Friday, March 28, 2014

காப்பி பேஸ்ட் குறித்து அற்புத விளக்கம் - திருட்டுக்கு புது விளக்கம்!

காப்பி பேஸ்ட் குறித்து அற்புத விளக்கம் - திருட்டுக்கு புது விளக்கம்!

பிஜேவையும் தவ்ஹீத் ஜமாஅத்தையும்  ஒழிக்க நினைக்கும் ஒருவர் பிஜேவிடம் இருந்து ஆட்டை போட்டு புகழ் தேடலாம் என்பதற்கு ஓர் அற்புத விளக்கத்தை ஒருவர் முன்வைத்து இருப்பதாக ஒரு சகோதரர் கேள்வி எழுப்பியிருந்தார். இது பற்றி விளக்கம் தருவதற்க்காக இந்த ஆக்கத்தை வெளியிடுகிறோம். . காப்பி பேஸ்ட் குறித்து சம்பந்தப்பட்ட சகோதரர் எழுப்பிய கேள்வி படமாக காட்டப்பட்டுள்ளது.

சிலருக்கு பதில் சொல்லவே தேவையில்லை. அவர்கள் வைக்கும் வாதமே அவர்கள் பொய்யர்கள் என்று காட்டும். குர்ஆனும் ஹதீஸூம் அனைவருக்கும் பொதுவானவை. குர்ஆன் வசனத்தையோ அல்லது ஹதீஸ்களையோ எடுத்து வைக்கும் போது அதை காப்பி பேஸ்ட் செய்கிறார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். நாமும் அவ்வாறு சொல்லவில்லை. பிஜே வழிகேடர் என்றும், சமுதாய துரோகி என்றும், மார்க்கத்தில் விளையாடுகிறார் என்றும், நீங்கள் எடுத்துக்காட்டும் கருத்தை எழுதிய அறிஞர் நம்புகிறார், அவ்வாறு எழுகிறார். பிஜேவை வழிகேடர் என்று திருடும் நிருபர்களும் ஃபேஸ்புக் மற்றும் வேறு சில இடங்களிலும் எழுதுகிறார்கள். வழிகேடர் என்று ஒரு புறம் எழுதிக்கொண்டு, தங்களுக்கு புகழ் வேண்டும் என்பதற்காக பிஜேவின் எழுத்துக்களை அப்படியே ஆட்டை போட்டு, அதை தங்களின் கட்டுரை போல காட்டுவது அயோக்கியத்தனம் இல்லையா? இது போன்றவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு என்று திருக்குர்ஆனின் எச்சரிக்கை இவர்களுக்கு இல்லையா? திருக்குர்ஆன் வசனத்தை எடுத்துக்காட்டிய பின்பும் கூட இவர்களுக்கு பயம் வரவில்லை.

எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் - அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு. 


(அல்குர்ஆன் 3:188)

குர்ஆன் ஹதீஸ்களுக்கோ அல்லது பிஜேவின் எழுத்துகளுக்கோ  காப்பிரைட் இல்லை. பிஜேவின் எழுத்துக்களை யார் வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தலாம் (பிஜேவை  அழிக்க நினைப்பவர்கள் கூட). ஆனால், பிஜேவின் எழுத்துக்களை தங்களின் எழுத்தாகவும், பிஜேவின் ஆய்வுகளை தங்களின் ஆய்வாகவும் காட்டுபவர்களை மார்க்க எச்சரிக்கை காட்டி விமர்சனம் செய்கிறோம். நாம் சொன்ன விஷயத்தை மறைத்து, சொல்லாத விஷயத்தை சொன்னதாக சொல்லும் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று வாசகர்கள் புரியட்டும்.

இயேசு இறை மகனா? என்ற பிஜேவின் புத்தகத்தை ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்து ஒருவர் ஜாகிர் நாயக்கிற்கு அனுப்புகிறார். அந்த ஆங்கில எழுத்துக்களை சற்று மாற்றி, தனது பெயரில் அந்த புத்தகத்தை வெளியிட்டுவிட்டார். இதை சகோதரர் பிஜே அவர்கள் ஆன்லைன் பிஜே தளத்தில் குற்றச்சாட்டாக முன்வைத்து அது ஜாகிர் நாயக் அவர்களுக்கும் பலரால் அனுப்பபட்டுவிட்டது, அது பற்றி ஜாகிர் நாயக் வாய் திறக்கவில்லை. இதை பற்றி பேசும் அதிரைக்காரன் அவர்கள், இதற்கு பதில் சொல்லாமல் பழனிபாபா இவ்வாறு பேசியுள்ளார் என்று சொல்லி பிஜே பழனிபாபாவிடம் காப்பி அடித்ததை போல சித்திரம் வரைகிறார். பழனிபாபா என்ன பேசினார், பிஜே என்ன எழுதினார் என்று காட்டி, பிஜே காப்பி அடித்து இருந்தால் அதை எடுத்துக்காட்டலாம். அவ்வாறு செய்யாமல் பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டுகிறார். 

அடுத்து அஹமது தீதாத் அவர்கள் செய்த ஆய்வை பற்றி பேசுகிறார். அஹமது தீதாத் அவர்கள் பைபிளில் தனது ஆழ்ந்த ஆய்வை செய்தவர் என்பதை நாம் மறுக்கவில்லை. அஹமது தீதாத் அவர்களின் ஆய்வின் அடிப்படையில் ஏகத்துவம் உணர்வு போன்ற இதழ்களில் சில கட்டுரைகள் வந்துள்ளது. அந்த கட்டுரைகளில் அஹமது தீதாத் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு இவ்வாறு இவர் எடுத்து வைத்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாரோ செய்த ஆய்வை காட்டி புகழ் தேட வேண்டிய அவசியம் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு இல்லை. ஒரு வேளை எங்களை அறியாமல் அவ்வாறு செய்திருந்தால், சுட்டிக்காட்டப்பட்டால் திருத்திக்கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.

அடுத்து, பிஜேவின் ஆய்வுகள் வித்தியாசமாகவும் புதிதாகவும் இருக்கும் என்று சான்றிதழ் கொடுக்கும் இவர், பிஜே மட்டும் தான் இவ்வாறு சிந்திப்பார் என்று சொல்ல முடியாது என்கிறார். நாமும் அவ்வாறு சொல்லவில்லை. பிஜேவும் அவ்வாறு சொல்லவில்லை. பிஜேவிற்கு மட்டும் தான் சிந்திக்க தெரியும் என்றும் சொல்லவில்லை. ஆனால், பிஜேவின் ஆய்வுகளை பிஜேவை கடுமையாக எதிர்க்கும் அதிரைக்காரன் போன்றவர்கள் கூட படிக்கும் அளவுக்கு அவரின் ஆய்வு உள்ளது என்பதை பிஜேவை எதிர்ப்பவர்களே சொல்லுவது, பிஜே அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த கண்ணியம். அடுத்து, அஹமது தீதாத் பைபிளில் 50 ஆயிரம் தவறுகள் உள்ளது என்று கண்டுபிடித்துள்ளார், இந்த 50 ஆயிரம் அல்லாத தவறுகளையா பிஜே கண்டுபிடித்து விட்டார் என்று கேட்கிறார். இவ்வாறு சொல்லக்கூடியவர் இதற்கான ஆதாரத்தை எடுத்து வைத்து கேட்க வேண்டும். அஹமது தீதாத் அவர்களின் வாதங்களுக்கு கூட சில கிறிஸ்தவ பாதிரிகள் பதில் தந்துள்ளார்கள். பிஜே அவர்களின் புத்தகம் அஹமது தீதாத் அவர்களின் வாதத்தில்  இருந்து வித்தியாசப்பட்டது என்று நிருபிக்க நாம் தயார்.

பிஜே அவர்கள் கிறிஸ்தவம் குறித்து எழுதிய எந்த நூலுக்கும் வாதத்திற்கும் கிறிஸ்தவ பாதிரிகள் வாய் திறக்க முடியாத அளவுக்கு உள்ளது. அல்ஹம்துலில்லாஹ். பிஜே அவர்களின் கிறிஸ்தவம் குறித்த புத்தகம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு தவ்ஹீத் ஜமாஅத்திடம் விவாதம் செய்ய வந்த பல்வேறு கிறிஸ்தவ தரப்பினரின் வாதங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

அஹமது தீதாத் மற்றும் ஜாகிர் நாயக் போன்றவர்கள் குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்ற கொள்கையில் இல்லாத காரணத்தினால், சில இடங்களில் பதில் சொல்ல முடியாமல் சிக்கியும் உள்ளார்கள்.

அடுத்தாக, இந்த சகோதரர் கேட்கும் கேள்வி புகாரி மற்றும் முஸ்லிம் தமிழாக்கத்தை ஆன்லைன் பிஜே இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதுவும் காப்பி பேஸ்ட் தானே என்று கேட்டுள்ளார்கள். ஒரு விஷயத்தை பற்றி கேள்வி எழுப்பும் முன் அல்லது அவதூறு செய்யும் முன் அது பற்றி தீர விசாரித்துவிட்டு செய்ய வேண்டும். ரஹ்மத் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட புகாரி தமிழாககத்தின் முதல் பாகத்தை எந்த விதமான கூலியும் வாங்காமல் மொழிபெயர்த்து கொடுத்தது சகோதரர் பிஜே அவர்கள் தான். ஆன்லைன் பிஜே இணையதளத்தில் ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்ட புகாரி மற்றும் முஸ்லிம் தமிழாக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இது திருடும் நிருபர்களை போல ரஹ்மத் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பை பிஜே தனது மொழிபெயர்ப்பாக காட்டவில்லை (பிஜே அவர்கள் மொழியாக்கம் செய்த புகாரியின் முதல் பாகம் உள்பட). ரஹ்மத் பதிப்பகத்தின் அனுமதியுடன் தான் பிஜே அவர்கள் புகாரி மற்றும் முஸ்லிம் தமிழாக்கத்தை ஆன்லைன் பிஜேவில் வெளியிட்டுள்ளார். அனுமதி மட்டும் போதும் என்று இல்லாமல், ஆன்லைன் பிஜேவில் உள்ள புகாரி முஸ்லிம் தமிழாக்கம் ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டது என்று குறிப்பிட்டு, தமிழ் உலகில் நபி (ஸல்) அவர்கள் பொன்மொழிகளை மொழியாக்கத்தை அறிமுகம் செய்த ரஹ்மத் நிறுவனத்திற்கு துஆ செய்யுங்கள் என்று வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.

ஆன்லைன் பீஜே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புகாரி முஸ்லிம் மொழிபெயர்ப்பின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம்:
ஆன்லைன் பிஜேவில் புகாரி முஸ்லிம் தமிழாக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பகுதியின் லிங்க்.


புகாரி தமிழாக்கத்தில் தனது பங்களிப்பு இருந்த போதும், அடுத்தவர்கள் வெளியிட்ட ஆக்கத்தை நமது ஆக்கமாக காட்டக்கூடாது என்ற திருக்குர்ஆனின் போதனைக்கு ஏற்ப நடந்துள்ளார். என்ன நடந்தது என்றே தெரியாமல் குற்றம் சுமத்துகிறார்கள்.

1435 ஆண்டுகளுக்கு முன்னர் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் எல்லாத்தையும் காப்பி பேஸ்ட் தான் செய்ய முடியுமாம் (மார்க்கம் முழுமைப்படுத்தபட்டு 1425 ஆண்டுகள் ஆகிறது, ஹிஜிரி ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த ஆண்டு முதல் ஹிஜிரி ஆண்டு துவங்கிறது. ஹிஜ்ரத்திற்கு பின்னர் மதினாவில் 10 ஆண்டுகள் நபி (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். எனவே, மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு 1425 ஆண்டு ஆகிறது என்பது தான் சரி - இதை விளக்கத்திற்காக சொல்லுகிறோம் . இந்த  கருத்தை வைத்தவரை குறை சொல்லுவதற்கு அல்ல). 1425 ஆண்டுகளுக்கு முன்னர் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கம் என்பது சரி, முழுமைபடுத்த பட்ட மார்க்கத்தில் குரானையோ ,ஹதீசையோ ஒருவர் வெளியிடும்போது யாரும் உரிமைகொண்டாட முடியாது என்பதற்கும் குரான் ,ஹதீஸை ஆய்வு பண்ணி ஒருவர் எழுதி இருப்பதை வேறு ஒருவர் அப்படியே எடுத்து காப்பி பேஸ்ட் செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை புரியாமல் இருக்கிறார்களா என்பதை யோசிக்க வேண்டியுள்ளது  பிஜே வழிகேடர் என்று சொல்லிக்கொண்டே காப்பி அடிப்பது எவ்வாறு சரி? என்பதையாவது யோசியுங்கள்

இந்த அற்புத கருத்தை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த 'கண்கள் இரண்டும்' கட்டுரையின் ஒட்டுரையாளர் அற்புதமான விளக்கம் என்கிறார். பிஜேவை தக்லீத் செய்கிறார்கள் என்று நம்மை குற்றம்சாட்டிய 'கண்கள் இரண்டும்' ஒட்டுரையாளர் பிஜேவின் ஆய்வுகளை தொடர் 26 மற்றும் 27 முழுமையாக காப்பி அடித்து தக்லீத் செய்தது ஏன்? பிஜேவை தக்லீத் செய்வது நீங்கள் தான் என்று இப்போது தெளிவாகிறேதே! கண்கள் இரண்டும் கட்டுரையின் ஒட்டுரையாளர் நம்மை தக்லீத்வாதிகள் என்று எழுதியதற்கு மேலும் சில விளக்கங்கள் இங்கே.

காப்பி பேஸ்ட் பற்றி வேறு ஒருவர் சொல்லும் போது பிஜேவின் ஆக்கத்தை காப்பி அடித்தாலும் பிஜேவிற்கு நன்மை கிடைக்குமல்லவா? என்கிறார்கள்.  பிஜேவிற்கு நன்மை கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பிஜேவின் ஆய்வை உங்களின் ஆய்வாக காட்டி பெருமையடிக்கும் உங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்பதை கீழ்காணும் திருமறை வசனம் (அல்குர்ஆன் 3:188) சொல்லுகிறதே! உங்களை தண்டனையில் இருந்து காப்பாற்ற தான் நாங்கள் இப்படி போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.

அதுவும் பிஜேவை எல்லாரும் தக்லீத் செய்கிறார்கள், நாங்கள் யாரையும் தக்லீத் செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டு பிஜேவின் ஆய்வை அப்படியே தக்லீத் (கண்மூடி பின்பற்றுதல்) செய்வதால், நயவஞ்சகத்தனத்திற்க்கான இன்னும் அதிகமாக தண்டனை கிடைக்கும்.

1 கருத்துரைகள் :

//காப்பி பேஸ்ட் பற்றி வேறு ஒருவர் சொல்லும் போது பிஜேவின் ஆக்கத்தை காப்பி அடித்தாலும் பிஜேவிற்கு நன்மை கிடைக்குமல்லவா? என்கிறார்கள். பிஜேவிற்கு நன்மை கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பிஜேவின் ஆய்வை உங்களின் ஆய்வாக காட்டி பெருமையடிக்கும் உங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்பதை கீழ்காணும் திருமறை வசனம் (அல்குர்ஆன் 3:188) சொல்லுகிறதே! உங்களை தண்டனையில் இருந்து காப்பாற்ற தான் நாங்கள் இப்படி போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.//

மாஷா அல்லாஹ்.. தெளிவான வார்த்தைகள்! புரிய வேண்டிய சகோதரர்கள் புரிந்துக் கொள்ளட்டும் இன்ஷா அல்லாஹ்!

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.