Monday, March 31, 2014

அனைவரும் சேர்ந்து போராடலாமே? போட்டி போட்டுக் கொண்டு ஏன் அருகில் பள்ளிவாசல் கட்டி ஜும்ஆ நடத்த வேண்டும்?

அனைவரும் சேர்ந்து போராடலாமே? போட்டி போட்டுக் கொண்டு ஏன் அருகில் பள்ளிவாசல் கட்டி ஜும்ஆ நடத்த வேண்டும்?


Sunday, March 30, 2014

TNTJ அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு ஏன்?

TNTJ அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு ஏன்?


Saturday, March 29, 2014

மழை தொழுகையின் சட்டங்கள்

மழை தொழுகையின் சட்டங்கள்

மழைத் தொழுகை:

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மழைக்காக வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
  • சூரியன் உதித்தவுடன் தொழ வேண்டும்
  • மேலாடையை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டும்
  • திடலில் தொழ வேண்டும்
  • இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்
  • அதில் இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்

முதல் ரக்அத்தில் கூடுதலாக ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் கூடுதலாக ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும்.

தொழுத பின்னர் இமாம் மிம்பரில் ஏறி சொற்பொழிவு நிகழ்த்தாமல் இறைவனைப் பெருமைப்படுத்தல், பாவமன்னிப்புத் தேடல் போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும். இமாமைப் போன்று மற்றவர்களும் இரு கைகயும் உயர்த்திப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இரு கைகளையும் மற்ற துஆக்களில் உயர்த்துவதைப் போன்று அல்லாமல் புறங்கை வானத்தை நோக்கி இருக்குமாறு கைகளைக் கவிழ்த்து உயர்த்த வேண்டும்.

இவற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:

நபி (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
நூல்கள்: புகாரீ 1012, முஸ்லிம் 1489

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கி துஆச் செய்தார்கள். தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)
நூல்: புகாரீ 1024

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்த போது தம் புறங்கைகளால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1632

நபி (ஸல்) அவர்கள் பணிவாகவும், உள்ளச்சத்துடனும், அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 512, அபூதாவூத் 984, நஸயீ 1491, இப்னுமாஜா 1256, அஹ்மத் 3160

இந்த ஹதீஸில் 'பெருநாள் தொழுகையைப் போல் தொழுவித்தார்கள்' என்று கூறப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகையைப் போல் என்று வர்ணிப்பது பெருநாள் தொழுகையில் கூறப்படும் கூடுதல் தக்பீர்களைத் தான். எனவே பெருநாள் தொழுகையில் கூறுவதைப் போல் முதல் ரக்அத்தில் 7 கூடுதல் தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் 5கூடுதல் தக்பீர்களும் சொல்ல வேண்டும்.

மழைக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை 

அல்லாஹும்மஸ்கினா கைஸன் முகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் கைர ளார்ரின் ஆஜிலன் கைர ஆஜிலின்.

(இறைவா! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய,  செழிப்பான,  உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக!)

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: அபூதாவூத் 988 

அல்லாஹும்மஸ்கினா, அல்லாஹும்மஸ்கினா. அல்லாஹும்மஸ்கினா

(இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு வழங்குவாயாக!)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 1013  

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன்.

(எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் நினைத்ததைச் செய்வான். இறைவா! நீயே அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (நீ) எந்தத் தேவையும் அற்றவன்;நாங்கள் தேவையுடையவர்கள்; எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! நீ எங்களுக்கு இறக்கியதில் வலிமையையும் குறிப்பிட்ட காலத்திற்குப் போதுமானதாகவும் ஆக்கி வைப்பாயாக!)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் 992

இந்த கட்டுரை சகோதரர் எம்.ஐ சுலைமான் அவர்கள் எழுதிய 'நபிவழியில் தொழுகை சட்டங்கள்' என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த நூலை முழுமையாக படிக்க இங்கே செல்லவும்.

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 24) - பிறர் பொருளில் மற்றவருக்கு எவை ஹலால் (அனுமதிக்கப்பட்டது)

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 24) - பிறர் பொருளில் மற்றவருக்கு எவை ஹலால் (அனுமதிக்கப்பட்டது)


இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்.

Friday, March 28, 2014

TNTJ ஷார்ஜா அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

TNTJ ஷார்ஜா அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம் 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..
ஷார்ஜா அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 21.03.2014 வெள்ளிக் கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு 7.00 மணியளவில் ஷார்ஜா சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது.  அதிரை ஷார்ஜா TNTJ கிளையின் பொருப்பாளர் 3-ற்கான அபுதாபியை சேர்ந்த சகோ. M.I. சமீர் (0557013435) அவர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  இதனையடுத்து கடந்த மாத தீர்மானத்தின் செயல்பாடுகள்பற்றி பேசப்பட்டது.  கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல பல ஆலோசனைகளும் வழங்கினார்கள்.

காப்பி பேஸ்ட் குறித்து அற்புத விளக்கம் - திருட்டுக்கு புது விளக்கம்!

காப்பி பேஸ்ட் குறித்து அற்புத விளக்கம் - திருட்டுக்கு புது விளக்கம்!

பிஜேவையும் தவ்ஹீத் ஜமாஅத்தையும்  ஒழிக்க நினைக்கும் ஒருவர் பிஜேவிடம் இருந்து ஆட்டை போட்டு புகழ் தேடலாம் என்பதற்கு ஓர் அற்புத விளக்கத்தை ஒருவர் முன்வைத்து இருப்பதாக ஒரு சகோதரர் கேள்வி எழுப்பியிருந்தார். இது பற்றி விளக்கம் தருவதற்க்காக இந்த ஆக்கத்தை வெளியிடுகிறோம். . காப்பி பேஸ்ட் குறித்து சம்பந்தப்பட்ட சகோதரர் எழுப்பிய கேள்வி படமாக காட்டப்பட்டுள்ளது.

சிலருக்கு பதில் சொல்லவே தேவையில்லை. அவர்கள் வைக்கும் வாதமே அவர்கள் பொய்யர்கள் என்று காட்டும். குர்ஆனும் ஹதீஸூம் அனைவருக்கும் பொதுவானவை. குர்ஆன் வசனத்தையோ அல்லது ஹதீஸ்களையோ எடுத்து வைக்கும் போது அதை காப்பி பேஸ்ட் செய்கிறார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். நாமும் அவ்வாறு சொல்லவில்லை. பிஜே வழிகேடர் என்றும், சமுதாய துரோகி என்றும், மார்க்கத்தில் விளையாடுகிறார் என்றும், நீங்கள் எடுத்துக்காட்டும் கருத்தை எழுதிய அறிஞர் நம்புகிறார், அவ்வாறு எழுகிறார். பிஜேவை வழிகேடர் என்று திருடும் நிருபர்களும் ஃபேஸ்புக் மற்றும் வேறு சில இடங்களிலும் எழுதுகிறார்கள். வழிகேடர் என்று ஒரு புறம் எழுதிக்கொண்டு, தங்களுக்கு புகழ் வேண்டும் என்பதற்காக பிஜேவின் எழுத்துக்களை அப்படியே ஆட்டை போட்டு, அதை தங்களின் கட்டுரை போல காட்டுவது அயோக்கியத்தனம் இல்லையா? இது போன்றவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு என்று திருக்குர்ஆனின் எச்சரிக்கை இவர்களுக்கு இல்லையா? திருக்குர்ஆன் வசனத்தை எடுத்துக்காட்டிய பின்பும் கூட இவர்களுக்கு பயம் வரவில்லை.

எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் - அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு. 


(அல்குர்ஆன் 3:188)

குர்ஆன் ஹதீஸ்களுக்கோ அல்லது பிஜேவின் எழுத்துகளுக்கோ  காப்பிரைட் இல்லை. பிஜேவின் எழுத்துக்களை யார் வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தலாம் (பிஜேவை  அழிக்க நினைப்பவர்கள் கூட). ஆனால், பிஜேவின் எழுத்துக்களை தங்களின் எழுத்தாகவும், பிஜேவின் ஆய்வுகளை தங்களின் ஆய்வாகவும் காட்டுபவர்களை மார்க்க எச்சரிக்கை காட்டி விமர்சனம் செய்கிறோம். நாம் சொன்ன விஷயத்தை மறைத்து, சொல்லாத விஷயத்தை சொன்னதாக சொல்லும் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று வாசகர்கள் புரியட்டும்.

இயேசு இறை மகனா? என்ற பிஜேவின் புத்தகத்தை ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்து ஒருவர் ஜாகிர் நாயக்கிற்கு அனுப்புகிறார். அந்த ஆங்கில எழுத்துக்களை சற்று மாற்றி, தனது பெயரில் அந்த புத்தகத்தை வெளியிட்டுவிட்டார். இதை சகோதரர் பிஜே அவர்கள் ஆன்லைன் பிஜே தளத்தில் குற்றச்சாட்டாக முன்வைத்து அது ஜாகிர் நாயக் அவர்களுக்கும் பலரால் அனுப்பபட்டுவிட்டது, அது பற்றி ஜாகிர் நாயக் வாய் திறக்கவில்லை. இதை பற்றி பேசும் அதிரைக்காரன் அவர்கள், இதற்கு பதில் சொல்லாமல் பழனிபாபா இவ்வாறு பேசியுள்ளார் என்று சொல்லி பிஜே பழனிபாபாவிடம் காப்பி அடித்ததை போல சித்திரம் வரைகிறார். பழனிபாபா என்ன பேசினார், பிஜே என்ன எழுதினார் என்று காட்டி, பிஜே காப்பி அடித்து இருந்தால் அதை எடுத்துக்காட்டலாம். அவ்வாறு செய்யாமல் பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டுகிறார். 

அடுத்து அஹமது தீதாத் அவர்கள் செய்த ஆய்வை பற்றி பேசுகிறார். அஹமது தீதாத் அவர்கள் பைபிளில் தனது ஆழ்ந்த ஆய்வை செய்தவர் என்பதை நாம் மறுக்கவில்லை. அஹமது தீதாத் அவர்களின் ஆய்வின் அடிப்படையில் ஏகத்துவம் உணர்வு போன்ற இதழ்களில் சில கட்டுரைகள் வந்துள்ளது. அந்த கட்டுரைகளில் அஹமது தீதாத் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு இவ்வாறு இவர் எடுத்து வைத்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாரோ செய்த ஆய்வை காட்டி புகழ் தேட வேண்டிய அவசியம் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு இல்லை. ஒரு வேளை எங்களை அறியாமல் அவ்வாறு செய்திருந்தால், சுட்டிக்காட்டப்பட்டால் திருத்திக்கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.

அடுத்து, பிஜேவின் ஆய்வுகள் வித்தியாசமாகவும் புதிதாகவும் இருக்கும் என்று சான்றிதழ் கொடுக்கும் இவர், பிஜே மட்டும் தான் இவ்வாறு சிந்திப்பார் என்று சொல்ல முடியாது என்கிறார். நாமும் அவ்வாறு சொல்லவில்லை. பிஜேவும் அவ்வாறு சொல்லவில்லை. பிஜேவிற்கு மட்டும் தான் சிந்திக்க தெரியும் என்றும் சொல்லவில்லை. ஆனால், பிஜேவின் ஆய்வுகளை பிஜேவை கடுமையாக எதிர்க்கும் அதிரைக்காரன் போன்றவர்கள் கூட படிக்கும் அளவுக்கு அவரின் ஆய்வு உள்ளது என்பதை பிஜேவை எதிர்ப்பவர்களே சொல்லுவது, பிஜே அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த கண்ணியம். அடுத்து, அஹமது தீதாத் பைபிளில் 50 ஆயிரம் தவறுகள் உள்ளது என்று கண்டுபிடித்துள்ளார், இந்த 50 ஆயிரம் அல்லாத தவறுகளையா பிஜே கண்டுபிடித்து விட்டார் என்று கேட்கிறார். இவ்வாறு சொல்லக்கூடியவர் இதற்கான ஆதாரத்தை எடுத்து வைத்து கேட்க வேண்டும். அஹமது தீதாத் அவர்களின் வாதங்களுக்கு கூட சில கிறிஸ்தவ பாதிரிகள் பதில் தந்துள்ளார்கள். பிஜே அவர்களின் புத்தகம் அஹமது தீதாத் அவர்களின் வாதத்தில்  இருந்து வித்தியாசப்பட்டது என்று நிருபிக்க நாம் தயார்.

பிஜே அவர்கள் கிறிஸ்தவம் குறித்து எழுதிய எந்த நூலுக்கும் வாதத்திற்கும் கிறிஸ்தவ பாதிரிகள் வாய் திறக்க முடியாத அளவுக்கு உள்ளது. அல்ஹம்துலில்லாஹ். பிஜே அவர்களின் கிறிஸ்தவம் குறித்த புத்தகம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு தவ்ஹீத் ஜமாஅத்திடம் விவாதம் செய்ய வந்த பல்வேறு கிறிஸ்தவ தரப்பினரின் வாதங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

அஹமது தீதாத் மற்றும் ஜாகிர் நாயக் போன்றவர்கள் குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்ற கொள்கையில் இல்லாத காரணத்தினால், சில இடங்களில் பதில் சொல்ல முடியாமல் சிக்கியும் உள்ளார்கள்.

அடுத்தாக, இந்த சகோதரர் கேட்கும் கேள்வி புகாரி மற்றும் முஸ்லிம் தமிழாக்கத்தை ஆன்லைன் பிஜே இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதுவும் காப்பி பேஸ்ட் தானே என்று கேட்டுள்ளார்கள். ஒரு விஷயத்தை பற்றி கேள்வி எழுப்பும் முன் அல்லது அவதூறு செய்யும் முன் அது பற்றி தீர விசாரித்துவிட்டு செய்ய வேண்டும். ரஹ்மத் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட புகாரி தமிழாககத்தின் முதல் பாகத்தை எந்த விதமான கூலியும் வாங்காமல் மொழிபெயர்த்து கொடுத்தது சகோதரர் பிஜே அவர்கள் தான். ஆன்லைன் பிஜே இணையதளத்தில் ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்ட புகாரி மற்றும் முஸ்லிம் தமிழாக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இது திருடும் நிருபர்களை போல ரஹ்மத் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பை பிஜே தனது மொழிபெயர்ப்பாக காட்டவில்லை (பிஜே அவர்கள் மொழியாக்கம் செய்த புகாரியின் முதல் பாகம் உள்பட). ரஹ்மத் பதிப்பகத்தின் அனுமதியுடன் தான் பிஜே அவர்கள் புகாரி மற்றும் முஸ்லிம் தமிழாக்கத்தை ஆன்லைன் பிஜேவில் வெளியிட்டுள்ளார். அனுமதி மட்டும் போதும் என்று இல்லாமல், ஆன்லைன் பிஜேவில் உள்ள புகாரி முஸ்லிம் தமிழாக்கம் ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டது என்று குறிப்பிட்டு, தமிழ் உலகில் நபி (ஸல்) அவர்கள் பொன்மொழிகளை மொழியாக்கத்தை அறிமுகம் செய்த ரஹ்மத் நிறுவனத்திற்கு துஆ செய்யுங்கள் என்று வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.

ஆன்லைன் பீஜே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புகாரி முஸ்லிம் மொழிபெயர்ப்பின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம்:
ஆன்லைன் பிஜேவில் புகாரி முஸ்லிம் தமிழாக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பகுதியின் லிங்க்.


புகாரி தமிழாக்கத்தில் தனது பங்களிப்பு இருந்த போதும், அடுத்தவர்கள் வெளியிட்ட ஆக்கத்தை நமது ஆக்கமாக காட்டக்கூடாது என்ற திருக்குர்ஆனின் போதனைக்கு ஏற்ப நடந்துள்ளார். என்ன நடந்தது என்றே தெரியாமல் குற்றம் சுமத்துகிறார்கள்.

1435 ஆண்டுகளுக்கு முன்னர் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் எல்லாத்தையும் காப்பி பேஸ்ட் தான் செய்ய முடியுமாம் (மார்க்கம் முழுமைப்படுத்தபட்டு 1425 ஆண்டுகள் ஆகிறது, ஹிஜிரி ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த ஆண்டு முதல் ஹிஜிரி ஆண்டு துவங்கிறது. ஹிஜ்ரத்திற்கு பின்னர் மதினாவில் 10 ஆண்டுகள் நபி (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். எனவே, மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு 1425 ஆண்டு ஆகிறது என்பது தான் சரி - இதை விளக்கத்திற்காக சொல்லுகிறோம் . இந்த  கருத்தை வைத்தவரை குறை சொல்லுவதற்கு அல்ல). 1425 ஆண்டுகளுக்கு முன்னர் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கம் என்பது சரி, முழுமைபடுத்த பட்ட மார்க்கத்தில் குரானையோ ,ஹதீசையோ ஒருவர் வெளியிடும்போது யாரும் உரிமைகொண்டாட முடியாது என்பதற்கும் குரான் ,ஹதீஸை ஆய்வு பண்ணி ஒருவர் எழுதி இருப்பதை வேறு ஒருவர் அப்படியே எடுத்து காப்பி பேஸ்ட் செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை புரியாமல் இருக்கிறார்களா என்பதை யோசிக்க வேண்டியுள்ளது  பிஜே வழிகேடர் என்று சொல்லிக்கொண்டே காப்பி அடிப்பது எவ்வாறு சரி? என்பதையாவது யோசியுங்கள்

இந்த அற்புத கருத்தை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த 'கண்கள் இரண்டும்' கட்டுரையின் ஒட்டுரையாளர் அற்புதமான விளக்கம் என்கிறார். பிஜேவை தக்லீத் செய்கிறார்கள் என்று நம்மை குற்றம்சாட்டிய 'கண்கள் இரண்டும்' ஒட்டுரையாளர் பிஜேவின் ஆய்வுகளை தொடர் 26 மற்றும் 27 முழுமையாக காப்பி அடித்து தக்லீத் செய்தது ஏன்? பிஜேவை தக்லீத் செய்வது நீங்கள் தான் என்று இப்போது தெளிவாகிறேதே! கண்கள் இரண்டும் கட்டுரையின் ஒட்டுரையாளர் நம்மை தக்லீத்வாதிகள் என்று எழுதியதற்கு மேலும் சில விளக்கங்கள் இங்கே.

காப்பி பேஸ்ட் பற்றி வேறு ஒருவர் சொல்லும் போது பிஜேவின் ஆக்கத்தை காப்பி அடித்தாலும் பிஜேவிற்கு நன்மை கிடைக்குமல்லவா? என்கிறார்கள்.  பிஜேவிற்கு நன்மை கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பிஜேவின் ஆய்வை உங்களின் ஆய்வாக காட்டி பெருமையடிக்கும் உங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்பதை கீழ்காணும் திருமறை வசனம் (அல்குர்ஆன் 3:188) சொல்லுகிறதே! உங்களை தண்டனையில் இருந்து காப்பாற்ற தான் நாங்கள் இப்படி போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.

அதுவும் பிஜேவை எல்லாரும் தக்லீத் செய்கிறார்கள், நாங்கள் யாரையும் தக்லீத் செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டு பிஜேவின் ஆய்வை அப்படியே தக்லீத் (கண்மூடி பின்பற்றுதல்) செய்வதால், நயவஞ்சகத்தனத்திற்க்கான இன்னும் அதிகமாக தண்டனை கிடைக்கும்.

Thursday, March 27, 2014

நரக நெருப்புக்கு ஆள் சேர்க்கும் தமுமுக!

நரக நெருப்புக்கு ஆள் சேர்க்கும் தமுமுக!

மக்களை நரகப்படுகுழிக்கு முன்னோற்றும் கழகக்காரர்கள்:

ஏகத்துவம் எங்களது உயிர் மூச்சு என்று சொன்ன கொள்கை (?) குன்றுகளின் இன்றைய நிலையை பாரீர்!

தமிழக முஸ்லிம்களை முன்னோற்றும் கழகம் என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால், இதுபோன்ற இணைவைப்பிற்கு தமிழக முஸ்லிம்களை அழைத்து, நரகத்திற்கு முன்னோற்றும் கழகமாகத்தான் செயல்படுகின்றனர்.
நாங்கள் தாங்க உண்மையான தவ்ஹீத், எப்படி தவ்ஹீத் பிரச்சாரம் செய்றோம் பார்த்தீங்களா?

Tuesday, March 25, 2014

அ தி மு கவிற்கு ஆதரவு ஏன்?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை சார்பாக இன்று (25.3.14) இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளிவாசல் அருகில் தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவிற்கு ஆதரவு ஏன் என்பதை விளக்கி தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் கிளைச் செயலாளர் அன்வர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் அதிகமான மக்கள் கலந்துக்கொண்டார்கள்








அ தி மு கவிற்கு ஆதரவு ஏன்? தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அ தி மு கவிற்கு ஆதரவு ஏன்? என்ற தலைப்பில் தெருமுனைப்பிரச்சாரம் இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு அதிரை தக்வா பள்ளி அருகில் நடைபெறும் இதில் அனைவரும் கலந்துக்கொள்ளுங்கள் உரை அன்வர் அலி (கிளை செயலாளர்)

மாவட்டட செயல்வீரர்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் களப்பணியாற்றுவது குறித்த செயல் வீரர்கள் கூட்டம் நேற்று பட்டுக்கோட்டை பிரியா திருமண மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்று இதில் மாநில செயலாளர்கள் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அப்துர் ரஹ்மான் மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டார்கள் 

சிறப்பு அழைப்பாளராக மாநில அமைச்சர் வைத்திலிங்கம் அவர்கள் கலந்துக்கொண்டார்கள்




Saturday, March 22, 2014

தரகர் தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்

அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நேற்று 21.3.14 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தரகர் தெரு சகோதரர் ஜம்முன் அலி வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் 40க்கு அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


Wednesday, March 19, 2014

அதிமுகவின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் தவ்ஹீத் பள்ளிக்கு வருகை - விமர்சன விளக்கம்

அதிமுகவின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் தவ்ஹீத் பள்ளிக்கு வருகை - விமர்சன விளக்கம்

அதிமுகவின் தஞ்சை தொகுதி வேட்பாளர் பரசுராமன் அவர்கள் நமது மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிக்கு கடந்த 12 ஆம் தேதி வருகை தந்தார். இது குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவற்றிற்கு விளக்கம் தருவது எங்களின் கடமை என்ற அடிப்படையில் அது பற்றி எழுந்த விமர்சனங்களுக்கு இங்கே பதில் தருகிறோம்.

இது பற்றி வந்த முதாவது விமர்சனம், மாற்று மதத்தினர் பள்ளிவாசலுக்கு வரலாமா என்பதாகும். மாற்று மதத்தினர் பள்ளிக்கு வரலாம், அவ்வாறு நபி (ஸல்) காலத்தில் வந்துள்ளார்கள். மாற்று மதத்தினர் பள்ளியில் இருந்து குர்ஆன் ஒதப்படுவதை செவியேற்றுள்ளார்கள். மாற்று மதத்தினர் சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாதவர்கள் இமாம் நின்று தொழ வைக்கும் இடத்திற்கு வரலாமா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மாற்றுமதத்தினரும் இவ்வாறு தானே தூய்மையற்றவர்களாக இருந்து இருப்பார்கள். மாற்று மதத்தினர் பள்ளிக்கு வரலாம் என்ற அனுமதி ஹதீஸ்களில் உள்ளது, பள்ளியில் இந்த இடத்திற்கு வரலாம் இந்த இடத்திற்கு வரக்கூடாது என்ற எந்த தடையும் இல்லாத போது இமாம் இருக்கும் இடத்திற்கு வருவது சரியா? என்று கேள்வி எழுப்புவது அர்த்தமற்றது. இது பற்றி முழுமையாக இங்கே விளக்கப்பட்டுள்ளது.

அடுத்து, தவ்ஹீத் பள்ளிக்கு வருகை தந்த அதிமுகவின் வேட்பாளர் தவ்ஹீத் பள்ளியில் வைத்து, 'இதயதெய்வம்' என்று பேட்டி கொடுத்தார் என்ற ஒரு தவறான தகவலை சிலர் என்ன நடந்தது என்று தெரியாமல் பரப்பியுள்ளார்கள். தவ்ஹீத் பள்ளிக்கு ஆதரவு கேட்டு வந்த அதிமுகவின் வேட்பாளருக்கு, கூளை கும்பிடு போடாமல், அவருக்கு என்று தனி மரியாதை செய்யாமல், தரையில் அமர வைத்து, அந்த வேட்பாளருக்கு 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற புத்தக்தையும் வழங்கி அழைப்புப்பணி செய்யப்பட்டது. தவ்ஹீத் பள்ளியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, அதிமுகவின் வேட்பாளர் 'இதயதெய்வம்' போன்ற எந்த ஒரு வார்த்தையும் பயன்படுத்தவில்லை. ஒரு வேளை அது போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருந்தாலும், அது அவரின் கொள்கை, அவ்வாறு பேசுவது தவறு என்று சூட்டிக்காட்டியிருப்போம். தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளுடன் பேசிவிட்டு, பள்ளியை விட்டு வெளியே வந்த அதிமுக வேட்பாளரிடம், அதிரை நியூஸ் இணையதளத்தை சார்ந்தவர்கள் பேட்டி எடுக்கும் போது தான், 'தமிழகத்தின் காவல் தெய்வம்' என்று அதிமுக வேட்பாளர் குறிப்பிட்டார். சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வரும் போது எடுக்கப்பட்ட பேட்டி வீடியோவில் தவ்ஹீத் ஜமாஅத்தின் சில நிர்வாகிகளும் தென்படுகிறார்கள். இது தான் நடந்த சம்பவம். இவ்வாறு தான் நடந்தது என்பதை அதிரை நியூஸ் இணையதளமும் சம்பந்தப்பட்ட ஆக்கத்தில் தெரிவித்துள்ளது.

கண்டதையும் தெய்வம் என்ற நினைக்கும் ஒருவர் எங்கும் அதை சொல்லுவார், தவ்ஹீத் ஜமாஅத்திடம் பேசும் போது இவ்வாறு சொன்னால் அதை நாம் கண்டிப்போம். அதிரையில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிஜே அவர்கள் பேசும் போது, அந்த மேடையில் ஸ்டாலினும் வாக்கு கேட்டு வந்தார், அந்த மேடையில் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்த வேண்டும் திமுகவினர் எவ்வளவோ கெஞ்சினர், தவ்ஹீத் ஜமாஅத் அதை அனுமதிக்கவில்லை. வெடி சத்தம் கூட எங்களுக்கு கேட்கக்கூடாது, வெடி கூட வெடிக்கக்கூடாது என்று கட்டளை போட்டது தவ்ஹீத் ஜமாஅத். இதை திமுகவினர் ஏற்றுக்கொண்டனர்.

அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறோம் என்று கிளம்பிய தவ்ஹீத் (?) பேசிய தமுமுகவினரே, 'வாக்கள பெருமக்களே  வணக்கம்' என்று நோட்டிஸ் அடிக்கும் போது, கண்டதும் தெய்வம் என்று நம்பும் அந்த வேட்பாளரிடம் எதை எதிர்பார்க்க முடியும். தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜூம்ஆ மேடையில் வந்து அதிமுக வேட்பாளர் உரையாற்றி, அதில் 'தமிழகத்தின் காவல் தெய்வம்' என்று சொன்னதை போன்று பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

தவ்ஹீத் பள்ளிக்கு வெளியே அதிரை நியூஸ் தளத்தினர் பேட்டி எடுக்கும் போது சொன்ன இந்த வார்த்தையை, தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் பேசும் போது அதிமுக வேட்பாளர் குறிப்பிட்டதை போன்று கதையை உருவாக்கி பரப்புகிறார்கள். இவ்வாறு சொல்லக்கூடியவர்கள் இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் அல்ல. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக அவதூறு சொல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றால், அதற்காக எதையும் செய்வேன் என்ற கொள்கையில் உள்ளவர்களின் அவதூறு தான் இது.


அவதூறு சுமத்துபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும். அதிமுகவை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கிறது என்றால், அதிமுகவினர் கோவிலுக்கு சென்றால் கூட விமர்சனம்  செய்ய ஆட்கள் நிறைய உண்டு. அடுத்தாக, தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரிக்கிறது, திமுகவை சார்ந்த பேரூராட்சித் தலைவருடன் நடுத்தெருவில் தனி அமர்வு என்றும் சந்தேகத்தை ஒருவர் கிழப்புகிறார். நட்பு முறையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகியின் கடையில் அமர்ந்து  பேசிக்கொண்டு இருந்த பேரூராட்சித் தலைவரையும் தவ்ஹீத் ஜமாஅத்தை ஏதே கள்ள ஒப்பந்தம் போடுவதை போல அல்லாஹ்வின் அச்சம் இல்லாமல் அவதூறு செய்கிறார்கள். நடுத்தெருவை சார்ந்த பேருராட்சி தலைவர், நடுத்தெருவில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்தவரின் கடையில் அமர்ந்து பேசுவது ஏதே புதிதாக நடக்கும் விஷயம் அல்ல. தனது மானம் போனாலும், தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அவதூறு பரப்புவோம் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு நல்ல புத்தி வர பிரத்திப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

நூல்: முஸ்லிம் 6


இந்த விமர்சனத்தை முதலில் எடுத்து வைத்தவரின் தவ்ஹீத் (?) கொள்கையே கொடி கட்டி பறக்கிறது. கவிஞரை புகழ்ந்து எழுதும் போது. இறையருட்கவிமணி (இறையருள் பெரும் கவிஞர்) என்று எழுதிய தவ்பா செய்த தவ்ஹீத்வாதி தன்னையும் சீர் தூக்கி பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் நாளை நடப்பதை எல்லாம் அறிய கூடியவர் என்று வரக்கூடிய மௌலூது வரிகளின் இணைவைப்பு உள்ளது என்று பிரச்சாரம் செய்தவர்கள், இன்று கவிஞருக்கு இறையருள் வருகிறது என்று எழுதும் அளவுக்கு வந்து விட்டோமே என்று எண்ணிப்பார்க்க வேண்டும். ஹஜ்க்கு சென்று வரக்கூடியரை 'ஹாஜி' என்றும், 'அல்ஹாஜ்' என்றும் எழுதுபவர்களை விமர்சனம் செய்தோமே! இன்று அதை நாமே செய்கிறோமே, அதுவும் அக்மார்க் தவ்ஹீத் நாங்கள் என்று சொல்லிக்கொண்டே இவ்வாறு செய்கிறோமே என்று சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். மௌலூது ஒதும் இமாம், இணைவைக்கும் இமாம் இவர்களை பின்பற்றி தொழ கூடாது என்று திருக்குர்ஆன் வசனத்தை எடுத்துக்காட்டி சொன்னாமே, இன்று நாம் இணைவைக்கும் இமாம் மற்றும் மௌலூது ஓதும் இமாம் இவர்களை பின்பற்றி தொழுகிறோமே! என்று எண்ணிப்பார்க்க வேண்டும். இதையெல்லாம் நாம் விமர்சனம் செய்வதற்காக சொல்லவில்லை. மாறாக, இது போன்ற வழிகேடுகளை விட்டு மீண்டு வாருங்கள் என்று காட்டவே இவ்வாறு சொல்லுகிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து கொண்டு தான் தவ்ஹீத்வாதியாக இருக்க வேண்டும் என்பதல்ல, தவ்ஹீத் ஜமாஅத்தை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், தவ்ஹீத் கொள்கையில் நீங்கள் உறுதியாக இருக்கலாம், உண்மையான கொள்கையை விட்டுவிடுவது மறுமையில் என்ன பலனை தரும்?? சிந்தித்து செயல்படுவது நல்லது என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல். 


அல்குர்ஆன் 3:8

புகைப்பட உதவி: அதிரை நியூஸ்

சிவசேனாவிற்கு ஆதரவு கடிதம் எழுதிய அதிமுகவிற்கு ஆதரவா?

சிவசேனாவிற்கு ஆதரவு கடிதம் எழுதிய அதிமுகவிற்கு ஆதரவா?


மாற்று மதத்தினர் பள்ளிவாசலுக்குள் வரலாமா?

மாற்று மதத்தினர் பள்ளிவாசலுக்குள் வரலாமா?

முஸ்லிமல்லாதவர்கள் பள்ளிவாசலுக்குள் வரக்கூடாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் உள்ளது. இது தவறான கருத்தாகும். குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் இதைத் தெளிவாக அனுமதிக்கின்றன

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பள்ளியான மஸ்ஜிதுந் நபவீயில் முஸ்லிமல்லாதவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்க வைத்தார்கள். இதைப் பின்வரும் செய்திகளின் மூலம் அறியலாம்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கிக் குதிரைப்படை பிரிவொன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த (யமாமா வாசிகளின் தலைவரான) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் (மக்கள்) கட்டிவைத்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்த (நாட்களில் முன்றாம் நாளின்) போது, "ஸுமாவை அவிழ்த்து விட்டு விடுங்கள்'' என்று கூறினார்கள். அவர் பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமானன பேரீச்சந்தோட்டத்திற்குச் சென்று குளித்தார். பிறகு பள்ளீவாசலுக்குள் வந்து "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி மொழிகிறேன்'' என்றார்.

நூல்: புகாரி (462)

இணைவைப்புக் கொள்கையில் இருந்த ஸுமாமா பின் உஸால் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நாட்கள் பள்ளிவாசலில் தான் தங்க வைத்துள்ளார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் "அத்தூர்' எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். "(படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்து விட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; (உண்மை என்னவெனில்,) இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. உங்கள் இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துபவர்களா?'' எனும் இந்த (52:35-37ஆகிய) வசனங்களை நபி அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்துவிடுமளவுக்குப் போய்விட்டது.

நூல் : புகாரி (4854)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் மஃக்ரிப் தொழுகை நடத்தியபோது அங்கு அவர்கள் ஓதியதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் செவியேற்றார்கள். இது மேற்கண்ட புகாரியின் அறிவிப்பில் உள்ளது

இந்தச் சமயத்தில் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் முஸ்லிமாக இருக்கவில்லை. இணைவைப்புக் கொள்கையில் இருந்தார்கள். இது கூடுதலாக முஸ்னது ஹுமைதி என்ற நூலில் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது

நான் இணைவைப்பவனாக இருக்கும் நிலையில் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றேன்.

நூல் : முஸ்னது ஹுமைதி

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இணைவைப்பவர்கள் பள்ளிக்குள் வரும் நிலை இருந்துள்ளது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்யாமல் அனுமதித்து இருந்தார்கள்.

சகீஃப் குலத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாக பேசி இஸ்லாத்தில் இணைந்து கொள்வதற்காக வந்தனர். இன்னும் இஸ்லாத்தை ஏற்றிராத நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களை பள்ளிவாசலில் தங்க வைத்தார்கள்.

நுஃமான் பின் சாலிம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

சகீஃப் கூட்டதாருடன் நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வந்தேன். ஒரு கூடாரத்தில் நான் அவர்களுடன் உறங்கினேன்.

நூல் : நஸாயீ (3917)

மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலுக்கு மட்டுமே இணைவைப்பாளர்கள் வரக்கூடாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது.

அல்குர்ஆன் (9 : 28)

இதிலிருந்து மஸ்ஜிதுல் ஹராம் அல்லாத மற்ற எந்தப் பள்ளிகளானாலும் இணைவைப்பாளர்கள் உள்ளே செல்வது குற்றமில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

முஸ்லிம் அல்லாதவர்கள் பள்ளிவாசலுக்குள் வரும் போது நல்ல விசயங்களைப் பார்க்கும் வாய்ப்பும் நல்ல விசயங்களைக் கேட்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கின்றது. இதன் மூலம் அவர்கள் முஸ்லிமாகவும் மாறலாம். எனவே மார்க்கம் அனுமதித்த இந்தக் காரியத்தை யாரும் தடை செய்யக் கூடாது

மேலும் விபரத்துக்கு இதையும் பார்க்கவும்.

Monday, March 17, 2014

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு - திருடும் நிருபர்களின் உளறல்களும் உண்மைகளும்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வீரியமிக்க போராட்டங்களின் மூலம் சமுதாயத்திற்கு தேவையான கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து, அதை பெற்று தரும் வரை இடைவிடாது போராடும் அமைப்பு. தவ்ஹீத் ஜமாஅத்தின் நேர்மையான செயல்பாடுகளால், தவ்ஹீத் ஜமாஅத்தை அழிக்க நினைப்பவர்கள் கூட தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். 

தவ்ஹீத் ஜமாஅத் என்பது யாருக்கும் விலை போகாத அமைப்பு. இதை அதன் எதிரிகள் கூட விளங்கி வைத்துள்ளார்கள். தவ்ஹீத் ஜமாஅத் விலைபோகாத காரணத்தினால் தான், இட ஒதுக்கீட்டில் துரோகம் செய்த அதிமுக அரசை கண்டித்து ஒரு பெரும் போராட்டத்தை நடத்தியது (அதிமுக கூட்டணயில் இருந்த மமக, தமுமுக அதிமுக அரசு துரோகம் செய்யவில்லை என்று சப்பை கட்டுகட்டி கேவலப்பட்டு போனது). கலைஞர் இட ஒதுக்கீடு வழங்கிய பின், திமுகவை ஆதரித்த தவ்ஹீத் ஜமாஅத், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டில் துரோகம் நடந்த போது, திமுக அரசிற்கு எதிராக போராட்டத்தை நடத்தியது (அப்போது திமுக கூட்டணியில் இருந்த தமுமுக, ரோஸ்டர் என்ற பெயரில் துரோகத்திற்கு சப்பை கட்டுகட்டி, பின்னர் கேவலப்பட்டு போனது). தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் கொடுக்கும் ஆதரவு தேர்தலுக்கு மட்டும் தான், தேர்தலில் ஆதரவு கொடுத்துவிட்டால் அது அடிமை சாசனம் அல்ல. தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும் கட்சி, சமுதாயத்திற்கு துரோகம் செய்தால், அதற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் பொங்கி எழும். 

தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம்களுக்கு நடைமுறையிலுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கையை வைத்து, அதற்காக தமிழகத்தின் நான்கு நகரங்களில் சிறை செல்லும் போராட்டத்தை நடத்தியது. இதில் திரண்ட கூட்டம் அரசாங்கத்தை கதி கலங்க வைத்தது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தந்தால் அதிமுக அரசிற்கு ஆதரவு என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. இந்த நிலையில் , கமிஷன் அமைத்து அதிகரித்து தருவது தான் பாதுகாப்பானது என்று சட்ட நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில், கமிஷன் அமைத்து அதிகரித்து தாருங்கள் என்ற கோரிக்கை தவ்ஹீத் ஜமாஅத் அரசிற்கு முன்வைத்தது, அதை அதிமுக அரசு ஏற்றுக்கொண்டு கமிஷன் அமைத்துள்ளது (இது குறித்து முழுமையாக இங்கே விளக்கப்பட்டுள்ளது). கமிஷன் இல்லாமல் இட ஒதுக்கீட்டை அதிகரித்தால் நீதிமன்றத்தில் தடை வாங்கும் சாத்தியமும் உள்ளது என்பது தெரிய வந்ததால் இவ்வாறு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை வைத்தது

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து நடுநிலைவாதிகள் என்ற பெயரில் இருக்கும் சில நடிகர்கள், உப்பு சப்பில்லாத கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அத்தனை விமர்சனங்களுக்கும் இங்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. 

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தகம் மற்றும் ஆக்கங்களில் இருந்து திருடி (காப்பி பேஸ்ட் செய்து). தங்களின் ஆக்கம் போல காட்டி புகழ் தேட திருடும் நிருபர்கள் சில விமர்சனங்களை செய்துள்ளார்கள். நடுநிலை வேடத்தில் இவர்கள் தமுமுகவின் ஏஜண்டுகளாக இவர்கள் உள்ளார்கள் என்பதை நாம் முன்னரே சொல்லியிருந்தோம். இதற்கு ஆதாரமாக இவர்களின் சமீபத்தில் நடந்த சம்பவம் சான்றாக உள்ளது. தமுமுகவின் ஜால்ரா எம்எல்ஏ ஒருவர் முத்துப்பேட்டைக்கு வந்தபோது, இட ஒதுக்கீடு குறித்து உளறிய காப்பி பேஸ்ட் நிருபர், பேட்டி எடுக்கிறேன் என்று சென்று தாங்கள் யார் என்று காட்டினார்கள்.

தமுமுகவின் அரசியல் கட்சியான ம.ம கட்சி, எதை மக்களிடம் சொல்லி அரசியல் கட்சி ஆரம்பித்தது, கடந்த தேர்தலில் அம்மாவை எப்படி புகழ்ந்து, தற்போது அய்யாவை எப்படி புகழ்கிறது என்பது குறித்தோ, தமுமுக சமுதாயத்திற்கு செய்த துரோகங்கள் குறித்தோ அல்லது முஸ்லிம்களை அழித்த விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் ம.ம கட்சி குறித்தோ எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்காத திருடும் நிருபர்கள். தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பொய்யான பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள். 

தமுமுகவை நாங்களும் எதிர்க்கிறோம் என்று காட்ட தமுமுக குறித்து புகழ்ந்து நாலு வரிகள் எழுதிவிட்டு, இவர்களை நடுநிலைவாதிகள் என்று காட்ட முற்பட்டு அதை செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டுள்ளார்கள். தமுமுகவின் தடுமாற்றங்கள் குறித்து இவர்கள் எதிர்ப்பது உண்மையென்றால், மோடியின் சகோதரியை அடுத்த பிரதமர் என்று சொன்ன தமுமுகவை எதிர்த்தார்களா? பிஜேபியின் இல. கணேசனுடன் கைபிடித்துக் கொண்டு தமுமுக ஜவாஹிருல்லாஹ் போராட்டம் நடத்திய போது எங்கே போனார்கள்?

நான் (ஜவாஹிருல்லாஹ்) பிஜேபிக்காரனுடன் கைகோர்த்து நின்றாலும் எந்த நடுநிலைவாதியும் என்னை கேள்வி கேட்க முடியாது (மாட்டார்கள்), விமர்சனம் செய்ய முடியாது (மாட்டார்கள்). பிஜேபிகாரனுடன் கைகோர்க்கும் ம.ம கட்சியின் மாமாவிற்கு முஸ்லிம்களின் ஓட்டு தேவையா? 
இராமேஸ்வரத்தை புனித தளமாக மாற்றி அங்கு பள்ளிவாசல் கூட கட்ட முடியாமல், பாங்கு ஒளி கூட ஒளிக்க முடியாமல் செய்ய வேண்டும் (என்பது கூட தெரியாமல்) கோரிக்கை வைத்த ஜவாஹிருல்லாவை எதிர்த்து எழுதினார்களா? பிஜேபி வானதி சீனிவாசனோடு பக்கத்தில் நின்று கேக் வேட்டிய தமுமுகவின் ஹாஜா கனியை எதிர்த்து எழுதியது உண்டா?

தமுமுகவின் எம்எல்ஏ அஸ்லம் பாஷா அவர்கள் பூஜை புணஸ்காரங்களுடன் ரிப்பன் வெட்டி திறப்பு விழா (இது வேறு பூஜை) செய்ததை இவர்கள் கண்டித்தார்களா?

அரசியல் சாக்கடையில் இணைவைப்பில் திளைக்கும் தமுமுக - மமகவினர்!
அதிரையின் முஹம்மது குட்டி ஆலிம்  பாவம், அவர் தமுமுகவில் சேர்ந்து இருந்தால், திருடும் நிருபர்கள் 'பூமி பூஜை செய்கிறார்' என்று விமர்சனம் செய்து இருக்க மாட்டார்கள்
மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி இஸ்லாத்தின் சட்டத்தை ஒழிக்க நினைக்கும் ஜவாஹிருல்லாவை இவர்கள் கண்டித்தது உண்டா? இதுவெல்லாம் இவர்கள் தமுமுகவின் ஏஜேண்ட்டுகள் என்பதற்கு ஆதாரம்.(இப்போதும் கூட கருணாநிதி தூக்கு தண்டனையை ஒழிப்போம் என்று தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார்).


அதிரையின் முஹம்மது குட்டி அவர்கள் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட போது, பூமி பூஜை செய்யும் முஹம்மது குட்டி என்று கட்டுரை போட்ட இவர்கள், தமுமுகவின் மூத்த தலைவரும் அம்மா ஜால்ரா புகழுமான ஜவாஹிருல்லாஹ் சந்தனம் தடவி அடிக்கல் நாட்டு விழா செய்த போது, பூமி பூஜை செய்யும் ஜவாஹிருல்லாஹ் என்று ஏன் எழுதவில்லை? இவர்கள் இதை செய்யாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று முஹம்மது குட்டியை தாக்கி எழுதினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். இரண்டு, இவர்கள் தமுமுகவின் ஏஜேண்ட்டுகள். கொள்கை அடிப்படையில் எதிர்க்க கூடியவர்களாக இருந்ததால், இவ்வாறு தவறு செய்யும் அனைவரையும் எதிர்க்க வேண்டும். மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பெண் குடம் என்ற பலமொழிக்கு ஒப்பாக உள்ளது இவர்களின் வேடம். இவர்களுக்கு கொள்கை கிடையாது என்பதற்கு இது ஒரு சான்று.

திருட்டு நிருபர் பதிப்பகம் என்ற பெயரில் உளறிய முதல் உளறல், 7 சதவீதமாக இட ஒதுக்கீட்டை உயர்த்தினால் தான் ஆதரவு என்று சொன்ன ததஜ, எப்படி கமிஷன் போட்டவுடன் அதிமுகவை ஆதரிக்கலாம் என்பதாகும். இதற்கான பதில் எளிமையானது கமிஷன் அமைத்து ஆய்வு செய்து, இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவது தான் பாதுகாப்பானது என்பதல் தவ்ஹீத் ஜமாஅத் இதையே கடைசி நேரத்தில் கோரிக்கையாக வைத்தது. இது பற்றி இங்கு விபரமாக விளக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டிற்காக தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்திய போது, காரைக்கால் சில்லரை ஒருவனின் வாந்தியை தங்களின் மேலே ஊற்றி, என்னா மனம் என்றும், தவ்ஹீத் ஜமாஅத் குளிர் காலத்தில் முதியவர்களை போராட்டத்திற்கு அழைத்து செல்லாமா? என்று உளரிய இந்த கயவர்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி என்ன அக்கரை? இட ஒதுக்கீட்டினால் எந்த பலனும் இல்லை என்று பச்சை பொய்யை சொன்ன கயவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன?

அடுத்து, திருட்டு நிருபர் பதிப்பகம் எடுத்து வைக்கும் வாதம் என்னவெனில், தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பவர்கள் இனி வரும் காலங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு வெளியேறப்போகிறர்களாம். இவ்வாறு திருட்டு நிருபர் கும்பலுக்கு வஹி வந்தாம். தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால் தூக்கி வீசப்படுவார்கள் என்பது உறுதி. ஊழல் பேர்வழிகள், பெண் பித்தர்கள் என பலர் தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு விரட்டப்பட்டுள்ளார்கள். பெண் பித்தர்களை வைத்து தர்பியா (நல்லலொழுக்க பயிற்சி?) நடத்தி வாங்கி கட்டியது யார்? கேடுகெட்டவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தில் இடமில்லை. தவ்ஹீத் ஜமாஅத் தவறு செய்தால், அதை விமர்சிக்கலாம், தவறு செய்வதாக அவர்கள் எண்ணினால் கூட அதை விமர்சிக்கலாம். அதற்கு அழகிய முறையில் விளக்கம் தருவோம். தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது குரோதம் கொண்ட இந்த கும்பல் பொய்யான விமர்சனங்களுடன், தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் வெளியேறுவார்கள் என்று தங்களின் குரோதத்தை வெளிப்படுத்துகிறது. ஏன் இப்படிப்பட்ட குரோதம்? தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் யரோனும் பெண் பித்தர்கள் என தூக்கி விசப்பட்டால், அவர்களை வைத்து தர்பியா நடத்தும் பிளான் எதுவும் உண்டா? ஏன் இப்படி உளறி கேவலப்படுகிறீர்கள். இவ்வாறு தங்களின் வெறியை தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது காட்ட காரணம், இவர்கள் இட ஒதுக்கீடு குறித்து உளரி வாங்கி கட்டியதற்கும், பிஜேவின் நூல்களில் இருந்து திருடி வாங்கி கட்டியதற்கும் வாய்திறக்க முடியாமல் மவுனிகளாக போன இவர்கள், தங்களின் அறிப்பை இவ்வாறு காட்டுகிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வோரு நேரத்திலும் அழிந்துவிடும் என்று பலர் மனப்பால் குடிக்கிறார்கள். ஆனால், தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வின் அருளால் கணிக்க முடியாத அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.

அடுத்து, தமிழகத்தின் தவ்ஹீத் எழுச்சியை தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு பாதித்துவிடும் என்று இந்த கள்ள தவ்ஹீத் கும்பல் அஞ்சுகிறதாம். இன்றைக்கு தவ்ஹீத் கொள்கையில் அடி எடுத்து வைக்கும் ஒரு பாமரனுக்கு கூட தெரிந்த விஷயம், ஹஜ்க்கு சென்றவர்களின் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று எழுதுவது வழிகேடு என்று, இது கூட தெரியாத உங்களுக்கு தவ்ஹீத் எழுச்சியை பற்றி என்ன அக்கரை? மேடைகளில் பலகீனமான ஹதீஸ்களை அள்ளிவிடும் உங்களுக்கு தவ்ஹீத் எழுச்சியை பற்றி என்ன இவ்வளவு பரிவு? முஹம்மது குட்டியை எதிர்க்கும் நீங்கள் அதிரையில் தரீக்கா கொள்கையில் உள்ள கவிஞர் தாஹாவை வானளாவ புகழ்ந்து எழுதியது யாருக்கும் தெரியாதா? கவிஞர் எது செய்தாலும் உங்களுக்கு அது தவ்ஹீதோ? நீங்களே தவ்ஹீத்துக்கு எதிராக இருந்து கொண்டு தவ்ஹீத் எழுச்சியை பற்றி ஏன் பேசுகிறீர்கள்? தவ்ஹீத் வேடத்தில் தவ்ஹீதை அழிக்க உங்களின் திட்டமா? கன்னிபீவி தர்ஹாவிற்கு போஸ்ட் அடிக்கும் கும்பலுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் தவ்ஹீதை பற்றி பேச தகுதியற்றவர்கள். தவ்ஹீத் கொள்கையை அல்லாஹ் பாதுகாப்பான். அது வளர்ந்து கொண்டு தான் இருக்கும். நீங்கள் போய் எதாவது கவிஞருக்கு ஜால்ரா தட்டும் வேலையை பாருங்க.


தவ்ஹீதை யாருக்கும் அஞ்சாமல், தனது எழுத்து, பேச்சு, தியாகம், பிரயாணம் என கஷ்டத்தை பாராமல் உழைத்த சகோதரர் பிஜே அவர்களை புத்தகம் போட்டு பணக்காரர் லிஸ்டில் இடம்பெற்றுவிட்டார் என்று அவதூறு சொல்லி அதை நிரூபிக்கவும் வழியில்லாமல் தவறையும் ஒப்பு கொள்ளாமல் இருக்கும் தவ்ஹீத் நடிகர்களை அல்லாஹ்விடமே விட்டுவிடுகிறோம். இது போன்ற அவதூறுகளை பரப்பும் உங்களுக்கு அல்லாஹ் தண்டனை தரட்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.

அடுத்து, தவ்ஹீத்கான் என்ற பெயரில் ஒரு உளறல் கட்டுரை வெளியிட்டுள்ளார்கள் திருட்டு நிருபர்கள் பதிப்பகத்தினர். இவர்கள் தவ்ஹீதை கிண்டல் செய்ய தான் இந்த பெயரை வைத்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் தேவையில்லை. தவ்ஹீத் கான் என்ற பெயர் யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை. தவ்ஹீத் வேடத்தில் இருக்கும் இந்த கும்பல் தவ்ஹீதை கிண்டல் செய்கிறார்கள். நாங்கள் வைத்த வாதத்திற்கு பதில் சொல்ல முடியவில்லை என்பதற்க்காக, தவ்ஹீதையே கிண்டல் செய்யும் அளவுக்கு சென்றுள்ளார்கள். தவ்ஹீதை கிண்டல் அடித்தவர்கள் தடம் தெரியாமல் போய் உள்ளார்கள், அந்த லிஸ்டில் இவர்களும் சேர்ந்துள்ளார்கள். 

இவர்கள் காப்பி அடித்த விஷயத்தை அவர்களின் இணையதளத்தில் ஒரு சகோதரர் கேள்வியாக முன்வைக்கிறார். அதற்கு இவர்கள் பதில் சொல்ல முடியாமல், நீங்கள் யார்? உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள், இல்லாவிடில் உங்களின் கேள்விகள் முன் அறிவிப்பு இன்றி காணாமல் போகும் என்று தங்களின் கையலாகாததனத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஒருவர் உங்களிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டியது தானே, அறிமுகம் செய்தால் தான் பதில் என்பது என்ன விதி? இந்த விதியை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக உங்கள் தளத்தில் எழுதுபவர்களிடம் கேட்டீர்களா? பிஜே அதிமுகவிடம் பணம் வாங்கி கொண்டு ஆதரிக்கிறார் என்று எழுதுபவர்களிடம் ஏன் அறிமுகம் கேட்கவில்லை. பதில் இல்லை என்று இப்படி உளரி மாட்டிக்கொள்கிறீர்கள். இப்படி கேட்ட நீங்கள் தவ்ஹீத்கான் என்பது யார்? ஒரு விஷயத்தை நீங்கள் பின்பற்றாமல் மற்றவர்களை பின்பற்ற சொல்லுவது என்ன வகை வியாதி?
 இவர்களின் திருட்டை அம்பலபபடுத்தினால், அறிமுகம் என்ற பெயரில் மிரட்டல்...! (
குறிப்பு: நாம் இதை சூட்டிக்காட்டிய பின்னர் நிருபர் கும்பல் இதை அவர்கள் தளத்தில் இருந்து நீக்கிவிட்டது)
தவ்ஹீத் ஜமாஅத்தையும் பிஜேவையும் திட்டும் போது அறிமுகம் எல்லாம் தேவையில்லை.....! (குறிப்பு: நாம் இதை சூட்டிக்காட்டிய பின்னர் நிருபர் கும்பல் இதை அவர்கள் தளத்தில் இருந்து நீக்கிவிட்டது)
ரசிக குஞ்சு என்றெல்லாம் தங்களின் அரிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் புகழ் போதையில் அலையும் திருடும் நிருபர்கள். பிஜே மீது இவர்கள் எந்த அளவுக்கு வெறி பிடித்து போய் உள்ளார்கள் என்பதற்கு இவர்கள் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளே சான்று. 'ஸ்டார் பேச்சாளர்', 'அண்ணண்', 'தொண்டரடிப் பொடியாழ்வார்' என்று தங்களின் புகழ் கட்டிடம் இடிந்து போனதால் உளரியுள்ளார்கள்.அண்ணனின் கட்டுரை எப்படி கடந்த வாரம் உங்களுக்கு இனித்தது? பிஜே பித்தலாட்டம் செய்து விட்டார் என்றால், அவரின் நூல்களை திருடும் போது இதே கொள்கை வேண்டும் அல்லவா? இவர்களுக்கு புகழ் கிடைக்கிறது என்றால் பிஜேவின் மலம் கூட மணக்கும் .

இந்த அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைய காரணம் என்ன? இவர்கள் தங்களை பெரிய அறிஞர்களாக காட்டி, அங்கும் இங்கும் தகவல்களை காப்பி அடித்து பக்கத்தை நிரப்பி வருகிறார்கள், இது நமக்கு புதிதாக தெறிந்த விஷயமல்ல. இவர்கள் இதை பல வருடங்களாக செய்து கொண்டுள்ளார்கள், இவர்களை நாம் சீண்டவில்லை, அதற்கான தேவையும் வரவில்லை. சமீபத்தில், தவ்ஹீத் ஜமாஅத்தின் மீதும் சகோதரர் பிஜே மீதும் அவதூறுகளை அள்ளி விசி, இவர்களின் முகத்திரையை கிழித்து தொங்க போட வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். அறிஞர்கள் பட்டலாம் என்று பில்டப் கொடுத்த இவர்கள், எங்களின் பதிலடிகளுக்கு ஒரு வார்த்தை கூட பதிலளிக்க முடியாமல் கேவலப்பட்டு போனார்கள். யாரோ எழுதியதை வைத்து புகழ் தேடி வந்த இவர்களின் புகழ் போதை மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போனது. தவ்ஹீத் என்ற இவர்களின் வேடத்தையும் நாம் அடையாளம் காட்டினோம். இவ்வளவு காலமாக இவர்கள் கொடுத்த பில்டப் எல்லாம் உடைந்து போனது. நாம் கொடுத்த அடி, இவர்களின் கட்டுரைகளிலும் அடிவாங்கியவர்கள் கருத்திலும் புலம்புவதன் மூலம் அறிந்து கொள்ளலாம். நமது தொழில் ரகசியத்தை வெளியே கொண்டு வந்துவிட்டார்களே, இனி எப்படி பக்கத்தை நிரப்புவது, எப்படி புகழ் தேடி அழைவது என்று பித்து பிடித்து அலைகிறார்கள். இன்னும் சில பேரிடிகள் வர இருக்கிறது, இன்ஷா அல்லாஹ். இவர்கள் அவதூறுகளை சொல்ல சொல்ல நாம் உண்மையை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்.

திருடும் நிருபர்கள் தவ்ஹீத்கான் என்ற பெயரில் எழுதிய கட்டுரையில் உளரியதில் ஒன்று, தவ்ஹீத் ஜமாஅத்திற்கு முதல்வரிடம் இருந்து வர வேண்டிய அழைப்பு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையால் நின்னு போச்சு என்பதாகும். இவ்வாறு ஒரு விஷயத்தை சொல்லுவதாக இருந்தால், தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அழைப்பு வரவில்லை என்பதற்கு ஆதாரம் இருக்க வேண்டும், ஆதாரம் இல்லாமல் சொல்லப்படுபவை பொய் என்று இந்த கயவர்கள் உணர வேண்டும். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு முதல்வரை வந்து சந்திக்க சொல்லி போராட்டம் முடிந்த பின்னர் பல முறை அழைப்பு வந்தது, இதை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கவில்லை, எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள், பின்னர் சந்திக்கலாம் என்று பதில் தந்தது. இது தான் உண்மை. தவ்ஹீத் ஜமாஅத்தினால் இதை நிரூபிக்க முடியும், பொய் நிருபர்கள் இதற்கு தயாரா? ஆதாரமே இல்லாமல் குற்றம் சுமத்துவதால், அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நாங்கள் சொல்லுவது உண்மை என்று சொல்ல பொய் நிருபர்கள் தயாரா? தவ்ஹீத் ஜமாஅத்திற்கு முதல்வரை சந்திக்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை, கேட்டவுடன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு தான் அப்பாய்மென்ட் கிடைக்கும் (ஜெயலலிதா மற்றும் கலைஞரிடம்). ஒரு முறை கலைஞர் அவர்கள் கொடுத்த நேரத்தில் சந்திக்கவில்லை என்பதற்காக, காத்துயிருக்காமல் திரும்பிய திராணியள்ள இயக்கம் தவ்ஹீத் ஜமாஅத் (பின்னர் ஸ்டாலினே தொடர்பு கொண்டு, மன்னிப்பு கேட்டு, மீண்டும் வர சொல்லி கேட்டுக்கொண்டார்). தவ்ஹீத் ஜமாஅத்திற்கு முதல்வரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், சமுதாயத்திற்கு பலன்கள் கிடைத்தால் அதை தான் தவ்ஹீத் ஜமாஅத் விரும்பும். விஸ்வரூப பிரச்சினையில் 24 இயக்கங்கள், அரசு, தவ்ஹீத் ஜமாஅத், கமல்ஹாசன் என நான்கு பிரிவினர் இருந்த போதும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீட்க சொல்லிய நேரத்தில், தவ்ஹீத் ஜமாஅத் தனியாக இருக்காமல், 24 அமைப்பினரிடம் அந்த பொறுப்பை கொடுத்து, தன்னை முன்னிலைப்படுத்தாமல் நடந்ததை, தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான அமைப்புகள் கூட பாராட்டினார்கள்.

அடுத்தாக, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு யார் கடிதம் எழுதினார்கள் என்பதை காட்டி, ஒன்றும் நடக்கவில்லை என்று காட்ட முற்படுகிறார்கள். பார்தீர்களா முதல்வர் கடிதம் எழுதவில்லை யாரோ கடிதம் எழுதியுள்ளார்கள் என்று கொக்கரிக்கிறார்கள். இவர்களுக்கு எந்த அடிப்படை அறிவும் இல்லை என்பதற்கு இந்த கேள்வி சான்று. எப்படியாவது இவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று காட்ட வேண்டும் என்ற இவர்களின் இந்த வெறி இப்படி உளற செய்கிறது. முதல்வர் என்பவர் எல்லா வேலைகளையும் செய்ய மாட்டார். முதல்வரின் கீழ் பல்வேறு துறைகளும் அதற்குகென்று பொருப்பாளர்களும் இருப்பார்கள். ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்கிற போது, அந்த துறையினருக்கு முதல்வர் உத்திவிடுவர், அதன்படி அந்த வேலை உத்திரவிடப்பட்ட துறையினர் செய்வார்கள். இது தான் இந்த இட ஒதுக்கீடு விஷயத்திலும் நடந்துள்ளது. தமிழக அரசின் உத்திரவின் பெயரில் தான் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் முதன்மைச் செயலர் கே.அருள்மொழி என்பவர் கடிதம் எழுதியுள்ளார் என்பது உள்ளங்கை நொல்லிக்கனி. இதற்கு ஆதாரம் வேறு எங்கேயும் தேட தேவையில்லை காப்பி பேஸ்ட் நிருபர்கள் காட்டியுள்ள பத்திரிக்கை செய்தியின் முதல் பத்தியில் 'தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது' என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது (கீழே கோடிட்டு காட்டப்பட்டுள்ள வரிகளை பாருங்கள்). என்ன செய்தி வந்துள்ளது என்று கூட சரியாக படிக்காமல், அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார்கள். யாரும் உத்தரவு இடாமல், கே. அருள்மொழி கடிதம் எழுத அவருக்கு என்ன தேவை வந்தது? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள். மேலும் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் முதல்வர் பொதுக்கூட்டங்களில் எல்லாம் இந்த இடஒதுக்கீடு பற்றி எடுத்து சொல்லி ஆணையம் அமைத்து இருக்கிறேன் என்று சொல்லிவருகிறார் இது அருள்மொழி வார்த்தையா இல்லை முதல்வரின் உத்தரவா என்று இப்போதாவது விளங்குமா ?

அவதூறு மன்னர்கள் காட்டிய ஆதாரம், அவர்களுக்கே எதிராக போன சேதாரம் 
அடுத்து, பத்திரிக்கை செய்தியில் தவ்ஹீத் ஜமாஅத் என்பதற்கு பதிலாக ஜவ்ஹீத் ஜமாஅத் என்று வந்ததை காட்டி. தங்களின் அறிப்பை தீர்த்துகொள்ளுகிறார்கள். மேலும், இட ஒதுக்கீடு டாஸ்மார்க்குக்கு பொருந்துமா என்று கேட்டு தங்களின் புத்தியை காட்டியுள்ளார்கள். இட ஒதுக்கீடு என்பதை பற்றியெல்லாம் இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை, எந்தவிதமான சமுதாய அக்கறையும் இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்தை குற்றம் சொல்ல வேண்டும், அதற்கு எதையும் செய்வார்கள். இட ஒதுக்கீடு என்பது எல்லா அரசு துறைகளிலும் தான் தருவார்கள், மார்கத்தில் தடுக்கப்பட்ட வங்கி வேலை, டாஸ்மார்க் போன்றவற்றில் இருந்து மார்க்கப்பற்றுள்ளவர் ஒதுங்கி கொள்வார்கள். டாஸ்மார்க்கை குறிவைப்பவர்களுக்கு (அதிக போட்டி இருக்காது என்பதால் - முஸ்லிம்கள் புறக்கணிக்கும் காரணத்தினால்) அது எளிதில் கிடைக்கும்.

இந்த ஆணையம் என்பது ஒன்னுமில்லையாம், காப்பி பேஸ்டர்கள் சொல்லுகிறார்கள். 2006 ஆம் ஆண்டு இதே போன்று ஒரு ஆணையத்தை தான் ஜெயலலிதா அமைத்தார், அதை அப்போது டாய்லட் பேப்பர் என்றார்கள். பின்னர், கலைஞர் ஆட்சிக்கு வந்த போது, இதே போன்று ஒரு கமிஷன் அமைத்து, ஆய்வு செய்து தான் இட ஒதுக்கீட்டை தந்தார். இது அரசு தரப்பினர் இடையே நடந்த கடித பரிமாற்றமாம். அப்படியென்றால், 'தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது' என்று ஏன் நீங்கள் காட்டிய ஆதரத்தில் உள்ளது? சம்பந்தம் இல்லாமல் அரசு துறையினர் ஏன் கடிதம் எழுதிகொள்ள வேண்டும்? (உங்களை மாதிரி புகழ் தேடு திட்டமோ?). இவர்களின் பொய்யை அம்பலப்படுத்தும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா அவர்களே, நான் இந்த ஆணையத்திற்கு உத்திரவுவிட்டேன் என்று சொல்லி, இந்த நிருப பொய்யர்கள் மீது கரியை பூசியுள்ளார். அதிகாரத்தில் உள்ள முதல்வர் சொல்லுவதை கூட, தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். முதல்வர் நான் இதற்கு உத்திரவுவிட்டுள்ளேன் என்பது நடுநிலையான மக்களுக்கு போதுமான சான்று. இதற்கான ஆதாரம் கீழ்காணும் வீடியோவில் உள்ளது.


இறுதியாக, ஒன்றை சொல்லிக்கொள்கிறோம், ததஜவின் எழுச்சி மிக்க போராட்டங்களால் தான் 3.5 சதவீத இட ஒதுக்கீட கிடைத்தது என்பதை திருடும் நிருபர்களே ஒத்துக்கொண்டுள்ளார்கள். இட ஒதுக்கீடு கிடைத்த நேரத்தில் தமுமுக, திமுக கூட்டணியில் இருந்தது. தமுமுகவை கண்டு கொள்ளாத திமுக, தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகி, இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு எவ்வாறு தர முடியம் என்று விளக்கம் கேட்டு, தவ்ஹீத் ஜமாஅத்தின் வழிகாட்டுதல் படி தான் 3.5 சதவீத இட ஒதுக்கீடே கிடைத்தது. அதே போல, தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரியமிக்க போராட்டங்களால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும், இன்ஷா அல்லாஹ். அப்போது இந்த பொய்யர்களின் குரோதமும் வெறியும் இன்னும் உச்சிக்கு போகும்.

தோல்வியை ஒப்புக்கொள்ளும் விமர்சகர்கள்:

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாட்டை தமுமுகவின் மறைமுக தொண்டர்களும், தவ்ஹீத் ஜமாஅத்தை ஒழிப்பது மட்டும் தான் எங்களின் கொள்கை என்பவர்களும், நடுநிலையாளர்கள் என்ற போர்வையில் உள்ள அயோக்கியர்களும் விமர்சனம் செய்கிறார்கள். விமர்சனம் செய்பவர்கள் நேருக்கு நேராக நமது இணையதளத்தில் வந்து தங்களின் விமர்சன கனைகளை தொடுக்கலாம். எங்களை பிரித்து மேயலாம். இவர்கள் யாரும் இதை செய்ய முன்வருவது இல்லை. இதை இவர்கள் செய்யாமல் வெருண்டு ஒட காரணம், இவர்கள் பொய்யர்கள் என்று இவர்களே ஒத்துக்கொண்டுள்ளார்கள். நமது தளத்தில் யார் வந்தாலும் அவர்களின் எந்த கருத்தும் தடையின்றி வெளியிடப்பட்டு, அதற்கான பதில் தரப்படும். 

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான தளங்களில் நாம் எதையும் எழுதலாம் என்று வரம்பு மீறுபவர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். வரம்பு மீறுபவர்களின் கருத்துக்கள் இங்கே காட்டப்பட்டு, பதிலடி தரப்படும், இன்ஷா அல்லாஹ்.

பொய் ஒரு போதும் வெல்லாது:

நிருபர் கும்பல் நமது அடுக்கான வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் பதுங்குவதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான். நாம் சொல்லுவது உண்மை, அவர்கள் சொல்லுவது பொய்கள், அவதூறுகள்.


பொய்யார்கள் தோற்று ஓடுவார்கள் என்பதை அழகாக எடுத்துரைக்கும் திருக்குர்ஆன் வசனம்:

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. 
(அல்குர்ஆன் 21:18)


குறிப்பு: 
இட ஒதுக்கீடு குறித்து உளரித்தள்ளிய நிருபர் கும்பலை சார்ந்த ஒரு பெரியவர் தமுமுகவின் ஏஜேண்ட் என்று நாம் குறிப்பிட்டு இருந்தோம். அதை அவர் ஏற்றுக்கொண்டு, தன்னை தமுமுகவின் அனுதாபி என்பதை ஒத்துக்கொண்டுள்ளார். நிருபர் கும்பலில் உள்ள பலர் தமுமுகவின் ஆதரவாளர்கள், சிலர் பாக்கர் கட்சியின் அனுதாபிகள்.

Sunday, March 16, 2014

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 23) - பிறர் பொருள் ஹராம் (தடுக்கப்பட்டது)

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 23) - பிறர் பொருள் ஹராம் (தடுக்கப்பட்டது)

இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே செல்லவும்.

Saturday, March 15, 2014

Monday, March 10, 2014

Sunday, March 09, 2014

அதிமுகவிற்கு ஆதரவு ஏன்? விமர்சனங்களும் விளக்கங்களும்

அதிமுகவிற்கு ஆதரவு ஏன்? விமர்சனங்களும் விளக்கங்களும்

தமுமுக பிஜேபியோடு சேர்ந்து போராட்டம் பண்ணிய போது நாங்க சும்மா தாங்க இருந்தோம், அம்மாவை அடுத்த பிரதமர் என்றும், தானே புயல் மீண்டும் வராதா என்றும் ஜால்ராவில் கின்னஸ் சாதனை படைத்த ஜவாஹிருல்லாவை கூட நாங்கள் வாய் திறந்து கேட்டது இல்லைங்கோ, ஆனா ததஜ எதை செய்தாலும் நாங்க எதரிப்போமுங்கோ , நாங்க நடுநிலையானவர்களுங்கோ, எங்களை நம்புங்கோ நம்புங்கோ.... 
தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர சிறை செல்லும் போராட்டத்தை நடத்தியது. இடஒதுக்கீட்டை ஆணையம் அமைத்து உயர்த்தி தருவது தான் பாதுகாப்பானது என்பதை சட்ட வல்லுனர்களின் ஆலோசனைக்கு பின் மறு ஆய்வு செய்து ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றியதன் அடிப்படையில் அதிமுகவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளது 

இது சம்பந்தமாக எழுந்த அனைத்து  விமர்சனங்களுக்கும் சகோ பிஜே அவர்கள்  கீழ்காணும் வீடியோக்களில்  பதில் தந்துள்ளார். இவற்றை பார்த்து எங்களை எதிர்க்கக்கூடிய ஆதரிக்க கூடிய எவரும் உங்களுக்கு எழும் கேள்விகளையும் விமர்சனங்களையும் கருத்து பகுதியில் பதியலாம். அதற்கான பதில் தரப்படும். இன்ஷாஅல்லாஹ்

தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டும் எதிர்க்கும் சில நடுநிலையாளர்கள் (?) தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான இணையதளங்களில் மட்டும் தங்களின் விமர்சனங்களை பதிகிறார்கள், இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான இணையதளத்தில் மட்டும் தங்களின் விமர்சனங்களை பதிய காரணம், அங்கு அவர்களை காப்பாற்றி விடுவார்கள், ததஜவிற்கு எதிரான தங்களின் அவதூறுகளை பரப்பலாம் என்பது இவர்களின் நோக்கம். அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இந்த ஆக்கத்தில் தங்களின் கருத்துக்களை பதியலாம், அவர்களுக்கு முழு உரிமை உண்டு, அவர்களின் அனைத்து வாதங்களுக்கும் அழகிய முறையில் பதில் தரப்படும்.

பிஜேவின் புத்தகத்தில் இருந்து திருடி கட்டுரை போடும் திருட்டு நிருபர்கள் சில சந்தேங்களை கிளப்பி விட்டுள்ளார்கள், அது தனியாக கவனிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

இது அல்லாமல், ஃபேஸ்புக்கில் நாம் என்ன வேண்டுமானலும் எழுதலாம். அதற்கு பதில் எழுதுபவர்களின் கருத்துக்களை நாம் நீக்கலாம் என்று சிலர் மணப்பால் குடிக்கிறார்கள். இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

பாகம்-1

பாகம்-2


பாகம்-3

பாகம்-4

பாகம்-5

மீண்டும் காப்பி பேஸ்ட் - பிஜே புத்தகத்தில் இருந்து ஆட்டை போட்டு கட்டுரை உருவாக்கி கேவலப்படும் நிருபர்கள்!

திருடர்கள் ஜாக்கிரதை....
தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை நிரப்பும் போராட்டத்தை பற்றி தப்பும் தவறுமாகவும், இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு பலன் கிடைக்கவில்லை என்று பொய்யான தகவல்களையும், தவ்ஹீத் ஜமாஅத்தின் மீதும், சகோதரர் பிஜே மீதும் பல்வேறு அவதூறுகளை அள்ளி வீசியிருந்தார்கள் நிருபர்கள் என்ற அறிவாளிகள். இவர்களின் முதல் கட்டுரைக்கு நாம் கொடுத்த பதிலடி இவர்களை திக்குமுக்காட வைத்தது. இதற்கு பதில் சொல்லுகிறோம் என்ற பெயரில் இவர்கள் மீண்டும் உளரித்தள்ளினார்கள். அந்த பதிலுக்கு நாம் கொடுத்த பதிலடி இவர்களை பின்வாங்க வைத்தது. இதற்கு மேல் நாம் உளரினால், நமக்கு கேவலத்திற்கு மேல் கேவலம் என்று நமது இரண்டாவது பதிலடிக்கு பதில் தர முடியாமல் பின்வாங்கி, தங்களின் பொய் முகத்தை மக்களுக்கு அடையாளம் போட்டு காட்டிவிட்டார்கள்.

நமது எந்த சவால்களுக்கும் பதில் தரமுடியாமல் பின்வாங்கியது நாம் எடுத்த வாதங்களில் உள்ள உண்மையை உணர்த்தியுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.

நிருபர் கும்பல் தனது ஆக்கத்தில் ஒரு மிகப்பெரும் அவதூறை அள்ளிவிசியது, அதாவது, பிஜே அவர்கள் புத்தகம் போட்டு பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார் என்று. இது குறித்தும் நமது இரண்டாவது பதிலடியில் சவாலை முன்வைத்திருந்தோம், பொய்யர்கள் பின்வாங்கி விட்டார்கள். ஒன்று பிஜே மீது இவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முன்வந்து இருக்க வேண்டும் அல்லது தவறாக சொல்லிவிட்டோம் என்று மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். இவர்கள் இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க முன்வராததன் மூலம் தங்களை பொய்யார்கள் என்று நிருபித்துவிட்டார்கள். தங்களின் தவறை தவறு என்று மன்னிப்பு கேட்டிருந்தால், நாம் இந்த கட்டுரை வரைய வேண்டிய தேவை வந்து இருக்காது. 

இவர்கள் புகழுக்காக அங்கும் இங்கும் கருத்துக்களை காப்பி பேஸ்ட் செய்து பக்கத்தை நிரப்பி, தங்களை பெரிய ஆய்வாளர்களை போல காட்ட வேண்டும் என்பது தான் இவர்களின் நோக்கமாக உள்ளது. இதை நமது பதிலிலும் சொல்லியிருந்தோம். பிஜே மக்களை வழிகெடுக்கிறார், பிஜே மற்றவர்களை வசைப்பாடுகிறார், ஒற்றுமையை உடைக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யும் இவர்கள் பிஜேவின் புத்தகத்தில் இருந்தும், பிஜேவின் கட்டுரைகளில் இருந்தும் ஆட்டை போட்டு சமீபத்தில் ஒரு சில கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்கள் (இதற்கு முன்பும் பல ஆக்கங்களில் பிஜேவின் ஆக்கங்களில் இருந்து ஆட்டையை போட்டு பல கட்டுரை வரைந்துள்ளார்கள் அறிவாளி (?) நிருபர்கள்). 

நாம் கட்டுரை எழுதும் போது மற்றவர்களின் கருத்துகளை எடுத்து எழுதுவது தவறா என்றால், அவ்வாறு எடுத்து எழுவது தவறில்லை, எப்போது தவறில்லை என்றால், இந்த கருத்துகளை நாம் இங்கிருந்து எழுத்துள்ளோம் என்று சுட்டிக்காட்டினால், அது தவறில்லை. இவர்கள் யாரோ ஆய்வு செய்து எழுதிய ஆய்வுகளை எடுத்துப்போட்டு, இவர்கள் செய்த ஆய்வு போல காட்டுவது நியாயமா? பிஜேவையும் தவ்ஹீத் ஜமாஅத்தையும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் இவர்கள், தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆக்கங்களை ஆட்டை போடுவது சரியா? ஒன்று தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கக்கூடிய இவர்கள், தவ்ஹீத் ஜமாஅத் சம்பந்தப்பட்ட ஆக்கங்களை காப்பி செய்யாமல் இருக்க வேண்டும் அல்லது எடுக்கும் பட்சத்தில் இங்கிருந்து எடுத்துள்ளோம் என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டும். 

நிருபர்கள் வெளியிட்ட காப்பி பேஸ்ட் கட்டுரைகள் கண், உறுப்பு மற்றும் உடல் தானம் குறித்ததாகும். கண், உறுப்பு மற்றும் உடல் தானம் குறித்து அறிவியல், குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்த மார்க்க அறிஞர் யார் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இது குறித்து பிஜே செய்த ஆய்வுகளை ஆன்லைன் பிஜேவில் இருந்து, பத்தி பத்தியாக காப்பி பேஸ்ட் செய்து, வார்த்தை பிரயோங்களை கூட மாற்றாமல் இவர்கள் கட்டுரை உருவாக்கியுள்ளார்கள். இவர்களின் கட்டுரையில் வந்துள்ள ஒரு சில தகவல்களை தவிர்த்து மற்ற அனைத்தும் ஆன்லைன் பிஜே இணையதளம் அல்லது பிஜே அவர்களின் புத்தகங்களில் இருந்து வார்த்தைகளை கூட மாற்றாமல் எடுக்கப்பட்டது (ஆன்லைன் பிஜேவில் உள்ள ஆக்கங்களை யாரும் எடுத்து எழுதக்கூடாது என்று விளங்கி கொள்ளக்கூடாது, எடுத்து காட்டும் போது, அதை எடுத்த இடத்தை குறிப்பிட வேண்டும், இது ஆன்லைன் பிஜேவிற்கும் மற்ற இடங்களுக்கும் பொருந்தும்).

அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என்று மற்ற தளங்களில் வந்த செய்தியில், கோளாறு தளத்தில் மட்டுமல்ல, தவ்ஹீத் ஜமாஅத்திடமும் உள்ளது என்று கருத்திட்ட கட்டுரையாசிரியர் அவர்கள் இவ்வாறு செய்வது சரியா? 

நிருபர்கள் காப்பி பேஸ்ட் செய்த கட்டுரைகளின் ஸ்கீன்சாட் கீழே (பக்கம் பக்கமாக காப்பி அடிக்கப்பட்டுள்ளதால், பல ஸ்கீன்சாட்டுகளாக இணைக்கப்பட்டுள்ளது).

கண்கள் இரண்டும் காப்பி பேஸ்ட் செய்யவா?





மேலே நாம் எடுத்துக்காட்டியுள்ள அவர்களின் கட்டுரைகளை ஸ்கீன்சாட்டிலோ அல்லது அவர்களின் தளத்திலோ சென்று படித்துவிட்டு, கீழ்காணும் ஆன்லைன் பிஜே கட்டுரைகளையும் படித்துப்பாருங்கள், கண், உடல் மற்றும் உறுப்பு தானங்கள் பற்றி அதிக விபரமும் காப்பி பேஸ்ட் விபரமும் கிடைக்கும்.
  1. உடல் தானம் செய்யலாமா?
  2. இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?
  3. தானம் செய்த கண் சொர்க்கம் செல்லுமா?
வரிக்கு வரி ஆன்லைன் பிஜேவில் காப்பி அடித்தவர்கள், ஆன்லைன் பிஜேவின் லிங்கையோ அல்லது ஆன்லைன் பிஜேவில் இருந்து எடுக்கப்பட்டது என்ற விபரத்தையோ சொல்ல மறுப்பது ஏன்? ஆன்லைன் பிஜே என்று சொன்னால், ஆன்லைன் பிஜேவிற்கு விளம்பரம் கிடைக்கும் என்பதாலா? அல்லது உங்களை மற்றவர்கள் நன்றாக ஆய்வு செய்துள்ளார் என்று புகழ வேண்டும் என்பதற்காகவா? இல்லை, எதிரியின் தகவல்களும் வேண்டும், அதே நேரத்தில் எதிரிக்கு பெயரும் கிடைக்கக்கூடாது என்பதற்க்காகவா? 

ஆன்லைன் பிஜேவில் இருந்து எடுத்த விபரத்தை சொல்லாதவர்கள், ஆன்லைன் பிஜேவில் இருந்து எடுக்காமல் மற்றவர்கள் இது குறித்து ஆய்வுகள் எதுவும் செய்து இருந்தால் அதை எடுத்து போட்டு இருக்கலாம் அல்லவா?

குறிப்பு: 
கட்டுரை எழுதிய சகோதரர் மீது எமக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. அவருக்கும் நிருபர்கள் சமீபத்தில் அள்ளிவிசிய குற்றச்சாட்டிற்கும் சம்பந்தம் இல்லை. அதே நேரத்தில், கட்டுரையாளர் வேண்டுமென்றே ஆன்லைன் பிஜேவில் எடுத்த செய்தியை மறைத்து இருப்பதை ஏற்க முடியாது.