ராஜ் முஹம்மது எம்.ஐ.எஸ்.சி
அல்லாஹ் அவனது தூதரையும் ஈமான் கொண்ட பிறகு நல்ல அமல்கள் செய்யவேண்டுமென்று இஸ்லாம் கூறுகிறது. ஈமான்கொண்டால் மட்டும் முஸ்லிம் என்று சொல்ல முடியாது, நம்பிக்கை கொண்ட பிறகு தன்னால் முடிந்தளவு நல்ல அமல்கள் செய்ய வேண்டும், நல்ல அமல் செய்தால் தான் முஸ்லிம் என்று சொல்வதற்கு தகுதியுடையவனாக இருக்கிறான். மறுவுலகத்தில் ஒருவர் வெற்றி பெற வேண்டுமென்றால் இவ்வுலகத்தில் நல்ல அமல்கள் செய்ய வேண்டும், மனிதனால் முடிந்ததை தான் அல்லாஹ் செய்யும் படி ஏவுகிறான்,
நல்ல அமல்கள் செய்யுமாறு தூண்டும் வசனங்கள்
அல்லாஹ்வை நோக்கி அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? அல்குர்ஆன் (41:33)
உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் நம்மிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை அல்ல. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றின் பன் மடங்கு கூலி இருக்கிறது. அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் கவலையற்றிருப்பார்கள். அல்குர்ஆன் 34:37
நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோருக்கு அழகிய கூலி உண்டு. நமது கட்டளைகளில் எளிதானதை அவருக்குக் கூறுவோம் அல்குர்ஆன் (18:88)
அணுஅளவு நன்மை செய்தாலும்...
நாம் அற்பமாக கருதப்படக் கூடிய சிறிய அமல்களை அணு அளவு செய்தாலும் அதற்கு அல்லாஹ் நன்மையை வாரி வாரி வழங்குகிறான், சிறிய அமலாக இருந்தாலும் அற்பமாக கருதாமல் அதனை செய்வதற்கு முயற்சி செய்வோம்,
அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார் அல்குர்ஆன் (99:7)
குறைவான நல்ல அமல் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது
எந்த அமலை அற்பமாக கருதிகிறமோ அந்த அமலை தான் தனக்கு விருப்பமான அமலாக தேர்ந்தெடுத்துயிருக்கிறான், அமல்களின் குறைவாக இருந்தாலும் அதை தொடர்ந்து செய்ய வேண்டும், அந்த நல்ல அமலை தான் அல்லாஹ் விரும்புகிறான்,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீகள்.) அறிந்துகொள்ளுங்கள்: உங்கள் யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோருக்கு அழகிய கூலி உண்டு. நமது கட்டளைகளில் எளிதானதை அசொர்க்கம் புக முடியும்.) நற்செயல்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்.
அறிவிப்பாளர் :ஆயிஷா (ரலி) அவர்கள் நூல் : புகாரி 6464
நல்ல அமல் செய்தால் பத்திருந்து எழுநூறு வரை நன்மை உண்டு
நாம் அற்பமாக கருதப்படும் சின்ன அமல்களை செய்தால் பத்திருந்து எழுநூறு நன்மைகளை அல்லாஹ் வாரி வாரி வழங்குகிறான்,
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணி விட்டாலே-அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ் வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கை விட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல் : புகாரி 6491,7501
ஸஹாபாக்களின் ஆர்வம்
நபிதோழர்கள் நன்மைகளை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் தர்மம் செய்யமுடியாவிட்டாலும் பணக்கார ஸஹாபாக்களை நன்மையில் முந்த வேண்டும் என்பதற்காக நன்மை செய்வதை பற்றி நபி (ஸல்) அவர்களிடத்தில் அதிகமாக கேட்பார்கள்,
நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதரே! வசதிபடைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழு வதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல் வங்களைத் தானதர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தானதர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே!)'' என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு 'ஓரிறை உறுதிமொழி'யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே; உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு'' என்று கூறினார்கள். மக்கள், ''அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''(நீங்களே) சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக் கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக்கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) அவர்கள் நூல் : முஸ்லிம் 1832
நான் நபி (ஸல்) அவர்களிடம், ''எந்த நற்செயல் சிறந்தது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் (போராடு வதும்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள். நான், ''எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அவர்களால் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)'' என்று பதிலளித்தார்கள். நான், ''என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''பலவீனருக்கு உதவி செய்; அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்'' என்று கூறினார்கள். நான், ''இதுவும் என்னால் இயலவில்லை யென்றால்....?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்கு செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) அவர்கள் நூல் : புகாரி 2518
சபையில் உட்கார்ந்தால் பாவம் மன்னிக்கப்படும்
இறைவனை நினைவுகூரல் (திக்ரு) என்பது உள்ளத்தாலும், நாவாலும் இருக்கலாம். உள்ளத்தால் நினைவுகூரல் என்பது இரண்டு முறைகளில் அமையலாம். (1) அல்லாஹ்வின் வல்லமையையும் ஆளுமையையும் சிந்திப்பு, பூமி வானங்கள் உள்ளிட்ட அவனுடைய படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்து அதன் மூலம் படைப்பாளனின் ஆற்றலை உணர்வது இதுவே உயர்ந்த திக்ர் ஆகும். (2) அல்லாஹ்வின் கட்டளைகள் வரும்போது அல்லாஹ்வை நினைத்து அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அடுத்து நாவால் செய்யப்படும் நினைவுகூரல், திக்ருகளில் இரண்டாம் தரத்தை உடையதாகும், இருப்பினும் அதற்கும் சிறப்பு உண்டு. ஆயினும் உள்ளத்தாலும் நினைத்து நாவாலும் துதிப்பதே மேலான திக்ர் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ்விடம் கூடுதல் வானவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் பூமியில் சுற்றிவருகின்றனர். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றும் சபைகளைத் தேடி வருகின்றனர். அல்லாஹ்வைப் போற்றும் சபை ஒன்றை அவர்கள் கண்டால், அவர்களுடன் அவ்வானவர்களும் அமர்ந்துகொள்கின்றனர். அவர்களில் சிலர் வேறுசிலரைத் தம் இறக்கைகளால் சூழ்ந்து, தமக்கும் முதல் வானத்துக்கும் இடையே உள்ள பகுதியை நிரப்புகின்றனர். (இறைவனை நினைவுகூரும்) அம்மக்கள் கலைந்து சென்றதும் அ(ந்த வான)வர்கள் வானுலகிற்கு ஏறிச் செல்கின்றனர்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவர்களிடம் - அவர்களை நன்கறிந்தி ருந்தும் - ''நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?'' என்று கேட்கிறான். அதற்கு வானவர்கள், ''பூமியிலுள்ள உன் அடியார்கள் சிலரிடமிருந்து நாங்கள் வருகிறோம். அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர்; உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னை ஏகன் என்று கூறிக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து போற்றிக்கொண்டும், உன்னிடத்தில் வேண்டிக்கொண்டும் இருக்கின்றனர்'' என்று கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், ''என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகின்றனர்?'' என்று (தனக்குத் தெரியாதது போலக்) கேட்கிறான். வானவர்கள், ''அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தை வேண்டுகின்றனர்'' என்பார்கள். அதற்கு இறைவன், ''அவர்கள் என் சொர்க்கத்தைப் பார்த்ததுண்டா?'' என்று கேட்பான்.
அதற்கு வானவர்கள், ''இல்லை, இறைவா!'' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ''அவ்வாறாயின், என் சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?'' என்று கூறுவான்.
மேலும், ''உன்னிடம் அவர்கள் பாதுகாப்புக் கோருகின்றனர்'' என்றும் வானவர்கள் கூறுகின்றனர். அதற்கு இறைவன், ''என்னிடம் அவர்கள் எதிரிருந்து (காக்குமாறு) பாதுகாப்புக் கோருகின்றனர்?'' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ''உன் நரகத்திரிருந்து, இறைவா!'' என்று பதிலளிப்பார்கள்.
இறைவன், ''அவர்கள் எனது நரகத்தைப் பார்த்திருக்கிறார்களா?'' என்று கேட்பான். வானவர்கள், ''இல்லை'' என்பார்கள். அதற்கு இறைவன், ''அவ்வாறாயின் என் நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?'' என்று கூறுவான்.
மேலும், ''அவர்கள் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறார்கள்'' என்றும் வானவர்கள் கூறுவார்கள். அதற்கு இறைவன், ''அவர்களுடைய பாவங்களை நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் வேண்டியதையும் அவர்களுக்கு நான் வழங்கிவிட்டேன். அவர்கள் எதிரிருந்து பாதுகாப்புக் கோரினார்களோ அதிரிருந்து அவர்களை நான் காப்பாற்றிவிட்டேன்'' என்று கூறுவான்.
அப்போது வானவர்கள், ''இறைவா! (அந்த) சபையோரிடையே அதிகப் பாவங்கள் புரியும் இன்ன மனிதன் இருந்தான். அவன் அவ்வழியே கடந்து சென்றபோது அவர்களுடன் அமர்ந்துகொண்டான்'' என்று கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், ''அவனையும் நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் ஒரு கூட்டத்தார் ஆவர். அவர்களுடன் அமர்ந்திருந்தவர் அவர்களால் (பாக்கியம் பெறுவாரே தவிர) பாக்கியமற்றவராக ஆகமாட்டார்'' என்று கூறுவான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல் : முஸ்லிம் 5218
வீட்டில் உளு செய்தால் பாவம் மன்னிக்கப்படும்
இறைநம்பிக்கையாளர் என்று சொல்ல கூடிய அனைவரும் கடமையான தொழுகையை பேணி தொழ வேண்டும், இந்த கடமையான தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வரும் போது வீட்டில் உளு செய்து கொண்டு வந்தால் அச்செயலுக்காக அல்லாஹ் நம்முடைய பாவத்தை மன்னித்து நம்முடைய படித்தரத்தை உயர்த்துகிறான், இந்த அமல் மிகப்பெரிய செயல்கள் கிடையாது, நம்மால் முடியாத விஷயமும் கிடையாது, சாதரணமாக விஷயம் தான், இது போன்ற சாதாரணமான அமலை தான் அல்லாஹ் விரும்புகிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத்தெருவில் தொழுவதை விடவும் 'ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளி வாசலுக்கு வந்தால் அவர் பள்ளி வாசலுக்குள் வரும் வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் அந்தஸ்த்தை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான். (கூட்டுத்) தொழுகையை எதிர்ப்பார்த்து அவர் பள்üவாசலில் இருக்கும்போது அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் (வெüயேறிவிடாமல்) எந்த இடத்தில தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால், (அங்கசுத்தியை அகற்றிவிடக் கூடிய) சிறுதுடக்கு (காற்றுப்பிரிதல் மூலம்) அவர் பள்ளிக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும்.. அப்போது வானவர்கள், ''இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்றுபிரார்த்திக்கின்றார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல் : புகாரி 477
பாதைக்கு செய்ய வேண்டிய கடமைகள்
சாலையோரங்களில் அமர்வோர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் சில உள்ளன. அவற்றை சாலைகளின் உரிமைகள் என்பர். சாலைகளை அசுத்தப்படுத்தக் கூடாது. பார்வையைக் கட்டுப்பத்திக்கொள்ள வேண்டும். போவோர் வருவோருக்கு எந்தத் தொல்லையும் தரக் கூடாது. முகமனுக்குப் பதில் சொல்ல வேண்டும். நன்மை புரியுமாறு ஏவி தீமையைத் தடுக்க வேண்டும். ஆக சாலையோரங்களில் அமர்ந்து வீண் பேச்சுகளில் ஈடுபடுவது வெறுக்கத்தக்க செயலாகும். சாலையோரங்களில் உட்காருவதால் அவ்வழியாக செல்லும் பெண்களைப் பார்த்தல், கெட்ட எண்ணம் கொள்ளல், பாதசாரிகளைப் பற்றிப் புறம் பேசுதல், அவர்களைச் சிறுமைப்படுத்தல், போக்குவரத்து நெரிசல் ஏற்படக் காரணமாகுதல், பெண்கள் நடமாத் தடையாக இருத்தல். பக்கத்து வீட்டுகாரருக்குத் தொல்லை தருதல் உள்ளிட்ட குழப்பங்களும் தீங்குகளும் ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆகவே சாலையோரங்களில் அமர்வதைத் தவிர்ப்பதே நல்லது. அமர வேண்டிய அவசியம் ஏற்படின், மேற்சொன்ன ஒழுங்கு முறைகளைக் கடைபிடித்தாக வேண்டும்.
நாம் பல தேவைகளுக்காக வேண்டி வெளியே செல்கிறோம். நம்முடைய தேவைகளை நிறைவேற்ற செல்லும் போது பிறருக்கு இடையூறு இல்லாமல் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அண்ணிய பெண்களை பார்க்காமல் தன்னுடைய மோக பார்வைகயை தாழ்த்திக் கொள்ள வேண்டும். இச்செயல் சாதாரண விஷயம் தான். வீதியல் நின்று பிறரத்திடத்தில் பேசும் போது அக்கம் பக்கம் தன்னுடைய பார்வையை மேயவிடாமல் தாழ்த்துமாறு இஸ்லாம் கூறுகிறது. அதே போன்று தன்னுடைய கையாலும் நாவாலும் பிறருக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். வீதியில் நம்முடைய விரோதி செல்லும் போது ஜாடைமாடையாக பேசுவது. அல்லது அவருடைய வானகத்தை வீணாக்க கூடிய காரியங்களை செய்வது. இது போன்ற காரியங்களை நாம் செய்யாமல் தவிர்ந்து கொள்ள வேண்டும். இந்த விஷயங்கள் மிகப்பிரமாண்டமான விஷயம் கிடையாது. அற்பமான கருதப்படும் செயல் தான். பிறருக்கு இடையூறு இல்லாமல் தன்னுடைய பார்வை தாழ்த்திக் கொண்டால் அல்லாஹ் நம்முடைய செயலை விரும்புகிறான்.
''நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ''எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ''அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், ''பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில்செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல் : புகாரி 2465
பாதையில் முட்கிளை ஒதிக்கினால் பாவம் மன்னிக்கப்படும்
பாதையில் பிறருக்கு இடையூறு செய்ய கூடிய பொருட்களை நாம் அகற்றினால் அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறான். கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக பள்ளியை நோக்கி வரும் வழியில் பிறருக்கு இடையூறு தரக் கூடிய பார்த்து விட்டு அதை சரிசெய்யாமல் வந்து விடக் கூடாது. பிறருக்கு இடையூறு தரக்கூடிய பொருட்களை நாம் விளக்குவது மூலமாக நம்முடைய தொழுகை தவறிவிட்டாலும் அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறான். இவ்செயல்கள் மிகப்பெரிய விஷயம் கிடையாது. நாம் முள்ளையே அல்லது கல்லையே கடந்து சொல்லும் போது அதை தூக்கி எரிந்து விட வேண்டும்.
ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்(டு அதை எடுத்து அப்புறப்படுத்திவிட்)டார். அ(தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த)து, அவரைத் (தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழவிடாமல்) தாமதப் படுத்திவிட்டது. அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்கலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல் : புகாரி 652
தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல் : புகாரி 2989
பிறருக்கு உதவினால் தர்மம்மாகும்
நபிதோழர்கள் நன்மை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக நன்மையை பற்றி நபி ஸல் அவர்களிடத்தில் கேட்கிறார்கள். பிறருக்கு நன்மை செய்யுமாறு இஸ்லாம் வயுறுத்துகிறது. பிறருக்கு நம்மால் நன்மை செய்ய முடியாவிட்டாலும் பிறருக்கு தீமை செய்யாமல் இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ''தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்ரிமின் மீதும் கடமையாகும்'' என்று கூறினார்கள். அப்போது ''(தர்மம் செய்ய ஏதும்) அவருக்குக் கிடைக்கவில்லை யானால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ''அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்'' என்று சொன்னார்கள். ''அவருக்கு (உழைக்க உடரில்) தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்?'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ''பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்'' என்றார்கள். ''(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ''அவர் 'நல்லதை' அல்லது 'நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்'' என்றார்கள். ''(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?'' என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், ''அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்'' என்றார்கள்.
அறிவிப்பாளர் : அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நூல் : முஸ்லிம் 1834
(பாதைக்கு செய்ய வேண்டிய கடமைகள்) நல்லதை பேச வேண்டும்
பாதையில் இருக்கும் போது ஆபாசமான வார்த்தைகளையும் தவறான பேச்சுகளையும் பேசக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. பிறரை கேவல படுத்துவதற்காக மோசமான வார்த்தைகளை பாதையில் நின்று கொண்டு பயன்படுத்துவோம். இந்த ஈனசெயல்களை செய்ய கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.
நாங்கள் வீட்டு முற்றங்களில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களிடையே நின்று, ''சாலையோரங்களில் அமர்ந்து (பேசிக்) கொண்டிருப்பதற்கு உங்களுக்கு என்ன (அவசியம்) நேர்ந்தது? சாலையோரங்களில் அமர்வதைத் தவிர்த்துவிடுங்கள்'' என்று கூறினார்கள். நாங்கள் ''அவசியத்தை முன்னிட்டே அமர்கிறோம். (இங்கு அமர்ந்துதான் பல விஷ யங்கள் குறித்து) நாங்கள் பேசிக்கொள்கிறோம்; கலந்துரையாடுகிறோம்'' என்று கூறினோம்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அதைத் தவிர்க்க முடியாது என்றிருந்தால், சாலைகளுக்கு அவற்றின் உரிமையை வழங்கிவிடுங்கள். (அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், முகமனுக்குப் பதிலுரைப்பதும், நல்ல பேச்சுக்களைப் பேசுவதும் (அவற்றின் உரிமை) ஆகும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூதல்ஹா (ரலி) அவர்கள் நூல் :முஸ்லிம் 4365
நல்ல வார்த்தை தர்மம்மாகும்
நாம் அழகிய வார்த்தையை பேசினால் அவ்வார்த்தை தர்மமாக அமையும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:
மக்கள் தமது மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாட்களும் தருமம் செய்வது அவர்கள் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும் தருமமாகும்; அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல் : புகாரி 2989
நரகத்திருந்து தப்பித்துக்கொள்ளலாம்
நாம் நல்ல வார்த்தை பேசுவதின் மூலமாக நரகம் தடுக்கப்படுகிறது.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.
பிறகும் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போதும் அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போதும் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.
பிறகு, ''பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக்கொள்ளுங்கள்)'' என்றார்கள்
அறிவிப்பாளர் : அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் நூல் : புகாரி 6023
நல்ல வார்த்தையின் மூலமாக சொர்க்கம் செல்வான்
சில நேரங்களில் நாம் நம்மையும் அறியாமலேயே நல்ல அல்லது கெட்ட பேச்சுகளை பேசிவிடுகிறோம். அதன் விளைவு மிகவும் பெரியதாக அமைந்து விடுகிறது என்பதை நாம் யோசிப்பதில்லை. பாதிக்கப்பட்ட ஒர் இறைநம்பிக்கையாளருக்காக வாதாடி அவருக்கேற்பட்ட பாதிப்பை அகற்ற வழி காண்பது, சிரமத்திலுள்ள ஒருவரின் சிரமத்தை அகற்ற பரிந்துரைப்பது, சண்டையிட்டுக்கொள்ளும் இருவரிடையே சமாதானம் ஏற்படுவதற்காகப் பேசுவது, ஆகிய நமக்கு பெரிய சாதனைகளாத் தெரிவதில்லை. ஆனால் இறை திருப்தியை நாடி இவற்றைப் பேசும்போது இறைவன் உயர் அந்தஸ்தை வழங்குகிறான். இதைப் போன்றே ஆட்சியாளரைத் திருப்திபடுத்துவதற்காக அவர் செய்யும் தவறையும் சரி என்று சொல்வது, பிறர் மனம் நோகும் வகையில் பேசுவது, பங்காளிகள் அல்லது நண்பர்களிடையே பகை மூட்டும் வகையில் பேசுவது ஆகிய நமது பார்வைக்கு ஒரு குற்றமாக தெரியவில்லை. ஆனால் இந்த பேச்சுகளின் பின் விளைவு கடுமையானது என்பதால் இவை நரகத்தின் அதலபாதாளத்தில் தள்ளிவிடும். ஆகவே எதைப் பேசினாலும், பேசுவதற்கு முன் அதன் பின் விளைவுகள் குறித்து யோசித்த பிறகே பேச வேண்டும். இதுவே இறைநம்பிக்கையாளரின் பண்பாகும்.
ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக் குரிய ஓரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ் வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல் : புகாரி 6478
அருவருப்பான பேச்சைப் பேசுவரே மக்களில் தீயவர்
ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்'' என்று (அவரைப் பற்றிச்) சொன்னார்கள். (வீட்டுக்கு) உள்ளே அவர் வந்தபோது, (எல்லாரிடமும் பேசுவது போல்) அவரிட(மு)ம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான், ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள்; பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?'' என்று கேட்டேன். (அப்போது) நபி (ஸல்) அவர்கள், ''ஆயிஷா! மக்கள் எவரது அவருவருப்பான பேச்சுகüலிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு ஒதுங்குகிறார்களோ அவரே மக்கüல் தீயவர் ஆவார். (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து மற்றவர்களை எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சென்னேன்)'' என்றார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) அவர்கள் நூல் : புகாரி 6054
நாவை பாதுகாத்தால் சொர்க்கம்
ஒரு கிரமவாசி நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே சொர்க்கத்தில் என்னை கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக் கொடுங்கள் என்று கேட்டோன். நபி ஸல் அவர்கள் (சில விஷயங்களைக் கூறிவிட்டு) உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசிதவனுக்கு உணவு கொடு, தாகித்தவனுக்கு நீர்புகட்டு, நல்லதை ஏவீ, தீமையை தடு, இதற்கும் உண்ணால் மடியாவிட்டால் உனது நாவை நல்லவற்றிருந்தே தவிர (மற்றவற்றிருந்து) பாதுக்காத்துக் கொள் என்று கூறினார்கள்
அறிவிப்பாளர் ; அல்பர்ரா (ரலி) அவர்கள் நூல் : அகமது 17902
நரகத்திற்கு அழைத்து செல்வது நாவுதான்
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
(வணக்க வழிபாடுகள்) அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதை உனக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் அவர்களிடத்தில் அல்லாஹ்வின் நபியே ஆம் (எனக்கு சொல்லுங்கள்) என்று கூறினேன். அவர்களிடத்தில் தன்னுடைய நாவை பிடித்து இதை நீ பாதுகாத்துக்கொள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே நாம் பேசுகின்றவைகளுக்காகவா நாம் தண்டிக்கப்படுவோம் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆச்சிரியத்துடன் மக்களை முகம்குப்புற நரகில் தள்ளுவது அவர்களுடைய நாவுகள் அறுவடை செய்தவைகளாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் நூல் : அகமது 21008
அல்லாஹ்வின் பெயரை மனனம் செய்தால் சுவனம்
அல்லாஹ்வுக்கு (99) பல பெயர்கள் உள்ளன. அந்த பெயர்களை யார் மனனம் செய்கிறார்களோ அந்த மனிதனுக்கு சொர்க்கம் நிச்சயம் என்று அல்லாஹ் கூறுகிறான். பெயரை மனப்பாடம் செய்வதற்கு கஷ்டம் கிடையாது. மனப்பாடம் பன்னுவதற்கு சில முறைகள் உள்ளன. நாம் தினமும் பஸ்ஸில் பயணம் செய்பவராக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு பெயர் என்ற அடிப்படையில் 99 நாளைக்கு 99 பெயர்களை மனனம் செய்யலாம். அப்படியில்லையென்றால் நாம் வேளை செய்யும் போது ஒரு நாளைக்கு ஒரு பெயரை மனனம் செய்யலாம். அல்லாஹ்வின் பெயர்களை மனனம் செய்வதற்கு கஷ்டம் என்று நினைத்தால் நம்முடைய குழந்தைகள் எப்படி பள்ளி பாடத்தை படிப்பார்கள். இன்னும் சில குழந்தைகள் கீழ்தரமான அறுவருப்பான கூத்தாடிகளின் பாடல்களை மனனம் செய்கிறார்கள். இப்படி இருக்கும் போது இலகுவான அல்லாஹ்வின் பெயரை மனனம் செய்வதற்கு கஷ்டப்படுகிறார்கள். இது போன்ற ஈன செயல்களை செய்யாமல் நல்ல அமல்களை செய்ய வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல் : புகாரி 2736
மலக்குமார்களின் துஆ
நாம் கடமையான தொழுகை முடிந்த பின் அந்த இடத்திருந்து உடனே எழுந்திரிக்காமல் அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துயிருந்தால் நம்முடைய பாவங்களை மன்னிக்கும் படி அல்லாஹ்விடம் மலக்குமார்கள் பிராத்தனை செய்வார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால் (உளூவை முறிக்கக் கூடிய)சிறு துடக்கு ஏற்படாமலிருக்க வேண்டும். அப்போது அவர்கள் ''இறைவா! இவருக்கு மன்னிப்பüப்பாயாக! இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக!'' என்று பிரார்த்திக்கிறார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல் : புகாரி 445
இஸ்லாத்தில் உறுதியாக இருந்து மரணித்தால் சொர்க்கம் செல்வார்
நாம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்ட பிறகு எவருக்காக வேண்டியும் நம்முடைய மார்க்கத்தை விட்டு கொடுக்காமல் உறுதியாக இருந்து மரணித்து விட்டால் அந்த மனிதனை அல்லாஹ் செர்க்கத்தில் சேர்த்து விடுகிறான். அவர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு தவறு செய்துயிருந்தாலும் அல்லாஹ் அவரை செர்க்கத்தில் சேர்த்து விடுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக்கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக்கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, ''லா இலாஹ இல்லல்லாஹ்'' (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)'' என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)'' என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக) ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) அவர்கள் நூல் : புகாரி 5827
ஏக இறைவனாம் அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் ஏகத்துவ கொள்கையில் இறக்கும் ஒருவர் செர்க்கம் புகுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் விபச்சாரம், திருடு போன்ற பாவங்களை அவர் செய்திருந்தால் அவற்றுக்கான தண்டனையை நரகத்தில் அனுபவித்து விட்டு இறுதியாக சொர்க்கம் புகுவார். விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே என்பதற்கு இதுவே கருத்தாகும். அவர் நரகம் புகமாட்டார் என்பதற்கு இத்தகையை குற்றவாளி முஸ்ம் நிரந்தரமாக நரகத்தில் இருக்க மாட்டார் என்று பொருளாகும். அல்லது அந்த பாவங்களுக்காக அவர் பாவ மன்னிப்புக் கோரி அதனை அல்லாஹ் ஏற்றுக் கொண்டால் நரகத்தில் நுழையாமலேயே சொர்க்கம் செல்லலாம்
தர்மம் செய்தால் நன்மை மலைபோல் உயரும்
யார் முறையான சம்பாத்திருந்து ஒரு ரூபாய் தர்மம் செய்தாலும் ஒரு தாய் தன் குழந்தையை எவ்வளவு பாதுகாப்பாக வளர்ப்பாளோ அதே போன்று அல்லாஹ் நம்முடைய தர்மத்தின் மூலமாக வரக் கூடிய நன்மைகளை பாதுகாத்து வைத்துயிருக்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்துவிடுவான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல் : புகாரி 1410
தர்மம் செய்தால் வானவர்கள் பிராத்திப்பார்கள்
தினமும் தர்மம் செய்தால் ஒவ்வொரு நாளையிலும் உலகத்திற்கு வரக்கூடிய இரு மலக்குமார்கள் நமக்காக வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
'ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ''அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!'' என்று கூறுவார். மற்றொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக்கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறுவார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல் : புகாரி 1442
தொழுகையில் ஆமீன் கூறினால் பாவம் மன்னிக்கப்படும்
கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக நாம் பள்ளிவாசலுக்கு வருகிறோம். ஜமாஅத்தாக தொழும் போது இமாம் ஃபாத்திஹா சூராவில் கடைசி வசனத்தை (கைரில் மக்லூபி அலைஹிம் வளல்லல்லாழ்ழீன்) ஒதி முடிக்கும் போது பின்னால் இருப்பவர்கள் ஆமீன் என்று கூற வேண்டும். அப்படி அவர் கூறும் போது அவர்களுடைய ஆமினும் மலக்குமார்களுடைய ஆமினும் ஒத்துப்போனால் அல்லாஹ் நம்முடைய முன் செய்த பாவங்களை மன்னிக்கிறான். ஆமீன் என்ற வார்த்தை கடுமையான, பாரதூரமான வாசகம் கிடையாது. நம்முடைய நாவுக்கு ஈசியாக வரக்கூடிய வார்த்தையாகும். இந்த சாதாரமான வாசகத்திற்கு நம்முடைய நல்ல அமல்களை விரும்புகிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுவிப்பவர் (இமாம்), ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று கூறுங்கள்.ஏனெனில், எவர் ஆமீன் கூறு(ம் நேரமா) வது வாவனவர்கள் ஆமீன் கூறுகின்ற (நேரத்)து டன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல் : புகாரி 780
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல் : புகாரி 780
தொழுகையில் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து என்று கூறினால் பாவம் மன்னிக்கப்படும்
கடமையான தொழுகையை நிறைவேற்றும் போது இமாம் ஸமிஅல்லாஹீ மன் ஹமிதஹீ என்று கூறும் போது நாம் அதற்கு பகரமாக அல்லாஹீம்ம ரப்பனா லக்கல் ஹம்து கூறும் போது நம்முடைய வார்த்தையும் மலக்குமார்களுடைய வாசகமும் ஒத்துப்போனால் அல்லாஹ் நம்முடைய பாவத்தை மன்னிக்கிறான். இந்த வாசகம் நம்முடைய நாவுக்கு நுழையாத வார்த்தையா என்று பார்த்தால்? கிடையாது. சுலபமான வார்த்தையாக தான் இருக்கிறது. இந்த வார்த்தை கூறுவதின் மூலம் அல்லாஹ் நம்முடைய பாவத்தை மன்னிக்க விரும்புகிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இமாம் (தொழுகையில்), ''சமிஅல் லாஹு லிமன் ஹமிதஹு லி தன்னைப் புகழ்ந்தவனை அல்லாஹ் செவிமடுத்தான்'' என்று கூறும் போது நீங்கள் ''அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்துலி இறைவா, எங்கள் இரட்சகனே! உனக்கே புகழ் அனைத்தும் உரியது'' என்று கூறுங்கள். ஏனெனில், (இறைவனைத் துதிக்கும்) வானவர்கüன் (துதிச்) சொல்லுடன் எவரது சொல் (ஒரே நேரத்தில்) ஒத்து அமைகின்றதோ அவர், அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல் : புகாரி 3228