Thursday, July 03, 2014

ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம்

ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம்


ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமா கும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர் மத்தை வழங்குவது அவசியம் ஆகும். ஒரு ஸாவு என்பது சுமார் இரண்ட ரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.

நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்

 இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமை யாக்கப்பட்டுள்ளது.

 நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாக வும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கி னார்கள்.

 அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

 நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்க ளின் சார்பில் வழங்கும்போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.





 ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுத்தல்

 ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.

 ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்க ளில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யமன் பகுதிக்கு அனுப்பினார்கள்.

 (புகாரி 1395, 1496, 4347)



 அவர்களில் ஏழைகள், அவர்களில் செல்வந்தர்கள் என்பது அந்த ஊரைச் சேர்ந்த ஏழைகள், அந்த ஊரைச் சேர்ந்த செல்வந்தர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதா?

 முஸ்லிம்களில் உள்ள செல்வந்தர்கள், முஸ்லிம்களில் உள்ள ஏழைகள் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளதா? இரண்டுக்கும் இடம் தரக் கூடிய வகையில் இது அமைந்துள்ளது.

இரண்டாவது கருத்தில்தான் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்ப தைப் பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கிறது.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் கோத்திரத்தின ரிடம் ஜகாத்தைத் திரட்ட ஒருவரை நியமனம் செய்தார்கள். அவர் வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள். இது உங்களுக்கு உரி யது; இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது” என்று அவர் கூறினார்... (புகாரி 6979)

 பனூ சுலைம் கூட்டத்தார் மதீனாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். வேறு பகுதி யைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் வசூலித்த ஜகாத்தை அந்த நபித்தோழர் நபிகள் நாயகத்திடம் மதீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு இடத்தில் வசூலித்து இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம் என்பதை இந்த ஹதீஸி லிருந்து அறியலாம்.

 எனவே ஜகாத்தாக இருந்தாலும் ஃபித்ராவாக இருந்தாலும் ஒரு இடத்தில் திரட்டி இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம்.

 மேலும் ஏழைகளுக்கு உணவாக பயன்படுவதற்காகவே ஃபித்ரா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

 வசதிபடைத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் திரட்டி ஏழைகள் அதிகம் வாழும் பகுதியில் விநியோகம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. பொருள் வசதி படைத்த நாடுகளில் வசிப்போர் ஏழைகள் வசிக் கும் பகுதிக்கு அனுப்பினால்தான் ஃபித்ராவின் இரண்டு நன்மைகளையும் பெற முடியும்.

சென்ற வருடங்களில் நமது அதிரைக்கு  ஃபித்ரா வசூல் செய்த நமது ஊர் சகோதரர்கள் தெருவுக்கு தெரு அதாவது  மேலத் தெருவில் வசூல் செய்து மேலத் தெருவில் விநியோகம் செய்வது போன்று ஒவ்வொரு தெருவுக்கும் தனித்தனியாக வசூல் செய்தார்கள்

இது போன்று நமது ஊரின் ஒவ்வொரு தெருவின் சகோதரர்களும் ஃபித்ரா கொடுக்கும் சக்தி பெற்ற நிலையில் இல்லை என்பதே கண்கூடு

வசதி படைத்தவர் வசதி இல்லாதவர்களுக்கு ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்ற நிலைபாட்டின் படி ஏழைக்கு கொடுக்க வேண்டும் என்பதை மட்டும் நோக்கமாக கொண்டு ஜாஹிலியா காலத்தை போன்று தெரு பாகுபாடு ,ஊர் பாகுபாடு பாராமல் ஏழை என்ற ஒரே பார்வையில் சகோதரர்கள் தங்கள் ஃபித்ரா தொகையை வழங்குங்கள்

வளைகுடாவில் வாழும் அதிரை சகோதரர்கள் தங்களுக்கும், தங்கள் வருமானத்தில் சார்ந்து இருப்பவர்களுக்கும் உள்ள கடமையான ஃபித்ரா தொகையை கீழ்க்கண்ட சகோதரர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • அல் அய்ன் & அபுதாபி ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. ஜஃபருல்லாஹ் @ +971507510584
  • துபாயில் ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. நஸீர் @ +971501545251 மற்றும் ஷாகுல் 00971505063755
  • அமீரக வடக்கு மண்டலம் (ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குஅய்ன் & ஃபுஜைரா) ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. பிஸ்மில்லாஹ் கான் @ +971503576076
  • மற்ற நாடுகளில் உள்ளவர்கள், அருகிலிருக்கும் TNTJ கிளையின்மூலம் அனுப்பவும்.


ஏன் எங்களுக்கு கொடுக்கவேண்டும்?
·         வசூலிக்கப்படும் தொகை, நம்மூருக்கு தேவைப்படும் அளவிற்கு அனுப்பப்படுகிறது
·  நம்மூரில் உள்ள உரியவர்களுக்கு கொடுத்த பின், மீதம் இருக்கும் ஃபித்ரா தொகை, பிற ஊர்களில் இருக்கும் ஏழைகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
·         விநியோகிக்கப்பட்ட ஃபித்ரா தொகையின் விபரம் கொடுக்கப்படும்.

எங்களின் இந்த ஃபித்ரா (நோன்பு பெருநாள் தருமம்) நிதி திரட்டும் பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.