மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நமதூருக்கு அருகில் உள்ள முதல்சேரிக்கு வந்தடைந்துவிட்டன. கடந்த சில வருடங்களாக அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு சொந்தமான காட்டுக்குளத்தை தூர்வாராமல் பேரூராட்சி அலட்சியமாக இருந்துவருகிறது
பேரூராட்சியால் அதிராம்பட்டினத்தில் பாதிக்கு அதிகமான பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிதண்ணீருக்கான ஆழ்குழாய்கள் காட்டுக்குளத்தை சுற்றி போடப்பட்டுள்ளது இந்த வருடம் நீர் மட்டம் குறைந்தவுடன் பேரூராட்சியால் குளத்தை சுற்றி பல போர்கள் புதிதாக போடப்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் தங்குதடையின்றி கிடைப்பதற்கு வசதியாக காட்டுக்குளத்தை தூர்வாரி குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு பேரூராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் பேரூராட்சிக்கு சொந்தமான போர்களில் அதிகமான தண்ணீர் எடுப்பதால் காட்டுக்குளத்தை சுற்றியுள்ள வீடுகளிலும் தண்ணீர் மட்டம் இறங்கியுள்ளது இதை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகமும் தெரு ஜமாத்தினரும் தெரு சங்கங்களும் குடி தண்ணீர் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக முதலில் காட்டுக்குளத்தை நிறப்புவதற்கு முயற்சிக்கவேண்டும்
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.