தவ்ஹீத்வாதிகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் சிலர் இஸ்லாத்தை பிறருக்கு சொல்லுகிறோம் என்ற பெயரில் ஒரு விழா நடத்தினார்கள். இதில் பல கப்ஸாகளையும் கதைகளையும் அவிழ்த்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் படைக்கா விட்டால், இந்த உலகையே படைத்து இருக்க மாட்டான் என்று இவர்கள் மத நல்லிணக்க விழாவில் விட்ட கப்ஸாவை பற்றி ஏற்கனவே நாம் அம்பலப்படுத்தியிருந்தோம்.
கொள்கையில்லாதவர்களை வைத்துக்கொண்டு நாங்கள் ஒன்றாக பிரச்சாரம் செய்கிறோம் என்றால் இப்படி தான் ஆகும் என்பதற்கு பல ஆதாரங்களை இந்த நல்லிணக்க விழாவில் இருந்து எடுத்து காட்டலாம். பள்ளிவாசலுக்கு மாற்று மதத்தினர் வரலாமா என்று ஒருவர் கேட்டதற்கு, ஒருவர் வரலாம் என்கிறார், மற்றொருவர் வராமல் இருப்பது தான் நல்லது என்று சொல்லி, கோவில்களில் மாற்று மதத்தினர் சாதி அடிப்படையில் தடுக்கப்படுவதை சரி காணுகிறார். மேலும், கோவிலுக்கு அழைப்பு தாருங்கள் வருகிறோம் என்று பெருமையுடன் கூறுகிறார்கள்.
உங்கள் தர்காவிற்கு நாங்களெல்லாம் வருகிறோம் எங்கள் கோவிலுக்கு நீங்கள் ஏன் வருவதில்லை என்று ஒரு மாற்று மத சகோதரர் கேள்வி கேட்ட போது இஸ்லாத்தை எடுத்து சொல்ல ஒரு அருமையான வாய்ப்பு அமைந்தது தர்கா என்பது இஸ்லாத்தில் இல்லை அதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தமில்லை பல தெய்வ வழிபாடு தவறு அதற்கு நிரந்தர நரகம் என்று இஸ்லாம் சொல்கிறது என்று அழகாக சொல்லி இருக்கலாம் அதை விடுத்து ஒரே இறைவனை வணங்க நீங்கள் கூப்பிடுங்கள் நாங்கள் வருகிறோம் என்று பொடி வைத்து பேசுவது எத்தனை பேருக்கு புரிந்து இருக்கும் இது போன்ற சமுதாய ஒற்றுமையையா இஸ்லாம் வலியுறுத்துகிறது ?
மேலும் கீழ்காணும் கப்ஸாவையும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் அள்ளிவிட்டார்கள்.
நபிகள் நாயகத்துடன் விவாதிப்பதற்காக மஸ்ஜிதுந் நபவி எனப்படும் மதீனாவின் புனிதப் பள்ளிவாசலுக்கு கிறிஸ்தவப் பாதிரியார்கள் வந்திருந்தனர். அவர்களின் வழிபாட்டு நேரம் வந்ததும் புறப்பட்டனர். உடனே நபிகள் நாயகம், 'நீங்கள் விரும்பினால் இதே பள்ளிவாசலில் நீங்கள் வழிபாடு செய்யலாம்' என அனுமதி அளித்தார்கள்.
இது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடைபெறாத கட்டுக்கதையாகும். இது பற்றி இங்கு விளக்கம் வெளியிடுவதுடன் மேலும் சில தகவல்களையும் பதிய விரும்புகிறோம். மாற்று மதத்தினரை பள்ளியில் அவர்களின் வழிபாடுகளை செய்ய அனுமதிக்கலாம் என்றால், இந்த கொள்கைவாதிகள் (?) கட்டியுள்ள பள்ளியில் மாற்று மதத்தினர் வழிபாடு செய்ய அனுமதிப்பார்களா?
அதிரையில் ஆரம்ப காலத்தில் தவ்ஹீத் பணிக்கு முன்னோடியாக இருந்த ஒரு சகோதரர் மேடையில் இருக்கும் போது இப்படி ஒரு சம்பவம் சொல்லப்பட்டு அதற்கு அவர் மறு கருத்து சொல்லாமல் அமர்ந்து இருந்தது அதிர்ச்சியாக இருந்தது.
தங்களை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லி கொண்டு, உப்பு சப்பில்லாத விஷயத்தை எல்லாம் மலை அளவுக்கு உயர்த்தி எழுதும் உளறும் நிருபர்களும் இந்த கப்ஸாகளை பற்றி வாய் திறக்கவில்லை. கவிஞருக்கு இறையருள் வருகிறது என்று எழுதும் வழிகேட்டு நிரூபர்கள் இவற்றை பற்றி வாய் திறப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
பள்ளிவாசலில் சிலை வணக்கத்திற்கு நபியவர்கள் அனுமதி கொடுத்தார்களா?
நபிகள் நாயகத்துடன் விவாதிப்பதற்காக மஸ்ஜிதுந்நபவி எனப்படும் மதீனாவின் புனிதப் பள்ளிவாசலுக்கு கிறிஸ்தவப் பாதிரியார்கள் வந்திருந்தனர். அவர்களின் வழிபாட்டு நேரம் வந்ததும் புறப்பட்டனர். உடனே நபிகள் நாயகம், "நீங்கள் விரும்பினால் இதே பள்ளிவாசலில் நீங்கள் வழிபாடு செய்யலாம்' என அனுமதி அளித்தார்கள்.
மேற்கண்ட சம்பவம் நபியவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான சம்பவமாகும்.
இதுபோன்ற ஒரு சம்பவம் ஆதாரமற்ற சில நூற்களில் கூறப்பட்டுள்ளது. அனைத்து நூற்களிலுமே இப்னு இஸ்ஹாக் என்பார் வழியாகத்தான் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்னு இஸ்ஹாக் என்பவருக்கு இந்தச் சம்பவத்தை அறிவிப்பவர் “முஹம்மத் பின் ஜஃபர் பின் சுபைர்” என்பவர் ஆவார். இவர் ஹிஜ்ரி 110லிருந்து 120க்கு இடைப்பட்ட காலத்தில் மரணமடைந்து விட்டார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்தவர் கிடையாது. இவர் அடுத்த தலைமுறையின் கடைசிப் படித்தரத்தில் உள்ளவராவார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சம்பவம் நடந்திருந்தால், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள்தான் அதனை அறிவிக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தையே அடையாத ஒரு மனிதர் இது போன்ற சம்பவம் நடந்ததாகக் குறிப்பிடுகிறார். எனவே இது ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த ஒரு செய்தியாகும். இது போன்ற செய்திகளை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் நஜ்ரான் பகுதி கிறித்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் வாதப் பிரதிவாதங்கள் புகாரி, முஸ்லிம் மற்றும் ஏனைய பல நூற்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆனால் ஆதாரப் பூர்வமான எந்த அறிவிப்புகளிலும் நபியவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் கிறித்தவர்கள் தங்களுடைய வணக்கத்தை நிறைவேற்றுவதற்கு அனுமதி கொடுத்தார்கள் என்று கூறப்படவில்லை.
இப்படி ஒரு சம்பவம் நபியவர்கள் காலத்தில் நடந்திருந்தால் பிரபல்யமான இந்தச் சம்பவத்தை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்திருப்பார்கள். அவை ஆதாரப்பூர்வமான நூற்களில் இடம்பெற்றிருக்கும். ஆனால் எந்த ஒரு நபித்தோழருமே இதுபோன்ற ஒரு சம்பவத்தை அறிவித்ததாக எந்த ஒரு சான்றும் இல்லை.
இந்தச் சம்பவம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இட்டுக் கட்டப்பட்டதாக இருப்பதுடன் இது திருமறைக் குர்ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதக் கூடியதாக அமைந்துள்ளது.
பள்ளிவாசல்கள் என்பது அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிபடுவதற்காக கட்டப்பட்ட ஆலயங்களாகும். அங்கு ஒரு போதும் அல்லாஹ் அல்லாதவர்கள் வணங்கப்படக்கூடாது என்பதுதான் அல்லாஹ்வின் கட்டளையாகும்.
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
அல்குர்ஆன் 72:18
ஆனால் இந்த இறைக்கட்டளைக்கு மாற்றமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய பள்ளியில் கிறித்தவர்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கு அனுமதித்திருப்பார்களா?
மேலும் பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உடைக்கின்ற கேவலமான காரியத்தையும் செய்துள்ளார்.
முஸ்லிம் அல்லாத மக்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்முறையில் நடந்து கொண்டார்கள் என்பதற்கு எத்தனையோ உண்மைச் சான்றுகள் இருக்கும்போது திருமறைக் குர்ஆனுக்கும், இஸ்லாத்தின் அடிப்படைக்கும் எதிரான இது போன்ற இட்டுக்கட்டப்பட்ட சம்பவங்களை எடுத்துக் கூற வேண்டியதன் அவசியம் என்ன?
(பார்க்க: பிற மதத்தவர்களுடன் அன்பு).
இதை உண்மை என்று நம்பினால் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் இது போல் சிலை வணக்கத்தை அனுமதிக்குமாறு கடிதம் எழுதுவார்களா? அதிரையில் தவ்ஹீத் புரட்சியாளர்களால் (?) கட்டப்பட்டுள்ள பள்ளியில் இதை அனுமதிப்பார்களா?
உமர் (ரலி) அவர்கள் தேவாலயத்தில் தொழுதார்களா?
உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் உமர் (ரலி) அவர்கள் தேவாலயத்தில் தொழுதாகவும் ஒரு கட்டுக்கதை உள்ளது.
கலீபா உமர் காலத்தில் பாலஸ்தீனம் வெற்றிக்கொள்ளப்படுகிறது. வேதக்குறிப்புகளின்படி ஜெருசலேமின் சாவியை கலிபா உமரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி, அவரை மதீனாவிலிருந்து ஜெருசலேமுக்கு வரவழைத்தப் பாதிரியார்கள் தொழுகை நேரத்தில் உயிர்த்தெழல் தேவாலயத்தில் உமரைத் தொழுமாறு கூறினர். "நான் இங்கு தொழுதால் எனக்குப் பின் வரும் தலைமுறையினர் எங்கள் தலைவர் தொழுத இடம் என உரிமை கோரலாம்' என்று கூறி அங்கே தொழுவதைத் தவிர்த்தார்கள்.
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக எந்த வரலாற்று நூற்களிலும் கூறப்படவில்லை. இது உமர் (ரலி) அவர்களின் மீது இட்டுக்கட்டிக் கூறப்பட்ட ஒரு கட்டுக் கதையாகும்.
உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் அல்லாத மக்களிடம் எவ்வளவு நீதமாக, நேர்மையுடன் நடந்து கொண்டார்கள் என்பதற்கு ஏராளமான உண்மைச் சான்றுகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக்கிய கிறித்தவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் ஏற்படும் என்று சபித்துள்ளார்கள்.
மேலும் சமாதிகளை நோக்கியும், உருவப்படங்களை நோக்கியும் தொழுவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.
இறைவனுக்கு இணைகற்பிக்கும் காரியங்கள் நடைபெறும் இடங்களில் இறைவனுக்குரிய வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கும் நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிசீனியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறித்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிசீனியா சென்றிருந்த உம்முசலமா (ரலி), உம்மு ஹபீபா (ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது அடக்கத்தலத்தின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரது உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!” என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (1341)
நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, "யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டனர்'' என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1330, 1390, 4441
கிறித்தவ ஆலயங்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்குரிய இடம் அல்ல என்பதை நபியவர்கள் தெளிவாகக் கூறியிருக்கும்போது நபியவர்களின் நடைமுறைக்கு மாற்றமாக உமர் (ரலி) தேவாலயங்களில் தொழலாம் என்றும் வேறு காரணத்திற்காக நான் தொழவில்லை என்றும் கூறியிருப்பார்களா? நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேற்கண்ட சம்பவம் உமர் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட சம்பவம்தான் என்பதை பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
உமர் (ரலி) அவர்கள் ஸாம் நாட்டிற்கு வருகை தந்தபோது ஒரு கிறித்தவர் அவர்களுக்கு உணவைத் தயார் செய்தார். அவர் உமர் (ரலி) அவர்களிடம் “நீங்களும் உங்களுடைய தோழர்களும் என்னிடத்திற்கு வருகைதந்து என்னை சங்கை செய்வதை நான் விரும்புகிறேன்“ என்று கூறினார். அவர் ஸாம் நாட்டிலுள்ள அந்தஸ்து மிகுந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். உமர் (ரலி) அவர்கள் அவருக்கு கூறினார்கள் : நாங்கள் உங்களுடைய தேவாலயங்களில் உருவங்கள் இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் அங்கே நுழைய மாட்டோம்” என்று கூறினார்கள்.
நூல் : பைஹகி (பாகம் 2 பக்கம் 270)
தான் எடுத்துக் காட்டும் ஆதாரங்கள் உண்மை என்று நம்பினால் அதை அவர் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும். அதாவது கோவில்களிலும் தேவாலயங்களிலும் முஸ்லிம்கள் தொழலாம் என்று பத்வா கொடுப்பாரா? அது போல் நம்முடைய பள்ளிவாசல்களுக்குள் பிறமதத்தவர்கள் சாமி கும்பிடலாம் என்று பத்வா கொடுப்பார்களா? முஸ்லிம்களுக்கு இப்படி அறிவுறை கூறுவார்களா? நிச்சயமாக இப்படி இவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் கருத்துச் சொல்ல முடியாது. தாங்கள் நம்பாத ஒன்றை ஏன் இவர்கள் சொல்ல வேண்டும்?
முஸ்லிம்கள் மத்தியில் ஒரு கருத்தும் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் அதற்கு மாற்றமான ஒரு கருத்தும் சொலவது பச்சை முனாபிக்தனம் அல்லவா?
கிறித்தவ ஆலயங்களில் தொழலாமா?
உருவச் சிலைகள் இருக்கின்ற காரணத்தால் உங்கள் ஆலயங்களில் நாங்கள் நுழைய மாட்டோம் என்று உமர் (ரலி) அவர்கள் (ஷாம் நாட்டுக் கிறிஸ்தவப் பிரமுகர் ஒருவரிடம்) கூறினார்கள்.
கிறித்தவ ஆலயங்களில் நுழைவதைக் கூட தவிர்த்துக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுவது கூடும் என்பதை ஆதரிப்பதைப் போன்று நடந்திருப்பார்களா?
இதுபோன்ற கட்டுக்கதைகளைப் புனைந்து இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க முயல்கின்றார்கள்.
நன்றி: ஆன்லைன் பீஜே (சில மாற்றங்களுடன்)
8 கருத்துரைகள் :
அல்ஹம்துலில்லாஹ்.. அருமையான விளக்கம்..
இதற்காக எத்தனை பேரின் பொருளாதாரம் நஷ்டமானதோ.. சிந்தீப்பவர்களுக்கு இதுவே போதுமானதாகும்.. அல்லாஹு அக்பர், TNTJ அல்லாத கொள்கைகளின் நிலைபாடு மக்களுக்கு இது ஒரு சான்று..
அஸ்ஸலாமு அலைக்கும் ஒரு தளத்தில் சற்று முன் கீழ்கண்ட கருத்தை பார்த்தேன் இது பற்றிய உங்களின் கருத்து என்ன ?
//adiraimansoor
November 16, 2013 at 7:15 AM
கோளாறு இணைய தளத்தில் மட்டுமல்ல அதிரை tntj மக்களிடமும் உண்டு
ஏன் இதை கூறுகின்றேன் என்றால் சமீபத்தில் நடைபெற்ற. அதிரை மற்றும் சுற்றுவட்டாரத்தில். மிகப் பெரிய பாராட்டுக்கள் பெற்ற ஈத் மிலன் என்ற நிகழ்ச்சியை. அதுவும். தாவா செய்வதை குறிக்கோளாக கொண்டு நடத்தப்பட்ட ஈத் மிலனை அதிரை tntj தனது இதய தளத்தில் குறை கூறி இருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்
இப்படியே அடுத்தவர்களை பற்றி அவதூறு எழுப்பினால். என்ன கிடக்கப் போகின்றன தெரியவில்லை//
வ அலைக்கும் சலாம் சகோதரா எங்களுக்கு அறிய தந்தமைக்கு ஜசாக்கல்லாஹ் ஹைரன் இதற்கான பதிலை கீழே தருகிறோம்
மன்சூர் பாய்,
முதலில் அவதூறு என்றால் என்னவென்று புரிந்துக்கொள்ளுங்கள். அவதூறு என்பது நடக்காத விஷயத்தை கூறுவது. அதிரை ததஜ தளத்தில் இது பற்றி வந்துள்ள இரு விஷயங்களும் அவர்களால் வெளியிடப்பட்ட வீடியோ பதிவிலேயே உள்ளது. என்ன நடந்தது என்று பார்க்காமல் பொத்தாம் பொதுவாக அவதூறு என்பது சரியா?
தஃவா செய்கிறோம் என்ற பெயரில் இஸ்லாத்தில் இல்லாத கட்டுக்கதைகளை அள்ளிவிடுவது தஃவாவா?
முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ் படைக்கவிட்டால் இந்த உலகையே படைத்து இருக்க மாட்டான் என்பது கட்டுக்கதை என்பது இன்னுமா உங்களுக்கு தெரியாது?
மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கம் என்ற பெயரில் சொல்லியவர்களை மார்கத்தின் பெயரால் அவதூறு பரப்பாதீர்கள் என்று சொல்ல வேண்டிய நீங்கள் ஏன் அப்படி சொன்னீர்கள் மார்கத்தில் அப்படி சொல்ல பட்டு இருக்கிறதா என்று கேள்வி கேட்ட எங்களை பார்த்து அவதூறு பரப்பாதீர்கள் என்று சொல்லுகிறீர்கள் உங்கள் பார்வையில் அவதூறு என்பது என்ன
தர்ஹாவை பற்றி வந்த கேள்விக்கு கூட மழுப்பலாக பதில் சொல்லுவது தான் தவ்ஹீதா ?
அதிரை ததஜ இதுபற்றி வெளியிட்ட செய்திகளில் உண்மை இருப்பதால் தான், நிகழ்ச்சி நடத்தியவர்களே இதுபற்றி வாய்திறக்காமல் உள்ளார்கள்.
இஸ்லாத்தில் இல்லாத கட்டுக்கதைகளை சொல்லியும், மாற்று மதத்தை சார்ந்தவர்களை எல்லா மதமும் ஒன்று தான் என்று பேசவிட்டும் நிகழ்ச்சி நடத்தி, அதை தஃவா என்று சொன்னால் அது அறியாமை. இது போன்ற நிகழ்ச்சிகள் மாற்று மதத்தவர்களுக்கு தெளிவை ஏற்படுத்துவதை விட குழப்பத்தை தான் ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
இது பற்றிய எங்களின் இன்னொரு ஆக்கம்
http://adirai-tntj.blogspot.com/2013/10/blog-post_22.html
அதிரை tntj நிறுவன கட்டிடதிற்கு 12 இலச்கம் கொடுத்தவரை கிறுக்கன் என்று கூறியவர்கள் தான் அடுத்தவர்களை பார்த்து போலி தவ்ஹீத்வாதிகள் என்று கூற உனக்கு என்ன தகுதி இருக்கிறது ? பணத்திர்கஹா மார்கத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் நீங்கள் தங்களை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லி கொண்டு வயிறு வழக்கதிர்கள் !
//அதிரை tntj நிறுவன கட்டிடதிற்கு 12 இலச்கம் கொடுத்தவரை கிறுக்கன் என்று கூறியவர்கள் தான் அடுத்தவர்களை பார்த்து போலி தவ்ஹீத்வாதிகள் என்று கூற உனக்கு என்ன தகுதி இருக்கிறது ?//
யார் 12 லட்சம் கொடுத்த என்று பெயரை குறிப்பிட்டு சொல்ல முடியுமா? பொய் விரும்பி என்ற தான் உங்களின் கள்ள பெயரை வைத்து இருக்க வேண்டும். இஸ்லாத்தில் இல்லாத கட்டுக்கதை தஃவா செய்கிறோம் என்ற பெயரில் அள்ளிவிடுவதை பற்றி விமர்சனம் வந்தால் அது தவறு இல்லை சரி என்று எழுத வேண்டும். அதைவிட்டு, இப்படி பொய்களை அள்ளிவிட்டு, உங்களிடம் பதில் இல்லை என்று நிரூபிக்க கூடாது.
//பணத்திர்கஹா மார்கத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் நீங்கள் தங்களை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லி கொண்டு வயிறு வழக்கதிர்கள் !//
இதுவெல்லாம் வயிறெரிச்சல். பணத்திக்காக யார் மக்களை பிளவுபடுத்துகிறார்கள் என்று நேருக்கு நேர் மேடை போட்டு நிரூபிக்க திராணி இருக்கா?
வெளிநாடு வாழ் சகோதரர் ஒருவர் தரவில்லை கூற முடியுமா ? அந்த பணம் ஹவாலா வந்தத இல்லையா ? தாவா என்ற பெயரில் இயக்கம் வளர்த்தது யார் ? அடுத்தர்வர்களை பற்றி விமர்சனம் செய்ய Adirai TNTJ விற்கு என்ன தகுதி இருக்கிறது
அதிரை மற்றும் சுற்றுவட்டாரத்தில். மிகப் பெரிய பாராட்டுக்கள் பெற்ற ஈத் மிலன் என்ற நிகழ்ச்சியை. பார்த்து Adirai TNTJவிற்கு தான் மிக பெரிய வயிறெரிச்சல். ! TNTJ கட்டிடம் கட்ட பட்டு இருக்கும் இடம் யாரிடமிருந்து அபகரிகபட்ட இடம் ?
//வெளிநாடு வாழ் சகோதரர் ஒருவர் தரவில்லை கூற முடியுமா ? அந்த பணம் ஹவாலா வந்தத இல்லையா ? //
நீங்கள் ஒருவர் மீது குற்றச்சாட்டு வைத்தால், யார் 12 லட்சம் கொடுத்த என்று பெயர் கூறி நிரூபிக்க வேண்டும். வெளிநாடு வாழ் சகோதரர் கொடுத்தாரா? என்று எங்களிடம் கேள்வி கேட்டு உங்களை பொய்யர் என்று நிரூபித்ததற்கு நன்றி.
//தாவா என்ற பெயரில் இயக்கம் வளர்த்தது யார் ? அடுத்தர்வர்களை பற்றி விமர்சனம் செய்ய Adirai TNTJ விற்கு என்ன தகுதி இருக்கிறது
அதிரை மற்றும் சுற்றுவட்டாரத்தில். மிகப் பெரிய பாராட்டுக்கள் பெற்ற ஈத் மிலன் என்ற நிகழ்ச்சியை. பார்த்து Adirai TNTJவிற்கு தான் மிக பெரிய வயிறெரிச்சல். //
ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்யா? நீங்கள் பொய்யன் என்பதற்கு உங்களின் கள்ளப்பெயரே போதும்.
மார்க்கத்தில் இல்லாத செய்தியை நீங்கள் இட்டுக்கட்டி சொல்லுவதை விமர்சனம் செய்தால் அதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஆயிரம் பொய் சொல்லுகிறீர்கள். நான் நசமாக தான் போவேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. மார்க்க விஷயத்தில் நீங்கள் தவறு செய்துள்ளீர்கள் என்று சூட்டிக்காட்டப்பட்டால், ஒன்று நீங்கள் தவறு செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும் அல்லது நாங்கள் தவறு செய்துவிட்டோம் இனி தவறு செய்யாமல் பார்த்து கொள்ளுகிறோம் என்றால் உங்கள் மிது நல்ல எண்ணம் ஏற்படும். அதைவிடுத்து, நீ ஆக்கிரமிக்கவில்லையா என்று அல்லாஹ்வின் மீது சற்றும் பயம் இல்லாமல் கூறுவது நியாயமா? நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியை நீங்கள் கூறுவதை நாங்கள் எடுத்துக்காட்டும் போது, முரண்டுபிடிக்கும் உங்களுக்கு ஒரு நபிமொழியை நினைவுட்ட விரும்புகிறோம்.
'என் மீது, எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
நூல் : புகார்
//TNTJ கட்டிடம் கட்ட பட்டு இருக்கும் இடம் யாரிடமிருந்து அபகரிகபட்ட இடம் ?//
உண்மைக்கும் உங்களுக்கும் ஒரு துளியாவது தொடர்பு இருந்தால் உங்களின் உண்மை முகத்துடன் பொதுமக்கள் முன்னிலையில் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிக்கான நிலத்தை யாரிடம் ஆக்கிரமித்தது என்று நிரூபிக்க வாருங்கள். மறுமையில் நாம் செய்யும் செயல்கள் பற்றியெல்லாம் பதில் சொல்ல வேண்டுமே என்ற பயம் சற்றும் இல்லாமல் பொய்யை அள்ளிவிசுகிறீர்கள். தவ்ஹீத் ஜமாஅத் தனது நேர்மை பொதுமக்கள் முன்னிலையில் நிரூபிக்க தயாராக உள்ளது. திராணியிருந்தால் வாருங்கள்.
பொய்யான பெயர்களில் வருபவர்களுக்கு பதிலளித்து உங்களின் நேரத்தை விரயம் செய்யவேண்டாம் பொய்யான பெயர்களில் வருபவர்களின் கருத்துக்களையும் இனி வெளியிடவேண்டாம் என்ற கோரிக்கை வைக்கிறோம்
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.