அவ்லியாவை மாமாவாக ஆக்கிய அவ்லியா பக்தர்கள்!
காதலர்களை சேர்த்து வைக்கும் மாமா அவ்லியா from Adiraitntj on Vimeo.
உங்களில் மார்க்க சந்தேகங்களுக்கு விடை காண தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
ஆண்களுக்காக:
+91 9865584000
+91 8925268026
+91 9840743337
பெண்களுக்காக:
+91 9940652566
குறிப்பு: தொழுகை நேரங்களில் தொடர்பு கொள்ள வேண்டாம்.
6 கருத்துரைகள் :
tntj வின் தலைமையகத்தில் அதிரையை சேர்ந்த காதல் ஜோடிகளை சேர்த்து வைத்தனர் - பொற்றோரை புறக்கணித்து காதலர்களுக்கு புகலிடம்
நீங்கள் குறிப்பிடும் சம்பவத்தின் உண்மை நிலை தெரியாமல் விமர்சனம் செய்கிறீர்கள்.
நீங்கள் குறிப்பிடும் நபர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகி எங்களின் திருமணத்தை நடத்தி தருமாறு கோரிக்கை வைத்தார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத் சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்களை அணுகி அவர்களின் அனுமதியை கேட்டது. பெண்ணின் பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்கள். மணமகன் பெற்றோர்களை தவ்ஹீத் ஜமாஅத் அணுகிய போது அவர்கள் நாகரீகாமாக நடக்காமல் சகட்டு மேனிக்கு வசை பாடினார்கள். மணமகனின் பெற்றோறரை நேரில் வர சொல்லி ஒரு சுமுகமான முடிவை எடுக்க தவ்ஹீத் ஜமாஅத் முயன்றது. அவர்கள் ஒத்துழைக்கவில்லை.
மார்க்கம் காட்டித் தந்த முறையில் பெண்ணின் பெற்றோர்களின் அனுமதி மட்டும் தான் தேவை. பெண் தரப்பினர் நேரில் வந்து சம்மதம் தெரிவித்தனர். எனவே, தவ்ஹீத் ஜமாஅத் அந்த திருமணத்தை நடத்தி வைத்தது. இதில் என்ன தவறை கண்டிர்கள்? மார்க்க அடிப்படையில் இது எவ்வாறு தவறு என்று விளக்கவும்.
அன்புள்ள சகோதர்களுக்கு,இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்மீதும் நிலவட்டுமாக, உண்மை நிலை அறிந்துதான் உரிமையுடன் கேள்வி கேட்டேன். இஸ்லாம் காட்டிய ஒழுக்கவியலை மீறுகிறவர்களை இஸ்லாமியராக அடையாளபடுத்த முடியாது.இன்றைய காதலின் வரையறை எதுவரை என்பது நம் அனைவரும் அறிந்த விஷயம்.திருமணதிற்கு முன் காதலர்கள் செல்பேசியில் பேசி முகம் பார்த்து பழகி வரும் சூழலில் திருமண வாழ்க்கை நன்றாக இருந்தால் நலம் ( வல்ல ரஹ்மான் பாதுகாப்பானாக ) அது இல்லாமல் மன முறிவு என்று வந்தால் TNTJ பொறுப்பேற்று கொள்ளுமா, இந்நிகழ்வின் மூலம் அனைவரும் காதலித்தால் சமூதாயம் சீர் பெறுமா- மணமகனின் பெற்றோர் விரும்பவில்லை என்றால் நீங்கள் ஏன் திருமணத்தை நடத்திவைத்தீர்கள்.சமுதாய சிந்தனை காதலை வளர்த்து பாதுகாப்பு கொடுப்பது அல்ல
சகோ. இம்ரான்
அஸ்ஸலாமு அலைக்கும்.
//உண்மை நிலை அறிந்துதான் உரிமையுடன் கேள்வி கேட்டேன். //
கேளுங்கள் பிரதர். தவறு இருந்தால் கடினமாக கூட கேளுங்கள்.
//இஸ்லாம் காட்டிய ஒழுக்கவியலை மீறுகிறவர்களை இஸ்லாமியராக அடையாளபடுதத முடியாது. இன்றைய காதலின் வரையறை எதுவரை என்பது நம் அனைவரும் அறிந்த விஷயம்//
சகோ. நாம் அவர்கள் முஸ்லிம்களின் முன்மாதரி என்று அடையாளப்படுத்தவில்லை. ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் ஒருவர் தவறு செய்வாரானால் அவர் இஸ்லாமியர் அல்ல என்பது சரியான வாதம் இல்லை. பல ஒழுக்கம் கெட்டவர்களுக்கு பல ஜமாஅத்கள் திருமணம் செய்து வைக்கின்றன. இதனால் அந்த ஜமாஅத் அல்லது இயக்கம், அந்த செயலை அங்கீகரிக்கிறது என்றாகுமா? அவர்களை நோக்கி நீங்கள் இவ்வாறு கேள்வி கேட்டது உண்டா?
திருமணம் என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வலியுறுத்த பட்ட ஒரு செயல். திருமணம் செய்ய யார் முன்வந்தாலும் அதில் மார்க்கம் சொன்னவைகள் பேணப்பட்டு இருந்தால் அந்த திருமணத்தை நடத்திவைப்பது ஒரு ஜமாஅத்தின் கடமை. திருமணம் செய்பவர்களின் முன் வாழ்க்கை சரியாக இல்லையென்றால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என்று மார்க்கம் நமக்கு சொல்லித்தரவில்லை.
தவறு செய்பவர்களை கூட திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடுவார்கள் என்று சொல்கிறோம்.
//திருமணதிற்கு முன் காதலர்கள் செல்பேசியில் பேசி முகம் பார்த்து பழகி வரும் சூழலில் திருமண வாழ்க்கை நன்றாக இருந்தால் நலம் ( வல்ல ரஹ்மான் பாதுகாப்பானாக ) அது இல்லாமல் மன முறிவு என்று வந்தால் TNTJ பொறுப்பேற்று கொள்ளுமா, இந்நிகழ்வின் மூலம் அனைவரும் காதலித்தால் சமூதாயம் சீர் பெறுமா- //
நமது ஊரில் எத்தனையோ திருமணங்கள் மணமுறிவில் முடிகின்றது அதற்கு அந்த திருமணத்தை நடத்தி வைத்த ஜமாஅத் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற சிந்தனை இது வரை யாருக்குமே வந்தது இல்லை
திருமணம் செய்து வைப்பது தான் ஒரு ஜமாஅத்தின் பொறுப்பே தவிர, அவர்கள் பின்னர் செய்யும் செயல்களுக்கு மணமக்களே பொறுப்பு. மார்க்க அடிப்படையில் உங்கள் கேள்வி அர்த்தமற்றது.
//மணமகனின் பெற்றோர் விரும்பவில்லை என்றால் நீங்கள் ஏன் திருமணத்தை நடத்திவைத்தீர்கள்.//
மணமகனுக்கு விருப்பம் இருக்கிறது. மணமகளும் விரும்புகிறாள். மணமகளின் பெற்றோரும் சம்மதம். இந்த முன்று நிபந்தனைகள் இருந்தால் மார்க்கத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எந்த தடையும் இல்லை.
//சமுதாய சிந்தனை காதலை வளர்த்து பாதுகாப்பு கொடுப்பது அல்ல//
தவ்ஹீத் ஜமாஅத் அவர்களை காதலிக்க சொல்லவில்லை. எங்கள் அலுவலகத்தில் இருந்து காதல் செய்யுங்கள் என்றும் சொல்லவில்லை. மாறாக மார்க்கம் அனுமதித்த திருமணத்தை நடத்தி தாருங்கள் என்று அவர்கள் அணுகியதால் அதை தவ்ஹீத் ஜமாஅத் செய்தது. தவ்ஹீத் ஜமாஅத் திருமணம் செய்து வைத்ததே தவிர காதல் செய்ய வைக்கவில்லை.
திருமணம் செய்து வைத்ததை, காதல் செய்ய வைத்தது போல் திசை திருப்புகிறீர்கள்.
மேலும் காதலுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கணும் நம் பிள்ளைகளை எவ்வாறு காக்கணும் என்று பெற்றோர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் அறிவுறுத்தியதை போன்று வேறு யாரும் அறிவுறுத்தி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது .நடக்க கூடாத ஒரு சம்பவம் நடந்து விடும் எனில் அதற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மார்க்கத்தின் அடிப்படையில் முடிவு எடுத்து செயல்படுத்துவதே அறிவுடைமை
உங்களின் பதிலை எதிர்பார்க்கிறோம்
வசை பாடும் வார்த்தை ஜாலங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.விளக்கங்கள் விடை பெறா வார்த்தைகளில் சொற்ப்போர் நிகழ்த்த மனமில்லை- முற்று வைத்து முடித்துக்கொள்கிறேன்
//வசை பாடும் வார்த்தை ஜாலங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.//
யாரு வசை பாடியது. இங்கு யாருமே வசை பாடவில்லையே. வேறு ஏதோ தளத்திற்காக தயாராக வைத்திருந்த கருத்தை எமது தளத்தில் பதிந்துவிட்டீர்கள் போலும்
//விளக்கங்கள் விடை பெறா வார்த்தைகளில் சொற்ப்போர் நிகழ்த்த மனமில்லை- முற்று வைத்து முடித்துக்கொள்கிறேன்//
இங்கு நாம் சொற்போர் நிகழ்த்த வில்லை என்பதை இதை பார்பவர்களுக்கு விளங்கும் சகோதரா.என்ன நடந்ததோ அதை உங்களுக்கு தெரிவித்தோம் .அது உண்மையெனில் ஏற்றுகொள்ளுங்கள்
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.