Monday, July 21, 2014

தாருத் தவ்ஹீத் அமைப்பை சார்ந்த மீடியா மேஜிக்கர் நிஜாமுதீன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு விவாத சவடால் விட்டாரா? - மீடியா மேஜிக்கரின் இருட்டறை சவாலை ஏற்கிறோம்

தாருத் தவ்ஹீத் அமைப்பை சார்ந்த மீடியா மேஜிக்கர் நிஜாமுதீன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு விவாத சவடால் விட்டாரா? - மீடியா மேஜிக்கரின் இருட்டறை சவாலை ஏற்கிறோம்!

சொந்த காசில் சூனியம் வைப்பது இதுதானா?
பிஜேவுக்கு சூனியம் வைக்கின்றேன் என்று
சொல்லி முர்ஷித் எனக்கு சூனியம் வைச்சுட்டாரே!
 
இலங்கையிலிருந்து கூலிக்கு பிடித்து வரப்பட்ட, காமம் தலைக்கு ஏறினால் தாய் சகோதரி என்று கூட பார்க்க மாட்டேன் என்று சொன்ன முஜாஹிதின் என்ற பேடியின் சூனிய மாணவர் முர்ஷித் அப்பாஸி என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை சூனிய சவாலை ஏற்க முடியாமல், விளக்கம் தருகிறேன் என்ற பெயரில் ஒரு உரை நிகழ்த்தினார், அதற்கான பதிலடி நேற்று நமது தளத்தில் வெளியடப்பட்டுள்ளது. நமக்கு விளக்கம் தருகையில் முர்ஷித் அப்பாஸி என்பவர் ஒரு கருத்தை முன்வைத்தார், அதாவது அதிரையை சார்ந்த மீடீயா மேஜிக் என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பை சார்ந்தருமான நிஜாமுதீன் என்பவர் அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தை பல முறை விவாதத்திற்கு அழைத்ததாகவும், தவ்ஹீத் ஜமாஅத் அவரின் விவாத சவாலை கண்டு வெருண்டு ஓடுவதாகவும் குறிப்பிட்டார். 

தவ்ஹீத் ஜமாஅத் விவாதத்தை கண்டு ஓடுகிறது என்றால் தவ்ஹீத் ஜமாஅத்தின் எதிரிகள் கூட நம்பமாட்டார்கள். கப்ர் வணங்கிகள், சுன்னத் வல் ஜமாஅத்தினர், தப்லீக் ஜமாஅத்தினர், கிறிஸ்தவர்கள், தி.க.வினர், காதியானிகள், அஹ்லே குர்ஆன் அமைப்பினர் இப்படி அனைத்து வழிகெட்டவர்களையும் விரட்டி பிடித்து விவாதம் செய்யும் தவ்ஹீத் ஜமாஅத், காலையில் இருந்து மாலை வரை மார்க்கத்திற்க்காக (?) விவாதம் செய்து விட்டு, ஆறு மணி சினிமா காட்சிக்கு பட்டுக்கோட்டைக்கு (அதிரையில் தியேட்டர் இல்லை) படை எடுக்கும் கொள்கை குன்றுகள் ஒரு பொருட்டா என்ன? 

முதலில் முர்ஷித் அப்பாஸி குறிப்பிட்டதை போல தாருத் தவ்ஹீத் அமைப்பை சார்ந்த மீடியா மேஜிக்கர் நிஜாமுதீன் தவ்ஹீத் ஜமாஅத்தை விவாததிற்கு அழைத்து இருந்தால், அது பற்றிய விபரத்தை வெளியிட வேண்டும்.

விவாத சவாலை பற்றி விரிவாக பேசுவதற்கு முன், மீடியா மேஜிக்கரை பற்றி சில விஷயங்களை சொல்லியாக வேண்டும். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு என்ற அமைப்பில் இருந்தவர் இந்த நிஜாம். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவராக இருந்த ஹாமீத் பக்ரி என்பவர், அரசாங்கத்திற்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுப்பட்ட காரணத்தினால், ஹாமீத் பக்ரி அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டார். அன்றைக்கு தமுமுகவும், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பும் ஒரே குடையின் கீழே இருந்தது. ஹாமீத் பக்ரிக்கு தமுமுகவும் டாட்டா காட்டி உதவ மறுத்துவிட்டது. இந்த நேரத்தில் ஹாமீத் பக்ரி மீது கொண்ட பக்தியின் காரணத்தினால், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் முடிவில் கருத்து வேறுபாடு கொண்டு சிலர் அதிரையில் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பை விட்டு பிரிந்து சொன்றார்கள். அதில் இந்த மீடியா மேஜிக்கரும் ஒருவர். இதன் பின்னர், ஹாமீத் பக்ரி கப்ர் வணங்கியாக மாறிபோனார். ஹாமீத் பக்ரி கப்ர் வணங்கியாக மாறிய பிறகும் கூட மீடியா மேஜிக்கர் கூட்டணி ஹாமீத் பக்ரியுடன் தொடர்பில் இருந்தது ஊரில் அனைவருக்கும் தெரிந்த ரகசியம்.

அடுத்து, மீடியா மேஜிக்கர் அனைத்து தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பில் இருக்கிற நேரத்திலேயே காலை முதல் மாலை வரை தவ்ஹீத் கொள்கைக்காக விவாதம் செய்வார்(இன்னும் சிலருடன்), மாலை ஆனவுடன் பட்டுக்கோட்டைக்கு சினிமா பார்க்க சென்றுவிடுவார்கள். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் இவர்கள் இருந்த நேரம் எப்படிப்பட்டது என்றால், தவ்ஹீத் ஜமாஅத் என்று சொல்லக்கூடியவர்கள் என்ன தான் சொல்லுகிறார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்தது. இவர்கள் விவாதமும் செய்துவிட்டு, சினிமாவுக்கு செல்லக்கூடியவர்களாக இருந்ததால், தவ்ஹீத் கொள்கையை பலர் வெறுக்கலாயினர். இவர்கள் தான் அன்று அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் முகவர்களாக செயல்பட்டார்கள் என்பது வருத்தமான செய்தி.

மேலும், இந்த மீடியா மேஜிக்கர் ஒரு புகழ் விரும்பி என்பதும், எதையாவது செய்து (கேவலப்பட்டால் கூட) புகழ் தேட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்களிடம் பேசுவதை கூட இந்த கூட்டணியினர் தவிர்ப்பார்கள். மீடியா மேஜிக்கர் அடிக்கடி தன் இருப்பை காட்டுவதற்காக எதையாவது செய்வார், யாரும் இவரை கண்டுகொள்ளமாட்டார்கள். சிறிது காலம் அமைதியாக இருந்து விட்டு, மீண்டும் எதையாவது செய்வார். இது இவரின் வாடிக்கை. நான் பிஜேவிற்கு கடுதாசி போட்டேன், பிஜே எனக்கு பதில் தரவில்லை, பயந்து விட்டார் என்று அடிக்கடி சொல்லி புலங்காயிதம் அடைவார். சரி, நீங்கள் என்ன கடிதம் எழுதினிர்கள், அதை பகிரங்கமாக காட்டுங்களேன் என்றால், அந்த கடிதமா? எந்த கடிதம், அந்த கடிதம் ரகசியமானது, காட்ட முடியாது, காட்டக்கூடாது என்று புலம்புவார். இந்த புராணத்தை ஹாமீத் பக்ரி அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டது முதல் மீடியா மேஜிக்கர் பாடி வருகிறார். இவரின் பேச்சை இது வரை யாரும் கேட்டதாக தெரியவில்லை. இவருடன் இருப்பவர்கள் கூட, இவர் ஒரு ஜோக்கர் என்று தெரிந்து தான் வைத்துள்ளார்கள்.

ஹாமீத் பக்ரி சாப் உங்களை நம்பி நாங்க பிரிந்தோம், எங்களை இப்படி தர்ஹாவில் வந்து நிறுத்திட்டீகளே! கூட்டு துஆ ஓத வைச்சுட்டீளே!
சமீபத்தில் வாட்ஸ்அப்பில்(WhatsAp ல்) ஒரு சகோதரருடன் இதே கதையை அளக்க ஆரம்பித்தார், அந்த சகோதரர் தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளையை தொடர்பு கொண்டு, மீடியா மேஜிக்கர் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் ஓடுவதாக சொல்லுகிறாரே, இது உண்மையா என்றார். அதற்கு யார் அவர் அவரை நமது இணையதளத்தில் தமது சவாலை முன்வைக்க சொல்லுங்கள் என்றோம். நான் அல்பானியின் மாணவன் என்று சொல்லி திரிந்த இலங்கைக்காரனின் அடிமைகள் சிலர் அதிரையில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக சவால் விட்டபோது, அல்பானியின் மாணவர் என்பவரின் அனைத்து வாதங்களையும் தவிடுபொடியாக்கி, அல்பானியின் மாணவர் என்பவரின் கொள்கைக்கு இலங்கையிலும் இந்தியாவிலும் முடிவுரை எழுதியது யார் என்று அக்கம் பக்கம் விசாரித்து பாருங்கள். நாம் நமது இணையதளத்தில் மீடியா மேஜிக்கரின் சவாலை முன்வைக்க சொல்லுங்கள் என்று சொன்ன செய்தியை, மீடியா மேஜிக்கரிடம் சம்பந்தப்பட்ட சகோதரர் தெரிவித்து, இதற்கு நீங்கள் தயாரா என்ற போது, 'நான் எந்த இணையதளத்தையும் பார்ப்பது கிடையாது. எனவே, நான் அதற்கு தயார் இல்லை என்று ஒட்டம் எடுத்தார் மீடியா மேஜிக்கர் நிஜாமுதீன் என்ற அறிஞர்'. 

சவாலை ஏற்கிறோம்!

எது எப்படி இருந்தாலும், மீடியா மேஜிக்கர் நிஜாமுதீனின் சவாலை அதிரை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கிறது. சினிமா பார்ப்பவர்களுடன் விவாதிக்கும் அளவுக்கு பீஜேவோ அல்லது தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்ற தாயீக்களோ வேலையில்லதாவர்கள் இல்லை. எனவே, மீடியா மேஜிக்கர் நிஜாமுதீனின் விவாத சவாலை ஏற்று, நிஜாமுதீனின் அவதூறுகளுக்கு முடிவுரை எழுதி, அவரின் சகாப்த்தை முடித்து வைக்க நாம் தயார், இன்ஷா அல்லாஹ். 

மீடியா மேஜிக்கர் நிஜாமுதீன் எங்கு தான் விவாத சவால் விட்டதாக சொன்னாரோ, அந்த அமைப்பின் லட்டர் பேடில் தனது சவாலை முன்வைத்து அதை பதிவு தபாலில் தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளைக்கு இன்று (20.07.2014) முதல் 5 நாட்களுக்குள் (25.07.2014) அனுப்பி தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மீடியா மேஜிக்கர் நிஜாமுதீனிடம் நாமும் சில தலைப்புகளில் விவாதிக்க விரும்புகிறோம்: அதையும் நிஜாமுதீன் ஏற்க வேண்டும், அந்த தலைப்புகள்:

1. சினிமா இஸ்லாத்தின் எத்தனையாவது கடமை? (நிஜாம் அவர்களுக்கு இது இரண்டாம் கடமை என்று கேள்விப்பட்டுள்ளோம்).

2. வரதட்சணை திருமணத்தில் விருந்து திண்பது கடமையா? விரும்பத்தக்கதா?

இந்த இரண்டு  தலைப்புகளிலும் விவாதிக்க மீடியா புகழ் முன்வர வேண்டும்.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.