அதிரையில் நடைபெற்ற நபிவழித் திருமணம்
மார்க்கத்தை மக்களுக்கு எடுத்து இயம்ப வேண்டிய ஆலிம்சாக்கள், வரதட்சணை திருமணங்களில் காசுக்காக சுன்னத்தான தாடியை சிறைக்கும் போது கூட ஃபாத்திஹா ஓதிய கொடுமை எல்லாம் தவ்ஹீத் எழுச்சியின் விளைவாக ஒரளவுக்கு மறைந்துள்ளது.
அங்கென்றும் இங்கொன்றுமாக நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த முறைப்படி சில திருமணங்கள் அதிரை நடைபெறுகின்றன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக பல நபிவழித் திருமணங்கள் அதிரையில் நடைபெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 16.03.2013 அன்று மேலத்தெருவில் சகோதரர் S. ஃபைசல் ரஹ்மான் அவர்களுடைய திருமணம் நபிவழி அடிப்படையில் நடைபெற்றது. மணமகன் ரூபாய் 10,000 மஹராக வழங்கினார்.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் மௌலவி யாசர் அரஃபாத் இம்தாதி அவர்கள் 'நபிவழித் திருமணம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.
நபிவழியில் திருமணம் செய்ய விரும்புவோர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.
நபிவழி திருமணம் எது என்பதை அறிய கீழ்காணும் ஆக்கங்களை பார்வையிடவும்:
இஸ்லாமிய திருமணம் (நூல்)
பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!
பரக்கத் நிறைந்த திருமணம் (எளிமையான திருமணம்) - வீடியோ
9 கருத்துரைகள் :
அதிரையில் எழுதப்படாத சட்டமாக இருக்கும் பெண்ணுக்கு வீட்டை சீதனம் கொடுத்து நடக்கும் திருமனகள் நபிவழி திருமணத்திற்கு எதிரானவை என்பதை ஏன் சொல்லப்படவில்லை
சகோ. அன்சாரி,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
தவ்ஹீத் ஜமாஅத் வரதட்சனை என்பது எந்த வகையில் வந்தாலும் தவறு என்று பிரச்சாரம் செய்கிறது. வரதட்சணையாக வாங்கப்படும் பணம், நகை, விருந்து, வீடு, வாகனம் இப்படி எதுவாக இருந்தாலும் என்பது வரதட்சணை தான். இதை பல தெருமுனை பிரச்சாரங்களிலும் தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையியால் நடத்தப்படும் ஜூம்ஆ உரையிலும் தெளிவாக சூட்டிக்காட்டப்படுகின்றன.
தவ்ஹீத் ஜமாஅத்தால் நடத்தி வைக்கப்படும் திருமணங்கள் எந்த வகையான வரதட்சணையும் வாங்கப்படவில்லை என்பதை விசாரித்த பிறகே நடத்தி வைக்கப்படுகிறது.
உங்களின் பார்வைக்காக தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் அழைப்பாளரும் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளருமான மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் அதிரை இணையதளம் ஒன்றிக்கு வரதட்சனை சம்பந்தமாக கொடுத்த விளக்கம்:
முந்தைய பதிவில் லிங்க விடுப்பட்டுவிட்டது
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=o39Ad5Dt3ow#!
பெண் விட்டாரிடம் இருந்து வாங்கும் விருந்து கூட வரதட்சணை என்று நாம் பிரச்சாரம் செய்கிறோம்....
http://www.adiraitntj.com/2012/01/blog-post_11.html
அஸ்ஸலாமு அலைக்கும்
தாங்கள் அனுப்பிய லிங்கை பார்த்தேன் மௌலவி அவர்கள் வரதட்சணை பற்றி சிறந்த விளக்கம் தந்தார்கள் இருந்தாலும் நமதூரில் மாப்பிள்ளை வீட்டார் நாங்கள்
வீட்டை கேட்கவில்லை மாறாக மாப்பிளையை தானே பெண்வீட்டுக்கு வாழ அனுப்பி வைக்கிறோம் இது எப்படி வரதட்சணை ஆகும் என்கிறார்கள் பெண்ணுக்கு சேரவேண்டிய சொதில்தனே மாப்பிள்ளை வாழ்கிறார் என்கிறார்கள். சொத்துபன்கீட்டில் பெண்ணுக்கு இறை சட்டத்திற்கு மாற்றமாக பெரும்பகுதி சென்றுவிடுகிறதே என்று கேள்வி எழுப்பினால் அவர்கள் தரும் பதில் .....
Ebrahim Ansari சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.
கருத்துப் பதிந்த அத்தனை அன்பர்களுக்கும், தொடரை வாழ்த்திய நெஞ்சங்களுக்கும் மிகுந்த நன்றி.
தம்பி நெய்னா அவர்களுக்கு, வட்டி பற்றிய விபரங்கள் எழுதப்படும்போது தாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு இயன்ற அளவு பதில் தருகிறேன். This is a wide subject and requires to mention world wide experiences and examples . Please bear with me. இன்ஷா அல்லாஹ்.
சகோதரர் Y.M . Ansari அவர்கள் கேட்பது
//அதிரை இஸ்லாமிய சமுதாயத்தின் பொருளாதரத்தில் முக்கிய பங்காற்றும் பெண் குமாருக்கு வீடு கட்டியாக வேண்டிய நிர்பந்தம் பற்றி தாங்கள் குர்'ஆன் ஹதீஸ் அடிப்படயில் ஆய்வை தந்தால் நன்மையாக இருக்கும்//
நாம் எழுதப் போவது பொதுவான பொருளாதாரம் பற்றிய சிந்தனைகள். இதில் பெண்களுக்கு சொத்துரிமை பற்றிய செய்திகள் வரவிருக்கின்றன. பெண்களுக்குத் தான் வீடுகளைக் கொடுக்கவேண்டும் என்கிற - உங்கள் வார்த்தையிலேயே - நிர்ப்பந்தம் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். - அதிரை போன்ற ஊர்களில் சமுதாயப் பழக்கமாகப் போனதாக தென்படுகிறது.
இது மார்க்கத்தின் சட்டமா என்பதை இந்தத் தளத்தில் பல மார்க்க சட்டங்களை ஆராய்ந்து தரும் சகோதரர் அலாவுதீன் போன்றவர்கள் ஆய்ந்து கூறவேண்டுகிறேன்.எண்ணை பொருத்தவரை நான் படித்து அறிந்தவரை சட்டமல்.
சட்டத்துக்கும், பழக்கங்களுக்கும் வித்தியாசம் உண்டு. நாம் சட்டத்தைத்தான் பின்பற்ற வேண்டும். நமது துரதிஷ்டம் பழக்கங்களைப் பின் பற்றுகிறோம்.
நமக்கு அடுத்து இருக்கிற முத்துப் பேட்டை, மல்லிபட்டினம், மதுக்கூர்,கூத்தா நல்லூர், பொதக்குடி மற்றும் மாவட்டத்தில், மாநிலத்தின் எல்லா ஊர்களிலும் பெண்களுக்கு வீடு கொடுப்பது என்பது நடை முறையில் இல்லை. அதிரை, காயல் பட்டினம், கீழக்கரை, நாகூர், காரைக்கால், பரங்கிப் பேட்டை, பாண்டிச்சேரியில் சில பகுதிகள் ஆகிய ஊர்களைத்தவைர வேறு எங்கும் இந்தப் பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
நமது ஊரிலேயே நெசவுகாரத்தெருவுக்கு இந்த வசவு இல்லை. அங்கு ஆண்களுக்கே வீடு.
நமது ஊரிலும் பெண்களுக்கே வீடு கொடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்துக்கு பல முறை எதிர்ப்புக்குரல்கள் எழுந்த வண்ணமே உள்ளன. ஆனாலும் பெண்கள் தாயின் நிழலில்- பாதுகாப்பில் வளர்ந்தவர்கள் அவர்களைத் தாயை விட்டு ப் பிரித்து அனுப்புவது பல பிரச்சனைகளை உருவாக்கலாம் என்பதால் காலம் காலமாக இந்தப் பழக்கம் தொடர்ந்து வருகிறது.இந்த முறை பெண்களுக்கு அனுகூலமானது- பெண்களுக்கு பாதுகாப்பானது - தாய்மார்களின் ஆதரவைப் பெற்றது என்பதாலேயே வேரூன்றி வளர்ந்து இருக்கிறது. நாமும் நமது பெண்பிள்ளைகள்தானே என்பதால் அவர்களைப் போற்றிப் பாதுகாக்கவும், பேணவும் முக்கியத்துவம் கொடுத்து இதை விவகாரமாக்காமல் இருந்து வருகிறோம்.
பெண்களுக்கு சொத்துரிமை என்பதுதான் இஸ்லாமியப் பொருளாதாரத்தில் நாம் குறிப்பிட முடியும். அது வீடாகவும் இருக்கலாம், மற்ற சொத்துக்களாகவும் இருக்கலாம். வீடுதான் என்பது நமது சகிப்புத்தன்மைக்கும், சகோதரிகள் மீது காட்டப்படும் வாஞ்சை மற்றும் அன்பையும் சம்பந்தப்படுத்தியது மட்டுமே என்றே நான் நம்புகிறேன். இது பற்றி மேலதிக விபரங்களைத்தர மார்க்க அறிஞர்களே பொருத்தமானவர்கள்.
ஜசக்கல்லாஹ்.
Reply ஞாயிறு, டிசம்பர் 16, 2012 7:02:00 A
சகோ. y.m. ansari,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
பெண்ணுக்கு வீடு கொடுப்பது சம்பந்தமான கலந்துரையாடலை இங்கே பதிந்தற்கு நன்றி. மேலே சொல்லப்பட்ட காரணங்கள் மார்க்க வழிகாட்டுதல்களுக்கு எதிரானவை என்ற போதிலும், சொல்லப்படும் காரணங்கள் சரியா என்று முதலில் பார்ப்போம்.
பெண்ணுக்கு எதற்காக வீடு கொடுக்கப்படுகிறது என்பதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள காரணங்கள் சரியாகப்படவில்லை.
முதலாவது, பெற்றோர்களின் பாதுகாப்பில் வளர்ந்த பெண், தங்களை விட்டு பிரியக்கூடாது என்ற அடிப்படையில் வீடு கொடுக்கப்படுகிறது என்ற காரணம் சரியானது கிடையாது. தற்போதைய காலக்கட்டத்தில் திருமணம் முடிந்த பிறகு பெண் தன் கணவணுடன் அவன் வாழும் ஊருக்கே அல்லது தேசத்திற்கே சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெண் விட்டார் வீடு கொடுத்தாலும் பெண் தனது பெற்றோருடன் இருக்கும் வாய்ப்பு மிக குறைவு. தனது மகள் தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்பினால் அதற்கு வீடு தான் கொடுக்க வேண்டும் என்பது கிடையாது. தங்கள் வசிக்கும் வீட்டில் மணமகளை இருக்க அனுமதிக்க வேண்டும் என்று சொன்னாலே போதும். இது தான் காரணம் என்றால் ஒரு விட்டை பல பெண் பிள்ளைகளுக்கு பங்கு போட்டு கொடுக்கலாம். இது சரியான காரணம் இல்லை என்பதற்கு அதிக விளக்கம் தேவையில்லை. பெற்றோரிடம் வீடு வாங்கிய பல பெண்கள் அந்த வீட்டில் கூட வசிக்காமல் கணவன் வீட்டில் தான் வசிக்கிறார்கள் அல்லது கணவன் விட்டில் அதிகமாக வசிக்கிறார்கள் என்பது வேறு செய்தி.
இரண்டாவதாக சொல்லப்படும் காரணமான சொத்துரிமை என்பது இருக்கிறது. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டு. ஆனால், பெண்ணுக்கு என்று திருமண நேரத்தில் கொடுக்கப்படும் வீடு சொத்துரிமை என்ற அடிப்படையில் கொடுக்கப்படவில்லை.சொத்துரிமை என்பது பெற்றோர்களுக்கு இருக்கும் சொல்வங்களை மார்க்க காட்டிய வழிமுறையில் பிரித்து அனைத்து பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டும். இதை தந்தை தான் விரும்பும் நேரத்தில் செய்யலாம். மரணத்திற்கு முன்னர் செய்தால் போதுமானது. ஆனால், பெண்ணின் திருமண நேரத்தில் கொடுக்கப்படும் அல்லது கொடுப்பதாக மறைமுகமாகவே அல்லது நேரடியாகவே சொல்லப்படும் எந்த பொருளும் வரதட்சணை என்ற கொடிய பாவத்திலேயே வரும. சொத்துரிமை என்ற அடிப்படையில் வீடு கொடுக்கப்படுகிறது என்றால், ஆண் பிள்ளைகளுக்கு ஏன் வீடு கிடைப்பது இல்லை? இது பச்சை வரதட்சணை.
தனது சகோரிகளை திருமண செய்து கொடுக்க, தங்களின் வாழ்க்கையை (திருமணத்திற்கு முன்பும் பின்பும்) இழந்து வெளிநாடுகளில் அவதிப்படும் சகோதரர்களிடம் கேட்டுப்பாருங்கள், விரும்பிய கொடுக்கிறீர்கள் என்று? அவர்களின் கண்ணீர் உங்களுக்கு விடை தரும்.
வரதட்சணை பேயை அடித்து விரட்ட வேண்டுமானால் ஊரில் வீற்று இருக்கும் போலி இஸ்லாமிய சங்ககளை புறக்கணித்து நபிவழி திருமணங்களை மக்கள் நடத்த முன்வர வேண்டும். ஊரில் இருக்கும் சங்கங்கள் நபிவழி திருமணத்தை மட்டும் நடத்தும் என்று நம்பி இருந்தால் கியாமத் வரை இதே நிலை தான் தொடரும் என்பதில் சந்தோகம் இல்லை (தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லக்கூடியவர்கள் நிர்வாகிகளாக இருந்தாலும் சரியே!).
இது குறித்து ஒரு சிறிய விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது - http://www.adiraitntj.com/2013/03/blog-post_26.html
இந்த ஆக்கத்திலேயே அல்லது மேலே உள்ள ஆக்கத்திலேயே இதை பற்றி விவாதிக்க விரும்புபவர்கள் விவாதிக்கலாம்.
இறுதியாக நாம் இது குறித்து மார்க்க வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒரு ஆக்கம் வெளியிட தயாராக உள்ளோம். இன்ஷா அல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும் தங்களின் பதிலை பார்த்தேன் அல்ஹம்துலில்லாஹ் நமதூருக்கு மிக தேவையான விழிப்புணர்வு .
பெண்ணுக்கு வீடு சீதனம் பற்றி நம் தவ்ஹீத் வாதிகளுடன் விவாதித்தபோது அவர்கள் சொன்ன பதில்
1 பெண்ணுக்கு வீடு கொடுக்கும்போது சகோதரன் சொத்தை பற்றி பிரச்னை பண்ணாதவரை மார்க்க சட்டம் தலை இடாது என்கிறார்கள்
2 இன்னும் சிலரிடம் பெண்ணுக்கு வீட்டை கொடுத்துவிட்டால் ஆணுக்கு சொத்து குறையுமே என்று கேட்டபோது
பெண்ணுக்கு இப்போது கொடுத்ததுபோல் பின்னால் இரண்டு பங்காக ஆணுக்கு கொடுப்போம் என்கிறார்கள்
3 இன்னும் சிலர்
எங்களிடம் இருக்கிறது அதனால் கொடுக்கிறோம் அதனால்
(மாப்பிள்ளை இங்கு வாழ்கிறார் )
இதர்க்கு விளக்கம் தாருங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
//பெண்ணுக்கு வீடு சீதனம் பற்றி நம் தவ்ஹீத் வாதிகளுடன் விவாதித்தபோது
அவர்கள் சொன்ன பதில்//
இது போன்று விளக்கம் கொடுக்கும் தவ்ஹீத்வாதி என்று சொல்பவர்களிடம் சற்று உஷாராக இருக்கவும். இது போன்ற விளக்கம் தரும் தவ்ஹீத்வாதிகள் வரதட்சணை திருமண
பிரியாணிகளையும் விட்டுவைப்பது இல்லை என்பதையும் சொல்லித்தர விரும்புகிறோம்.
//1. பெண்ணுக்கு வீடு கொடுக்கும்போது சகோதரன் சொத்தை பற்றி பிரச்னை
பண்ணாதவரை மார்க்க சட்டம் தலை இடாது என்கிறார்கள் //
மார்க்க அடிப்படையில் இது தவறான விளக்கம். பெற்றோர்கள் தங்களின் சொத்துகளை மார்க்கம் காட்டிய வழிமுறை அடிப்படையில் தங்களின் பிள்ளைகளுக்கு பகுந்து அளிக்க வேண்டும். அப்படி பெற்றோர்கள் செய்யா விட்டால் அவர்கள் மறுமையில் குற்றம் பிடிக்கப்படுவார்கள். சகோதரர்கள் ஆட்சேபனை செய்யவிட்டாலும் சரியே. ஆட்சேபனை செய்யாமல் இருக்க காரணமே தங்களின்
சகோதரிகளின் வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என்பது தான். கணவராக வருபவர் மறைமுகமாகவோ அல்லது நேரடியாக வீடு கேட்டு நிர்பந்தம் செய்வதால் தான்,
ஆட்சேபனை வருவது இல்லை. இதுவே இது வரதட்சணை தான் என்பதற்கு மிகப்பெரிய ஆதாரம்.
//2 இன்னும் சிலரிடம் பெண்ணுக்கு வீட்டை கொடுத்துவிட்டால் ஆணுக்கு சொத்து குறையுமே என்று கேட்டபோது பெண்ணுக்கு இப்போது கொடுத்ததுபோல் பின்னால் இரண்டு பங்காக ஆணுக்கு கொடுப்போம் என்கிறார்கள்//
இது நோபல் பரிசு பெற தகுதியான பொய். பெண்ணுக்கு ஒரு வீடு நமதூரில் கிடைக்கிறது (அதாவது அந்த பெண்ணின் கணவருக்கு). பெண்ணுக்கு ஒரு வீடு
கிடைத்து பெண்ணின் சகோதரர்கள் எத்தனை பேருக்கு இரண்டு வீடு அல்லது ஒரு வீடாவது கிடைத்துள்ளது என்று விசாரித்து பாருங்கள்.
//3. இன்னும் சிலர் எங்களிடம் இருக்கிறது அதனால் கொடுக்கிறோம் அதனால்
(மாப்பிள்ளை இங்கு வாழ்கிறார் ) //
பெற்றோரிடம் வசதி இருந்தால், அதை பிரித்து மார்க்கம் காட்டிய வழிமுறையில் அனைத்து பிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். பெண்ணுக்கு மட்டும் கொடுத்து
விட்டு எங்களுக்கு வசதி இருக்கிறது கொடுக்கிறோம் என்றால் அது சரியான காரணம் இல்லை (அது வரதட்சணையே). அதுவும் திருமண நேரத்தில் கொடுப்பது
அல்லது கொடுப்பதாக வாக்குறுதி தருவதும் வரதட்சணையே. நமது ஊரில் உள்ள
கோடிஸ்வரர்கள் கூட தனது மகன்களுக்கு திருமண நேரத்திலோ அல்லது பின்னரோ வீடு கட்டித்தருவது இல்லை.
வரதட்சணை வாங்குபவர்களை விட, இதுபோன்ற விளக்கங்கள் தருபவர்கள் சற்று ஆபத்தனாவர்கள்
எங்க லின் கேள்விஹளுக்கு பதில் தந்ததற்கு நன்றி ஜசகல்லாஹ்
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.