Saturday, February 22, 2014

தவ்ஹீத் ஜமாஅத்தின் இடஒதுக்கீடு போராட்டமும் நிருபர்களின் உளரல்களும்! - காப்பி பேஸ்ட் செய்து வசமாக மாட்டிய அறிவாளிகள் (?)

இவ்வளவு கூட்டம் கூடுதே! வயிறு எரியுதே என்ன செய்யலாம்?
கட்டுரை காப்பி அடிக்கலாமா?
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்க்காரன் என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்தது. இந்த பழமொழியை மாற்றி சிலர் பேனா எடுத்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்று காட்ட துவங்கியுள்ளார்கள்.

சமீபத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய சிறை செல்லும் போராட்டத்தை வஞ்ச புகழ்ச்சியோடு ஒரு கட்டுரையை ஒரு  தளம் உளறி  இருந்தது. அந்த கட்டுரையை படிக்கும் எவரும் இவர் என்ன தான் சொல்ல வருகிறார். ஆரம்பத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை பாராட்ட வேண்டும் என்கிறார். கடைசியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை கண்டிக்க வேண்டும் என்கிறார். நடுவில் இடஒதுக்கீடு அவசியம் என்கிறார், கடைசியில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்கிறார் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளும் (?) அளவில்தான் கட்டுரை ஆக்கியவரும் உருவாக்கியவரும் சொல்லுகிறார்கள் (ஆக்கியவருக்கும் உருவாக்கியவருக்கும் என்ன வித்தியாசம் என்று எல்லாம் யாரும் எங்களிடம் கேட்டுவிடாதீர்கள்). 

தாங்கள் ரொம்ப நடுநிலையாளர்கள் என்று காட்டுவதற்காக யார்மீதுள்ள வெறுப்பின் காரணத்தினால் இதை நாங்கள் எழுதவில்லை என்ற அண்டபுளுகளுடன் ஆரம்பமாகிறது கட்டுரை. நாணயத்தின் இருபக்கத்தையும் பார்க்க வேண்டுமாம்.

தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏழு சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததும், அதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தியதும் தவ்ஹீத் ஜமாஅத்தும் அதன் முக்கியஸ்தர்களும் தான். இதன் தொடர்ச்சியாக தான் கடந்த 2007 ஆம் ஆண்டு நமக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்தது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் கட்டுரையாளர் இந்த போராட்டங்களை முழுவதுமாக மறைத்து விட்டு திமுக, அதிமுக என்று மாறி மாறி வந்த ஆட்சியாளர்களுடன் ஒட்டுறவாக இருந்த முஸ்லீம் அரசியல் கட்சிகளாலும் இயக்கங்களாலும் உணர்த்தபடவுமில்லை என்று சொல்லி விட்டு சும்மா இருந்த கருணாநிதி தூக்கத்தில் கனவு கண்டு இடஒதுக்கீடு கொடுத்தது மாதிரி சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு 2008ல் இடஒதுக்கீடு கருணாநிதி கொடுத்தார் என்று சொல்கிறார் 2007 எப்படி 2008 ஆனது என்பதை பிறகு பார்போம்.

இன்று முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கிடு வேண்டும் என்று எல்லா முஸ்லிம் இயக்கங்களும் கேட்கின்றன. மேலும், அவர்களும் அவர்கள் பங்கிற்கு ஏதோ பேராட்டம் நடத்துகிறார்கள். இந்த நிருபர்கள் மற்ற இயக்கங்கள் இட ஒதுக்கிட்டிற்காக போராட்டம் நடத்தும் போது எல்லாம் மவுனமாக தான் இருந்தார்கள், இருப்பார்கள். தவ்ஹீத் வேடம் போடும் இந்த நிருபர்களின் நடுநிலை வேஷம் விரைவில் அம்பலப்படுத்தப்படும்.

ஒன்றுமே இல்லாத விஷயத்தை வான் அளவிற்கு உயர்த்தி எழுதுவது இந்த நிருபர்களின் தன்மை என்பதனால், ஒரு மிகப்பெரும் பொய்யுடன் பீடிகை போடுகிறார் கட்டுரையாளர். அதாவது, 'இட ஒதுக்கீடு வேண்டும் என்று சிறை நிரப்பும் போராட்டம் தேவையா? என்று வாதப்பிரதிவாதங்கள் ஊடங்களையும் கட்டுரை எழுதிய அண்ணன்மார்களையும் குலுக்கி எடுத்துவிட்டதாம். உடனே, பொங்கி எழுந்துவிட்டார்களாம். ஏன் இப்படி பில்டப்? எந்த ஊடங்களை இந்த விவாதம் உலுக்கியது? எத்தனை நபர்களை இந்த விவாதம் குலுக்கி எடுத்தது? விரல் விட்டு எண்ணக்கூடிய சில கிறுக்கர்களை தவிர, மற்ற அனைவரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை ஆதரித்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தை கடுமையாக எதிர்க்கக்கூடியவர்கள் கூட தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த போராட்டத்தை ஆதரித்தார்கள். உண்மை இப்படி இருக்கையில், இந்த நிருபர்கள் சற்றும் கூசாமல் பொய்களை அள்ளிவிசுகிறார்கள். இவர்களின் நோக்கம் ஏதாவது எழுதி பக்கத்தை நிரப்ப வேண்டும், கிறுக்குத்தனமாக எதை எழுதினாலும், ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுத சிலர் இருக்கிறார்கள் என்ற புகழ் போதை தான் இவர்களை இப்படி உளற வைக்கிறது. இட ஒதுக்கீட்டிற்காக சிறை நிரப்பும் போராட்டம் தேவையா என்று இவர்கள் கேட்க வரும் கேள்வி என்னவென்றால், சிறைகளை நிறைக்க வேண்டுமா? என்பது தான். இந்த மெத்த படித்த அறிவாளிகளுக்கு பொது அறிவு சற்றும் கிடையாது என்பதற்கு இவர்களின் கேள்வி சான்று. இவ்வளவு இலட்சம் மக்களை எந்த சிறைகளிலும் அடைக்க முடியாது, அடைக்கவுமில்லை.

படிக்க வேண்டியவர்களை சிறையில் ஏன் போய் அடைக்க பார்க்கிறீர்கள் என்பது போலத்தான் இவர்கள் கேட்கிறார்கள். அப்படியே சிறையில் அடைத்தாலும் நல்ல விஷயத்திற்காக சிறைக்கு சென்றால் என்ன தவறு? இவர்கள் பினாமியாக செயல்படும் தமுமுக ரயில் மறியல் போராட்டம் என்றெல்லாம் நடத்தியது, அப்போது கட்டுரை காப்பி வந்து ஏய் ரயிலை மறித்தால் ரயில் நிற்குமா? ஏன் இடஒதுக்கீட்டிற்காக தற்கொலை செய்ய போகிறீர்கள், ரயில் உங்கள் மேலே ஏறும் என்றல்லவா கேட்டு இருக்க வேண்டும். இந்த கேள்வி குறித்தும் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டம் குறித்தும் சலீம் என்ற தறுதலையின் வாதத்தை எடுத்து காட்டியுள்ள கட்டுரையாளரின் உளறல்களை தனி ஆக்கமாக வெளியிடுவோம், இன்ஷா அல்லாஹ்.

அடுத்து, கட்டுரை எழுதிய ஆக்கிய உருவாக்கிய அண்ணன்மார்கள், முஸ்லிம்களுக்கு தழிழகத்தில் இருந்த இட ஒதுக்கீட்டின் வரலாற்றை அப்படியே புட்டு புட்டு வைக்கிறார்கள். அவர்கள் வரலாற்றை எடுத்து வைக்கும் விதம், வரலாற்று ஆசிரியர்களை மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது. நம்ம அண்ணன்மார்களுக்கு அந்த அளவுக்கு சுய புத்தி எல்லாம் கிடையாதே, எப்படி இப்படி வரலாற்றை அள்ளி அடுக்குகிறார்கள் என்று சற்று தேடிப்பார்த்தால்தான், அண்ணன்மார்கள் வரலாற்றை எங்கிருந்து ஆட்டை போட்டார்கள் என்று தெரிய வருகிறது. தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை நிரப்பும் போராட்டம் ஆளும் வர்க்கத்தினரை ஒரு கலக்கு கலக்கியது. சிறை நிரப்பும் போராட்டம் குறித்த செய்திகளை அனைத்து மீடியாக்களும் தங்களின் முக்கிய செய்தியாக்கி இருந்தன. புதிய தலைமுறை தொலைகாட்சி, தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தின் நான்கு நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களையும் நேரலையில் ஒளிப்பரப்பினார்கள். கேப்டன் நியுஸ் தொலைக்காட்சி, தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டம் குறித்த அரை மணி நேர ஒரு ஆவணபடத்தையே தயாரித்து வெளியிட்டது.

இதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை குறித்தும், முஸ்லிம்களுக்கு தழிழகத்தில் இருந்த இட ஒதுக்கிடு குறித்தும், அது பறிக்கப்பட்ட வரலாறு, 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்த பிண்ணணி என்று தெளிவான ஒரு நிகழ்ச்சியை வெளியிட்டது. இது கேப்டன் டிவி நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் இட ஒதுக்கீடு குறித்து வந்த தகவல்கள் எல்லாம் சகோதரர் பிஜே அவர்கள் இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் எடுத்துவைத்த தகவல்களின் கோர்வைதான் என்பது அந்த நிகழ்ச்சியை பார்த்த யாவரும் புரிந்து கொள்வார்கள்.

இந்த கேப்டன் டிவி நிகழ்ச்சியில் வந்த இடஒதுக்கீடு குறித்த தகவல்களை ஏதோ இவர்கள் தொகுத்ததை போல பில்டப் கொடுத்து எழுதியுள்ளார்கள். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறவில்லை என்றால், கட்டுரை என்ற பெயரில் உளறியுள்ள வரலாற்று ஆசிரியர்களுக்கு (?) இட ஒதுக்கீடு குறித்த வரலாற்று தகவல்களும் கிடைத்து இருக்காது. பெரிய அறிஞர்களைப்போல நடிக்கும் இந்த எழுத்தாளர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதற்கு இவர்கள் கேப்டன் டிவியில் இருந்து அடிச்ச ஈ அடிச்சான் காப்பி இவர்களை காட்டி கொடுத்துவிட்டது, இவர்கள் எப்படிப்பட்ட வரலாற்று ஞானம் உள்ளவர்கள் என்பதை இந்த ஈ நிரூபிக்கிறது.

அதாவது, தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு எப்போது கிடைத்தது என்ற தகவலை கேப்டன் டிவி தவறாக 2008 என்று சொல்லியது (2007 ஆம் ஆண்டில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது). இவர்கள் ஒரு அறிவும் இல்லாதவர்கள்
 என்பதற்கு இந்த ஈ அடிச்சான் காப்பி ஒரு ஆதாரம். (தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளங்களில் இருந்து தகவல்களை திருடி இவர்கள் போடும் கட்டுரைகள் குறித்த தனி ஆக்கம் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ்).
இது தான் அண்ணன்மார்கள் அடித்த ஈ அடிச்சான் காப்பி வரிகள். கீழுள்ள வீடியோவில் ஆரம்பத்தில் வரும் வரலாற்று தகவல்களையும் அண்ணண்மார்களின் மேலே உள்ள எழுத்துகளை பாருங்கள், வார்த்தை கூட மாற்றாமல் காப்பி.... கேப்டன் டிவி கூட இவ்வாறு இஸ்லாமிய இயக்கங்கள் தெரிவிக்கின்றன என்று சொல்லுகிறது. அதையும் அண்ணன்மார்கள் வசதியாக மறைத்துள்ளார்கள். இந்த வரலாற்று தகவல்களை எடுத்து வைத்ததே பிஜே தான் என்பது ஊரறிந்த உண்மை.
அண்ணன்மார்கள் இட ஒதுக்கீடு பற்றிய வரலாற்றை சுட்ட வீடியோ!

இந்த இடஒதுக்கீட்டுக்காக நாம் நடத்திய போராட்டங்களின் விளைவாக நமக்கு இடஒதுக்கீடு கிடைத்தது என்பதை மறைக்க தெரிந்தவர்கள், கிடைத்த இடஒதுக்கீடுக்கு தகுந்தாற்போல வேலை வாய்ப்பு கிடைக்க வில்லை என்பதை உணர்த்த நாம் எடுத்த போராட்டங்களை மறைக்க தெரிந்த இவர்கள், சுலபமாக முஸ்லீம்கள் எடுத்து சொன்னார்கள் என்று ஒற்றை வார்த்தையில் சொல்ல தெரிந்த இவர்கள், தெரிந்தோ தெரியாமலோ ரோஸ்டர் பூஸ்டர் என்ற தொல்லையினால் கைக்கு கிடைத்து வாய்க்கு கிடைக்க வில்லை என்று உளறி விட்டார்.

"ரோஸ்டர்" என்றால் என்ன, "பூஸ்டர்" என்றால் என்ன, அதை வைத்து சப்பைகட்டு கட்ட முயற்சித்து கரியை யார் முகத்தில் பூசிகொண்டது? என்பன போன்ற விளக்கங்களையும் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் நடுநிலையாளர்கள்(?) அவர்களிடம் இதை எதிர்ப்பார்க்கக்கூடாது. இவ்வாறு அங்கும் இங்கும் சுட்டு எழுதப்படும் உளறல் தொடர்கள் முடிவு பெற்றவுடன் அது தனி புத்தகமாக வெளியிடப்படும் (பாவம் அதை படிப்பவர்கள்). காசு பார்க்க தான் இந்த வேலை என்று யாரும் தவறாக எண்ணிவிடாதீர்கள்.

இட ஒதுக்கீட்டிற்க்காக தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய முதல் போராட்டம் சமீபத்தில் நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் தான் என்பதை போல கிறுக்கியிருக்கிறார்கள். உங்களுக்கு ஏன் இந்த வேலை? தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஆலோசனை கேட்டுவிட்டு தான், கலைஞரே இடஒதுக்கீடு கொடுத்தார் தெரியுமா?

அடுத்து, தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாக ஒரு அபாண்டத்தை போடுகிறார். அதாவது, தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த போராட்டத்தின் மூலம் உள்நோக்கம் உள்ளதாம். தனிப்பட்ட பிரதிபலங்களும் உள்ளதாம். இதற்கு ஆதாரமாக தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட ஒரு தறுதலையின் உளறல்களை ஆதாரமாக காட்டுகிறார் கட்டு கதையை உருவாக்கியவர். ஒருவன் ஒரு இயக்கத்தின் மீதோ அல்லது தனிப்பட்ட நபர் மீதோ குற்றச்சாட்டுகளை வைக்கும் போது, அதை மற்றவர்கள் ஆதாரமாக காட்ட வேண்டும் என்றால், அந்த தகவல் உண்மையா என்று விசாரிக்க வேண்டும்,

ஒரு செய்தியின் பின்னணியை தெரிந்துக் கொள்ள முயற்சிக்காமல், 'இவ்வாறு ஒருவர் சொல்லுகிறார்' என்று கயவாளித்தனமாக எடுத்துக் காட்டக்கூடாது. நிருபர் கும்பல் பிஜேபியிடம் காசு வாங்கிக்கொண்டு தான் முஸ்லிம்களுக்கு கிடைக்க இருக்கும் இட ஒதுக்கீட்டை தடுக்க பார்க்கிறது என்று யாரே சொல்லுகிறார் என்று நாங்களும் எடுத்து காட்டலாமா? பெண் பொருக்கிகளை வைத்து மட்டும் நிகழ்ச்சிகள் நடத்தும் நிருபரின் முக்கியஸ்தரும் அதே மாதிரி ஆளு என்று நாங்கள் பரப்பலாமா?
ஆனால் செய்யமாட்டோம். ஏனெனில்,

'ஒருவர், தான் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும்' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: முஸ்லிம் 6

நீங்கள் வரம்பு மீறினால் நாங்களும் வரம்பு மீறுவோம் என்பதை சொல்லி வைக்கிறோம்.

அண்ணன் அவர்கள் காப்பி பேஸ்ட் தொடர் தொடராக போடுகிறார், பின்னர் அதையே புத்தகமாக போட்டு விற்பனை செய்கிறார், எனவே இது எல்லாம் பணம் படுத்தும் பாடு என்று சந்தேகத்தை நாமும் கிளப்ப முடியும். கட்டுரை எழுதியவர்கள், அதை வெளியிட்டவர்கள், அதை பரப்பி பெருமிதம் கொள்ளுபவர்கள் ஆகிய அனைவருக்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஒரு சவாலை முன்வைக்கிறது. உங்களுக்கு மானம், சூடு, சுரனை இதில் அத்தனையும் இருந்தாலோ அல்லது இதில் ஏதாவது ஒன்று இருந்தாலோ ஒன்றை செய்யுங்கள். நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முன்வாருங்கள். இது என்ன நாங்களா? சொன்னோம் யாரோ சொல்லுகிறார்கள். நாங்கள் எடுத்து காட்டுகிறோம் என்று அவர்கள் சொல்லுவார்கள் என்றால், அதே முறையை நாங்களும் கையாலுவோம். நாங்கள் பொய்களை சொல்ல மாட்டோம், உண்மைகளை போட்டு உடைப்போம்.
  • நிருபரின் முக்கியஸ்தவர் ஒருவர் பொம்பளையை வலையில் வீழ்த்தும் வேலையில் அடிக்கடி சிக்கும் மார்க்க அறிஞர்(?)களை மட்டும் தர்பியா நடத்துவது என்பதை கொள்கையாக வைத்துள்ளர்கள்.
  • கட்டுரை போட்டு, அதையே புத்தகமாக ஆக்கி காசு பார்க்கிறார்கள்.
  • பெருநாள் சந்திப்பு என்ற பெயரில் இஸ்லாத்தில் இல்லாத கட்டு கதைகளை அள்ளிவீசுகிறார்கள்.

பெண் பொறுக்கிகளை வைத்து உங்களுக்கு தர்பியா நடத்த வேண்டுமா? தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி. அதிரை முகவரி கேட்டால் தருகிறோம்.
இப்படி அடுக்கி கொண்டேபோகலாம். இனி நாற்றம் எல்லாம் வெளியே வரும், தயாராக இருங்கள்.

அடுத்து, கட்டுரையாளர் சம்சுதீன் விஷமி பற்றிய பிரச்சினை பற்றி கேள்வி எழுப்பகிறார், இது பற்றி நமது தளத்திலேயே எற்கனவே விரிவான விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சம்சுதீன் விஷமியே தவ்ஹீத் ஜமாஅத் அவன் மீது வைக்கும் அனைத்து குற்றச்காட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க தயார் என்றும், அவன் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது சொல்லும் அவதூறுகளை பொய் என்று பகிரங்கப்படுத்தி வெளியிட்ட பதில்களை கண்டு, விஷமியே நான் இவர்களுக்கு இனி பதில் தர மாட்டேன் என்று ஓடிவிட்டான் என்பது தனிச்செய்தி. இது பற்றி அதிகமாக விளக்கம் தர வேண்டியது இல்லை.

அடுத்தாக, தவ்ஹீத் ஜமாஅத் தனியாக தைரியமாக போராட்டம் நடத்தியதை கட்டுரையாளர் பாராட்டுகிறாராம் (தவ்ஹீத் ஜமாஅத் தனியாக போராட்டம் நடத்துவது சரியல்ல என்றும் சொல்லியுள்ளார் கட்டுரையாளர்). தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை பாராட்டும் இவர், போராட்ட செயல்முறையை பாராட்ட மாட்டாராம், காரணம் ஜெயலலிதாவிடம் தவ்ஹீத் ஜமாஅத் இட ஒதுக்கீடு கேட்கிறதாம். ஜெயலலிதா கலைஞர் முஸ்லிம்களுக்கு கொடுத்த 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தாராம். இது எவ்வளவு பெரிய பொய்! இதை நிரூபிக்க முடியுமா?

தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது நீங்கள் கொண்ட குரோதம் ஏன் உங்களை இவ்வாறு புழுக வைக்கிறது?. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் போது, அதை தமிழகத்தில் யாரும் எதிர்க்கவில்லை, எதிர்பதற்கான வழிகளை அடைத்து விட்டு தான் இடஒதுக்கீட்டை வாங்கினோம் என்பது வரலாறு. இப்படி எந்த கப்சாக்களையும் படித்து அருமை அருமை என்று புகழும் அப்பாவிகள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போதுதான் வேதனையாக உள்ளது. இதில் நீங்கள் உண்மையாளராக இருந்தால், கடந்த சட்டமன்ற தேர்தலில் தமுமுக மம கட்சினர், ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவேன் என்ற சொன்ன அடிப்படையில், தமுமுக மம கம்பெனி அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்களே, அப்போது ஏன் நீங்கள் கட்டுரை போடவில்லை. நீங்கள் தமுமுக பினாமி என்பதாலா? அல்லது தமுமுகவின் பினாமி இணையதளம் என்பதாலா? ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தார் என்றும் ஒரு தகவலை பதிந்துள்ளார் கட்டுரையாளர். இது உண்மை தான். தவ்ஹீத் ஜமாஅத் ஒரு விஷயத்தில் தெளிவாக உள்ளது, மக்கள் மத்தியில் அதை பிரச்சாரமும் செய்கிறது. அதாவது, கலைஞரோ அல்லது ஜெயலலிதாவோ முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் அல்ல. அவர்கள் முஸ்லிம்களுக்கு என்று எதையும் விரும்பி செய்பவர்கள் இல்லை. ஓட்டு என்ற ஒரு ஆயுதம் நம்மிடம் உள்ளதால்தான் அவர்கள் நமக்கு எதையும் செய்வார்கள்.


ஆனால், கட்டுரையாளர் ஒரு செய்தியை திட்டமிட்டு மறைத்துள்ளார். முஸ்லிம் கட்சியின் முக்கியஸ்தரான அப்துல் லத்தீப் அவர்கள் சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தாருங்கள் என்று கேட்ட போது, கலைஞர் என்ன தெரியுமா சொன்னார்? நாட்டில் கலவரம் உண்டுபண்ண பார்க்கிறீர்களா? என்றார், இப்படி சொன்ன கலைஞர் எப்படி இட ஒதுக்கீடு தந்தார் என்று கேள்வியை எழுப்பி இருக்க வேண்டும். 3.5 சதவீதம் கொடுக்கவே யோசித்த கலைஞர்,  மேலும் ஏற்றி எப்படி 7 சதவீதம் தருவார் என்ற கேள்வி உங்களுக்கு ஏன் வரவில்லை? நீங்களா நியாயமானவர்கள்? நடுநிலையாதிகள்? தவ்ஹீத் ஜமாஅத் ஜெயலலிதாவிடம் மட்டும் இட ஒதுக்கீடு கேட்கவில்லை, ஆட்சி கட்டிலில் யார் உள்ளார்களோ அவர்களிடம் கேட்கிறது. ஜெயலலிதா சொன்ன வாக்குறுதியையும் எடுத்துக்காட்டி கேட்கிறது. கலவரம் உண்டு பண்ண பார்க்கிறீர்றா? என்று வினவிய கலைஞர் அவர்களிடம் எப்படி தவ்ஹீத் ஜமாஅத் இட ஒதுக்கீட்டை வாங்கியதோ, அதே போராட்ட வழிமுறையில் ஆட்சியாளர்களிடம் இட ஒதுக்கீட்டை பெற்று தரும் இன்ஷா அல்லாஹ்.

அடுத்ததாக எல்லா முஸ்லிம் இயக்கங்களும் ஒன்று சேர்ந்தால்தான் இட ஒதுக்கீடு கிடைக்குமாம். அப்படி என்றால் ஒன்றுபடாமல் 3.5 இட ஒதுக்கீடு கிடைத்தது எப்படி? ஒற்றுமையாக இருப்பதாக சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத மற்ற இயக்கங்கள் தேர்தல் நேரத்தில் சிதறிப்போவது ஏன்? முதலில் நீங்கள் ஒற்றுமையாக ஆகுங்கள். பின்னர் எங்களிடம் வந்து ஒற்றுமை பற்றி பேசுங்கள். ஒன்றுபட்டால்தான் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்றால், இட ஒதுக்கீடே கிடைக்காது என்று சொல்லிவிடலாம், தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பவர்கள் அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை வராது, எனவே இட ஒதுக்கீடும் கிடைக்காது. இட ஒதுக்கீடு பற்றி புத்தகம் எழுதியவருக்கு மட்டும் நல்ல ஒதுக்கீடு கிடைக்கும்.

கடைசியாக, கட்டுரை எழுதிய அண்ணன்மார்கள், இட ஒதுக்கீட்டினால் மட்டும் எந்த பலனும் இல்லை என்கிறார், அந்த பத்தியை படித்து முடித்தவுடனே இடஒதுக்கீடும் கல்வி மேம்பாடும் பிரிக்க முடியாதது என்கிறார், இட ஒதுக்கீடு அவசியம் என்கிறார். என்ன சொல்ல வருகிறார் என்று அவருக்கே சரியாக புரிந்தது போல் தெரியவில்லை. இவர் ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார், அதாவது, ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளில் ஒரு முஸ்லிம் கூட வரவில்லை, எனவே, இட ஒதுக்கீட்டினால் என்ன பயன் என்கிறார். நமக்கு கல்விலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு உள்ளது. இடஒதுக்கீட்டின் மூலம் எத்தனை சமுதாய மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் கோடி கோடியாய் பணம் தரமால் சீட் வாங்கி இருக்கிறார்கள் என்று ஈ அடிச்சான் காப்பியாளர்களுக்கு எப்படி தெரிய போகிறது. எத்தனை பேர்கள் பயன் அடைந்துள்ளார்கள் என்ற விபரமும் தவ்ஹீத் ஜமாஅத் வசம் உள்ளது. இது பற்றி தவ்ஹீத் ஜமாஅத்துடன் நேரடியாக வந்து விவாதிக்க தயாரா? 

ஒரு விஷயத்தை பற்றி தெரியாமல், கற்பனையில் இப்படி கதை எழுதி ஏன் சமுதாய துரோகம் செய்கிறீர்கள்? தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் பல்லாயிரம் பேர்கள் அன்றாடங்காய்ச்சிகள், ஒரு நாள் வேலைக்கு போகாவிட்டாலும், அன்று பட்டினிதான். அவர்கள் இந்த பேராட்டத்திற்காக கடந்த நான்கு மாதங்களாக இரவு பகலாக எவ்வாறு உழைத்தார்கள் என்று தெரியுமா? அவர்களின் சந்ததிகள் பலன் பெறுகிறதோ இல்லையோ, சமுதாயத்தில் பலர் அந்த பலனை அனுபவிக்கிறார்கள், அனுபவிக்க போகிறார்கள். அந்த அன்றாடங்காய்ச்சிகள் எத்தனை நாட்கள் இரவுகளில் கடும் குளிரில் கஷ்டப்பட்டு இருப்பார்கள். அவர்களின் தியாகத்தை எல்லாம் குப்பையில் வீச நீங்கள் யார்? நீர் புத்தகம் போட வேண்டும் என்பதற்காக ஏன் சமுதாய துரோகம் செய்கிறீர்கள்? இவ்வாறு கடும் குளிர்களில் இரவு பகலாக உழைத்த தவ்ஹீத் ஜமாஅத்தினரில் எத்தனை பேர் முதியவர்கள் தெரியுமா? 

முதியவர்களை ஏன் குளிர் காலத்தில் போராட்டத்திற்கு அழைத்து செல்லுகிறீர்கள் என்று எகத்தாளமாக கேட்கிறீர்கள். எங்களின் அழைப்பிற்கு முதியவர்களும் தயார் என்று வருகிறார்கள். அந்த முதியவருக்கு தெரியும், அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று, அந்த கஷ்டம் அவரின் வாரிசுகளுக்கு வரக்கூடாது என்று எண்ணி தான் அவர் தானாக வருகிறார், இதில் உங்களுக்கு ஏன் வயிறு எரியுது? அந்த முதியவர்களை நாங்களா குண்டு கட்டாக கட்டி, போராட்டத்திற்கு அழைத்து சென்றோம்? எங்களின் அழைப்பின்மீது உள்ள நியாயத்தை உணர்ந்து வந்தவர்களை தான அழைத்து சென்றோம். தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை நிரப்பும் போராட்டத்தில் செருப்பு கூட இல்லாமல் வந்த பெண்மணி உண்டு தெரியுமா? ஊனமானவர்கள் எத்தனை பேர் வந்தார்கள் தெரியுமா? அவர்களிடம் போய் கேளுங்கள் ஏன் குளிர் காலத்தில் போராட்டத்திற்கு செல்கிறாய் என்று, செருப்பு கூட போட வழி இல்லாத அந்த பெண்ணின் போராட்ட உணர்வை கொச்சை படுத்தி சொகுசாக உட்கார்ந்து கட்டுரை எழுத எப்படி முடிகிறது உங்களால், அவர்களின் கஷ்டங்கள் அவர்களுக்கு தான் தெரியும்.
சொகுசாக அமர்ந்து கட்டுரை காப்பி அடிப்பவர்களுக்கு தெரியுமா? இந்த முதியவர்களின் தியாகம்
தனது எதிர்கால சந்ததி செருப்பு அணிந்து நடக்க வேண்டும் என்பதற்காக கொளுத்தும் வெயில் செருப்பு கூட அணியாமல் பேராட்ட களத்தில் ஒரு வயதான பெண்!
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளில் யாரும் தேர்வாக வில்லை என்றால், அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமே தவிர, இட ஒதுக்கீடு போராட்டத்தின் வீரியத்தை குறைக்க முயல்வது பெரியதொரு சமுதாய துரோகம். ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் வாய்ப்பு கிடைத்து, யாருக்கும் தகுதி இல்லாத காரணத்தினால் தான் முஸ்லிம்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்று காப்பி பேஸ்ட் அறிஞர்களுக்கு (?) எப்படி தெரிந்தது? ஆதாரம் வைத்து நிருபிக்க முடியுமா? இட ஒதுக்கீடு மட்டும் தீர்வல்ல என்று காப்பி பேஸ்ட் கோமாலிகள், கல்வி முன்னேற்றத்திற்காக என்ன கிழித்தார்கள் என்று பட்டியல் போட முடியுமா?

இட ஒதுக்கீடு அடிப்படையில் 10 இடம் கிடைத்து அதை பிடிக்க சமுதாயத்தில் யாரும் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று ஒரு அற்புதமான கேள்வியை முன்வைக்கிறார். கட்டுரையை நிரப்ப எவன் எதை சொன்னாலும், அதை அப்படியே காப்பி அடிக்கும் இவர்கள், இட ஒதுக்கீடு அடிப்படையில் கிடைத்த இடத்தை முஸ்லிம்கள் பிடிக்க முடியவில்லை என்று நிருபிக்க முடியுமா? எந்த புள்ளி விபரத்தை வைத்து இப்படி ஒரு கருத்தை முன்வைக்கிறீர்கள், சங்பரிவாரத்தின் வேலையை நீங்களே செய்ய காரணம் என்ன? இட ஒதுக்கீட்டின் பலனை கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் சமுதாய மக்கள் அனுபவிக்கிறார்கள். வேலை வாய்ப்பில் உள்ள இடஒதுக்கீட்டில் அவ்வபோது சில குளறுபடிகள் நடந்தாலும், கல்வியில் சரியாக கிடைக்கிறது. இட ஒதுக்கீட்டினால் பலன் அடைந்த பலர் தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டத்திற்கு வாரி வழங்கினார்கள் என்பது அண்ணன்மார்களுக்கு வயிற்றெரிச்சலை அதிகப்படுத்தும் செய்தி.

பெண்களை போராட்ட களத்திற்கு அழைத்து செல்வதையும் காப்பி பேஸ்ட் கட்டுரையாளர் விமர்சனம் செய்கிறார். பெண்கள் போராட்ட களத்திற்கு போகலாமா என்பது தனி தலைப்பு அது பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது.

பெண்களை முஸ்லிம் இயக்கங்கள் பெரும்பாலனவை போராட்ட களத்திற்கு அழைத்து செல்லுகின்றன, இது தவறு என்றால், மற்ற இயக்கங்கள் பெண்களை அழைத்து செல்லும் போது நீங்கள் ஏன் கட்டுரை போடவில்லை? உங்களின் வேஷம் இப்போது களைகின்றது. என்னடா... இவ்வளவு கூட்டம் கூடிவிட்டார்கள் என்ற வயிற்றெரிச்சல் தான் இப்படி எழுத தோன்றியுள்ளது.

குளிராவது வெயிலாவது, எவன் எங்களின் போராட்ட உணர்வை தடுக்க இயலும்!
இட ஒதுக்கீடு எப்போது கிடைத்தது என்று கூட தெரியாத நீங்கள் ஏன் இவ்வாறு உளற வேண்டும்? இட ஒதுக்கீட்டின் பலன் சமுதாயத்திற்கு கிடைக்க வில்லை என்று பகிரங்கமாக நிரூபிக்க தயாரா? 

மேலும், சிறை செல்லும் பேராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் கடிதம் மூலம் அழைப்பு விடுத்தது, காரைக்கால் கயவனுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியதாம். அவனின் வாந்தியில் குளித்த நிருபர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாம். ஏன் இப்படி புழுகுகிறீர்கள்? இதற்கான ஆதாரத்தை காட்ட முடியுமா? இவ்வாறு ஒரு செயல் நடக்கவுமில்லை, உங்களால் இதை நிரூபிக்கவும் முடியாது.

கட்டுரையில் பாதி காரைக்கால் கயவனின் வாந்தி, பாதி கேப்டன் டிவி வீடியோவில் வந்த செய்தி, தலைப்பும் கடைசி பத்தியும் தான் இவர்களுடையது போல தெரிகிறது. இப்படி காப்பி அடிச்சு கட்டுரை தேவையா?

யாரோ செய்யும் செயலை தங்களின் செயல் போல் காட்டி புகழ் தேடும் இவர்களை எச்சரிக்கிறது கீழ்காணும் குர்ஆன் வசனம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது. 

திருக்குர்ஆன் 3:188 

இறுதியாக, ஒரு விஷயம், அதாவது சமுதாய இயக்கங்கள் கல்விக்காக எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். ஏன் உங்களால் ஒரு கல்லூரி ஆரம்பிக்க முடியவில்லை என்கிறார். தவ்ஹீத் ஜமாஅத்திடம் எந்த அளவுக்கு நிதி சேருகிறதோ அந்த அளவுக்கு கல்வி உதவி செய்கிறது. ஒவ்வோரு வருடமும் கோடிக்கணக்கில் கல்விக்காக சமுதாய மாணவர்களுக்கு உதவி செய்கிறது. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கல்வி உதவி கேட்டு வரும் அனைவருக்கும் உதவி செய்யும் அளவிற்கு முடியவில்லை என்றாலும், தமிழகத்தில் யாரும் செய்யாத அளவிற்கு கோடிக்கணக்கில் கல்வி உதவி செய்கிறது. இன்னும் செய்யும், இன்ஷா அல்லாஹ். தன்னிடம் வரும் நிதிகளை பொருத்து தனது பணிகளை தொடர்ந்து விரிவுப்படுத்தும். 

இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட அனைத்தும் சவால்களே, கட்டுரை ஆசிரியர் உட்பட உளறும் நிருபர்கள் உட்பட யாரும் இந்த ஆக்கத்தில் விவாதிக்க முன்வரலாம்.

நாங்கள் உண்மையாளர்கள் என்றும் கட்டுரையாளர்கள் பொய்யர்கள் காழ்ப்புணர்வின் காரணமாக எழுதிறார்கள் என்றும் நிருபிக்கப்படும், இன்ஷாஅல்லாஹ்.

குறிப்பு: தவ்ஹீத் ஜமாஅத்தை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்பது கிடையாது. எங்களில் யாரும் அப்படி சொல்லியதுமில்லை. தவ்ஹீத் ஜமாஅத்திடம் தவறு இருந்தால் யாரும் சுட்டிக்காட்டலாம், தவறு எங்களிடம் இருந்தால் இது தவறு என்று அறிவித்து எங்களை திருத்தி கொள்வோம், இன்ஷா அல்லாஹ். அதேசமயம் நடுநிலை வேஷம் போட்டுக்கொண்டு, காழ்ப்புணர்வின் காரணமாக பொய்களை எழுதுபவர்களை தக்க முறையில் எதிர்கொள்ள தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்று சொல்லி வைக்கிறோம்.

இட ஒதுக்கீடு சம்பந்தமாக இவர்கள் இனி உளரினாலும் அவற்றை தக்க முறையில் மக்கள் மத்தியில் எடுத்து வைத்து முகத்திரையை கிழிப்போம் என்பதையும் சொல்லிவைக்கிறோம்.

இந்த கட்டுரையில் சில கடினமான சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தது. தவறு செய்பவர்களை அதற்கு தகுந்த வார்த்தைகளை பயன்படுத்துவது தான், அவர்களின் தவறை சரியான முறையில் காட்டும் என்ற அடிப்படையில் அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தோம். எனினும், ஒரு சில சகோதரர்கள், அவர்கள் தவறு செய்தாலும், மென்மையான சொற்களை பயன்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் கடினமான வார்த்தைகளை மாற்றியுள்ளோம், இது தவறு செய்பவர்களுக்கு இது போன்ற கயமைத்தனமான செயல்களில் இருந்து திருத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்.

21 கருத்துரைகள் :

அன்புச்சகோதரர்களே !

அஸ்ஸலாமு அலைக்கும்

இட ஒதுக்கீடு அரசிடம் கேட்டு பெறுவது சமுதாயத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றுதான் என்றாலும், அவற்றை எந்த முறையில் பெறலாம் என்பது குறித்து சமூகத்தினரிடேயே பல்வேறு மாறுபட்டு கருத்து நிலவுவதை நாம் மறுக்க இயலாவிட்டாலும் அவற்றை கண்ணியமான முறையில் எதிர்கொள்வது நம்மைபற்றி பிறரிடம் சிறந்த எண்ணம் வளர உதவுவதாக அமையும்.

இட ஒதுக்கீடு பெருவது தொடர்பாக விமர்சகர் ஒருவர் அதன் சாதக / பாதகங்களை அலசி ஆராய்ந்து வெளியிடுவதால் இவற்றை ஏற்று நடத்திய / நடத்த இருக்கிற அமைப்பினருக்கு ஏற்படும் நிறை / குறைகளை சரிசெய்துகொள்ள நிச்சயமாக உதவும்.

அந்த குறிப்பிட்ட கட்டுரையில் இட ஒதுக்கீடு போராட்டம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் பதிந்துள்ள கருத்துகளைதான் குறிப்பிட்டு கூறியிருந்தார். இதற்கு மாற்று கருத்து இருப்பின், அதற்குரிய பதிலை நாகரிகமான முறையில் பதிந்து இருக்கலாம். மாறாக விமர்சித்தவர் மீது தனி நபர் தாக்குதல் தொடுத்து இருப்பது ஏற்புடையது அல்ல. குறிப்பாக 'மன்மத நிருபர்கள்', 'மட நிருபர் கும்பல்', 'புத்தகம் போட்டு நாணயம் பார்த்த வியாபாரி' போன்ற நாகரிகமற்ற வார்த்தைகளை உபயோகப்படுத்திருக்ககூடாது.

நானறிந்தவரை எழுத்தாளரின் சொந்த பணத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களில் பெரும்பாலானவற்றை இலவசமாகவே விநியோகித்து வருகின்றார். கடந்த வருடம் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்ட நான் சக பதிவர்களுக்கு வழங்குவதற்காக பத்து புத்தகங்களை இலவசமாக எழுத்தாளரிடமிருந்து கேட்டு வாங்கினேன் என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன். வியாபாரி என்ற வார்த்தை இங்கே பொருத்தமற்றது - நாகரிகமற்றது.

அன்புடன்,
சேக்கனா நிஜாம்

அன்புச் சகோதரர் நிஜாம் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

தங்களின் விளக்கமான கருத்திற்கு நன்றி.

இட ஒதுக்கீடு குறித்தோ அல்லது மற்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் சம்பந்தப்பட்ட எந்த விஷயம் குறித்தோ அழகிய முறையில் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. நாங்கள் பதில் தந்துள்ள இணையதளத்தினருக்கும் அந்த உரிமை உண்டு. அதே நேரத்தில், விமர்சனம் என்பது உண்மைக்கு புறம்பாக இருக்க கூடாது என்று விரும்பிறோம். நீங்கள் குறிப்பிடும் அந்த இணையதளத்தில் விமர்சனத்திற்கு உண்டான இந்த கட்டுரையின் ஆசிரியரே இட ஒதுக்கீடு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார், அதில் இட ஒதுக்கீடு மட்டும் தீர்வல்ல என்று சொல்லியிருந்தார். அதில் உண்மைக்கு புறம்பான தகவல்களோ அல்லது பார்த்தவுடன் பொய் என்று தோன்றும் வாதங்களோ வைக்கப்படவில்லை, நாங்கள் அதற்கு பதில் கொடுக்க வேண்டிய தேவையும் வரவில்லை. தனக்கு மனதில் பட்டதை அவர்கள் எழுத அவர்களுக்கு உரிமை உண்டு.


ஆனால், விமர்சனத்திற்கு உண்டான இந்த கட்டுரையில் பல அநாகரிகமான விமர்சனங்கள் எடுத்து காட்டப்பட்டு இருந்தது. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு:

1. ஆளும் கட்சியின் தலைவி ஒரு முறை தங்கள் இயக்கத்தின் அளவை குத்துமதிப்பாக சொல்லிக் காட்டியதால் அதை நிருபிக்க வேண்டுமென்று கூட்டம் கூட்டுகிறார்கள்.

2. தங்களின் அரசியல் செல்வாக்கைக் காட்டி எதிர்வரும் தேர்தலில் பேரம் பேசவே இப்படி போராட்டம் அறிவித்து இருக்கிறார்கள். உண்மையில் உள் நோக்கம் இட ஒதுக்கீடு பெற்றுத் தருவது அல்ல.

3. ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் இப்படி ஒரு கூட்டம் கூட்டிக் காட்டுவது இவர்களது வாடிக்கையாகிவிட்டது.

4. இயக்க அரசியலில் தங்களுக்கு இணையான போட்டியாகக் கருதும் மற்றொரு இயக்கம் இருக்கும் இடத்தில் அல்லது ஆதரிக்கும் இடத்தில் தாங்கள் இருக்கக் கூடாது என்பதற்காகவே போட்டி அரசியல் நடத்தவே ஒரு காரணம் தேடி உணர்வு பூர்வமான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையை கைகளில் எடுத்து இருக்கிறார்கள்.

5. முதியவர்களைக் கூட இந்தக் குளிர் நேரத்தில் திரட்டிக் காட்டி அவர்களையும் சிரமப் படுத்துகிறார்கள் ; குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.

6. படிக்கிற இளைஞர்களை இயக்க அரசியலில் ஈடுபடுத்தி படிப்பைக் கெடுக்கிறார்கள்.

7. இப்படிப் பட்ட இளைஞர்களை சிறைக்கு அனுப்ப ஒரு போராட்டமா?

மேலுள்ள இவர்களின் வாதங்களில் பல பொய்களும் அவதூறுகளும் இடம் பெற்றுள்ளன என்பதை பார்க்கும் எவரும் புரிந்து கொள்வார். இது கட்டுரை எழுதியவரின் விமர்சனம் இல்லை என்றாலும், மற்றவர்களின் விமர்சனங்களை எடுத்து காட்டும் போது உண்மைக்கு புறம்பான கருத்துகளை தவிர்த்து இருக்க வேண்டும் அல்லது எங்களிடம் விளக்கம் கேட்டு அதன் பின் விமர்சனம் செய்து இருக்கலாம். இப்படியெல்லாம் சொல்லுகிறார்கள் என்று எடுத்துக்காட்டிவிட்டு செல்வது நியாயமற்றது.

கட்டுரை ஆசரியரை பற்றி ஏதோ ஒருவர் தவறாக சொல்லியுள்ளதை நாம் எங்களின் கட்டுரையில் எடுத்துக்காட்டி, இவரை இவ்வாறு எல்லாம் விமர்சனம் உள்ளது என்று பொத்தாம் பொதுவாக சொன்னால் அதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா?


நீங்கள் குறிப்பிடும் இணையதளத்தினருக்கு இரண்டு முகம் உண்டு. ஒன்று நடுநிலை முகம். இந்த முகத்தை அவர்களின் இணையதளத்தில் எழுதும் போது பார்க்கலாம், ஏன் எவனோ உளறியுள்ளதை எல்லாம் போட்டுள்ளீர்கள் என்று கேட்டால், அது எங்களின் வாதாமா? இவ்வாறு எல்லாம் விமர்சனம் உள்ளது என்பதை காட்டுகிறோம் என்பார்கள். இவர்களின் இன்னொரு முகம் வேறு முகம். இந்த முகத்தை ஃபேஸ்புக்கில் இவர்கள் செய்யும் விமர்சனத்தில் பார்க்கலாம், உதாரணத்திற்கு கண்ணியத்திற்குரிய அந்த கட்டுரை ஆசிரியர் ஃபேஸ் புக்கில் எழுதிய கருத்து கீழே உள்ளது. இதில் அவர் பல விமர்சனம் செய்கிறார், அதில் தவ்ஹீத் ஜமாஅத் 'குர்பானி கறியில் இலாபம் பார்ப்பதாக?' சொல்லுகிறார் (இதை அவர் நிரூபிக்க வேண்டும்).


''Ebrahim Ansari Masthan Samad தப்லீக் தனது சொந்த சகோதரனை தூஷித்துப் போஸ்டர் ஒட்டுவதில்லைஇ ஜமாத்தில் நடக்கும் விவகாரங்களுக்காக காவல்துறையிடம் புகார் கொடுப்பதில்லை; நோட்டுப் போட்டு அல்லது ரசீது போட்டு வசூல் செய்வது இல்லை. பித்ரா அரிசி வசூளிப்பதோ குர்பானி கறியில் இலாபம் பார்ப்பதோ இல்லை''.


இப்படிபட்டவர்களை நாம் எவ்வாறு கொள்வது? அவர்கள் வரம்பு மீறியதின் அடிப்படையில் நாமும் வரம்பு மீறியுள்ளோம். அதே நேரத்தில், உங்களை போன்ற உண்மையான நடுநிலைவாதிகளின் கருத்தை மதிக்கிறோம். அவர்கள் தங்களின் தவறான வாதங்களை அவர்களின் கட்டுரையில் இருந்து நீக்கீனால், நாங்களும் இறங்கி வர தயாராக இருக்கிறோம்.
மேலும் ஒருவருக்கு இடஒதுக்கீடு எப்போது கிடைத்தது என்பதே தெரியாமல் இடஒதுக்கீடு சம்மந்தமாக இந்த நேரத்தில் ஆய்வில் இறங்குவதும் ஏன் ?

உங்களின் அன்பான கருத்திற்கு முக்கியத்துவம் தந்து சில வார்த்தை பிரயேகங்களை மாற்றி அமைக்க முயற்சி செய்கிறோம், இன்ஷா அல்லாஹ்.

அவர்கள் வரம்பு மீறவில்லை. அவர்கள் மீதே இந்த கட்டுரை வரம்பு மீறியதாக உணர முடிகிறது.
விமர்சனங்களை எதிர்கால குறைபாடுகள் களைய எடுத்துக்கொள்வதே பிரதான இயக்கத்தின் வளர்ச்சிக்கும் சாதனைக்கும் அடிப்படை என்று எடுத்துக்கொண்டு கண்ணியத்துடன் எழுதுவதே நல்லது.

சகோதரர் ஜஹபர் சாதிக் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

வரம்பு மீறுதல் என்றால் என்ன என்பதையும் சேர்த்து விளக்கியிருந்தால் நன்றாக இருக்கும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை பற்றி ஏதோ ஒரு சில்லரை எழுதியதை எடுத்துப்போட்டு, இவ்வாறு எல்லாம் விமர்சனம் உள்ளது என்று தகவலின் உண்மை தன்மையை பார்க்காமல் பரப்பியுள்ளார்கள்:

அவற்றில் சில:

1. முதியவர்களைக் கூட இந்தக் குளிர் நேரத்தில் திரட்டிக் காட்டி அவர்களையும் சிரமப்படுத்துகிறார்கள் ; குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.

2. ஆளும் கட்சியின் தலைவி ஒரு முறை தங்கள் இயக்கத்தின் அளவை குத்துமதிப்பாக சொல்லிக் காட்டியதால் அதை நிருபிக்க வேண்டுமென்று கூட்டம் கூட்டுகிறார்கள்இ

3. இயக்க அரசியலில் தங்களுக்கு இணையான போட்டியாகக் கருதும் மற்றொரு இயக்கம் இருக்கும் இடத்தில் அல்லது ஆதரிக்கும் இடத்தில் தாங்கள் இருக்கக் கூடாது என்பதற்காகவே போட்டி அரசியல் நடத்தவே ஒரு காரணம் தேடி உணர்வு பூர்வமான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையை கைகளில் எடுத்து இருக்கிறார்கள்.

மேலே உள்ள குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய் என்பது தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்பவர்களுக்கே தெரியும். இவற்றை எல்லாம் வேண்டுமென்றே தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக செய்துள்ளார்கள். ஒருவர் மீதே அல்லது இயக்கத்தின் மீது ஒருவர் குற்றம் சுமத்தினால், அவற்றை நாம் எடுத்து காட்டு முன், அது உண்மையா என்று ஆராய்ந்து பரப்ப வேண்டும். ஒருவரை மற்றோருவர் திருடர் என்று குற்றம் சுமத்துகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், திருடர் என்று குற்றம் சுமத்தப்படும் நபரை பற்றி நாம் விமர்சனம் செய்யும் போது, இவர் திருடர் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு என்று அதை பற்றி ஆராயாமல் எடுத்து காட்டுவது சரியா? இதுபோன்ற ஒரு செயலை தான் நீங்கள் குறிப்பிடும் கூட்டத்தார் செய்துள்ளார்கள்.

கட்டுரை எழுதிய அதே நபர், தவ்ஹீத் ஜமாஅத் குர்பானி கறியில் இலாபம் பார்ப்பதாகும் அள்ளி விசியுள்ளார். இட ஒதுக்கீடு குறித்து தவறான தகவல்களை எந்த ஆதாரமும் இல்லாமல் சொல்லி, இட ஒதுக்கீடு குறித்து தவறான எண்ணத்தை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சிதுள்ளார்.

இதுவெல்லாம் உங்களுக்கு வரம்பு மீறுதலாக தெரியவில்லையா? நாங்கள் வரம்பு மீறியுள்ளோம் என்றால் எவ்வாறு வரம்பு மீறியுள்ளோம் என்று விளக்கம் தாருங்கள்.

வ அலைக்கு முஸ்ஸலாம்

பேனா எடுத்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்று காட்ட துவங்கியுள்ளார்கள்
சலீம் என்ற தறுதலை
கட்டுரையாளரின் உளறல்
சம்சுதீன் விஷமி
புத்தகம் போட்டுகாஸுபார்ப்பவர்கள்
பண்பாடுதெரியாதகத்துக்குட்டி
காரைக்காலா ன்ன்றெல்்
போன்றவை வரம்பு மீறிய வார்த்தை பிரயோகமே!

குர்'ஆன் ஹதீஸ் வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை காப்பி பேஸ்ட் தான் செய்யனும். உருவாக்குவதல்ல!
அண்ணன் மார்களும் காப்பி பேஸ்ட் செய்கிற அளவுக்கு ஒன்றும் தெரியாதவர்களல்ல!
வயதிலும் அரசியல் பார்வையிலும் ஒன்றும் குறைந்தவர்களல்ல! TNTJ பற்றி அண்ணண் மார்கள் சொன்னது அடுத்தவங்க சொன்ன கண்ணோட்டமே தவிர , அவங்க கண்ணொட்டமே அல்ல!

இவர்களையும் குறைத்து மதிப்பிட்டதில் கட்டுரை மீது அதிருப்தியே!

//வயதிலும் அரசியல் பார்வையிலும் ஒன்றும் குறைந்தவர்களல்ல! TNTJ பற்றி அண்ணண் மார்கள் சொன்னது அடுத்தவங்க சொன்ன கண்ணோட்டமே தவிர , அவங்க கண்ணொட்டமே அல்ல!//

சிறை நிரப்பம் போராட்டத்திற்கு ஆதரவாக யாரும் எழுதவில்லையா? எதிர்பவர்களின் கருத்தை மட்டும் தேடிபிடித்து போடுவதன் நோக்கம் என்ன?
கேட்பதை எல்லாம் பரப்புபவன் பொய்யன் என்று நபி (ஸல்} அவர்கள் சொல்லியுள்ளார்கள்

//ஆதரவாக யாரும் எழுதவில்லையா? எதிர்பவர்களின் கருத்தை மட்டும் தேடிபிடித்து போடுவதன் நோக்கம் என்ன? //

யாரும் வேண்டாம், அண்ணண்மார்களே மனசாட்சிப்படி சொன்ன கருத்தை படிக்கவில்லையா?

//தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இதை முன்னெடுத்து நடத்தி வக்கிரபுத்தி உடையவர்களுக்கு சாவுமணி அடிக்க இந்த மாதிரியான ஒரு அறப் போரை துவக்கி விதை தூவியது வரவேற்கத் தகுந்த காய் நகர்த்தல்தான் என்பதை மனசாட்சி உள்ளோர் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்//

சகோ. ஜஹபர் சாதிக் அவர்களுக்கு,

உங்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மட்டும் தந்துள்ளீர்கள். தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றி பொய்யான தகவல்களை பரப்பிய உங்களின் ஆதாரவாளர்களின் செயல் எந்த வகையில் சரி? தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றி எவனே உளரியதை, அது உண்மையா? பொய்யா என்று பாராமல் பரப்புவது சரியா? இதே நடைமுறையை நாங்களும் கையளலாமா? உதாரணத்திற்கு (உங்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக), உங்களை ஒருவர் சரியல்லாத நபர் என்று இணையதளத்தில் போடுகிறார் என்றால், அதன் உண்மை தன்மையை பார்க்காமல் நாங்கள் பரப்பினால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

//சலீம் என்ற தறுதலை//

ஒரு இயக்கத்தின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக பொய்யான விமர்சனத்தை செய்பவனை கயவன் என்று சொல்லாமல், எவ்வாறு அழைப்பது? நீங்கள் வேண்டுமென்றால், ஒன்று செய்யுங்கள் அந்த காரைக்கால் கயவனை அழைத்து வந்து அவன் வைக்கும் குற்றச்சாட்டுகளை தவ்ஹீத் ஜமாஅத்திடம் மக்கள் முன்னிலையில் நிரூபிக்க செய்யுங்கள். அவன் அவ்வாறு நிரூபித்துவிட்டால், அவனை கயவன் என்று அழைப்பதை நிறுத்திவிட்டு, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

//கட்டுரையாளரின் உளறல்//

உளறலை உளறல் என்று சொல்லாமல் எவ்வாறு சொல்ல முடியும்? உளரிய காரணத்தினால் தான், நேரில் வந்து நிரூபிப்பீர்களா? இட ஒதுக்கீட்டின் பலன் சமுதாயத்திற்கு கிடைக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்று விடப்பட்ட சவால்களுக்கு அண்ணண் மவுனத்தையே பதிலாக தந்துள்ளார் (பதில் என்ற பெயரில் உளரிய விஷயத்திற்கும், அதில் உள்ள பொய்களுக்கும் விரைவில் பதில் வரும், பொய்யர்களின் முகம் மீண்டும் வெளிப்படும்). இட ஒதுக்கீடு 2008 கிடைத்தது என்றும் உளரியுள்ளார்.

//சம்சுதீன் விஷமி//

சமுதாய பெண்களை விபச்சாரிகள், ஒழுக்கம் கெட்டவர்கள், பிஜேவிற்கு கேன்சர் வந்தது மட்டும் போதாது, நாயை போல் ரேட்டில் அழைவான், போனில் பேசி விளக்கம் கேட்பவரை ங்கொத்த என்று பேசும் சம்சுதீன் காஸிமியை விஷமி என்று அழைப்பது உங்களுக்கு எப்படி தவறாக தெரிகிறது. உங்களின் நடுநிலை சந்தி சிரிக்கிறது.

//புத்தகம் போட்டுகாஸுபார்ப்பவர்கள்//

யார் என்ற தெரியாத ஒருவன் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அள்ளிவசும் அவதூறுகளை பரப்புகிறீர்களே, நீங்கள் புத்தகம் போட்டு காசு பார்க்க தான் இவ்வாறு காப்பி அடிக்கிறீர்களா? என்று எதிர் கேள்வியாக தான் நாம் இவ்வாறு கேட்டோம். நாங்களும் இவ்வாறு புத்தகம் போட்டு தான் இவ்வாறு இவர்கள் காப்பி அடிக்கிறார்கள் என்று பரப்பலாமா? என்று கேள்வி கேட்டோம். கேள்வியாக கேட்டதை குற்றச்சாட்டை போல அண்ணண் சொல்லி, அனுதாபம் தோட பார்க்கிறார்.

//பண்பாடுதெரியாதகத்துக்குட்டி
காரைக்காலா ன்ன்றெல்்//

இது போன்ற வார்த்தைகள் எங்கள் கட்டுரையில் இருப்பதாக தெரியவில்லை. இருந்தால் எடுத்துக்காட்டுங்கள்.

//போன்றவை வரம்பு மீறிய வார்த்தை பிரயோகமே!//

தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது யாரும் வரம்பு மீறலாம், அதற்கு நாங்கள் தக்க முறையில் பதில் தந்தால் அது வரம்பு மீறுதல். நல்ல தான் இருக்கு உங்களின் நடுநிலை. வரம்பு மீறுபவர்களிடம் அவர்கள் வரம்பு மீறிய அளவுக்கு வரம்பு மீறுங்கள் என்று திருக்குர்ஆன் அனுமதி தருகிறது.

உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:194)

//குர்'ஆன் ஹதீஸ் வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை காப்பி பேஸ்ட் தான் செய்யனும். உருவாக்குவதல்ல! //

குர்ஆன் ஹதீஸ் வரலாறுகளை காப்பி அடிப்பதில் தவறு இல்லை. ஈ அடிச்சான் காப்பி அடிக்க கூடாது. எங்கே இருந்து எடுத்தோம் என்று போட்டு அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு பக்க கட்டுரையில் பதில் அங்கே இருந்து காப்பி, பாதி இங்கே இருந்து காப்பி இப்படி ஒரு கட்டுரை தேவையா? வரலாறுகளை மற்றவர்களின் மூலமாக தான் தெரிய முடியும். வரலாறு குறித்து பலரும் எழுதுவார்கள். அதில் சரியாகவும் இருக்கும் தவறாகவும் இருக்கும். ஒரு விஷயத்தை பற்றி கட்டுரை எழுதும் போது, எந்த வரலாறு உண்மை எது தவறு என்றாவது எழுதுபவருக்கு தெரிய வேண்டும். நாம் வாழும் காலத்திற்கு முந்தைய அல்லது பல வருடங்களுக்கு முன்னர் நடந்த விஷயங்களை தான் வரலாறு என்பார்கள். ஜந்து முன்னர் நடந்த ஒரு விஷயத்தை வரலாறு, இதை காப்பி தான் அடிக்க வேண்டும் என்று கூறுவது அறிவுடைமையா? இது போன்று ஒரு காப்பியை பள்ளி குழந்தை கூட அடிக்காதே! பெரிய அறிஞர் போல காட்டிக்கொண்டு செயல்படுவர்களுக்கு இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாதது ஏன்?

பதில் தொடரும்.....

//அண்ணன் மார்களும் காப்பி பேஸ்ட் செய்கிற அளவுக்கு ஒன்றும் தெரியாதவர்களல்ல!
வயதிலும் அரசியல் பார்வையிலும் ஒன்றும் குறைந்தவர்களல்ல! //

அண்ணண்மார்களே காப்பி அடித்திற்கு ஒப்புதல் தந்துவிட்டார்களே, நீங்கள் இல்லை என்கிறீர்களே? ஆதாரம் வேண்டுமா?

வயதிலும் அரசியல் பார்வையிலும் குறைவற்றவர்களுக்கும் இட ஒதுக்கீடு எப்போது கிடைத்து என்று தெரியாமல் போனது ஏன்?

இட ஒதுக்கீட்டின் பலன் சமுதாயத்திற்கு கிடைக்கவில்லை என்ற அண்ணண்மார்கள், அதை நிரூபிக்க தயாரா என்று கேட்தற்கு அமைதி காப்பது ஏன்?

//TNTJ பற்றி அண்ணண் மார்கள் சொன்னது அடுத்தவங்க சொன்ன கண்ணோட்டமே தவிர , அவங்க கண்ணொட்டமே அல்ல!//

இதை தான் அயோக்கிதனம் என்கிறோம். யாரே சொன்ன ஒரு விஷயத்தை, அது உண்மையா? அல்லது பொய்யா? என்று பார்க்காமல், தனக்கு பிடிக்காத இயக்கவர்களை விமர்சிக்றார்கள், எனவே அதை பரப்புவோம் என்பது சரியா? தமுமுகவை பற்றி எத்தனை பேர் விமர்சனம் செய்கிறார்கள், அதை எல்லாம் அண்ணண் அள்ளி போட்டு கட்டுரை போடுவரா? தவ்ஹீத் ஜமாஅத்தினர் குர்பானி கறியில் இலாபம் பார்க்கிறார்கள் என்பது எவனின் விமர்சனம்?

//தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இதை முன்னெடுத்து நடத்தி வக்கிரபுத்தி உடையவர்களுக்கு சாவுமணி அடிக்க இந்த மாதிரியான ஒரு அறப் போரை துவக்கி விதை தூவியது வரவேற்கத் தகுந்த காய் நகர்த்தல்தான் என்பதை மனசாட்சி உள்ளோர் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்//

ஜஹபர் சாதிக் அவர்களுக்கு,

தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தை புகழ்வதாக நீங்கள் குறிப்பிடும் வரிகளிலும் தவறான தகவல்களை கட்டுரையாளர் வேண்டுமென்றே அல்லது தெரியாமலே சேர்த்துள்ளார்.

தவ்ஹீத் ஜமாஅத் இட ஒதுக்கீட்டிற்காக தனியாக நடத்திய முதல் போராட்டம் இது தான் என்பது போல கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ளார். இட ஒதுக்கீட்டிக்கான முதல் குரல் 1995 ஆம் ஆண்டில் எழுப்பட்டது. அன்று முதல் தவ்ஹீத் ஜமாஅத் இட ஒதுக்கீட்டிக்காக எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளது? ஆட்சியாளர்களுக்கு அயோக்கிதனங்களுக்கு அது சவுமணியாக அது இருக்கவில்லையா? இட ஒதுக்கீட்டிக்கான பிரச்சாரத்தையும் அதற்கான பேராட்டத்தையும் தமிழகத்தில் முன்னின்று நடத்தியது யார் என்று சொல்லி தான் தெரிய வேண்டுமா?

அண்ணண்மார்களுக்கு நான் ஆதரவாளனோ TNTJ க்கு எதிரானவனோ நான் அல்ல! இரு கட்டுரை வாயிலாகவும் அல்லது அண்ணண் மார்களிடம் கேட்டாவது பதில் அளிக்க முடியும். ஆனால் முந்தைய பின்னூட்டத்தின் ஓரிரு வார்த்தை கூட வரம்பு மீறுவதாய் நான் உணர்வதால் இனி என்னால் பதில் அளிக்க இயலாது.

ஜஹபர் சாதிக் அவர்களுக்கு,

நாங்கள் வரம்பு மீறிவிட்டதாக குற்றம்சாட்டி தான் நீங்கள் கருத்து எழுதினீர்கள். அதற்கு முதலில் யார் வரம்பு மீறுகிறார்கள் என்று நாங்கள் விளக்கி எழுதியிருந்தோம். இதற்கு நீங்கள் பதில் சொல்ல முடியாமல், மேலும் வரம்பு மீறும் சில வார்த்தைகள் வந்துள்ளாக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அப்படி வரம்பு மீறிய வார்த்தைகள் வந்தால், அது உங்களுக்கான ஆதாரம், அதையே நீங்கள் எடுத்துக்காட்டி நாங்கள் வரம்பு மீறுபவர்கள் என்று நிரூபித்து இருக்கலாம். அதைவிடுத்து, மொட்டையாக குற்றம்சாட்டுவிட்டு, ஓடுவது எங்களின் முந்தைய கருத்திற்கு உங்களிடம் பதில் இல்லை என்று காட்டுகிறாது.

வஸ்ஸலாம்.

//நடுநிலை சந்தி சிரிக்கிறது//

இது போன்ற வார்த்தைப் பிரயோகம் இன்னும் ஒருபடி மேலேறி இதுவரை இருந்த கண்ணிய வார்த்தைகள் கெட்டுவிடக்கூடாதே என எண்ணி பதில் அளிக்க இயலாது என்று முறையாக கருத்திட்டு இருக்கும்போது மேலும் ஒரு அடியாக

//மொட்டையாக குற்றம்சாட்டுவிட்டு, ஓடுவது//

போன்ற வார்த்தைகள் இன்னும் வருத்தமளிக்கின்றன.

Vassalaam.

ஜஹபர் சாதிக் அவர்களுக்கு,

அதிரையில த த ஜ எவ்வளவோ மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளை செய்து வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள் இதில் எதையாவது அவர்கள் இனையதளத்தில் போட்டுள்ளார்களா பாராட்டியுள்ளார்களா அப்படி இருக்கையில் த த ஜ பற்றிய விமர்சனத்தை மட்டும் தேடிபிடித்து தங்கள் இனைய தளத்தில் போடுவது நோக்கம் என்ன?

த த ஜ வை தவிர்த்து மற்ற இயக்கத்தினரை விமர்த்து அவர்கள் எழுதியது உண்டா?

ஜஹபர் சாதிக் அவர்களுக்கு,

நாங்கள் சரியில்லதவர்கள் என்று காட்டத்தானே இங்கே வந்தாக சொன்னீர்கள். செய்யும் செயலுக்கு தகுந்தாற் போல் வார்த்தைகள் வரத்தான் செய்யும். உங்களிடம் பதில் இல்லாததால், எதையாவது குறை என்று சொல்லி பதில் இல்லாமல் தப்பி ஓடுகிறீர்கள். நீங்கள் நானும் கருத்து போட்டுள்ளேன் என்று கட்டுரை எழுதிய அண்ணணுக்கு காட்ட தான் இங்கே வந்தீர்களே என்று எண்ணத் தோன்றுகிறது, அங்கே வந்துள்ள உங்களின் கருத்து இதை தெரிவிக்கிறது.

கட்டுரை எழுதியவர்களும், போட்டர்களும், போனில் மிரட்டியவர்களும் நமது தளத்தில் வந்து கருத்திட்டு விவாதிக்க தயங்கும் போது, நீங்கள் வந்து பெயருக்காவது கருத்திட்ட உங்களை பாராட்டத்தான் வேண்டும். உங்களுக்கு உள்ள தைரியமாவது அண்ணண்மார்களுக்கு வரட்டும்.

வஸ்ஸலாம்.

அஸ்ஸலாமு அலைக்கும்

//"இடஒதுக்கீடு கேட்டு சிறைநிரப்பும் போராட்டம்" காவல் துறை அனுமதியுடன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான்கு இடங்களில் நடைபெற்றது.எப்படி கைது செய்வார்கள்?

ஒரு தளத்தில் இந்த கேள்வியை பார்த்தேன் கேள்வியில் ஏதோ நியாயம் இருப்பது போல எனக்கு படுகிறது .இதற்கு முடிந்தால் பதில் சொல்லவும்

//sheikdawood mohamedfarook சொன்னது…
இடஒதுக்கீடு கேட்டு சிறைநிறப்பும் போராட்டம் நடத்தியபோது அரசு அவர்களைஒரு மணிநேரமாவது சிறையில் அடைத்து வெளியே விட்டிருந்தால்'' நாங்கள் 'சமுதாய நலனுக்காக' சிறைசென்ற தியாகிகள்!'' என்று தம்பட்டம் அடிக்கலாம். அந்த ஆசை கை நழுவிபோனதால் வந்த ஏமாற்றத்தின் விளைவே இந்தக்கோபம்!. //

இந்த கருத்துக்கு தங்களின் பதிலையும் எதிர்பார்கிறேன்
Reply சனி, பிப்ரவரி 15, 2014 10:13:00 முற்பகல் //

அஸ்ஸலாமு அலைக்கும்

//
அஸ்ஸலாமு அலைக்கும்!
அவர்கள் தங்களின் tntj.in இலும் லிங்க் கொடுத்துப் பெருமைப் பட்டிருக்க்றார்கள். அதுதான் எனக்கு மிகவும் வேதனையைக இருந்தது.
வஸ்ஸலாம்.

Reply வெள்ளி, பிப்ரவரி 14, 2014 10:12:00 பிற்பகல் //

மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்கள் tntj.in என்று ஒரு தளம் இருப்பதாகவும் அந்த தளத்தில் தாங்கள் விளம்பரம் செய்வதாகவும் சொல்லியுள்ளாரே

பேராசிரியர் வதந்தியை சொல்ல மாட்டார் என்று நம்பி நானும் அந்த தளத்தை தேடி பார்த்தேன் கிடைக்க வில்லை நீங்கள் கண்டுபிடித்து பதில் சொல்வீர்களா ?

சகோ. நெய்னா முஹம்மது அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

//அஸ்ஸலாமு அலைக்கும்!
அவர்கள் தங்களின் tntj.in இலும் லிங்க் கொடுத்துப் பெருமைப் பட்டிருக்க்றார்கள். அதுதான் எனக்கு மிகவும் வேதனையைக இருந்தது.
வஸ்ஸலாம்.//

நீங்கள் குறிப்பிடும் நபர்களிடம் உண்மை இல்லை என்பதற்கு மிகப்பெரிய ஆதாரம், இந்த கருத்துகளை அவர்களின் இணையதளத்தில் பதிவது தான். இதே கருத்துகளை நமது தளத்தில் பதிந்து இருந்தால், அதன் உண்மை தன்மை விளக்கியிருப்போம். அங்கே பதிந்தால், பதிலும் வராது, பதில் யாரும் எழுதினாலும், அதை விதிமுறைகளுக்கு ஒத்துவரவில்லை என்று கோவை அய்யுப் ஆதரவாளர்கள் அதை நீக்கிவிடுவார்கள். இவ்வாறு கருத்து எழுதுபவர்கள் பொய்யர்கள் என்பதற்கு அவர்களின் செயலே ஆதாரமாக உள்ளது.

இவர்களின் கேள்விகளுக்கு பதில் தந்து இவர்களின் முகத்திரையை கிழிப்பது எங்களின் கடமை.

நீங்கள் குறிப்பிடும் நபர்கள் இவ்வாறு பொய்யை உண்மை போல உளற காரணம், புகழ் போதை தான். பேராசிரியர்கள் கூட இந்த புகழ் போதையினால் தான் உளறுகிறார்கள்.

tntj.in என்ற இணைய தளம் tntj.net என்ற இணைய தளத்திற்கான மற்றோரு முகவரி. tntj.in என்ற முகவரி tntj.net என்ற முகவரிக்கு தான் அழைத்து செல்லும்.

tntj.net இணையதளத்தில் நமது கட்டுரை வந்தாக அந்த புழுகும் பேராசிரியர் கூறிப்பிடுகிறார். இது பச்சை பொய். இதற்கான ஆதாரத்தை காட்டி பேராசிரியர் பட்டம் சும்மா போடுவது அல்ல என்று நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு புழுகுபவரை கூட கண்டிக்காத கல்ல நரிகளாக தான் நிரூபர்கள் உள்ளார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதற்காக எப்படிப்பட்ட கேவலமான செயலையும் இவர்கள் செய்வார்கள்.

கண்ணியம் கருதி பேராசிரியரின் பெயர் கூறிப்பிடப்படவில்லை. மீண்டும் உளரினால், பெயரும் வெளிப்படும்.

//sheikdawood mohamedfarook சொன்னது…
இடஒதுக்கீடு கேட்டு சிறைநிறப்பும் போராட்டம் நடத்தியபோது அரசு அவர்களைஒரு மணிநேரமாவது சிறையில் அடைத்து வெளியே விட்டிருந்தால்'' நாங்கள் 'சமுதாய நலனுக்காக' சிறைசென்ற தியாகிகள்!'' என்று தம்பட்டம் அடிக்கலாம். அந்த ஆசை கை நழுவிபோனதால் வந்த ஏமாற்றத்தின் விளைவே இந்தக்கோபம்!. //

இவரை மாங்க மடையர் என்று தான் அழைக்க வேண்டும். தவ்ஹீத் ஜமாஅத்தின் பேராட்ட வீரீயத்தை கண்டு கழிந்தது யார்? யாருக்கு வயிறு எரிந்து கட்டுரை என்ற பெயரில் அங்கும் இங்கும் கருத்துகளை திருடி பக்கத்தை நிரப்பியது யார்?

இவர்களின் மடமை எப்படி எல்லாம் வெளிப்படுகிறது என்பதற்கு கட்டுரை எழுதியவர், ஏன் சிறைக்கு அழைக்க வேண்டும் என்கிறார், கருத்து போடும் கிருக்கன் சிறையில் ஏன் உங்களை அடைக்கவில்லை என்கிறான். நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்? இந்த கிருக்கருக்கு தைரியம் இருந்தால் இது பற்றி நமது இணையதளத்தில் வந்து விவாதிக்க தயாரா?

ஒரு விஷயத்தை பற்றி பேசும் முன் அது பற்றி அறிவு வேண்டும். பொதுவாக, சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவித்து 100 நபர்கள் கூடினால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அத்துனை நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளிவிடும்.

இதே ஆயிரம் நபர்கள் கூடினால், சற்று பின்வாங்கி, அவர்களை பிடித்து மண்டபவங்களின் அடைத்து, அன்றே விடுதலை செய்யும்.

லட்சக்கணக்கான மக்கள் சிறை நிரப்பும் பேராட்டம் என்று கூடினால், அவர்களை காவல்துறையால் கைது செய்யவும் முடியாது, மண்டபங்களில் அடைக்கவும் முடியாது. தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் பேராட்டத்தில் கூடிய மக்களை காவல்துறை கைது செய்ய வேண்டுமென்றால், இதற்க்கே இரண்டு முன்று நாட்களாக ஆகும். காவல்துறையே உங்களை எங்களால் கைது செய்ய முடியாது என்று நான்கு இடத்திலும் சென்னார்கள், பேராட்டத்தை முடித்துவிட்டு சென்றுவிடுங்கள் என்று குறிப்பிட்டார்கள். இது தான் உண்மை. காவல்துறையால் கைது செய்ய முடியும் அளவை விட எல்லை மிஞ்சிய கூட்டம் வந்தது, காவல்துறையால் கைது செய்ய முடியவில்லை என்று பல பத்திரிக்கைகளிம் செய்தியாக வந்தது. இதையெல்லாம் தெரிந்துகொண்டு, தங்களின் கயமையை வெளிப்படுத்துகிறார்கள். சிறை செல்லும் பேராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் தியாகம், அங்கு வந்த மக்கள் பட்ட கஷ்டங்கள், குளிரிலும் வெயிளிலும் பட்ட துன்பங்கள் இதையெல்லாம் கேவலப்படுத்தி தங்களின் நடுநிலை நரித்தனத்தை காட்டுகிறார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தினரும் சிறை செல்லும் பேராட்டத்தில் கலந்து கொண்ட மக்களும் சிறை செல்லுவதற்காக பயந்து யாரும் திரும்பவில்லை. எல்லா இடங்களிலும் பேராட்டத்திற்கு வர வேண்டிய அனைவரும் வந்து சேர்வதற்கு முன்பே மக்களின் அவதியை கவனத்தில் கொண்டு பேராட்டம் முடிக்கப்பட்டது. எத்தனையே பேராட்டங்களில் தவஹீத் ஜமாஅத்தினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுயிருக்கிறார்கள். எதைப்பற்றியும் தெரியாமல் நீங்கள் குறிப்பிடும் நரி ஊழையிடுகிறது.

அந்த நரிக்கு தைரியம் இருந்தால் இது பற்றி நமது தளத்தில் வந்து விவாதிக்கட்டும்.

////"இடஒதுக்கீடு கேட்டு சிறைநிரப்பும் போராட்டம்" காவல் துறை அனுமதியுடன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான்கு இடங்களில் நடைபெற்றது.எப்படி கைது செய்வார்கள்?//

இந்த கருத்தை எழுதியவரும் பெரிய அறிஞர். அறிவு களஞ்சியம். தவ்ஹீத் ஜமாஅத் முதலில் சென்னை மட்டும் பேராட்டம் நடத்துவதாக இருந்தது (அதுவும் சிறை நிரப்பும் பேராட்டம் என்ற முடிவும் இல்லை). காவல்துறை நீங்கள் பிரித்து நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்ட அடிப்படையிலும், பேராட்டத்தில் வரும் மக்களுக்கும் அதிகமான கஷ்டங்கள் ஏற்பட கூடாது என்பதற்க்காகவும் நான்கு இடமாக பிரித்து நடத்தப்பட்டது. இதை பிஜே அவர்கள் தனது கண்டண உரையிலும் குறிப்பிட்டர், அதை வைத்து இந்த தம்பி உளறுகிறார். சிறை நிரப்பும் பேராட்டம் என்றாலே கைது செய்யத்தான் செய்வார்கள். லட்சக்கணக்கான மக்கள் திரண்டால் ஒன்றும் செய்ய முடியாது, அங்கும் இங்கும் சில தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள், வரும் மக்களை தோதனை சாவடிகளில் தடுத்த நிறுத்த பார்த்தனர். இவ்வளவு மக்கள் கூட்டத்தை நாம் ஒன்று செய்ய முடியாது என்று காவல்துறைக்கு நன்றாக தெரியும், அதை தான் காவல்துறை செய்துள்ளது. குறை சொல்லியே ஆக வேண்டும் திரியும் கிருக்கர்களுக்கு இது தெரியாது.

நமது இந்த தம்பி அந்த கருத்தை போட்டு விவாதிக்க வருவாரா? உண்மையிருந்தால் தான் அந்த தைரியம் எல்லாம் இருக்கும்.

வேறு உளறல்கள் இருந்தாலும் எடுத்து போடுங்கள். பதில் தருகிறோம்.

தனியாக கவனிக்கப்பட வேண்டிய சில கருத்துகள் உள்ளன. அவற்றை தனியாக கவனிப்போம், இன்ஷா அல்லாஹ்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.