Wednesday, January 16, 2013

அல்கசீம் மண்டல TNTJ வின் மனித நேயப் பணி



அல்கசீம்  மண்டல TNTJ வின் மனித நேயப் பணி 



அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்ய செல்லும் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகளையும் ,துயரங்களையும் எத்தனை முறை எடுத்து கூறினாலும் இன்னும் பணத்தாசை பிடித்த ஏஜெண்டுகளால் அப்பாவி பெண்கள் தொடர்ந்து எமாற்றப்பட்டுக்கொண்டுத்தானிருக்கின்றனர்.

ஏழைப்பெண்களின் வறுமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஏஜெண்டுகள் அவர்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளையும் ஆசைகளையும் காட்டி தங்களின் பையை நிரப்பிக்கொள்கின்றனர்.

அங்கு போய் பார்த்தால் அத்தனையும் பொய் என்பதை உணர்ந்துகொள்வார்கள். இருப்பினும் தங்களின் விதியை நினைத்துக்கொண்டு அடிமாட்டு சம்பளத்திற்கு இடுப்பு ஒடிந்து போகுமளவிற்கு மாய்ந்து மாய்ந்து வேலை பார்க்கின்றனர்.
அப்படி ஏமாற்றப்பட்ட பெண்தான் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பஹ்மிதா என்ற பெண்.

பஹ்மிதாவின் கணவர் சில மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் ஊனமாகிவிட , குழந்தைகளை வைத்து குடும்பத்தை பராமரிக்க முடியாமல் பெரிதும் கஷ்ட்டப்பட்டு வந்துள்ளார்.

இவரின் இக்கஷ்ட்டத்தை கேள்விப்பட்ட அப்பகுதியைச்சேர்ந்த ஒரு ஏஜென்ட், பஹ்மிதாவிடம் நீ வெளிநாடு சென்றால் உன் பிரச்சனை அத்தனையும் தீர்ந்து விடும் என்று ஆசைக்காட்டி அவரிடம் ஒரு பெரும் தொகையை பெற்றுக்கொண்டு அவரை சவூதி அரேபியாவிற்கு அனுப்பிவிட்டுள்ளார்.
சவூதி வந்த பஹ்மிதா, உண்ண சரியான உணவும், இருக்க சரியான இருப்பிடமும் இல்லாமல் இரண்டு நாள் பட்டினியாக கிடந்துள்ளார்.
அதன் பிறகு ஒரு வீட்டில் போய் விட்டுள்ளனர், அங்கு வேலைப்பளு செம்மையாக அவரை பிழிந்தெடுக்க ,ஏற்கெனவே ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அரபு நாட்டு புழுதிக்காற்றும், நடுங்க வைக்கும் குளிரும் அவரை மேலும் வாட்டி வதைதுள்ளது.

இந்நிலையில் அவருடைய கணவரிடம் தன் கஷ்ட்டத்தை கூறி அழுது, தன்னை எப்படியாவது தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யுமாறு கெஞ்சியுள்ளார்.
அவருடைய கணவர் ஈரோடு மாவட்ட டிஎன் டிஜெ தலைவரை அணுகி நிலைமையை கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்ட தலைவர் மாநில பொதுச்செயலாளருக்கு தகவல் தெரிவிக்க, மாநில பொதுச்செயலாளர் சவூதி அரேபியா அல்கசீம் மண்டல தலைவரை தொடர்ப்புக்கொண்டு பாதிக்கப்பட்ட அப்பெண்ணிற்கு உதவுமாறும், அப்பெண்ணை உடனே தாயகத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில் அல்கசீம் மண்டல செயலாளர் நாச்சியார் கோவில் ஜாஹிர்ஹுசைன் அவர்களின் பெரும் முயற்ச்சியினால் சம்பந்தப்பட்ட அரபியிடம் பேசி , பயனத்திற்குண்டான விமான டிக்கெட்டை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் போட்டு கடந்த10.01.2013 அன்று தாயகம் அனுப்பிவைக்கப்பட்டார்.

அச்சகோதரி தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகளுக்கு தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். எல்லாபுகழும் அல்லாஹ்விற்கே.
நம் நாட்டிலேயே நல்ல சம்பளத்துடன் கூடிய வீட்டு வேலைக்கு பணிப்பெண்கள் கேட்டு, ஏராளமான விளம்பரங்கள் நம் உணர்வு பத்திரிகையிலேயே வருகிறது, அப்படியிருக்க அதை விட்டு விட்டு வெளிநாடு வந்து மொழியும் தெரியாமல், ஆட்களும் தெரியாமல் குறைந்த சம்பளத்திற்கு மானம் மரியாதையை இழந்து கஷ்ட்டப்பட வேண்டுமா என்பதை சமுதாயத்திலுள்ள ஏழை சகோதரிகள் சிந்திக்க வேண்டும்.

நன்றி : http://www.tntj.net/126720.html

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.