மேலத்தெருவில் நடைபெற்ற விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்!
நிரந்தர நரகத்தை பெற்று தரும் தற்கொலை என்ற கொடிய பாவத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கடந்த 28.03.2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளி அருகில் தற்கொலை சம்பவங்களுக்கு எதிராக விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிரை கிளை செயலாளர் சகோ.அதிரை Y.அன்வர் அலி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோ. அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் "அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்களும், அதை ஒழிப்பதற்கான வழி முறைகளும்" என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் தற்கொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனைகள் என்றும் அவர்களுக்காக பிராத்தனை செய்யலாமா..? என்றும் தெளிவாக விளக்கப்பட்டது. மேலும் தற்கொலை செய்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தாதீர் இது நபி காட்டித்தந்த வழி அல்ல என்று நமதூர் ஆலிம்களுக்கும் மற்றும் ஜமாஅத்தார்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். வரம்பு மீறியும், அநீதி இழைத்தும் இதைச் செய்பவரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே உள்ளது.
[அல்குர்ஆன் 4:29, 30]
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.