கடல்கரைத் தெருவில் காட்சி தந்த ஹாஜா ஒலி அப்பாவின் மருமகள் !
பெண் அவ்லியாவிற்கு தேவையான வளையல்கள் அவரின் அருகில் வைக்கப்பட்டுள்ளது. நல்ல வேலை வளையல்லோடு நிறுத்திக்கொண்டார்களே!! |
அதிராம்பட்டிணத்தில் முஸ்லிம்களை நரகத்திற்கு அனுப்ப மூன்று விசேஷ இடங்கள் உள்ளன. ஒன்று மேலத்தெருவில் உள்ள தர்ஹா, இரண்டு கடல்கரைத் தெருவில் உள்ள தர்ஹா, மூன்று புது தெருவில் உள்ள தைக்கா என்ற தர்ஹா. காலம் காலமாக நமது முன்னோர்களை வழிகெடுக்க இந்த நாற்றம் எடுத்த தர்ஹாககள் காரணமாக இருந்தன. |
அல்லாஹ்வின் அருளால், தமிழகத்தில் ஏற்பட்ட தவ்ஹீத் புரட்சியினால், ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த இந்த தர்ஹா வழிபாடு இன்று இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தர்ஹா வழிபாட்டை ஆதரித்து மக்களை வழிகெடுக்கும் குட்டி ஆலிம்சாக்கள் இன்று வழிகேடராக அதிரையில் உள்ள 95 சதிவீத மக்களால் பார்க்கப்படுகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழகத்தில் இருக்கும் தர்ஹாக்களில் பலவற்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ளாதாக சொல்லப்படும் மகான்கள் (என்று சொல்லப்படுபவர்கள், யார் மகான் என்பது அல்லாஹ்விற்கு மட்டும் தான் தெரியும்) உண்மையில் அங்கு வரவுமில்லை அங்கே அடக்கம் செய்யப்படவுமில்லை என்று பல காலமாக தவ்ஹீத் ஜமாஅத் சொல்லி வருகிறது.
பல இடங்களில் கழுதை, குரங்குளை அடக்கம் செய்து வைத்து தான் மகான் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். இதை உண்மைப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் அதிராம்பட்டிணத்தில் நடந்துள்ளது.
அதிரை கடல்கரை தெரு தர்ஹாவிற்கு வரும் பெண்கள் தங்கி, சமைத்து சாப்பிடும் ஒரு இடம் உள்ளது. கடந்த வாரம் புதிதாக ஒரு கப்ர் திடீர் பிள்ளையார் போல திடீர் கப்ர் உருவாக்கியுள்ளார்கள்.
அட மடையர்களே, எவனும் சாகவில்லை, யாருக்குடா இந்த கப்ர் என்று கேட்டால், அவ்லியா பக்தர்கள் சொல்லும் கதை அவர்களின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. புதிகாக முளைத்துள்ள கப்ரில் இருப்பவர் ஒரு பெண் அவ்லியாவாம். யாருடா இது என்று கேட்டால், கடல்கரைத் தெருவில் உள்ள ஹாஜா ஒலி அப்பாவின் மருமகளாம்.
மக்கத்து காஃபிர்கள் கூட அடக்கம் பண்ண ஒரு மைய்யத் இல்லாமல் ஒரு அடக்கஸ்தலம் உருவாக்க வில்லை. இன்று ஒரு மைய்யத் கூட இல்லாமல் திடீர் கட்டடம் உருவாக்கி அதை ஜொகரா அம்மாள் பீவி கப்ர் என்று சொல்கிறார்கள்
அடக்கம் செய்யாமலே கப்ர் கட்டும் இவர்களின் உண்மை முகம் இப்போது வெளிப்பட்டுள்ளது. பாக்தாதில் பிறந்த அப்துல் காதர் ஜெய்லானி என்பவருக்கு இந்தியாவின் பல இடங்களில் கப்ர் உள்ளது. இந்த அப்துல் காதர் ஜெய்லானி அவர்கள் இந்தியாவிற்கு வந்தார் என்பதற்கே ஆதாரம் இல்லை. ஆனால், பல இடத்தில் செத்து அடக்கம் செய்ததாக கப்ர் வணங்கி மதத்தினர் மக்களை ஏமாற்றுகிறார்கள். அந்த வகையில் நம்ம ஊரில் உள்ள கப்ர் வணங்கிகளும் தங்களின் உண்மை முகத்தை காட்டியுள்ளனர்.
இந்த கப்ர் சிந்தனை திடீர் என்று எப்படி வந்தது என்று அதன் நிர்வாகிகளை கேட்டதற்கு அவர்கள் சொன்ன கதை என்ன தெரியுமா?
இவர்களுடைய கனவில் போய் அந்த அம்மா சொன்னிச்சாம் விலை வாசி எல்லாம் நன்றாக ஏறி கொண்டு இருக்கிறதே இந்த காலத்தில் 2 உண்டியல் எப்படி பத்தும் ? ஆக நான் வெயிலிலும் மழையிலும் கிடப்பது உங்களுக்கு தெரிய வில்லையா ?எனக்கு ஒரு உண்டியல் வைத்தால் நல்லா கல்லா கட்டலாமே என்ற அறிவு கூட உங்களுக்கு இல்லையா என்று கேட்டுச்சாம்.
உடனே இவர்கள் அதிரடியாக கட்டடம் கட்டி அதற்கு ஜொகரா அம்மாள் பீவி கப்ர் என்று பெயரும் வைத்து விட்டார்கள்
கனவில் வந்து சொன்னார் என்றால் யாரும் ஆதாரம் கேட்க முடியாது அல்லவா? அதற்கு தான் கனவு என்ற ஆயுதம்.
தரிசாக கிடந்த இடம், பிணமே இல்லாமல் கப்ர் ஆகும் போது,கபுர் எப்படி தர்காவாகின்றது என்பது நமக்கு விளங்காதா ?
மாற்று மத சகோதரர்கள் மரத்தடியிலும், எல்லை கல் அடியிலும் ஒரு உண்டியல் வைப்பார்கள் அது பிறகு கோவிலாக உருவெடுக்கும். அது அவர்கள் வழி. ஆனால் இஸ்லாத்தில் தர்கா வழிபாடே கூடாது என்று இருக்க உண்டியல் வைத்து வயிற்று பிழைப்பு பிழைக்க நினைக்கும் நிர்வாகிகள் மரத்தடியில் உண்டியல் வைத்தால் கல்லா கட்ட முடியாது என்பதை விளங்கி செங்கல் செலவில் உண்டியல் வைத்து ஒரு கனவு என்று கதை சொன்னால் போதும் தர்கா உருவாகிவிடும்.
அதன்பின் மண் செங்கல் ஆகும் செங்கல் கட்டடம் ஆகும் கட்டடம் கப்ர் ஆகும் .கப்ர் தர்காவாகும். பத்தி வரும் சாம்பிராணி வரும் பூஜை பண்ண சாமியார் வருவார் அவரை உள்ளே வைத்து கதவை மூடி கொல்லவும் முடியும்
அவ்லியா வச்ச ஆப்புக்கு பரிசு புதிய கப்ர்:
சமீபத்தில் இதே தர்ஹாவில் அவ்லியாவின் சேவகர் ஒருவரை பலி வாங்கினார் ஹாஜா ஒலி அப்பா அவ்லியா. அதற்கு பரிசாக தான் ஒரு புதிய கப்ரை கட்டியுள்ளனர் அதிரை கப்ர் வணங்கிகள்.
அனைவராலும் எதிர்க்கப்படும் கப்ர் வணக்கம்:
ஒரு காலத்தில் அல்லாஹ்விடம் மட்டும் கேளுங்கள் என்றால் அடித்து துவைத்து விடுவார்கள். ஆனால், இன்று கப்ர் வணக்கத்தை நமதூரில் உள்ள மக்களில் 95 சதவீத்தினர் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
ஒரு நாள்:
இன்ஷா அல்லாஹ், இந்த கப்ர் வணக்கம் ஒரு நாள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
புது கப்ருக்கு எதிர்ப்பு, பழைய கப்ருக்கு ஆதரவு (?):
புதிதாக முளைத்துள்ள இந்த கப்ருக்கு நமது ஊரில் உள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு காட்டியுள்ளார்கள். பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால், ஏற்கனவே, ஒரு சில பள்ளிவாசல் வளாகத்திலேயே கப்ர் உள்ளது. இதை இவர்கள் எதிர்ப்பதாக தெரியவில்லை. அது மட்டுமல்லாமல், அந்த பள்ளிகளிலேயே இவர்கள், ஷிர்க் வைக்கும் இமாமை பின்பற்றி தொழுது வருகிறார்கள். இது இரட்டை முகமான செயல் என்பதில் சந்தேகம் இல்லை. இவற்றையும் எதிர்ப்பது உடன், இவர்களை பின்பற்றி தொழுவதையும் தவிர்க்க வேண்டும்.
கப்ர் வணக்கத்தை வளர்க்கும் இரு மதரஸாக்கள்:
கப்ர் வணக்கத்தை எதிர்க்கும் நம்மில் சிலர் ஏதோ ஒரு சிலர் அறியாமல் கப்ர் வணக்கத்தில் ஈடுபடுகிறார்கள் என்று நம்புகிறார்கள். நமது ஊரில் கப்ர் வணக்கத்தை வளர்ப்பதே இரு மதரஸாக்கள் தான். இந்த மதரஸாக்களில் ஓதியவர்கள் தான் தர்ஹாக்களில் பாத்திஹா ஓதி இணைவைப்பு காரியத்தை ஆரம்பித்து வைக்கிறார்கள். சிலர் இவற்றை ஆதரித்து கொண்டு, கப்ர் வணக்கத்தை எதிர்க்கிறார்கள். இந்த மதரஸாக்களை ஒழிக்காத வரை கப்ர் வணக்கம் ஒழியாது. இந்த மதரஸாக்கள் மார்க்கத்தை போதிக்கின்றன என்று நிதி உதவி செய்பவர்கள் சற்று சந்திக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் பணம் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் கொடிய பாவத்தை அரங்கேற்றத்தான்.
யார் சொன்னது இந்த மதரஸாக்கள் தான் கப்ர் வணக்கத்தை போதிக்கிறது என்று யாராவது வாதம் செய்வார்களானால், அவர்களுக்கு நாம் விடும் சவால் இது தான். இந்த மதரஸாக்களில் தர்ஹா கட்டுவது, அதில் போய் முட்டுவது, தர்ஹாவில் கச்சேரி வைத்து, அதில் 'கொய்யா காய்க்கு ஆசைப்பட்டு, கொலுந்தநாரை வைச்சு கிட்டேன்' என்று சினிமா பாட்டு பாடி அவ்லியாவை தரிசிப்பது இது எல்லாம் தவறு என்று பகிரங்கமாக அறிவிக்க சொல்லுங்கள் (கியாமத் நாள் வரை இது மட்டும் நடக்காது).
தர்காக்கள் உருவான விதம் அல்லாஹ் நமக்கு விளங்க வைத்த ஏற்பாடு !
வயிற்று பிழைப்புக்காக மார்க்கத்தை விற்கும் சுயநலவாதிகளே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
ரசூலுல்லாஹ் அடக்கஸ்தலத்தை தானே வணக்கஸ்தலமாக ஆக்க கூடாது என்று சொன்னார்கள். நாங்கள் எங்கே அடக்கஸ்தலத்தை வணக்கஸ்தலமாக ஆக்கினோம் வெறும் தரிசு தானே என்று சொல்லி தப்பிக்க முடியாது.
மெலூதை கண்டித்து தக்வா பள்ளி அருகில் நடந்த தெருமனை பிரச்சாரத்தில் புதிதாக முளைத்துள்ள பொம்பளை அவ்லியாவை கண்டித்து உரையாற்றப்பட்டது.
7 கருத்துரைகள் :
உங்களின் இப்பதிவை அதிரை நியூஸ்ஸில் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.
மிக்க நன்றி !
http://theadirainews.blogspot.in/2013/01/blog-post_1217.html
வயிற்று பிழைப்புக்காக மார்க்கத்தை விற்கும் சுயநலவாதிகளே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் .
Allah has blocked their ears. No one il get right path neigther allah whose liked.
//"யார் சொன்னது இந்த மதரஸாக்கள் தான் கப்ர் வணக்கத்தை போதிக்கிறது என்று யாராவது வாதம் செய்வார்களானால், அவர்களுக்கு நாம் விடும் சவால் இது தான். இந்த மதரஸாக்களில் தர்ஹா கட்டுவது, அதில் போய் முட்டுவது, தர்ஹாவில் கச்சேரி வைத்து, அதில் 'கொய்யா காய்க்கு ஆசைப்பட்டு, கொலுந்தநாரை வைச்சு கிட்டேன்' என்று சினிமா பாட்டு பாடி அவ்லியாவை தரிசிப்பது இது எல்லாம் தவறு என்று பகிரங்கமாக அறிவிக்க சொல்லுங்கள் (கியாமத் நாள் வரை இது மட்டும் நடக்காது)."//
பாவம் அநியாமாக பாவச்சுமைகளை அள்ளிக்கொல்கிரீர்கள்.
நீங்கள் எழுதியவைகளில் எல்லாம் படிக்கும்படி இருந்தது. இந்த நாட்டில் எழுத்து சுதந்திரம் உள்ளது என்பதற்காக எதையும் எழுதி விட்டால் மேதாவி என்று நினைத்துவிட வேண்டாம்.
எழுதிய உங்களுக்கு தைரியம் இருந்தால் இந்த மதரசாக்களில் சென்று கபுருகளை வணங்குகிறீர்களா ஜியாரா பண்ணுகிறீர்களா என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மடையர்கள் சிலர் பண்ணுகிறார்கள் என்பதற்காக இப்படி நினைத்ததை எல்லாம் எழுதி பாவத்தை அள்ளி கொட்டிக்கொல்லாதீர்கள். உங்களுடைய அகராதியில் ஜியாரா என்றால் வணக்கம் என்று இருந்தால் உங்களை திருத்த முடியாது. உண்மையில் நீங்கள் விபரம் தெரியாமல் வணங்குபவர்களை திருத்த வேண்டும் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஜியாரா செய்ய வேண்டிய முறையை விளக்க வேண்டும். அதுதான் உண்மையான தௌஹீத் வாதிக்கு அடையாளம். சரி கந்தூரி நடத்தும் விதம் சரிய்ல்லைதான், ஆனால் உங்கள் வீடுகளில் தினசரி கந்தூரி நடக்கிறதே அது உங்களுக்கு தெரியுமா? டிவி, இன்டர்நெட் என்னும் ஷைத்தான்களை வீடுகளில் வைத்துக்கொண்டு த.த.ஜ வெப்சைட் மட்டுமா பார்கிறார்கள், நியூஸ் பார்கிறேன் என்று சினிமாக்கள், சீரியல்கள், இன்டர்நெட் வைத்துக்கொண்டு பலான காட்சிகள் பார்ப்பதும் கந்திரிதான் என்பதை மறந்துவிட வேண்டாம். நாம் ஊரைதிருத்த்முன்னர் நம்மை திருத்திக்கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிட்டு செயல்பட்டால் ஊரில் மாற்றம் வராது.
ஆமா ஆமா உங்கள் PJ மற்றும் குழுவினர் மட்டும் சீடி, கேசட், தர்ஜமா, புத்தகங்கள் இலவசமாக கொடுக்கிறீர்கள், இலவசமாக
பிரசங்கங்கள் செய்கிறார்களாக்கும். எல்லாமே வியாபாரம்தான். பிறரை குற்றம் காணும் முன் நம்மை பற்றி சற்று சிந்தித்து கொள்வோமாக.
//ஆமா ஆமா உங்கள் PJ மற்றும் குழுவினர் மட்டும் சீடி, கேசட், தர்ஜமா, புத்தகங்கள் இலவசமாக கொடுக்கிறீர்கள், இலவசமாக
பிரசங்கங்கள் செய்கிறார்களாக்கும். எல்லாமே வியாபாரம்தான். பிறரை குற்றம் காணும் முன் நம்மை பற்றி சற்று சிந்தித்து கொள்வோமாக.//
சகோ. அகமது அஸ்லம் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கிற்கு விலை செல்வது போல் உள்ளது உங்களின் கருத்து.
தர்ஜூமா, சிடி, புத்தகம் இவற்றை எல்லாம் பிடிண்ட் செய்ய ஆகும் செலவு, சிடி மற்றும் அதை தயாரிப்பதற்க்கான செலவு இவற்றை வைத்து விலை நிர்ணையம் செய்யப்படுகிறது. புத்தகம், தர்ஜூமா, சிடி போன்றவைகள் இலவசமாகவும் பல நேரங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தால் கொடுக்கப்படுகிறது. இது என்னவோ தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் செய்வது போல் உளறியுள்ளீர்கள். இதை தான் எல்லா தரப்பினரும் செய்கிறார்கள்.
உங்கள் அவ்லியாவிடம் சொல்லி வேண்டுமானால், செலவுக்கான தொகையை ஏற்றுக்கொண்டால், தவ்ஹீத் ஜமாஅத் அவற்றை இலவசமாக வழங்கும்.
சகோ. தவ்பீக் அகமது அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
//பாவம் அநியாமாக பாவச்சுமைகளை அள்ளிக்கொல்கிரீர்கள்.
நீங்கள் எழுதியவைகளில் எல்லாம் படிக்கும்படி இருந்தது. இந்த நாட்டில் எழுத்து சுதந்திரம் உள்ளது என்பதற்காக எதையும் எழுதி விட்டால் மேதாவி என்று நினைத்துவிட வேண்டாம்.
எழுதிய உங்களுக்கு தைரியம் இருந்தால் இந்த மதரசாக்களில் சென்று கபுருகளை வணங்குகிறீர்களா ஜியாரா பண்ணுகிறீர்களா என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். //
இதில் எங்களின் தைரியத்தை நீங்கள் சோதிக்க வேண்டியது இல்லை. உங்களுக்கு தைரியம் இருந்தால் தர்ஹாவில் போய் முட்டுவது, பெம்பளையை தொடை தெரிய ஆட வைப்பது, அங்கு போய் பாத்திஹா ஓதுவது, குடிகாரர்களை கந்தூரியில் குத்தாட்டம் போட வைப்பது இவை எல்லாம் தவறு என்று அவர்களிடம் ஃபத்வா வாங்கி எங்களின் இணையதளத்திற்கு அனுப்பி வையுங்கள். இது நடந்தால் நாங்கள் அவர்களை பாராட்டி கட்டுரை எழுதுவோம், இன்ஷா அல்லாஹ். அவர்கள் அதை செய்ய மாட்டார்கள் என்பது நீங்கள் முயற்சி செய்தால் புலப்படும்.
//மடையர்கள் சிலர் பண்ணுகிறார்கள் என்பதற்காக இப்படி நினைத்ததை எல்லாம் எழுதி பாவத்தை அள்ளி கொட்டிக்கொல்லாதீர்கள். //
கந்தூரி நடத்துப்வர்கள் மடையர்கள் ஒத்துக்கொண்டதற்கு நன்றி. மடையர்கள் நடத்துகிறார்கள் என்றால் அதில் பாத்திஹா ஓதி துவக்கி வைப்பவன் யார்? ஆலிம்கள் என்ற பெயரில் இருக்கும் பூசாரிகள் தானே? அந்த ஆலிம் எங்கே படித்தான்? நீங்கள் குறிப்பிடும் குப்பை மதரஸாவில் தான் படித்தான்.
//உங்களுடைய அகராதியில் ஜியாரா என்றால் வணக்கம் என்று இருந்தால் உங்களை திருத்த முடியாது.//
ஜியாரத் செய்வது நபிவழி. ஜியாரத் என்றால் கப்ர் ஸ்தானத்திற்கு சென்று மறுமையை நினைவு கூறுவது. தர்ஹாவிற்கு சென்று பெண்களை வைத்து தொடை தெரிய ஆட்டம் போடுவதை பார்ப்பது ஜியாரத் அல்ல. கப்ர்களை வணக்கஸ்தலமாக ஆக்குவது ஜியாரத் அல்ல. எது ஜியாரத் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஜியாரத் என்றால் மண்ணறையை சந்தித்தல் என்று பொருள். ஆனால், கப்ர் வணங்கிகள் இதை ஆண்களும் பெண்களும் சங்கமிக்கும் இடமாக மாற்றியுள்ளனர்.
கப்ர்களை விழா கொண்டாடும் இடமாக ஆக்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்களில் வழிகாட்டுதலை பின்பற்றினீர்களா?
//உண்மையில் நீங்கள் விபரம் தெரியாமல் வணங்குபவர்களை திருத்த வேண்டும் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஜியாரா செய்ய வேண்டிய முறையை விளக்க வேண்டும். அதுதான் உண்மையான தௌஹீத் வாதிக்கு அடையாளம்.//
நரகத்திற்கு நான் போயே தீருவேன் என்று பந்தயம் கட்டியவரை போல பேசுகிறீர்கள். ஜியாரத் என்று கப்ர் ஸ்தானத்தில் செய்ய வேண்டியது, தர்ஹா என்பது கோவில். அது கப்ர் ஸ்தானம் அல்ல. கப்ர் ஸ்தான் எப்போது பூட்டி தான் கிடக்கிறது. அங்கே போய் மறுமையை நினைவு கூறுங்கள், நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆவை ஓதுங்கள். தர்ஹாகளில் போய் முட்டாதீர்கள் என்று கப்ர் வணங்கிகளுக்கு சொல்லுங்கள்.
//சரி கந்தூரி நடத்தும் விதம் சரிய்ல்லைதான், ஆனால் உங்கள் வீடுகளில் தினசரி கந்தூரி நடக்கிறதே அது உங்களுக்கு தெரியுமா? டிவி, இன்டர்நெட் என்னும் ஷைத்தான்களை வீடுகளில் வைத்துக்கொண்டு த.த.ஜ வெப்சைட் மட்டுமா பார்கிறார்கள், நியூஸ் பார்கிறேன் என்று சினிமாக்கள், சீரியல்கள், இன்டர்நெட் வைத்துக்கொண்டு பலான காட்சிகள் பார்ப்பதும் கந்திரிதான் என்பதை மறந்துவிட வேண்டாம். நாம் ஊரைதிருத்த்முன்னர் நம்மை திருத்திக்கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிட்டு செயல்பட்டால் ஊரில் மாற்றம் வராது.//
கப்ர் வணக்கம் நிரந்தர நரகத்திற்கு இட்டுச் சொல்லும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தொடர்ந்து உங்களின் எதிர் கேள்விகளை பதியவும்.
வஸ்ஸலாம்.
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.