Wednesday, March 20, 2013

தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பொய்யா?

கடந்த 15.2.2013 வெள்ளிக்கிழமை அன்று தக்வா பள்ளி அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில்  கீழ்காணும் தீர்மானம் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

"7. கடந்த சில மாதமாக அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுமுறை நாளாக இருந்த வெள்ளிகிழமையை ஞாயிற்று கிழமையாக நிரந்தரமாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் காதிர் முகைதீன் பள்ளி நிர்வாகத்தை கண்டிப்பதோடு சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரியபடுத்திக்கொள்கிறோம். இது மீண்டும் தொடர்ந்தால் அதிரையில் பொதுமக்களை திரட்டி காதிர் முகைதீன் பள்ளி முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம்."

பொதுக்கூட்டம் நடந்த அன்றும் அதில் இருந்து இரண்டு மாதங்கள் முன்புவரை வெள்ளிக்கிழமைகளில் இந்த மேல்நிலைப்பள்ளிகள் வேலை நாளாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் செயல்பட்டு வந்ததை பெற்றோர்களும், வேன் ஆட்டோ ஓட்டுனர்களும் தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகிகளிடம் கூறியதன் அடிப்படையில், அது உண்மை தானா? என்று விசாரித்தபோது 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மாதிரி பரிட்சை நடப்பதாகவும், அதனால் வெள்ளிக்கிழமை தேர்வு இல்லாத மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி நடக்கிறது என்றும் (ஞாயிறு விடுமுறை) கூறினார்கள். பல வருடங்களாக இதுபோல்  அந்த பள்ளி நடத்தும் மாதிரி தேர்வு நடக்கும் போது வெள்ளிக்கிழமை விடுமுறையாகவும்  ஞாயிற்றுக்கிழமை வேலை நாட்களாகவும் நடந்துவந்துள்ளது.

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும்  தேர்வு நேரங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வகுப்பு பல வருடங்கள் நடந்துவருகிறது.

தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் வெள்ளிக்கிழமை தேர்வு இல்லாதவர்களுக்கு விடுமுறை விடுகிறார்கள்.

நாம் இந்த தீர்மானத்தில் சொல்லி இருப்பது கடந்த மாதங்களில் அப்படி நடந்தது இனிமேல் தொடர்ந்தால் போராட்டம் நடத்துவோம் என்பது தான்.

கடந்த காலங்களில் அப்படி நடந்ததால் போராட்டம் நடத்துவோம் என்று தீர்மானத்தில் சொல்லவில்லை .இனிமேல் நடந்தால் என்று தான் சொல்லி இருக்கிறோம் 

இந்த தீர்மானத்தை சிலர் விமர்சனம் செய்ய புகுந்து, உண்மையை மறைத்து பொய்யை பரப்ப ஆரம்பித்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன் இரண்டு மாதங்கள் வெள்ளிக்கிழமைகளில் எல்லா வகுப்பு மாணவ மாணவியர்களுக்கும் பள்ளி நடத்தப்பட்டது உண்மை. இதை தவ்ஹீத் ஜமாஅத் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்க தயாராக உள்ளது. ஒரு அறிவாளி பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று சொன்னார்கள். கேக்கிறவர் எதையும் நம்புவார் என்று தெரிந்தால் அப்படி தான் சொல்லி இருப்பார்கள். வெள்ளிக்கிழமைகளில் தேர்வு வருவதும், அந்த நாட்களில் தேர்வு உள்ளவர்களுக்கு மட்டும் பள்ளி நடப்பதும் பல வருடங்களாக நடந்து வருகிறது. தவ்ஹீத் ஜமாஅத் தீர விசாரித்து வெள்ளிக்கிழமைகளில் பள்ளி வைப்பதனால் ஏற்படும் சில சங்கடங்களை தவிர்க்க செய்த ஒரு காரியத்தில் வேண்டுமென்றே ஒருவர் பொய்யை பரப்பிக்கொண்டு இருக்கிறார் .

இந்த பொய்யை உண்மை என்று நம்பிய நூர் முஹம்மது என்ற அறிவாளி, தவ்ஹீத் ஜமாஅத் பொய் சொல்லி தீர்மானம் போட்டுவிட்டது என்று ஒவ்வொருவருக்கும் மெயில் அனுப்பி திரிகிறார். ஏதோ  இவரோடு பலர் சேர்ந்து நாம் பொய் சொல்லிவிட்டதாக எதிர்ப்பதை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்று போட்டு பரப்பி வருகிறார். என்ன நடந்தது என்பதை தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகளிடம் கூட விளக்கம் கேட்காத இந்த நூர் முஹம்மது என்ற பித்தலாட்ட பேர்வழி, தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமைக்கு கூறுகெட்டத்தனமாக இந்த செய்தியை அனுப்பியுள்ளார். இந்த நூர் முஹம்மது தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எதிராக பொய்யான அவதூறுகளை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக இருக்கும் ஒரு இணையதளத்தில் பரப்பி திரிந்தவர். இந்த விஷயம் சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாஅத் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறது என்றும் உளறி திரிகிறார் நூர் முஹம்மது என்ற அறிவாளி. அங்கே கேட்டேன் இங்கே கேட்டேன் பதில் வரவில்லை என்று சொல்லும் இவர், தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் அதிகாரப்பூர்வ இணையதளமான எமது இணையதளத்தில் இவர் இவரது கேள்வியை முன்வைத்து இருந்தால், நாம் சரியாகவும் தெளிவாகவும் பதில் தந்து இருப்போம். நமக்கு பதில் வந்தால் கேவலப்பட்டு போவோம் என்று கருதி, கேள்வியும் கேட்ட மாதரி இருக்கணும், பதிலும் வந்துவிடக்கூடாது என்று தனது கோர முகத்தை காட்டியுள்ளார்.

தவ்ஹீத் ஜமாஅத்திடம் தவறு இருந்தால், யார் சூட்டிக்காட்டினாலும், அதை திருத்திக்கொள்ளும், மன்னிப்பு கேட்கவும் தயங்காது. எதிரிகள் சுட்டிக்காட்டினாலும் அதை ஏற்று, மன்னிப்பு கேட்க தயங்காது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியானது என்பதை தவ்ஹீத் ஜமாஅத் நிரூபிக்க தயாராக உள்ளது. சவூதியில் இருக்கும் நூர் முஹம்மது என்ற பித்தலாட்டப் பேர்வழி தயார் என்றால் இந்த ஆக்கத்திலேயே இந்த சவாலை ஏற்கலாம்.

தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகிகளின் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் படிக்கின்றன. பித்தலாட்ட பேர்வழி நூர் முஹம்மது என்ற ஈமெயில் சவடால் பேர்வழியை எமது சவாலை ஏற்க அழைக்கிறது தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை.

35 கருத்துரைகள் :

சகோதரர் நூர் முஹம்மது அவர்களே இது ஒரு நல்ல வாய்ப்பு நழுவவிடாதீர்கள்,
எதிர்கொள்ளுங்கள் சவாலை ...பார்போம் இந்த தௌஹீத் வாதிகளை





ததஜ பொ(து)ய்க் கூட்டம் அவதூறுகள்-பொய்-பித்தலாட்டம்.






ததஜ ரசிகர்களுக்கு,



அஸ்ஸலாமு அலைக்கும்.



நான் 1969 முதல் 1979 வரை காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி, கல்லூரியில் படித்தவன். இதில் குறிப்பாக, பிற மாணவர்கள் போலில்லாது, படித்து முடித்தும் இதுநாள் வரை நிர்வாகத்துடன், அதாவது தாளாளர் முதல் தலைமை ஆசிரியர் வரை தொடர்பில் இருந்து வருகிறேன் என்பதை முதலில் ததஜ ரசிகர்களுக்கு கூறிக் கொள்கிறேன்.



மேற்கண்ட விவரத்திற்கு ததஜ ரசிகர்கள் ஆதாரம் கேட்கலாம். இந்த comment மெயில் எனக்கு அனுப்பியிருக்கும் சகோ. கபூர் அவர்களுக்கும் எனக்கும் ஆசானுமாகிய ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஹாஜி ஜனாப் SKM ஹாஜா முஹைதீன் சார் அவர்களிடம் கபூர் அவர்கள் நேரடியாக சென்று, நூர் முஹம்மது விற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இதுநாள்வரை தொடர்பு பற்றி கேட்டு ஐயம் தீர்த்துக் கொள்ளலாம்.



ததஜ ரசிகர்களே! ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன் சம்மந்தப்பட்ட அனைத்து உயர்நிளைகளிலும் ஐயம் தீர ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஆனால், PJ மத்ஹபுவாதிகளாகிய ததஜ ரசிகர்கள் ஆதாரம் என்று பேசுவார்கள், மாறாக செய்வதெல்லாம் அவதூறுகள்-பொய்-பித்தலாட்டம்.



PJ மத்ஹபுவாதிகளாகிய ததஜ ரசிகர்களே! அறிந்து கொள்ளுங்கள்!! நான் உங்களைப் போன்று ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டு விட்டு, ஆதாரமில்லாமல் அறிவிப்பவன் அல்ல. உங்களின் ததஜ பொ(து)ய்க் கூட்டம் நடந்த செய்தியில் வந்த அவதூறு-பொய் தீர்மானம் எண் 7 ஐ http://theadirainews.blogspot.com/2013/02/blog-post_1807.html என்ற சுட்டியில் கண்டதும், பள்ளி ஆட்சி குழு உறுப்பினரிடம் தொடர்பு கொண்டு உண்மை அறிந்தேன்.



அதன்பின் என் மரியாதைக்குரிய சகோ இபுராஹிம் அன்சாரி காக்கா அவர்களுடன் தொடர்பு கொண்டு மேலும் உண்மைநிலை அறிந்தேன். இபுராஹிம் அன்சாரி காக்கா அவர்கள் கல்வியாளர் மற்றும் சிறந்த சிந்தையாளர், எழுத்தாளர் என சுருக்கமாக கூறிக் கொள்வதோடு, மேலும் இன்றைய காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சகோ. மகபூப் அலி M.Sc., M.Ed., M.Phil அவர்களின் உடன் பிறந்த மூத்த சகோதரர்தான் இபுராஹிம் அன்சாரி காக்கா அவர்கள்.



இபுராஹிம் அன்சாரி காக்கா அவர்கள் தலைமை ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு விவரமறிந்து http://theadirainews.blogspot.com/2013/02/blog-post_1807.htmlசுட்டியில் பதில் தந்துள்ளார்கள். இந்த சுட்டியில் நீங்கள் விவரங்களைப் படித்து உண்மையை உணர்ந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.



எனதருமை ததஜ ரசிகப் பெருமக்களே!!! நான் வேன் ஆட்டோ ஓட்டுனர்களிடம் கேட்டுவிட்டு முடிவுக்கு வரவில்லை. ஆட்சிக் குழுவிடமும் நிர்வாகத்திடமும் கேட்டுவிட்டே ததஜ வின் தீர்மானம் அவதூறு-பொய் என உறுதியாக உரைக்கின்றேன்.



சகோ. கபூர் அவர்களுக்கு, இதற்கு மேலும் தங்களுக்கு விவரம் தேவைப் பட்டால், ததஜ இயக்கத்தில் கல்வித்துறை (educational department) என ஏதேனும் ஒரு பிரிவு இருந்தால் அதன் e-mail id யை எனக்கு அனுப்புங்கள். அவர்களோடு நான் நேரடியாகத் தொடர்பு கொண்டு, மேலும் சில விவரங்களை தெரிவிக்கிறேன்.



முன்னாள் மாணவர்கள்

Noor Mohamed

Khadir Mohideen High School & College (1969 - 1979).





ததஜ பொ(து)ய்க் கூட்டம் அவதூறுகள்-பொய்-பித்தலாட்டம்.






ததஜ ரசிகர்களுக்கு,



அஸ்ஸலாமு அலைக்கும்.



நான் 1969 முதல் 1979 வரை காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி, கல்லூரியில் படித்தவன். இதில் குறிப்பாக, பிற மாணவர்கள் போலில்லாது, படித்து முடித்தும் இதுநாள் வரை நிர்வாகத்துடன், அதாவது தாளாளர் முதல் தலைமை ஆசிரியர் வரை தொடர்பில் இருந்து வருகிறேன் என்பதை முதலில் ததஜ ரசிகர்களுக்கு கூறிக் கொள்கிறேன்.



மேற்கண்ட விவரத்திற்கு ததஜ ரசிகர்கள் ஆதாரம் கேட்கலாம். இந்த comment மெயில் எனக்கு அனுப்பியிருக்கும் சகோ. கபூர் அவர்களுக்கும் எனக்கும் ஆசானுமாகிய ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஹாஜி ஜனாப் SKM ஹாஜா முஹைதீன் சார் அவர்களிடம் கபூர் அவர்கள் நேரடியாக சென்று, நூர் முஹம்மது விற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இதுநாள்வரை தொடர்பு பற்றி கேட்டு ஐயம் தீர்த்துக் கொள்ளலாம்.



ததஜ ரசிகர்களே! ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன் சம்மந்தப்பட்ட அனைத்து உயர்நிளைகளிலும் ஐயம் தீர ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஆனால், PJ மத்ஹபுவாதிகளாகிய ததஜ ரசிகர்கள் ஆதாரம் என்று பேசுவார்கள், மாறாக செய்வதெல்லாம் அவதூறுகள்-பொய்-பித்தலாட்டம்.



PJ மத்ஹபுவாதிகளாகிய ததஜ ரசிகர்களே! அறிந்து கொள்ளுங்கள்!! நான் உங்களைப் போன்று ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டு விட்டு, ஆதாரமில்லாமல் அறிவிப்பவன் அல்ல. உங்களின் ததஜ பொ(து)ய்க் கூட்டம் நடந்த செய்தியில் வந்த அவதூறு-பொய் தீர்மானம் எண் 7 ஐ http://theadirainews.blogspot.com/2013/02/blog-post_1807.html என்ற சுட்டியில் கண்டதும், பள்ளி ஆட்சி குழு உறுப்பினரிடம் தொடர்பு கொண்டு உண்மை அறிந்தேன்.



அதன்பின் என் மரியாதைக்குரிய சகோ இபுராஹிம் அன்சாரி காக்கா அவர்களுடன் தொடர்பு கொண்டு மேலும் உண்மைநிலை அறிந்தேன். இபுராஹிம் அன்சாரி காக்கா அவர்கள் கல்வியாளர் மற்றும் சிறந்த சிந்தையாளர், எழுத்தாளர் என சுருக்கமாக கூறிக் கொள்வதோடு, மேலும் இன்றைய காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சகோ. மகபூப் அலி M.Sc., M.Ed., M.Phil அவர்களின் உடன் பிறந்த மூத்த சகோதரர்தான் இபுராஹிம் அன்சாரி காக்கா அவர்கள்.



இபுராஹிம் அன்சாரி காக்கா அவர்கள் தலைமை ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு விவரமறிந்து http://theadirainews.blogspot.com/2013/02/blog-post_1807.htmlசுட்டியில் பதில் தந்துள்ளார்கள். இந்த சுட்டியில் நீங்கள் விவரங்களைப் படித்து உண்மையை உணர்ந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.



எனதருமை ததஜ ரசிகப் பெருமக்களே!!! நான் வேன் ஆட்டோ ஓட்டுனர்களிடம் கேட்டுவிட்டு முடிவுக்கு வரவில்லை. ஆட்சிக் குழுவிடமும் நிர்வாகத்திடமும் கேட்டுவிட்டே ததஜ வின் தீர்மானம் அவதூறு-பொய் என உறுதியாக உரைக்கின்றேன்.



சகோ. கபூர் அவர்களுக்கு, இதற்கு மேலும் தங்களுக்கு விவரம் தேவைப் பட்டால், ததஜ இயக்கத்தில் கல்வித்துறை (educational department) என ஏதேனும் ஒரு பிரிவு இருந்தால் அதன் e-mail id யை எனக்கு அனுப்புங்கள். அவர்களோடு நான் நேரடியாகத் தொடர்பு கொண்டு, மேலும் சில விவரங்களை தெரிவிக்கிறேன்.



முன்னாள் மாணவர்கள்

Noor Mohamed

Khadir Mohideen High School & College (1969 - 1979).

மரியாதைக்குரிய (?) நூர் முஹம்மது,

அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்களின் எழுத்துகளை படிக்கும் எவரும் உங்களுக்கு பித்து பிடித்துள்ளது என்று அறிந்து கொள்வார்கள். கொட்டை பாக்கிற்கு விலை கேட்டால் பட்டுக்கோட்டைக்கு வழி சொல்லுவதை போல் உள்ளது உங்களின் எழுத்து. வெள்ளிக்கிழமைகளில் காதர் முகைதீன் பள்ளி நடத்தப்பட்டதா? இல்லையா? என்பதை நாங்கள் நிரூபிக்க தயார் என்று எங்களின் ஆக்கத்தில் தெளிவாக சொல்லியுள்ளோம். உங்களுக்கு திராணியிருந்தால் நிரூபிக்க வாருங்கள்.

பிஜே மத்ஹபு, ததஜ ரசிகர்கள் என்றெல்லாம் எழுதி, தங்களின் வெறியை காட்டியுள்ளீர்கள். நீங்கள் சொன்னாதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் பிஜே மத்ஹபை பற்றியும் விவாதிக்கலாம். தில்லு இருந்தால் சொல்லுங்கள். தொழுகையில் குசிவிட்டு தொழுகையை முறிக்கலாம், மூத்திரத்தில் சூரத்துல் பாத்திஹாவை நெற்றியில் எழுத வேண்டும், தனது உறுப்பை தனது பின் துவாரத்தில் செலுத்தி கொண்டால் நோன்பு முறியுமா? முறியாதா? என்று ஆராய்ச்சி, போன்ற ஆபாசத்தை சொல்லித்தரும் மத்ஹபில் இருந்துக்கொண்டு எங்களை மத்ஹபுவாதிகள் என்று சொல்லும் உங்களின் தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

1979 வரை நீங்கள் அந்த பள்ளியில் படித்து, அதன் பின் இன்று வரை அந்த பள்ளி வாசலில் படுத்து உறங்கினாலும் நாங்கள் சொன்னாது பொய் என்றாகிவிடாது. சுய புரணம் பாடாமல் சவாலுக்கு தயாரா? இல்லையா? என்று மட்டும் எழுதுங்கள்.

நீங்கள் ஒரு கூமூட்டை என்று பள்ளி நிர்வாகிகள் நன்றாக விளங்கி வைத்திருக்கக் கூடும். அவர்கள் பள்ளி நடக்கவில்லை என்று சொன்னார்களா இல்லையா என்பதே இங்கே
பேசுபொருள் இல்லை.

உங்களின் சொற் பிரயோகங்களுக்கு ஏற்றார் போல் எமது எழுத்துகளும் அமைக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸலாமு அலைக்கும்
//, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் செயல்பட்டு வந்ததை பெற்றோர்களும், வேன் ஆட்டோ ஓட்டுனர்களும் தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகிகளிடம் கூறியதன் அடிப்படையில்,//
//எனதருமை ததஜ ரசிகப் பெருமக்களே!!! நான் வேன் ஆட்டோ ஓட்டுனர்களிடம் கேட்டுவிட்டு முடிவுக்கு வரவில்லை//
இந்த வெட்டி ஓட்டும் வேலை நாங்கள் பல பார்த்திருக்கிறோம் .நாங்கள் சொல்லியது பெற்றோர் மற்றும் ஆட்டோ டிரைவர் .நீங்கள் பெற்றோரை முழுவதும் முழுங்கி விட்டீர்கள்
//
, மேலும் சில விவரங்களை தெரிவிக்கிறேன்.



முன்னாள் மாணவர்கள்

Noor Mohamed//
மேலும் சில விவரங்களை தெரிவிக்கிறேன் என்று சொன்ன நீங்கள் முன்னாள் மாணவன் என்று தான் போட வேண்டும் .இலக்கணம் தெரியாமல் எழுதி பள்ளி பெயரை கெடுக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்

\\எனதருமை ததஜ ரசிகப் பெருமக்களே!!! நான் வேன் ஆட்டோ ஓட்டுனர்களிடம் கேட்டுவிட்டு முடிவுக்கு வரவில்லை.\\

\\சகோ. கபூர் அவர்களுக்கு, இதற்கு மேலும் தங்களுக்கு விவரம் தேவைப் பட்டால், ததஜ இயக்கத்தில் கல்வித்துறை (educational department) என ஏதேனும் ஒரு பிரிவு இருந்தால் அதன் e-mail id யை எனக்கு அனுப்புங்கள். அவர்களோடு நான் நேரடியாகத் தொடர்பு கொண்டு, மேலும் சில விவரங்களை தெரிவிக்கிறேன்.\\

நீங்கள் சவுதியில் இருந்து யாரிடம் கேட்டீர்களோ அவர்களை விட வேன், ஆட்டோ ஓட்டுனர்கள் தனசரி பள்ளிக்கு தொடர்பில் உள்ளவர்கள் நீங்கள் கேட்ட இப்ராகீம் காக்கா அந்த சமயத்தில் நிர்வாகத்தில் இருந்தார்களா? த த ஜ வின் மீது எப்படியாவது குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்று இவ்வளவு முயற்சிக்கும் நீங்கள் இப்போது உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இதுபற்றி கேட்டாலே போதும் கேட்டு விட்டு பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்



தவ்ஹீத் பள்ளி என்று எழுதியதற்கு மற்ற பள்ளிகள் எல்லாம்? என்று கேட்ட அறிவாளி

தவ்ஹீத் ஜமாத்தின் மீது குற்றம் சொல்லும் நீங்கள் அவரை தெரியும் இவரை தெரியும் என்று சொல்லுவதற்கு பதில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானம் தவறு என்பதற்கு ஆதாரத்துடன் எழுதுங்கள் தலைமையாசிரியர் சகோ. மகபூப் அலி அவர்களின் சகோதரரிடம் கேட்டுதற்கு பதில் அவரிடம் கேட்டுயிருக்கவேண்டியதுதானே?

தூங்குபவர்களை எழுப்பி விடலாம் உங்களை போல் தூங்குவதாக நடிப்பவர்களை எழுப்ப முடியாது

முன்னாள் மாணவன்
முகம்மது அஸ்ரப்




Adirai TNTJ & Others
அஸ்ஸலாமு அலைக்கும்.

பலருக்கு பதில் கூறு முன் ஒன்றை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.

//நீங்கள் ஒரு கூமூட்டை என்று பள்ளி நிர்வாகிகள் நன்றாக விளங்கி வைத்திருக்கக் கூடும்.//

காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளி வரலாற்றில் அன்று முதல் இன்று வரை தாளாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரிய ஆசிரியைகள் யாரேனும் எப்போதாவது எங்கேயாவது என்னை கூமுட்டை என எண்ணியதாக கூறியுள்ளார்களா?! அதை இங்கே நிருபிக்க வேண்டும்.

இன்றேல், PJ மத்ஹப் அதை பின்பற்றும் ததஜ ரசிகர்கள் கூட்டம் கூமுட்டை கூட்டமா? அல்லது மூளை சலவை செய்யப் பட்ட முட்டாள்கள் கூட்டமா? என்பதை தெரியப் படுத்தவும்.

இதற்கு தாங்கள் கூறும் பதிலைக் கொண்டு, ததஜ வின் தரமறிந்து, என் பதிலை இங்கே பதிவு செய்வேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்

//காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளி வரலாற்றில் அன்று முதல் இன்று வரை தாளாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரிய ஆசிரியைகள் யாரேனும் எப்போதாவது எங்கேயாவது என்னை கூமுட்டை என எண்ணியதாக கூறியுள்ளார்களா?! அதை இங்கே நிருபிக்க வேண்டும்//

இங்கே பேசிக்கொண்டு இருப்பது வெள்ளிக்கிழமைகளில் பள்ளி நடந்ததா இல்லையா எனபது தான் .பேசுபொருளின் கருத்தை திசை திருப்பாமல் நீங்கள் பள்ளி நடக்க வில்லை என்று நீங்கள் நிரூபித்தால் அதிரை ததஜ கூமுட்டை என்று நாங்கள் விளங்கி கொள்வோம் .நிரூபிக்காவிட்டால் நீங்கள் கூமுட்டை என்று நாங்கள் விளங்கி கொள்வோம்
பள்ளி நிர்வாகம் உங்களை எப்படி விளங்கியது என்பது எல்லாம் இங்கு எங்களுக்கு தேவை இல்லாத விஷயம் ,அதிரை ததஜ மீது நீங்கள் வைத்து இருக்கும் குற்றச்சாட்டை நிரூபிக்க வாருங்கள் .

உங்கள் சண்டையை பிறகு வைத்து கொள்ளுங்கள்

//காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளி வரலாற்றில் அன்று முதல் இன்று வரை தாளாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரிய ஆசிரியைகள் யாரேனும் எப்போதாவது எங்கேயாவது என்னை கூமுட்டை என எண்ணியதாக கூறியுள்ளார்களா?! அதை இங்கே நிருபிக்க வேண்டும்//

உங்களின் எழுத்துக்களை படித்தால் அதற்கும் மேல் என்ன தோன்றுகிறது

அன்பின் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த வலைதளத்தில் சகோதர்கள் நடத்தும் வார்த்தைகளின் யுத்த்தத்தில் கலந்து கொள்ளவேண்டிய ஒரு நிலை வந்ததற்கு வருந்துகிறேன். அதே நேரம் இதில் என் பெயரும் சம்பந்தப் பட்டிருப்பதால் இது பற்றி ஒரு சிறு விளக்கம் அளிப்பது தொடர்புடைய சகோதரர்களுக்கு நிலைமைகளை தெளிவாக்க உதவலாம் என்கிற நம்பிக்கையில் இதனை எழுதுகிறேன்.

தொடர்புடைய த த ஜ வின் பொதுக் கூட்டமும் அதில் நிறைவேற்றப் பட்ட தீர்மானமும் அதிரை நியூஸ் வலைதளத்தில் வெளி வந்த போது விடுமுறை தினம் வெள்ளிக் கிழமையிலிருந்து மாற்றப்படப்போவதை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் போவதாகப் படித்த போது ஒருவிதக் கவலையும் அச்சமும் ஏற்பட்டது.

காரணம் நாம் படித்த பள்ளியை எதிர்த்துப் போராட்டம் என்பதால் மட்டுமல்ல- அல்லாஹ்வின் பேரருளால் இவ்வளவு பெருந்தொகையான இஸ்லாமிய மக்கள் வாழும் நமதூரில் வெள்ளி விடுமுறையை மாற்றுவது தகுமா? என்கிற கவலை மேலோங்கியதே காரணம்.

இதனை முன்னிட்டு உடனே கருத்தைப் பதியாமல் பொறுப்பில் உள்ளவர்களை அழைத்துக் கேட்டுவிடலாம் என்று செய்தியைப் பதிந்த தம்பி நிஜாம் அவர்களிடம் பேசினேன். நடந்த நிகழ்ச்சி மற்றும் தீர்மானங்களை அவ்வாறே பதிந்தாகவும் உண்மை தவறு தனக்கு சரியாகத் தெரியாது என்றும் கூறினார்.

அதன் பிறகு எனது நண்பரும் இமாம் ஷாபி மெட்ரிகுலேஷன் பள்ளியின் இயக்குனருமாகிய பேராசியர் முகமது அப்துல் காதர் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அதைத்தொடர்ந்து பேராசிரியர் அவர்களுக்கு அடுத்து அமர்ந்து இருந்த எனது மரியாதைக்குரிய முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன் சார் அவர்களிடமும் இது பற்றிப் பேசினேன்.

அத்துடன் கா. மு. ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் தம்பி மகபூப் அவர்களிடமும் பேசினேன். அவர்களிடம் பேசி அவர்கள் யாவரும் சொன்ன கருத்தையே நான் எழுதினேன்.

ஒரு நெடுங்காலமாக நடைபெற்று வரும் நிறுவனம் என்பது பக்கம் - நம்மில் பலர் கல்விகற்க உதவிய நிறுவனம் என்பதால் மாற்றார் முன் நமது நிறுவனத்தை எதிர்த்து நாமே தீர்மானம் போடுவது பெரிய விஷயம் இல்லாது இருந்தாலும் மக்களைத்திரட்டிப் போராட்டம் என்பது மனதுக்கு மிகவும் வேதனையான விஷயமாக இருந்ததால்தான் கல்வியாளர்கள்- பொறுப்பில் இருந்தவர்களிடம் கேட்டு பதில் பதிவு செய்தேன்.

எனது நோக்கம் யாரையும் குற்றம் சாடுவதோ குறை கூறுவதோ அல்ல. ஒரு முக்கிய பிரச்னையில் ஒரு விளக்கம் தரவேண்டியே. தவறான தகவல்களின் அடிப்படையில் அல்லது நாம் உண்மை என்று நம்பும் விஷயங்களில் அனைவரும் தாங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திவிடுவது இயற்கையே. இதில் யாரையும் யாரும் குறை சொல்ல வேண்டியது இல்லை. தவறான வார்த்தைப் பிரயோகங்கள் நமக்குள் வேண்டாம்.

ஒருவேளை, நான் கலந்து பேசிய கல்வியாளர்கள் எனக்குத்தவறான தகவல் தந்து இருக்கலாம் அதை நானும் எழுதி இருக்கலாம். ஆனால் பொதுவாக யோசித்தால் இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவே.

அதே நேரம் , த.த.ஜ - வின் அன்பு சகோதரர்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர்களும் இப்படித் தீர்மானம் போட்டு இருக்கலாம். இதற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது சமுதாயப் பற்றே தவிர வேறில்லை என்பதை உணர்ந்து நமக்குள் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி வருத்தங்களை வளர்த்துக் கொள்ளவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நடந்த விபரங்களையே தெரிவித்து இருக்கிறேனே தவிர நான் எழுதியதே சரி என்று வீம்பு பிடிக்க அல்ல. சமுதாயப் பிரச்னைகளில் ஈகோ இல்லாமல் அனைவரும் ஒத்துழைத்து நற்காரியங்களில் இணைந்து செயல்படவேண்டுமேன்கிற கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்.

இந்தப் பிரச்னையை எனது இந்த விளக்கத்தை ஏற்று சகோதர்கள் ஒரு தீர்வுக்குக் கொண்டுவந்தால் மிக்க மகிழ்வாக இருக்கும். அவரவர் கருத்துக்கள் புரிதல்கள் அவரவர்க்கு. ஆகவே இந்தப் பிரச்னையை விவாதிக்கும் வாய்ப்பில் தொடர்பில்லாத பல பிரச்னைகளைப் பற்றி நமக்குள் பிளவுகளை இன்னும் அதிகப் படுத்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். வஸ்ஸலாம்.

சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களின் விபரமான விளக்கத்திற்கு நன்றி. நடந்த விஷயத்தை தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். தவ்ஹீத் ஜமாஅத் காதர் முகைதீன் கல்வி கூடங்களுக்கு எதிராக தேவையற்ற முறையில் தீர்மானம் போட வேண்டிய எந்த நிர்பந்தமும் இல்லை. தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானம், தவ்ஹீத் ஜமாஅத்திற்கு இது சம்பந்தமாக வந்த புகார் அடிப்படையிலானது. மேலும், தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகிகளின் பிள்ளைகளே இந்த பள்ளிக்கூடங்களில் மாணவர்களாக உள்ளார்கள்.

நீங்கள் சொல்லியது போல தவ்ஹீத் ஜமாஅத்தின் தீர்மானம் சமுதாயத்தின் மீது கொண்ட அக்கரையால் தவிர வேறு இல்லை. நமக்கென்று இருக்கும் கொஞ்சம் உரிமைகளும் பறி போய்விடக்கூடாது என்ற அடிப்படையில் தான் தவ்ஹீத் ஜமாஅத் இப்படி ஒரு தீர்மானம் போட வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது.

ஒரு வேளை தவ்ஹீத் ஜமாஅத் தவறான தகவலின் அடிப்படையில் இப்படி ஒரு தீர்மானம் போட்டு இருந்தால், நாங்களே அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு இருப்போம். நாங்கள் தவறு செய்து இருந்தால், அதை பகிரங்கமாக ஒத்துக்கொள்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.


நமது சமுதாய கல்வி கூடங்களே நமது உரிமைகளை பறிக்க நினைத்தால், அதற்கு எதிராக போராடினால் தான் நமது உரிமைகள் கிடைக்கும். நமது கல்வி நிறுவனங்களே நமது உரிமைகளை பறிக்கும் போது, சமுதாய பள்ளிகளுக்கு எதிராக நாம் போராடினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்தால் நமது உரிமை எதுவும் மிஞ்சாது.

உங்களுக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது என்று உறுதியாக நம்புகிறோம்.

இதை ஒரு பிரச்சினையாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை. சகோதரர் நூர் முஹம்மது இதை பூதாகரமாக காட்டி பலருக்கும் மெயில் அனுப்பி திரிந்த காரணத்தினால், இந்த விஷயத்தில் சவால் விட்டு ஒரு ஆக்கம் வெளியிட வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது.

இந்த பிரச்சினை சம்பந்தமாக நீங்கள் குறிப்பிடும் தளத்தில் உங்களின் கருத்துகள், எமது பார்வைக்கு வந்த பிறகும் நாம் அதை கண்டு கொள்ளவில்லை. காரணம், இந்த விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத் தவறு செய்யவில்லை என்பதற்கு வெள்ளிக்கிழமைகளில் பள்ளிக்கு தமது பிள்ளைகளை அனுப்பிய பல பெற்றோர்கள் சாட்சியாக உள்ளார்கள் என்பதால்.

ஒரு இயக்கத்தின் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி எழுதும் நீங்கள் அந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பதை நன்றாக ஆராய்ந்து சொல்லியிருக்கலாம் என்பது எங்களின் கருத்து.

இந்த ஆக்கம் நூர் முஹம்மது என்பவருக்காக தான் வெளியிடப்பட்டது. கண்ணியமான முறையில் உங்களின் கருத்தை பதிவு செய்த உங்களுக்கு எதிராக எழுதப்பட்டது அல்ல. அதே நேரத்தில், உங்களின் கருத்தை ஆதாரமாக கொண்டு தான் வெளிநாட்டில் வசிக்கும் நூர் முஹம்மது தவ்ஹீத் ஜமாஅத் அவதூறு பரப்பிவிட்டது என்று பரப்புகிறார் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

அதிரை TNTJ & Others

அஸ்ஸலாமு அலைக்கும்.

//பொதுக்கூட்டம் நடந்த அன்றும் அதில் இருந்து இரண்டு மாதங்கள் முன்புவரை வெள்ளிக்கிழமைகளில் இந்த மேல்நிலைப்பள்ளிகள் வேலை நாளாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் செயல்பட்டு வந்ததை பெற்றோர்களும், வேன் ஆட்டோ ஓட்டுனர்களும் தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகிகளிடம் கூறியதன் அடிப்படையில், அது உண்மை தானா? என்று விசாரித்தபோது 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மாதிரி பரிட்சை நடப்பதாகவும், அதனால் வெள்ளிக்கிழமை தேர்வு இல்லாத மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி நடக்கிறது என்றும் (ஞாயிறு விடுமுறை) கூறினார்கள். பல வருடங்களாக இதுபோல் அந்த பள்ளி நடத்தும் மாதிரி தேர்வு நடக்கும் போது வெள்ளிக்கிழமை விடுமுறையாகவும் ஞாயிற்றுக்கிழமை வேலை நாட்களாகவும் நடந்துவந்துள்ளது.//

பெற்றோர், வேன், ஆட்டோ ஓட்டுனர்களிடம் விசாரித்த அதிரை ததஜ, இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரித்திருந்தால், பள்ளிக்கு பகைமையாக தீர்மானம் போட்டதற்கு பதிலாக, கண்டிப்பாக பாராட்டி தீர்மானம் போட்டிருப்பார்கள். காரணம் வெள்ளிக் கிழமை பல வகுப்புகளுக்கு தேர்வு நடக்கும் போது, மாணவர்கள் ஜூம்மா தொழுகை பயன் படுத்திக் கொள்ளும் வகையில், தரகர் தெரு ஜூம்மா பள்ளியில் ஜூம்மா தொழுகை சற்று தாமதாமாக ஆரம்பித்ததற்கு ஜமாத்தர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் முதலில் நன்றி கூறி பாராட்டுத் தெரிவித்திருக்க வேண்டும்.

சரி, முக்கிய செய்திக்கு வருவோம்.

//அது உண்மை தானா? என்று விசாரித்தபோது 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மாதிரி பரிட்சை நடப்பதாகவும், அதனால் வெள்ளிக்கிழமை தேர்வு இல்லாத மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி நடக்கிறது என்றும் (ஞாயிறு விடுமுறை) கூறினார்கள்.//

இதில் குறிப்பிட்டுள்ளதுபோல் X & XII STDs மட்டும் மாதிரித் தேர்வு நடைபெறவில்லை.முன்பெல்லாம் X & XII STDs exam மட்டுமே அரசு பொதுத் தேர்வுகளாக நடைபெறும்.

ஒரு மேல்நிலைப் பள்ளியில், VI to VIII இடைநிலை என்றும், IX & X உயர்நிலை என்றும், XI & XII மேல்நிலை என்றும் மூன்று பிரிவுகளாக செயல் படுகின்றன. இதில் அப்போது X & XII STDs exam மட்டுமே அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறும்.

ஆனால், இப்போது VI to XII STDs அனைத்திற்கும் government control exams நடை பெருகின்றன என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவை பற்றி சில துளிகள்;

*** X & XII STDs exams அனைத்தும் state educational control exams நடை பெறுவதோடு, ஆண்டு இறுதித் தேர்வு answers papers மட்டும் அரசால் திருத்தப் படுகின்றன.

*** எஞ்சிய VI, VII, VIII, IX & XI STDs exams அனைத்தும் district educational control exams ஆக நடை பெறுகின்றன. அதவாது காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு மற்றும் இடையிடையே நடைபெறும் TERM TESTS எல்லாம் district educational control ல் நடை பெறுகின்றன. ஆனால் answers papers எல்லாம் அரசால் திருத்தப் படுவதில்லை.

*** இதன் மூலம் நான் அதிரை ததஜ விற்கு தெரியப் படுத்திக் கொள்வது என்ன வெனில், இபோதெல்லாம், எல்லா வகுப்புகளுக்கும் எல்லா காலங்களிலும் நடை பெரும் தேர்வுகள் அனைத்தும் government (state & district) control exams நடத்துவதால் எல்லா வகுப்புகளுக்கும் எல்லா காலங்களிலும் வெள்ளிக் கிழமை தேர்வுகள் கண்டிப்பாக நடை பெரும். இது அரசின் அட்டவணை - ஆணை. இதை யாராலும் மாற்ற முடியாது.

*** மேற்கண்ட விவரம் மூலம் எப்படியும் உங்கள் குழப்பத்திலிருந்து 80% தெளிவு பெற்றிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

இந்நிலையில் பள்ளியின் கல்வி ஆண்டின் இறுதிப் பகுதியில் எல்லா வகுப்புகளுக்கும் model & term tests அரசால் நடத்தப் படுவதால், வெள்ளிக் கிழமையும் தேர்வு நடை பெறுவதால், அப்போது ஒரு சில வகுப்பு களுக்கு அரசு அட்டவணையில் தேர்வு இல்லாமல் இருக்கலாம். அப்போது வெள்ளிக் கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் வேலை செய்யும் படி ஆசிரிய ஆசிரியைகளுக்கு ஆணையிட முடியாது. அதனால்தான் பரீட்சை இல்லாத ஒரு சில வகுப்புகளுக்கு வெள்ளிக் கிழமை பாடம் நடத்துவதுடன், மற்ற வகுப்புகளுக்கு வெள்ளிக் கிழமை பரீட்சை நடை பெறுகின்றன.

உங்களின் சிந்தனைக்கு:
இன்று கல்வித்துறை பல பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன. முன்பெல்லாம் கல்வித்துறைக் கென்று அரசில் ஒரு அமைச்சர்தான் பங்கு வகிப்பார். ஆனால், இப்போது கல்வித்துறை பறந்து விரிந்து கிடப்பதால் பள்ளிக் கல்வி அமைச்சர், உயர் கல்வி அமைச்சர் என இருவர் பங்கு வகிக் கின்றனர்.

இன்னும் பல உள. ஆனால் அதிரை ததஜ வின் சந்தேகத்தை தீர்க்க இது போதுமென்று எண்ணுகிறேன்.

எது எப்படியாயினும், நான் மேற்கூறிய செய்திகள் சரிதானா என அறிய விரும்புவீர்களேயானால், அதிரை ததஜ வில் கற்றவர் யாரேனும் இருந்தால், கற்றிருந்தால் மட்டும் போதாது, கல்வித்துறை அறிவு (knowledge of educational department) பெற்றிருந்தால் காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அவர்களை அணுகி உங்கள் ஐயங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

தயவுகூர்ந்து பெற்றோர், வேன், ஆட்டோ ஓட்டுனர்களை அணுகி உங்கள் ஐயங்களை தீர்க்க முயற்ச்சிக்காதீர்கள்.

நூர் முஹம்மது
முன்னாள் மாணவன்
காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி & கல்லூரி (1969 - 1979)

///தவ்ஹீத் ஜமாத்தின் மீது குற்றம் சொல்லும் நீங்கள் அவரை தெரியும் இவரை தெரியும் என்று சொல்லுவதற்கு பதில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானம் தவறு என்பதற்கு ஆதாரத்துடன் எழுதுங்கள் தலைமையாசிரியர் சகோ. மகபூப் அலி அவர்களின் சகோதரரிடம் கேட்டுதற்கு பதில் அவரிடம் கேட்டுயிருக்கவேண்டியதுதானே?

தூங்குபவர்களை எழுப்பி விடலாம் உங்களை போல் தூங்குவதாக நடிப்பவர்களை எழுப்ப முடியாது///

முன்னாள் மாணவன்
முகம்மது அஸ்ரப்
அஸ்ஸலாமு அலைக்கும்

நீங்கள் நிறைவேற்றிய தீர்மானம் தவறு என ஆதாரத்துடன் நிருபித்துள்ளேன். இனியாவது நாம் பயின்ற பள்ளியின் மீது பழி சுமத்துவதை தங்களின் தொழிலாகக் கொள்ள வேண்டாம் என கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சகோ. நூர் முஹம்மது அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

தங்களின் விளக்கத்திற்கு நன்றி. அரசாங்கத்தால் நடத்தப்படும் தேர்வுகள் வெள்ளிக்கிழமைகளில் வந்தால் அதை மாற்ற முடியாது என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை.

பொதுக்கூட்டம் நடைபெற்ற அன்றும் அதற்கு முன் இரண்டு மாதங்கள் வெள்ளிக்கிழமைகளில் பள்ளி நடத்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு டாக்டர் படிப்புக்கு கூட தேர்வுகள் நடைபெறாது என்ற உண்மை உங்களுக்கு விளங்கவில்லையா? பள்ளி நிர்வாகத்தில் சொல்லி இந்த இரண்டு மாதத்தில் தொடர்ந்து எட்டு வெள்ளிக்கிழமைகளில் தேர்வு இருந்தது என்று வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?

Adirai TNTJ
அஸ்ஸலாமு அலைக்கும்.

//பொதுக்கூட்டம் நடைபெற்ற அன்றும் அதற்கு முன் இரண்டு மாதங்கள் வெள்ளிக்கிழமைகளில் பள்ளி நடத்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு டாக்டர் படிப்புக்கு கூட தேர்வுகள் நடைபெறாது என்ற உண்மை உங்களுக்கு விளங்கவில்லையா? பள்ளி நிர்வாகத்தில் சொல்லி இந்த இரண்டு மாதத்தில் தொடர்ந்து எட்டு வெள்ளிக்கிழமைகளில் தேர்வு இருந்தது என்று வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?//

இரண்டு மாதங்களுக்கு டாக்டர் படிப்புக்கு கூட தேர்வுகள் நடைபெறாது என்ற உண்மை உங்களுக்கு விளங்கவில்லையா? என என்னை நோக்கி வினா எழுப்பியுள்ளீர்கள்.

மருத்துவ சிறப்பு உன்னத நிலை படிபபாகிய D.M & M.Ch இவற்றின் சில பிரிவுகளுக்கு மூன்று மாதங்களுக்கு மேல் தேர்வுகள் நடைபெறும் என்பதை உங்களுக்கு கூறிக் கொள்கிறேன். இது பற்றி நான் பல விளங்கி இருப்பின், உங்களுக்காக ஒன்றை கூற வேண்டுமானால், இதில் பெரும் பகுதி மாணவர்களின் வயது ஆசிரியர்களின் வயதைவிட அதிகம் உடையவர் படிப்பர். அப்படியானால் வகுப்பு எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து,
பள்ளி நிர்வாகத்தில் சொல்லி இந்த இரண்டு மாதத்தில் தொடர்ந்து எட்டு வெள்ளிக்கிழமைகளில் தேர்வு இருந்தது என்று வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? என்ற ஏவல் வினா.

Director of School Education னைப் பொருத்தவரை;
Government School
Private School
Government Aided Minority School
Government Aided Non-Minority School
Government Approved Minority School
Government Approved Non-Minority School
Etc.
இவற்றில் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் Rules and Regulation & Terms and Conditions இவைகளை Director of School Education வகுத்துக் கொடுத்துள்ளன. அவ்வகையில் நம் பள்ளியானது Government Aided Minority School என்பதால் அவர்கள் தன்னிச்சையாக எந்த அறிக்கையும் வெளியிட முடியாது-அரசு அங்கீகாரம் கொடுக்கும் அறிக்கைகளைத் தவிர என்று காண்க!

மேலும்,
பொதுக்கூட்டம் நடைபெற்ற அன்றும் அதற்கு முன் இரண்டு மாதங்கள் வெள்ளிக்கிழமைகளில் பள்ளி நடத்தப்பட்டது என்ற தகவலைத் தந்துள்ளீர்கள்.
பொதுக் கூட்டம் 15/02/2013 அன்று நடை பெற்றது. அதற்கு முன் இரண்டு மாதங்கள் என்றால், அதாவது 15/12/2012 லிருந்து கணக்கிடும் போது, அரையாண்டுத் தேர்வு நடத்தப்பட்டிருப்பது, அதற்கு மேல் கிறிஸ்மஸ் + புத்தாண்டு விடுமுறைகள், அடுத்து term holidays எனக் கணக்கிட்டால், தோராயமாக 10/01/2013 ல் பள்ளி மீண்டும் திறக்கப் பட்டிருக்கலாம்.
நான் என் முன் விளக்கத்தில் பள்ளி கல்வி ஆண்டின் இறுதிப் பகுதி என குறிப்பிட்டிருந்தேன். இறுதிப் பகுதி என்பது 15/01/2013 to 01/03/2013. இதைப் பற்றி விளக்கம் வேண்டுமானால் நீண்ட விளக்கம் கொடுக்கவேண்டும்.

சுருக்கமாக கூறினால், சமச்சீர் கல்வித் திட்டத்தால், exams எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் வந்து விட்டன. இதனால் subjects, syllabus, divisions, teaching, notes of lessons, inspections, term tests, exams etc. இவைகளை விளக்கினால் தங்களின் தகவலாகிய ஐயத்திற்கு சரியான விளக்கம் கிடைக்கும்.
I regret to inform that I can not explain now.

அன்பர்களே, என் விளக்கத்தின் மூலம் தாங்கள் முழுமையாக தெளிவு பெற்றிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். எது எப்படியாயினும் நான் பயின்ற பள்ளியின் மீது சுமத்தப்பட்ட பழியை நான் துடைத்துவிட்டேன் என்ற மன நிறைவோடு இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.

இன்ஷா அல்லாஹ், மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம், விவாதிப்போம்.

வஸ்ஸலாம்
நூர் முஹம்மது
முன்னாள் மாணவன்
காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி & கல்லூரி (1969 - 1979)

பொதுக்கூட்டம் நடந்த நாள் வரை தேர்வு இல்லாதவர்களுக்கும் வெள்ளிக்கிழமை பள்ளி நடந்து பொதுக்கூட்டத்திற்கு பிறகு தேர்வுகள் இல்லாத வகுப்புகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது நாங்கள் நிருபிக்க தயார். இது தவறு என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் அதை நிருபிக்க பக்கம் பக்கமாக எழுதுவற்கு பதில் பள்ளியில் உள்ள சம்மந்தப்பட்டவர்களை வைத்து உங்களால் நீருபிக்கமுடியுமா?

சகோ நூர் முஹம்மது,

அஸ்ஸலாமு அலைக்கும்.

//இதில் பெரும் பகுதி மாணவர்களின் வயது ஆசிரியர்களின் வயதைவிட அதிகம் உடையவர் படிப்பர். அப்படியானால் வகுப்பு எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.//
இதுவா இங்கே பிரச்சனைக்குரிய கேள்வி ?

எது முக்கிய பிரச்சினையோ அதற்கு சரிவர பதில் தராமல், மருத்துவ படிப்பை குறிப்பிட்டு அதற்கு மூன்று மாதம் தொடர்ந்து பரிட்சை நடைபெறும் என்று கூறியுள்ளீர்கள். அதே படிப்பு தான் நமது காதர் முகைதீன் பள்ளியிலும்
படித்து கொடுக்கிறார்கள் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள்.

ஏதோ விளக்கம் என்ற பெயரில் கதை கதையாக சொல்லிவிட்டு, தெளிவு பெற்று இருப்பீர்கள் என்று உங்களுக்கு நீங்களே ஆறுதல் கூறுகிறீர்கள்.

உங்கள் விளக்கம் உண்மையா என்பதை படிப்பவர்கள் படித்து தெரிந்து கொள்ளட்டும்.

கடைசி வரையும் சவாலை ஏற்காமல் ஜகா வாங்கிவிட்டீர்கள்.

Adirai TNTJ
அஸ்ஸலாமு அலைக்கும்

//எது முக்கிய பிரச்சினையோ அதற்கு சரிவர பதில் தராமல், மருத்துவ படிப்பை குறிப்பிட்டு அதற்கு மூன்று மாதம் தொடர்ந்து பரிட்சை நடைபெறும் என்று கூறியுள்ளீர்கள். அதே படிப்பு தான் நமது காதர் முகைதீன் பள்ளியிலும்
படித்து கொடுக்கிறார்கள் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள்.//

பள்ளிப் படிப்பை பேசும் இத்தளத்தில்;

//இரண்டு மாதங்களுக்கு டாக்டர் படிப்புக்கு கூட தேர்வுகள் நடைபெறாது என்ற உண்மை உங்களுக்கு விளங்கவில்லையா?//
என நீங்கள்தானே வினா எழுப்பினீர்கள். டாக்டர் படிப்பு பற்றி கேட்பதோடு விட்டு விடாமல், விளங்கவில்லையா? என்றும் நீங்கள்தான் கேட்கின்றீர்கள்.
உங்களின் இந்த கேள்விக்கு நான் விளங்கியதில் கொஞ்சமாவது உங்களுக்கு கண்டிப்பாக நான் சொல்லியாக வேண்டும். உங்கள் கேவிக்குதான் விளக்கம் தந்தேனே யொழிய நானாக தரவில்லை என்பதை நினைவு படுத்துகிறேன்.

//ஏதோ விளக்கம் என்ற பெயரில் கதை கதையாக சொல்லிவிட்டு, தெளிவு பெற்று இருப்பீர்கள் என்று உங்களுக்கு நீங்களே ஆறுதல் கூறுகிறீர்கள்.//

எவ்வளவோ விளக்கம் தந்துள்ளேன். ஆனால் அதை சுலபமாக கதை என்கிறீர்கள்.

+++மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்புகளை வகைப் படுத்தி விவரித்தேனே அது உங்கள் அறிவுக்கு கதையாக தெரிகிறதா?

+++State educational control மற்றும் District educational control பற்றி விவரித்தேனே அது உங்கள் அறிவுக்கு கதையாக தெரிகிறதா?

+++அன்றைய கல்வி முறை பற்றியும், இன்றைய கல்வி முறை பற்றியும் விவரித்தேனே அது உங்கள் அறிவுக்கு கதையாக தெரிகிறதா?

+++Government control பற்றி விரிவாக விவரித்தேனே அது உங்கள் அறிவுக்கு கதையாக தெரிகிறதா?

+++அனைத்து வகுப்புகளுக்கும் அரசின் நேரடித் தேர்வின் காரணமாக, வெள்ளிக் கிழமை, ஞாயிற்றுக் கிழமை விடுமுறை பற்றி விவரம் தெரியாமல் தட்டுத் தடுமாறித் தவித்த தங்களுக்கு தகுதி மிக்க தரமுடன் விவரித்தேனே அது உங்கள் அறிவுக்கு கதையாக தெரிகிறதா?

+++Director of School Education பற்றி வகைப்படுத்தி விவரித்தேனே அது உங்கள் அறிவுக்கு கதையாக தெரிகிறதா?

+++பள்ளி கல்வியாண்டு என்றால் என்னவென்று வகைப்படுத்தித் தந்தேனே அது உங்கள் அறிவுக்கு கதையாக தெரிகிறதா?

+++subjects, syllabus, divisions, teaching, notes of lessons, inspections, term tests, exams etc. இவைகளை விளக்கினால் தங்களின் தகவலாகிய ஐயத்திற்கு சரியான விளக்கம் கிடைக்கும் எனக் கூறினேனே அது உங்கள் அறிவுக்கு கதையாக தெரிகிறதா?

இவையெல்லாம் கதை என்றால் உங்கள் அறிவுக்கு கருத்து என்று எதைக் கூறுகிறீர்கள்.

பெற்றோர், வேன், ஆட்டோ ஓட்டுனர்களை மட்டும் அணுகி, பள்ளி உள்ளே நுழைய பயந்து அரை வேக்காடு தீர்மானம் போடுவதுதான் உங்கள் அறிவு கதவு கருத்து என்று திறக்கிறதா?

உங்களுக்கு எப்படி சொன்னால் புரியும் என்று கூறுவீர்களேயானால், அதுவே அறிவுப் பூர்வமானதாக இருக்குமேயானால், அப்படிப்பட்ட வழியில் உங்களுக்கு போதிக்க என்றும் நான் தயார்?

//கடைசி வரையும் சவாலை ஏற்காமல் ஜகா வாங்கிவிட்டீர்கள்//
என்பன போன்று கூறுவது ததஜ வின் இறுதிக் கட்ட காரணி என்பது நான் நன்கு அறிவேன்.

நான் இந்த சவாலை ஏற்கனவே முடித்து விட்டேன். அதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் உங்களுக்கு இல்லை யாயின், இந்த விஷயத்தில் உங்கள் தானைத் தலைவர் PJ அவர்களுடன் விவாதிக்க நான் என்றும் தயார்? என சவாலை சமர்ப்பிக்கின்றேன்.

நூர் முஹம்மது
முன்னாள் மாணவன்
காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி & கல்லூரி (1969 - 1979)






சகோ. நூர் முஹம்மது அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்

யார் எழுதிய கருத்தை வைத்து நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத் தவறு செய்துவிட்டது என்று பரப்பி வந்தீர்களோ , அவரே வந்து 'எனக்கு ஊர்ஜிமாக தெரியாது' என்று உங்கள் முகத்தில் கரி பூசிய பிறகும் வெட்கம் இல்லாமல் சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி திரிகிறீர்கள். விளக்கம் என்ற பெயரில் நீங்கள் தரும் பதில்கள் உங்கள் மேதாவி தனத்தை காட்டுவதற்கு நீங்கள் முயற்சிகின்றீர்களே ஒழுய கேட்ட கேள்விக்கு பதில் இல்லை என்று அனைவருக்கும் புரிந்து இருக்கும் என்பது மட்டும் உறுதி.

தவ்ஹீத் ஜமாஅத்தின் தீர்மானத்தை பற்றி பள்ளி நிர்வாகமே வாய் திறக்கவில்லையே ? ஏன்? ஏன்? மவுனம் சம்மதம் தானே? நீங்கள் சொல்லுவது உண்மையென்றால் பள்ளி நிர்வாகத்தில் சொல்லி, தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் அல்லது பள்ளி நடத்தப்பட்ட காரிய காரணங்களை விளக்கலாம். மாதிரி தேர்வுகளின் காரணத்தினால் தான் வெள்ளிக்கிழமை பள்ளி எல்லா வகுப்புகளுக்கும் பள்ளி நடத்தப்பட்டது என்றீர்கள். சரி இரண்டு மாதமா? மாதிரி தேர்வு நடக்கும் என்று கேட்டால், அரையாண்டு தேர்வு என்கிறீர்கள். மொத்தத்தில் எங்களின் குற்றச்சாட்டு சரி தான் என்பதை சற்று நேரடியாகவே ஒத்துக்கொண்டு விட்டீர்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தவ்ஹீத் ஜமாஅத்தில் தவறு இருப்பதாக எங்கள் எதிப்பவர்கள் சுட்டிக்காட்டினாலும், அதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவமுள்ள இயக்கம் தவ்ஹீத் ஜமாஅத். இதனால், தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பவர்கள் கூட தவ்ஹீத் ஜமாஅத்தை நம்புகிறார்கள். நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக அவதூறு செய்வதையே கொள்கையாக கொண்டவர். நீங்கள் தவறை சூட்டிக்காட்டினாலும் திருத்தக்கொள்வோம் (ஆனால், தவறாக இருக்க வேண்டும்).

நேரடியாக நிரூபிக்க தயாரா? என்று தவ்ஹீத் ஜமாஅத் இந்த தளத்தில் சவால் விட்டதையும் விமர்சனம் செய்துள்ளீர்கள். கடைசி காரணி என்கிறீர்கள். அது எங்களுக்கு கடைசி காரணி அல்ல. அது தான் முதல் காரணி. உங்களிடம் உண்மையிருந்தால் இந்த சவாலை ஏற்று தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது கரி பூசிவிடலாம். இதற்கு நீங்கள் தான் அயல்நாட்டில் இருந்து வர வேண்டும் என்பது இல்லை, உங்கள் சார்பாக பள்ளி நிர்வாகமோ அல்லது நிரூபிக்க தயாராக இருக்கும் எந்த நபரும் வரலாம். எனவே, தவ்ஹீத் ஜமாஅத்தின் சவாலை ஏற்க முன்வாருங்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் மீது உங்களுக்கு குரோதம் மட்டுமே உள்ளது என்பதை சில தளங்களில் நீங்கள் எழுதிய கருத்துகள் ஆதாரம். தவ்ஹீத் ஜமாஅத்தை வைத்து ஆதாயம் தேடிக்கொண்டு, மறுபக்கம் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக வரும் கருத்துகளை அனுமதித்து, அதற்கு வரும் பதிலை வெளியிடாமல் நாடகம் ஆடும் குப்பை தளங்களில் உங்களின் வாதங்கள் எடுப்பட்டதை போன்று தோன்றலாம். இங்கே உங்கள் பருப்பு வேகாது. எங்களின் கருத்துக்கு எதிராக நீங்கள் சொன்னாலும், உங்களின் எந்த கருத்தும் எங்கள் தளத்தில் வெளியிடாமல் மட்டுருத்தல் செய்யப்படவில்லை என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள்.

பெற்றோர், ஆட்டோ, வேன் ஓட்டுனர்களை விட பள்ளி வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டது என்பதற்கு வேறு யார் சிறந்த ஆதாரம்? என்ன ஒரு குதர்க்கமான விளக்கம்.அந்த வெள்ளிக்கிழமைகளில் யாருக்குமே பரீட்சை நடக்க வில்லை என்று மாணவர்களை விட வேறு யார் சிறந்த சாட்சி ? பள்ளிக்குள் நுழைய பயம் என்கிறீர்கள், பாவம் ரொம்ப குழம்பியுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிடும் பள்ளியின் வாசலில் தான் பொதுக்கூட்டமே நடைபெற்றது.

நேரடியாக எங்களின் சவாலை ஏற்று நிரூபிக்க தயாரா? என்று நாங்கள் உங்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு உங்களின் சவாலை நான் ஏற்கனவே ஏற்று முடித்துவிட்டேன் என்று ஒரு அற்புத பதிலை சொல்லியுள்ளீர்கள். கனவில் கூட நீங்கள் வந்தது போல் தெரியவில்லை. அடுத்து இது சம்பந்தமாக பிஜேவுடன் விவாதிக்க தயார் என்கிறீர்கள். உண்மையில் நீங்கள் சொல்லுவதை பார்த்தால் உங்களுக்கு மனநோய் இருப்பது மட்டும் தெரிகிறது.

பிஜேவிற்கும் இந்த தீர்மானத்திற்கும் என்ன சம்பந்தம்? பிஜே தீர்மானம் போடவில்லை. தீர்மானம் போடப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு கூட அவர் வரவில்லை. இஸ்லாத்திற்கு எதிராக இருக்கும் அனைத்து சக்திகளையும் தனது விவாத சவாலின் மூலம் வெருண்டு ஒட செய்யும் பிஜே அவர்களை அவருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாத விஷயத்தில் விவாதம் செய்ய அழைப்பது, முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல் இல்லையா?

நீங்கள் தயார் என்றால் சொல்லுங்கள். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக நீங்கள் வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தவறுகளையும் நேரடியாக உங்களின் வயதில் பாதி உள்ள ஒருவருடன் விவாதிக்க தயாரா? தயார் என்றால் சொல்லுங்கள்.

நீங்களும் தவ்ஹீத் கொள்கைக்கு வர வேண்டும் என்பது தான் எங்களின் ஆசை. நீங்கள் சில தளங்களில் தவ்ஹீத் ஜமாஅத் சம்பந்தமாக பல குற்றச்சாட்டுகளை சொன்னீர்கள். அதை ஒவ்வோன்றாக உங்களுடன் அழகிய முறையில் நமது தளத்தில் விவாதிக்கலாம். இது உங்களுக்கு ஒர் அறிய வாய்ப்பு. தவ்ஹீத் ஜமாஅத்தின் தவறுகளை தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளத்திலேயே அமபலப்படுத்தலாம். தயார் என்றால் சொல்லுங்கள். தனித்தனி ஆக்கமாக உங்களின் கேள்வியை வெளியிட்டு விவாதிக்க நாங்கள் தயார். பல நபர்கள் வந்து திசை திருப்பாமல் இருக்க, தவ்ஹீத் ஜமாஅத்தின் விளக்கத்தை தவிர்த்து வேறு யாரும் விளக்கம் தராத வகையில் இதை நாம் செய்யலாம். உங்களின் வாதம் அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் தரும் பதில், வேறு யாரும் குறுக்கிட முடியாதவாறு பார்த்து கொள்வது எங்களின் பொறுப்பு. தயார் என்றால் சொல்லுங்கள்.


தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்ட தீர்மானம் சம்பந்தமாக உங்களின் விளக்கத்தை தந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளீர்கள். யார் சொல்லுவது சரி, யார் செய்தது தவறு என்பதை வாசகர்கள் முடிவு செய்யட்டும். தீர்மானம் சம்பந்தமாக நேரடியாக வந்து நிரூபிக்க நாங்கள் விட்ட சவால் சவாலாகவே நிற்கிறது.

தவ்ஹீத் ஜமாஅத் சம்பந்தமாக நீங்கள் வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க நாங்கள் இந்த கருத்தில் விடும் சவாலுக்கு உங்களின் பதிலை எதிர்பார்த்து.

வஸ்ஸலாம்.

நூர் முகம்மது நீங்கள் எதை தவறு என்று சொல்லுகிறீர்களோ அதை ஆதாரத்துடன் நிருபிக்க உங்களால் முடியவில்லை என்பதை உங்களின் பதிலை படிப்பவர்களுக்கு தெரிந்துவிட்டது. இந்த பதிவுக்கு தொடர்பு இல்லாத பி ஜே யுடன் விவாதிக்க நான் தயார் என்கிறீர்களோ இதில் இருந்து ஒன்று தெளிவாகிறது உங்களின் குடும்ப சாமியார்கள் செய்து வந்த ஹத்தம், பாத்திஹா, தாயத்து, மௌலுது, கந்துரி, பால்கணக்கு, போன்றவை தவ்ஹீது பிரச்சாரத்தால் படுத்துவிட்டது அந்த ஆத்திரத்தை இதில் காட்டுகிறீர்கள்.

Adirai TNTJ
அஸ்ஸலாமு அலைக்கும்

பாகம் பாகமாக எழுதும் அதிரை ததஜ அன்பர்களே;

///TNTJ Adirai says: 27 மார்ச், 2013 2:15 PM சகோ. நூர் முஹம்மது அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

தங்களின் விளக்கத்திற்கு நன்றி. அரசாங்கத்தால் நடத்தப்படும் தேர்வுகள் வெள்ளிக்கிழமைகளில் வந்தால் அதை மாற்ற முடியாது என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை.

பொதுக்கூட்டம் நடைபெற்ற அன்றும் அதற்கு முன் இரண்டு மாதங்கள் வெள்ளிக்கிழமைகளில் பள்ளி நடத்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு டாக்டர் படிப்புக்கு கூட தேர்வுகள் நடைபெறாது என்ற உண்மை உங்களுக்கு விளங்கவில்லையா? பள்ளி நிர்வாகத்தில் சொல்லி இந்த இரண்டு மாதத்தில் தொடர்ந்து எட்டு வெள்ளிக்கிழமைகளில் தேர்வு இருந்தது என்று வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?///

என்ற உங்களின் இந்த கருத்தை உங்களால் நடத்தப்படும் http://www.adiraitntj.com/ என்ற தளத்தில் கருத்தாக பதிந்துள்ளீர்கள்.

என்னுடைய வேண்டுகோள் என்னவெனில்,

உங்களின் மேற்கண்ட கருத்தில் "தங்களின் விளக்கத்திற்கு நன்றி" என்று TNTJ Adirai கூறியிருப்பது, என்னுடைய எந்த விளக்கத்திற்கு நன்றி என்று சற்று விவராக விளக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

நூர் முஹம்மது
முன்னாள் மாணவன்
காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி & கல்லூரி

சகோ. நூர் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்களை நாங்கள் கூழூட்டை என்று சொன்னனோம், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது நீங்களே உங்களின் கடைசி கருத்தில் உங்களை கூமூட்டை என்று நிரூபித்துள்ளீர்கள். மேலும், உங்களை மனநோயாளி என்று தெளிவாக நிரூபித்துவிட்டீர்கள்.

உங்களின் அறிவுப்பூர்வமான (?) கருத்துக்களை படிக்கும் எவரும் நீங்கள் ஒரு கூமூட்டை என்றும் மனநோயாளி என்றும் தெளிவாக விளங்கி கொள்ளவார்கள்.

Adirai TNTJ
அஸ்ஸலாமு அலைக்கும்.

///சகோ. நூர் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்களை நாங்கள் கூழூட்டை என்று சொன்னனோம், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது நீங்களே உங்களின் கடைசி கருத்தில் உங்களை கூமூட்டை என்று நிரூபித்துள்ளீர்கள். மேலும், உங்களை மனநோயாளி என்று தெளிவாக நிரூபித்துவிட்டீர்கள்.

உங்களின் அறிவுப்பூர்வமான (?) கருத்துக்களை படிக்கும் எவரும் நீங்கள் ஒரு கூமூட்டை என்றும் மனநோயாளி என்றும் தெளிவாக விளங்கி கொள்ளவார்கள்.///

நன்றி அன்பர்களே.

===ததஜ பைலா வில் கல்வி பற்றி கருத்துரைப்பவன் கூழூட்டை.

===ததஜ பைலா வில் கல்வி பற்றி அலசி ஆய்வு செய்பவன் மனநோயாளி.

என தெளிவாக நிரூபித்த அதிரை ததஜ நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த நன்றியை கூறிக் கொள்கிறேன்.

என்ன சகோதரர் நூர் முஹமத் அவர்களே ,
இப்படி முடிப்பீர்கள் என்று நான் எதிர்பார்கவில்லை ,நீங்கள் ஒரு நல்ல முன்னாள் மாணவன் உண்மையை ஏற்று கொள்ளும் பக்குவமுடையார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் நீங்களோ சம்பந்தமே இல்லாததை பேசிவிட்டு இப்படி முடித்துவிட்டீர்கள்.

===ததஜ பைலா வில் கல்வி பற்றி கருத்துரைப்பவன் கூழூட்டை.

===ததஜ பைலா வில் கல்வி பற்றி அலசி ஆய்வு செய்பவன் மனநோயாளி.

அவர்கள் இவ்வாறு ஒரு இடத்திலும் குறிப்பிடவும் இல்லை.
மாறாக உங்களை போல் கல்வி பற்றி கருத்துரைப்பவன்,கல்வி பற்றி அலசி ஆய்வு செய்பவன் என்ற நோக்கில் கண்டதையும் எழுதுபர்வகளை வேண்டுமானால் அப்படி கூறி இருக்கலாம் .

மேலும் " நீங்கள் எதை தவறு என்று சொல்லுகிறீர்களோ அதை ஆதாரத்துடன் நிருபிக்க உங்களால் முடியவில்லை" இது அவர்களின் வாதம் .

நீங்கள் செய்த ஆராய்ச்சியில் இவர்கள் கேட்ட கேள்விக்கு நேரடி பதில் இருந்தால் அதை நீங்கள் போஸ்ட் செய்து இருக்கலாம் அதை விட்டு விட்டு ஆராய்ச்சி செய்கிறேன் என்ற பெயரில் கண்டதை இட்டு இருப்பதால் எனக்கும் நீங்கள் தவறாக செய்திகளை பரப்பிவிட்டீர்களோ என்ற ஐயம் எனக்குள் வந்து விட்டது.

இதற்கு காரணம் TNTJ எதிர்பதே உங்களை போல் சிலரின் போக்காக இருபது தான் என்று தோன்றுகிறது.




அதிரையன் அவர்களே,

நான் ஏற்கனவே அதிரை ததஜ நிர்வாகிகளுக்கு கல்வி பற்றி விரிவான விளக்கம் கூற, அதைப் படித்த அதிரை ததஜ நிர்வாகிகள்;

///TNTJ Adirai says: 27 மார்ச், 2013 2:15 PM சகோ. நூர் முஹம்மது அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

தங்களின் விளக்கத்திற்கு நன்றி. அரசாங்கத்தால் நடத்தப்படும் தேர்வுகள் வெள்ளிக்கிழமைகளில் வந்தால் அதை மாற்ற முடியாது என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை.

பொதுக்கூட்டம் நடைபெற்ற அன்றும் அதற்கு முன் இரண்டு மாதங்கள் வெள்ளிக்கிழமைகளில் பள்ளி நடத்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு டாக்டர் படிப்புக்கு கூட தேர்வுகள் நடைபெறாது என்ற உண்மை உங்களுக்கு விளங்கவில்லையா? பள்ளி நிர்வாகத்தில் சொல்லி இந்த இரண்டு மாதத்தில் தொடர்ந்து எட்டு வெள்ளிக்கிழமைகளில் தேர்வு இருந்தது என்று வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?///
என பதில் தந்தார்கள்.

இந்த பதிலுள்ள கேட்கப் பட்டுள்ள ஐயங்களுக்கு வரிக்கு வரி பதிலை பதிவு செய்து அவர்களின் ஐயங்களை முழுமையாக தெளிவு படுத்தி முடித்துக் கொண்டேன்.

இறுதியில் அதிரை ததஜ நிர்வாகிகள் என்ன முடிவு செய்தார்களோ தெரியவில்லை, நான் எழுதிய கல்வி விளக்கங்களை முதலில் ஏற்றுக் கொண்ட அதிரை ததஜ நிர்வாகிகள், பிறகு அதை கதை கதை எனக் கூறி மீண்டும் என்னை வம்பிற்கு அழைத்தார்கள் அதிரை ததஜ நிர்வாகிகள்.

அது கதையல்ல, கல்வியின் விவரம் என பட்டியல் போட்டு விளக்கினேன். ஆனால் அவைகளை அதிரை ததஜ நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளாமல், கல்விக்கு தொடர்பில்லாத குப்பைகளை கட்டுக்கட்டாய் எழுதினார்கள். பாவம் - அதிரை ததஜ நிர்வாகிகள் கல்வி என்ற கருத்திற்கு பதிலாக கட்டுக்கட்டாய் எழுதியதை இத்தளத்தில் படிப்பவர்கள் ரசனையுடன் படித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இறுதியில் அதிரையன் என்ற நீங்கள் உதித்து, நான் கண்டதையும் எழுதியதாக உங்களுக்கே உரிய பாணியில் உரைக்கின்றீர்கள்.

அதிரை ததஜ நிர்வாகிகள் கல்வியை கதை என்கின்றார்கள், அதிரையன் என்கிறன நீங்கள் கண்டதையும் என்கின்றீர்கள்.

நான் கல்வி பற்றி விளக்கியதில் கதையையோ அல்லது கண்டதையோ ஏதேனும் சிலவற்றை குறிப்பிட்டு அதிரை ததஜ நிர்வாகிகளாலோ அல்லது உங்களாலோ கூற முடியுமா?

//இப்படி முடிப்பீர்கள் என்று நான் எதிர்பார்கவில்லை//
என்று எதை வைத்து எழுதுகிறீர். நான் இன்னும் முடிக்கவில்லை.

அதிரையன் அவர்களே, என்னை நான் பகிரங்கமாக அறிமுகப் படுத்திக் கொண்டு என் கருத்தை பதிவு செய்கிறேன். நீங்களும் உங்களை அறிமுகப் படுத்துங்கள். உங்களின் கருத்தை காணும் போது, நீங்களும் அதிரை ததஜ நிர்வாகிகளில் ஒருவராக இருக்கலாம் என எண்ணுகிறேன்.

திரை மறைவில் நிற்கும் அதிரையன் எனும் நபர்;

**ஆண் இனமாக இருந்தால் அறிமுகப் படுத்துங்கள்.

** பெண் இனமாக இருந்தால் அறிமுகப் படுத்த வேண்டாம்.

** ஆண் இனத்திற்கும் பெண் இனத்திற்கும் இடைப்பட்ட இனமாக இருந்தாலும் அறிமுகப் படுத்த வேண்டாம்.

நீங்கள் இந்த தளத்தில் உங்களை அறிமுகப் படுத்துவது அல்லது அறிமுகப் படுத்தாதது வைத்துதான் அதிரையன் எந்த இனம் என்று இத்தளத்தை படிப்போர் பார்ப்போர் அறிவர்.

நூர் முஹம்மது
முன்னாள் மாணவன்
காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி & கல்லூரி (1969 - 1979)

This comment has been removed by a blog administrator.

அதிரை ததஜ நிர்வாகிகளின் மேலான கவனித்திற்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

இத்தளத்தில் சகோ. Mohamed Ashraf அவர்கள்;

///நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கும் பொதுக்கூட்டம் நடந்த நாள் வரை தேர்வு இல்லாதவர்களுக்கும் வெள்ளிக்கிழமை பள்ளி நடந்து பொதுக்கூட்டத்திற்கு பிறகு தேர்வுகள் இல்லாத வகுப்புகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது நாங்கள் நிருபிக்க தயார். இது தவறு என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் பள்ளியில் உள்ள சம்மந்தப்பட்டவர்களை வைத்து உங்களால் நீருபிக்கமுடியுமா?///

என்ற ஏவல் வினாவை எழுப்பிக் கொண்டே இருக்கிறார். நானும் அதனை ignore செய்து கொண்டே வந்தேன்.

மேற்கண்ட வினா சகோ. Mohamed Ashraf அவர்களின் அறிவினாவா?!அல்லது அறியாவினாவா?! என்பதை அவரே தீர்மானித்துக் கொள்ளட்டும்.

இங்கே என்னுடைய கேள்வி என்ன வெனில், மேற்கண்ட சகோ. Mohamed Ashraf அவர்களின் கேள்வியை அதிரை ததஜ நிர்வாகிகள் வழி மொழிகின்றீர்களா?

அதிரை ததஜ நிர்வாகிகள் மேற்கண்ட சகோ. Mohamed Ashraf அவர்களின் கேள்வியை வழி மொழிந்தால், இன்ஷா அல்லாஹ் நான் கண்டிப்பாக பதில் தருகிறேன்.

நூர் முஹம்மது
முன்னாள் மாணவன்
காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி & கல்லூரி (1969 - 1979)

Dear Bro Noor Mohamed,

First of All i like your commitments..i like the way you have said you haven't finished yet..good to know.

well lets come to the point,

" இறுதியில் அதிரையன் என்ற நீங்கள் உதித்து, நான் கண்டதையும் எழுதியதாக உங்களுக்கே உரிய பாணியில் உரைக்கின்றீர்கள்."

look at the first comment it was me who ask you to post a reply to them,

Secondly, what i was saying about your comment was, that i learnt you were the one who send emails abt that issue that the resolution made by TNTJ was not correct on the basis of school day off change and they were asking to prove it.

your answer could have been simple yes if you can prove it or no if you were wrong. But instead of this , you have start writing your analysis and statics which is unnecessary here. That's why i said " நீங்கள் செய்த ஆராய்ச்சியில் இவர்கள் கேட்ட கேள்விக்கு நேரடி பதில் இருந்தால் அதை நீங்கள் போஸ்ட் செய்து இருக்கலாம் அதை விட்டு விட்டு ஆராய்ச்சி செய்கிறேன் என்ற பெயரில் கண்டதை இட்டு இருப்பதால் எனக்கும் நீங்கள் தவறாக செய்திகளை பரப்பிவிட்டீர்களோ என்ற ஐயம் எனக்குள் வந்து விட்டது."

Thirdly,you have raised a question about my identity,My friend you don't have to worry about that. it's the moderators of this web page to be worried not you.(ok for your sake i'm Abdullah means Allahvin Adimai)

Fourth,

"திரை மறைவில் நிற்கும் அதிரையன் எனும் நபர்;

**ஆண் இனமாக இருந்தால் அறிமுகப் படுத்துங்கள்.

** பெண் இனமாக இருந்தால் அறிமுகப் படுத்த வேண்டாம்.

** ஆண் இனத்திற்கும் பெண் இனத்திற்கும் இடைப்பட்ட இனமாக இருந்தாலும் அறிமுகப் படுத்த வேண்டாம்."

Well if YOU are expecting a female to CHALLENGE you then you can call me female,i hope you not

But If YOU are expecting a MALE to CHALLENGE you then you got the right MAN, i hope this will clears your doubt if you were a GENUINE OLD STUDENT.

Finally i don't know why you keep proving yourself a goose by posting such a unnecessary comments and writing a thesis where there is no needs of,

call it simple,

Was there a school held on those Fridays or not? and their(TNTJ) resolution based according to that or not? if you have the answer post here

and do admit if you made a mistake,

Regards,
ADIRAIAN




சகோ. நூர் அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்.

தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பொய்யானது என்று சொல்லித்திரிந்த உங்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் நிறைவேற்றிய தீர்மானம் சரியானது, இதை தவ்ஹீத் ஜமாஅத் நிரூபிக்க தயாராக உள்ளது என்று இந்த ஆக்கத்தில் நாம் பதிவு செய்தோம். இந்த சவாலை நீங்களே அல்லது உங்கள் சார்பாக வேறு எவரும் ஏற்கலாம் என்று அறிவிப்பு செய்துயிருந்தோம்.

உங்களிடம் உண்மையிருந்தால் அது பகிரங்கமாக சொல்லப்பட வேண்டும் என்பதற்காக இந்த ஆக்கத்தில் உங்களின் கருத்துகள் எந்த தங்கு தடையுமின்றி வெளியிடப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத்தின் தீர்மானம் சரி என்பதை நேரடியாக நிரூபிக்க தயார் என்று நாங்கள் விட்ட சவாலை நீங்கள் ஏற்கவில்லை.

சவாலுக்கு தயார் அல்லது வர முடியாது என்று எதாவது ஒரு பதில் உங்களிடம் இருந்து வரும் வரை உங்களின் மற்ற கருத்துகள் நிறுத்தி வைக்கப்படும்.

Bro Noor mohamed said he hasn't finished yet so hopefully he will accept the challenge and come up with sensible comments...

எங்கே சகோதரர் நூரு முகம்மதை காணவில்லை?

சவாலையும் ஏற்கவில்லை ?

ஒரு வேலை அவர் பெண் இனமாக இருக்குமோ? அல்லதுஆண் இனத்திற்கும் பெண் இனத்திற்கும் இடைப்பட்ட இனமாக இருக்குமோ ?

இல்லை அவர் ஆன் இனம்தான் என்றால் தான் பரப்பிவிட்ட செய்தி பொய்தான் என்று ஒப்புகொண்டாரா ?

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.