Saturday, January 05, 2013

அதிரை வரதட்சணை ஒழிப்பு மாநாடு (வீடியோ)


அதிரை வரதட்சணை ஒழிப்பு மாநாடு (வீடியோ)


பல ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டிணம் கடல்கரைத் தெருவில் உள்ள தர்கா விற்கு எதிரில் உள்ள கூத்து கொட்டகையில் 'வரதட்சணை ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது. இதில் சகோதரர் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு அற்புதமான உரையை நிகழ்த்தினார். வரதட்சணையில் ஊரி திளைத்த அதிரை மக்களை சிந்திக்க வைத்தது அவரின் வீரிய பேச்சு . பல இளைஞர்கள் வரதட்சணை வாங்குவதை விட்டும் தங்களை தூரமாக்கி கொண்டார்கள்..

ஒரு காலத்தில் நமக்கு தவ்ஹீத் சிந்தனை வர காரணமாக இருந்த,நமக்கு ஆசானாக இருந்த சகோதரர்கள்இன்று கொள்கையில் தடம்புரண்டு போய் என்ன செய்வது என்றே தெரியாமல் இருப்பவர்கள். ஒரு நோட்டிசை வைத்து படம் காட்டுகிறார்கள்.அது சம்மந்தமாக நாம் கேள்வி கேட்கும் போது நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தர்கா கூடாது என்று பிரச்சாரம் செய்தவர்கள் என்றும் அப்போது நாம் பிறந்து கூட இருக்க மாட்டோம் என்று சொன்னார்கள் 


இதற்கு பதிலடி நாம் கொடுத்த பின் ,அனேகமா நீங்கள் பிறந்து இருக்க மாட்டீர்கள் என்று எச்சரிக்கையுடன் தான் கூறினோம் அதை நீங்கள் கவனிக்க வில்லை என்று வார்த்தை விளையாட்டு விளையாடினார்கள்.சத்தியத்தை சொல்ல வயது முக்கியம் இல்லை என்பதை கூட மறந்து விட்டார்கள் .ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது .பழம் பெருமை பேசி ஆக போவது ஒன்றும் இல்லை .அன்று செய்த பிரச்சாரம் இன்று ஏன் செய்யவில்லை என்று நாம் கேட்க .அதற்கு மீண்டும் ஒரு வார்த்தை விளையாட்டு அவர்களின் அமைப்பு ஆரம்பிக்க பட்ட வருடத்தை சொல்லிவிட்டு அதன் பின் கடற்கரை தெருவில் (கவனிக்கவும் கடற்கரை தெருவில் அவர்கள் அமைப்பில் இல்லை) வரதட்சணை மாநாடு நடத்தினோம் என்று மீண்டும் பழம்கதைகளை பட்டியலிட்டார்கள் .
ஆதாரம் கேட்டு பழகிய நாம் மீண்டும் ஆதாரம் கேட்போம் அப்போது எச்சரிக்கையாக கடல்கரைதெருவில் என்று தான் சொன்னோம் நீங்கள் கவனிக்கவில்லை என்று சொல்வார்கள்.ஒரு முஸ்லீம் இரண்டு தடவை குட்டுப் படமாட்டான் 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

இறைநம்பிக்கையாளர் ஒரே புறத்தில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 6133)

இந்த வரதட்சணை ஒழிப்பு மாநாட்டை எங்கள் சொந்த அமைப்பு (அமைப்பு கூடாது , ஆனா நாங்க ஆரம்பித்தால் கூடும், நாங்க தலைவரா இருந்தா ரொம்பகூடும்) தான் நடத்தியது என்பது போன்று (மேலோட்டமாக பார்த்தால்) ஒரு பெரிய கப்சாவை விட்டுள்ளார்கள்

வரதட்சணை மாநாட்டை நாங்கள் தான் நடத்தினோம் என்பவர்கள் வரதட்சணை திருமணத்தை புறக்கணித்து வாழ்ந்தால் மக்கள் இவர்களை நம்புவார்கள்.

வரதட்சணை மாநாட்டை யார் நடத்தினார்கள், யார் நடத்துவார்கள், யார் இன்றும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை.



8 கருத்துரைகள் :

அஸ்ஸலாமு அலைக்கும்

நீங்கள் குறிப்பிடும் கூட்டத்தின் உண்மை நிலையை அறிந்தவன் என்ற முறையில் இவர்கள் நோட்டிஸ் கொடுத்ததை பெரிய சாதனையாக காட்டி வெளியிடப்பட்ட அ.எ தளத்தில் ஒரு கருத்து இட்டுயிருந்தேன். அந்த கருத்திற்கு பதில் கொடுக்க இந்த வீரர்களால் முடியவில்லை. பதில் தராவிட்டாலும் பரவாயில்லை. எனது அந்த கருத்தை இவர்கள் கள்ளத்தனமாக நீக்கவிட்டார்கள்.

பிரியாணியை கூட தியாகம் செய்யாத இந்த கூட்டம் என்ன தான் சாதிக்க போகிறது.

நல்ல வேளை பிஜே பேசிய விடியொ உள்ளது. இல்லாவிட்டால் நான் தான் அந்த 'வரதட்சணை ஒழிப்பு மாநாட்டில்' இரண்டு மணி நேரம் பேசினேன் என்று சொல்லி இருப்பார்கள்.

பிரியாணிக்காக நீக்கப்பட்ட எனது கருத்து-------

சகோ. அபுபக்கர்.

இதற்கு முன் நீங்கள் சொன்ன விஷயத்தில் ஜாகிர் அவர்கள் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதிலாக சொல்லும் விஷயம் சற்றும் சம்பந்தம் இல்லாதவை. தவறு நடக்கக்கூடிய இடத்தில் ஏன் கொடுக்கலை என்று கேட்டால்இ ஜமாஅத்தினர் சொன்னவை எங்களுக்கு நியாயமாக பட்டது என்கிறீர்கள். அப்படியானால்இ அந்த நோட்டிஸ்சை எங்குமே கொடுத்து இருக்க கூடாது. நியாயம் என்பது கடற்கரைத்தெருவில் நின்று கொடுத்தால் தான் நியாயமா?

இணைவைப்பபை பற்றி பேசும் உங்கள் அமைப்பினேரே இணைவைக்கும் ஆலிம்களை பின்பற்றி தான் தொழுகிறீர்கள். நாங்கள் இணைவைக்கிறோம் என்று சொல்லுகிறீர்கள் பின்னர் ஏன் எங்களை பின்பற்றி தொழுகிறீர்கள் என்று அந்த ஆலிம்கள் கேட்ட என்ன பதில் சொல்லுவீர்கள்?

உங்களை கண்டு யாரும் அஞ்சவில்லை. வரதட்சணை பிரியாணியை கூட புறக்கணிக்காத உங்களின் கொள்கையும் கேட்பாடும் காற்றோடு அடித்துச் செல்லப்படும் என்பது மட்டும் உறுதி.

I have been reading AdiraiXpress for quite sometime now..it looks like they filters/delete comments from a common person..All i can see is their own comments or their friends, it shows truly a partiality..

i have noticed one thing recently, regarding the flyer issue there was bit of argument with adiraiaties and at the end their admin interfered and closed their comment box...initially i respect their decision but what made me upset was they have come up with another post saying that they have received this(their final comment )by email so we are posing again...

it forced me to ask them a question wether if i or some one send you answer or another comment thru mail would you guys post again ??

but their answer was "NO" (symbolically)

that makes me think that they are for few organisation people only not for ADIRAIATIES

anyway thanks for the post

இவர்களிடம் (அதிரை தாருத் தவ்ஹீத் (ADT)) உங்களை (TNTJ)வை எதிர்ப்பதில் தவிர மற்றவைகளின் ஒத்த கருத்தை கானோம்

அன்றைய காலத்தில் ஏகத்துவக்கொள்கையை நிலைநாட்டுவதில் ஏகப்பட்ட சிரமங்களையும் மிரட்டல்களையும் சந்தித்தவர்கள் ஏராளம்.அன்றைய வரதட்சனை எதிர்ப்பு கூட்டத்தில் PJ பேசினால் என்றால் அக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யார் ? முக்காடு போட்டு குறை கூறுவது முஸ்லிம் ஆண்களுக்கு அழகல்ல உங்கள் அமைப்பில் இணைந்தால் தான் ஏகத்துவவாதிகளா? மாற்று கருத்து கொண்டவர்களையும் அன்புடன் அரவணைத்து கொள்ள வேண்டும் Tntj செயல் பாடு மிக வெறுக்கத்த வகையில் அமைத்து இருக்கிறது .தேவையற்ற விவாதத்தை தவிர்த்துகொள்ளுங்கள்
-----------
இம்ரான்.M.யூஸுப்
imran2mik@gmail .com


இம்ரான் அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்

//அன்றைய காலத்தில் ஏகத்துவக்கொள்கையை நிலைநாட்டுவதில் ஏகப்பட்ட சிரமங்களையும் மிரட்டல்களையும் சந்தித்தவர்கள் ஏராளம்.//

அன்று முதல் இன்று வரை ஏகத்துவ கொள்கையை நிலைநாட்ட சிரமங்களை தாங்கி கொண்டு செயல்படுவோர் ஏராளம்.

அன்று நாங்கள் தான் ஏகத்துவ கொள்கையை நிலைநாட்டினோம் என்று படம் காட்டிவிட்டு, தடம்புரண்டு போனவர்களும் ஏராளம்.

வெளிநாட்டில் இருக்கும் போது பெரிய ஏகத்துவ புரட்சியாளர்களாக காட்டிக்கொண்டு, சொந்த ஊருக்கு திரும்பியவுடன் பெட்டி பாம்பாக மாறியவர்களும் ஏராளம் ஏறாளம்.

//அன்றைய வரதட்சனை எதிர்ப்பு கூட்டத்தில் PJ பேசினால் என்றால் அக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யார் ?//

அன்றைய கூட்டத்தை நடத்தியவர்கள் நாங்கள் தான் என்று நாங்கள் தம்பட்டம் அடிக்கவில்லை. தடம்புரண்ட சிலர் நாங்கள் தான் அதை நடத்தினோம் என்ற படம் காட்டுவதால் உண்மையை உடைக்க வேண்டி நிர்பந்தம் ஏற்படுகிறது.

அந்த கூட்டத்தை நடத்தியவர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்ல. அந்த கூட்டத்தை நடத்துவதில் பல சகோதரர்கள் பங்களிப்பு இருந்தது. அதில் பலர் இன்று தரம்புரண்டு விட்டார்கள் என்பது வருத்தமான செய்தி.

//முக்காடு போட்டு குறை கூறுவது முஸ்லிம் ஆண்களுக்கு அழகல்ல உங்கள் அமைப்பில் இணைந்தால் தான் ஏகத்துவவாதிகளா?//

எங்கள் இயக்கத்தில் இருந்தால் தான் ஏகத்துவாதிகள் என்று நாங்கள் சொன்னால் நாங்களும் தடம்புரண்டுவிட்டோம் என்று அர்த்தம். அதே நேரத்தில், வரதட்சணை கூடாது என்று பேசிக்கொண்டு வரதட்சணை திருமணத்தில் கலந்து கொள்வதும், இணைவைப்பு கூடாது என்று கூறிக்கொண்டு இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழுபவர்களின் உண்மை முகத்தையும் மக்களுக்கு காட்ட வேண்டியுள்ளது.

அல்ஹாஜ் என்று எழுத ஆரம்பித்த தடம்புரண்டவர்களையும், இறையருகவி என்று கதை விடும் பழைய தவ்ஹீத் வியாதிகளையும் மக்களுக்கு காட்ட வேண்டியுள்ளது.


//மாற்று கருத்து கொண்டவர்களையும் அன்புடன் அரவணைத்து கொள்ள வேண்டும் Tntj செயல் பாடு மிக வெறுக்கத்த வகையில் அமைத்து இருக்கிறது .தேவையற்ற விவாதத்தை தவிர்த்துகொள்ளுங்கள் //

வேற்றுமையில் ஒற்றுமையா? ஒற்றுமை கோஷம் தான் பலரை வழிகெடுத்தது வழிகெடுக்கிறது.

வரதட்சணை கூடாது என்று கூறிக்கொண்டு, வரதட்சணை திருமணத்தை புறக்கணிக்காதவர்களை அரவணைத்து எங்களுடன் சேர்த்தால், ஒரு நோட்டிஸ் கொடுத்துவிட்டு, நாங்கள் தான் எழுச்சியை ஏற்படுத்தினோம் என்று கதை விட வேண்டிய நிலைமை எங்களுக்கு வந்துவிடும்.

அல்லாஹ் காப்பாற்றட்டும்.

ஒற்றுமை ஒற்றுமை என்று பேசுவதை விட வரதட்சணை திருமணத்தை புறக்கணிப்பது சரியா? இணைவைக்கும் இமாம்களை பின்பற்றுவது சரியா? என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து சத்தியத்தை நோக்கி வாருங்கள் என்று அழைக்கிறோம்.

//அன்றைய காலத்தில் ஏகத்துவக்கொள்கையை நிலைநாட்டுவதில் ஏகப்பட்ட சிரமங்களையும் மிரட்டல்களையும் சந்தித்தவர்கள் ஏராளம்.அன்றைய வரதட்சனை எதிர்ப்பு கூட்டத்தில் PJ பேசினால் என்றால் அக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யார் ?//

உண்மை அப்படி சிரமங்களையும் மிரட்டல்களையும் சந்தித்தவர்களின் இன்றைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சகோதர் இம்ரான் அவர்களே,
சத்தியத்தில் மாற்று கருத்து இருக்ககூடாது என்பதே இவர்களின் நோக்கம்.

சகோதரர் இம்ரான் இடமிருந்து
பதில் comments எதிர்பார்த்தேன்...

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.