Sunday, May 27, 2012

மேலத்தெரு இளைஞர்களின் அழகிய செயல்!


இந்த ஆண்டு மேலத்தெரு தர்ஹா கந்தூரி திருவிழாவை தவறு என்றும் உணர்த்தும் முகமாக, மேலத்தெரு தவ்ஹீத் சகோதரர்கள், தர்ஹா வழிபாட்டின் தீமைகளை விளக்கி, போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். இதன் விளைவாக, மேலத்தெருவில் அவ்லியா ஊர்வலமாக வரும் போது தாரை தப்பட்டைகளை இயக்காமல், அமைதியாக சென்றார். அல்ஹம்துலில்லாஹ்.

தர்ஹா வழிபாட்டை தவறு என்று உணர்ந்த ஆலிம்கள் கோழைகளாக இருக்கும் போதும், ஆலிம்கள் என்று சொல்லப்படும் மற்றொரு பிரிவினர் தர்ஹா வழிபாட்டை பாத்தஹா ஒதி துவக்கி வைக்கிக்கும் போது, இந்த இரண்டு பிரிவு ஆலிம்கள் மார்க்கத்தை சொல்லிக் கொடுக்கும் இந்த இளைஞர்களின் செயல் பாராட்டத்தக்கது.

பாரம்பரியம் பேசும் ஆலிம்கள் இது தவறு என்று இனிமேலாவது பகிரங்கமாக சொல்வார்களா? சொல்லவிடில், இவர்களை ஆலிம்கள் என்று சொல்லவதை விட மடமை வேறு எதுவும் இல்லை. 


அதிரையில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக அதிராம்பட்டினம் வெற்றிலைக்காரத் தெருவில் உள்ள வெஸ்டன் மழலையர் தொடக்கப்பள்ளியில் 16.5.2012 இரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் ஊரில் அனைத்துப்பகுதியில் இருந்தும் சுமார் 70 பேர் இரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகமும், பள்ளி நிர்வாகமும் சிறப்பாக செய்தனர்.



Saturday, May 26, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 25.05.2012






உரை: மௌலவி யாசர் அரஃபாத் இம்தாதி

மக்கா காஃபிர்களும் கப்ர் வணங்கி முஸ்லிம்களும் (?) - ஒர் ஒப்பீடு!


அல்லாஹ்விடம் நமது கோரிக்கைகளை கேட்பது பாவம், அவ்லியாக்களிடம் தான் கேட்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தமிழக முஸ்லிம்கள் இருந்தார்கள். 1980களில் தவ்ஹீத் பிரச்சாரம் தலை எடுக்க தொடங்கியது முதல் இன்று வரை இணைவைப்பு சின்னங்கள் நாளுக்கு நாள் மங்கி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்

எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும், எங்களை நீங்கள் திருத்த முடியாது என்ற முடிவில் இருக்கும் சிலர் கப்ர் வணக்கத்தையும், கந்தூரி திருவிழாவையும் விடுவதாக இல்லை

இந்த வருடம் மேலத்தெரு அவ்லியாவின் ஆசைகளை நிறைவேற்றும் வண்ணமாக, தாரை தப்பட்டைகளுடன் கந்தூரி ஊர்வலம் சிறப்பாக (?) நடைபெற்றது. தொழுகை நடைபெற்றாலும் தாரை தப்பட்டைகளை நிறுத்தாதே என்ற நஸ்ஸீருத்தீன் அவ்லியாவின் வேண்டுகோளை செயல்ப்படுத்தும் முகமாக தக்வா பள்ளியை கந்தூரி ஊர்வலம் நெருங்கும் போது, அவ்லியா பக்தர்கள் தாரை தப்பட்டை சத்தத்தின் மூலம் தொழுபவர்களுக்கு இடையூர்களை ஏற்படுத்தினார்கள். இதை தட்டி கேட்ட ஒருவரை பலமாக தாக்கியும் உள்ளார்கள், அவ்லியா பக்தர்கள்

இந்த கட்டுரையில் இன்றைய காலகட்டத்தில் வாழும் முஸ்லிம் பெயர் தாங்கிகளுக்கும் மக்கத்து காஃபிர்களுக்கும் உள்ள ஒற்றுமை பற்றியும், கந்தூரி திருவிழாவை ஒழிக்க கையால வேண்டிய முறைகள் பற்றியும் சிலவற்றை விளக்க கடமைப்பட்டுளோம்.

மக்கத்து காஃபிர்களும் கப்ர் வணங்கிகளும்:

கப்ர் வணங்கிகள் பெயரில் முஸ்லிம்கள் என்று அழைக்கப்பட்டாலும், இவர்களின் செயல்களும் நடவடிக்கைகளும் மக்காவில் வாழ்ந்த காஃபிர்களின் செயல்களை தான் ஒத்துள்ளது. இதிலிருந்தே இந்த கப்ர் வணங்கிகள் எந்த பிரிவை சார்ந்தவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

மக்கா காஃபிர்களை பற்றி அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் போது, சீட்டி (விசீல்) அடிப்பதும் கை தட்டுவதையும் தவிர வேறு எதுவும் அவர்களின் வணக்கமாக இருக்கவில்லை என்கிறான்.

சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) அந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. "நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!" (என்று கூறப்படும்). 

அல்குர்ஆன் (8:35)

இதை இன்றைய கப்ர் வணங்கிகளுடன் ஒற்று நோக்கி பாருங்கள். அல்லாஹ்வின் ஆலயத்தில் தொழுகை நடைபெறும் போது தாரை தப்பட்டைகளுனும் குத்துக் கும்மாளலங்களுடனும் வந்து பள்ளியில் தொழுபவர்களுக்கு தொல்லை தரும் இவர்கள் யார்? என்பதை சமுதாயம் என்று உணரப்போகிறது?

விநாயகரும் நஸ்ஸீருத்தீன் அவ்லியாவும்:

பொதுவாக முஸ்லிம்களின் பள்ளிகளுக்கு தொல்லை தருவது, பள்ளிகளில் தொழுகை நடைபெறும் போது தாரை தப்பட்டைகளுடன் வந்து தொந்தரவு செய்வது விநாயகரின் பக்தர்களுக்கு தான் விருப்பமாக இருக்கும். ஆனால், இதை செய்வதில் ஷேக் நஸ்ஸீருத்தீன் ஒலியுல்லாவின் பக்தர்களும் சலைத்தவர்கள் இல்லை என்பது முஸ்லிம்கள் இப்போது தான் உணர ஆரம்பித்துள்ளார்கள். இந்த மட அவ்லியா பக்தர்கள் காலம் காலமாக இவ்வாறு தான் செய்து வருகிறார்கள். இப்போது தான் சமுதாயம் கண்விழிக்க ஆரம்பித்துள்ளது.

யாரு என்றே அறிப்படாத ஒருவரை அவ்லியா என்று பட்டம் சூட்டி, பணம் பார்ப்பதற்காக போலி ஆலிம்கள் ஏற்படுத்திய இந்த செயல் இப்போது மக்கள் மத்தியில் அம்பலப்பட ஆரம்பித்துள்ளது.

கந்தூரி திருவிழாவை எப்படி ஒழிப்பது?

கந்தூரிகளும் கப்ர் வழிபாடும் அனாச்சாரம் என்றும், அது இஸ்லாத்திற்கு புரம்பானது என்றும் சமுதாயத்தில் பெரும்பாலனோர் உணர்ந்துள்ளார்கள். ஆனால், அவற்றை ஒழிப்பது எவ்வாறு என்பதில் சமுதாயத்தில் உள்ளவர்கள் ஒத்த கருத்தில் இல்லை.  கந்தூரி விழாவை தடை செய்ய சொல்லி காவல்துறையிடம் முறையிட்டால் இவற்றை ஒழித்து விடலாம் என்று சிலர் நம்புகிறார்கள். காவல்துறையிடம் முறையிடுவதால் இதை கண்டிப்பாக துடைத்து எறிய முடியாது. காவல்துறை ஒரு பிரிவினருக்கு எதிராக செயல்படுவது கடினம். கந்தூரி போன்ற அனாச்சாரங்களை நடத்துபவர்கள் பெரும்பாலும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாக உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

கந்தூரி அனாச்சாரங்களை நிறுத்த பாரபட்சனமின்றி சிலவற்றை செய்ய வேண்டும். அதை செய்யாவிடில், இவற்றை ஒரு போதும் தடுக்க இயலாது.

கந்தூரி விழாவில் வருபவர்கள் அனைவரும் மார்க்கம் அறியா பாமரர்கள். இவர்களின் மீது கோபப்படுவதை விட, நாம் பரிதாபம் தான் பட வேண்டும். காரணம், இந்த பாமரர்களுக்கு அவ்லியா பக்தியை ஊட்டி அவர்களை வழிகெடுத்தது யார் தெரியுமா? மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் உள்ள அபுஜஹல்கள் தான். இந்த பாமரர்களின் மீது காட்டும் கோபத்தை இந்த அபுஜஹல்களிடம் தான் காட்ட வேண்டும்.

* கந்தூரி விழாவில் வருபவர்களை கண்டு கோபப்படும் நாம், அதை பாத்திஹா ஒதி துவக்கி வைக்கும் போலி ஆலிம்களை கண்டு கோபப்படாதது ஏன்

* கந்தூரி விழாவை பாத்திஹா ஒதி துவக்கி வைக்கும் போலி ஆலிம்களை பள்ளியில் இமாமாக வைத்து அழகு பார்த்து, அவர்களின் பின்னால் நின்று தொழுவது ஏன்

* பள்ளிகளிலேயே அட்டாச்டு பாத்துரும் போல கப்ர்களை கட்டி வைத்துயிருக்கும் அனாச்சாரத்தை கண்டு பொங்கி எழாதது ஏன்?

* கந்தூரி விழாவிற்கு போஸ்ட் அடிக்கும் இயக்கத்தில் இருந்து கொண்டு, கந்தூரியை கண்டிப்பது ஏன்?

* நமது ஊரில் இருக்கும் மதரஸாவில் படித்து வெளியில் வரும் ஆலிம்கள் (?) மவ்லுத் மற்றும் கப்ர் வணக்கத்தை ஆதரிப்பவர்கள் தான் என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?

* ஊரின் மையப் பகுதியில் இருக்கும் ஒரு மதரஸாவின் முதல்வர் ஹஜ்ரத் கிப்லா அவர்கள், தன்னையே மகானாக காட்டி, தனது செருப்பை திருப்பி வைக்கவும், ஜூம்ஆவிற்கு சொல்லும் போது குடை பிடிக்கவும் அப்பாவி மாணவர்களை பயன்படுத்துவதை  கண்டு நாம் கோபப்பட்டு இருக்கிறோமா

* அவர் அந்த காலத்திலேயே குதிரை வண்டியில் இருந்து தவ்ஹீதை சொன்னவர் என்று போற்றப்படுபவர் வசிக்கும் பள்ளியில் ஹஜ்ரத் கிப்லா போடும் ஆட்டத்தை அந்த அறிஞர் என்றாவது கண்டித்து பேசியிருப்பாரா

* ஊருக்கு ஊர் தப்லீக் சொல்லும் அன்பர்கள், நமது ஊரில் நடைபெறும் இந்த ஆனாச்சாரத்தை தடுக்க என்றாவது முயன்று இருப்பார்களா?

* பித்அத்தையும் ஷிர்க்கையும் ஒழிக்க அயராது உழைக்கும், தவ்ஹீத் ஜமாஅத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக செய்யும் உன்னாத (?) பணியோடு, இந்த ஷிர்க்கை ஒழிக்க என்றாவது யோசித்து இருக்கிறோமா?

* ஹஜ்ரத் கிப்லா நடத்தும் புகாரி சரீபில், கப்ர்களை இடிக்க சொல்லும், இணைவைப்பின் பயங்கரத்தை பற்றியும் பேசும் புகாரீ ஹதீஸ்களை என்றாவது கேட்டுள்ளோமா

இவற்றை எல்லாம் சிந்திக்காமல், கந்தூரி ஊர்வலத்தில் ஆடும் அப்பாவிகளை கண்டு ஆத்திரப்படுவது சரியா? அவர்களின் மறுமை வாழ்வை நாசப்படுத்தும் போலி ஆலிம்களை களை எடுத்தாலே கப்ர் வணக்கம் தானாக ஒழிந்துவிடும்.

கந்தூரியை தடுக்க வராத அனைத்து முஹல்லா ஒற்றுமை:

ஒற்றுமையாக இருப்போம் என்ற போர்வையில் அனைத்து முஹால்லாவையும் சேர்த்து விட்டேம் என்று பெருமைப்படும், அனைத்து முஹால்லா கூட்டமைப்பு கந்தூரி வைபவத்தை தடுக்க முன்வரவில்லையே ஏன்

பெண்களின் வாழ்க்கையை பாழாக்கி, பெண் சகோதரிகளுடன் பிறந்த சகோதரர்களின் வாழ்க்கை நாசப்படுத்தும் வரதட்சணையை தடுக்க அனைத்து முஹால்லா முயன்றது உண்டா?

எத்தனையே ஏழை குடும்பங்கள் வரதட்சணையின் கொரபிடியால் சிக்கி தவிர்க்கிறதே! இதை தடுக்காத ஒற்றுமை என்ன ஒற்றுமை?

இஸ்லாத்தை பின்பற்றுவதில் இல்லாத உங்களின் ஒற்றுமை எதற்கு? இனவெறிக்காக தான் உங்களின் ஒற்றுமையா

கந்தூரியை தடுக்கும் வழிமுறை தான் என்ன?

கண்ணியத்திக்குரிய ஆலிம்கள் (?) எல்லாம் இவற்றை கண்டித்து பேசுவார்கள் என்று நம்பும் மடமையை விட்டெழித்துகீழ்காணும் இறை வசனத்தில் அடிப்படையில் நமது பிரச்சாரத்தை வீரியப்படுத்தினால், இன்ஷா அல்லாஹ், இந்த இணைவைப்பு காரியம் ஒழிந்து போகும்.

உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக

அல்குர்ஆன் (15:94)

மேலும்

பகிரங்க இணைவைப்பான கந்தூரி, கப்ர் வணக்கம், மௌலூது போன்ற ஈடுபடும் போலி ஆலிம்களை பள்ளி இமாமாக தொடர அனுமதிக்க கூடாது. இவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்

இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஜமாஅத் திருமணம் போன்றவற்றை நடத்தி வைக்க கூடாது (வரதட்சணை திருமணமத்தை நடத்துவதையும் நிறுத்தணும் சரியா?)

இது போன்ற இணைவைப்பு காரியங்களை பற்றி பேசினால், தங்களின் இமேஜ் போய்விடும் என்பதால், இதை பற்றி வாய்திறக்க மறுக்கும் ஆலிம்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்

Friday, May 25, 2012

தொப்பியும் தலைப்பாகையும் இஸ்லாமிய ஆடைகளா?


பி. ஜைனுல் ஆபிதீன்



தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை.

தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாக ஒரேயொரு பலவீனமான ஹதீஸ் தான் உள்ளது. அதுவும் கூட சந்தேகத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளால் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ் இது தான்.

….அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவருக்கு கியாமத் நாளில் கிடைக்கும் பதவிகளை மக்கள் தம் தலைகளை உயர்த்தி (அண்ணாந்து) பார்ப்பார்கள்” என்று கூறிய அவர்கள் தமது தலையை உயர்த்திக் காட்டினார்கள். அப்போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது… அவர்களின் தொப்பி என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொப்பியா? அல்லது உமர் (ரலி) அவர்களின் தொப்பியா? என்பது எனக்குத் தெரியவில்லை என்று அறிவிப்பாளர் ஐயத்திற்கிடமான வார்த்தைகளால் அறிவித்துள்ளார்.

திர்மிதீ 1568, அஹ்மத் 145 ஆகிய நூற்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஸீத் அல்கவ்லானி என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். மேலும் இப்னு லஹ்யஆ என்ற அறிவிப்பாளரும் இதில் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் ஆவார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தார்கள் என்பதை இந்த ஹதீஸ் திட்டவட்டமாகக் கூறவில்லை. மேலும் இதில் இரண்டு அறிவிப்பாளர்கள் பலவீனர்களாக உள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொல்லும் நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.

அன்றைய மக்கள் சிலரிடம் தொப்பி அணியும் வழக்கம் இருந்துள்ளது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்று கூற முடியுமே தவிர தொப்பி அணிவது கடமை என்றோ, சுன்னத் என்றோ கூற ஒரு ஆதாரமும் இல்லை.

ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர் சட்டை, தலைப்பாகை, காற்சட்டைகள், தொப்பிகள் அணிய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 134, 366, 1838, 1842, 5794, 5803, 5805, 5806)

இஹ்ராம் கட்டிய போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணியலாம் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

இவ்வாறு சில நபித் தோழர்கள் தொப்பி அணிந்திருந்தது கூட தொழுகைக்காக அல்ல. சாதாரணமாக ஓர் ஆடை என்ற அடிப்படையில் தான் அணிந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.

(தொப்பி) கலன்ஸுவத் என்பதற்கு மொழி ஆய்வாளர் அபூஹிலால் அஸ்கரீ அவர்கள் விளக்கம் அளிக்கும் போதுஇ வெயிலிலிருந்தும் மழையிலிருந்தும் காக்கும் உடை என்று விளக்கம் தருகின்றார். மேலும் அதன் மேல் தலைப்பாகையைச் சுற்றலாம் என்றும் கூறுகின்றார்.

வெயிலில் இருந்தும், மழையில் இருந்தும் காக்கும் அளவுக்குக் கனமான, அடர்த்தியான கவசம் போன்ற ஆடை தான் தொப்பியைக் குறிக்கும் கலன்ஸுவத் என்ற அரபுச் சொல்லுக்கு அர்த்தமாகும். தொழுகையுடன் இதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஷரீக் அவர்கள் ஒரு ஜனாஸா தொழுகை நடத்தும் போது தமது தொப்பியைக் கழற்றி முன்னால் வைத்துக் கொண்டு தொழுகை நடத்தினார்கள் என்று கூறப்படுகின்றது. (நூல்: அபூதாவூத் 592)

தொழுகைக்கு வெளியே வெயிலுக்காக அணிந்திருந்த தொப்பியை தொழுகையின் போது கழற்றி வைத்திருக்கின்றார் என்பதிலிருந்து அன்றைக்குத் தொப்பியைச் சிலர் அணிந்தது ஏன் என்பது விளங்குகின்றது.

உமர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது, அவர்களை ஒருவன் கத்தியால் குத்தினான். குத்தி விட்டு அவன் ஓடும் போது ஒருவர் அவன் மேல் தொப்பியை வீசியெறிந்து தாக்கினார். இதனால் நிலை குலைந்து போன அவன், பிடிபடக் கூடாது என்பதற்காக தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தி புகாரியில் 3700வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொப்பியை எறிந்து ஒருவரை நிலை குலையச் செய்ய முடியும் என்றால் அன்றைக்கு வழக்கத்தில் இருந்த தொப்பி எதுவென்று நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. ஏறக்குறைய இரும்புக் கவசம் போன்ற கடினமான தலையாடை தான் தொப்பி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இன்று தொப்பி என்ற பெயரால் அணியப்படும் ஆயிரம் கண்ணுடைய ஆடை(?)யால் மழையையும், வெயிலையும் தடுக்க முடியாது. அதன் மூலம் ஒரு ஈயைக் கூட நிலை குலையச் செய்ய முடியாது.

மீண்டும் சுருக்கமாகச் சொல்வதென்றால்

தொப்பி அணியுமாறு ஆர்வமூட்டி எந்த நபிமொழியும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்ததில்லை.

சில நபித் தோழர்கள் அணிந்துள்ளனர்.

வெயில், மழையிலிருந்து காக்கவே அதை அணிந்துள்ளனர். தொழுகைக்காக அல்ல.

அந்தத் தொப்பிக்கும் இன்று தொப்பி என்று கூறப்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

தொப்பி என்பது ஒரு ஆளைத் தாக்கி நிலை குலையச் செய்யும் ஆயுதமாகக் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொப்பியை இஸ்லாத்தின் சின்னமாக அறிவிக்க யாருக்கும் அதிகாரமில்லை.

தொழுகையின் போது தொப்பி அணிய வேண்டும் என்று கூறுவதற்கும் ஆதாரமில்லை.

தொப்பி அணியாதவர்கள் பள்ளியில் தொழ அனுமதியில்லை என்று கூறவும் யாருக்கும் அதிகாரம் இல்லை.

தலையை மறைத்துக் கொள்ள உபரியான ஆடை இருந்தும் வேண்டுமென்றே மறைக்காமல் நபித்தோழர்கள் தொழுதுள்ளனர்.

ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கீழாடையை (பிடரி வரை தூக்கிக்) கட்டிக் கொண்டு தொழுதார்கள். அவர்களது உபரியான ஆடை மரச் சட்டத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஒருவர், ரூஙரழவ்ஒரு ஆடையுடனா தொழுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உன் போன்ற அறிவிலிகள் என்னைப் பார்க்க வேண்டுமென்றே இவ்வாறு செய்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களில் எவரிடம் இரண்டு ஆடைகள் இருந்தன?” என்று விடை யளித்தார்கள். (நூல்: புகாரி 352)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி போன்ற உபரி ஆடைகள் பலரிடம் இருந்ததில்லை என்பதற்கும், ஆண்கள் தலையை மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கும் இது மேலதிக ஆதாரமாக அமைந்துள்ளது.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரேயொரு ஆடையை அணிந்து தொழுதார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரேயொரு ஆடை அணிந்து தொழுததை நான் பார்த்துள்ளேன் எனவும் கூறினார்கள். (நூல்: புகாரி 353)

இடுப்புக்கு மேல் ஒரு ஆடை, இடுப்புக் கீழ் ஒரு ஆடை என இரண்டு ஆடைகள் அணியாமல், இரண்டுக்கும் சேர்த்து ஒரு ஆடை மட்டும் அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதிலிருந்து அவர்கள் தலையை மறைக்காமல் தொழுதுள்ளது உறுதியாகின்றது.

நம்முடைய பழக்க வழக்கம் என்ற அடிப்படையில் விரும்பியவர் தொப்பியை அணிந்து கொண்டால் தவறில்லை. தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ அவ்வாறு அணிந்து கொண்டால் அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

அது போல் ஒருவர் தொழுகையின் போதோஇ தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணியாமல் இருந்தால் அவரைத் தொப்பி அணியுமாறு கட்டாயப்படுத்துவதற்கும்இ ஆர்வமூட்டுவதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை.

தலைப்பாகை

தலைப்பாகையைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணியுமாறு கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதுமில்லை. தலைப்பாகை அணியுமாறு சிறப்பித்துக் கூறியதாகவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஏதுமில்லை.

தலைப்பாகை அணிவதை வலியுறுத்தும் வகையில் உள்ள ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப் பட்டவையாக அல்லது பலவீனமானவையாக உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகையை வலியுறுத்தியதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அவர்கள் தலைப்பாகை அணிந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும், காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர்: அம்ரு பின் உமைய்யா (ரலி) நூல்: புகாரி 205

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் (மேடை) மீது கறுப்புத் தலைப்பாகை அணிந்து நின்றதை நான் பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுரைஹ் (ரலி) நூல்: முஸ்லிம் 2421

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் கறுப்புத் தலைப்பாகை அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊரில் நுழைந்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2418

இப்படி விரல் விட்டு எண்ணிச் சொல்லும் அளவுக்கு சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அவர்கள் உளூச் செய்த போதும்இ உரை நிகழ்த்திய போதும்இ பல்வேறு வெற்றிகளைப் பெற்ற போதும் அவர்களைப் பற்றிப் பேசும் நூற்றுக் கணக்கான ஹதீஸ்களில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள் என்று கூறப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலையின் முடி அலங்காரம் பற்றி எண்ணற்ற ஹதீஸ்கள் உள்ளன. அவர்கள் எல்லா நேரத்திலும் தலைப்பாகையுடன் இருந்திருந்தால் தலை முடியின் அலங்காரம் பற்றி இவ்வளவு வர்ணனைகள் நமக்குக் கிடைத்திருக்க முடியாது.

எனவே மிகச் சில நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணியாமல் இருந்துள்ளனர்.

மேலும் இன்னொரு அடிப்படையான விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வாதத்துக்காக எல்லா நேரங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணிந்திருந் தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட தலைப்பாகை அணிவது சுன்னத் என்று ஆகி விடாது.

ஒட்டகத்தில் பயணம் செய்தது, கோதுமை உணவை உட்கொண்டது, போர்வையைச் சுற்றிக் கொண்டு தொழுதது போன்ற காரியங்களை நாம் சுன்னத் என்று கூறுவதில்லை. வணக்க வழிபாடுகள் தொடர்பில்லாத காரியங்களைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைச் செய்வதுடன், செய்யுமாறு ஆணையிட்டால் தான் அது மார்க்கமாக ஆகும். மேற்கண்ட காரியங்களுக்கு எப்படி எந்தக் கட்டளையும் இல்லையோ அது போல் தலைப்பாகை அணிவதற்கும் கட்டளை இல்லை.

எனவே தொழுகையிலோ, தொழுகைக்கு வெளியிலோ ஒருவர் தலைப்பாகை அணிய விரும்பினால் அணியலாம். விரும்பினால் அணியாமலும் இருக்கலாம்.

நன்றி sltj

Sunday, May 20, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 18.05.2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 18.05.2012


Saturday, May 19, 2012

Friday, May 18, 2012

ஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா?

ஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா?

ஹஜ் மானியத்தை பத்து வருடத்துக்குள் நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது சரியா?

- கடையநல்லூர் மசூது

பதில் :

இந்தியாவை ஆள்பவர்களுக்கும், நீதி வழங்குவோருக்கும், ஊடகங்களுக்கும் பொது அறிவு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அறைகுறையாகவும், மேலோட்டமாகவும் எதையாவது உளறுவது தான் அறிவு என்று ஆகி விட்டது.

இந்தியா மதச்சார்பற்ற நாடு. எனவே ஒரு மதத்தினரின் புனிதப்பயணத்துக்கு மானியம் வழங்குவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பது தான் பிரச்சனையாக்கப்படுகிறது.

வசதி படைத்தவர்கள் தான் ஹஜ் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த மானியம் எல்லாம் தேவை இல்லை என்பதும் கூடுதலாக முன் வைக்கப்படுகிறது.

ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஹாஜிகளுக்காக மத்திய மாநில அரசுகள் ஒரு நயாபைசாவும் நமக்குத் தருவதில்லை. மாறாக ஹஜ் பயணம் மேற்கொள்வோர் மூலம் கோடிகோடியாக இந்த அரசாங்கம் கொள்ளை அடிக்கிறது என்பது தான் உண்மை.

இவர்கள் மானியம் என்று எதைச் சொல்கிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்வது என்றால் முதல் வகுப்பில் செல்ல ஒரு லட்சத்து முப்பதாயிரம் பணத்தை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.

இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வது என்றால் ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய்கள் செலுத்த வேண்டும்.

மூன்றாம் வகுப்பில் பயணம் செல்வது என்றால் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்கள் செலுத்தவேண்டும்.

இந்தப் பணம் எதற்காக செலுத்த வேண்டும்? சாதாரண வகுப்பில் விமான டிக்கெட், பதினைந்து நாட்கள் சவூதியில் ஆகும் உணவுச் செலவு, சவூதியில் தங்கும் அறைகள் ஆகிய ஏற்பாடுகளுக்காகத் தான் இந்த தொகை வசூலிக்கப்படுகிறது.

இந்த ஒரு லட்சத்தி முப்பதாயிரத்தில் விமானக் கட்டணம் குறைந்தது 25 ஆயிரம் ரூபாய்கள். அதிக பட்சம் (சீசன் நேரத்தில்) 40 ஆயிரம் ஆகும்.

சவூதியில் இறங்கியவுடன் நம்முடைய உணவுக்காக 20 ஆயிரத்தை தருவார்கள். அது தான் மானியமாம்.

ஒரு அறைக்கு ஆறு பேர் என்று அடைப்பதால் தங்கும் விடுதிக்கட்டணம் பத்தாயிரத்தை தாண்டாது. அதுவும் ஆற்காடு நவாப் மூலம் இந்தியர்கள் தங்குவதற்காக இந்தியாவுக்கான தங்கும் விடுதிகளும் உள்ளன.

மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால், விமானக்கட்டணம் 40 ஆயிரம், உணவுக்காக கையில் இருபதாயிரம், தங்கும் விடுதிக்காக பத்தாயிரம் ஆக மொத்தம் 70 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. மீதம் உள்ள 60 ஆயிரம் ரூபாய் ஹாஜிகளிடம் இருந்து கொள்ளை அடிக்கப்படுகிறது. 70 ஆயிரம் செலவாகும் ஒரு புனிதப்பயணத்திற்கு மேலும், அறுபதாயிரம் ரூபாய்கள் கூடுதலாக கொள்ளை அடித்து விட்டு மானியம் தருவதாக சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

ஒவ்வொரு ஹாஜிகள் மூலமும் போலி மானியத்தைக் கழித்த பின்னர் அறுபதாயிரம் ரூபாய்கள் சுரண்டி விட்டு மானியம் கொடுப்பதாக பிரச்சாராம் செய்வதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

குருட்டுப் பிச்சைக்காரனின் பாத்திரத்தில் கிடக்கும் பத்து ரூபாயை லவட்டி விட்டு ஒரு ரூபாய் தர்மம் செய்வதற்கும் மத்திய அரசின் போலி மானியத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. முஸ்லிம்கள் புனிதப்பயணம் செல்ல வேண்டுமானால் அறுபதாயிரம் ரூபாய் கப்பம் செலுத்த வேண்டும் என்று நேரடியாகவே சொல்லிவிடலாம்.

மற்றவர்கள் புனிதப்பயணம் மேற்கொண்டால் எந்த வரியும் செலுத்த தேவை இல்லை. முஸ்லிம்கள் புனிதப்பயணம் மேற்கொண்டால் வரிசெலுத்த வேண்டும் என்பது தான் யதார்த்தம்.

ஹஜ்ஜுக்கு செல்வதற்கு அனுமதியும், பயண ஏற்பாடும் மட்டும் செய்து தந்து விட்டு அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டால் 40+20+10=70 ஆயிரம் ரூபாயில் முஸ்லிம்கள் ஹஜ் செய்வார்கள். மானியம் என்ற பழியையும் சுமக்கும் இழிநிலை ஏற்படாது.

மத்திய அரசே ஒவ்வொரு ஹஜ் பயணியிடமும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிப்பதை உடனே நிறுத்து என்று சுவரொட்டி மூலம் அம்பலப்படுத்தினால் தான் ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கப்படவில்லை என்பதை இந்து மக்களும் அறிந்து கொள்வார்கள்.

மத்திய அரசாங்கம் தான் முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக மானிய நாடகம் நடத்துகிறது என்றால் நீதிபதிகளுக்குமா மூளை வரண்டுவிட்டது? எப்படி மானியம் வழங்கப்படுகிறது என்று விசாரித்து இருந்தால் மானியம் எதுவும் வழங்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ள முடியுமே?

நன்றி:   உணர்வு 16:38

ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்ய என்ன செலவு?

ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்ய என்ன செலவாகும்?

கேள்வி:
ஹஜ் செய்வதற்கு அரசு மூலமாக சென்றால் என்ன செலவாகும். இதற்கான வழி முறைகள் என்ன? தனியார் மூலம் செல்வது நல்லதா?

- ஆசிக், ஊட்டி

இந்தியாவில் அதிகம் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில்களில் ஹஜ் தொழில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தனியார்கள் நடத்தும் ஹஜ் சர்வீஸ்கள் முஸ்லிம்களின் மார்க்கப் பற்றை மூலதனமாகக் கொண்டு கொள்ளை அடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறைந்த செலவிலும் பாதுகாப்பான முறையிலும் ஹஜ் செய்ய மத்திய மாநில அரசுகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளன என்பதை ஹஜ் பயணிகள் சரியான முறையில் அறிந்து கொள்ளாததும், ஹஜ் தொழில் செய்யும் தனியார்களின் மனதை மயக்கும் போலி விளம்பரங்களால் ஈர்க்கப்படுவதும் தான் இந்த நிலைக்குக் காரணம்.

முதலில் இந்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்ட ஹஜ் கமிட்டி மூலம் ஒருவர் ஹஜ் செய்ய விரும்பினால் அவர், “குரூப் பச்சை”, “குரூப் வெள்ளை”, “குரூப் அஸீஸிய்யா” ஆகிய மூன்று தரவரிசைகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

“பச்சை” எனும் முதல் வகுப்பில் பயணம் செய்ய விரும்புபவர் 1,30,000 (ஒரு லட்சத்து முப்பதாயிரம்) ரூபாய்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

“வெள்ளை” எனும் இரண்டாம் வகுப்பைத் தேர்வு செய்பவர் 1,20,000 (ஒரு லட்சத்து இருபதினாயிரம்) ரூபாய்கள் செலுத்த வேண்டும்.

“அஸீஸிய்யா” எனும் மூன்றாம் வகுப்பைத் தேர்வு செய்பவர் 1,10,000 ( ஒரு லட்சத்து பத்தாயிரம்) ரூபாய்கள் செலுத்த வேண்டும்.

இந்த மூன்று வகுப்புக்களிலும் வசதிகளைப் பொருத்தவரை எந்த வேறுபாடும் இல்லை.

ஆறு பேருக்கு ஒரு அறை என்ற அடிப்படையில் தங்குவதற்கான வசதி செய்து தரப்படும்.

எந்த விதமான நோய் ஏற்பட்டாலும் அவர்களுக்கு இலவச மருத்துவ வசதி செய்து தரப்படும்.

மேலும், நாம் செலுத்திய அந்தக் கட்டணத்தில் நம்முடைய உணவுக் கட்டணமும் அடக்கம்.

எனவே ஹஜ் பயணிகள் மக்கா சென்ற உடன் அவர்கள் செலுத்திய பணத்தில் 2000 ரியால்கள் (சுமார் 27 ஆயிரம் ரூபாய்கள்) ஹஜ் கமிட்டியின் சார்பில் திருப்பித் தரப்படும். அது ஹஜ் செய்து முடிக்கும் வரை நம்முடைய அனைத்துச் செலவுகளுக்கும் தாரளமாக போதுமானதாகும். சாப்பாடு ஒரு பிரச்சனையே இல்லை.

மூன்று வகுப்புக்களுக்கு இடையே கட்டண வித்தியாசம் வசதிகளின் ஏற்படும் வித்தியாசத்துக்காக அல்ல. அனைவருக்கும் ஒரே மாதிரியான வசதிகளே செய்து தரப்படும்.

அதிகக் கட்டணம் செலுத்தி பச்சை எனும் பிரிவை தேர்வு செய்தவர்கள் ஹரம் ஷரீபில் இருந்து ஐநூறு மீட்டர் தொலைவிற்குள் உள்ள தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்படுவார்கள்.

இரண்டாம் வகுப்புக்கு சற்று தொலைவில் தங்கும் இடம் தரப்படும்.

மூன்றாம் வகுப்புக்கு அஸீஸிய்யா எனும் தூரமான பகுதியில் தங்கும் இடம் தரப்படும்.

ஆனாலும் இவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஹரம் வருவதற்கு இலவச பஸ்கள் உள்ளன.

எனவே தூரத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர்கள் ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாயில் தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றலாம்.

ஹரமுக்கு அருகில் தான் தங்க வேண்டும் என்று ஆசைப்படுவோர் ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாயில் மன நிறைவுடன் ஹஜ் செய்யலாம்.

ஆனால் ஹஜ் தொழில் செய்யும் தனியார்கள் சுமார் நான்கு லட்சம் முதல் நான்கு லட்சத்தி ஐம்பதினாயிரம் வரை கட்டணம் பெற்றுக் கொள்கின்றனர்.

மேலும் கடைசி நேரத்தில் ரியால் மதிப்பு கூடி விட்டது. பெட்ரோல் விலை கூடி விட்டது என்று பொருத்தமில்லாத காரணம் கூறி கடைசி நேரத்தில் பத்தாயிரம் இருபதாயிரம் என்று மேலதிகமாக இன்னொரு கொள்ளையும் அடிக்கின்றனர். ஹாஜிகளுக்கு வேறு வழி இல்லை என்பதாலும், எவ்வளவு கேட்டாலும் தந்து விடுவார்கள் என்பதாலும், இந்தப் பலவீனத்தை ஆதாயமாக்கிக் கொள்கின்றனர்.

தனியார் ஹஜ் கொள்ளையர்கள் மூலம் ஒருவர் ஹஜ் செய்யும் செலவில் கணவன்,மனைவி, இரண்டு பிள்ளைகள் என நான்கு பேர் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்து விடலாம். அந்த அளவுக்கு இவர்கள் அடிக்கும் கொள்ளை அமைந்துள்ளது.

இவர்கள் இரண்டு காரணங்களைக் கூறித்தான் மக்களைக் கவர்கிறார்கள்.

ஒன்று ஹரமுக்கு அருகில் உங்களுக்கு தங்கும் இடம் என்பார்கள்.

ஆனால் ஹரமுக்கு அருகில் தங்குமிடம் பெறுவதற்கு ஹஜ் கமிட்டி மூலம் சென்றவர்களுக்குத் தான் முன்னுரிமை என்பது மக்களுக்குத் தெரிவதில்லை.

ஹஜ் கமிட்டி மூலம் ஹாஜிகள் அழைத்துச் செல்லப்படுவதற்கு பல நாட்களுக்கு முன்னால் தனியார் ஹஜ் தொழில் செய்பவர்கள் ஹாஜிகளை முன் கூட்டியே அழைத்துச் செல்வார்கள். அப்போது ஹரமிற்கு அருகில் இருக்கும் விடுதிகள் காலியாக இருப்பதால் அந்த நாட்களில் மட்டும் ஹரமுக்கு அருகில் உள்ள விடுதிகளில் சில நாட்கள் தங்க வைப்பார்கள்.

ஹஜ் கமிட்டி மூலம் வரும் ஹாஜிகள் மக்கா வரத் துவங்கியதும் தனியார்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இடத்தைக் காலி செய்து விட வேண்டும். ஹஜ்ஜுக்கு நெருக்கமான நாட்களில் ஹஜ் கமிட்டி மூலம் செல்பவர்கள் தான் ஹரமுக்கு அருகில் தங்க வைக்கப்படுவார்கள்.

தனியார் மூலம் அழைத்து வரப்பட்டவர்களை ஹரமுக்கு அருகில் இருந்து அப்புறப்படுத்தும் போது மதீனாவின் சிறப்புக்களைக் கூறி அதற்காக ஹாஜிகளை மதீனாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மதீனாவில் கொண்டு போய் விட்டு விடுவார்கள். ஹஜ் கிரியை ஆரம்பமாகும் போது தான் இவர்களை மினாவுக்கு அழைத்து வருவார்கள். அதன் பின்னர் ஹரமுக்குத் தொலைவில் உள்ள தங்கும் விடுதிகளில் தான் தங்க வைக்கப்படுவார்கள்.

ஹரமுக்கு அருகில் என்று சொல்வது யாரும் வராத நாட்களில் ஓரிரு நாட்கள் தங்க வைப்பது தான். இதற்குத் தான் மும்மடங்கு கொள்ளை அடிக்கப்படுகிறது.

சில அயோக்கியர்கள் இதிலும் மோசடி செய்து சொன்ன சொல்லை மீறி, சில நாட்கள் கூட ஹரமுக்கு அருகில் உள்ள விடுதிகளில் தங்க வைக்காமல் அதிக தொலைவில் உள்ள அஸிஸிய்யாவில் தங்க வைத்து அதிக ஆதாயம் பார்த்து விடுவார்கள்.

அடுத்ததாக சுவையான சாப்பாடு என்பது இவர்கள் வீசும் மாய வலை.

ஹஜ் கமிட்டி திருப்பித் தரும் 2000 ரியாலில் அதே சுவையான சாப்பாட்டை நாம் சாப்பிட முடியும். ஹஜ் நேரத்தில் மந்தம் ஏற்படுத்தும் சாப்பாட்டைப் போட்டு சோம்பலாக்குவதற்குத் தான் இவ்வளவு பெரிய கொள்ளை அடிக்கப்படுகிறது.

மத்திய அரசில் சட்டப்படி அனுமதி பெற்று ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்பவர்கள் அடிக்கும் கொள்ளை இது. இவர்கள் என்ன தான் கொள்ளை அடித்தாலும் உறுதியாக ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள்.

ஆனால் இவர்களையும் மிஞ்சிய கொள்ளையர்களும் உள்ளனர். இவர்கள் ஹஜ் சர்வீஸ் செய்வதற்கு முறையாக அரசிடம் அனுமதி பெறாதவர்கள். இவர்கள் ஹஜ் தொழில் நடத்தும் பெரிய நிறுவனங்களிடம் பேசி வைத்துக் கொண்டு ஒரு ஹாஜிக்கு இவ்வளவு என்ற அடிப்படையில் கமிஷன் பேசிக் கொண்டு தாங்களே ஹஜ் சர்வீஸ் நடத்த சட்டப்படி அனுமதி பெற்றது போல் மக்களிடம் ஏமாற்றி விளம்பரம் செய்வார்கள். பெரிய நிறுவனத்திடம் இரண்டு லட்சம் என்று பேசிக் கொண்டு மக்களிடம் நான்கு லட்சம் என்று கறந்து விடுவார்கள்.

அடுத்ததாக, பயணிகளை அழைத்துச் செல்வதிலும் விமான சேவையிலும் அடுத்த கொள்ளை அடிப்பார்கள். விமானத்தில் சென்னையில் ஏறி ஜித்தாவில் இறங்கினால் அதற்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும். சென்னையில் ஏறி ஏதாவது நாட்டில் ஓரிரு நாட்கள் தங்கவைத்து, பிறகு இன்னொரு விமானத்தில் ஏற்றி ஜித்தாவுக்கு அனுப்பினால் அதற்குக் கட்டணம் குறைவு. இதற்கு “டிரான்சிட்” என்று சொல்லப்படுகிறது. ஹஜ் வியாபாரிகளில் பலர் இந்த வகையிலும் மக்களுக்குச் சங்கடம் ஏற்படுத்தி இதிலும் கொள்ளை அடிப்பார்கள்.

எப்படியும் அதிகக் கோட்டா கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பெரிய நிறுவனங்கள் இவர்களுடன் "டைஅப்" வைத்துக் கொள்ளும். பெரிய நிறுவனங்கள் எதிர்பார்த்தவாறு கூடுதலாக இடம் கிடைக்காவிட்டால் அவர்கள் தங்களிடம் நேரடியாகப் பதிவு செய்தவர்களுக்குத் தான் முன்னுரிமை கொடுப்பார்கள். இந்த "டைஅப்" கும்பலுக்கு அல்வா கொடுத்து ஹஜ் பயணிகள் ஹஜ் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துவார்கள்.

சட்டப்படி அனுமதி பெறாமல் பணத்தாசையை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு ஹஜ் வணக்கத்தில் விளையாடும் கொள்ளைக் கூட்டம் மற்றொரு மோசடியிலும் ஈடுபடுவதுண்டு.

சில மாநிலங்களில் அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்களில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவுக்கு மக்கள் சேர்வதில்லை. அவர்கள் தமிழக முஸ்லிம்கள் போல் ஏமாளிகள் அல்ல. ஹஜ் கமிட்டி மூலம் மட்டுமே அந்த மாநிலத்தவர்கள் ஹஜ் செய்வார்கள். இதனால் தனியாரின் கோட்டாக்கள் நிரம்புவது இல்லை. இப்படி மீதமாக உள்ள கோட்டாவைப் பிற மாநிலத்தில் உள்ள இது போன்ற கொள்ளையர்கள் மூலம் ஆள் பிடித்து நிரப்புவது வழக்கம்.

இத்தகைய பிராடுகள் மூலம் நாம் ஹஜ் செய்யும் கடமை நமக்கு இல்லை. முறையாக விண்ணப்பித்து ஹஜ் கமிட்டி மூலம் நமக்கு வாய்ப்பு கிடைத்தால் ஹஜ் கடமையாகும். வாய்ப்பு கிடைக்காவிட்டால் அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான். மீண்டும் விண்ணப்பிக்கலாம். இரண்டு முறை குலுக்கலில் நமக்கு வாய்ப்பு இல்லாவிட்டால் மூன்றாம் முறை குலுக்கல் இல்லாமல் நமக்கு வாய்ப்பு கிடைத்து விடும்.

ஹஜ்ஜை வியாபாரமாக்கி குறைந்த செலவில் ஹஜ் செய்யும் உரிமைகளைப் பறித்து வரம்பு மீறிய கொள்ளைக்காரர்களுக்குத் துணை செய்யும் கடமை நமக்கு இல்லை.

இறையச்சத்திலும் நன்மையிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் உதவாதீர்கள் என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை மறந்ததால் தான் இந்தப் பாதிப்பு.

ஹஜ்ஜை வியாபரமாக்கி இது போன்ற மோசடிகள் வளராமல் தடுக்க வேண்டுமானால் சமுதாயம் இவர்களுக்கு ஒத்துழைக்காமல் இருப்பது அவர்கள் மீதுள்ள கடமையாகும்.

ஆனால் இஸ்லாமியப் பத்திரிகைகளும், இஸ்லாமியத் தொலைக்காட்சிகளும் இவர்களின் பித்தலாட்டம் குறித்து வாய் திறக்க மாட்டார்கள். காரணம் ஹஜ் கொள்ளையர்கள் தான் இவர்களுக்கு விளம்பரத்தின் மூலம் பணத்தைக் கொட்டிக் கொடுக்கின்றனர். அதை இழக்க யாருக்கும் மனம் இல்லை.

இரு நூறு பேரை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றால் குறைந்தது ஒரு கோடி ரூபாய் லட்டு போல் லாபம் கிடைக்கும் போது அதில் சில ஆயிரங்களைப் பத்திரிகைகளுக்கு வழங்குவது அவர்களுக்கு எளிதானது தான். எனவே தான் கொந்தளித்து குமுறி எழ வேண்டிய முஸ்லிம்கள் யாருக்கோ வந்த விருந்து என்பது போல் அலட்சியம் காட்டுகின்றனர். எலும்புத் துண்டுகளுக்கு விலை போகும் முஸ்லிம் ஊடகங்கள் தான் இந்த அயோக்கியத் தனத்தை அம்பலப்படுத்துவதில்லை.

ஹாஜிகளின் கண்ணீரும் அவர்களின் பத்துவாவும் இவர்களைச் சும்மா விடாது. வணக்கத்தை வியாபாரமாக்கும் அனைவரையும் ஒட்டு மொத்தமாக முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதைப் பிரசுரமாக வெளியிட்டு ஹஜ் பெயரால் நடக்கும் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவோம்.

நன்றி:  உணர்வு 16:35

Thursday, May 17, 2012

இளைஞர்கள் தாடி வைப்பதை தவிர்க்கலமா?

இளைஞர்கள் தாடி வைப்பது பற்றி ஒன்லைன் பீஜேயில் கேட்கப்பட்ட கேள்விக்கு சகோதரர் பீ.ஜே அவர்கள் வழங்கிய பதிலை வாசகர் நலம் கருதி எமது தளத்திலும் வெளியிடுகின்றோம்.

சில சகோதரர்கள் தாடி வைப்பதில்லை. ஏன் தாடி வைக்கவில்லை என்று கேட்டால், என் மனைவி இப்போது வைக்க வேண்டாம். வயதானதும் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறுகிறாள். அதனால் வைக்கவில்லை’ என்று பதில் கூறுகின்றனர். சுன்னத்தைப் புறக்கணிக்கும் இவர்களின் நிலை மறுமையில் எப்படியிருக்கும்?

 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوْ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ

‘இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்; தாடிகளை வளர விடுங்கள்; மீசையை ஒட்ட நறுக்குங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 5892

தாடி வைப்பதை வலியுறுத்தி இது போன்ற பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. எனவே தாடி என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஆகும். இதை எக்காரணம் கொண்டும் ஒரு முஸ்லிம் புறக்கணிக்கக் கூடாது.

தாடியை மழித்தல் என்பது சுன்னத்தைப் புறக்கணிப்பது என்று சொல்வதை விட, தானாக வளரும் ஒரு சுன்னத்தை அழித்தல் என்று தான் கூற வேண்டும்.

பாவமான காரியத்தில் மனைவிக்குக் கணவனோ, அல்லது கணவனுக்கு மனைவியோ கட்டுப்படக் கூடாது.

 
حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ هُوَ ابْنُ مُسْلِمٍ عَنْ صَفِيَّةَ عَنْ عَائِشَةَ أَنَّ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ زَوَّجَتْ ابْنَتَهَا فَتَمَعَّطَ شَعَرُ رَأْسِهَا فَجَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَقَالَتْ إِنَّ زَوْجَهَا أَمَرَنِي أَنْ أَصِلَ فِي شَعَرِهَا فَقَالَ لَا إِنَّهُ قَدْ لُعِنَ الْمُوصِلَاتُ

அன்சாரிகளில் ஒரு பெண் தனது மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகளின் தலைமுடி உதிர்ந்து விட்டது. அவள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்துத் தெரிவித்து விட்டு, ‘என் கணவர் எனது தலையில் ஒட்டு முடி வைத்துக் கொள்ளுமாறு பணிக்கிறார்’ என்று கூறினாள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘வேண்டாம்! ஒட்டு முடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5205, 5934

எனவே மனைவியோ, அல்லது மற்றவர்களோ கூறுகின்றார்கள் என்பதற்காக தாடியைச் சிரைக்கக் கூடாது.

இவ்வாறு செய்பவர்களின் நிலை மறுமையில் எப்படியிருக்கும்? என்று கேட்டுள்ளீர்கள்.

ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டு, அவரது நிலை மறுமையில் எப்படியிருக்கும் என்று மார்க்கத்தில் கூறப்படவில்லை. எனவே தவறு என்று கண்டால் அதைச் சுட்டிக் காட்டுவது தான் நமது கடமை. மறுமை நிலை குறித்து அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்.

அந்நாளில் மதிப்பீடு செய்தல் உண்மை. (நன்மையின்) எடைகள் கனமாக இருப்போரே வெற்றி பெற்றோர். (நன்மையின்) எடைகள் இலேசாக இருப்போர் தமக்கே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். நமது வசனங்கள் விஷயத்தில் அநீதியாக அவர்கள் நடந்து கொண்டதே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 7:8,9)

நன்றி sltjweb.com



Tuesday, May 15, 2012

அதிரையில் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாம்!

அதிரையில் 1.5.2012 முதல் 12.5.2012 வரை கோடைக்கால பயிற்சி முகாம் அதிரை தவ்ஹீத் பள்ளியில் மாணவர்களுக்கு காலையிலும் மாணவிகளுக்கு மாலையிலும் நடைபெற்றது.

இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி சகோதரர் சேப்பாக்கம் இஸ்மாயில் சகோதரிகள் சபானா ஆலிமா மற்றும் சக்கூரா ஆலிமா ஆகியோர்கள் மாணவ மாணவிகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படை, முஸ்லிம்களிடம் கானப்படும் மூடநம்பிக்கைகள், தூஆக்கள், ஜனாஸாவின் சட்டங்கள்,  தொழுகையின் சட்டங்கள் போன்ற தலைப்புகளின் வகுப்புகள் நடத்தினார்கள் இறுதி நாளில் மாணவ மாணவிகளுக்கு தேர்வுகள் நடத்தி இஸ்லாமிய புத்தகங்கள் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. 










Monday, May 14, 2012

அதிரையில் நடைபெற்ற கந்தூரி எதிர்ப்பு பொதுக்கூட்டம்!

அதிராம்பட்டினம் T N T J கிளை சார்பாக 13.5.2012 அன்று தக்வாபள்ளி அருகில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்களும் சகோதரர் அப்துா் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிதராத எந்த செயலும் மார்க்கம் அல்ல என்றும் கந்தூரி தர்கா வழிபாடுகளை அனைத்துமக்களும் புறக்கணிக்கவேண்டும் என்றும்.

2. சமிப காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக எழுதிவரும் தினத்தந்தியை மக்கள் புறக்கனிக்கவேண்டும் என்ற தீர்மானமும்.

3. அதிரை பேரூராட்சி மக்களின் நலன் கருதி பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற அறிவிப்பை வறவேற்றும், இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.







Sunday, May 13, 2012

அதிரையில் ரத்த தான முகாம் - 16.05.2012

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன் 5:32)


இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 16.05.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற உள்ளது. 

நாள்: 16.05.2012 (புதன்கிழமை)
நேரம்: காலை 10 மணி முதல் 2 மணி வரை
இடம்:
வெஸ்டன் மழலையர் பள்ளி, 
வெற்றிலைகாரத் தெரு,
அதிராம்பட்டிணம்

மனித நேயத்தை வார்த்தைகளால் அல்ல, நமது இரத்தத்தால் வெளிப்படுத்துவோம்.

தொடர்புக்கு: 96295 33887, 96291 15317, 94431 88653, 99441 91505


Saturday, May 12, 2012

அதிரையில் கந்தூரி எதிர்ப்பு பொதுக்கூட்டம் (13.05.2012)!


இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 13.05.2012 அன்று மாலை 6 மணி அளவில் தக்வா பள்ளி அருகில், 'கந்தூரி எதிர்ப்பு பொதுக்கூட்டம்' நடைபெற உள்ளது.






Friday, May 11, 2012

இஸ்லாத்தின் மூலாதாரங்கள் எது? (விவாத வீடியோ) - தப்லீக் ஜமாஅத் Vs தவ்ஹீத் ஜமாஅத்


கடந்த April 21, 22 ஆகிய தேதிகளில் இலங்கை, ஹெம்மாத்தகம என்ற ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும், தப்லீக் ஜமாத்திற்கும் இடையில் இஸ்லாத்தின் அடிப்படை சட்ட மூலாதாரங்கள் எவை என்ற தலைப்பில் பகிரங்க விவாதம் நடை பெற்றது.

விவாதத்தில் தப்லீக் ஜமாத்தினர் ஏற்றுக் கொண்டுள்ள மத்ஹபு கிதாபுகளில் நிறைந்திருக்கும் ஆபாசங்களையும், அசிங்கங்களையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினர் அள்ளிப் போட்டனர்.

கடைசி வரை எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் "மத்ஹபுகளில் சொல்லப்பட்டுள்ள ஆபாசங்கள் அனைத்தும் சரியானவைதான் அதில் ஒன்றும் அசிங்கமில்லை" என்று ஆபாசங்களுக்கு தெளிவாக வக்காளத்து வாங்கியது தப்லீக் ஜமாத். 

தப்லீக் ஜமாஅத்திற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இடையில் நடைபெற்ற விவாதம் கீழ்காணும் YouTube பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ளது.

Wednesday, May 09, 2012

துபை (U A E) TNTJ ஆலோசனை கூட்டம்

துபை (U A E) TNTJ அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 11.5.2012 வெள்ளிக்கிழமை அன்று இரவு மக்ரிப் தொழுகைக்கு பிறகு 7.15 மணிக்கு முன்னால் தலைவர் L M I அப்பாஸ் ரூம் மாடியில்  நடைபெற இருக்கிறது நிர்வாகிகள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளவும்

தொடர்புக்கு

 தலைவர் 00971509146760
செயலாளர் 00971505063755

Tuesday, May 08, 2012

பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் கலந்து கொண்ட கோவை மாவட்ட குடும்பவியல் மாநாடு!

கடந்த 6-5-2012 அன்று கோவை மாவட்டம் சார்பாக கோவையில் மாபெரும் குடும்பவியல் மாநாடு நடைபெற்றது. இதில் இம்மை மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் 15 க்கும் மேற்பட்ட அரங்கங்கள் இடம் பெற்றிருந்தது.

மேலும் P. ஜைனுல் ஆபிதீன் , சம்சுல்லுஹா, பக்கீர் முஹம்மத் அல்தாபி, M.I. சுலைமான், ரஹ்மத்துல்லாஹ், M.S. சுலைமான் ஆகியோரின் மார்க்க சொற்பொழிவுகள் இடம் பெற்றது.

இம்மாநாட்டில் ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்

மாநாட்டு காட்சிகள்..