Friday, November 01, 2013

இடஒதுக்கீடு அளித்தால் பாஜகவை ஆதரிக்கலாமா?

இடஒதுக்கீடு அளித்தால் பாஜகவை ஆதரிக்கலாமா? 

கேள்வி – பா.ஜ.க. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தால், மற்ற பிச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரமுகர் பேட்டியளித்ததும், நிர்வாகத்தின் சார்பில் உடனே அதற்கு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டதும், தவ்ஹீத் ஜமாஅத்தில் முரண்பாடுகள் உள்ளதைக் காட்டுவதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். இதுபோல் வேறு எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாவது கூறியிருந்தால் ட்ர்ஹவ்ஹீத் ஜமாஅத்தினர் அதை லேசில் விட்டுவிடுவார்களா என்றும் முகநூல்களில் கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் செய்யப்பட்டு வருகின்றன. ஏன் இந்த முரண்பாடு? உங்களுக்கு ஒரு நீதி? மற்றவர்களுக்கு வேறு நீதியா?

எம். அக்ரம் பாஷா, அபுதாபி

பதில் – உங்கள் கேள்வியில் மூன்று விஷயங்கள் உள்ளன.

முதலில் இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால் அவ்வாறு அளிக்கும் கட்சி முஸ்லிம்களுக்கு எவ்வளவு அநீதி இழைத்திருந்தாலும் அதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வாக்களிப்போம் என்ற தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பாஜகவுக்குப் பொருந்தாது. இது பாஜக அல்லாத கட்சிகளைக் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நிலைபாடாகும்.

பாஜவைப் பொருத்தவரை சமுதாய உணர்வுள்ள எந்த முஸ்லிமும் இந்த நிலைபாட்டை எடுக்க மாட்டான்.

இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு முக்கியம் என்றாலும், அவர்களின் உயிர், உடமை மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படுவது அதைவிட முக்கியமானதாகும். பாஜக இடஒதுக்கீடு அளித்தாலும் அதன் மூலம் பயன்பெற முஸ்லிம்கள் நிம்மதியாக வாழமுடியாத நிலையை ஏற்படுத்துவார்கள்.

பல்லாயிரம் முஸ்லிம்களைக் கொன்று குவித்தது, கொலையாளிகளைப் பாதுகாக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியது, பாபர் மஸ்ஜிதை இடித்தது மட்டுமன்றி இன்னும் மூவாயிரம் பள்ளிவாசல்களை இடிப்போம் என்று மிரட்டுவது, முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதப்பயிற்சி அளிப்பது, திட்டமிட்டு கலவரங்களை உருவாக்குவது, அப்பாவி முஸ்லிம்களை என்கவுண்டர் என்ற பெயரில் கொன்று குவிப்பது, முஸ்லிம்கள் தங்களது மத நம்பிக்கையின்படி நடத்தும் திருமணம் போன்ற விஷயங்களை ஒழிக்க பொது சிவில் சட்டம் என்று கூப்பாடு போடுவது

இப்படி ஏராளமான கொடுமைகளை பாஜகவினர் செய்துள்ளனர். முஸ்லிம்கள் வாழ்வதும் வழிபடுவதும் இவர்கள் ஆட்சியில் கேள்விக்குறியாகி விடும்.

எனவே இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் பா.ஜ.க.வை ஆதரிக்காது. முஸ்லிம்களும் ஆதரிக்க மாட்டார்கள். இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக இட ஒதுக்கீடு அளித்தால் எல்லா பிரச்சனைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜகவை ஆதரிப்போம் என்று மேலாண்மைக் குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் பேட்டியில் குறிப்பிட்டது ஜமஅத்துடன் முரண்பாடு கொண்டு சொன்னது அல்ல.

இடஒதுக்கீடுதான் முதன்மையானது. இடஒதுக்கீடு வழங்கினால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கடந்த காலங்களில் அவர்கள் செய்த அநீதிகளை மறந்துவிட்டு ஆதரிப்போம் என்று தவ்ஹீத் ஜமாஅத் பல சந்தர்ப்பங்களிலும் தீர்மானத்திலும் சொல்லியுள்ளது. இது பா.ஜ.க.வுக்குப் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ளாமல், செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அப்படிச் சொல்லி விட்டார்.

இது தவறு என்று நாம் சுட்டிக் காட்டுவதற்கு முன்பே செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது இப்படிச் சொல்லிவிட்டேன். இவ்வாறு நான் சொல்லியிருக்கக் கூடாது என்று அவரே நம்மிடம் தெரிவித்தார்.

தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் என்ன தெரிவித்ததோ, அதுதான் அல்தாஃபியின் நிலையுமாகும். நான் சொன்னது சரிதான், அதுதான் எனது கருத்து என்று அவர் வாதிட்டால்தான் அது முரண்பாடு என்று கூற முடியும்.

சில கேள்விகளை திடீரென்று எதிர்கொள்ளும் போது இதுபோன்ற நிலமை சில வேளைகளில் ஏற்பட்டு விடுவதுண்டு. ஜமாஅத்தில் இந்த விஷயத்தில் இரண்டு கருத்துக்கள் இல்லை. முரண்பாடுகளும் இல்லை என்பதை இரண்டாவதாகப் பதிவு செய்கிறோம்.

இது அவரது தனிப்பட்ட கருத்து என்று மற்ற அரசியல் கட்சிகள் கூறுவது போல் நாம் கூற மாட்டோம்.

ஜமாஅத்தின் நிலைபாட்டுக்கு எதிராக யாருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்க இந்த ஜமாஅத்தில் அனுமதி இல்லை. சொந்த விஷயங்களில் தான் தனிப்பட்ட கருத்து இருக்கலாம்.

இது என் தனிப்பட்ட கருத்து என்று இதன் பின்னர் அல்தாபி சொல்லி இருந்தால் தான் அது முரண்பாடு என்று சொல்ல முடியும். அப்படி சொல்லி இருந்தால் ஜமாஅத் தாட்சண்யமில்லாமல் நடவடிக்கை எடுக்கும். கவனமின்மையால் திடீரென கேள்வி கேட்ட போது தவறுதலாக இப்படிச் சொல்லி விட்டேன் என்பதுதான் அல்தாபியின் பதில் என்பதால் ஜமாஅத்தில் முரண்பாடு என்று அறிவுடையோர் கூறமாட்டார்கள்.

வேறு இயக்கத்தின் தலைவர்கள் இப்படிச் சொல்லியிருந்தால், தவ்ஹீத் ஜமாஅத் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுமா என்ற கேள்வியும் தவறாகும்.

ஒரு இயக்கத்தின் முக்கியப் பிரமுகர் ஒருவர் பாரதூரமான கருத்தைச் சொல்கிறார். அதை அவரும் மறுக்கவில்லை. அவரது இயக்கமும் மறுக்கவில்லை என்றால், அதைத்தான் தவ்ஹீத் ஜமாஅத் விமர்சித்துள்ளது.

அல்தாபி இவ்வாறு கருத்து சொன்ன பின் தவ்ஹீத் ஜமாஅத் அதை ஆதரித்து இருந்தால் அப்போது தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கலாம்.

அல்லது ஜமாஅத் இதுபற்றி வாய் திறக்காமல் மவுனம் சாதித்தால் அப்போதும் ஜமாஅத்தை விமர்சிக்கலாம்.

அல்லது அல்தாபியின் பேட்டி வெளியாகி முகநூல்களில் பலவித விமர்சனங்கள் வந்த போது தான் கூறியது சரிதான் என்று நியாயப்படுத்தி அறிக்கையோ மின்ன்ஞ்சலோ அல்தாபி அனுப்பி இருந்தால் அப்போதும் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கலாம்.

அல்தாஃபி அவர்கள் இப்படிக் கூறியவுடன் ரியாதில் பொதுச் செயலாளர் இருக்கும் நிலையில் அங்கிருந்தே அனைவரிடமும் ஆலோசனை பெற்று அங்கிருந்தே ஜமாஅத்தின் கருத்து என்ன என்று அறிக்கை வெளியிட்டார்.

ஜமாஅத்தின் கருத்து இதுதான் என்று அந்த அறிக்கை தெளிவாக அறிவித்தது. அல்தாபி சொன்னது ஜமாஅத்தின் கருத்து அல்ல என்ற விஷயமும் அதற்குள் அடங்கி இருந்தது.

அவ்வாறு அறிக்கை வெளியிட்ட பின்னர், ஜமாஅத்தின் கருத்து தவறு, நான் சொன்னதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று அல்தாஃபி சொல்லி இருந்தால் தான் ஏன் அவருக்கு ஒரு நிலை மற்றவருக்கு ஒருநிலையா என்று கேள்வி கேட்கமுடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடந்து கொண்டதுபோல் வேறு இயக்கம் நடந்து அதை தவ்ஹீத் ஜமாஅத் விமர்சித்துள்ளதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மா அவர்கள் அள்ளிக் கொடுத்ததைப் பார்த்து, தமிழகத்தில் தானே புயல் வராத பகுதிகளில் வசிக்கும் மக்கள் புயல் தமது பகுதிக்கும் வராதா என்று ஏங்குகின்றனர் என்று மமக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் சொன்னார்.

இது அவரது கருத்து. இதை மமக மற்றும் தமுமுக ஆதரிக்கவில்லை என்று அதன் நிர்வாகிகள் அறிக்கை விட்டிருப்பார்களானால் தவ்ஹீத் ஜமாஅத் அந்த இயக்கத்தினை இந்த விஷயத்தில் விமர்சனம் செய்திருக்காது.

அதுபோல் பேசிய சட்டமன்ற உறுப்பினரும் தான் அவ்வாறு பேசியிருக்கக்கூடாது என்று உடனே மறுத்து இருந்தால், அப்போதும் நாம் விமர்சித்து இருக்க மாட்டோம்.

(அனைத்து முஸ்லிம்களின் கடும் கண்டனத்துக்குப் பிறகு பல மாதங்கள் கழித்து ஒரு பொதுக்கூட்டத்தில் தான் கூறியது தவறு என்று மென்மையாக அவர் ஒப்புக் கொண்டார்.)

பெரும்பாலான முஸ்லிம் இயக்கங்களில் இதுதான் நடக்கிறது. அந்த இயக்கத்தின் முக்கியப் பிரமுகர்கள் சிலை திறந்தாலும், இறந்தவரின் படங்களுக்கு மூத்த தலைவர்கள் மலர் தூவினாலும், பா.ஜ.வு.டன் ஒரே மேடையில் தோன்றினாலும், அந்த இயக்கங்கள் அதை எதிர்க்க முடியாமல் மவுனம் காக்கின்றன.

பா.ஜ.க. தலைவருடன் போஸ் கொடுத்ததை எங்கள் இயக்கம் கண்டிக்கிறது என்று அந்த இயக்கங்களால் சொல்ல முடியவில்லை. சொன்னால் அந்த மூத்த தலைவர் மனஸ்தாபம் அடைவார் என்று மௌனம் சாதிக்கிறார்கள்.

ஏராளமான சம்பவங்கள் மூலம் தெரிந்து இதை தெரிந்து கொள்ளலாம்.

மூத்த தலைவர்களும் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய மனநிலையில் இல்லை. நிர்வாகிகளுக்கும் அதைத் தட்டிக் கேட்கும் துணிவு இல்லை.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை ஒரு தலைவர் இப்படிக் கூறினால், அது ஜமாஅத்தின் கருத்துக்கு எதிராக இருந்தால், வாய் மூடி இருக்காமல், கருத்து சொன்ன நபரைப் பார்க்காமல், கருத்தை மட்டும் பார்த்து உடனே மறுப்புச் சொல்கிறது.

அதுபோல் யாருடைய கருத்துக்கு எதிராக ஜமாஅத் கருத்துச் சொல்கிறதோ, அவரும் சரியானவராக இருக்கிறார். கவனக்குறைவாக நான் சொன்ன சொற்களால் ஜமாஅத்திற்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுவிட்டதே என்று சொல்லி அவரும் வருந்துகிறார்.

நான் சொன்ன கருத்துக்கு எதிராக உடனே எப்படி மறுப்பு வெளியிடலாம் என்று அவரும் நினைக்கவில்லை.

அவர் மேலாண்மைக்குழு உறுப்பினராக இருப்பதால் எப்படி எதிர்க்கருத்து சொல்வது என்று நிர்வாகமும் நினைக்கவில்லை.

இது ஆட்களைச் சார்ந்த இயக்கமல்ல. கொள்கை சார்ந்த இயக்கம். மார்க்க விஷயத்தில்கூட பெரிய பெரிய இமாம்கள் சொன்ன கருத்தாக இருந்தாலும், அது தவறு என்றால், அதை விட்டுவிட வேண்டும் என்ற சரியான, உறுதியான அடித்தளத்தில் இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த வித்தியாசத்தை விளங்கினார்கள் என்றால், இந்தப் பிரச்சனையில் தவ்ஹீத் ஜமாஅத் நடந்து கொண்டதை அவர்கள் பெருமிதத்துடன் பார்ப்பார்களே தவிர குறைகூற மாட்டார்கள்.

எத்தனையோ இயக்கங்களைப் பார்க்கிறோம். அதன் மாவட்ட நிர்வாகிகள் கட்டப்பஞ்சாயத்து செய்தாலோ, மோசடி செய்தாலோ, சமுதாய நலனுக்கு எதிராக நடந்தாலோ, அவர்களை எதிர்த்து கருத்துச் சொல்லவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ தலைமைக்குத் துணிவு இல்லை.

அந்த மாவட்டத்தில் அந்த நபரை நம்பித்தான் இயக்கம் உள்ளதால், நடவடிக்கை எடுத்தால், எல்லோரும் அவருடன் சென்று விடுவார்கள் என்று அஞ்சும் அளவிற்கு கொள்கையற்றவர்களாக உள்ளனர்.

ஆனால் அதிகச் செலவில் நடத்தப்பட்ட திருமணங்களில் கலந்துகொண்ட சின்ன விஷயத்துக்காக மாநில நிர்வாகிகள் மீதே நடவடிக்கை எடுக்கும் ஜமாஅத்தாக தவ்ஹீத் ஜமாஅத் உள்ளது.

இந்த ஜமாஅத்தில் இருக்கும் மக்கள் இதன் தெளிவான கொள்கைக்காகவே இருக்கிறார்கள்.

எனவேதான் தலைமையும் சரியாக உள்ளது. நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்களும் சரியாக உள்ளனர்.

நம்மை இந்த விஷயத்தில் விமர்சிப்பவர்கள் இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் மேலும் உயர்வாகத்தான் இந்த ஜமாஅத்தை மதிப்பார்கள்.

ஒரு பேச்சுக்காக நான் சொன்ன கருத்து தான் சரி என்று அல்தாபி வாதிட்டு இருந்தாலோ, அறிக்கை வெளியிட்டு இருந்தாலோ இந்த ஜமாஅத் இவர்களைப் போல் வாய்பொத்தி இருக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
 நன்றி உணர்வு


25 கருத்துரைகள் :

அது சரி தான் காக.. ஒரு ஜும்மா பாயான்ல அஷ்ராப்தீன் பிர்தௌசீ இதே வார்த்தைய எந்த ஒரு மாற்றமுன் இல்லாம சொன்னாரு. அதுகு என்ன சொல்விங்க? இதேபோல் எல்லாரும் சொல்லிகிட்டே இருப்பாங்க, அது உடனே அவர் சொந்த கருத்தாகிடும். அப்டினா இந்த இயக்கத்துல உள்ள எல்லாருக்கும் இந்த எண்ணம் வந்து போகுது. கொள்கை உள்ளவர்களுக்கு வார்த்தை (எண்ணம்)தடுமாறது.
பதில் ?

சகோ. முஹம்மது நலீம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்கே அஷ்ரப்தீன் ஃபிர்தவ்சி எதை சொன்னார் என்று தெளிவாக குறிப்பிடவும். நீங்கள் சொன்ன மாதிரி எந்த கருத்தையும் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்சி குறிப்பிட்டு போல் தெரியவில்லை.

அது வேரேங்கயும் இல்லை.. அதிரை ததஜ பள்ளியில் ஜும்மா பயான்ல தான்.. ஒன்றரை வருடம் இருக்கும் சகோதரா.. பதில் ?

வாலைக்கும் சலாம்..

முஹம்மது நலீம்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இவ்வாறு குறிப்பிட்ட ஜூம்ஆவில் நீங்கள் கலந்து கொண்டீர்களா?

சாட்சிகளுடன் இதை உங்களால் நிரூபிக்க முடியுமா? நீங்கள் அதிரையை சார்ந்தவரா? உங்களின் உண்மை பெயர் நலீமா?

ஆயிரம் நபர்கள் கலந்து கொள்ளும் ஜூம்ஆவில் உங்களின் காதில் மட்டும் இவை கேட்டது எப்படி?

நிரூபிக்க தயாரா என்று சொல்லுங்கள்.....

ஆம்.. கலந்து கொண்டிருந்தேன்.. என் காதில் மட்டும் விழவில்லை, எல்லோரும் அந்த வார்த்தையை கேட்டார்கள்..நான் சொல்லும் வார்த்தைக்கு நானும் அல்லாஹ்வும் தான் சாட்சி.. ஏனென்றால் யாரும் இதை சொல்ல முன்வர மாட்டார்கள்..

நலீம்,

அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி என்ன வார்த்தையை சொன்னார் என்று தெளிவாக குறிப்பிடவும்.

நேரில் வந்து நீங்கள் குறிப்பிடும் செய்தியை நிரூபிக்க தயாரா?

உங்களை தவிர மற்றவர்கள் யாரும் இதை சொல்ல் முன்வர மாட்டார்கள் என்று நீங்களே எப்படி முடிவு செய்தீர்கள்.

இதில் யார் பொய்யர் என்று நிரூபிக்கப்படும். உங்களின் உண்மை பெயரும் வெளியில் வரும். இன்ஷா அல்லாஹ்.

நான் யாராக இருந்தாலும் சரி.. நான் நேரில் வந்து நிரூபித்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்..

எப்போது உங்களால் நேரில் வந்து நிரூபிக்க முடியும் என்று சொல்லுங்கள். மற்றவை நிரூபித்த பின்னர் தெரியும்.....

அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி எவ்வாறு கூறினார் என்ற வார்த்தை பற்றி கேட்டோம் பதில் இல்லை. நீங்கள் ஒரு பொய்யர் என்று இதன் மூலம் நிருபித்துள்ளீர்கள்.

அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி என்ன வார்த்தையை சொன்னார் என்று சொல்லி, இதை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நான் சொல்லுகிறோன். இதில் நான் பொய்யனாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று நீங்கள் சொல்ல தயாரா?

நீங்க யாரு என்பதை வந்து நிருபியுங்கள் சகோதரா! ஒரு வேளை அஷ்ரப்தீன் தவறாக பேசியிருந்தால் நாங்கள் அவருக்கு சப்பை கட்டு கட்ட மாட்டோம்.

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும் என்று நீங்கள் அடி குரிபிட்டுலீர்கள். ஆனால் நீங்கள் என்னை எப்படி பொய்யன் என்று சொல்வது? ஒரு முஸ்லிமை பார்க்காமலே பொய்யன்னு சொல்றீங்களே, இதுதான் உங்களுடைய கொள்கையா? கண்டிப்பாக மறுமை நாளில் இந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

அஷ்ரப்தீன் பிர்தௌசி:
பி.ஜே.பி மற்ற கட்சிகளை விட அதிகமாக இடஒதுக்கீடு கொடுத்தால் நாங்கள் அவர்களுக்கு வாக்களிப்போம்.. ஆனால் அவர்கள் தர மாட்டார்கள்.

அல்லாஹ் மீது ஆணையாக இந்த வார்த்தையை அதிரை ததஜ பள்ளியில் ஜும்மா மேடையில் அஷ்ராப்தீன் சொல்ல நான் என் காதால் கேட்டேன். கண்டிப்பாக இந்த கேள்வியை அல்லாஹ் என்னிடம் கேட்பான் என்ற உறுதியோடு சொல்கிறேன்.

அஷ்ரப்தீன் ஃபிர்தவ்சி இவ்வாறு ஜூம்ஆவில் குறிப்பிட்டாரா என்பதை சாட்சிகளுடன் நிரூபிக்க தயாரா என்று கேட்டால், என்னை தவிர யாரும் நிரூபிக்க முன்வரமாட்டார்கள் என்று கூறும் உங்களை பொய்யர் என்று சொல்லாமல் எவ்வாறு சொல்லுவது?

இது குறித்து அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களிடம் விசாரித்த போது, பிஜேபி சம்பந்தப்பட்ட இது போன்ற எந்த கருத்தையும் நான் சொல்லவில்லை என்றார். மேலும், இது குறித்து அல்லாஹ்வின் ஆணையிடவும் தயாராக உள்ளார்.

நீங்களும் இதை அல்லாஹ்வை சாட்சியாக வைத்து கூறுவதால், இதை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறோம். யார் குற்றவாளி என்று மறுமையில் அல்லாஹ் தீர்ப்பு வழங்கட்டும்.

நேரில் வந்து நிரூபிக்க முடியும் என்று நீங்கள் சொல்லி காரணத்தினால், எப்போது வந்து உங்களால் நிரூபிக்க முடியும் என்பதை தெரியப்படுத்துங்கள்.

நான் அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சொல்லிவிட்டேன். அவர் சொல்ல தேவை இல்லை. அதையும் நீங்கள் நம்பவில்லை என்றால்? இன்ஷா அல்லாஹ் மறுமையில் இதற்கு உள்ள பதில் கிடைக்கும்..
என்னை பொய்யன் என்று சொல்லி அல்லாஹுடைய அதிகாரத்தை நீங்கள் எடுத்துகொள்ள வேண்டாம். ஒரு முஹ்மீனை பார்க்காமலே அவர் பொய்யர் என்று சொல்கிறிர்கள். இந்த வார்த்தைக்கும் நீங்கள் பதில் சொல்லியாகவேண்டும் மறுமையில். அந்நாளில் நாமளோட வாய்க்கு பூட்டு போடப்படும். நாம் எழுதிய கைகள் பதில் சொல்லும்.
நிரூபித்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு பதில் இல்லை. இனிமேல் உங்களோடு பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெரிகிறது. நான் எழுதிய இந்த வார்த்தைகளை அல்லாஹ் பார்துகொண்டிருபான் என்ற எண்ணத்துடன்..

நான் நிரூபிப்பேன் என்று வீராப்பு பேசிய நீங்கள் இப்போது பின்வாங்குவது நீங்கள் பொய்யர் என்பதற்கு ஆதாரமா? அல்லது உண்மையின் சிகரம் என்பதற்கு ஆதாரமா? என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

நேரில் வந்து நிருபித்தால் பல உண்மைகள் வெளியே வரும்.

வஸ்ஸலாம்.

நிரூபித்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு பதில் இல்லை.

நிரூபிக்க வக்கில்லாத நீங்கள் இதை பற்றி பேச வெட்கப்பட வேண்டும்...

நிரூபித்தால் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று கேட்டால் ஏன் ஏதோ பேசுகிறிர்கள். அவர் மீது இன்ன இன்ன நடவடிக்கை எடுப்போம் என்று சொல்ல வக்கில்லாத நீங்கள், என்னை பற்றி பேசுகிறிர்கள்.
அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக. குழப்பவாதிகள் தர்க்கம் செய்யும் போது சலாம் சொல்லிவிட்டு விலகுக என்று நபி(ஸல்).. அவர்கள் கூறியுள்ளார்கள்.

அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)..

யார் குழப்பவாதிகள் என்று படிப்பவர்கள் நன்கு அறிவார்கள் அஸ்ரப்தீன் சொன்னதற்கு புரூப் காண்பிங்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள் திரும்ப திரும்ப சென்னதையே சொல்லுகிறீர்களோ உண்மையில் நீங்கள் சொன்னதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கா இல்லை நீங்கள் சொன்னது பொய்யா அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதை மக்களிடம் காண்பிங்கள்

நலீம்,

வஸ்ஸலாம்.

உங்களை போன்ற பல சித்து வேலை செய்பவர்களையும் எல்லாம் எதிர்கொண்டு தான் தவ்ஹீத் ஜமாஅத் வீர் நடைபோடுகிறது.

நான் நிரூபிப்பேன் என்று வீராப்பு பேசிய உங்களால் நிரூபிக்க முடியாது என்று எங்களுக்கு நன்றாக தெரியும். இதனால் தான் ஸலாம் சொல்லி ஜகா வாங்கப்பார்க்கிறீர்கள்.

தவறு நிரூபிக்கப்பட்ட பிறகு தான் நடவடிக்கை பற்றி அறிவுள்ளவர்கள் பேசுவார்கள். ஆதரத்தை முன்வைத்து நிரூபிக்க வக்கற்ற நீங்கள் நடவடிக்கை பற்றி பேசுகிறீர்கள்.

ஒருவர் மீது நாம் குற்றம் சுமத்தி ஆதாரம் உள்ளது, நிருபித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால், ஆதாரத்தை முதலில் காட்டுட மடையா என்று தான் யாரும் கேட்பார்கள்.

ஆதாரம் உங்களிடம் இல்லை என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.

உங்களிடம் ஒரு கேள்வி. ஒன்றரை வருடத்திற்கு முன்னர் இந்த சம்பவம் நடந்தாக குறிப்பீடுகிறீர்கள். இந்த சம்பவம் நடந்த தேதியை உங்களால் தர முடியுமா?

பொய்யர்கள் தங்களின் ஓட்டத்தின் மூலமாக தான் தங்களின் பொய்யை நிரூபிப்பார்கள்.

வாலைக்கும் சலாம்(வர்ஹ்)..
உங்களை போன்ற அறிவாளி இல்லை நான். நீங்களே ஒரு பெயரை தயார் செய்து வைத்துகொண்டு, அதிலிருந்து நீங்கள் என்னை கேள்வி கேட்குரிர்கள். இதுதான் சித்து வேலை.. எல்லாவற்றையும் அல்லாஹ் பார்துகொண்டிருகிறான்.

எனக்கு தேதி தெரியாது, அவர் பேசியதை நான் பதிவு செய்யவும் இல்லை. நான் வந்தது ஜும்மாவுக்கு. நான் அவர் பேசியதை கேட்டேன் என்று அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சொல்லிவிட்டேன். அவரை எதற்கு சொல்ல தேவை இல்லை என்று சொன்னேன்? அவரை இப்பொழுது சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். பதில்?

//எனக்கு தேதி தெரியாது, அவர் பேசியதை நான் பதிவு செய்யவும் இல்லை. நான் வந்தது ஜும்மாவுக்கு. நான் அவர் பேசியதை கேட்டேன் என்று அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சொல்லிவிட்டேன்.//

தேதி தெரியாது, ஆதாரமும் இல்லை என்ற பொய்யர், நேரில் வந்து நிரூபிப்பேன் என்று சொல்லாமா? நீங்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சொன்ன பிறகு இத்துடன் விடலாம் என்று சொன்ன பிறகும் அதிமேதாவித்தனமாக உளறி வாங்கி கட்டுவது யார்? தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெறும் அனைத்து ஜூம்ஆ உரைகளும் எங்களின் இணையதளத்திலேயே உள்ளது. அதில் இருந்து கூட நீங்கள் ஆதாரம் எடுத்துக்காட்டலாம். கடந்த இரூ வருடங்களுக்கான வீடியோ எங்களின் இணையதளத்திலேயே உள்ளது.

நேரில் வந்து நிரூபித்தால் உங்களின் உண்மை பெயராவது தெரியும்.

வஸ்ஸலாம்.

ஜூம்ஆ உரைக்கான லிங்க்: bit.ly/1aEoy3e

என்ன காக பொம்பள சண்டை போடுறாப்ல போடுறிங்க.. . அல்லாஹ்மீது அவரை ஆணையிட சொல்லுங்க..

நிரூபிப்பேன் என்று சொன்ன பொய்யனுக்கு, ஆதாரம் கேட்டால் பொம்பளை சண்டையாக தான் தெரியும். கள்ள பெயரில் வந்து சற்று வலுவாக மாட்டிக்கொண்டுவிட்டீர்கள். ஆதாரம் இருக்கிறது, நேரில் வந்து நிருபிப்பேன் என்று சொன்னதில் நீங்கள் பொய்யர் என்று நிரூபித்துள்ளீர்கள். பொய் சத்தியம் செய்து இருந்தால் தவ்பா செய்து கொள்ளுங்கள்.

ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது அபாண்டம் சொல்லிவிட்டு முழிக்கிறீர்கள். ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் ஜூம்ஆ பயானில் கலந்து கொள்ளுகிறார்கள். அதில் ஒருவர் காதில் கூட கேட்காத ஒரு செய்தி உங்கள் காதில் மட்டும் கேட்டுள்ளது.

இது பற்றி அஷ்ரப்தீன் அவர்களிடம் கேட்போது, அவர் இதை மறுக்கிறார். இது குறித்து மறுமையில் நமக்கு யார் பொய்யர் என்று தெரிய வரும்.

ஆதாரம் இல்லாத விஷயத்தை பரப்பி கேவலப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

"இது பற்றி அஷ்ரப்தீன் அவர்களிடம் கேட்போது, அவர் இதை மறுக்கிறார். இது குறித்து மறுமையில் நமக்கு யார் பொய்யர் என்று தெரிய வரும்".

அல்லாஹ்மீது அவரை ஆணையிட சொல்லுங்க என்று கேட்டால், மீண்டும் சொன்னதையே சொல்கிறிர்கள்.. அவர் ஏன் ஆணையிட தயங்குகிறார்? நான் மறுபடியும் ஆணையிட தயார்.. ஏனென்றால் நான் சொன்னது உண்மை.

//அல்லாஹ்மீது அவரை ஆணையிட சொல்லுங்க என்று கேட்டால், மீண்டும் சொன்னதையே சொல்கிறிர்கள்.. அவர் ஏன் ஆணையிட தயங்குகிறார்? நான் மறுபடியும் ஆணையிட தயார்.. ஏனென்றால் நான் சொன்னது உண்மை.//

எது போன்ற செய்திகளை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். நீங்கள் குறிப்பிடும் செய்தியை அவர் மறுத்துவிட்டர், நீங்கள் சொல்லுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் மறுத்ததின் காரணத்தினால் அவர் மறுமையில் குற்றம்பிடிக்கப்படுவார். அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுக்க வேண்டிய தேவை எப்போது உள்ளதே அப்போது தான் அதை செய்ய வேண்டும். ஆயிரம் நபர்கள் தொழும் ஜூம்ஆவில் யாரு காதிலும் கேட்காத ஒரு செய்தி உங்களின் காதில் கேட்டுள்ளது என்கிறீர்கள், அதற்கு ஆதாரம் இருக்க என்றால், இருக்கு என்றீர்கள், நேரில் வந்து நிரூபியுங்கள் என்றால், ஆதாரம் இல்லை என்கிறீர்கள். இந்த சம்பவம் நீங்களும் அஷ்ரப்தீன் மட்டும் இருக்கும் இடத்தில் நடந்தால், அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுக்க வேண்டிய தேவை உள்ளது. உங்களை தவிர ஜூம்ஆவிற்கு வந்த மற்ற ஆயிரம் மக்கள் இவ்வாறு சொல்லவில்லை. நீங்கள் மட்டும் இவ்வாறு சொல்லுகிறீர்கள் என்றால், நீங்கள் எதையே தவறாக விளங்கியுள்ளீர்கள் அல்லது கனவு கண்டுள்ளீர்கள் அல்லது வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களிடம் உண்மையிருந்தால் நேருக்கு நேர் வாருங்கள்.

அரைத்த மவையே மீண்டும் மீண்டும் அறைக்காமல் நேரில் வந்து நீரூபிப்பேன் என்று சொன்னதை உண்மைப்படுத்துங்கள்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.