அமெரிக்காவில் பாதிரியாரிடத்தில் தொடரும் அழைப்பு பணி !
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவப் பிரச்சாரம் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் அல்லாஹ்வின் அருளால் செவ்வனே சென்றடைந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே!
கடந்த ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க்கில் கிளை துவங்கப்பட்டு அமெரிக்க பொறுப்பாளர் தஸ்தகீர் அவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோதரர் பீஜே அவர்கள் அமெரிக்க சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் மகாணத்தைத் தொடர்ந்து மினி சோட்டா மகாணத்திலும் உள்ள தமிழ் பேசும் ஏகத்துவ சகோதரர்களை ஒன்றிணைக்கும் பணி நடந்து வருகின்றது. கூடிய விரைவில் அந்த மகாணத்தில் ஏகத்துவ சகோதரர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்த சந்தேகங்களை எழுப்பும், “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சியை நடத்துவதற்குண்டான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஜூன் 21ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் மகாணத்திலுள்ள ஒரு கிறித்தவ பாதிரியாருக்கு சகோதரர் பீஜே அவர்களின், “இயேசு இறைமகனா?” என்ற நூலின் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலப் பிரதி, ஆன்லைன் பீஜே இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
அமெரிக்காவிலுள்ள லாஸ் வேகாஸ் என்ற அந்தப் பகுதியானது அளவுக்கதிகமான சூதாட்டம் மற்றும் கேளிக்கைகள் நிறைந்த பகுதி என்றும், சூதாட்ட நகரமாகத் திகழக்கூடிய இந்தப் பகுதியில் அழைப்புப்பணி செய்வது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்று அமெரிக்க தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர் தஸ்தகீர் அவர்கள் நம்மிடம் தெரிவித்தார்.
டேவ் போர்டு என்ற அந்த பாதிரியார் அமெரிக்காவிலுள்ள மோர்னமென் கிறித்தவ பிரிவைச் சார்ந்தவர். மதப் பிரச்சாரம் செய்வதற்காக ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பிரச்சாரம் செய்து திரும்பியவர்தான் இந்த பாதிரியார் டேவ் போர்டு. அவரிடத்தில் பீஜே அவர்களின் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கொடுத்து ஏகத்துவ அழைப்புப்பணி செய்யப்பட்டது. இந்த செய்தியை ஏற்கனவே நாம் உணர்வு இதழில் வெளியிட்டிருந்தோம்.
அந்தப் பாதிரியார் தான் “இயேசு இறைமகனா?” என்ற நூலை படித்ததாக நமது அமெரிக்க பொறுப்பாளர் தஸ்தகீர் அவர்களிடம் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 13 அன்று லாஸ்வேகாஸ் நகருக்கு திரும்பச் சென்ற சகோதரர் தஸ்தகீர் அவர்கள் அந்த பாதிரியாரை மீண்டும் சந்தித்து, பீஜே அவர்கள் எழுதிய மாமனிதர் என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வழங்கியுள்ளார்.
அடுத்த தடவை தான் சகோதரர் பீஜே அவர்களுக்கு ஒரு புத்தகம் தருவதாகவும் அதைக் கண்டிப்பாக அவரிடம் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
மேலும், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சில தமிழ், இந்து நண்பர்களை சந்தித்து மாமனிதர், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்ற புத்தகங்களை வழங்கி அழைப்புப்பணி செய்துள்ளார்.
மேலும் அவர்களிடத்தில் பிறமத நண்பர்களுக்காக மிக விரைவில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆன்லைன் இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி பற்றி தெரிவிக்க, அதை தாங்கள் கட்டாயம் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக அமெரிக்காவில் தமிழ்கூறும் மக்களிடத்தில் ஏகத்துவ எழுச்சி துளிர்விட ஆரம்பித்துள்ளது. அமெரிக்க மக்களிடம் சத்தியப் பிரச்சாரம் செவ்வனே சென்றடைய வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.