ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்கள் குர்ஆனுடன் முரண்பட்டால் அந்த ஹதீஸ்களை ஏற்கக்கூடாது என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லுகிறது. இதே கருத்தை நமக்கு முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் பலர் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள் (அந்த அறிஞர்களின் நிலைபாட்டை அறிய இங்கே சொடுக்கவும்). இதை போன்று முஸ்லிம்கள் வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதையும், ஸஹாபாக்கள் மற்றும் அதற்கு பின்னர் வந்த ஸலஃபுகள் போன்றவர்களை பின்பற்ற கூடாது என்பதையும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்கிறது (ஸஹாபாக்களை ஏன் பின்பற்றக்கூடாது?)
தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்கு பதில் சொல்ல முடியாத ஸலஃபி மத்ஹபினர், பிஜே படித்த இடம் சரியில்லை. எனவே, அவரின் கருத்தை ஏற்கக்கூடாது என்று எல்லோரையும் சிரிக்க வைக்கின்றனர்.
அல்லாஹ், தான் விரும்பியோருக்கு நேர்வழி காட்டுவான் என்பதையே இவர்கள் மறுக்க பார்க்கிறார்கள். எப்படிப்பட்ட வழிகேட்டில் இருப்பவரையும் அல்லாஹ் நாடினால் நேர்வழியில் செலுத்துவான் என்பதை பாமர முஸ்லிம் கூட அறிந்து வைத்துயிருப்பதை இவர்கள் மறுக்கிறார்கள்.
ஒருவர் அறிஞராக வருவதற்கு அவர் மதரஸாவில் படித்து இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. பிஜே தான் எப்படிப்பட்ட மதரஸாவில் பாடம் பயின்றேன் என்பதை பற்றி கூறிப்பிடும் போது, கப்ர் வணங்களிடமும், மத்ஹபுபை நியாயப்படுத்துபவர்களிடமும் தான் பாடம் பயின்றேன் என்கிறார். இதை பிடித்துக்கொண்டு, இந்த குழப்பி கூட்டம், பார்தீர்களா? பிஜே சரியான ஆட்களிடம் படிக்கவில்லை. எனவே, அவர் சொல்லுவதை ஏற்கக்கூடாது என்று உளறுகிறார்கள். தமிழ்நாட்டில் தவ்ஹீதை பிரச்சாரம் செய்பவர்கள் தவறான் மதரஸாக்களில் தான் பாடம் பயின்றனர். பிஜே சரியானவர்களிடம் பாடம் படிக்கவில்லை என்பவர்கள், மற்றவர்களை பற்றி வாய்திறக்கவில்லை. இதிலிருந்தே இவர்களின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.
மதீனா பல்கலைகழகத்தை இந்த ஸலஃபி கூட்டம் அங்கீகரிக்கிறது. இந்த மதீனா பல்கலைகழகத்தில் படித்த சிலர் தர்ஹா வழிபாடு கூடும் என்று கூட கூறுகிறார்கள். ஜாக் என்ற அமைப்பை சார்ந்தவர்களை இவர்கள் வழிகேடர்கள் என்று கூறுகிறார்கள் (வெளிப்படையாக அல்ல, ரகசியமாக.காரணம் வெளிப்படையாக பிஜேவை மட்டும் எதிர்ப்பது ஸலஃபிகளின் வழிமுறை). ஜாக் அமைப்பில் பல மதனிகள் (அதாவது மதீனா பல்கலைகழகத்தில் படித்தவர்கள்) இருக்கிறார்கள். அதாவது, இவர்களின் கருத்துப்படி, நல்ல இடத்தில் படித்த வழிகேடர்கள். ஒருவர் நேர்வழி பெறுவதற்கு அவர் படிக்கும் இடம் ஒரு பொருட்டல்ல என்பதை இந்த குழப்பிகளே கூறுகிறார்கள்.
ஒருவர் படிப்பதை வைத்துதான் நேர்வழி பெறுகிறார் என்றால் மதீனாவில் படித்தவர்களில் பலர் ஸலஃபி கொள்கையை எதிர்ப்பது ஏன்? என்பதை இந்த குழப்பிகள் விளக்க வேண்டும்.
தவ்ஹீதை நிலைநாட்டிய அறிஞர்களான முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், இப்னு தைமிய்யா, அல்பானி போன்றவர்கள் ஹம்பலி மத்ஹபை அடிப்படையாக கொண்டவர்களிடம் தான் பாடம் பயின்றார்கள் என்பது அல்பானியின் போரப்பிள்ளைகளான இந்த ஸலஃபிகளுக்கு தெரியவில்லை. இவர்கள் தாங்களின் ஆய்வுகளினால் தான் இந்த சமுதாயத்திற்கு பல நல்ல விஷயங்களை தந்து சொன்றுள்ளார்கள் என்பது இந்த குழப்பிகளுக்கு புரிய வாய்ப்பில்லை.
இவர்களின் ஷேக் அவர்கள், அல்பானி அவர்களிடம் பாடம் பயின்றவர் என்று சொல்லி வந்தார். பின்னர் (சில விஷயங்களில் சிக்கி கொண்ட பின்) அல்பானியின் சபைகளில் அமைந்து பயன்பெற்றவர் (அதாவது, அல்பானியின் பயானை கேட்டவர்) என்று மாற்றிவிட்டார்கள். இப்படிப்பட்ட, இந்த சேக்கு சில்மி சில கவர்ச்சிகரமான ஃபத்வாகளை வழங்கினார். அதாவது, சுய இன்பம் ஹலால், இஸ்லாத்தில் இன்றும் அடிமை பெண்கள் உண்டு (அதாவது பெற்றோர்களின் அனுமதியுடன் எத்தனை பெண்களையும் அடிமையாக வைத்துக்கொள்ளலாம்) போன்ற ஃபத்வாகளை வழங்கினார். சுய இன்பம் செய்வது ஹராம் என்பதை சூரத்துல் முஃமினூன் அத்தியாத்தின் முதல் பதினோறு (1-11) வசனங்களை படிக்கும் எவரும் புரிந்துகொள்வார். ஆனால், இந்த அறிஞருக்கு (?) இது புரியவில்லை. பலர் கேள்வி கேட்க ஆரம்பித்தவுடன், ஒரு ஸஹாபி தான் இவ்வாறு ஃபத்வா கொடுத்துள்ளார் என்று திசை திருப்பினார்.
அதை போல, அடிமை பெண்கள் இன்றைக்கும் உண்டு என்றார். ஃபத்வா என்ற பெயரில் இவர் உளறுவது வழக்கம் என்பதால், இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. இவரின் உளறலுக்கு ஒருவர் வரிக்கு வரி பதில் கொடுத்து, சில்மியின் மூக்கை உடைத்தார். அவரின் கேள்விகளுக்கு, அல்மானியின் மாணவர் இன்னும் பதில் சொல்ல முடியவில்லை.
இவரிடம் சரக்கு இல்லாத காரணத்தினால் தான், தன்னை பின்பற்றுபவர்களை வைத்து, சில்மிக்கு அந்த அறிஞர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார், இந்த அறிஞர் டிப்லோமா வழங்கியுள்ளார் என்று பாராட்ட வைத்துள்ளார்.
நபி (ஸல்) அவர்களிடம் பாடம் பயின்ற ஸஹாபாக்கள் கூட, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் பாடம் பயின்றவர்கள் என்று கூறி பெருமை கொள்ளவில்லை. அல்பானியிடமும் இன்னும் சில அறிஞர்களிடமும் பாடம் படிப்பதை இவர் பெருமையாக நினைக்கிறார்.
ஷேக் ஷேக் என்று போற்றப்படும் சில்மிக்கு மார்க்க அறிவு மிகவும் குறைவு என்பது இலங்கையில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும். இதனால், இலங்கையில் உள்ள பல கத்துகுட்டிகள் இவரின் மார்க்க விரோத ஃபத்வாகளை பற்றி விவாதிக்க அழைத்தபோது, ஒடி ஒளிந்துவிட்டார்.
இவருக்கு தமிழ் படிக்க தெரியாது, சரிவர தமிழ் பேசவும் முடியாது. பிஜேவின் தமிழாக்கத்தை படிக்காமலே தவறு கண்டுபிடித்தவர்களில் இவரும் ஒருவர். இவரின் பெயரை முழுமையாக இங்கு எழுதினால், அரை பக்கத்திற்கு வரும். இவரின் மார்க்க முரணான விஷயங்கள் தேவைப்பட்டால் பின்னர் விளக்கப்படும்.
ஸலஃபிகளை பின்பற்ற வேண்டும் என்று ஆதாரங்களே இல்லாமல், வளைத்து நெளித்து ஆதாரம் சொல்லும் சகோதரர்கள், கீழ்காணும் இறை வசனத்தின் அடிப்படையில் வஹீயை மட்டும் பின்பற்ற முன்வர வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!
அல்குர்ஆன்: 7:3
ஸஹாபாக்களை பின்பற்றுவது கடமை என்றவர்கள் நமது வாதங்களுக்கு பதில் தர முடியாமல் ஒட்டம் எடுத்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக்கூடியதாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக!
(அல்குர்ஆன் 17:81)
(அல்குர்ஆன் 17:81)
'உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடுதான்'.
(அல்குர்ஆன் 21:18)
(அல்குர்ஆன் 21:18)
தொடர்புடையவைகள்:
* குர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன?
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.