Tuesday, December 31, 2013

புஷ்வாணமாகிப்போன முஜாஹிதின் விவாத சவாலும், புறமுதுகிட்டு ஓடிய சூனியக்கார கும்பலும்!

ச்சே. நாம் செய்த காம சேட்டைகள் உண்மை என்று வாக்குமூலம் கொடுத்தும் கூட, நமக்கு இவ்வளவு பக்தர்களா? பிஜேவிடம் விவாதம் செய்து பிரபலம் அடையலாம் என்று போட்ட பிளான் இப்படி போச்சே.... ஓடிவிட்டோமே.... பரவாயில்லை நமது லீலைகளையே சரிகாணும் பக்தர்கள் இருக்கும் போது என்ன கவலை........
மக்கள் மத்தியில் குறிப்பாக ஏகத்துவாதிகளிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஒரு விவாத ஒப்பந்தம் தான் கடந்த 25.12.2013ம் திகதி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் முஜாஹித் தரப்பினருக்கும் மத்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடந்த விவாத ஒப்பந்தமாகும்.

பல மாதங்களாக கடித பரிமாற்றம் நடத்தப்பட்ட பிறகு ஒரு உடன்பாட்டிற்கு வந்து விவாத ஒப்பந்தத்திற்கு நேர காலம் ஒதுக்கப்பட்டது.

எனினும் விவாத ஒப்பந்தத்தில் கலந்துக் கொண்ட முஜாஹித் குழுவினர் ஏற்கனவே திட்டமிட்டபடி சில போலி காரணங்களை முன் வைத்து விவாத ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கி ஓடி விட்டார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை இது போன்ற பல ஒப்பந்தங்களை கண்டவர்கள் என்பதாலும், எதிர் காலத்தில் இதே தலைப்புகளில் விவாதிக்க யார் முன் வந்தாலும் சவாலை பகிரங்கமாக ஏற்றுக் கொள்பவர்கள் என்பதினாலும் இது தவ்ஹீத் ஜமாஅத் இழந்த ஒரு சந்தர்ப்பமாக கருதப்படமாட்டாது. ஆனால், முஜாஹித் போன்றவர்கள் புகழை சம்பாதிப்பதற்கே தருணம் தேடுபவர்கள் என்பதினாலும், தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டால் இந்த தலைப்புகளில் யாரும் விவாதிக்க முன்வர மாட்டார்கள் என்பதனாலும் இச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டது அவர்களைப் பொறுத்த வரை பெரும் இழப்பாகும் என்பதில் எள்முனை அளவிலும் சந்தேகம் இல்லை. அப்படியிருந்தும் வேண்டும் என்றே உப்புச் சப்பு இல்லாத காரணங்களை கூறி தப்பினோம் பிழைத்தோம் என்று பெரு மூச்சு விட்டு முஜாஹித் தரப்பு ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கி ஓடி விட்டது.

விவாத ஒப்பந்தங்களுக்கு என்று சில விதி முறைகள் இருக்கின்றன. இவை ஒன்றும் அறியாதவர்களை தனது தரப்பின் சார்பாக வரவழைத்து தானும் அவமானப்பட்டு,  தன்னால் அழைக்கப்பட்டவர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டார் இந்த முஜாஹித். குறிப்பாக அக்கரைப்பற்று அன்ஸார் மௌவ்லவியுடன் சிலாபத்திற்கு சென்று முஜாஹிதின் மன்மத லீலைகள் அடங்கிய சீடியை கெஞ்சிக் கேட்டு முஜாஹிதின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி, முஜாஹிதின் மானத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்று பெரும் ஆவலுடன் இருக்கும் சித்தீக் போன்றவர்களை எல்லாம் ஒப்பந்தத்திற்கு அழைத்து வந்ததிலிருந்து தனது தரப்பின் நியாயத்தை உணர இது போன்ற நயவஞ்கர்களை தவிர வேறு யாரும் இல்லை என்று முஜாஹித் பறை சாற்றி விட்டார்.

தலைப்பில் முரண்பாடு கொண்டு பிறகு ஒப்புக் கொண்டமை:

விவாத தலைப்பாக எது அமைய வேண்டும் என்பதே முதல் சர்ச்சையாக இருந்தது. அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் முன் வைத்த நியாயங்கள் என்னவென்று மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

முஜாஹித் எதை தான் பேசிய வீடியோவில் விவாத அறை கூவலாக விட்டாரோ அதையே விவாத தலைப்பாக்க வேண்டும் என்பது ஏற்கனவே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 08.09.2013ம் திகதி முஜாஹிதுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை ஒப்புக் கொண்டு தான் முஜாஹித் விவாத ஒப்பந்தத்திற்கே வருகிறேன் என்று பதில் அனுப்பியிருந்தார். ஆனால், ஆச்சரியமான விடயம் என்னவென்றால்; தான் எதை விவாத அறை கூவலாக குறிப்பிட்டிருந்தாரோ அதையே அவர் மறந்திருந்ததுதான். மறந்திருக்காவிட்டால் அவர் வேண்டும் என்றே மறந்தது போல் நடித்திருக்க வேண்டும். ஏனெனில்,  இவருக்கு நடிப்பது கைவந்த கலை என்பது அனைவருக்கும் தெரியூம்.

கடிதத்தை எடுத்துக்காட்டி வீடியோ கிளிப்பையும் போட்டு காட்டிய பிறகு ஒன்றும் செய்ய முடியாமல் விவாத அறை கூவல் விட்டதை முஜாஹித் ஒப்புக் கொண்டார். அதை ஒப்புக் கொள்ளும் போதும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் தான் ஒப்புக் கொண்டார்.

பிறகு சூனியம் குறித்து மாத்திரம் விவாதிப்போம் என்று சூனியமாக பேச ஆரம்பித்தார். எது விவாத  தலைப்பாக அமைய  வேணடும் என்பற்கு தவ்ஹீத் ஜமாஅத் நியாயமான காரணங்களை முன் வைத்தது.

27.08.2013ம் அன்று முஜாஹித் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிவைத்த கடிதத்தில் “அல் குர்ஆனிற்கு சிறந்த அறிவிப்பாளர் கொண்ட ஹதீஸ்கள் முரண்படுதல் பற்றியும், சூனியத்திற்கு தாக்கம் உண்டு என்று நம்புவது ஷிர்க் என்பது பற்றியும் தான் விவாதம் அமைய வேண்டும்” என்று அவரே குறிப்பிட்டிருந்தார். மேலும் விவாத அறை கூவல் விட்ட வீடியோவிலும் “அல் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் சம்பந்தமாக பேசினால் எல்லா பிரச்சனையும் முடிந்து விடும். சூனியம் இருக்குதா? இல்லையா? என்பது மேட்டரே இல்லை” என்று தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து காட்டியவுடன் “ஒப்பந்தத்தில் எதையும் மாற்றிக் கொள்ளலாம்” என்று அந்தர் பல்டி அடித்து பொருத்தமில்லாத பதிலொன்றைச் சொன்னார்.

விவாத ஒப்பந்தம் என்பது விவாத தலைப்பு, நிலைப்பாடு, விவாத அடிப்படைகள்,  விவாதிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் விவாத ஒழுங்குகள் குறித்து பேசும் கலந்துரையாடல் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. ஆனால், எந்த தலைப்பில் விவாத அழைப்பு விடுக்கப்பட்டதோ, எழுத்து மூலம் உறுதியளிக்கப்பட்டதோ அதை மாற்றுவதற்கு யாரும் விவாத ஒப்பந்தங்களை பயன்படுத்த மாட்டார்கள். ஏனெனில், அது விவாதிப்பதிலிருந்து பின்வாங்குவதாக கருதப்படும் என்பது யாவரும் அறிந்த உண்மையே.

மீண்டும் சூனியத்தை மாத்திரம் பேசுவோம் என்றவர்கள் “சூனியத்தை முதலில் பேசி பிறகு இரண்டாவதாக அல் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் குறித்து பேசுவோம்” என்றனர். அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் அல் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் என்ற தலைப்பு  தான் முதல் தலைப்பாக அமைய வேண்டும் என்பதற்கு பல நியாயமான காரணங்கள் முன் வைத்தது. அது தான் விவாத அறை கூவல் என்பதனால் அது தான் விவாத தலைப்பாகவே ஆக வேண்டும் என்பதை முஜாஹித் தரப்பிற்கும் மறுக்க முடியவில்லை. முதலில் அடிப்படையான விடயங்கள்தான் விவாதிக்கப்பட வேண்டும் என்பதை யாரும் ஒப்புக் கொள்வார்கள். ஏனெனில் சூனியத்திற்கு தாக்கம் உண்டு என்று வாதிப்பவர்கள், நாங்கள் அல் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளாக எதை முன் வைக்கிறோமோ அவ்வாறு கருதப்படும் செய்திகளை முன் வைக்கும் போது “இந்த செய்திகள் நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் என்று ஒரே வார்த்தையில் சொன்னால் அவை நபிகள் நாயகம் அவர்கள் சொன்னவைகளா? இல்லையா என்ற சர்ச்சை கிழம்பி மீண்டும் அடிப்படையை தீர்மானிக்கும் வழி முறை என்ன வென்று தானாக தலைப்பு மாறி விடும். அதனால் முதல் தலைப்பாக அல் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் என்ற தலைப்புத் தான் வர வேண்டும் என்ற நியாயத்தை தவ்ஹீத் ஜமாஅத் முஜாஹிதுக்கு புரிய வைத்தது. ஆனால், அதை மறுப்பதற்கு முஜாஹித் தரப்பினர் எடுத்து வைத்த வாதங்கள் சிறு பிள்ளைத்தனமாக இருந்தது. “நாங்கள் ஜும்ஆ செய்தால் எங்களுக்கு பின்னால் இருந்து தொழாமல் போறாங்க. எங்களை முஷ்ரீக்குகள் என்று சொல்றாங்க, எங்களுக்கு இதனால் பல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, சூனியம் குறித்து முதலில் பேசுவோம். நாங்கள் குர்ஆனை மாத்திரம் வைத்து சூனியத்திற்கு தாக்கம் உண்டு என்பதை பேசுவோம்  என்று சென்டிமென்டாகவும் முன்னுக்குப் பின் முரணாகவும் பேச ஆரம்பித்தனர்.

சூனியம் குறித்து பேசுவதற்கு பெரும் பகுதி திருக்குர்ஆனிலும் சிறு பகுதி  ஒரு சில ஹதீஸ்களிலும் உண்டு என்று முஜாஹித் கூறியதற்கு நேர் மாற்றமாக குர்ஆனை வைத்து மாத்திரம் நாங்கள் நிரூபிப்போம் என்று முர்ஷித் கூறியது முஜாஹித் தரப்பினர் சூனிய தலைப்பிலும் ஒரு நிலைபாட்டில் இல்லையென்பது தெளிவாகியுள்ளது.

பிறகு குர்ஆனுக்கு முரண்படுதல் என்றால் என்ன? என்று தவ்ஹீத் ஜமாத்திடம் விளக்கம் கேட்க ஆரம்பித்தார் முஜாஹித். இவ்வளவு காலம் நமக்கு தொடர் மறுப்பு பேசியவர் முரண்பாட்டின் வரைவிலக்கணம் என்னவென்று ஒப்பந்தத்தின் போது நம்மிடமே கேட்கிறார். நமக்கு மறுப்பு பேசும் போதும் விவாத அறை கூவல் விட்ட போதும் அந்த வரைவிலக்கணம் தெரியாமல் தான் பேசியுள்ளாரா? அல்லது வஹீயில் முரண்பாடு இல்லை என்று அல்லாஹ் கூறுவதை நம்மிடம் விளக்கம் கேட்டுத் தான் விளங்கப் போகிறாரா என்று எங்களுக்கு புரியவில்லை.

4:82 வசனத்தில் அல்லாஹ் வஹீயில் முரண்பாடு வராது என்று எதை குறிப்பிடுகிறானோ அதைத்தான் நாங்களும் எங்கள் நிலைபாடு என்று கூறுகின்றோம். இப்போது நீங்களும் முரண்பாட்டிற்கு வரை விலக்கணம் கூறுங்கள் என்று கேட்டவுடன் முரண்பாட்டின் வரை விலக்கணம் எனும் கதை முடிந்து விட்டது.

பிறகு தலைப்பையும் நிலைப்பாட்டையும் எழுதிக் கொள்ள தயாராகும் போது இன்னும் சில சர்ச்சைகள் இருக்கிறது. அவற்றை பேசிய பிறகே எழுதிக் கொள்வோம் என்று முஜாஹித் கூறினார். இவர் பல்டி அடிக்கப் போகிறார் என்ற சந்தேகம் அப்போது எழ ஆரம்பித்தது.

விவாதிப்பவர்கள் யார்?

விவாதத்தில் கலந்துக் கொள்பவர்கள் யார் என்பதை சர்ச்சையாக்கியவர்கள்தான் பின் வாங்கியவர்கள் என்பதில் நடுநிலையாக சிந்திப்பவர்கள் ஒப்புக் கொள்வார்கள். திறமைசாலி யார்? வீரன் யார்? என்பதை விட எது சத்தியம் எது அசத்தியம் என்பதை விவாதிப்பதுதான் சரியானது. இதை ஆரம்பத்தில் முஜாஹித் தரப்பும் ஒப்புக் கொண்டது.

முஜாஹித் தஃவா களத்திற்கு தகுதியற்றவர் என்று நாங்கள் கூறிய போது “அவர் எத்தகைய அயோக்கியனாக இருந்தால் உங்களுக்கு என்ன? நீங்கள் அவர் முன்வைக்கும் கொள்கை வழிகேடானது என்பதை விவாதிக்க வேண்டியது தானே” என்று முஜாஹித் கும்பல்களும் கேள்வி எழுப்பியதும் இங்கு நினைவூட்டப்பட வேண்டும். இது வரை தவ்ஹீத் போர்வையில் இருந்தவர்கள் கூட எதிர் தரப்பில் விவாதிப்பவர்கள் யார் என்பதில் சர்ச்சை கிழப்பியது கிடையாது.

வரலாற்றில் முதல் முதலாக ஒரு தவ்ஹீத் போர்வை இதைக் காரணம் காட்டி பின் வாங்கியது ஆச்சரியமாக உள்ளது.

முஜாஹித் என்பவர் தஃவா களத்திற்கு அறவே தகுதியற்றவர் எனபதே டீ.என்.டீ.ஜே மற்றும் எஸ்.எல்.டீ.ஜே. யின் நிலைப்பாடாகும். முதலில் அவருடைய விவாத அழைப்பை ஏற்று அவருடன் ஏனைய விடயங்கள் பேசுவதற்கு முன் இது குறித்து பேசுவதே மிகவும் சரியான வழிமுறை. உதாரணமாக ஒருவர் திருடி விட்டு கை வசமாக மாட்டிக் கொள்கிறார். இப்போது திருடன் அவரை பிடித்தவரை நோக்கி “நீ யோக்கியனா? நீ அன்று என்னிடம் இப்பகுதியில் உள்ள பெரும் பணக்காரன் இன்னார் தான் என்று கூறினாய். அது பொய்யாகி விட்டது. நான் திருட்டுக்கு வந்த வீடு சாதாரண தரத்தில் உள்ள ஒருவனின் வீடு. எனவே, இதில் நீ சொன்னது சரியா பிழையா என்று முதலில் விளக்கம் தா” என்று வாதிடுகிறார். இதைப் பார்த்தவர்கள் ‘ஆம் இதற்கு பதில் சொன்ன பிறகு திருடனை தண்டிப்பதா இல்லையா என்று முடிவு செய்வோம்’ என்றால் இது எப்படி அநியாயமாகுமோ, படு முட்டாள் தனமாகுமோ இது போல் தான் முஜாஹிதின் விவகாரமும், அதற்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்களின் நிலைப்பாடுமாகும்.

எனினும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பேசினால் விவாதிக்க வர மாட்டேன் என்று கூறிய காரணத்தால், முஜாஹித் தஃவா செய்ய தகுதியானவரா என்பதை விவாதிப்பது முக்கியமாக இருந்தும் சத்தியத்தை நிரூபிக்க வேண்டியுள்ளதால் அதை பேசாமலிருக்க தவ்ஹீத் ஜமாஅத் ஒப்புக் கொண்டது. இதையெல்லாம் கடந்து வந்தவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு “பீ.ஜே. வர வேண்டும். அல்லது எஸ்.எல்.டீ.ஜே. மாத்திரம் வர வேண்டும்” என்று நொண்டி காரணங்கள் கூறி நிபந்தனையிட்டார்.

அது “பீ.ஜே. வராவிட்டால் நான் விவாதிக்க வர மாட்டேன்” என்று கூறும் அளவிற்கு சென்றது. தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசினால் விவாதிக்க வர மாட்டேன் என்று கவனமாய்க் கடிதத்தில் குறிப்பிட்டவர் பீ.ஜே. வராவிட்டாலும் விவாதிக்க வர மாட்டேன் என்று கடிதத்தில் குறிப்பிடாமல் இருந்தது ஏன்? அது ஒப்பந்தத்தில் பேசப்பட வேண்டிய சாதாரண விடயமாக இருந்தால் அதை சாதாரண கோரிக்கையாக வைக்காமல் வலுவான நிபந்தனையாகவும் கட்டளையாகவும் போடும் அளவிற்கு சென்றது ஏன்? விவாத ஒப்பந்தத்தின் ஆரம்பத்தில் கூட ‘பீ.ஜே கலந்து கொள்ள வேண்டும் என்பது எமது வேண்டுகோள் மட்டுமே!’ என்றவர் இறுதியில் அந்தர் பல்டியடித்து ‘பீ.ஜே கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும்’ என்று கட்டளையிட்டமை இவரின் முன்னுக்குப்பின் முரண்பாட்டையும்,  விவாதத்திலிருந்து பின்வாங்கும் தொடை நடுங்கித்தனத்தையும் பளிச்சென்று படம்போட்டு காட்ட போதுமான சான்றாகும்.

அந்த கோரிக்கை நியாயமானதாக இருந்திருந்தால் நாங்களும் அதை கண்டிப்பாக ஏற்றிருப்போம். சகோதரர் பீ.ஜே. அவர்களுக்கு முஜாஹிதுடன் விவாதிப்பது என்பது பெரும் காரியம் அல்ல. அவர் இறைவனின் உதவியினால் பல விவாத மேடைகளை சந்தித்து பல அசத்தியவாதிகளின் முகத்திரையைக் கிழித்தவர். இது போன்ற ஒரு போலியை தோலுரிப்பது சத்தியத்தை சுமந்திருப்பவர்களுக்கு பெரும் காரியம் அல்ல. எஸ்.எல்.டீ.ஜே.க்கும் இவருடன் விவாதிப்பது என்பது பெரும் காரியம் கிடையாது. பத்தோடு பதினொன்று என்று நாங்களும் இதை ஏற்றிருப்போம். ஆனால், முஜாஹித் விவாத அறை கூவல் விட்டு ஒப்பந்தத்திற்கான கடித பரிமாற்றம் செய்து கொண்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்துடன் தான்.

தலைமையகத்திற்கு கடிதம் கொடுத்து அதன் மண்டலத்துடன் தான் விவாதிப்பேன் என்று அங்கு சென்று சொல்வது நோக்கத்தை அடைய முடியாமல் போனதால் காரியத்தை சாதிக்க விடாமல் திசை திருப்புவதற்குத் தான். இலங்கையில் இருக்கும் போது தமிழ்நாடு உலமாக்களுடன் பேசுவோம் என்பதும், தமிழ்நாட்டுக்கு சென்று இலங்கை உலமாக்களுடன் பேசுவோம் என்பதும் போலிகளின் பல வேசத்தைத் தெளிவாக படம் பிடித்துக் காட்டி விட்டது.

மேலும் முஜாஹித் சகோதரர் பீ.ஜே.யை விவாதிக்க அழைத்ததற்கு முதலில் முன் வைத்த காரணம் “பீ.ஜே யுடன் விவாதித்தால் அறிவு மற்றும் ஆய்வுகள் அலசப்பட்டு மக்களுக்கு பலன் கிடைக்கும்” என்பதே. ஏனெனில் “அறிவுக்கு நான் பயப்படுவதாக இருந்தால் அவருக்குத் தான் பயப்பட்டிருப்பேன்” என்று ஒப்பந்தத்தில் முஜாஹித் பகிரங்கமாகக் கூறினார். பிறகு பீ.ஜே யை அழைக்கக் காரணம் தக்லீதை உடைப்பது தான் என்றார். ஏனெனில் பீ.ஜே. இல்லாமல் விவாதித்தால் ‘பீ.ஜே. இருந்திருந்தால் நன்கு பதில் கொடுத்திருப்பார்” என்று மக்கள் கூறுவார்களாம். இதன் மூலம் தக்லீத் நிலைத்திருக்குமாம்.

இவரது இந்த வாதம் நியாயமற்றது. ஏனெனில் சகோதரர் பீ.ஜே. இருந்தால், அவரது வாதத்திறமையால் விவாதத்திலிருந்து வென்றார் என்று கூறி மீண்டும் முஜாஹித் போன்றவர்களும் தப்பிக்க வழி தேடுபவர்களும் அதே தக்லீதை காரணம் காட்டுவார்கள். இதுவே அசத்தியவாதிகளின் கேடயம் என்பது நாங்கள் அனுபவத்தில் பார்த்திருக்குறோம். பீ.ஜே. இல்லாமல் விவாதிப்பதில் அர்த்தமில்லை என்று கூறி விவாதத்தின் மற்றும் அழைப்பு பணியின் விளைவுகளுக்கு சொந்தம் கொண்டாடி அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுத்த முஜாஹித் கும்பல், பிறகு “பீ.ஜே பேச தேவையில்லை. மேடையில் இருந்தால் போதும்” என்று கூறி தனது உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்திக் கொண்டார்கள். இதன் மூலம் முஜாஹிதின் சட்டைக்குள் இருந்த பூனை வெளியே பாயந்தது. இப்போது அறிவு மற்றும் ஆய்வுக்கு என்ன நேர்ந்தது? பீ.ஜே. பேச தேவையில்லை மேடையில் இருந்தால் போதும் என்றால் என்ன ஆய்வு நடக்கும்? என்ன அறிவு அலசப்படும்? நோக்கம் என்னவென்று இப்போது அனைவருக்கும் தெளிவாகப் புரிந்திருக்கும்.

பிறகு தக்லீதை உடைப்பதற்கு எஸ்.எல்.டீ.ஜே மட்டும் வரட்டும் என்றால் அதன் நோக்கம் என்ன? இப்போது பீ.ஜே விவாதத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு முன் வைத்த நியாயங்கள் எங்கே போனது? மீண்டும் தக்லீத் நிலைத்திருக்க போகிறதே. பீ.ஜே. இருந்தால் நன்கு விவாதித்திருப்பார். பதில் கொடுத்திருப்பார் என்று மக்கள் கூறுவார்களே. தக்லீத் உடைபடாதே என்ன செய்வது?  சுருங்கச் சொல்வதென்றால் ஒட்டு மொத்தமாக விவாதிப்பதிலிருந்து பின் வாங்குவதற்கு என்ன காரணங்களை முன் வைக்கலாம் என்று மூன்று மாதங்கள் சவூதியில் இருந்து யோசித்து விட்டு விடுமுறை கழிப்பதற்கு இந்தியா போய் வந்துள்ளார் இந்த அசத்தியவாதி முஜாஹித். முஜாஹிதின் இக்கூழ்முட்டைத் தனத்துக்கு கூஜா பிடித்து இந்தியாவரைக்கும் சென்று வந்துள்ளனர் அவரது பரிவாரங்கள்.

சத்தியத்தை நிலைநிறுத்த அல்லாஹ் வழங்கிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டு தவ்ஹீத் ஜமாஅத் பின் வாங்கியதாக கூறுவது, மறுமையில் அல்லாஹ்வூக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் பின் வாங்கிய அசத்தியத்திற்கு வக்காலத்து வாங்கும் முஜாஹித் போன்றவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் முஜாஹித் தரப்பில் கலந்துக் கொண்ட முர்ஷித் என்பவர் கூறும் போது ‘நாங்கள் சத்தியத்தை நிலை நாட்ட வந்தவர்கள். விவாதத்தின் மூலம் இரண்டில் ஒரு தரப்பிற்கு தெளிவு கிடைக்கும்’ என்று கூறிய முர்ஷித், ‘எஸ்.எல்.டீ.ஜே. ஆய்வாளர்களுடன் தான் நாங்கள் விவாதம் செய்வோம்’ என்று அடுத்த சில வினாடிகளில் நா பிரண்டுப்பேசி தனக்குத் தானே முரண்பட்டுக் கொண்டார். சத்தியத்தை விளங்குவது உங்கள் நோக்கமாக இருந்தால் டீ.என்.டீ.ஜே. ஆய்வாளர்களுடன் விவாதிக்க முர்ஷிதும் அவர் தரப்பும் மறுத்தது ஏன்? முஜாஹிதுக்கு வக்காலத்து வாங்க வந்ததினால் முர்ஷிதுக்கு தனது கொள்கையும் நியாயமும் மறந்து போனது போலும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கடிதம் அனுப்பி பீ.ஜே யுடன் விவாதிப்போம் அல்லது எஸ்.எல்.டீ.ஜே யுடன் மட்டும் விவாதிப்போம் என்று  கூறி, இல்லாவிட்டால் விவாதிக்க முடியாது என்று பின் வாங்கிய முஜாஹிதும் அவரது பக்தர்களும் அசத்தியவாதிகள் எனபதிலும் வழிகேடர்கள் என்பதிலும் இதன் பிறகும் யாருக்கும் எள்முனையளவேனும் சந்தேகம் வந்தால் அவர்கள் உண்மையான கொள்கைவாதிகளாக இருக்க முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடாகும்.

குறிப்பு :
ஒப்பந்தத்திலிருந்து தப்பியோடியவர்கள் இன்னும் 03 நாட்கள் மண்ணடியில் இருப்போம், எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து ஒப்புக் கொண்டால் மீண்டும் ஒப்பந்தம் செய்யலாம் என்று கூவினார்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று சொல்வார்கள். இந்த மாடுகளுக்கு எத்தனை சூடு வைத்தாலும் போதாது போல் தெரிகிறது.

எனினும் நாங்களும் எங்கள் நியாயமான நிலைப்பாட்டின் படி தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில் விவாதிப்பவர்கள் யார் என்பதை நாங்கள் தான் தீர்மானிப்போம். அதை எதிர் தரப்பு தீர்மானிக்கக் கூடாது என்ற நிபந்தனையின் கீழ் முஜாஹித் தரப்பு மீண்டும் ஒப்பந்தம் செய்ய முன் வந்தால் எதிர்வரும்; 26.01.2014ம் திகதிக்குள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையத்திற்கு எழுத்தில் தெரிவிக்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனவரி 28 போராட்டத்தின் முன்னோட்டம் – மைலாப்புர் உரிமை முழக்க பொதுக்கூட்டம்!

தென் சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 29-12-2013 அன்று மைலாப்புர் கிளையில் மாபெரும் உரிமை முழக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் மற்றும் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் தங்களின் உரிமைக்காக குழுமினர்.










Sunday, December 29, 2013

Saturday, December 28, 2013

சிறை நிரப்பும் பேராட்டம் ஏன்? அதிரையில் விளக்க பொதுக்கூட்டம்

தஞ்சை தெற்கு மாவட்ட அதிராம்பட்டினம் கிளை சார்பாக எதிர்வரும் 18.1.2014 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு தக்வா பள்ளி வருகில் மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது இதில் மாநில பொதுச்செயளாலர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஜனவரி 28 சிறைச்செல்லும் போராட்டம் ஏன் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்கள்.

நாள்: ஜனவரி 18 2014, இன்ஷா அல்லாஹ்
நேரம்: மாலை 6.00 மணியளவில்

இடம்: தக்வா பள்ளி அருகில்

சிறப்புரை:
சகோ. கோவை. ரஹ்மத்துல்லாஹ்
தலைப்பு: ' மறுக்கப்பட்ட நீதியும்இ இழைக்கப்பட்ட அநீதியும்'

சகோ. சையது இப்ராஹிம்
தலைப்பு: அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி!

Thursday, December 26, 2013

விவாதத்திலிருந்து முஜாஹித் தப்பி ஓடியதன் பின்னணி என்ன? (வீடியோ)

விவாதத்திலிருந்து முஜாஹித் தப்பி ஓடியதன் பின்னணி என்ன? (வீடியோ )

திருக்குர்ஆனுக்கு ஹதீஸ்கள் முரண்படுமா? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தோடு விவாதிக்க அறைகூவல்விட்ட முஜாஹித் என்பவர் இன்று 25.12.13 தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் நடந்த விவாத ஒப்பந்தத்தில் பின்வாங்கி ஓட்டமெடுத்துவிட்டார்.

தன்னோடு விவாதிக்க பீஜேதான் வர வேண்டும். இல்லாவிட்டால் விவாதிக்க வரமாட்டேன்.

விவாதத்தில் பீஜே வாதங்களை எடுத்து வைக்கத் தேவையில்லை. அவர் வந்து விவாதம் நடக்கும் அரங்கில் அமர்ந்து இருந்தாலே போதும் என்றும் நிபந்தனை விதித்தார்.

என்னோடு விவாதிக்க பீஜே வராவிட்டால் பீஜே அல்லாத மற்ற தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரகர்களோடு விவாதிக்க நான் வரமாட்டேன். பீஜே என்னோடு விவாதிக்க வராவிட்டால் எஸ்.எல்.டி.ஜே தாயீக்களோடு மட்டும்தான் நான் விவாதிப்பேன். அந்த விவாதத்தில் எஸ்.எல்.டி.ஜே தாயீக்களோடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிற தாயீக்கள் கலந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு எஸ்.எல்.டி.ஜே தாயீக்களோடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிற தாயீக்கள் கலந்து கொண்டால் அவர்களோடும் விவாதிக்க வரமாட்டேன் என்று கூறி அந்தர்பல்டி அடித்து விவாதத்திலிருந்து பின் வாங்கி ஓடிவிட்டார்.

பீஜேயோடுதான் விவாதிப்பேன் என்றும், எஸ்.எல்.டி.ஜே தாயீக்களோடு மட்டும்தான் தான் விவாதிப்பேன் என்றும் அவர் சொன்ன வரட்டு வாதங்கள் அனைத்திற்கும் விவாத ஒப்பந்தத்தில் பதிலளிக்கப்பட்டது. நாம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாததால்தான் இந்த தப்பியோடும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதை வீடியோவை பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளலாம்.

சம்பந்தமில்லாத விஷயங்களை நிபந்தனைகளாகப்போட்டு விவாதத்திலிருந்து பின் வாங்கி ஓட்டமெடுத்துவிட்டு தவ்ஹீத் ஜமாஅத் பின்வாங்கிவிட்டதாக தற்போது பொய் பரப்பி வருவதாக அறிகிறோம்.

மண்ணடியில் மூன்று நாள் இருப்பதாக அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. வருடத்தின் 365 நாட்களும் நாங்கள் மண்ணடியில்தான் இருக்கின்றோம். விவாத ஒப்பந்தத்தில் தக்க காரணத்தோடு நாம் விளக்கியதை ஒப்புக்கொண்டு நம்மோடு விவாதிக்க அவருக்கு தைரியம் இருந்தால் மறுபடியும் தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம். அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கின்றோம். வரக்கூடிய 26.01.14 தேதிக்குள் அவர் தன்னை திருத்திக் கொண்டு மறுபடியும் நம்மை கடிதம் மூலம் தொடர்பு கொண்டால் அது குறித்து பரிசீலிக்க தயார் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓட்டமெடுத்தது யார்? விவாத ஒப்பந்தத்தில் என்ன நடந்தது என்பதை விவாத ஒப்பந்த வீடியோவை பார்த்தால் அறிந்து கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ் முழுமையான வீடியோ பார்க்க...




Wednesday, December 25, 2013

சூனிய உளறல்களும் உண்மைகளும் (வீடியோ)

சூனிய உளறல்களும் உண்மைகளும் (வீடியோ)

Monday, December 23, 2013

TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் புதிய நிர்வாகம்

TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் புதிய நிர்வாகம்


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 27.12.2013 வெள்ளிக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு, இரவு 7.00 ம்ணியளவில் TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் புதிய நிர்வாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

TNTJ உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இடம்: அபுதாபி சிட்டி மர்கஸ் (எலக்ட்ரா ரோட்)

தொடர்புக்கு: சகோ. நாகூர் மீரான் (050-4388617)
                            சகோ. ஷஹாபுதீன் (055-8343582)

ஜசாகல்லாஹ்..

அபுதாபி அதிரை TNTJ கூட்டமைப்பு

Saturday, December 21, 2013

முஸ்லிம்கள் அந்நியர்களா? (வீடியோ)

முஸ்லிம்கள் அந்நியர்களா? (வீடியோ)

நுட்பமான வழிகேடு (வீடியோ)

நுட்பமான வழிகேடு (வீடியோ)

Friday, December 20, 2013

Thursday, December 19, 2013

விவாதங்களில் தவ்ஹீத் ஜமாஅத் திறமையால் வெல்கின்றதா?

விவாதங்களில் தவ்ஹீத் ஜமாஅத் திறமையால் வெல்கின்றதா?

இட ஒதுக்கீடு அளித்திடு... இல்லையேல்... சிறையில் அடைத்திடு... சென்னையில் மாபெரும் உரிமை முழக்கப் பொதுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ்

இட ஒதுக்கீடு அளித்திடு... இல்லையேல்... சிறையில் அடைத்திடு... சென்னையில் மாபெரும் உரிமை முழக்கப் பொதுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ்


Wednesday, December 18, 2013

அதிரையில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வருட வருடம் ஹஜ் பொருநாளில் மக்களிடம் பெறப்படும் குர்பானி தோல்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அதிராம்பட்டினத்தில் உள்ள ஏழைகளுக்கு மருத்துவ உதவி மற்றும் வாழ்வாதார உதவிகளை செய்து வருவதை அனைவரும் அறிவீர்கள் இந்த வருடமும் குர்பானி தோல்கள் விற்ற பணம் ரூ 1,15,000 அதிரையில் உள்ள ஏழைகளுக்கு பிரித்துக்கொடுக்கபட்டது அல்ஹம்துலில்லாஹ்





















Tuesday, December 17, 2013

Monday, December 16, 2013

TNTJ ஷார்ஜா அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

TNTJ ஷார்ஜா அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம் 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..
ஷார்ஜா அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் 13.12.2013 வெள்ளிக் கிழமையன்று அஸர் தொழுகைக்குப் பிறகு 4.30 மணியளவில் ஷார்ஜா சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது.  அதிரை 
ஷார்ஜா TNTJ கிளையின் புதிய நிர்வாகத்தின் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.  அதனையடுத்து பல புதிய முக்கிய தீர்மானங்களும், வருகின்ற ஜனவரி 28 சிறைநிறைப்பு போராட்டத்திற்கான செயல்திட்டங்கள் பற்றியும் பேசப்பட்டன. கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல பல ஆலோசனைகளும் வழங்கினார்கள்.

ஜசாக்கல்லாஹ்..





பள்ளிவாசல்களும் பேண வேண்டிய ஒழுக்கங்களும் (வீடியோ)

பள்ளிவாசல்களும் பேண வேண்டிய ஒழுக்கங்களும் (வீடியோ)

Sunday, December 15, 2013

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்

இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர்.

குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது.

ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்.

இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும்.

இன்று முஸ்லிம்கள் ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில் பீடையைக் கழிப்பதாக எண்ணி பலர் கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். இன்னும் பலர் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.

ஸபர் குளி என்ற பெயரில் ஆற்றில் போய் குளித்து பீடையை நீக்குகின்றனர்.

இன்னும் சிலர் மாவிலைகளில் “சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம்” என்ற திருக்குர்ஆனின் வசனத்தை எழுதி அதனை நீரில் கரைத்துக் குடிப்பார்கள். இவ்வாறு குடித்தால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும் என்று கருதுகிறார்கள்.

இன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்குவதற்காகக் கொழுக் கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில் கொட்டுவார்கள். இது போன்று ஏராளமான மூட நம்பிக்கைகளை மாற்று மதத்திலிருந்து காப்பி அடித்துள்ளார்கள்.

மேலும் ஸபர் மாதத்தில் கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைத் தள்ளி வைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது. இன்று சபர் மாதம் பீடை மாதமாக கருதப்படுவதைப் போன்று அன்று அரபியர்களிடத்தில் ஷவ்வால் மாதமும் சபர் மாதமும் பீடையாகக் கருதப்பட்டது.

பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, தன்னை நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள். 

(அபூதாவூத்)

சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக் கூடாது என்று தான் உள்ளது.

தொற்று நோயும், பறவைச் சகுனமும், ஸபர் பீடை என்பதும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5707, 5717

ஸபர் மாதம் வந்து விட்டால் அதில் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகிவிடும் என நம்பி அதைப் பீடை பிடித்த மாதமாக அன்றைய மக்கள் கருதினர். இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர் என்பது இல்லை என்று கூறினார்கள்.

கெட்ட நாள் உண்டா?

காலத்தை நல்ல காலம், கெட்ட காலம் என்று பிரிப்பது தவறாகும்.

தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம். 

(அல்குர்ஆன் 54:19)

பீடை நாள் உண்டு என்பதற்கு ஆதாரமாக இந்த வசனத்தைக் கொள்கிறார்கள். இவர்கள் நினைக்கும் கருத்தை இவ்வசனம் தரவில்லை.

இவ்வசனத்தில் நஹ்ஸ் (பீடை) நாளில் ஆது சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றி வருகின்றனர்.

ஆனால் இவ்வசனம் இந்தக் கருத்தைத் தரவில்லை. மற்றொரு வசனத்தில் (69:7) ஏழு நாட்கள் அவர்களுக்கு எதிராகக் காற்று வீசியதாகவும், ஏழு நாட்களுமே பீடை நாட்கள் என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. (41:16)

ஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக் கிழமையும் நல்ல கிழமை அல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடை நாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.

மேலும் அந்த நாட்களில் தீயவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்பட்டார்கள். நல்லவர்கள் காப்பாற்றப்பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்ல நாட்களாக அமைந்தன.

உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல.

எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.

இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத் தருகிறோம் என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டு பிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை? ஹதீஸ்கள் யாவை என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.

உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாக அனைவரும் தரித்திர நிலையில் தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.

“ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா
நூல்: புகாரி 4826

எனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல் மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.

பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 10:107

மாற்று மதக் கலாச்சாரம்:

இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.

இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான், முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள்.

(புகாரி 3456)

இது போன்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது, இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.

மாற்று மதத்தினர் தேரிழுப்பதையும். விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதை அப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப் பதையும், கந்தூரி கொண்டாடுவதையும் வழமையாக்கிக் கொண்டனர்.

இது போன்று இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி கோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.

இதைப் பார்த்துத் தான் முஸ்லிம்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதி, அந்த மாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத நடைமுறைகளை மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பியடித்து செய்து வருகின்றனர்.

இது போன்று மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றார்கள்.

இதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்கு சரியான பாடத்தைப் புகட்டுவதாக அமைந்துள்ளது.

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்” என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்து” என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்!. அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்; என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ வாக்கிதுல்லைசி (ரலி)
நூல்: திர்மிதி

தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.

நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸயீ 1560

எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, ஸஃபர் மாதம் உள்ளிட்ட எந்த மாதத்தையும் கெட்ட நாளாகக் கருதாமல், மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றாமல் வாழ்ந்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!

Saturday, December 14, 2013

எல்லாரையும் போராட்டத்திற்கு மட்டும் அழைப்பது சரியா? (வீடியோ)

எல்லாரையும் போராட்டத்திற்கு மட்டும் அழைப்பது சரியா? (வீடியோ)



Friday, December 13, 2013

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 15) - பொருள் வசதி மட்டும் தான் பாக்கியமா?

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 15) - பொருள் வசதி மட்டும் தான் பாக்கியமா?



இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்.

Wednesday, December 11, 2013

கடல்கரைத் தெருவில் கப்ர் வழிபாட்டிற்கு எதிராக தெருமுனை பிரச்சாரம்!

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமாதி வழிபாட்டிற்கு எதிரான தெருமுனை பிரச்சாரம் பல எதிப்பிற்கு இடையில் 10.12.2013 அன்று கடற்கரைத்தெரு பெண்கள் மார்கட் அருகில் இரவு 6.00 மணிக்கு நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் அன்வர் அலி அவர்கள் கந்தூரி என்ற பெயரில் நடைபெறும் ஆனாச்சாரங்கள் என்ற தலைப்பிலும் அதனை தொடர்ந்து மாநில செயலாளர் அஸ்ரப்தீன் சமாதி வழிபாடு பெரும் பாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் 50 க்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள்.








Tuesday, December 10, 2013

இத்தாவின் சட்டங்கள்

அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளி கட்டிடப்பணி - தற்போதைய புகைப்படங்கள்

அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளி கட்டிடப்பணி - தற்போதைய புகைப்படங்கள்

அதிராம்பட்டினத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளிவாசலின் கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது. பள்ளிவாசலின் பணி முழுமை அடைவதற்கு நன்கொடைகள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்கொடை அனுப்ப இங்கே சொடுக்கவும்.




 


இரண்டாவது தளம்