அதிமுகவிற்கு ஆதரவு ஏன்? விமர்சனங்களும் விளக்கங்களும்
இது சம்பந்தமாக எழுந்த அனைத்து விமர்சனங்களுக்கும் சகோ பிஜே அவர்கள் கீழ்காணும் வீடியோக்களில் பதில் தந்துள்ளார். இவற்றை பார்த்து எங்களை எதிர்க்கக்கூடிய ஆதரிக்க கூடிய எவரும் உங்களுக்கு எழும் கேள்விகளையும் விமர்சனங்களையும் கருத்து பகுதியில் பதியலாம். அதற்கான பதில் தரப்படும். இன்ஷாஅல்லாஹ்
தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டும் எதிர்க்கும் சில நடுநிலையாளர்கள் (?) தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான இணையதளங்களில் மட்டும் தங்களின் விமர்சனங்களை பதிகிறார்கள், இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான இணையதளத்தில் மட்டும் தங்களின் விமர்சனங்களை பதிய காரணம், அங்கு அவர்களை காப்பாற்றி விடுவார்கள், ததஜவிற்கு எதிரான தங்களின் அவதூறுகளை பரப்பலாம் என்பது இவர்களின் நோக்கம். அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இந்த ஆக்கத்தில் தங்களின் கருத்துக்களை பதியலாம், அவர்களுக்கு முழு உரிமை உண்டு, அவர்களின் அனைத்து வாதங்களுக்கும் அழகிய முறையில் பதில் தரப்படும்.
பிஜேவின் புத்தகத்தில் இருந்து திருடி கட்டுரை போடும் திருட்டு நிருபர்கள் சில சந்தேங்களை கிளப்பி விட்டுள்ளார்கள், அது தனியாக கவனிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
இது அல்லாமல், ஃபேஸ்புக்கில் நாம் என்ன வேண்டுமானலும் எழுதலாம். அதற்கு பதில் எழுதுபவர்களின் கருத்துக்களை நாம் நீக்கலாம் என்று சிலர் மணப்பால் குடிக்கிறார்கள். இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
பாகம்-1
பாகம்-2
பாகம்-3
பாகம்-4
பாகம்-5
10 கருத்துரைகள் :
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரகுஹீம் ஆளுக்காளு பேசி என்ன பிரொசனம் கண்ணியாதிற்குரிய சகோதரர் சம்சுதீன் காசிமி ஆலிம் சொல்லியது 100/100 உண்மையாகிவிட்டது
சம்சுதீன் காசிமி அவர்கள் மக்களுக்கு சொன்ன பிரட்த்யெக கானொளியில் சில குறிப்புகள்:///எனக்கு கிடைத்த உளவுத்துறை தகவலின்படி அம்மாவிடம் பொட்டி வாங்கிவிட்டார்கள் அம்மா நாலு சதவிகிதம் கொடுக்க அப்பவ முன்மொழிந்து விட்டது அது தான் உண்மை அனால் இவர்கள் 7 சதவிகிதத்தில் இட ஒதிகீட்டில் ஒரு சதவீதம் கூட குறைத்துத்தந்தாளும்கூட எங்கள் நாங்கள் ஏமாந்து ஒட்டு போட மாட்டோம் என்று மக்கள் முன் போலி வேஷம் போடு இவர்கள் சத்தியமாக சொல்லுகிறேன் இவர்கள் வாங்கிய பணப்பொட்டிக்கு அம்மாவுக்குதான் ஆதரவு தெரிவிப்பார்கள் அப்படி அவர்கள் தெரிவித்த பிறகு இந்த சம்சுதீன் காசிமி சொல்வது உண்மையா அல்லது அவர்கள் சொல்வது உண்மையா என்று நம்மளை படைத்த ரப்பு மக்களுக்கு கொண்டு சேர்ப்பான்//
பி ஜெ அண்ணன் அவர்களின் விளக்க உரையில் ஒரு சில வரிகள் இங்கே: நாங்கள் ஜனவரி 28 அன்று இப்படி இப்படி என்று சொன்னது உண்மைத்தன் ஆனால் எங்கள் சட்ட ஆலோசனர்கள் வல்லுனர்கள் சொல்லுகிறார்கள் இட ஒத்க்கீடுக்கென்று அரசு ஒரு ஆணை அமைக்காமல் வெருமுனையாகவெ 3.5 சதவிகிதம் உயர்தித்தந்தால் அது எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்திர்க்குமட்டும் உயர்த்தி கொடுப்பது என்று எவனாயினும் கோர்ட்டில் கேஸ் போடுவாயானால் இட ஒதுக்கீடு திரும்ப பெறப்பட்டு வெத்து வெட்டு ஆகி விடும்.
தவ்ஹீத் ஒன்றுதான் நேர்மையான இயக்கமாககாருதி தாங்களின் போராட்ட அழைப்பை மனமார ஏற்று எங்கள் குடும்பத்திலுள்ள மற்றும் அண்டை வீடு சொந்தங்களைருந்து பெரியவர்கள், சிறியவர்கள், சகோதரிகள், தாயிமார்கள், பட்சிலம் குழந்தைகளையெல்லாம் அனுப்பி வைத்தும் அதற்க்கு நீங்கள் செய்யும் கைக்(கூலி)கொள்ளி இதுதானோ அடப்பாவிகளா போராட்டத்திர்ற்கு உங்களின் முன்னாள் முட்டாள்தனமான அறிவு எங்கே துளைன்தது அப்பொழுது நீங்களும் உங்களின் சட்ட வல்லுனர்களின் அல்லது ஆரோசகரின் மூளை மங்கி விட்டதா ஏன் அப்போது ஒரு பேச்சு இப்போது பேச்சு இதில் ஏதோ குளறுபடி நடந்ததுபோல் தெரிகிறது இதே மக்களை கூட்டி உங்களால் பொது இடங்களின் நாங்கள் எந்த பணப்பொட்டியும் பெறவில்லை அல்லது பெற்றுக்கொண்டு இந்த பேரணியை ஏற்பாடு செய்ய வில்லை என்றும் சம்சுதீன் காசிமி அவர்களுக்கு உளவுத்துறை மூலம் கிடைத்த தகவல் அனைத்து பொய்யென்றும் அல்லாஹுவின் ஆணையாக எதுவும் அப்படி நடக்கவைல்லை என்று இதே மக்களை கூட்டி சத்தியம் செய்யவேண்டும் அப்போதுதான் தங்களின் தவ்ஹீத் வளர அல்லாஹ் உதவி செய்வான் மாற்றாக மக்களை ஏமாற்றி விடலாமென்று ஒருபோது எண்ணி விடவேண்டாம் அப்படி ஏதும் நீங்கள் நாடகம் நடத்தியிருந்தால் இப்பொழுதே உண்மையை ஒத்துக்கொண்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டுகொல்லுங்கள் இல்லையெனில்அல்லாஹ் இது போலி தவ்ஹீத் என்று மக்கள் முன் உங்கள் முகத்திரையை கிழித்து நாசப்படுத்திவிடுவான் அல்லாஹுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் அதன் மூலம் வெற்றியை நிலைநாட்டிக்கொளுங்கள் அல்லாஹ் நம் ஆனைவருக்கும் கிருபை ரஹ்மத் செய்வானாக ஆமீன்
தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாட்டை விமர்ச்சிப்பவர்கள் சிறை நிரப்பம் போராட்டத்தையும் விமர்ச்சித்தவர்கள், முஸ்லீம்கள் இடஓதுக்கீடு கேட்க கூடாது என்ற கொள்கையில் உள்ளவர்கள் தான் அதிமுகவிற்கு ஆதரவு அளித்ததை விமர்ச்சனம் செய்கிறார்கள் ஒருவேலை தேர்தலுக்கு முன்பே இடஓதுக்கீடு அளித்திருந்தாலும் த த ஜவின் தேர்தல் நிலைபாட்டை எதிர்ப்பவர்கள் தான் இவர்கள்
அதிரை நிருபர் இனையதளம் தவ்ஹீத் ஜமாஅத் எது செய்தாலும் அதை விமர்ச்சிப்பது என்ற கொள்கையில் உள்ளவர்கள் அதில் கருத்திடுபவர்கள் அனைவரும் கட்டுரை போடுவார்கள் அதற்கு மற்ற அனைவரும் அப்பாஸ் நாடகம் போல் ஆக, நல்ல முய்றசி, கடின உழைப்பு, என் தெளிவான விளக்கம் என்று ஜால்டர அடிப்பார்கள் அவர்களுக்கு பதில் தருகிறோம் என்று அவர்கள் பிரபலியம் படுத்தவேண்டாம்
மயிலாடுத்துறை தொகுதியை ஹைதர் அலிக்கு தரவில்லை என்றால் ம ம கட்சி உடையும் என்று ஒரு தரப்பினர் கூறியதால் தமீம் அன்சாரிக்கு தொகுதியை கொடுக்கவில்லை என்று சொல்லுகிறார்களே உண்மையா?
அதிரை மடல் அவர்களுக்கு,
உங்களின் உணர்ச்சிபூர்வமான மடல் கிடைத்தது. அல்லாஹ்வை சாட்சியாக வைத்து எப்படி நாடகம் ஆட வேண்டும் உங்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். சமுதாய ஆண்களை ஓரினச்சேர்க்கை செய்து நாசப்படுத்தும் ஸம்சுதீன் காஸிமி என்ற கேடியை கண்ணியத்திக்குரிய ஆலிம் என்று நீங்கள் அழைப்பதே உங்களின் நேர்மையை காட்டுகிறது. சம்சுதீன் காஸிமி என்பவன் ஒரு ஒரினச்சேர்க்கையாளன் என்பதை தவ்ஹீத் ஜமாஅத் நிரூபிக்க தயாராக உள்ளது, உங்களின் கண்ணியத்திக்குரிய ஆலிமை அழைத்து வாருங்கள்.
சம்சுதீன் காஸிமி என்பவன் என்ன சொன்னான் என்ற வீடியோ இன்றும் உள்ளது, அது அழிக்கப்படவில்லை. சம்சுதீன் காஸிமி ததஜவிற்கும் ஜெயாலலிதாவிற்கும் ரகசிய உடன்பாடு ஏற்ப்பட்டுவிட்டது. அதாவது, 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்த ஜெயலலிதா ஒப்புக்கொண்டுவிட்டார். ஜனவரி 28 பேராட்டம் சும்மா மக்களை ஏமாற்ற தான் என்று உளவுத்துளை சொன்னாக சொன்னார். இதை கீழ்காணும் வீடியோ உங்கள் கண்ணியத்திக்குரிய ஆலிம் 13 ஆம் நிமிடத்திலிருந்து 15 நிமிடம் வரை தெளிவாக குறிப்பிடுகிறார்.
http://www.youtube.com/watch?v=TAz8KMFH1qM
இவனுக்கு வந்த உளவுத்துறை தகவல் பொய் என்பது தற்போது தெளிவாகியுள்ளது. அதாவது, இவன் சொல்லி மாதிரி இட ஒதுக்கீடு நான்கு சதவீத உயர்த்தப்படவில்லை. இவன் புழுகியுள்ளான் என்பதற்கு இது ஆதாரம், மேலும், தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவிடம் பெட்டி வாய்கிவிட்டது என்றும் ஒரினச்சேர்க்கையாளன் குறிப்பிட்டான், இவனை இதை நேரடியாக நிரூபிக்க்கும் படி தவ்ஹீத் ஜமாஅத் சவால் விட்டது. உங்கள் கண்ணியத்திக்குரிய ஆலிம் வந்து நிரூபிக்கவில்லை.
உண்மை இப்படி இருக்க, நீங்கள் புரியாமல் ஏதே சொல்லியுள்ளீர்கள். நீங்கள் உண்மையாளராக இருந்தால், தவ்ஹீத் ஜமாஅத் பெட்டி வாங்கியதை நிரூபிக்க வாருங்கள்.
சமுதாயத்தை கேடயமாக பயன்படுத்தி சுய லாபம் அடையும் யாராக இருந்தால், அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் கையேந்தி கேளுங்கள். சமுதாய துரோகிகளை அடையாளம் இல்லாமல் ஆக்கிவிடு என்று துஆ செய்யுங்கள். தவ்ஹீத் ஜமாஅத் நீங்கள் சொல்லுவது போல் சமுதாயத்தை ஏமாற்றியிருந்தால், அது தடயம் இல்லாமல் அழிந்து போகட்டும், மற்ற இயக்கங்கள் இவ்வாறு செய்தால் அவர்கள் திருந்தட்டும் என்றும் துஆ செய்யுங்கள்.
தவ்ஹீத் ஜமாஅத் நேர்மையாக இருப்பதால் தான் இவ்வாறு பகிரங்கமாக இறைவனிடம் கேளுங்கள் என்று சொல்ல முடிகிறது.
வஸ்ஸலாம்
அஷ்ரப்
அதிரை நிருபர்கள் என்ற திருடும் நிருபர்களுக்கு இப்போது புகழ் போதை தலைக்கு மேல் ஏறியுள்ளது. பிஜே பித்தலாட்டக்காரர் என்று சொல்லிக்கொண்டே பிஜேவின் நூல்களை வரிக்கு வரி திருடி (நான் இங்கே இருந்து திருடினேன் என்று சொல்லாமல், திருடன் எப்படி இங்கே திருடினேன் என்று சொல்லுவான்), அவர்கள் சொந்தமாக செய்த ஆய்வு போல மக்களிடம் காட்டி வந்தார்கள், இவற்றை நாம் கண்டுகொள்ளாமல் இருந்தோம். இவர்கள் வரம்பு மீறியதால், நாம் அவற்றை அம்பலப்படுத்தினோம், இட ஒதுக்கீடு சம்பந்தமாக உளரியவர்களை தக்க பதில் கொடுத்து பெட்டி பாம்பாக மாற்றினோம்.
தவ்ஹீத் என்று வேடம் போட்டுக்கொண்டு ஹாஜி என்று எழுதும் அயோக்கியத்தனங்களையும் அம்பலப்படுத்தி, அவர்களின் தவ்ஹீத் வேடத்தை அம்பலப்படுத்தினோம். தமுமுகவின் எடுபிடிகள் என்று அவர்களே நிரூபித்தார்கள். இப்படி அடிக்கு மேல் அடிவாங்கிய இவர்கள் இப்போது பித்துபிடித்து அலைகிறார்கள். இவ்வளவு காலம் யாரோ எழுதியதை வைத்து புகழ் தேடி வந்த இவர்களின் உண்மை முகம் மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டுவிட்டதால், பித்து பிடித்து உளறுகிறார்கள். இவர்களின் அனைத்து வாதங்களுக்கும் தொடர் பதிலடிகள் வந்து கொண்டே இருக்கும் இன்ஷாஅல்லாஹ். இவர்களின் அனைத்து உளறல்களும் அம்பலப்படுத்தப்பட்டு, படுத்துக்கொண்டு மேல்நோக்கி எச்சில் துப்பிய இவர்களின் செயலை வெளிச்சம் போட்டு காட்டுவோம்.
பேர் இடிகள் காத்திருக்கிறது
சகோதரர்களே நம்மிடையே வீண் கலகங்கள் வேண்டாம்.உங்களுக்கு எந்த கட்சியையும் ஆதரிக்க உரிமை உண்டு.ஆதரியுங்கள்.நீங்கள் மற்றவர்களை சாட,மற்றவர்கள் உங்களை சாட நம்மிடையே ஷைத்தான் பகை மூட்டி லாபம் அடைய காத்திருக்கின்றான்.அல்லாஹ்வுக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுங்கள் என எல்லாத் தரப்பு மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
அல்லாஹ்வுக்காக ஒற்றுமை பேண மாட்டீர்களா?
சகோ. இப்னு அப்துல் ரஜாக் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களின் மேலான கருத்திற்கு நன்றி. மற்றவர்களை பதிக்கும் தவறுகளை செய்பவர்களை அடையாளம் காட்ட வேண்டியது மார்க்க கடமை. இதை தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து செய்யும், இன்ஷா அல்லாஹ். இதை செய்வது சமுதாயத்தை பிளவுப்படுத்த அல்ல, மாறாக நன்மையை ஏவி தீமை தடுக்க வேண்டும் என்ற மார்க்க கடமையை செய்யவே.
தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக விமர்சனங்கள் வருவது புதிதல்ல. விமர்சனங்களால் தான் தவ்ஹீத் ஜமாஅத் வளர்ச்சி பெருகிறது. தவறான நோக்கத்தில் விமர்சனம் செய்பவர்களின், விமர்சனங்களில் உள்ள போலித்தனத்தை கண்டு, தவ்ஹீத் ஜமாஅத்தின் பக்கம் மக்கள் வருவார்கள், வருகிறார்கள்.
கண்ணியமான முறையில் வரும் விமர்சனத்திற்கு கண்ணியமான முறையில் விமர்சனம் தருவோம். வரம்பு மீறிய முறையில் வரும் பொய்யான விமர்சனங்களை, அதற்கு ஏற்றவாறு எதிர்கொள்வோம்.
இஸ்லாத்தில் ஒற்றுமை என்று ஒன்று இல்லை. ஒற்றுமைக்கு எதிரானது இஸ்லாம். நல்ல கொள்கையில் உள்ளவர்கள் தீய கொள்கையில் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் தான் ஒற்றுமை. 24 இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு என்று ஒன்று இருந்ததே அது இப்போது எங்கே என்று தெரியுமா? தேர்தல் வந்தவுடன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான அத்தனை 24 அமைப்புகளும் ஒற்றுமையை காற்றில் பறக்கவிட்டு தனித்தனியே சிதறியதை யாராவது விமர்சனம் செய்தார்களா? ஒற்றுமை என்பது கொள்கை அடிப்படையில் வர வேண்டும். அந்த ஒற்றுமை தான் நிலைத்து இருக்கும்.
உங்களின் பதிலை எதிர்பார்த்து.
தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து நடுநிலை வியாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான இணையதளங்களில் மட்டும் தங்களின் வீரத்தை காட்டுகிறார்கள். தவ்ஹீத் ஜமாத்தின் இணையதளத்தில் வந்து விவாதிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை. வந்தால் அவர்களின் வாதங்கள் தவிடு பெடியாகி போகும் என்பதை நன்றாக உணர்ந்துள்ளார்கள்.
உதாரணத்திற்கு Meerashah Rafia என்பவர் ஒரு தளத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு பற்றி விமர்சனம் செய்து ஒரு கருத்தை பதிவு செய்தார், அதற்கு நான் பதில் தந்தேன். அதற்கு அந்த தளத்தில் பதில் தராமல் வேறு தளத்தில் சென்று அதே கருத்தை பதிகிறார். இவர்கள் நியாய உணர்வுயில்லதவர்கள். நடுநிலை வேடதாரிகள் என்பது தெளிவு.
mk Aboobacker என்பவர் ததஜவை கொள்ளை அடிப்பவர்கள் என்கிறார். பதில் கொடுத்தால் ஒடிவிடுகிறார். எல்லாம் பச்சை பொய்யர்கள்.
இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா. முதன்முதலில் இப்படிச் சொன்னவர் சோ.
ஆருடமா, செயல்திட்டமா?
தேசிய அரசியலில் அன்றைக்கு மோடி இவ்வளவு செல்வாக்கானவர் இல்லை. பா.ஜ.க. அத்வானி கையில் இருந்தது. ஜெயலலிதாவும் இவ்வளவு உயரத்தில் இல்லை. முந்தைய தேர்தலில் ஜெயலலிதா, மாயாவதி, மம்தா மூவரையும் இணைத்து ‘15-வது மக்களவையைத் தீர்மானிக்கும் மூன்று சக்திகள்’ என்று தேசிய ஊடகங்கள் கட்டமைத்த பிம்பம் சுக்குநூறாகிவிட்டிருந்த நிலையில், ஜெயலலிதா அடுத்த பிரதமர் என்று அ.தி.மு.க. பொதுக்கூட்டப் பேச்சாளர்கள்கூட அன்றைக்குச் சொல்லத் தயங்கியிருப்பார்கள். சோ சொன்னார். தொடர்ந்து, ‘மோடி அல்லது ஜெயலலிதா’ எனும் முழக்கத்தைப் பொதுமேடைகளில் முன்வைக்க ஆரம்பித்த சோ, உச்சகட்டமாக ‘துக்ளக்’ பத்திரிகை ஆண்டு விழாவில் மோடி, அத்வானி இருவரையும் மேடையில் வைத்துக்கொண்டே “மோடி பிரதமராக அத்வானி உதவ வேண்டும்” என்று பேசினார். அந்தச் சமயத்தில் பேட்டிக்காக சோவைச் சந்தித்தபோது, மோடி அல்லது ஜெயலலிதா என்கிற தன்னுடைய குரலுக்கான அடிப்படைபற்றி இப்படிச் சொன்னார்: “நான் ஒரு வாக்காளன். அந்த அடிப்படையில் ஒரு முன்மொழிவைச் சொல்கிறேன். இந்த நாட்டின் பிரதமராக மோடிக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. ஒருவேளை பா.ஜ.க-வுக்கு மோடியைப் பிரதமர் ஆக்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டால், ஜெயலலிதா பிரதமராக அவர்கள் உதவ வேண்டும். அவ்வளவுதான்!”
அன்றைக்கு சோ சொன்னது அரசியல் ஆருடம் அல்ல. எளிமையான வார்த்தைகளில், “இது ஒரு வாக்காளனின் முன்மொழிவு” என்று அதை அவர் வர்ணித்தாலும், அது ஒரு செயல்திட்டம்.
வியூகத்தின் அடிப்படை என்ன?
பிரதமர் ஜெயலலிதா. இதற்கான வியூகமும் சாத்தியமும் என்ன?
1. தமிழகம், புதுவையின் 40 இடங்களில் ஆகப் பெரும்பான்மையானவற்றை அ.தி.மு.க-வைக் கைப் பற்றச் செய்வது; அதன் மூலம் பிராந்தியக் கட்சிகளில் பெரும் கட்சியாக அ.தி.மு.க-வை உருவாக்குவது.
2. மோடி தலைமையிலான பா.ஜ.க. அணி தனிப் பெரும்பான்மையான 272 இடங்களை நெருங்க முடியாத சூழலில் - பா.ஜ.க. பெரும்பான்மைக் கட்சியாகியும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமாகவே 200 இடங் களை மட்டுமே தொட்டு நிற்கும் சூழலில் - பா.ஜ.க-வை ஏற்கக் கூடிய, அதேசமயம், மோடி ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட கட்சிகளோடு இணைந்து ஜெயலலிதாவை முன்னிறுத்தும் ஒரு கூட்டணியை உருவாக்குவது.
3. அந்தக் கூட்டணிக்கு பா.ஜ.க. ஆதரவை ஜெயலலிதாவின் நண்பர் மோடியின் மூலம் கேட்டுப் பெறுவது. ஊரறிந்த இந்த ரகசியம்தான் ஜெயலலிதா பிரதமராக இன்றைக்கு உள்ள ஒரே சாத்தியமும்கூட. ஆனால், அவர் இதை அறிவிக்கவில்லை. மாறாக, காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மாற்று அணி ஒன்றை நோக்கி நகர்வதாகப் போக்கு காட்டுகிறார். அதற்கு இடதுசாரிகளே மேடை அமைத்துக்கொடுத்தனர்.
மாற்று அணி சாத்தியமா?
காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத ஒரு மாற்று அணியின் சார்பில் ஜெயலலிதா பிரதமராவது எந்த அளவுக்குச் சாத்தியம்?
இன்றைய சூழலில் நடக்கவே வாய்ப்பில்லாத காரியம் அது. எளிமையான உதாரணம், கிட்டத்தட்ட மக்களவையின் பாதி தொகுதிகளை (252 இடங்கள்) வைத்திருக்கும் உத்தரப் பிரதேசம் (80), மேற்கு வங்கம் (42), மகாராஷ்டிரம் (48), ஆந்திரம் (42), பிஹார் (40) ஆகிய ஐந்து மாநிலங்களின் களநிலைமை. இந்த ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மாநிலக் கட்சிகளே அனைத்து இடங்களையும் பகிர்ந்துகொள்வதாகக் கொண்டால்கூட, ஜெயலலிதா நம்பவைக்க நினைக்கும் மாற்று அணி வியூகம் எடுபடாது. ஏனென்றால், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் ஆதரித்தால், மாயவாதி எதிர்ப்பார்; ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு ஆதரித்தால், ஜெகன்மோகன் ரெட்டி எதிர்ப்பார்; பிஹாரில் லாலு ஆதரித்தால் நிதீஷ் எதிர்ப்பார் என்பதே யதார்த்தம். உள்ளிருந்து மட்டும் அல்ல; வெளியிலிருந்தும்கூட காங்கிரஸ் ஆதரிக்காது என்கிற சூழலில், பா.ஜ.க. மட்டுமே ஜெயலலிதா கனவுக்கான - அணிக்கான ஒரே சாத்தியம்.
சோவின் முன்மொழிவு, அதற்கான வியூகம் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இன்றைக்குத் தேசிய ஊடகங்கள் வரை மோடி அல்லது ஜெயலலிதா எனும் செயல்திட்டத்தை முணுமுணுக்க ஆரம்பிக்கின்றனவே எது இதைச் சாத்தியமாக்குகிறது?
ஏன் மோடி அல்லது ஜெயலலிதா?
இந்திய தேர்தல் வரலாற்றில், இந்தத் தேர்தலுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அரசியல் கட்சிகளின் ஆர்வத்துக்கு அப்பாற்பட்ட ஆர்வங்கள் பிரதமர் தேர்தலில் தம் செல்வாக்கை நேரடியாகப் பயன்படுத்திப்பார்க்கும் பரிசோதனைக் களமாக இந்தத் தேர்தல் மாறியிருக்கிறது. இந்தச் சூழலில், ஏன் மோடி என்ற கேள்விக்கு என்னென்ன காரணங்கள் பதிலோ, அந்தக் காரணங்களில் பலவும் ஜெயலலிதாவுக்கும் பொருந்தும் என்கிற ஒற்றுமைதான் மோடி அல்லது ஜெயலலிதா எனும் செயல்திட்டத்துக்கான அடிப்படை.
அரசியல் விமர்சகர்கள் பலரும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையைவிடவும் நாம் கவனிக்க வேண்டியது அதை வெளியிடுவதற்கு இரு நாட்களுக்கு முன் தொழில் துறைக்கு ஜெயலலிதா ஆற்றிய உரை. தமிழக அரசு - தொழில் நிறுவனங்கள் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அவர், தன் பிரதமர் கனவைத் தேசத்துக்குப் பிரகடனப்படுத்தும் ‘எனக்கு இந்தியாவைப் பற்றி ஒரு கனவு உண்டு உரை’யில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
“அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் இதுவரை 33 நிறுவனங்களுடன் ரூ.31,706 கோடிக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டி ருக்கின்றன. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் ஆய்வுப்படி, ஜூன் 2011 முதல் ஜனவரி 2013 வரை தமிழகத்தில் ஈர்க்கப்பட்ட முதலீட்டின் அளவு ரூ. 1.46 லட்சம் கோடி. தமிழ்நாடு, முதலீட்டில் 18.2% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகத்தைவிடவும் அதிகம்” என்று சொல்லும் ஜெயலலிதா, தான் காண விரும்புவதாகக் குறிப்பிடும் தேசத்தைப் பற்றிய விவரணைகளில் முதன்மையாக இடம்பெற்றிருப்பது திறந்த சந்தையான தேசம். இது முக்கியமான ஒரு சமிக்ஞை. மோடி எப்படியோ தானும் அப்படியே ‘வளர்ச்சியின் பிம்பம்’ என்கிற சமிக்ஞை.
மோடியை எந்தத் தொழில்துறை தூக்கிப்பிடிக்கிறதோ, அந்தத் தொழில்துறை மோடி இல்லாத சூழலில், ஜெய லலிதாவைத் தாங்கிப் பிடிக்குமா? ஆம். நிச்சயம் பிடிக்கும். ஏனென்றால், குஜராத் எப்படித் தொழிலதிபர்களின் பேட்டையாக இருக்கிறதோ, அப்படித்தான் தமிழகமும் தொழிலதிபர்களின் பேட்டையாக இருக்கிறது. ஒரு சின்ன உதாரணம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடர்பான ஒப்பீடு. குஜராத்தில், பூர்வாங்கமாக அனுமதி தர ஏற்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 43, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவை 30, சிறப்புப் பொருளாதார ஏற்றுமதி மண்டலங்கள் 18. தமிழகத்தில் பூர்வாங்கமாக அனுமதி தர ஏற்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 67, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவை 53, சிறப்புப் பொருளாதார ஏற்றுமதி மண்டலங்கள் 33. தேசிய ஊடகங்கள் குஜராத்துடன் தமிழகத்தை ஒப்பிட்டு இன்றைக்கு எழுதும் ‘வளர்ச்சிக் கதைகள்’ இந்தப் பின்னணியோடு இணைத்துக் கவனிக்க வேண்டியவை.
இந்துத்துவம் ஜெயலலிதாவுக்கு அந்நியம் அல்ல. நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டு ஆணையக் கூட்டத்திலேயே கரசேவையை ஆதரித்துப் பேசியவர் ஜெயலலிதா. நாட்டிலேயே கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தவர்களில் அவர் முன்னோடி. கோயில்களில் ஆடு, கோழி வெட்ட அவர் விதித்த தடை மோடியும் செய்யாதது. மோடி பிரதமரானால், மாவோயிஸ்ட்டுகளை வேட்டையாடக் காட்டுக்குள் ராணுவத்தை அனுப்புவார் என்பதை மறுப்பவர்கள்கூட, ஜெயலலிதா விஷயத்தில் சந்தேகம் கிளப்ப மாட்டார்கள். இதற்கு மேலும் என்ன ஒற்றுமைகள் வேண்டும்?
ஆக, மோடி ஒரு கனவு காணலாம்; ஜெயலலிதா ஒரு கனவு காணலாம். ஆனால், இருவர் காணும் கனவிலும் வெளிப்படும் இந்தியாக்கள் ஒரே செயல்திட்டத்தின் இருவேறு பக்கங்கள்தான்!
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.