Sunday, March 09, 2014

மீண்டும் காப்பி பேஸ்ட் - பிஜே புத்தகத்தில் இருந்து ஆட்டை போட்டு கட்டுரை உருவாக்கி கேவலப்படும் நிருபர்கள்!

திருடர்கள் ஜாக்கிரதை....
தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை நிரப்பும் போராட்டத்தை பற்றி தப்பும் தவறுமாகவும், இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு பலன் கிடைக்கவில்லை என்று பொய்யான தகவல்களையும், தவ்ஹீத் ஜமாஅத்தின் மீதும், சகோதரர் பிஜே மீதும் பல்வேறு அவதூறுகளை அள்ளி வீசியிருந்தார்கள் நிருபர்கள் என்ற அறிவாளிகள். இவர்களின் முதல் கட்டுரைக்கு நாம் கொடுத்த பதிலடி இவர்களை திக்குமுக்காட வைத்தது. இதற்கு பதில் சொல்லுகிறோம் என்ற பெயரில் இவர்கள் மீண்டும் உளரித்தள்ளினார்கள். அந்த பதிலுக்கு நாம் கொடுத்த பதிலடி இவர்களை பின்வாங்க வைத்தது. இதற்கு மேல் நாம் உளரினால், நமக்கு கேவலத்திற்கு மேல் கேவலம் என்று நமது இரண்டாவது பதிலடிக்கு பதில் தர முடியாமல் பின்வாங்கி, தங்களின் பொய் முகத்தை மக்களுக்கு அடையாளம் போட்டு காட்டிவிட்டார்கள்.

நமது எந்த சவால்களுக்கும் பதில் தரமுடியாமல் பின்வாங்கியது நாம் எடுத்த வாதங்களில் உள்ள உண்மையை உணர்த்தியுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.

நிருபர் கும்பல் தனது ஆக்கத்தில் ஒரு மிகப்பெரும் அவதூறை அள்ளிவிசியது, அதாவது, பிஜே அவர்கள் புத்தகம் போட்டு பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார் என்று. இது குறித்தும் நமது இரண்டாவது பதிலடியில் சவாலை முன்வைத்திருந்தோம், பொய்யர்கள் பின்வாங்கி விட்டார்கள். ஒன்று பிஜே மீது இவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முன்வந்து இருக்க வேண்டும் அல்லது தவறாக சொல்லிவிட்டோம் என்று மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். இவர்கள் இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க முன்வராததன் மூலம் தங்களை பொய்யார்கள் என்று நிருபித்துவிட்டார்கள். தங்களின் தவறை தவறு என்று மன்னிப்பு கேட்டிருந்தால், நாம் இந்த கட்டுரை வரைய வேண்டிய தேவை வந்து இருக்காது. 

இவர்கள் புகழுக்காக அங்கும் இங்கும் கருத்துக்களை காப்பி பேஸ்ட் செய்து பக்கத்தை நிரப்பி, தங்களை பெரிய ஆய்வாளர்களை போல காட்ட வேண்டும் என்பது தான் இவர்களின் நோக்கமாக உள்ளது. இதை நமது பதிலிலும் சொல்லியிருந்தோம். பிஜே மக்களை வழிகெடுக்கிறார், பிஜே மற்றவர்களை வசைப்பாடுகிறார், ஒற்றுமையை உடைக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யும் இவர்கள் பிஜேவின் புத்தகத்தில் இருந்தும், பிஜேவின் கட்டுரைகளில் இருந்தும் ஆட்டை போட்டு சமீபத்தில் ஒரு சில கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்கள் (இதற்கு முன்பும் பல ஆக்கங்களில் பிஜேவின் ஆக்கங்களில் இருந்து ஆட்டையை போட்டு பல கட்டுரை வரைந்துள்ளார்கள் அறிவாளி (?) நிருபர்கள்). 

நாம் கட்டுரை எழுதும் போது மற்றவர்களின் கருத்துகளை எடுத்து எழுதுவது தவறா என்றால், அவ்வாறு எடுத்து எழுவது தவறில்லை, எப்போது தவறில்லை என்றால், இந்த கருத்துகளை நாம் இங்கிருந்து எழுத்துள்ளோம் என்று சுட்டிக்காட்டினால், அது தவறில்லை. இவர்கள் யாரோ ஆய்வு செய்து எழுதிய ஆய்வுகளை எடுத்துப்போட்டு, இவர்கள் செய்த ஆய்வு போல காட்டுவது நியாயமா? பிஜேவையும் தவ்ஹீத் ஜமாஅத்தையும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் இவர்கள், தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆக்கங்களை ஆட்டை போடுவது சரியா? ஒன்று தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கக்கூடிய இவர்கள், தவ்ஹீத் ஜமாஅத் சம்பந்தப்பட்ட ஆக்கங்களை காப்பி செய்யாமல் இருக்க வேண்டும் அல்லது எடுக்கும் பட்சத்தில் இங்கிருந்து எடுத்துள்ளோம் என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டும். 

நிருபர்கள் வெளியிட்ட காப்பி பேஸ்ட் கட்டுரைகள் கண், உறுப்பு மற்றும் உடல் தானம் குறித்ததாகும். கண், உறுப்பு மற்றும் உடல் தானம் குறித்து அறிவியல், குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்த மார்க்க அறிஞர் யார் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இது குறித்து பிஜே செய்த ஆய்வுகளை ஆன்லைன் பிஜேவில் இருந்து, பத்தி பத்தியாக காப்பி பேஸ்ட் செய்து, வார்த்தை பிரயோங்களை கூட மாற்றாமல் இவர்கள் கட்டுரை உருவாக்கியுள்ளார்கள். இவர்களின் கட்டுரையில் வந்துள்ள ஒரு சில தகவல்களை தவிர்த்து மற்ற அனைத்தும் ஆன்லைன் பிஜே இணையதளம் அல்லது பிஜே அவர்களின் புத்தகங்களில் இருந்து வார்த்தைகளை கூட மாற்றாமல் எடுக்கப்பட்டது (ஆன்லைன் பிஜேவில் உள்ள ஆக்கங்களை யாரும் எடுத்து எழுதக்கூடாது என்று விளங்கி கொள்ளக்கூடாது, எடுத்து காட்டும் போது, அதை எடுத்த இடத்தை குறிப்பிட வேண்டும், இது ஆன்லைன் பிஜேவிற்கும் மற்ற இடங்களுக்கும் பொருந்தும்).

அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என்று மற்ற தளங்களில் வந்த செய்தியில், கோளாறு தளத்தில் மட்டுமல்ல, தவ்ஹீத் ஜமாஅத்திடமும் உள்ளது என்று கருத்திட்ட கட்டுரையாசிரியர் அவர்கள் இவ்வாறு செய்வது சரியா? 

நிருபர்கள் காப்பி பேஸ்ட் செய்த கட்டுரைகளின் ஸ்கீன்சாட் கீழே (பக்கம் பக்கமாக காப்பி அடிக்கப்பட்டுள்ளதால், பல ஸ்கீன்சாட்டுகளாக இணைக்கப்பட்டுள்ளது).

கண்கள் இரண்டும் காப்பி பேஸ்ட் செய்யவா?





மேலே நாம் எடுத்துக்காட்டியுள்ள அவர்களின் கட்டுரைகளை ஸ்கீன்சாட்டிலோ அல்லது அவர்களின் தளத்திலோ சென்று படித்துவிட்டு, கீழ்காணும் ஆன்லைன் பிஜே கட்டுரைகளையும் படித்துப்பாருங்கள், கண், உடல் மற்றும் உறுப்பு தானங்கள் பற்றி அதிக விபரமும் காப்பி பேஸ்ட் விபரமும் கிடைக்கும்.
  1. உடல் தானம் செய்யலாமா?
  2. இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?
  3. தானம் செய்த கண் சொர்க்கம் செல்லுமா?
வரிக்கு வரி ஆன்லைன் பிஜேவில் காப்பி அடித்தவர்கள், ஆன்லைன் பிஜேவின் லிங்கையோ அல்லது ஆன்லைன் பிஜேவில் இருந்து எடுக்கப்பட்டது என்ற விபரத்தையோ சொல்ல மறுப்பது ஏன்? ஆன்லைன் பிஜே என்று சொன்னால், ஆன்லைன் பிஜேவிற்கு விளம்பரம் கிடைக்கும் என்பதாலா? அல்லது உங்களை மற்றவர்கள் நன்றாக ஆய்வு செய்துள்ளார் என்று புகழ வேண்டும் என்பதற்காகவா? இல்லை, எதிரியின் தகவல்களும் வேண்டும், அதே நேரத்தில் எதிரிக்கு பெயரும் கிடைக்கக்கூடாது என்பதற்க்காகவா? 

ஆன்லைன் பிஜேவில் இருந்து எடுத்த விபரத்தை சொல்லாதவர்கள், ஆன்லைன் பிஜேவில் இருந்து எடுக்காமல் மற்றவர்கள் இது குறித்து ஆய்வுகள் எதுவும் செய்து இருந்தால் அதை எடுத்து போட்டு இருக்கலாம் அல்லவா?

குறிப்பு: 
கட்டுரை எழுதிய சகோதரர் மீது எமக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. அவருக்கும் நிருபர்கள் சமீபத்தில் அள்ளிவிசிய குற்றச்சாட்டிற்கும் சம்பந்தம் இல்லை. அதே நேரத்தில், கட்டுரையாளர் வேண்டுமென்றே ஆன்லைன் பிஜேவில் எடுத்த செய்தியை மறைத்து இருப்பதை ஏற்க முடியாது. 

8 கருத்துரைகள் :

3:188 لَا تَحْسَبَنَّ الَّذِينَ يَفْرَحُونَ بِمَا أَتَوا وَّيُحِبُّونَ أَن يُحْمَدُوا بِمَا لَمْ يَفْعَلُوا فَلَا تَحْسَبَنَّهُم بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِ ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

3:188. எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் - அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.

நீங்கள் நிருபர் கூட்டத்தின் காப்பி போஸ்ட் ரகசியத்தை வெளியே கொண்டு வந்தது மிகவும் தேவையானது. தங்களை பெரிய அறிஞர்களை போல படம் காட்டும் இவர்களின் வேடம் வெளிப்பட்டுவிட்டது. அல்லாஹ் அக்பர்.

நீங்கள் அடித்த அடி அவர்களை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதற்கு சான்றாக அவர்கள் தளத்தில் வந்த ஒரு கருத்து படிப்பவர்களின் பார்வைக்கு. தொடர்ந்து காப்பி போஸ்டை அடையாளம் காட்டுங்கள்.

//m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…
நேற்று இன்று நாளை என்று (அன்று) அரசியலைப் பேசலாம்னு ஆரம்பித்த இந்த அருமையான தொடர் இன்று அசலான விஷயங்களை அலசுகிறது !

தேடித் தேடி அடைய வேண்டிய தகவல்களை ஒருங்கே... (வெட்டி / ஒட்டி அல்ல) எங்களுக்கு வழங்கி வரும் காக்காஸ் (அண்ணன் மார்கள் என்றால் காப்பி பேஸ்டாயிடும் அப்புறம் இந்திய பீனல் கோர்ட் கா.பே.சட்டம் 2014 - உட்பிரிவு 3 குற்றமாகும்)

தேர்தல் நேரமாக இருப்பதால் ஏதேனும் / எவ்வளவு "ஒதுக்கீடு" இருக்கக்கும்னு அடுத்த வாரத்தில் தெரிய வருமோ ?

பி.கு.: "ஒதுக்கீடு" என்பத் இடம் பொருள் ஏவல் பொருத்தே !//

கண்கள் இரண்டும் என்ற கட்டுரையின் ஆசிரியர் அவர்கள் உங்களை தக்லீத்வாதிகள் என்கிறார். அவரின் கருத்தை இங்கே தருகிறோன்.

///சந்தையிலே கூவிக் கூவி விற்கப்பட்ட இட ஒதுக்கீடு எனும் சாத்துக்குடி ஒரு புளித்துப் போன பொய்முகம் பூண்ட போச்சம்பள்ளி பழம்தான் என்று புவியோர்க்குத் தெரிந்தது.

சரணடைய வேண்டுமென்று பல நாட்களுக்கு முன்பே போடப்பட்ட சதித்திட்டம் சந்திக்கு வந்தது. சமுதாய அடகுக் கடையில் நாலு பேர் நின்று அல்லது நெருங்கி அமர்ந்து சமுதாயத்தை எதற்கோ அடகுவைத்த சம்பவமும் நடந்தேறிவிட்டது. பொது எதிரியை வீழ்த்த ஸ்திரமான ஒரு காரனியாக வருமென்று எதிர்பார்க்கப்பட்ட இயக்கம், பொது எதிரிக்கு கரமாக விளங்கப் போகும் கட்சிக்கு தனது ஆதரவை அளித்தது///

மன வேதனை அளிக்ககூடிய விசயம்
தக்லீது கூடாது என்பது ஒருமுகம் தன் அறியாமையினால் தக்லீதில் விழுந்து கிடப்பது மருமுகம் தக்லீது என்பது ஆகிரத்து கல்வி மட்டுமல்ல உலகவாழ்க்கைக்கும் அது பொருந்தும் ஒருத்தார் சொல்வதெல்லாம் சரியானது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது சொல்பவர் இறைத்தூதர் இல்லை

ஒரு காலத்தில் நாமும் அப்படி இருந்து செயல்படபோய்தான் இந்த இயக்கங்கள் இப்படி வளர்ந்தன
நாம் செய்த தியாகங்கள் இப்பொழுது உள்ளவர்களுக்கு எங்கு தெரியப்போகின்றது

எண்ணி 8 பேர் ஊரையே பகைத்துக்கொண்டு செயல்பட்டோம்

ஒட்டப்படும் போஸ்ட்டர்கள் யாவும் சொந்த கையால் ஒட்டி இயக்கம் வளர்த்தோம். ஒட்டப்படும் போஸ்ட்டர்கள் யாவும் நம் கண் முன்னாடியே கிழிக்கப்படும் காட்சிகளும் அமைக்கப்படும் மேடைகள் யாவும் நம் கண்முன்னே அகற்றப்படும் காட்சிகளும் இன்னும் நம் கண்முன்னே நிழலாடுகின்றன. எங்கு சென்றாலும் பதஸ்ட்டம் எந்த பள்ளியிலும் இப்பொழுது இருப்பதுபோல் ப்ரீயாக தொழமுடியாத காலம் எந்த பள்ளிக்கு சென்றாலும் வம்பு இல்லாமல் வெளியில் வந்த வரலாறு இல்லை விட்டுக்கு சென்றாலும் மனைவி மக்களிடம் பிரச்சனை குடும்பத்தில் பிரட்ச்சனை ஆக மொத்தத்தில் வாழ்க்கையே பதஸ்ட்டத்துடன் நிறைந்த வாழ்க்கையோடு இயக்கத்தை வளர்த்தோம்
அதந்த தியாக வரலாறு தெரியாமல் ஆடுகின்றனர் ஆடட்டும் நமக்கு ஒன்றும் கவலையில்லை

அவர்களின் இள ரத்தம் இப்படித்தான் ஆட சொல்லும்
அது நமக்கு கவலையில்லை அதிரை நிருபரில் வளம் வரும் பெரும்பாலான சகோதரர்கள் தவ்ஹீது சிந்தனையாளர்கள்தான் என்பதை மறந்துவிட்டார்கள் அதுபற்றியும் நமக்கு கவலையில்லை
நாம் எந்த அண்ணன் மாறுகளுக்கும் பயந்து வாழும் வயதல்ல. நம்முடைய வயது இறைவன் ஒருவனுக்கு மட்டும் பயந்து நமது பொது வாழ்க்கையை தொடருவோம்

தவ்ஹீத் ஜமாஅத் சமுதாயத்தை அடகு வைத்துவிட்டது என்று இவர்கள் எவ்வளவு தான் புழுகினாலும், அது மக்கள் மத்தியில் எடுபட போவாது இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்தினரை அடித்து துவைக்கும் சுன்னத் வல் ஜமாஅத் கூட தவ்ஹீத் ஜமாஅத்தின் நேர்மையில் நம்பிக்கை வைத்துள்ளார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தின் பேராட்டங்களில் கேமராக்களில் கூட பிடிக்க முடியாத அளவுக்கு மக்கள் எப்படி வருகிறார்கள், அப்படி வரும் மக்கள் அனைவரும் தவ்ஹீத் ஜமாஅத்தினரா? இதுவெல்லாம் வயிறு எரிந்து கட்டுரை திருடர்கள் எழுதும் வரிகள். 3.5 சதவீத இட ஒதுக்கீடு வாங்கி தந்தது தவ்ஹீத் ஜமாஅத் தான் என்பதை ம.ம கட்சியின் ஏஜேண்டான கட்டுரை திருடரே ஒத்துக்கொண்டுள்ளார்.

அடுத்து, பிஜேவின் புத்தகத்தையை ஈ அடிச்சான் காப்பி அடித்தவர், நம்மை தக்லீத்வாதி என்று சொல்லுவது தான் காமெடியிலும் காமெடி. பிஜேவின் கட்டுரையை கண்ணை முடிக்கொண்டு காப்பியடிப்பவர் தக்லீத்வாதியா? தவ்ஹீத் ஜமாஅத்தின் அத்தனை மார்க்க ஆய்வுகளுக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் தரும் நாம் தக்லீத்வாதியா? கண் தானம், உடல் தானம், உறுப்பு தானம் இவற்றில் ஆய்வு செய்கிறோன் என்று சொல்லி, பிஜேவின் ஆய்வை காப்பி அடிப்பவர் தக்லீத்வாதி இல்லையே? பிஜேவின் ஆய்வை கண்ணை முடிக்கொண்டு காப்பி அடித்ததின் விளைவு தான் நாம் இவரின் காப்பி ஆய்வு பற்றிய நமது கட்டுரைக்கு பதில் தர முடியாமல் பின்வாங்கினார்.

அடுத்து, காப்பியாளர் எப்படி தக்லீத் செய்து இயக்கம் வளர்த்தார் என்று சூட்டிக்காட்டுகிறார். போஸ்ட் ஒட்டினாராம், மேடை அமைத்தாராம், அது அகற்றப்பட்டதாம், பள்ளியில் சண்டை போட்டராராம். இதையெல்லாம் பிஜே என்ற தனிமனிதர்க்காக செய்தார் போல. இதுவெல்லாம் தவ்ஹீத் கொள்கையாக என்று தூய்மையான எண்ணத்துடன் செய்து இருந்தால், இன்றைக்கு தடுமாற்றம் அடைந்து இருக்க மாட்டார்.

------ பதிளின் தொடர்ச்சி ----------
அடுத்தாக, அந்த நிருபர்கள் கூட்டத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் தவ்ஹீத்வாதிகள் என்ற ஒரு குண்டை போட்டுள்ளார். இவர்கள் தவ்ஹீத்வாதிகளா என்பதற்கு சில ஆதாரங்களை முன்வைக்கிறோம். சில மாதங்களுக்கு முன் நிருபர்கள் கூட்டம், பெருநாள் சந்திப்பு என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தியது, அந்த நிகழ்ச்சியில் 'நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் கிறிஸ்தவர்களை வழிபாடு செய்ய அனுமதித்தாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீசை எடுத்து காட்டினார்கள். இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் இஸ்லாத்தில் இல்லாத செய்தி என்பதை கூட இந்த தவ்ஹீத்வாதிகள் அறிந்து வைத்து இருக்கவில்லை. அதே போல், நபி (ஸல்) அவர்களை இறைவன் படைக்கா விட்டால், இந்த உலகத்தையே படைத்து இருக்க மாட்டான் என்ற செய்தியையும் அந்த மேடையில் எடுத்து வைத்தார்கள். இது பற்றி நமது தளத்தில் அழகிய முறையில் சூட்டிக்காட்டினோம். அதற்கு பதிலும் இல்லை, திருந்தவும் இல்லை.

அவர்கள் தளத்தில் ஹாஜி என்று எத்துனை முறை எழுதியுள்ளார்கள் என்றும் தேடிப்பாருங்கள். ஹாஜி என்று எழுதக்கூடியவர்களை எடுத்துகாட்டினால், இவர்களா இப்படி செய்கிறார்கள் என்று மனம் கொதித்துவிடும் (நேர்வழிகாட்டுவதும் வழிகேட்டில் விடுவதும் இறைவனின் கையில் உள்ளது) ஹாஜி என்று எழுதுபவர் தவ்ஹீத்வாதியா? நாங்கள் தவ்ஹீதை அதிரையில் வளர்த்தோம் என்று சொல்லும் சிலர்கள் ஹாஜி என்று ஹஜ்க்கு சென்றவர்களின் பெயருக்கு முன்னர் சேர்த்து எழுதுவது என்ன வகை தவ்ஹீத்? பித்அத் என்பது வழிகேடு, வழிகேடு நரகத்திற்கு அழைத்து செல்லும் என்ற ஹதீஸ் யாருக்காக? இறையருட்கவி என்று கவிஞருக்கு இறையருள் வருகிறது என்ற பொருளில் எழுதுவது தவ்ஹீதா? முஹம்மது குட்டியை எதிர்த்து கொண்டு, தரீக்காவையும், பெண்கள் மத்தியில் இணைவைப்பு கொள்கையும் புகுத்திக்கொண்டு இருக்கும் கவிஞரை புகழ்ந்து தள்ளியவர்கள், அவரை பரிசுத்தமானவராக காட்டியவர்கள் தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர்களா? இவர்களின் பெரும்பாலேனோர் தவ்ஹீத்வாதிகள் என்றால், ஹாஜி, இணைவைப்பு கவிஞரை புகழும் போது எத்தனை நிருபர் கண்டனம் தெரிவித்தார்கள்? இந்த சூட்டிக்காட்டுதலை டகண்டுகொதித்த 'கண்கள் இரண்டும்' கட்டுரைக்கு சொந்தக்காரர், நமது இணையதளத்தில் கோளாறு வந்த போது, நமது விளக்கத்தை விமர்சனம் செய்து 'இணையதளத்தில் மட்டுமல்ல கோளாறு தவ்ஹீத் ஜமாஅத்திடம் கோளாறு உண்டு' என்றார். யாரே எழுதிய கட்டுரையை எடுத்து போட்டு புகழ் தேடுபவர்கள் தவ்ஹீத்வாதியா?

தவ்ஹீத்கான் என்று பெயர் வைத்து எழுதி, தவ்ஹீதை கிண்டல் அடிப்பவர்கள் தவ்ஹீத்வாதியா?

------ பதிளின் தொடர்ச்சி ----------
இளம் இரத்தமாம், வெறியாம். தவ்ஹீத் கொள்கையில் உறுதி என்பது இளம் இரத்தம், பழுத்த இரத்தம் என்றெல்லாம் எதுவும் இல்லை. உண்மையான தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர்கள் என்றும் வீரமுடன் தான் இருப்பார்கள்.

இவர்கள் சொல்லுவதை போல உண்மையான தவ்ஹீத் கொள்கையில் இருந்து, நமது ஆக்கங்களை முழமையாக எடுத்துப்போட்டு இங்கிருந்து எடுக்கப்பட்டது என்று கூறாமல், அதை அழைப்பணிக்காக பயன்படுத்தியிருந்தால் நாம் அவற்றை எடுத்துக்காட்டி இருக்க மாட்டேம். இவர்கள் தவ்ஹீதை பரப்ப தங்களின் இணையதளத்தை பயன்படுத்திக்கொண்டு, தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அவதூறுகளை அள்ளி விசியிருந்தால் கூட அவற்றை கடினமான முறையில் எதிர்கொண்டு இருக்க மாட்டேம்.

எங்களை பொருத்தவரை எங்களுக்கு பிஜே மீது உள்ள கண்ணியம் அவர் சத்திய கொள்கையை சொல்லும் வரை தான். நிருபர் தவ்ஹீதை போல ஹாஜி என்று எழுகிறார் என்றால் (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்), அவரையும் தூக்கி அடிக்க தயங்க மாட்டேம்.

தவ்ஹீத் ஜமாஅத்தை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதை நீங்கள் எதிர்க்கலாம், விமர்ச்சிலாம், தவ்ஹீத் கொள்கையோடு விளையாடதீர்கள். அவ்வாறு செய்தால், தொடர் பதிலடிகள் வந்து கொண்டே இருக்கும்.

புகழுக்கவும் பதவிக்காகவும் தவ்ஹீத் கொள்கை விட்டுகொடுத்து மறுமை வாழ்க்கையை பாலாக்கி விடாதீர்கள் என்று அன்புடன் உபதேசிக்கிறோம்.

அசத்தியத்தையும் பொய்களையும் ஆயிரம் நிருபர்கள் இருந்தாலும் சமாளிக்க முடியாது , பதில் தர முடியாது.

இவர்கள் நமது பதிலடிகளுக்கா ஏன் பதில் தர முடியவில்லை அழகாக எடுத்துக்காட்டும் திருமறை வசனம்.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல்குர்ஆன் 21:18)

இதற்கு பதில் ?

//அதிரைக்காரன் சொன்னது…
1435 ஆண்டுகளுக்கு முன்பு முழுமைபடுத்தப்பட்ட மார்க்கத்தில், அதற்குப்பிறகு சொல்லப்படுபவை எல்லாமே குர்ஆன், ஹதீஸ்கள் ஆகியவற்றிலிருந்து காப்பி பேஸ்ட் செய்துதான் சொல்லமுடியும்! அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு கற்பிக்க வேண்டும் வலியுறுத்தும் மார்க்கத்தில் காப்பிரைட் உரிமை யாருக்கும் இல்லை.

சகோ.பிஜே அவர்களின் கண்ணோட்டம் பலவிசயங்களின் சற்று மாறுபட்டும், புதியதாகவும் இருக்கும். எனினும், அவ்வாறு அவர் மட்டுமே சிந்தித்திருப்பார் என்று கருத முடியாது.

இயேசு கடவுளின் மகனா? என்ற ஆக்கத்தை ஜாகிர் நாயக் காப்பியடித்தாரென்று சொல்லும் இவர்கள், அதற்கு முன்பே மர்ஹூம் பழனிபாபா அஹமது அலி அவர்கள் அதைபோன்ற வாதங்களை எழுதி, பேசியிருப்பது அறிவார்களா என்று தெரியவில்லை. ஜாகிர் நாயக்கின் ஆசான், மர்ஹூம் அஹமது தீதாத் அவர்களும் கிறிஸ்தவத்திற்கு எதிரான ஆணித்தரமான வாதங்களை முன்வைத்துள்ளார். அவை நூல் வடிவிலும் வந்துள்ளன (50,000 Errors in Bible). இதையும் தாண்டி பைபிளில் பிழைகண்டிருப்பரா என்பதை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளட்டும்.

தர்ஜுமாவிலிருக்கும் அரபு வசனங்கள் நிச்சயம் முந்தைய பிரதிகளிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருக்கும். ஆன்லைன் பிஜே தளத்திலுள்ள முஸ்லிம் ஹதீஸ் தமிழாக்கம்கூட ரஹ்மத் பதிப்பகத்திலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது என்பதாகக் கேள்விப்பட்டேன். இக்கூற்றில் தவறு இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் அறியத்தரட்டும்.

இணையத்திலும் ஃபேஸ்புக்கிலும் வாதம்செய்து பொழுதுகழிக்கும் ததஜவினர் பலர், ஆன்லைன் பிஜே தளத்திலிருந்துதான் காப்பி பேஸ்ட் செய்கிறார்கள். :P//

அன்வர்

அஸ்ஸலாமு அலைக்கும்

உங்களின் கேள்விக்கான பதில் தனி கட்டுரையாக வெளியடப்பட்டுள்ளது.

http://www.adiraitntj.com/2014/03/blog-post_22.html

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.