Wednesday, March 19, 2014

அதிமுகவின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் தவ்ஹீத் பள்ளிக்கு வருகை - விமர்சன விளக்கம்

அதிமுகவின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் தவ்ஹீத் பள்ளிக்கு வருகை - விமர்சன விளக்கம்

அதிமுகவின் தஞ்சை தொகுதி வேட்பாளர் பரசுராமன் அவர்கள் நமது மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிக்கு கடந்த 12 ஆம் தேதி வருகை தந்தார். இது குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவற்றிற்கு விளக்கம் தருவது எங்களின் கடமை என்ற அடிப்படையில் அது பற்றி எழுந்த விமர்சனங்களுக்கு இங்கே பதில் தருகிறோம்.

இது பற்றி வந்த முதாவது விமர்சனம், மாற்று மதத்தினர் பள்ளிவாசலுக்கு வரலாமா என்பதாகும். மாற்று மதத்தினர் பள்ளிக்கு வரலாம், அவ்வாறு நபி (ஸல்) காலத்தில் வந்துள்ளார்கள். மாற்று மதத்தினர் பள்ளியில் இருந்து குர்ஆன் ஒதப்படுவதை செவியேற்றுள்ளார்கள். மாற்று மதத்தினர் சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாதவர்கள் இமாம் நின்று தொழ வைக்கும் இடத்திற்கு வரலாமா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மாற்றுமதத்தினரும் இவ்வாறு தானே தூய்மையற்றவர்களாக இருந்து இருப்பார்கள். மாற்று மதத்தினர் பள்ளிக்கு வரலாம் என்ற அனுமதி ஹதீஸ்களில் உள்ளது, பள்ளியில் இந்த இடத்திற்கு வரலாம் இந்த இடத்திற்கு வரக்கூடாது என்ற எந்த தடையும் இல்லாத போது இமாம் இருக்கும் இடத்திற்கு வருவது சரியா? என்று கேள்வி எழுப்புவது அர்த்தமற்றது. இது பற்றி முழுமையாக இங்கே விளக்கப்பட்டுள்ளது.

அடுத்து, தவ்ஹீத் பள்ளிக்கு வருகை தந்த அதிமுகவின் வேட்பாளர் தவ்ஹீத் பள்ளியில் வைத்து, 'இதயதெய்வம்' என்று பேட்டி கொடுத்தார் என்ற ஒரு தவறான தகவலை சிலர் என்ன நடந்தது என்று தெரியாமல் பரப்பியுள்ளார்கள். தவ்ஹீத் பள்ளிக்கு ஆதரவு கேட்டு வந்த அதிமுகவின் வேட்பாளருக்கு, கூளை கும்பிடு போடாமல், அவருக்கு என்று தனி மரியாதை செய்யாமல், தரையில் அமர வைத்து, அந்த வேட்பாளருக்கு 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற புத்தக்தையும் வழங்கி அழைப்புப்பணி செய்யப்பட்டது. தவ்ஹீத் பள்ளியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, அதிமுகவின் வேட்பாளர் 'இதயதெய்வம்' போன்ற எந்த ஒரு வார்த்தையும் பயன்படுத்தவில்லை. ஒரு வேளை அது போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருந்தாலும், அது அவரின் கொள்கை, அவ்வாறு பேசுவது தவறு என்று சூட்டிக்காட்டியிருப்போம். தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளுடன் பேசிவிட்டு, பள்ளியை விட்டு வெளியே வந்த அதிமுக வேட்பாளரிடம், அதிரை நியூஸ் இணையதளத்தை சார்ந்தவர்கள் பேட்டி எடுக்கும் போது தான், 'தமிழகத்தின் காவல் தெய்வம்' என்று அதிமுக வேட்பாளர் குறிப்பிட்டார். சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வரும் போது எடுக்கப்பட்ட பேட்டி வீடியோவில் தவ்ஹீத் ஜமாஅத்தின் சில நிர்வாகிகளும் தென்படுகிறார்கள். இது தான் நடந்த சம்பவம். இவ்வாறு தான் நடந்தது என்பதை அதிரை நியூஸ் இணையதளமும் சம்பந்தப்பட்ட ஆக்கத்தில் தெரிவித்துள்ளது.

கண்டதையும் தெய்வம் என்ற நினைக்கும் ஒருவர் எங்கும் அதை சொல்லுவார், தவ்ஹீத் ஜமாஅத்திடம் பேசும் போது இவ்வாறு சொன்னால் அதை நாம் கண்டிப்போம். அதிரையில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிஜே அவர்கள் பேசும் போது, அந்த மேடையில் ஸ்டாலினும் வாக்கு கேட்டு வந்தார், அந்த மேடையில் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்த வேண்டும் திமுகவினர் எவ்வளவோ கெஞ்சினர், தவ்ஹீத் ஜமாஅத் அதை அனுமதிக்கவில்லை. வெடி சத்தம் கூட எங்களுக்கு கேட்கக்கூடாது, வெடி கூட வெடிக்கக்கூடாது என்று கட்டளை போட்டது தவ்ஹீத் ஜமாஅத். இதை திமுகவினர் ஏற்றுக்கொண்டனர்.

அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறோம் என்று கிளம்பிய தவ்ஹீத் (?) பேசிய தமுமுகவினரே, 'வாக்கள பெருமக்களே  வணக்கம்' என்று நோட்டிஸ் அடிக்கும் போது, கண்டதும் தெய்வம் என்று நம்பும் அந்த வேட்பாளரிடம் எதை எதிர்பார்க்க முடியும். தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜூம்ஆ மேடையில் வந்து அதிமுக வேட்பாளர் உரையாற்றி, அதில் 'தமிழகத்தின் காவல் தெய்வம்' என்று சொன்னதை போன்று பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

தவ்ஹீத் பள்ளிக்கு வெளியே அதிரை நியூஸ் தளத்தினர் பேட்டி எடுக்கும் போது சொன்ன இந்த வார்த்தையை, தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் பேசும் போது அதிமுக வேட்பாளர் குறிப்பிட்டதை போன்று கதையை உருவாக்கி பரப்புகிறார்கள். இவ்வாறு சொல்லக்கூடியவர்கள் இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் அல்ல. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக அவதூறு சொல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றால், அதற்காக எதையும் செய்வேன் என்ற கொள்கையில் உள்ளவர்களின் அவதூறு தான் இது.


அவதூறு சுமத்துபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும். அதிமுகவை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கிறது என்றால், அதிமுகவினர் கோவிலுக்கு சென்றால் கூட விமர்சனம்  செய்ய ஆட்கள் நிறைய உண்டு. அடுத்தாக, தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரிக்கிறது, திமுகவை சார்ந்த பேரூராட்சித் தலைவருடன் நடுத்தெருவில் தனி அமர்வு என்றும் சந்தேகத்தை ஒருவர் கிழப்புகிறார். நட்பு முறையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகியின் கடையில் அமர்ந்து  பேசிக்கொண்டு இருந்த பேரூராட்சித் தலைவரையும் தவ்ஹீத் ஜமாஅத்தை ஏதே கள்ள ஒப்பந்தம் போடுவதை போல அல்லாஹ்வின் அச்சம் இல்லாமல் அவதூறு செய்கிறார்கள். நடுத்தெருவை சார்ந்த பேருராட்சி தலைவர், நடுத்தெருவில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்தவரின் கடையில் அமர்ந்து பேசுவது ஏதே புதிதாக நடக்கும் விஷயம் அல்ல. தனது மானம் போனாலும், தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அவதூறு பரப்புவோம் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு நல்ல புத்தி வர பிரத்திப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

நூல்: முஸ்லிம் 6


இந்த விமர்சனத்தை முதலில் எடுத்து வைத்தவரின் தவ்ஹீத் (?) கொள்கையே கொடி கட்டி பறக்கிறது. கவிஞரை புகழ்ந்து எழுதும் போது. இறையருட்கவிமணி (இறையருள் பெரும் கவிஞர்) என்று எழுதிய தவ்பா செய்த தவ்ஹீத்வாதி தன்னையும் சீர் தூக்கி பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் நாளை நடப்பதை எல்லாம் அறிய கூடியவர் என்று வரக்கூடிய மௌலூது வரிகளின் இணைவைப்பு உள்ளது என்று பிரச்சாரம் செய்தவர்கள், இன்று கவிஞருக்கு இறையருள் வருகிறது என்று எழுதும் அளவுக்கு வந்து விட்டோமே என்று எண்ணிப்பார்க்க வேண்டும். ஹஜ்க்கு சென்று வரக்கூடியரை 'ஹாஜி' என்றும், 'அல்ஹாஜ்' என்றும் எழுதுபவர்களை விமர்சனம் செய்தோமே! இன்று அதை நாமே செய்கிறோமே, அதுவும் அக்மார்க் தவ்ஹீத் நாங்கள் என்று சொல்லிக்கொண்டே இவ்வாறு செய்கிறோமே என்று சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். மௌலூது ஒதும் இமாம், இணைவைக்கும் இமாம் இவர்களை பின்பற்றி தொழ கூடாது என்று திருக்குர்ஆன் வசனத்தை எடுத்துக்காட்டி சொன்னாமே, இன்று நாம் இணைவைக்கும் இமாம் மற்றும் மௌலூது ஓதும் இமாம் இவர்களை பின்பற்றி தொழுகிறோமே! என்று எண்ணிப்பார்க்க வேண்டும். இதையெல்லாம் நாம் விமர்சனம் செய்வதற்காக சொல்லவில்லை. மாறாக, இது போன்ற வழிகேடுகளை விட்டு மீண்டு வாருங்கள் என்று காட்டவே இவ்வாறு சொல்லுகிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து கொண்டு தான் தவ்ஹீத்வாதியாக இருக்க வேண்டும் என்பதல்ல, தவ்ஹீத் ஜமாஅத்தை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், தவ்ஹீத் கொள்கையில் நீங்கள் உறுதியாக இருக்கலாம், உண்மையான கொள்கையை விட்டுவிடுவது மறுமையில் என்ன பலனை தரும்?? சிந்தித்து செயல்படுவது நல்லது என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல். 


அல்குர்ஆன் 3:8

புகைப்பட உதவி: அதிரை நியூஸ்

13 கருத்துரைகள் :

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.


அல்குர்ஆன் 3:8

ஆமீன்

கட்டுரையை எடுத்து போடுவது தப்பில்லை எதில் இருந்து யார் எழுதியது என்பதையும் சேர்த்து போடவேண்டும்

காப்பி பேஸ்ட் செய்வதாக அதிரை எக்ஸ்பிரஸ் மீது ஒரு குற்றச்சாட்டு இருந்துக்கொண்ட இருக்கிறது அதன் பங்களிப்பாளர் ஜமாலுதீன் மிராச போன்றவர்கள் காப்பி பேஸ்டை நியாயப்படுத்திதான் பேசுவார்கள்

எல்லாவற்றிருக்கும் மழுப்பல் பதில் தரும் நீங்கள் 20 வருடங்களாக ஒருவரை அதிரை பைத்துல்மாலுக்கு தலைவராக வைத்துள்ளீர்களே அவரை தவிர தலைவர் பதவிக்கு வருவதற்கு ஊரில் யாரும் தகுதியில்லையா?

M.L.A ELECTION YARU JOIN PANEAN PORIYAH....?

TAMIL NADU THOWHEED JAMAATH

ஹக்கீம் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

சட்டமன்ற தேர்தலில் யாரை ஆதரிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள். சமுதாயத்திற்கு பலன் தரும் கோரிக்கைகளை முன்வைத்து, அந்த கோரிக்கைகளை ஏற்கும் கட்சியை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும்.

//எல்லாவற்றிருக்கும் மழுப்பல் பதில் தரும் நீங்கள் 20 வருடங்களாக ஒருவரை அதிரை பைத்துல்மாலுக்கு தலைவராக வைத்துள்ளீர்களே அவரை தவிர தலைவர் பதவிக்கு வருவதற்கு ஊரில் யாரும் தகுதியில்லையா?//

Dear Mr Mohamed Ashraf
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களின் முகவரி மற்றும் செல் போன் நம்பரை இங்கு தாருங்கள். இன்ஷா அல்லாஹ் பைத்துல்மாலில் நிர்வாகிகள் தேர்வு நடைபெறும்போது உங்களுக்கு அழைப்பு கொடுக்கிறோம். அப்போது நீங்கள் வருவீர்களேயானால் கண்டிப்பாக உங்களின் கேள்விக்கு விரிவான விடையை அறிவீர்கள்.

//தங்களின் முகவரி மற்றும் செல் போன் நம்பரை இங்கு தாருங்கள். இன்ஷா அல்லாஹ் பைத்துல்மாலில் நிர்வாகிகள் தேர்வு நடைபெறும்போது உங்களுக்கு அழைப்பு கொடுக்கிறோம். அப்போது நீங்கள் வருவீர்களேயானால் கண்டிப்பாக உங்களின் கேள்விக்கு விரிவான விடையை அறிவீர்கள்.\\

தவ்ஹீத் ஜமாஅத் பற்றி பொதுவில் விமர்சனம் செய்யும் உங்களை போன்றவர்களிடம் கேள்வி கேட்டால் மட்டும் நேரடியாக வருங்கள் விளக்கம் தருகிறோம் என்பது முரணாக தெரியவில்லையா? இதையும் பொதுவில் பேச வேண்டியது தானே

சகோ. நூர் முஹம்மது

நீங்கள் வேறு ஒரு தளத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் பள்ளிக்கு அதிமுக வேட்பாளர் வருகை தந்ததை பற்றி கீழ்காணும் கருத்தை பதிவு செய்து இருந்தீர்கள்.

அது பற்றி நீங்கள் இங்கு வாதிக்கலாமே?

Noor Mohamed
March 16, 2014 at 7:50 PM
ததஜ பள்ளியில் காவல் தெய்வம் அம்மா பற்றி அழகிய பயான் செய்தார் அதிமுக வேட்பாளர். இதில் ததஜ பொறுப்பாளர்கள் தலை நிமிர்ந்து நின்றார்கள். எல்லாம் வல்ல இறைவன் ததஜ தலைவருக்கும் அவர்கள் தொண்டருக்கும் நேரான வழிகாட்ட நாம் அனைவரும் துஆ செய்வோமாக!

//எல்லாவற்றிருக்கும் மழுப்பல் பதில் தரும் நீங்கள் 20 வருடங்களாக ஒருவரை அதிரை பைத்துல்மாலுக்கு தலைவராக வைத்துள்ளீர்களே அவரை தவிர தலைவர் பதவிக்கு வருவதற்கு ஊரில் யாரும் தகுதியில்லையா?//

Dear Mr Mohamed Ashraf
இந்த தளத்திற்கும் மேற்கண்ட கேள்விக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதைப் பற்றி practical proof Mr Ashraf க்கு கொடுக்க வேண்டும் என்பதால் தான் முகவரியையும் செல் நம்பரையும் கேட்டேன். அதை தருவதற்கு Mr AShraf க்கு தைரியம் இல்லை. இவர் எப்படி ஒரு சமுதாயத்திற்காக உழைக்கும் கல்வியாளரை குறைகூறுகிறார்?

Ashraf அவர்களே, கற்றவரும் கல்லாதவரும் சமமாக இருக்கமுடியுமா? மேற்கண்ட கேள்வியை கேட்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

//இவர் எப்படி ஒரு சமுதாயத்திற்காக உழைக்கும் கல்வியாளரை குறைகூறுகிறார்?//

நாங்கள் எந்த தனி நபரையும் குறை கூறவில்லை எங்கள் ஜமாஅத்தில் இரண்டு முறைக்கு மேல் ஒருவர் தலைவராக இருக்கமுடியாது என்ற பைலாவை வைத்துள்ள ஜமாஅத்தை குறை கூறும் நீங்கள் அதிமுகவில் எப்படி நிரந்தர பொதுச்செயலாரோ அதை போல் வைத்துள்ள நீங்கள் எப்படி தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்ச்சனம் செய்கிறீர்கள்

//கற்றவரும் கல்லாதவரும் சமமாக இருக்கமுடியுமா?//

உலகமெங்கும் தமிழ் பேசும் மக்களிடம் இஸ்லாத்தை கொண்டு செல்லும் பணியை செய்துவரும் பீ ஜே யை விமர்ச்சனம் செய்ய உங்களுக்கு தகுதியிருக்கா?

//நாங்கள் எந்த தனி நபரையும் குறை கூறவில்லை எங்கள் ஜமாஅத்தில் இரண்டு முறைக்கு மேல் ஒருவர் தலைவராக இருக்கமுடியாது என்ற பைலாவை வைத்துள்ள ஜமாஅத்தை குறை கூறும் நீங்கள் அதிமுகவில் எப்படி நிரந்தர பொதுச்செயலாரோ அதை போல் வைத்துள்ள நீங்கள் எப்படி தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்ச்சனம் செய்கிறீர்கள்//

கற்றவரும் கல்லாதவரும் சமமாக இருக்கமுடியுமா? அதுபோல பைதுல்மாவும், ததஜ வும் சமமாக இருக்க முடியாது.

This comment has been removed by the author.

//கற்றவரும் கல்லாதவரும் சமமாக இருக்கமுடியுமா? அதுபோல பைதுல்மாவும், ததஜ வும் சமமாக இருக்க முடியாது//

நீங்கள் சொல்லுவது 100 சதவிகிதம் உண்மை தவ்ஹீத் ஜமாஅத்தில் மாநில நிர்வாகிகளாக வருவதற்கு ஒரே தகுதி திறமையும் நேர்மையும் இருந்தால் மாநில நிர்வாகிகளாக வர முடியும் இன்று வரை வாடகை வீடுகளில் இருப்பவர்களும் குறைந்த வருமானத்தில் உள்ளவர்களும் மாநில நிர்வாகிகளாக இருக்கிறார்கள் ஆனால் உங்களது கிலப்பில் (பைத்துல்மாலில்) நிர்வாகிகளாக வருபவர்களுக்கு ஒரே தகுதி பணக்காராக இருக்கவேண்டும்

//உங்களது கிலப்பில் (பைத்துல்மாலில்) நிர்வாகிகளாக வருபவர்களுக்கு ஒரே தகுதி பணக்காராக இருக்கவேண்டும்//

ஆம்! எங்கள் பைத்துல்மால் தலைவர் பேரா. பரகத் அதிரைக்கு வந்த பரகத். பரகத் என்பது எல்லா செல்வங்களும் நிறைந்தவை.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.