Sunday, August 24, 2014

பெண்கள் பயான் நிகழ்ச்சியில் பரிசுகள் அறிவிப்பு


தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக பெண்கள் பயான் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடுத்தெரு அயிஷா மகளிர் அரங்களில் நடைபெறுகிறது. இதில் பெண்கள் மார்க்கத்தை தெரிந்துக்கொள்வதற்கு ஆர்வப்படுத்தும் விதமாக 15.8.2014 முதல் பயான் செய்தவற்றில் இருந்து மூன்று கேள்விகள் கேட்கப்பட்டு 3 கேள்விகளுக்கும் சரியான பதிலளித்தவர்களில் ஒருவருக்கு ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி ஆகிய இரண்டு மாத இதழ்களும் ஒரு வருட சந்தா பதிலளித்தவர்களின் முகவரிக்கு அதிரை கிளை சார்பாக செலுத்தப்பட்டது. 

மேலும் இனி வரும் வாரங்களில் சரியான பதிலளிப்பவர்களுக்கு ஏகத்துவம் தீன்குலப்பெண்மணி போன்ற மாத இதழ்களும் குர்ஆன் தமிழாக்கம்,  புகாரி தமிழாக்கம், மற்றும் தவ்ஹீத் மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்களில் எதாவது ஒன்று வழங்கப்படும்

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.