Monday, March 05, 2012

தேர்வுகளை சந்திப்பது எப்படி? - சில குறிப்புகள்



வெற்றிக்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது. இதை தான் மாணவர்கள் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்வில் வெற்றி பெற நீங்கள் முதலில் நன்றாக படிக்க வேண்டும். ஒவ்வோரு தேர்வுக்கும் தயாரிப்புக்கள் வேறு விதமாக இருக்கும். போட்டி தேர்வுக்கான தயாரிப்பு நீண்டகாலம்  ருக்கும். பள்ளி தேர்வுக்கு சில வாரம் முயற்சி செய்தால் போதுமானது.

பயம் - வெறுப்பு வேண்டாம்நம்பிக்கை வேண்டும்:

பல மாணவர்கள் நன்றாக படிப்பார்கள்இருந்தும் அவர்கள் தேர்வை கண்டு அதிமாக பயப்படுவார்கள்இதன் காரணத்தால் அவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாட்டார்கள். எனவேஉங்களின் எல்லா பயத்தையும் விட்டொழியுங்கள் படிப்பதற்கு முன் மனதை நிம்மதியாக வையுங்கள். நம்பிக்கையும் வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமானது.

நேர அட்டவனை (Time Table):

படிப்பதற்கு முன் நல்ல நேர அட்டவனையை தயார் செய்யுங்கள். இது எல்லா பாடங்களையும் (Subjects)உள்ளடக்கி இருக்க வேண்டும். எல்லா பாடங்களுக்கும் சமமான நேரம் ஒதுக்க தேவையில்லை. கடினமான பாடத்திற்கு அதிக நேரம் ஒதுக்கிஎளிதான பாடத்திற்கு குறைந்த நேரம் ஒதுக்கலாம். ஒரு பாடத்தை முடித்த பிறகு மார்க்கம் அனுமதித்த பொழுதுபோக்குகளில் சிறிது நேரம் செலவிடலாம். ஒவ்வோரு பாடத்தை முடித்த பிறகும் சிறிது நேரம் இடைவெளி கண்டிப்பாக வேண்டும்.

படிப்பதற்கு தகுந்த சூழல் (Proper Atmosphere):

இந்த விஷயத்தை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. படிப்பதற்கு உண்டான சூழல் மிக அவசியம். யாராவது தொலைகாட்சி பார்த்துக்கொண்டு படிக்க முடியுமாஎனவேநீங்கள் சவூகரியமாக கருதும் இடத்தை படிப்பதற்கு தேர்வு செய்யுங்கள். அப்போழுது தான் நீங்கள் நிம்மதியாக உங்களின் பாடத்தில் கவனம் செலுத்த முடியும். ஒரு பாடத்தை படிக்கும் போது அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்வேறு பாடத்தை பற்றி நினைக்க கூடாது. மிக முக்கியமாககாலை நேரங்களில் படிப்பது மிக சிறந்தது. காரணம்காலை நேரங்களில் சுற்றுச்சூழல் அமைதியாக இருக்கும்இதனால் நீங்கள் உங்களின் பாடத்தில் அதிக கவனம் செலுத்தலாம். உங்களின் கவனம் தான் மிக முக்கியம்.

படிக்கும் போது உங்களுக்கு நேராக கண்ணாடி இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது உங்களின் கவனத்தை திசை திருப்பும்.

நேராக அமருங்கள்:

படிக்கும் போது சரியான முறையில் அமருவது மிக முக்கியமானது. கட்டிலில் அமர்ந்து படிப்பதும்நாற்காலியில் சாய்ந்து கொண்டு படிப்பதையும் தவிர்க்க வேண்டும். படிக்கும் போது முதுகை நேராக வையுங்கள். கால்களை தலையோடு அல்லது தரையில் இருந்து சற்று உயரமாக வையுங்கள். தலையை விட கால்களை உயர்த்தி வைப்பதை தவிர்க்கவும்இவ்வாறு செய்தால் ரத்த ஓட்டத்தை பாதித்து தூக்கத்தை ஏற்படுத்தும். கால்களை தரையோடு அல்லது தரையில் இருந்து சற்று கீழே வைப்பதே நல்லது.

குறிப்பு (Notes) :

இது கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். படிக்கும் போது சிறிய அளவில் குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள். குறிப்புகள் சுருக்கமாக இருக்க வேண்டும். குறிப்பு  சுருக்கமாக  இருந்தால் தேர்வு நேரத்தில் மீண்டும் படிப்பதற்கு வசதியாக இருக்கும். குறிப்பில் சூத்திரங்கள்படங்கள் மற்றும் முக்கியமான பாய்ண்ட்டுகள் இருத்தல் வேண்டும். புத்தகத்தை முழுமையாக புரட்டுவதை விட இந்த குறிப்பு தேர்வு நேரத்திற்கு முன் மீண்டும் படிப்பதற்கு இலகுவாக இருக்கும். இந்த குறிப்பை வைத்து தயாராவது அதிக நேரமும் எடுக்காது. குறிப்பில் எங்கையாவது கடினமாக இருந்தால்அந்த பகுதியை மட்டும் புத்தகத்தில் பார்க்கலாம்.

நன்றாக தூங்குங்கள்நன்றாக சாப்பிடுங்கள்:

மாணவர்கள் தேர்வு நேரத்தில் நன்றாக தூங்க வேண்டும். தூக்கம் சம்பந்தமான ஆய்வு ஒன்று மனிதர்கள் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும் என்கிறது. தேர்வு முதல் நாள் மாணவர்கள் ஆறு மணி நேரம் குறைந்தபட்சம் தூங்க வேண்டும்எட்டு மணி நேரத்திற்கு அதிகமாக தூங்க கூடாது. சரியான அளவில் தூக்கம் இல்லாவிட்டால்தேர்வை எழுவது கடினமாக இருக்கும். 

தேர்வு நேரத்தில் வழக்கமாக சாப்பிடும் உணவையே சாப்பிட வேண்டும். வயிற்றுக்கு இலகுவான உணவை சாப்பிடுவது நல்லது. தேர்வுக்கு முதல் நாள் தூங்குவதற்கு முன் தண்ணீர் அருந்துவது சிந்தனையை தெளிவாக வைக்க உதவும்.

நன்றாக எழுதுங்கள் (Present Well):

தேர்வில் மதிப்பெண்களை பெற்றுத்தருவது நாம் எழுதும் முறை தான். நீங்கள் படித்ததை எவ்வாறு எழுதுகிறீர்கள் என்பதை வைத்து தான் மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்கள் நாம் எழுதியவற்றை படிக்க முடியாமல் போகலாம். காரணம் அவர்கள் நாள் ஒன்றுக்கு பல மாணவர்களின் விடைகளை திருத்த வேண்டி இருக்கும். எனவேஅவர்கள் முக்கிய குறிப்புகளைத்தான் எதிர்பார்ப்பார்கள். முக்கிய குறிப்புகளை தெளிவாக எழுதுங்கள். கட்டுரை போன்றவற்றில் முக்கிய குறிப்புகளை அடிக்கோடு இடுங்கள். உங்களின் கையெழுத்தும் உங்களின் மதிப்பெண்னை தீர்மானிக்கும். எனவேஅழகாக எழுதுங்கள். உங்களின் கையெழுத்து சரியாக இல்லாவிட்டால்கவலை வேண்டாம். நல்ல முறையில் எழுதுங்கள்உங்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும். 

அடுத்துகவனித்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம்நமக்கு நன்றாக பதில் தெரிந்து விடைகளை முதலில் எழுதுவது. காரணம், First Impression is the best impression என்பார்கள். 

எனவேஉங்களுக்கு நன்றாக பதில் தெரிந்த விடைகளை முதலில் எழுதுங்கள். இது உங்களின் விடை தாள்களை திருத்துபவருக்கு நல்ல எண்ணத்தை எற்படுத்தும். நீங்கள் கடைசியாக எழுதும் விடைகள் சரியாக இல்லாவிட்டாலும்திருத்துபவர்கள் அதிகமாக மதிப்பெண்களை குறைக்க மாட்டார்கள். மேலும்தேர்வுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும்  நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். எல்லா விடைகளையும் நிர்ணைக்கப்பட்ட நேரத்தில் எழுவதற்கு தகுந்தால் போல் திட்டமிட்டு எழுத வேண்டும். உங்களின் பாடத்திட்டத்திற்கு சம்பந்தம் இல்லாத (Out of Syllabus) கேள்விகள் எதுவும் வந்தால்அந்த கேள்விகளை  எழுதுங்கள். பொதுவாக பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும். 

தேர்வில் முறைகேடு வேண்டாம் (Malpractice): 

தேர்வில் காப்பி அடிக்க முயற்சி செய்ய வேண்டாம். இவ்வாறு செய்வது உங்களின் மதிப்பெண்களை குறைக்கும். இவ்வாறு செய்வது சில நேரங்களில் நீங்கள் தொடர்ந்து தேர்வு எழுவதற்கு கூட தடையாக அமையலாம். உங்களுக்கு பதில் தெரியாவிட்டால்பதில் எழுத வேண்டாம். தேர்வு என்பது உங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கு தான் என்பதை கவனத்தில் கொள்ளவும். நாம் இங்கு சொல்லியுள்ள விஷயங்களை நீங்கள் பின்பற்றினாலே உங்களால் அதிக மதிப்பெண் பெற முடியும்.

இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள்:

இதுவரை நாம் கூறியது நமது முயற்சிகளை பற்றியது. இறுதி முடிவு இறைவனின் நாட்டத்தை பொறுத்தது. எனவே,உங்களின் வெற்றிக்காக இறைவனிடம் தொழுது பிராத்தனை செய்யுங்கள். தேர்வு அறைக்கு செல்லும் முன் உங்களின் மனதை நிம்மதியாக வையுங்கள். உங்களால் முடிந்த காரியத்தை பற்றி உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

தேர்வு முடிந்த பிறகு நடந்த தேர்வில் உங்களின் பதில்களை பற்றி மற்ற மாணவர்களுடன் ஆலோசிக்க வேண்டாம். இவ்வாறு செய்வது எதிர்வரக் கூடிய மற்ற தேர்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மற்ற மாணவர்கள் இவ்வாறு ஆலோசிப்பதை கண்டால்அவர்களுடன் இருக்காமல்உங்களின் வீட்டிற்கு செல்லுங்கள்.

எல்லாவற்றிக்கும் மேலாக உங்களின் படிப்பிற்காக உங்களின் பெற்றோர்கள் அடையும் கஷ்டங்களை எண்ணிப்பாருங்கள்.  அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அக்கரையை நினைத்துப்பாருங்கள். இவற்றிக்கு நீங்கள் செலுத்தும் பரிகாரம் உங்களின் வெற்றி தான். எனவேஉங்களின் பெற்றோர்களை ஏமாற்றம் அடைய செய்யாதீர்கள். படிப்பு அவர்களுக்கானது அல்லநீங்கள் நன்றாக படித்தால் உங்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.