இப்னு உமர் அவர்களின் பெயர் ஹிஜ்ரீ ஏழு வருடத்திற்கு பிறகு வரை மாற்றப்படாமல் இருந்தது என்ற கருத்தை இது கொடுக்கிறது. இக்கருத்து ஏற்கத் தகுந்ததல்ல. 

நூல் : சியரு அஃலாமின் நுபலா பாகம் : 3 பக்கம் : 209

4. ஹாகிமில் 1868 வதாக இடம்பெற்ற செய்தியை தஹபீ அவர்கள் பின்வருமாறு விமர்சனம் செய்கிறார்.

والحديث مع نظافة إسناده منكر أخاف أن يكون موضوعا .

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் (குறையை விட்டும்) தூய்மையாக இருந்தலும் இது மறுக்கப்பட வேண்டிய செய்தியாகும். இது இட்டுக்கட்டப்பட்டதாக இருக்குமோ என்று நான் அஞ்சுகிறேன்.

நூல் : தல்ஹீஸுல் முஸ்தத்ரக் பாகம் : 1 பக்கம் : 506, 507

5. ஹாகிமில் 3387 வதாக இடம்பெற்ற செய்தியை தஹபீ பின்வருமாறு விமர்சிக்கிறார்.

إسناده نظيف والمتن منكر

இதன் அறிவிப்பாளர் தொடர் தூய்மையானதாக உள்ளது. செய்தி மறுக்கப்பட வேண்டியதாக உள்ளது. 

நூல் : தல்ஹீஸுல் முஸ்தத்ரக் பாகம் : 2 பக்கம் : 366, 367

6. ஹாகிமில் 4640 என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்ட செய்தியை தஹபீ பின்வருமாறு விமர்சிக்கிறார். 

هذا وإن كان رواته ثقات فهو منكر وليس ببعيد من الوضع

இந்த ஹதீஸை அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் இது மறுக்கப்பட வேண்டியது. இட்டுக்கட்டப்பட்ட வகையை விட்டும் தூரமானதாக இது இல்லை.

நூல் : தல்ஹீஸுல் முஸ்தத்ரக் பாகம் : 3 பக்கம் : 127, 128

7. ஹாகிமில் 6738 வதாக பதிவு செய்யப்பட்ட ஹதீஸை அதன் கருத்தைக் கவனித்து மறுக்கிறார். 

منكر على جودة إسناده .

இதன் அறிவிப்பாளர் தொடர் தரமாக இருப்பதுடன் இது மறுக்கப்பட வேண்டியதாகும். 

8. ஹாகிமில் 7048 வதாக பதிவாகியுள்ள செய்தியை தஹபீ பின்வருமாறு விமர்சிக்கிறார்.

وهو حديث منكر على نظافة سنده .

இதன் அறிவிப்பாளர் தொடர் தூய்மையானதாக இருந்தாலும் இது மறுக்கப்பட வேண்டிய ஹதீஸாகும்.

நூல் : தல்ஹீஸுல் முஸ்தத்ரக் பாகம் : 4 பக்கம் : 99

இமாம் அல்பானியின் பார்வை:

1. எனது சமுதாயத்தில் அப்தால்கள் (என்ற நல்லடியார்களை அறிந்து கொள்வதற்கான) அடையாளம் அவர்கள் யாரையும் எப்போதும் சபிக்க மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்தில் பர் என்பவர் கிதாபுல் அவ்லியா என்ற தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். 

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அல்பானீ அவர்கள் குறைகளைக் கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இதன் கருத்தையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு குறை காணுகிறார். ஹதீஸைச் சரிகாணுவதற்கான இரண்டு அளவுகோலையும் இங்கே அல்பானீ பயன்படுத்துகிறார். 

السلسلة الضعيفة - (ج 3 / ص 474)

قلت : و هذا المتن منكر دون شك أو ريب ، بل هو موضوع ، فإن اللعن ، قد صدر منه صلى الله عليه وسلم أكثر من مرة ، و قد أخبر عن ذلك هو نفسه صلى الله عليه وسلم في غير ما حديث ، و قد خرجت طائفة منها في السلسلة الأخرى ( 83 و 85 و 1758 ) ، فهل الأبدال أكمل من رسول الله صلى الله عليه وسلم ؟ !

எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமின்றி இந்தச் செய்தி மோசமான கருத்தைக் கொண்டதாக உள்ளது. ஏன் இது இட்டுக்கட்டப்ப.ட்டது. (என்று கூட சொல்லலாம்). ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் பல முறை சபித்துள்ளார்கள். இதை அவர்களே பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள். (நபியவர்கள் சபித்ததாக வரும்) பல ஹதீஸ்களை இன்னொரு சில்சிலாவில் நான் பதிவு செய்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட இந்த அப்தால்கள் (நல்லடியார்கள்) முழுமையடைந்தவர்களா? 

நூல் : சில்சிலதுல் லயீஃபா பாகம் : 3 பக்கம் : 474

குறையுள்ள தொடரைக் கொண்ட செய்திக்கும் குறையில்லாத தொடரைக் கொண்ட செய்திக்கும் இந்த அளவுகோலைப் பயன்படுத்தியுள்ளார்கள். 

இப்னு சய்யிதின்னாஸ்:

நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது ஆபூதாலிபுடன் ஷாம் நாட்டிற்கு கூட்டமாக வியாபாரத்திற்காகச் சென்றார்கள். செல்லும் வழியில் ஒரு பாதிரியார் நபி (ஸல்) அவர்களின் தன்மைகளைக் கவனத்தில் கொண்டு இவர் நபியாவார் என்ற தகவலை அவர்களுக்கு அறிவித்தார். ரோம் நாட்டிற்கு நபி (ஸல்) அவர்களை அழைத்துச் சென்றால் அவர்கள் நபியைக் கொன்று விடுவார்கள் என்பதால் அங்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தினார். ரோம் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களை அழைத்துச் செல்வதற்காக ஏழு நபர்கள் அங்கு வந்தார்கள். இவர்களுடன் நபியவர்களை அனுப்புவதற்கு அபூதாலிப் ஒத்துக் கொண்டார். அபூபக்கர் அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிலாலை அனுப்பினார்கள். 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி)
நூல் : திர்மிதி (3553), ஹாகிம் (பாகம் : 1 பக்கம் : 672)

இவ்வாறு திர்மிதி, ஹாகிம் போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு சய்யித் அவர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாவிட்டாலும் இதன் கருத்தில் குறை உள்ளது என்று கூறுகிறார். 

عيون الأثر ள جزء 1 - صفحة 105 ன 

قلت : ليس في إسناد هذا الحديث إلا من خرج له في الصحيح.... و مع ذلك ففي متنه نكارة و هي إرسال أبي بكر مع النبي صلى الله عليه و سلم بلالا و كيف و أبو بكر حينئذ لم يبلغ العشر سنين فإن النبي صلى الله عليه و سلم أسن من أبي بكر بأزيد من عامين و كانت للنبي صلى الله عليه و سلم تسعة أعوام على ما قاله أبو جعفر محمد بن جرير الطبري و غيره أو اثنا عشر على ما قاله آخرون و أيضا فإن بلالا لم ينتقل لأبي بكر إلا بعد ذلك بأكثر من ثلاثين عاما فإنه كان لنبي خلف الجمحيين و عندما عذب في الله على الإسلام اشتراه أبو بكر رضي الله عنه رحمة له و استنفاذا له من أيديهم 

  இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் புகாரி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட அறிவிப்பாளர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. இத்துடன் இந்தச் செய்தியில் தவறான கருத்து உள்ளது. நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்கர் பிலாலை அனுப்பினார்கள் என்பதே அந்தத் தவறாகும். அபூபக்கர் அன்றைக்கு பத்து வயதைக் கூட அடையாமல் இருக்கும் போது இது எப்படிச் சாத்தியமாகும்? 

நபி (ஸல்) அவர்கள் அபூபக்கரை விட இரண்டு வயது மூத்தவர்கள். தப்ரீ போன்றோரின் கூற்றுப்படி நபி (ஸல்) அவர்களுக்கு அன்றைய நேரத்தில் வயது ஒன்பதாக இருந்தது. மற்றவர்களின் கூற்றுப்படி 12 ஆக இருந்தது. மேலும் பிலால் அவர்கள் இச்சம்பவம் நடந்து 30 வருடங்களுக்குப் பிறகு தான் அபூபக்கரின் பொறுப்பில் வருகிறார். (ஆனால் இச்செய்தியில் நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருக்கும் போதே அபூபக்கரின் பொறுப்பில் பிலால் இருந்ததாக உள்ளது.) 

இதற்கு முன்பு அவர் பனூஹலஃப் என்ற கூட்டத்தாரிடம் இருந்தார். இஸ்லாத்திற்காக பிலால் அல்லாஹ்வின் விஷயத்தில் கொடுமை செய்யப்பட்ட போது அவரின் மீது இரக்கப்பட்டும் அவரை அவர்களின் கையிலிருந்து பாதுகாப்பதற்காகவும் அபூபக்கர் பிலாலை அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கினார்.

நூல் : உயூனுல் அஸர் பாகம் : 1 பக்கம் : 105 

ஒரு ஹதீஸைச் சரிகாணுவதாக இருந்தால் அதன் தொடர் மற்றும் தகவல் ஆகிய இரண்டையும் உரசிப் பார்க்க வேண்டும் என்பதை அறிஞர்களின் இந்தக் கூற்றுக்கள் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேற்கண்ட செய்திகள் அல்லாமல் இன்னும் இது போன்று அறிஞர்கள் பல இடங்களில் நடந்துள்ளார்கள். இதனடிப்படையில் நம்பகமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்ற செய்திகளில் உள்ள பிழையினால் அச்செய்தி மறுக்கப்பட வேண்டியது என்று தீர்ப்பும் வழங்கியுள்ளார்கள்.

அறிவிப்பாளர்களை எடைபோடுவது கூட செய்தியைச் சரிகாணும் நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதனால் தான் பல அறிவிப்பாளர்களுக்கு அவர்கள் அறிவிக்கும் செய்திகளைக் கவனித்து வலிமையானவர் என்றும் மோசமானவர் என்றும் அறிஞர்கள் தீர்ப்பு அளிப்பார்கள். 

ஒரு அறிவிப்பாளர் நல்லவராக இருந்தாலும் அவரின் வழியாக பல மோசமான தகவல்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தால் மோசமான செய்திகளை அறிவிக்கக் கூடியவர் என்று கூறி அவரை நிராகரித்து விடுவார்கள். அதே நேரத்தில் மற்றவர்கள் அறிவிப்பதைப் போல் கூட்டாமல் குறைக்காமல் ஹதீஸ்களை அறிவித்தால் அவர் உயர்ந்த மனனத் தன்மை கொண்டவர் உறுதி மிக்கவர் என்று தீர்ப்பு சொல்வார்கள். 

இதிலிருந்து அறிஞர்கள் ஹதீஸின் கருத்தைக் கவனிப்பதில் எவ்வளவு அக்கரை காட்டியுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். 

நம்பகமானவர்கள் தவறு செய்ய மாட்டார்களா?

குர்ஆனிற்கு மாற்றமாக ஹதீஸ் வந்தால் இதில் நம்பகமான ஆட்கள் இருந்தாலும் இவர்களில் யாராவது தவறு செய்திருப்பார்களே தவிர நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிற்கு மாற்றமாக சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நாம் கூறுகிறோம். அது எப்படி நல்லவர்களாகவும் உறுதிமிக்கவர்களாகவும் உள்ள அறிவிப்பாளர்களிடமிருந்து தவறு வரும் என்று இதை அங்கீகரிக்காதவர்கள் கேட்கிறார்கள். 

மனிதர்களாகப் பிறந்த எவரும் எந்தத் தவறும் செய்யாமல் இருக்க முடியாது. இது அல்லாஹ் ஏற்படுத்திய நியதி. சாதாரண மனிதன் கூட விளங்கிக் கொண்ட உண்மை இது. இதனால் தான் சில நபித்தோழர்கள் குர்ஆனிற்கு மாற்றமாக சில ஹதீஸ்களைச் சொல்லும் போது ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த நபித்தோழர்கள் நல்லவர்கள் என்று சான்று தந்ததோடு தவறாக விளங்கியிருப்பார்கள் என்று கூறினார்கள். 

இதையெல்லாம் சொன்னாலும் இவர்கள் எதர்கெடுத்தாலும் ஹதீஸ் கலையில் இப்படி உள்ளதா? யாராவது உங்களுக்கு முன்னால் இது போன்று சொல்லியுள்ளார்களா? என்று கேட்பார்கள். எனவே இதற்கான சான்றுகளை ஹதீஸ் கலையிலிருந்து வழங்குவது நல்லதாகும். 

இமாம் அஹ்மத் பின் ஹம்பல் :

العلل - (ج 1 / ص 20)

لم يقتصر أهل الحديث على جمع التراجم بل بحثوا دقيقا في مروياتهم حتى روايات الثقات المعروفين منهم ولم يعتمدوا على كونهم ثقات ولم يفعوهم من البحث والنقد. فإن الثقة قد يهم ويخطى، فطرة الله التي فطر الناس عليها. فبحثوا في رواياتهم التي وهموا أو أخطأوا فيها، هذا ما عرف بعلم علل الحديث.

அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார் : ஹதீஸ் கலை அறிஞர்கள் (அறிவிப்பாளர்களின்) வரலாறுகளைத் தொகுத்ததோடு முடித்துக் கொள்ளவில்லை. மாறாக அறிவிப்பாளர்களில் அறியப்பட்ட நம்பகமானவர்களின் அறிவிப்புகள் உட்பட (அனைத்து) அறிவிப்பாளர்களின் அறிவிப்புகளிலும் நுட்பமாக ஆராய்ந்தார்கள். அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்கிறார்களே என்பதை மட்டும் அறிஞர்கள் சார்ந்திருக்கவில்லை. நல்ல அறிவிப்பாளர்களையும் கூட ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடவில்லை. 

ஏனென்றால் நம்பகமானவர் சிலவேளை தவறிழைப்பார். அல்லாஹ் மக்களை இந்த இயற்கையான அடிப்படையில் தான் படைத்திருக்கிறான். எனவே ஹதீஸ் கலை அறிஞர்கள் அறிவிப்பாளர்கள் எந்த அறிவிப்புகளில் தவறு செய்தார்களோ அந்த அறிவிப்புகளை ஆராய்ந்தார்கள். இல்மு இலலில் ஹதீஸ் (ஹதீஸில் உள்ள குறைகளைப் பற்றிய கல்வி) என்று இதற்குب சொல்லப்படும். 

நூல் : அல்இலல் பாகம் : 1 பக்கம் : 20

இமாம் தஹபீ :

تهذيب التهذيب ج: 7 ص: 208

والثقة قد يهم في الشيء

நம்பகமானவர் சிலவேளை சில விஷயங்களில் தவறு செய்வார். 

இமாம் சுயூத்தி :

تدريب الراوي ج: 1 ص: 75

وإذا قيل هذا حديث صحيح فهذا معناه أي ما اتصل سنده مع الأوصاف المذكورة فقبلناه عملا بظاهر الاسناد لا أنه مقطوع به في نفس الأمر لجواز الخطأ النسيان على الثقة

இது சஹீஹான செய்தி என்று சொல்லப்பட்டால் இதன் பொருள் என்னவென்றால் (முன்பு) கூறப்பட்ட தன்மைகளுடன் இதன் தொடர் முழுமை பெற்றுள்ளது என்று தான் அர்த்தம். எனவே அறிவிப்பாளர் தொடரின் வெளிப்படையை வைத்து அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்வோம். நல்லவர் கூட மறந்து தவறு செய்ய வாய்ப்புள்ளதால் உண்மையில் இது உறுதி செய்யப்பட்ட விஷயம் தான் என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ள மாட்டோம். 

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 75

மஹ்மூத் தஹ்ஹான் : 

المراد بقولهم : (هذا حديث صحيح ) أن الشروط الخمسة السابقة قد تحققت فيه لا أنه مقطوع بصحته في نفس الأمر لجواز الخطأ والنسيان على الثقة .

இது சரியான செய்தி என்று அறிஞர்கள் சொன்னால் முன்னால் சென்ற ஐந்து நிபந்தனைகள் இந்தச் செய்தியில் பெறப்பட்டுள்ளது என்பது தான் அதன் பொருள். உண்மையில் அந்தச் செய்தி உறுதி செய்யப்பட்டது என்ற அர்த்தம் அல்ல. ஏனென்றால் உறுதி மிக்கவரிடத்தில் கூட தவறும் மறதியும் வர வாய்ப்புண்டு. 

நூல் : தய்சீரு முஸ்தலஹில் ஹதீஸ் பக்கம் : 36

நம்பகமானவர்கள் குர்ஆனிற்கு மாற்றமாக அறிவிக்கும் போது இவர்களில் யாரோ தவறு செய்துள்ளார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்து விடுகிறது. குர்ஆனிற்கு முரண்பாடாக அறிவிப்பதை வைத்து இவர்கள் தவறு செய்துள்ளார்கள் என்று கூறுகிறோமே தவிர நாமாக யூகமாகக் கூறவில்லை. இந்த அடிப்படையில் தான் குர்ஆனிற்கு மாற்றமாக நம்பகமானவர்கள் அறிவித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறோம். 

நாம் எந்த ஹதீஸ்களைக் குர்ஆனிற்கு மாற்றமாக உள்ளது என்று கூறி மறுக்கிறோமோ அதில் உள்ள நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஏனைய ஹதீஸ்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தவறாக விளங்கிவிடக் கூடாது. 

குர்ஆனிற்கு முரண்படாதவாறு நம்பகமானவர்கள் அறிவித்தால் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால் இந்த ஹதீஸ்களில் அவர்கள் தவறு செய்தார்கள் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. நல்லவர்கள் முறையாக அறிவிப்பார்கள் என்ற பொதுவான நிலையைக் கவனித்து அவர்கள் அறிவிக்கும் செய்திகளை ஏற்றுக் கொள்வோம். தவறு செய்திருக்க வாய்ப்புள்ளது என்ற யூகத்தை இங்கு புகுத்தினால் உலகத்தில் யாரும் யாருடைய அறிவிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது.


'ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது. மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும். 

நபிவழி தொழுகை முறை



இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு - தொடர் 4


'இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு' என்ற தலைப்பில் மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் எழுதிய நூல் இங்கு தொடராக வெளியிடப்படும். முழு நூலையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்.




தொடர் - 4

பால்புகட்டுதல்:

பிறக்கும் குழந்தைகளுக்காகவே அல்லாஹ் ஏற்படுத்திய அற்புதம் தாய்ப்பாலாகும். முறையாக தாய்ப்பால் புகட்டப்பட்டக் குழந்தைகள் பிற்காலத்தில் அதிக நோய் எதிப்புச் சக்தியை பெற்றவர்களாகவும் திடகார்த்தம் உள்ளவர்களாகவும் திகழ்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள் நோஞ்சான்களாகவும் நோய்களின் பிறப்பிடமாகவும் மாறுகிறார்கள்.

இதை புரிந்து கொள்ளாமல் தாய்ப்பால் கொடுத்தால் தன் அழகு கெட்டுவிடும் என்று நினைத்து சில பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில்லை. அழகு என்பது இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது அழியத்தான் போகிறது. குழந்தையின் நலனில் அக்கரையுள்ள தாய்மார்களாக இருந்தால் கண்டிப்பாக தாய்ப்பால் தராமல் இருக்கமாட்டார்கள்.

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தாய்ப்பால் அவசியம் என்பதால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரண்டு வருடம் முழுமையாக பால்புகட்ட வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திக் கூறுகிறான்.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.

அல்குர்ஆன் (2 : 233)

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.

அல்குர்ஆன் (31 : 14)

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால்

அல்குர்ஆன் (46 : 15)

பால் குடியை மறப்பது இரண்டு ஆண்டுகள் என்று 31 : 14 வசனம் கூறுகிறது. ஆனால் 46 : 15 வசனத்தில் பால் குடி மறப்பதும், கர்ப்பமும் சேர்த்து முப்பது மாதங்கள் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கணக்குப்படி கர்ப்ப காலம் பத்து மாதத்தைக் கழித்தால் பால் குடி மறத்தல் 20 மாதங்கள் தான் ஆகின்றன.

எனவே பால் குடி மறத்தல் 2 வருடங்கள் என்பதும் 20 மாதங்கள் என்பதும் முரணாகவுள்ளதே என்று சிலர் நினைக்கலாம்.

கருவில் சுமார் பத்து மாதம் குழந்தை இருந்தாலும் அது மனிதன் என்ற நிலையையும், தன்மையையும் மூன்று மாதங்கள் கழித்தே அடைகிறது. எனவே மனிதனாகக் கருவறையில் சுமந்தது ஆறு முதல் ஏழு மாதங்களே. எனவே இவ்விரண்டு வசனங்களும் ஒன்றுக் கொன்று முரண்பட்டவை அல்ல.

கத்னா செய்தல்:

ஆண்களின் பாலுறுப்பில் இருக்கும் தேவையற்ற தோல்பகுதியை அகற்றுவதற்குப் பெயர் தான் கத்னா என்பது. இவ்வாறு செய்வதால் பாலுறுப்பினுள் விந்தோ சிறுநீரோ தங்கும் நிலை ஏற்படாது. இதன் மூலம் பாலுறுப்பு சுத்தமாக வைத்துக்கொள்ளப்படுவதால் ஏராளமான நோய்கள் அண்டுவதில்லை.

இல்லறவாழ்வின் போது கணவன் தன் மனைவியை திருப்தியடையச் செய்வதற்கு கத்னா காரணமாக உள்ளது. அறிவுப்பூர்வமான இந்த வழிமுறை கடைபிடிக்குமாறு இஸ்லாம் ஆண்களுக்குக் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகüல் அடங்கும்

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (5889)

பெண்களுக்கு கத்னா செய்யலாமா?

சிலர் அறிவின்மையினால் பெண்களுக்கும் கத்னாவை செய்துவிடுகிறார்கள். அதாவது பெண்களின் இல்லற இன்பத்தை குறைப்பதற்காக அவர்களின் பாலுறுப்பில் இன்பத்தை உணரும் பகுதியின் முனையை வெட்டிவிடுவார்கள்.

இறைவன் அளித்த பாக்கியமான இல்லற இன்பத்தை முழுமையாக பெண்கள் அடையமுடியாத துர்பாக்கியமான நிலை ஏற்படுகிறது. இவ்வாறு செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை.

பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்றக் கருத்தில் சில ஹதீஸ்கள் வருகிறது. அவற்றை அறிவிப்பவர்கள் பலவீனமானவர்களாக இருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

கத்னா செய்தல் ஆண்களுக்கு சுன்னத்தாகும். பெண்களுக்கு சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
நூல் : அஹ்மத் (19794)

இந்த ஹதீஸில் வரும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் பலவீனமானவர். இவர் அதிகமாக தவறிழைப்பவர் என்று இமாம் இப்னு ஹஜர் அவர்களும் இவர் வலிமையானவர் இல்லை என்று யஹ்யா பின் முயீன் அவர்களும் கூறியுள்ளார்கள்.

பைஹகீ இமாம் அவர்கள் தொகுத்த அஸ்ஸ‚னனுல் குப்ரா என்ற நூலில்  இதே ஹதீஸ் இப்னு சவ்பான் என்பவர் வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு சவ்பான் பலவீனமானவர். மேலும் இச்செய்தயில் அல்வலீத் பின் வலீத் என்வரும் இடம்பெருகிறார். இவரும் பலவீனமானவர். இந்த ஹதீஸை இமாம் பைஹகீ அவர்கள் பதிவு செய்துவிட்டு இது பலவீனம் என்பதை அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஏழாவது நாள் அன்று கத்னா செய்வது நபிவழியா?

நபி (ஸல்) அவர்கள் ஹஸன் ஹ‚ஸைன் ஆகிய இருவருக்கும் ஏழாவது நாள் அன்று கத்னா செய்தார்கள் என்று ஒரு ஹதீஸை இமாம் பைஹகீ அவர்கள் அஸ்ஸ‚னனுல் குப்ரா என்ற தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இச்செய்தியில் முஹம்மத் பின் அல்முதவக்கில் என்பவர் இடம்பெறுகிறார்கள். இவர் அதிகமாகத் தவறிழைப்பவர் என்று பல அறிஞர்கள் குறைகூறியுள்ளார்கள். இச்செய்தியை வலீத் பின் முஸ்லிம் என்ற அறிவிப்பாளரிடமிருந்து இவரைத் தவிர வேறுயாரும் அறிவிக்கவில்லை. எனவே இது பலவீனமான செய்தியாகும்.
எப்போது கத்னா செய்ய வேண்டும்?

குறிப்பிட்ட வயதிற்குள் கத்னா செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. கத்னா செய்வதினால் ஏற்படும் பல நன்மைகளை கவனித்துப் பார்க்கும் போது சீக்கிரமாக கத்னா செய்வது நல்லது என்று தெரிகிறது.

குழந்தைக்கு அளவிற்கு அதிகமாக நகம் வளரும் போது உடனே அதை அகற்றிவிடுகிறோம். ஆணுறுப்பின் முன்பகுதி தோலும் தேவையில்லாத ஒன்று தான். எனவே நகத்தை உடனடியாக அகற்றிவிடுவது போல் ஆணுறுப்பின் முன்தோலை அகற்றி சீக்கிரமாக கத்னா செய்வது உடலுக்கு ஆரோக்கியமானது.

கத்னா செய்தால் விழா எடுக்க வேண்டுமா?

கத்னா செய்வதற்காக பெரும் பொருட் செலவில் விருந்துகளை ஏற்பாடு செய்து கத்னா செய்யப்பட்டவர்களை பூமாலைகளால் அலங்கரித்து தெருக்களில் அழைத்து வரும் வழக்கம் தமிழகத்தில் இருக்கிறது. இதற்கு இஸ்லாத்தில் எள்ளவு கூட அனுமதியில்லை.

ஒரு நபிவழியை செய்வதற்கு இவ்வளவு ஆடம்பரங்களை செய்து பகிரங்கப்படுத்துவது குற்றமாகும். நகத்தை வெட்டுவதும் அக்குள் முடிகளை களைவதும் கத்னாவைப் போன்று ஒரு சாதாரண சுன்னத்தாகும். ஆனால் யாரும் நகத்தை வெட்டுவதற்கு விழாக் கொண்டாடுவதில்லை. முடிகளை களையும் போது அதை ஊருக்கெல்லாம் பகிரங்கப்படுத்துவதும் இல்லை. மறைக்க வேண்டிய விஷயத்தை பரப்புகின்ற அசிங்கத்தை செய்துகொண்டிருக்கிறார்கள்.

பெண் பருவ வயதை அடைந்து விட்டால் அதையும் ஊர் முழுவதும் பரப்புகிறார்கள். சடங்கு மஞ்சள் தண்ணீர் ஊத்துதல் என்று பலவிதமான மாற்றார்களின் வழிமுறைகளையும் கடைபிடிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். இதை செய்பவர்கள் நரகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதை விட்டும் நாம் அனைவரும் விலக வேண்டும்.
பிள்ளைகளை கொஞ்ச வேண்டும்

பெற்றொரின் பாசம் கிடைக்காத குழந்தைகள் சந்தோஷமில்லாமல் அமைதியற்ற நிலைக்கு ஆளாகுகிறார்கள். எனவே குழந்தைகளின் மீது பெற்றோர்கள் கட்டாயம் பாசத்தை பொழிய வேண்டும். குழந்தைகளை தூக்கிக் கொஞ்சுதல் கட்டியணைத்தல் முத்தமிடுதல் போன்றவைகள் மூலம் பாசத்தை வெளிப்படுத்தலாம்.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கüடம் வந்து, "நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உமது இதயத்தி-ருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர்  உமக்காக நான் என்ன செய்ய முடியும்?'' என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் ; ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5998)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹசன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ
பின் ஹாபிஸ் அத்தமீமீ (ரலி) அவர்கள், "எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்கüல் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை'' என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (5997)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தமது ஒரு தொடையின் மீதும் (தம் சொந்தப் பேரரான) ஹசன் பின் அலீ (ர-) அவர்களைப் பிடித்து தமது இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, "இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக!'' என்றார்கள்.

அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல் : புகாரி (6003)

குழந்தை பாசம் பெற்றோர்களை வழிகெடுத்து விடக்கூடாது:

சில பெற்றோர்கள் குழந்தைகளின் தவறான விருப்பதிற்கு கட்டுப்பட்டு மார்க்கம் தடுத்தக் காரியங்களை செய்துவிடுகிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களுக்கு சோதனையாகவும் அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் திருப்பக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் (8 : 28)

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் (64 : 14)

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும்  அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள்.

அல்குர்ஆன் (63 : 9)

குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடக்க வேண்டும்:

குழந்தைகளுக்கிடையில் நீதமாக நடப்பது பெற்றோரின் மீது கடமை. பல குழந்தைகள் இருக்கும் போது ஒருவருரை மட்டும் நன்கு கவனிப்பதும் கேட்பதையெல்லாம் ஒருவருக்கு மட்டும் வாங்கித் தருவதும் ஒருவரிடத்தில் மட்டும் பாசத்தை வெளிப்படுத்துவதும் குற்றமாகும். இதனால் பிஞ்சு மனம் கடுமையான நோவினைக்குள்ளாகும்.

 நீ தான் எனக்குப் பிடித்தவன். நீ தான் அறிவாளி. அவன் முட்டாள் என்பதைப் போன்ற ஏற்றத்தாழ்வுகளை காட்டும் வார்த்தைகளை குழந்தைகளிடத்தில் விதைப்பது அநியாயம். இதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

நுஃமான் பின் பஷீர் (ர-) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, "என் தந்தை அன்பüப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார்.  என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ர-) அவர்கள் என் தந்தையிடம், "நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்'' என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே!  நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பüப்பு ஒன்றைக் கொடுத்தேன்; அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, "இல்லை'' என்று பதிலüத்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகüடையே நீதி செலுத்துங்கள்'' என்று கூறினார்கள்.  இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பüப்பை ரத்து செய்தார்.

அறிவிப்பவர் : ஆமிர் பின் ஷர்ஹபீல்  (ரஹ்)
நூல் ; புகாரி (2587)

நபி (ஸல்) அவர்கள், "என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள்'' என்று கூறினார்கள் என்று புகாரி (2650) வது செய்தியில் உள்ளது.

குழந்தைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்:

குழந்தைகள் விஷயத்தில் அக்கரை காட்டாமல் அழுக்கான ஆடையில் அசிங்கமானத் தோற்றத்தில் அவர்களை தெருக்களில் திரிய விடும் தயார்மார்கள் சிலர் இருக்கிறார்கள். பின்வரும் ஹதீஸ்களை கவனத்தில் வைத்து இனிமேலாவது தங்கள் குழந்தைகளை பார்ப்பதற்கு அழகானவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மனிதர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : முஸ்லிம் (147)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை மோசமான ஆடையில் கண்டார்கள். உன்னிடத்தில் செல்வம் இருக்கிறதா? என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான் எல்லா செல்வங்களும் உள்ளது. அல்லாஹ் எனக்கு ஒட்டகத்தையும் ஆட்டையும் தந்துள்ளான் என்று கூறினேன். (நல்ல ஆடைகளை நீ அணிவதின் மூலம் உனக்கு இறைவன் அளித்த பாக்கியம்) உம்மிடத்தில் பார்க்கப்படட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மாலிக் பின் நள்லா (ரலி)
நூல் : திர்மிதி (1929)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது தலைவிரிக் கோலமாய் இருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். அவரது முடி (சீவப்படாமல்) பிரிந்திருந்தது. தனது முடியை படிய வைக்கும் பொருளை இவர் பெற்றுக்கொள்ளவில்லையா? (என்று கண்டித்துக்) கூறினார்கள். அழுக்கு படிந்த ஆடையில் இன்னொரு மனிதரைக் கண்டார்கள். தன் ஆடையைக் துவைத்துக்கொள்வதற்கு இவருக்குத் தண்ணீர் கிடைக்கவில்லையா? என்று (கடிந்துக்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : அபூதாவுத் (3540)

வீரர்களாக வளர்க்க வேண்டும்:

பேய் வருகிறது. பூச்சாண்டி வருகிறான் என்றெல்லாம் கூறி சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். இதனால் இவர்கள் பெரியவர்களாக ஆன பின்பும் பேய் பற்றிய பயம் அவர்களை விட்டும் அகலுவதில்லை. வீரதீர சாகசங்களை செய்ய விடாமல் பயம் அவர்களைத் தடுத்துவிடுகிறது.

வீரத்துடன் வளர்க்கப்பட்டக் குழந்தைகள் யாருக்கும் அஞ்சாமல் நியாயத்திற்காகப் போராடுவார்கள். என்றைக்காவது ஒருநாள் தனது குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படும் போது துவண்டுவிடாமல் பெற்றோருக்கு பக்கபலமாக இருந்து உதவியும் செய்வார்கள். நபித்தோழர்கள் தங்கள் குழந்தைகளை இவ்வாறு தான் வளர்த்தார்கள்.

நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது,  உஹுதுப் போர் நடந்த காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதியüக்கவில்லை. அகழ்ப் போரின் போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியüத்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி (2664)

தொடரும், இன்ஷா அல்லாஹ்

Monday, December 26, 2011

இதுதான் இஸ்லாம் (பாகம் 3)

புதுமனைத்தெருவில் தெருமுனை பிரச்சாரம்

27.12.2011 செவ்வாய்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு புதுமனைத்தெரு C.M.P லைன் ஹனீப் பள்ளி அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அன்வர் அலி அவர்கள் TNTJ யின்   பிப்ரவரி 14 போராட்டம் பற்றியும், மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

Sunday, December 25, 2011

புதிய நிர்வாகிகள் தேர்வு

T N T J  ( U A E) அதிரை கிளையின் நிர்வாகிகள் தோ்வு 23.12.2011 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு சகோதரர் L M I அப்பாஸ் ரூம் மாடியில் துபை மண்டல தலைவர் அப்துல் நாசிர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ் கண்ட நிர்வாகிகள் தோ்வு செய்யப்பட்டார்கள்.

தலைவர்: கலீல் ரஹ்மான்  0509146760

செயலாளர்: சாகுல் ஹமீது 0505063755
பொருலாளர்: னநனா முகம்மது 0504267341

துனை தலைவர்: நஜ்முதீன் 0505958092

துனை செயலாளர்: நஸ்ருதீன் 0556942416

ஆலோசனை குழு:

செய்யது முகம்மது புகாரி 0502955749
A M S அப்துல் வஹாப் 0506950916
L M I முகம்மது அப்பாஸ் 0506557432

A ஜமால் முகம்மது 0506788933
M K M ஜமால் முகம்மது 0504541383

இதுதான் இஸ்லாம் (பாகம் 2)

பட்டூரில் நடந்த மார்க்க விளக்கபொதுக்கூட்டத்தில் சகோதரர் பி ஜே அவர்கள் இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பில் ஆற்றிய உரை

Saturday, December 24, 2011

நடுத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

T N T J அதிரைகிளையின் சார்பாக 23.12.2011 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு நடுத்தெடு E P M S பள்ளி அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்



Tuesday, December 20, 2011

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில் இணை கற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களானார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணை வைப்போர் என்று ஒரு சாரார் இருக்கவில்லை. இணை வைக்கும் செயலும் இருக்கவில்லை. அதாவது இணை வைக்காமல் இருந்தால் தான் முஸ்லிம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்து நிலைமை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சில கிராமவாசிகள் நம்ப வேண்டியவைகளை நம்பாமல் முஸ்லிம்கள் பட்டியலில் இருந்தாலும் அவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்கும் பிரச்சனை எழவில்லை.எனவே நபிகள் நாயகம்காலத்தில் இந்தக் கேள்வியே எழவில்லை.

ஆனால் இஸ்லாத்தை விளங்கிப் பின்பற்றாமல் பரம்பரை அடிப்படையில் முஸ்லிம்கள் உருவான பிறகு அடிப்படைக் கொள்கை தெரியாத ஒரு சமுதாயம் பிற்காலத்தில் முஸ்லிம்களுக்குள் கலந்தது. அவர்களிடம் இணை வைப்பும் நுழைந்தது.

எனவே இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்றோ பின்பற்றக் கூடாது என்றோ நேரடியாக ஆதாரம் இருக்க முடியாது.

நபிகள் நாயகம் காலத்தில் இல்லாத விஷயங்கள் பிற்காலத்தில் தோன்றினால் அதற்கு நேரடி ஆதாரம் இருக்காதே தவிர எவ்வாறு முடிவு செய்வது என்ற அடிப்படை நிச்சயமாக இருக்கும். ஏனெனில் இது போன்ற நிலை ஏற்படும் என்று இறைவனுக்குத் தெரியும். எனவே பிற்காலத்தவர்கள் அந்தப் பிரச்சனையைச் சந்திக்கும் போது எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு அடிப்படை உள்ளதா என்ற வகையில் தான் இதை அணுக வேண்டும்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய வேண்டும்.

ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون(17)9

لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاة ويحذركم الله نفسه وإلى الله المصير(28)3

பின்வரும் வசனங்களும் இதே கருத்தைக் கூறுகின்றன.

ياأيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون(23)9

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும்,உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்!89உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.

திருக்குர்ஆன்9:23

الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا(139)4

நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை அவர்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர்.89கண்ணியத்தை அவர்களிடம் தேடுகிறார்களா?கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.

திருக்குர்ஆன்4:139

ياأيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا(144)4

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா?

திருக்குர்ஆன் 4:144

தொழுகையில் நமக்காகவும் அனைவருக்காகவும் பாவ மன்னிப்புக் கோரும் துஆக்கள் உள்ளன. அந்த துஆவில் இமாமும் அடங்குவார். ஆனால் பின்வரும் வசனம் இதைத் தடை செய்யும் வகையில் உள்ளது.

ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم(113)9

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர்,அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும்,இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

திருக்குர்ஆன் 9:113

இணை கற்பிப்பவரை இமாமாக ஏற்றுப் பின்பற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் இந்தக் கட்டளை - நபிகள் நாயகத்துக்கும் இப்ராஹீம் நபிக்கும் கூட தளர்த்தப்படாத இந்தக் கட்டளை- மீறப்படும் நிலை ஏற்படும்.

எனவே இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்ற அறவே அனுமதி இல்லை என்பதில் சந்தேகம் இல்லை.
நன்றி
ஆன்லைன்பிஜே


Sunday, December 18, 2011

ஜும்ஆ பயான் 16.12.2011

Saturday, December 17, 2011

Friday, December 16, 2011

தப்லீக் ஜமாஅத்தின் கொள்கை என்ன?

தப்லீக் ஜமாஅத்தினர் சில நன்மையான காரியங்களைச் சிறப்பான முறையில் செய்து வருவதை யாரும் மறுக்க இயலாது. மக்களைத் தொழுகைக்கு அழைப்பது அதிகமான வணக்கங்கள் புரிவது பாவம் செய்துகொண்டிருந்தவர்களுக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது சில மார்க்க விஷயங்களைப் பிடிப்பாகவும் பேணுதலாகவும் இருப்பது இது போன்ற நல்ல விஷயங்களை இவர்களிடம் காண முடிகிறது. இவ்விஷயத்தில் இவர்களை நாம் பாராட்டவே செய்கிறோம்.

இவர்கள் புரியும் இந்த நன்மையான காரியங்களை மட்டும் சிலர் கவனத்தில் கொண்டு இவர்கள் தான் மிகச் சரியாக செயல்படுகிறார்கள் என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர். தப்லீக் ஜமாஅத்தினருக்கு இப்படி ஒரு முகம் இருப்பது போன்று இவர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கின்றது. இவர்களுடைய மறுபாதியை பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

ஒருவருடைய அனைத்து செயல்பாடுகளை வைத்துத் தான் அவர் நல்லவரா? கெட்டவரா? என்ற முடிவை எடுக்க வேண்டும். சமுதாயத்துக்கு தீங்கிழைக்கும் தீயவர்களிடம் கூட சில நன்மையான காரியங்களைப் பார்க்கத் தான் முடிகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக அவர்களை நல்லவர்கள் என்று நாம் கூறி விடுவதில்லை. அவர்களின் அனைத்து செயல்பாடுகளையும் கவனத்தில் கொண்டே முடிவெடுக்கின்றோம்.

இதே போன்று தான் தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் நாம் முடிவெடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். இவர்களிடம் பல நன்மையான காரிங்கள் இருப்பதைப் போன்று ஏராளமான வழிகேடுகளும் தவறான நம்பிக்கைகளும் நிறைந்துள்ளது.


இஸ்லாத்தைப் புறக்கணிப்பவர்கள்:

நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுக்கும் பணியை இஸ்லாம் இந்தச் சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மீதும் சுமத்தியுள்ளது. குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் தீமையைத் தடுப்பதின் அவசியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது.

குர்ஆன் நன்மையை மட்டும் ஏவவில்லை. தீமைகளைத் செய்யக் கூடாது எனத் தடுக்கவும் செய்கின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தூதுப் பணியில் நன்மையை மட்டும் ஏவவில்லை. மாறாக சமுதாயத்தில் நிலவியிருந்த அனைத்துத் தீமைகளையும் தடுத்து ஒழிக்கப் பாடுபட்டார்கள். அவற்றை சமூகத்திலிருந்து அகற்றியும் காட்டினார்கள்.

இப்படிப்பட்ட ஒரு முக்கியமான பணியைச் செய்ய வேண்டியதில்லை என்பது தப்லீக் ஜமாஅத்தின் கொள்கை. நன்மையை மட்டும் சொன்னால் போதும். தீமை தானாக சென்று விடும் என்று குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிராகப் பேசி வருகின்றனர்.

இஸ்லாம் என்றாலே நன்மையை ஏவும் மார்க்கம். தீமையைத் தடுக்கும் மார்க்கம். இந்த இரண்டில் ஒன்றை ஏற்று மற்றொன்றை விட்டதன் மூலம் இவர்கள் இஸ்லாத்தின் ஒரு பாதியை புறக்கணித்து விட்டனர்.

நன்மைகளைச் சொல்லும் போது மக்கள் எதிர்ப்பதில்லை. தீமைகளைக் கண்டிக்கும் போது தான் எதிர்ப்புகளும் சிரமங்களும் தலை தூக்குகின்றன. இந்தச் சிரமங்களை எதிர்கொள்ளும் மனப் பக்குவம் இல்லாத இவர்கள் தங்களால் இது இயலாது என்று கூறி ஒதுங்கி விட்டால் அது வேறு விஷயம்.

ஆனால் அவ்வாறு தனது இயலாமையை ஒப்புக் கொள்ளாமல் அதை மறைப்பதற்காக நன்மைகளை மட்டும் சொல்வதே சிறந்த மார்க்கப் பணி என்றும் இதுவே அறிவுப்பூர்வமான வழி என்றும் பொய்யான தத்துவத்தைக் கூறுவதை ஒருக்காலும் ஏற்க முடியாது.

சமூகத் தீமைகளை ஒழிக்கவில்லை:

இவர்களின் இந்தத் தவறான கொள்கையால் தான் சமுதாயம் கெட்டு நாசமாகி உள்ளது. தமிழகத்தில் தவ்ஹீது வருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே இவர்கள் இருந்தனர். இவர்களின் வாதத்தில் உண்மை இருந்தால் இவர்கள் சமுதாயத்துக்கு நன்மையை ஏவிய காரணத்தால் சமூகத்தில் தீமை அழிந்து நல்ல நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் தவ்ஹீது ஆரம்பித்த அந்தக் காலகட்டத்தில் சமுதாய நிலையோ படுமோசமாக இருந்தது. இணைவைப்பு, பித்அத், வட்டி, வரதட்சணை, மூட நம்பிக்கைகள் மற்றும் எல்லா அநாச்சாரங்களும் வீரியமாக நடந்தேறிக் கொண்டிருந்தது.

தீமையைத் தடுக்காததின் விளைவால் அந்நேரத்தில் தொழுகையாளியாக இருந்த பலர் இணைவைத்துக் கொண்டும் பித்அத்களை செய்து கொண்டும் மூடநம்பிக்கைகளில் மூழ்கியும் இருந்தனர். வட்டி வரதட்சணை போன்ற பாவங்களைச் சர்வ சாதாரணமாக செய்து கொண்டிருந்தார். பள்ளிவாசல் நிர்வாகிகளே பாவமான காரியங்களுக்கு முன்னோடியாக இருந்தனர். தப்லீக் ஜமாஅத்தினர் தீமையைக் கண்டிப்பதை விட்டுவிட்டு நன்மையை மட்டும் ஏவியதே இந்த மோசமான நிலைக்குக் காரணம்.

இதன் பிறகு தவ்ஹீது பிரச்சாரம் முடிக்கிவிடப்பட்டு தீமைகளுக்கு எதிராகக் குரல் ஒலித்த பின்பே இந்தத் தீமைகள் ஓரளவுக்கு ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டன.

சமுதாயத்தில் இந்தத் தீமைகள் புரையோடிப் போயிருந்ததற்கு இவர்களுடைய இந்த தவறான கொள்கையும் ஒரு காரணம். சிரமம் இல்லாமல் மார்க்கப் பணி ஆற்ற வேண்டும் என்ற எண்ணமே இந்த நிலைபாட்டிற்கு இவர்களைத் தள்ளியது.

தீமையைத் தடுத்ததின் விளைவால் வரலாற்றில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்கூடாகக் கண்ட பிறகும் கூட தங்களின் நிலைபாட்டை இவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை. இன்றும் இவர்கள் தீமைகளைக் கண்டித்துப் பேசுவதில்லை.
தீமைகள் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. எனவே தான் வரதட்சணை போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் திருமணங்களில் சர்வ சாதாரணமாக கலந்து கொள்கின்றனர். சில நேரங்களில் தாங்களே இத்தீமைகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கொஞ்சம் கூட தடுமாறாமல் இவற்றைச் செய்து விடுகின்றனர். மார்க்கத்திற்கு எதிராக உறவோ நட்போ வரும் போது மார்க்கத்தை விட உறவுக்கும் நட்பிற்குமே முன்னுரிமை கொடுக்கின்றார்கள்.

இஸ்லாமிய பிரச்சாரத்தின் பாதியைப் புறக்கணிக்கச் சொல்லும் இப்படிப்பட்ட ஜமாஅத்தால் சமுதாயம் ஒருக்காலும் முன்னுக்கு வர முடியாது. இவர்களால் சமுதாயத்தை நல்ல ஒரு நிலைக்கு கொண்டு வரவும் முடியாது.


அடிப்படையில் கோளாறு:

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே ஒரு முஸ்லிமுடைய அடிப்படைக் கொள்கையாகும். இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டவர் மறுமையில் வெற்றி பெற முடியாது.

தப்லீக் ஜமாஅத்தினர் இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டுள்ளனர். குர்ஆன் ஹதீஸை என்ற வட்டத்தைத் தாண்டி மத்ஹபுகளை மார்க்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மத்ஹபுச் சட்டங்கள் மனிதர்களின் சுய சிந்தனையால் உருவாக்கப்பட்டவை. குர்ஆனுடனும் ஹதீஸ்களுடன் மோதும் வகையில் அமைந்தவை. இந்த வழிகேட்டை இவர்கள் சரி என்று நம்புகின்றனர். தனது வணக்க வழிபாடுகளை இதனடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர். இந்த சட்டங்கள் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் மாற்றமாக அமைந்திருப்பதை அறிந்த பின்னரும் இவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.


தவ்ஹீதை மட்டும் எதிர்ப்பார்கள்:

தீமைகளைத் தடுக்க வேண்டியதில்லை என்ற கொள்கையில் உள்ள இவர்கள் நம் விஷயத்தில் மட்டும் இக்கொள்கையைத் தளர்த்திக் கொண்டனர்.

இவர்களின் கருத்துப்படி நமது கொள்கையும் செயல்பாடுகளும் தீமையானது. இவர்களின் கொள்கைப்படி பார்த்தால் இவர்கள் நம்மை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் இவர்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் நமக்கு எதிராக முழு முயற்சியுடன் செயல்படுகின்றனர். எப்பாடு பட்டாவது நம்மை அழித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.

தப்லீக் உலமாக்களும் கப்று வழிபாட்டை ஆதரிக்கும் பரேலேவிகளும் கொள்கையில் மாறுபட்டவர்கள். தர்ஹா வழிபாட்டை அங்கீகரிக்காத தப்லீக் உலமாக்கள் பரேலவிஸத்திற்கு எதிராகப் போர்க்குரல் கொடுக்கவில்லை. போர்க்கொடி உயர்த்தவில்லை.

மாறாக மத்ஹபுகள் கூடாது என்று நாம் சொன்னதற்காக இவர்களும், பரேலவிகளும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, நமக்கு எதிராகக் கை கோர்த்துக் கொண்டு நம்மைப் பூண்டோடு களையெடுக்கக் களமிறங்கினர்.

தப்லீக் அணியில் முன்னணி வகித்து சமீபத்தில் காலமான கலீல் அஹ்மது கீரனூரி அவர்கள் நமக்கு எதிராகப் போர் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். பரேலவிஸத்தை எதிர்ப்பதை விட நம்மை எதிர்ப்பதில் தான் முனைப்புடன் செயல்பட்டார். தப்லீகும், பரேலவிஸமும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமானது. இப்படிப்பட்டவர்கள் நம்மை எதிர்ப்பதில், ஒழிப்பதில் ஓரணியில் நின்றனர் என்றால் இவர்களது வெறுப்பு எந்த அளவுக்கு ஆழமானது என்பதை நம்மால் உணர முடிகின்றது.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இவர்கள் நம்மை மேடையில் பிளந்தெடுத்தது போன்று பரேலவிகளைப் பிளந்தெடுக்க வேண்டாம். கொஞ்சம் பிடித்தாவது விடலாம். அப்படிக் கூடச் செய்யவில்லை. ஆனால் நம்மை வாட்டி வறுத்தெடுக்க வகை வகையான கூட்டங்கள், மாநாடுகள்!

அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்! தீட்டத் தீட்ட வைரம் மிளிரும் என்பது போல் இவர்கள் நம்மைத் திட்டத் திட்ட இறையருளால் நாம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறோம், அல்ஹம்து லில்லாஹ்!

இன்று இஸ்லாமிய மாநாடுகள் என்றால் அது ஏகத்துவ மாநாடுகள் என்றாகி விட்டன. இவர்களது மாநாடுகளே பள்ளிவாசலின் வளாகங்களில் தான் நடக்கின்றன. இது தமிழகத்தில் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கும் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஆகும்.

தனிமனித வழிபாடு:

இஸ்லாம் அனுமதிக்காத தனிமனித வழிபாட்டை இவர்களிடம் காண முடியும். அமீர் ஷாப் என்று ஒருவரை ஏற்படுத்தி அவரை மற்ற மனிதர்களை விட்டும் வித்தியாசப்படுத்திப் பார்க்கின்றனர். மக்கள் நீண்ட அணியில் நின்று ஒருவர் பின் ஒருவராக அவரிடம் முசாபாஹா செய்யும் பழக்கத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

இந்த அமீர் இறைநேசர் என்பது நூறு சதவீதம் உறுதியானதைப் போன்றும் இவரிடம் முசாபாஹா செய்தால் தனக்கு நல்வாழ்வு கிடைப்பது நிச்சயம் என்ற நம்பிக்கையிலும் இவ்வாறு முசாபஹா செய்கின்றனர்.

இது இஸ்லாத்திற்குப் புறம்பானதாகும். அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார்? அவனுக்கு நெருக்கமானவர் யார்? என்பதை யாராலும் உறுதிபடக் கூற முடியாது. அப்படி ஒருவர் உறுதியாக அறியப்பட்டாலும் கூட இவ்வாறு செய்து மக்களை விட்டும் தன்னை தனிமைப்படுத்தி பெருமைப்படுத்திக் கொள்வது கூடாது.

ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, இந்த உலகத்தில் வாழும்போதே அவர்களால் இறைநேசர்கள் என்று சான்று வழங்கப்பட்ட அவர்களின் தோழர்களோ இவ்வாறு தங்களை மக்களிடம் பெருமைபடுத்திக் கொள்ளவில்லை. மாறாக மக்களுடன் மக்களாக எல்லோரையும் போன்றே வாழ்ந்தார்கள். பணிவை வெளிப்படுத்தினார்கள். சொல்லப் போனால் தங்களை மக்களுக்குப் பணியாற்றும் பணியாளர்கள் என்றே கருதி மக்கள நலப் பணிகளை செய்தனர்.


பெரியார் கதைகள்:

இவர்கள் மக்களுக்கு நல்லுபதேசங்களைச் செய்கின்ற போது மக்களுக்குத் தேவையான சரியான தகவல்களை மட்டும் கூறுவதில்லை. மாறாக பொய்யான கதைகளையும் கப்சாக்களையும் கூறுகின்றனர்.

பெரும்பாலும் இந்த கப்சாக்கள் பெரியார்களைப் பற்றிய கதைகளாகவே இருக்கின்றது. இவை கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் இவற்றைச் சிந்தித்துப் பார்த்தால் இவற்றில் ஏராளமான அறியாமையும் மார்க்கத்திற்கு முரணான அம்சங்களும் இருப்பதை காணலாம்.

மனித குலத்துக்குத் தேவையான அனைத்து உபதேசங்களும் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஏராளமாக பரவி கிடக்கின்றது. அப்படியிருக்க இந்த புருடாக்கள் எதற்கு? இவை மக்களை அறிவீனர்களாக ஆக்குமே தவிர அறிவாளிகளாக ஆக்காது.

கடமை தவறுபவர்கள்:

ஒரு மனிதன் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை இஸ்லாம் வலியுறுத்துவதைப் போன்று பிற மனிதர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இந்தக் கடமைகளை ஒருவர் முறையாக நிறைவேற்றினாôல் இதுவும் வணக்கமாகி விடுகின்றது. எனவே அதற்கு நன்மை உண்டு என்று மார்க்கம் கூறுகின்றது.

இஸ்லாத்தின் உபதேசங்கள் கொள்கை கோட்பாடுகள் சட்டதிட்டங்கள் ஆகியவை அனைத்தும் பிறரைப் பாதிக்காத வகையில் பிறருக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய வகையிலேயே அமைந்துள்ளது.

மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காக குறிப்பிட்ட சில நாட்களை இதற்கு என ஒதுக்குவது மார்க்கத்தில் குற்றமில்லை. மாறாக இது ஒரு நன்மையான காரியமே. ஆனால் தான் ஆற்ற வேண்டிய மற்ற கடமைகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் இந்த நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும்.

இந்த சாதாரண விஷயத்தைக் கூட தப்லீக் ஜமாஅத்தினர் விளங்கவில்லை. ஒரு வாரம் ஜமாஅத், 40 நாள் ஜமாஅத் என்று பல நாட்களை ஒதுக்குமாறு இவர்கள் மக்களிடம் கூறுகின்றனர். குடும்ப சூழ்நிலையின் காரணத்தால் இதில் வர இயலாதவர்களும் இருப்பார்கள். இத்தகையவர்கள் நாங்கள் கடையைப் பார்க்க வேண்டியுள்ளது. குடும்பத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் எங்களால் ஜமாஅத்திற்கு வர இயலாது என்று கூறுவர்.

ஆனால் ஜமாஅத்தினர் இவர்களை விட்டு விடுவதில்லை. குடும்பத்தை அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று கூறி இவர்களை அழைத்துச் சென்று விடுகின்றனர்.

இவர்களின் இத்தகைய பிரச்சாரத்தால் பலர் தான் ஆற்ற வேண்டிய கடமைகளை விட்டுவிட்டு அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் ஜமாஅத்திற்குப் புறப்பட்டு விடுகின்றனர். ஆனால் இவர்களின் குடும்பமோ ஊரில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்.

தப்லீக் ஜமாஅத்தில் செல்லும் பலரது குடும்பம் இந்தச் சிரமத்தை அனுபவித்து வருகின்றது. பலர் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்துள்ளனர். அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற குருட்டு நம்பிக்கையே இதற்குக் காரணம்.

தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்துவிட்டு இதன் பிறகே இறைவன் பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் இவர்களோ முயற்சியைக் கைவிட்டுவிட்டு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறார்களாம்.

சாப்பாட்டு விஷயத்தில் இறைவன் மீது பழிபோடாமல் தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை முறையாக செய்கின்றனர். ஜமாஅத்திற்குச் செல்லும் போது உணவுப் பொருட்களையும் பாத்திரங்களையும் ஒன்று விடாமல் தேவையான அனைத்தையும் எடுத்துச் செல்கின்றனர். இறைவன் பார்த்துக் கொள்வான் என்று கூறி இவற்றை விட்டு விடுவதில்லை.

மேலும் தப்லீக் ஜமாஅத்தில் உள்ள பலர் எளிமை என்ற பெயரில் தங்களைத் தானே வருத்திக் கொள்கின்றனர். மார்க்கம் அனுமதித்த இன்பங்களை ஹராமாக்கிக் கொள்கின்றனர்.

நன்றி

ஹஜ் பெருநாள் உரை

7.11.2011 ஹஜ் பெருநாள் தொழுகை மழையின் காரணமாக சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில செயலாளா் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸியின் பெருநாள் உரை

Thursday, December 15, 2011

தர்பியா நிகழ்ச்சி

3.12.2011 அன்று தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சியின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவா்களின் உரை





தர்ஹா வழிபாடும் பேய் பிசாசும் (வீடியோ)

பேய் பிசாசு உண்டா? தர்ஹா வழிபாட்டிற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்?


பாகம்-1



பாகம்-2


பெண்கள் தேர்தலில் போட்டியிடலாமா?

பெண்களை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தக் கூடாது என்பது சரிதான். அது போல் முஸ்லிமல்லாதவர்களை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தக் கூடாது என்றும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.

நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது. அல்குர்ஆன் (3 : 28)

இறை மறுப்பாளர்களை நமது பொறுப்பாளர்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது. இதன்படி பார்த்தால் நாடாளுமன்றம், சட்டமன்றம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் நாம் பெரும்பாலும் வாக்களிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வர வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில முஸ்லிம்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் தான் வாக்களிக்க வேண்டும்.

ஒரு வகையில் பார்த்தால் அதுவும் கூடாது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் முஸ்லிமுக்கு வாக்களித்தாலும் அந்த முஸ்லிம் கருனாநிதியையோ ஜெயலலிதாவையோ விஜயகாந்தையோ முதல்வராக ஆக்குவதற்குத் தான் போட்டி இடுகிறார். இந்த அடிப்படையில் பார்த்தால் நாம் யாருக்கும் வாக்களிக்கக் கூடாது என்று முடிவு செய்ய வேண்டும். ஆனாலும் இதை நாம் சரியான முறையில் புரிந்து கொண்டிருப்பதால் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வாக்களித்துத் தான் வருகிறோம்.

அதாவது மேற்கண்ட கட்டளை இஸ்லாமிய அரசு அமையும் வாய்ப்பு உள்ள நாட்டுக்கும் அதற்கேற்ற காலச் சூழ்நிலைக்கும் உரிய சட்டமாகும். இஸ்லாமிய அரசு உருவாக வாய்ப்பு இல்லாத போது மற்றவர்களைத் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் படு மோசமானவர்களை விட்டு விட்டு அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்களைத் தான் தேர்வு செய்ய இயலும். நாம் விரும்பினாலும் முஸ்லிம் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய முடியாத போது அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான்.

மேற்கண்ட வசனத்தில் அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர என்று விதிவிலக்கு கூறப்படுகின்றது. அதாவது நம்முடைய பாதுகாப்பிற்காக வேண்டி ஒரு இறை மறுப்பாளரை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழல் வந்தால் அவரை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்று இவ்வசனம் கூறுகின்றது.

இது போல் இஸ்லாம் கூறுகின்ற முறையில் ஆட்சியாளர்களாக ஆண்களைத் தேர்வு செய்ய முடியாமல் பெண்களைத் தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டால் அதே நிர்பந்தம் காரணமாக பெண்களுக்கு வாக்களிக்கலாம். பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட உள்ளாட்சித் தலைவர் பதவிக்கு பெண்களைத் தான் தேர்வு செய்ய முடியும்.

நம்முடைய சமுதாயப் பெண்கள் போட்டியிடும் போது ஆண்களுடன் தனித்திருத்தல் போன்றவற்றைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

காயடிக்கப்பட்ட பிராணியை அகீகா கொடுக்கலாமா?

அகீகாவுக்கான பிராணிகளுக்கு தனியாக சட்டம் எதுவும் கூறப்படவில்லை. ஆனாலும் குர்பானிப் பிராணிகளுக்கான சட்டங்கள் கூறப்பட்டுள்ளன. குர்பானியும் அகீகாவும் அல்லாஹ்வுக்காக செய்யப்படும் வணக்கம் என்பதால் குர்பானிப் பிராணிகளை போல் அகீகா பிராணியும் இருப்பதே சிறந்ததாகும்.

காயடிக்கப்பட்ட பிராணியை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்ததாக அஹ்மதில் ஒரு ஹதீஸ் இடம் பெறுகிறது. இந்த ஹதீஸில் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்ற பலவீனமானவர் இடம் பெறுகிறார். இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருந்தாலும் காயடிக்கப்பட்ட ஆட்டைக் கொடுப்பதற்கு நம்பத் தகுந்த ஹதீஸ்களில் எந்தத் தடையும் வரவில்லை. ஆட்டிற்குக் காயடிப்பதினால் அதன் வளர்ச்சி நன்றாக இருக்குமே தவிர தரம் எந்த விதத்திலும் குறைந்து விடாது. ஆகையால் காயடிக்கப்பட்ட பிராணிகளையும் குர்பானி கொடுக்கலாம். அது போல் அகீகாவும் கொடுக்கலாம்

நன்றி
ஆன்லைன்பிஜே

Sunday, December 11, 2011

அஷ்அரி குலத்தாரின் பெருந்தன்மை

தொடர்:4
மனாஸ் இலங்கை

இந்த உலகம் எத்தனையோ குலங்களையும் கோத்திரங்களையும் சமயங்களையும் சமுதாய அமைப்புக்களையும் இது நாள் வரையும் கண்டு வந்துள்ளது. ஆனால் இஸ்லாத்தைக் கண்டும் காணாதது போன்று இந்த உலகில் வாழும் பெரும்பான்மையான இனத்தவர்களும் மதத்தவர்களும் வாழ்ந்து வருகிறன்றர். இவர்கள் எவரிடமும் காணப்படாத அளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் விட்டுக்கொடுப்பும் பெருந்தன்மையும் ஏராளமாக காணப்படுகிறது. நபிமார்கள் முதல் அவர்களுடைய தொண்டர்கள் அவர்களை இது நாள்வரையும் பின்பற்றுபவர்களிடமும் காணப்படுகிறது. பெருந்தன்மை என்றால் இஸ்லாத்தில் தான் என்பதற்கு இப்போது மேலும் ஒரு சான்றுகளை நாம் பார்ப்போம்.

இதனால்தான் திருமறைக்குர்ஆன் நபிகளாரின் அருமைத் தோழர்கள் பெருந்தன்மையை சிலாகித்துக் இவ்வாறு கூறுகிறது.

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ளமாட்டார்கள். தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்தி­ருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். அல்குர்ஆன்:59:09

இப்படியும் பெருந்தன்மையா என்று நானும் நீங்களும் இந்த உலகமும் இன்று வரை கண்டுள்ளதா? என்பதை இந்த செய்தியைப் பாருங்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்துவிட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களிடம் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக்கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்.
அறிவிப்பவர்: அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள்
ஆதாரம் புகாரி:2486

பெருந்தன்மைக்கு இஸ்லாத்தை விட எந்த ஒரு மார்க்கத்தையும் காணமுடியாது. அந்த அளவுக்கு எந்த செயலை எடுத்துக்கொண்டாலும் அதில் பெருந்தன்மைக்கு இஸ்லாம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அது ஒரு மனிதனுக்கு அத்தியவசியமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெருந்தன்மையோடு இஸ்லாம் அவர்களையும் அதில் ஒன்றினைத்து தேவையுடைவர்களுக்கு கொடுத்து அவர்களின் தேவைகளையும் நமது தேவையாக நினைத்து நடந்து கொள்ளும் படி கட்டளையிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமாகும். இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) அவர்கள்
ஆதாரம் புகாரி:5392

இதனால் தான் இஸ்லாம் அடுத்தவர்களின் துன்பங்களிலும் கஷ்டங்களிலும் உன்னுடைய பங்களிப்பையும் அவர்களுக்கு கொடுத்து அவர்களின் கஷ்டங்களை நீக்க பாடுபடவேண்டும் என்று நமக்கு கட்டளையிடுகிறது. அது மாத்திரமல்லாமல் இப்படி யார் இவர்களின் கஷ்டங்களையும் சிரமங்களையும் போக்குவோருக்கு பல விதமான சிறப்புக்களை திருமறைக் குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் பென் மொழிகளும் நமக்கு கட்டளையிடுகின்றன.

கடன் கொடுத்து அதனை திருப்பி தரமுடியாதவர்களிடம் அதனை அல்லாஹ்வுக்காக அவனின் திருப்பதியை நாடி அந்தக் கடனை தள்ளுபடி செய்து விடுவதும் பெருந்தன்மைதான்.

கடன் பற்றி திருமறைக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அல்குர்ஆன்: 2:245

''அல்லாஹ்வுக்கு அழகிய கடன் வழங்குதல்'' என்றால் அல்லாஹ்வுக்கு கொடுப்பது அல்ல மாற்றமாக தேவையுடைய மனிதர்களுக்கு வழங்குவதே இது குறிக்கிறது. அல்லாஹ்வுக்கு கடன் கொடுப்பது என்று கூறி அதனை ஏழை எளியோருக்கும் தேவையுடையோருக்கும் அல்லாஹ் கொடுக்கும் படி கட்டளையிடுகிறான். அழகிய கடன் கொடுத்தால் அது கூட ஒரு வகையில் பெருந்தன்மையாகும்.

இதற்கு சான்றாக நபி (ஸல்) அவர்கள் முன்னோரு காலத்து மனிதரைப் பற்றி கூறிப்பிடும் போது அவர் மனிதர்களுக்கு கடன் கொடுத்து அந்தக் கடனை அந்த மனிதரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லையென்றால். அவரைக் கஷ்டப்படுத்தாமல் அவருக்கு நோவினை செய்யாமல் கெட்ட வார்த்தையால் திட்டாமல் அல்லாஹ்வும் நம் விசயத்தில் பெருந்தன்மையாக நடப்பான் என்று என்று அந்தக் கடனை தள்ளுபடி செய்தார் அதனால் அல்லாஹ்வும் அவருடன் பெருந்தன்மையாக நடந்து கொண்டான். இப்படிப்பட்டவர்களாக நாமும் மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும். அவருடன் பெருந்தன்மையாக நடந்தார் அவருடன் அல்லாஹ்வும் பெருந்தன்மையாக நடந்து கொண்டு மக்கள் சிரமப்படும் போது (முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தனது (அலுவலரான) வாலிபரிடம், ''(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும்'' என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்த போது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் புகாரி:3480

தொடரும்.....





Saturday, December 10, 2011

சந்திர கிரகணத்தொழுகை

இன்று இரவு 6.15 மணிக்கு பிறகு சந்திர கிரகணம் தொடங்கியது. அதற்காக அதிரை தவ்ஹீத் பள்ளி நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்தபடி நபி வழியில் கிரகணத்தொழுகையும். அதனை தொடர்ந்து பயான் நடைபெற்றது. தொழுகை நடத்தியவர் சகோதரர் சிகாபுதீன் M I S C அவர்கள் இதில் ஆண்களும் பெண்களும் கலந்துக்கொண்டனா்




நிதி உதவி

புதுக்கோட்டை மாவட்டம் காசிம் பேட்டையை சார்ந்த முகமது இக்பால் அவர்களுக்கு ஒரு விபத்தில் கால் எழும்பு முறிந்துவிட்டது. அவரின் சிகிச்சைகாக அதிரை கிளை சார்பாக ரூபாய் 5000 அளிக்கப்பட்டது அதனை காசிம் பேட்டையை சார்ந்த சகோதரர் பாவாவிடம் அதிரை கிளை செயலாளர் சிக்கந்தா் அவர்கள் அளித்தார்கள்

Thursday, December 08, 2011

தர்பியா நிகழ்ச்சியின் தொடர்ச்சி

3.12.2011 அன்று அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சியின் தொடா்ச்சி



Monday, December 05, 2011

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு - தொடர் 3

'இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு' என்ற தலைப்பில் மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் எழுதிய நூல் இங்கு தொடராக வெளியிடப்படும். முழு நூலையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்.



தொடர் - 3

அகீகா:

குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆண்குழந்தையாக இருந்தால் அதற்காக இரண்டு ஆடுகளையும் பெண்குழந்தையாக இருந்தால் அதற்காக ஓருஆட்டையும் அறுத்து ஏழை எளியவர்கள் உறவினர்களுக்கு உணவளிப்பதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள். ஆனால் கடமையாக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பையன் (பிறந்த) உடன் அகீகா (கொடுக்கப்படல்) உண்டு. ஆகவே அவனுக்காக (ஆடு அறுத்து) குர்பானி கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிவிடுங்கள் என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.

அறிவிப்பவர் : சல்மான் பின் ஆமிர் (ரலி)

நூல் : புகாரி (5472)

எத்தனை ஆடுகள் அறுக்க வேண்டும்?

நபி (ஸல்) அவர்களிடம் அகீகாவைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மாறுசெய்வதை நான் விரும்பமாட்டேன். யாருக்கேனும் குழந்தை பிறந்து அதற்காக அவர் (ஆட்டை) அறுத்து வணக்கம்புரிய விரும்பினால் அவர் ஒரே மாதிரியான இரண்டு ஆட்டை ஆண்குழந்தைக்கும் ஒரு ஆட்டை பெண்குழந்தைக்கும் கொடுக்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : அஹ்மத் (6530)

விரும்புபவர் அகீகா கொடுக்கட்டும் என்று மேலுள்ள ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அகீகா கொடுப்பது கடமையில்லை. கொடுப்பது சிறந்தது என்பது அறிந்துகொள்ளலாம்.

ஆண்குழந்தைக்கு ஓரு ஆட்டை அறுத்துப் பலியிடுவதற்கும் ஆதாரம் உள்ளது. இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹசனுக்கும் ஹ‚ஸைனுக்கும் ஒரு ஆட்டை அகீகாவாக தந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அபூதாவூத் (2458)

பெற்றோருக்கு பதிலாக மற்றவர்கள் கொடுக்கலாமா?

பெற்றோருக்குப் பதிலாக குழந்தையின் உறவினர்கள் அகீகாவை நிறைவேற்றுவதற்கு அனுமதி உள்ளது. பெற்றோர்கள் தான் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை.

குழந்தைக்காக ஆடு அறுக்கப்படும் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெற்றோர்கள் தான் அகீகா கொடுக்க வேண்டுமென்றால் குழந்தையின் பெற்றோர்கள் அறுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள்.

ஓவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜ‚ன்துப் (ரலி)

நூல் : அபூதாவூத் (2455)

மேலும் அலி (ரலி) ஃபாதிமா (ரலி) ஆகிய இருவருக்கும் பிறந்த ஹசன் மற்றும் ஹ‚ஸைன் (ரலி) அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்துள்ளார்கள். குழந்தையின் உறவினர்கள் யார் வேண்டுமானலும் அகீகா கொடுக்கலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹசன் மற்றும் ஹ‚ஸைன் (ஆகியஇருவருக்காக) அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : நஸயீ (4142)

அகீகா கொடுப்பவர் இறைச்சியை உண்ணலாமா?

அகீகா கொடுப்பவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஹஜ்ஜ‚ப் பெருநாளன்று அறுக்கப்படும் குர்பானிப் பிராணியின் இறைச்சியை குர்பானிக் கொடுப்பவர் உண்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதிக்கவில்லை. குர்பானியும் அகீகாவும் இறைவனுக்கு செலுத்தப்படுகின்ற வணக்கமாக இருப்பதால் இவை இரண்டுக்கும் ஒரேவகையான சட்டம்தான்.

ஹஜ்ஜின் போது அறுக்கப்படுகின்ற பிராணியை அறுப்பவர்கள் தானும் உண்டு ஏழை எளியவர்களுக்கும் உண்ணக்கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான் இவ்வாறே அகீகா விஷயத்திலும் நடந்துகொள்ள வேண்டும்.

அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

அல்குர்ஆன் (22 : 28)

ஏழாவது நாளுக்குப் பிறகு அகீகா கொடுக்கலாமா?

அகீகா என்பது குழந்தைப் பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகிறது. ஆனால் சில பலவீனமான ஹதீஸ்களில் பதினான்காம் நாளும் இருபத்து ஒன்றாம் நாளும் கொடுக்கலாம் என்று வந்துள்ளது.

அகீகா (வாக கொடுக்கப்படும் பிராணி) ஏழாவது நாளும் பதினான்காம் நாளும் இருபத்து ஓன்றாம் நாளும் அறுக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : பைஹகீ (பாகம் 9 பக்கம் 303)

இந்த ஹதீஸ் அல்முஃஜமுல் அவ்ஸத் மற்றும் அல்முஃஜமுஸ்ஸஹீர் போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்ற பலகீனமானவர் இடம்பெறுகிறார்.

பெற்றோர்கள் தனக்கு அகீகாக் கொடுக்காததால் பெரியவராக ஆன பின்பு தனக்குத் தானே அகீகா கொடுக்கலாமா? என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் எதுவும் இல்லை. 

அகீகா என்ற வணக்கம் குழந்தை பிறந்து ஏழாவது நாள் செய்யப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அன்று தான் இவ்வணக்கத்தை செய்ய வேண்டும். இந்த நாளைக் கடந்தப் பிறகு கொடுத்தால் அது சாதாரண தர்மமாக ஆகும். அகீகா கொடுப்பதற்குரிய நன்மை கிடைக்காது.

அகீகா கடமையில்லாத காரணத்தினால் கடமையானவைகளை பின்பு நிறைவேற்றுவதைப் போன்று இதை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்தப் பின் தனக்காகவோ அல்லது அவர்களது தோழர்களுக்காகவோ அகீகா கொடுக்கவில்லை. நபித்தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இந்த புதிய வழிமுறையை நாம் ஏற்படுத்க்கூடாது. 

நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள் என்று சில ஹதீஸ்கள் வருகின்றது. இவையனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

பிராணியின் எலும்பை உடைக்கலாமா?

அகீகாக் கொடுக்கப்படும் பிராணியின் எலும்பை உடைக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் இது பலவீனமான செய்தியாகும். எனவே பிராணியின் எலும்பை உடைப்பதற்கு தடையேதும் இல்லை.

ஹசன் ஹ‚ஸைன் ஆகிய இருவருக்காக ஃபாத்திமா (ரலி) அவர்கள் அகீகா கொடுத்த போது நீங்களும் (இதிலிருந்து) உண்ணுங்கள். (பிறருக்கும்) உண்ணக்கொடுங்கள். இதன் எழும்பை உடைத்துவிடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தி இமாம் அபூதாவூத் அவர்கள் எழுதிய அல்மராசீல் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை முஹம்மத் பின் அலீ என்பவர் அறிவிக்கிறார். இவர் நபி (ஸல்) அவர்களை சந்திக்கவில்லை. இவருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் சில அறிவிப்பாளர்கள் விடுபட்டுள்ளார்கள். எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

பெயர் வைத்தலும் முடியயை களைதலும்:

அகீகாக்கொடுக்கும் போதே குழந்தைக்கு பெயர் வைத்து அதன் முடியை களைவது நபிவழியாகும்.

ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜ‚ன்துப் (ரலி)

நூல் : அபூதாவூத் (2455)

தலைமுடி முழுவதையும் களைய வேண்டும்:

குழந்தையின் முடியை களையும் போது பாதியை மளித்து பாதியை விட்டுவிடக்கூடாது. அறைகுறையாக மளிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறுபகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடைசெய்தார்கள். (சிரைத்தால்) முழுமையாக சிரைத்துவிடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நஸயீ (4962)

முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்ய வேண்டுமா?

பிறந்த குழந்தையின் முடியை எடுத்து அதன் எடைக்கு நிகரான வெள்ளியை தர்மம் செய்வது நபிவழி என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் பலவீனமான செய்தியாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களுக்கு ஓரு ஆட்டை அகீகாவாக கொடுத்தார்கள். (தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கி) ஃபாத்திமாவே அவருடைய (ஹசன்) தலையை மளித்து அவரது முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்வீராக என்று கூறினார்கள். எனவே நான் அதை நிறுத்துப்பார்த்தேன். அதனுடைய எடை ஒரு திர்ஹம் அல்லது சில திர்ஹம்களின் எடையாக இருந்தது.

அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல் : திர்மிதி (1439)

இந்த ஹதீஸை பதிவுசெய்த இமாம் திர்மிதி அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அறுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இதனுடைய அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் அலீ என்பவர் அலீ (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. இந்த வகையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேக் கருத்தில் 25930 வது ஹதீஸாக அஹ்மதில் ஒரு அறிவிப்பு உள்ளது. இதில் இடம்பெறுகின்ற அப்துல்லாஹ் பின் முஹம்மத் பலகீனமானவர் ஆவார்.

மேலும் இக்கருத்தில் ஹாகிம் இமாம் தொகுத்த முஸ்தத்ரக் என்ற நூலில் ஒரு ஹதீஸ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது நம்பத்தகுந்த நபிமொழி இல்லை என்று இமாம் தஹபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களின் ஒருவரான அலீ பின் ஹ‚ஸைன் அவர்கள் அலீ (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கிறார்.. ஆனால் அலி பின் ஹ‚ஸைன் பிறந்த இரண்டு வருடத்தில் அலீ (ரலி) அவர்கள் மரணித்துவிட்டார்கள். எனவே இது தொடர்பு அறுந்து காணப்படுகிறது.

இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் ஆதாரமற்றவையாக இருப்பதால் இதை செயல்படுத்த வேண்டியதில்லை. 

தொடரும், இன்ஷா அல்லாஹ்

Saturday, December 03, 2011

Friday, December 02, 2011

முஸ்லிம்களை புறக்கணிக்கும் மீடியா

நோன்பு பெருநாள் உரை பி ஜே






தவ்ஹீத் பள்ளியின் தற்பொழுதைய நிலை

தவ்ஹீத் பள்ளியின் தற்பொழுதைய நிலையில் 10 லோடு செங்களும் 300 மூடை சிமெண்ட் இருந்தால் பெண்களுக்கு தற்காலியமாக ஜும்ஆ தொழுவதற்கு ஏற்பாடு செய்துகொடுக்கலாம். பள்ளி வேலைகளை விரைவாக முடிப்பதற்கு உங்களுடை நன்கொடைகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.