Sunday, November 23, 2014

அவ்லியா வந்து அமரும் புளியமரம் அகற்றப்பட்டது


அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் அடக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்படும் ஹாஜா ஒலி தர்ஹாவில் அவ்லியா பல் துவக்கிவிட்டு போட்ட குச்சித்தான் தர்ஹாவிற்கு வலது புறம் அமைந்துள்ள பெரிய புளிய மரமும் அதன் மேடையும் என்று நம்புகின்றனர்.

கொடிமரம் ஏற்றப்படும் போதெல்லாம் ஹாஜா ஒலி அந்த புளிய மரத்தின் உச்சியில் வந்து அமர்ந்திருப்பார்களாம் அப்போது உச்சி கொப்பு ஆடுது பாருங்கள் என்பார்கள் அது மட்டுமல்லாது உச்சி கொப்பு ஆடும்போது அந்த புளிய மரத்து இலையை பரித்து சாப்பிட்டால் பிள்ளை இல்லாதவர்களுக்கு  பிள்ளை உண்டாகின்ற பாக்கியம் கிடைக்கும் என்ற கண் மூடித்தணமான நம்பிக்கை மக்களிடம் இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் அந்த மரம்பட்டுபோனதால் அதை வெட்டி அப்புறப்படுத்திவிட்டார்கள் (இப்போ பிள்ளையில்லாதவர்கள் வேப்ப இழையை தின்பார்கள் போலும்) 20.11.2014 அந்த புளிய மரத்து மேடையும் JCB மூலம் இடித்து தரைமட்டமாகி விட்டார்கள் அதோடு சேர்த்து புளிய மரத்து மேடையில் கட்டப்பட்ட குட்டி அவ்லியாவுடைய கபுரும் இருந்தது அதையும் சேர்த்து இடித்து தகர்க்கப்பட்டுள்ளது சமாதி வழிப்பாடு எப்பேர்பட்ட மடத்தனமான மூடநம்பிக்கை என்பது இதிலிருந்து விளங்குகின்றது.

தர்ஹா கப்ரு வணங்கிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் இருக்கின்ற கப்ரை இல்லாமல் ஆக்குவோம் இல்லாத இடத்தில் கப்புரை உண்டாக்குவோம் அதை ஏற்று கொள்ளுகின்ற மடையர் கூட்டம் இருக்கின்றார்கள் என்பதை ஊருக்கு உணர்த்தியுள்ளார்கள் இவையெல்லாம் இனை வைப்பு என்று என்றைக்கு விளங்கி தவ்பா செய்ய போகின்றார்கள்

இப்படிக்கு
 Yஅன்வர் அலி

2 கருத்துரைகள் :

அவர்கள் சும்மா இருந்தாலும், உசுப்பேத்த ஒரு கூட்டம் இருக்குது, கப்ரு கட்ட அடிக்கள் நாட்டுது,

அல்லாஹ் பாதுகாப்பானாக

மேற்படி விமற்சனத்தில் வேப்ப இலை வாசனை அடிக்குதே அவங்களுக்கு ஆதரவோ....?

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.