தங்க காசு கொடுத்து நரகத்திற்கு அழைக்கும் வழிகெட்ட கூட்டம் !
நபி (ஸல்) அவர்கள் எப்போது பிறந்தார்கள் என்று செய்தியே வரலாற்றில் பாதுகாக்கப்படவில்லை. மீலாது நபி விழா என்ற நபி (ஸல்) அவர்களின் பிறப்பை நபி (ஸல்) அவர்களோ அல்லது ஸஹாபாக்களோ அல்லது இவர்கள் பின்பற்றுவதாக சொல்லும் இமாம்களோ கொண்டாவில்லை. 'உஸ்வத்துன் ஹஸானா' என்றால் 'அழகிய முன்மாதிரி' என்று பொருள். நபி (ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரி உள்ளது என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)
ஆனால், இந்த வழிகெட்ட கூட்டம் 'அழகிய முன்மாதிரி' என்ற பெயரை வைத்துக்கொண்டு, நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத செயலை அரங்கேற்றுகிறது. மீலாது நபி விழாவோடு மவ்லூத் என்ற இணைவைப்பு பாடலையும் பாடி மக்களின் காதுகளை கிழித்துள்ளார்கள்.
மக்களை வழிகெடுக்கும் இந்த கூட்டம், மக்கள் எல்லாம் தவ்ஹீத் எழுச்சியினால் நம்மை அடையாளம் கண்டுவிட்டார்கள், எனவே, பரிசு கொடுத்து அழைத்தால் தான் நமது நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்று எண்ணி குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் தங்க காசு பரிசு என்று அறிவிப்பு வேறு . அட பாவிகளா, நரகத்திற்கு அழைத்து சொல்ல பரிசு வேறு கொடுக்கணுமா ?
இந்த வழிகெட்ட நிகழ்ச்சிக்கு அதிரை இணையதளம் ஒன்று விளம்பரம் செய்தது தான் கொடுமை.
இந்த நிகழ்ச்சியில் அதிரை பள்ளிவாசல்களில் இமாம்களாக இருக்கும் கப்ர் வணங்கி இமாம்கள் (?) ரோஜா மலரே ராஜ குமாரி என்ற பாடல் மெட்டில் மௌலூது பாடி முன்னிலையும் வகித்து இருக்கிறார்கள்.
இவர்கள் பகிரங்க இணைவைப்பிலும், நரகத்திற்கு கொண்டு செல்லும் பித்அத்தான செயல்களை செய்யும் இமாம்களை (?) பின்பற்றி தொழுவதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும். இவர்களை பள்ளிவாசல்களை விட்டும் துரத்த வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இமாம்கள்:
முஹம்மது நெய்னா, இமாம், முகைதீன் ஜூம்ஆ பள்ளி (இவர்கள் கப்ர் வணக்கத்தை வளர்க்கும் ரஹ்மானிய மதரஸாவின் பேராசிரியர் (?))
முஹம்மது தமீம், இமாம், தக்வா பள்ளி,
கலீலுர் ரஹ்மான், இமாம், பெரிய ஜூம்ஆ பள்ளி
இந்த இமாம்களை (?) தவ்ஹீத் ஜமாஅத் நேரடி விவாத்திற்கு அழைக்கிறது. இவர்கள் மௌலூது மற்றும் மீலாது பற்றி நேரடியாக தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதித்து நிரூபிக்கும்படி அழைக்கிறது. இவர்களுடன் விவாதிக்க மதரஸாவில் பாடம் படிக்காத சகோதரர்கள் போதும் என்பது வேறு செய்தி. சத்தியம் இருந்தால் வரட்டும்.
1 கருத்துரைகள் :
மார்க்கம் அறிந்த அறிஞ்சர்களாக சொல்லிக்கொள்ளும் இவர்கள் சிர்க்கான காரியத்திற்கும் ஹராமாக்கப்பட்ட விசயங்களுக்கும் துணை போவது தான் வேதனையை அளிக்கிறது.
அல்லாஹ் அவர்களுக்கு நல் சிந்தனையை மனதில் உதிக்க வைக்க வேண்டுமென நாம் துவா செய்வோம்.
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.