நபிகளாரின் பிறந்த தினம் தான் மிலாது நபியா ?
இதை கொண்டாட மார்க்கத்தில் அனுமதியுள்ளதா ?
قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا
أُنزِلَ إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ
وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِن
رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ [٢:١٣٦]
. ''அல்லாஹ்வையும், எங்களுக்கு
அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது)
வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும்
வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும்
நம்பினோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம்; அவனுக்கே நாங்கள்
கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுங்கள்! (அல்குரான் 2:136)
நபிமார்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது
இறைத் தூதர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்பதைச் சிலர் சரியாக விளங்காமல் இறைத் தூதர்களிடையே பாகுபாடு காட்டி வருகின்றனர். வேறு சிலர் இறைத் தூதர்கள் அனைவரும் எல்லா வகையிலும் சமமானவர்கள் எனக் கூறி வருகின்றனர். இவ்விரு கருத்துக்களுமே தவறாகும்.
எல்லா இறைத் தூதர்களையும் சமமான தகுதிகளுடன் அல்லாஹ் அனுப்பவில்லை. ஒருவருக்கு வழங்காத தகுதிகளை மற்றவருக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். அல்லாஹ் வழங்கிய அந்தச் சிறப்புக்களை நாமும் எடுத்துக் கூறுவது பாகுபாடு காட்டுவதாக ஆகாது.
ஈஸா நபி தந்தையின்றி பிறந்தார்கள். (பார்க்க: திருக்குர்ஆன் 3:45, 3:47, 3:59, 4:171, 19:19-21, 21:91, 66:12)
ஈஸா நபி இன்று வரை உயிருடன் இருக்கிறார்கள். (பார்க்க: திருக்குர்ஆன் 4:157-159, 5:75, 43:61)
"இந்தச் சிறப்பு வேறு யாருக்கும் இல்லை'' எனக் கூறுவது பாகுபாடு காட்டுவதாகாது. ஏனெனில் இந்தச் சிறப்பை அல்லாஹ் தான் அவருக்கு வழங்கினான்.
"சில தூதர்களை மற்றும் சிலரை விட நாம் சிறப்பித்துள்ளோம்'' என்று இறைவன் கூறுகிறான். (பார்க்க: திருக்குர்ஆன் 2:253, 17:55)
அது போல் இப்ராஹீம் நபியின் குடும்பத்தாருக்கு வழங்கியது போன்ற பாக்கியங்களை வேறு எவருக்கும் அல்லாஹ் வழங்கவில்லை எனக் கூறுவதும் பாகுபாடு காட்டுவதாகாது.
(பார்க்க: திருக்குர்ஆன் 2:124, 2:125, 4:125, 11:73, 16:120)
ஸுலைமான் நபிக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரம், உலகில் எந்த நபிக்கும் வழங்கப்படவில்லை எனக் கூறுவதும் பாகுபாடு காட்டுவதாகாது. (பார்க்க: திருக்குர்ஆன் 21:81, 21:82, 27:16-18, 27:40, 34:12, 38:35).
அது போல் இறுதி நபியாகவும், அகில உலக நபியாகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். இது யாருக்கும் வழங்காத சிறப்பு.
(பார்க்க: திருக்குர்ஆன் 4:79, 6:19, 7:158, 9:33, 21:107 33:40, 34:28, 48:28, 61:9)
மகாமு மஹ்மூத் (பார்க்க: திருக்குர்ஆன் 17:79)
ஹவ்லுல் கவ்ஸர் (பார்க்க: திருக்குர்ஆன் 108:1)
மறுமையில் முதல் பரிந்துரை (பார்க்க: புகாரி: 99, 335, 438, 3340, 4476, 4712, 6304, 6305, 6565, 6566, 6570, 7410, 7440, 7474, 7509, 7510)
இது போன்ற சிறப்புக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான். இதைக் கூறுவதும் பாகுபாடு காட்டுவதாகாது.
அப்படியானால் பாகுபாடு காட்டுவது என்பதன் பொருள் என்ன?
"'இவர் தான் பணியைச் சிறப்பாகச் செய்தார். அவர் சிறப்பாகச் செய்ய வில்லை'' என்று கூறினால் தான் அது பாகுபாடு காட்டும் குற்றமாக அமையும். அல்லாஹ் தகுதியானவர்களைத் தான் தேர்வு செய்வான் என்ற அடிப்படை யையே இது தகர்த்து விடும். எனவே "ஒவ்வொரு நபியும் தமக்கு வழங்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தார்கள்'' என்று தான் நாம் நம்ப வேண்டும்.
மூஸா நபியின் இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் இதைவிடச் சிறப்பாகச் செய்திருப்பார்கள் என்று கூறினால் அது பாகுபாடு காட்டியதுடன் இறைவனின் தேர்வைக் குறை கூறிய குற்றமாகவும் அமையும்.
இது போன்ற பாகுபாடுகள் காட்டுவது மாபெரும் குற்றமாகும் என்பதே இதன் கருத்து.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை வேறு நபியிடம் அல்லாஹ் ஒப்படைத்திருந்தால் அதை அவரும் சிறப்பாகச் செய்திருப்பார்'' என்பது தான் முஸ்லிம்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நபியும் தமக்கு வழங்கப்பட்ட பணியில் எள்முனையளவும் குறை வைக்கவில்லை; விலை போக வில்லை; மனிதர்களுக்கு அஞ்சவில்லை; மறுமையை விட இவ்வுலகைப் பெரிதாக நினைக்கவில்லை. இப்படி எல்லாத் தூதர்களுமே சிறந்து விளங்கினார்கள் என்று நம்ப வேண்டும் என்பது தான் இதன் கருத்து.
கிருஸ்தவர்கள் ஈசா நபி பிறந்த தினத்தை கிருஸ்துமஸ் என்று கொண்டாடுகிறார்கள் .அதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை என்று எதிர்க்கும் நாம் ,அதே போன்று ஆதாரம் இல்லாத முகம்மது நபியின் பிறந்த தினம் என்று சொல்லும் இந்த நாளையும் மிலாது நபியையும் கொண்டாட எப்படி முடியும் என்று சிந்திப்பது இல்லை .
அதில் உள்ள ஷிர்க்கான வார்த்தைகளை கணக்கில் கொள்ளாமல் மேலோட்டமாக பார்த்தாலே இது தவறு என்று படவில்லையா ?
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.