Sunday, March 31, 2013

மரண அறிவிப்பு


அதிரை மேலத்தெருவைச்சார்ந்த  நாகூர் பிச்சை [காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் அலுவலர்]  அவர்களின் மகன் கொள்கை சகோதரர் மொய்தீன் M S I T அவர்கள் 22.3.2013 அன்று துபாய் சென்றவர் இன்று [31-03-2013] மாலை 5.30 மணிக்கு துபாயில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மாமனிதர் நபிகள் நாயகம் - செழிப்பான நிலையிலும் தேர்ந்தெடுத்துக் கொண்ட வறுமை (தொடர் 6)


மாமனிதர் நபிகள் நாயகம் - செழிப்பான் நிலையிலும் தேர்ந்தெடுத்துக் கொண்ட வறுமை (தொடர் 6)
இந்த ஆக்கங்கள் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற நூலிலிருந்து வெளியிடப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஆட்சியில் தரித்திரமும், பஞ்சமும் தலைவிரித்தாடியிருக்கலாம். அதன் காரணமாக எதையும் அனுபவிக்க முடியாமல் போயிருக்கலாம்' என்றெல்லாம் யாரேனும் நினைக்கக் கூடும்.



அவ்வாறு நினைத்தால் அது தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்த முதலிரண்டு வருடங்களில் கடுமையான வறுமை தலை விரித்தாடியது உண்மை தான். ஆனால் அவர்கள் கொண்டு வந்த ஸகாத்' என்னும் புரட்சிகரமான பொருளாதாரத் திட்டத்தின் மூலம் செழிப்பும், பொருளாதாரத் தன்னிறைவும் ஏற்பட்டன.



அவர்களது ஆட்சியில் ஏற்பட்டது போன்ற தன்னிறைவை அவர்களுக்குப் பின் இன்று வரை எந்த நாட்டிலும் எந்த ஆட்சியும் அடைய முடியவில்லை. ஆம் அந்த அளவுக்கு அவர்களது ஆட்சியில் செல்வம் கொழித்தது. அந்த நிலையில் தான் இவ்வளவு எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டார்கள்! அவர்களது செழிப்பான ஆட்சிக்குச் சில சான்றுகளைப் பாருங்கள்!



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வதற்காக (ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக) அவர்களிடம் கொண்டு வரப்படும். 'இவர் யாருக்கேனும் கடன் தர வேண்டியுள்ளதா?' என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஆம் எனக் கூறப்பட்டால் 'கடனை நிறைவேற்றிட எதையாவது விட்டுச் சென்றிருக்கிறாரா?' எனக் கேட்பார்கள். ஆம் என்றால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். இல்லை எனக் கூறப்பட்டால் 'உங்கள் தோழருக்காக நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்' என்று கூறி விடுவார்கள். அவரது கடனுக்கு யாரேனும் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களுக்குப் பல வெற்றிகளை வழங்கிய போது 'இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்த வரை அவர்கள் விஷயத்தில் அவர்களை விட நானே அதிகம் பொறுப்பாளியாவேன். எனவே, யாரேனும் கடன் வாங்கிய நிலையில் மரணித்தால் அந்தக் கடனை அடைப்பது என் பொறுப்பு. யாரேனும் சொத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசைச் சேரும்' என்று கூறலானார்கள்.



நூல் : புகாரி 2297, 2398, 2399, 4781, 5371, 6731, 6745, 6763



குடிமக்கள் வாங்காத கடனை குடிமக்கள் தலையில் கட்டுகிற அரசுகளை நாம் பார்த்துள்ளோம். ஊதாரித்தனமாகச் செலவு செய்வதற்காக பணக்கார நாடுகளிடம் கடன் வாங்கி மக்களின் வரிப்பணத்தில் வட்டி கட்டும் ஆட்சிகளையும் நாம் பார்க்கிறோம். மக்கள் வாங்கிய கடனுக்காக மக்களிடம் வட்டி வசூக்கும் ஆட்சியையும், வட்டிக் கட்டத் தவறினால் ஜப்தி செய்யும் தண்டல்கார அரசுகளையும் நாம் பார்க்கிறோம்.



ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு கடன் பட்டிருந்தாலும், என்ன காரணத்துக்காகக் கடன் பட்டிருந்தாலும் அந்தக் கடன்கள் அனைத்தையும் ஆட்சித் தலைவர் என்ற முறையில் நபிகள் நாயகம் (ஸல்) அடைத்தார்கள். இவ்வாறு அடைப்பது என்றால் அளவுக்கு அதிகமாக செல்வம் குவிந்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இன்றைக்கு மிகப் பெரிய பணக்கார நாடுகளாகக் கருதப்படும் நாடுகள் தங்கள் குடிமக்களின் கடன்களை அடைக்க முன் வந்தால் பிச்சைக்கார நாடுகளாகி விடும்.



குடிமக்கள் ஒவ்வொருவரின் கடனையும் அரசே அடைத்த அற்புத ஆட்சியை, செழிப்பு மிக்க ஆட்சியைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) நடத்தினார்கள்.



நபிகள் நாயகத்தின் ஆட்சி எந்த அளவு செழிப்பானதாக இருந்தது என்றால் யாரேனும் இல்லை என்று கேட்டு வந்தால் மிகவும் தாராளமாக வாரி வழங்கும் அளவுக்கு செல்வச் செழிப்பு இருந்தது.



இதற்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சியை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுவோம்.



நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசலின் மையப் பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர்களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பிடரி சிவந்து விட்டது. 'முஹம்மதே எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களைத் தருவீராக! உமது செல்வத்திருந்தோ, உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ நீர் தரப்போவதில்லை' என்று அந்த மனிதர் கூறினார். 'இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களைத் தர மாட்டேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'நான் விட மாட்டேன்' என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறை நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது மூன்று முறையும் அவர் விட மாட்டேன்' என்றார். அந்தக் கிராமவாசியின் கூற்றை நாங்கள் செவியுற்ற போது அவரை நோக்கி விரைந்தோம். 'நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக் கூடாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். பின்னர் கூட்டத்திருந்த ஒருவரை நோக்கி 'இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீராக' என்றார்கள். பின்னர் மக்களை நோக்கி 'நீங்கள் புறப்படுங்கள்!' என்றார்கள்.



இதை அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்.



நூல் : நஸயீ 4694, அபூ தாவூத் 4145



இரண்டு ஒட்டகங்களை வைத்திருப்பவர் வசதியானவராக அன்று கருதப்பட்டார். இத்தகைய வசதியுடையவரும், யாரென்று தெரியாதவருமான ஒருவர் நாகரீகமற்ற முறையில் கேட்கும் போது ஒரு ஒட்டகம் சுமக்கும் அளவுக்கு பேரீச்சம் பழத்தையும், இன்னொரு ஒட்டகம் சுமக்கும் அளவுக்கு கோதுமையையும் ஏற்றி நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பினார்கள் என்பது அவர்களின் ஆட்சியில் காணப்பட்ட செழிப்புக்குச் சான்றாகும்.



கேட்டவருக்கெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து வாரி வாரி வழங்கியதற்கு இன்னும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அவற்றை இங்கே குறிப்பிட்டால் அதுவே தனி நூலாகி விடும். சிந்திக்கின்ற மக்களுக்கு இதுவே போதுமானதாகும்.


அரசுக் கருவூலத்தில் கணக்கின்றி செல்வம் குவிந்துள்ள நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்தது ஏன்? 

ஏன் இந்த எளிய வாழ்க்கை?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டதற்கு அவர்கள் வகுத்துக் கொண்ட கொள்கையே காரணமாக இருந்தது.



மாமன்னர் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் வசதியில்லாத குடிமகன் என்ற முறையில் தமது அவசியத் தேவைக்காக அரசுப் பணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களது நேர்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் காட்டிய ஆன்மீக நெறிக்கும் அது முரணாக இருக்காது.



அரசுப் பணத்தில் ஊதியமாகவோ, கடனாகவோ, பரிசாகவோ, தர்மமாகவோ எந்த ஒன்றையும் பெறுவதில்லை என்பதை அவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்படுத்திக் கொண்டார்கள். தாம் மட்டுமின்றி தமது மனைவி மக்களும் கூட அவ்வாறு பெறக் கூடாது என்று கொள்கை வகுத்தார்கள். இந்தக் கொள்கையை ஊரறியப் பிரகடனம் செய்தார்கள். இந்தக் கொள்கையில் கடைசி மூச்சு வரை உறுதியாக நின்றார்கள். இது தான் அவர்களின் எளிமையான வாழ்க்கைக்குக் காரணமாக இருந்தது.



இந்தக் கொள்கையில் அவர்கள் எந்த அளவு பிடிப்புடனும், உறுதியுடனும் இருந்தார்கள் என்பதற்குப் பின்வரும் நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.



நபிகள் நாயகத்தின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரன் ஒருவர் அவற்றிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து துப்பு துப்பு' என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. 'நாம் ஸகாத் (பொது நிதி) பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உமக்குத் தெரியாதா?' என்று பேரனிடம் கேட்டார்கள்.



நூல் : புகாரி 1485, 1491, 3072



'தமது பேரனின் வாயிலிருந்து பேரீச்சம் பழத்தை வெளியேற்றி விட்டு 'முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தைச் சாப்பிடக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?' எனக் கூறினார்கள் என்று கூறப்படுகிறது



நூல் : புகாரி 1485



'பொது நிதியிலிருந்து ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட எடுக்கக் கூடாது; சின்னஞ்சிறு பாலகராக இருந்தாலும் கூட தமது குடும்பத்தார் அதைச் சாப்பிடலாகாது' என்ற அளவுக்கு கொள்கையில் உறுதியாக இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.
மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை நடத்தி விட்டு வேகமாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் பள்ளிவாசலுக்குத் திரும்பி வந்து விட்டார்கள். ஒரு நாளும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேகமாகப் புறப்பட்டுச் சென்றதையும், உடனேயே திரும்பி வந்ததையும் நபித் தோழர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். 'நான் ஏன் அவசரமாகச் சென்றேன் தெரியுமா? அரசுக் கருவூலத்துக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டி என் வீட்டில் இருந்தது. அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்' என்றார்கள்.



நூல் : புகாரி 851, 1221, 1430



மரணம் எந்த நேரத்திலும் ஏற்பட்டு விடலாம். ஏழைகளுக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டியை வீட்டில் வைத்து விட்டு மரணித்து விட்டால் குடும்பத்தினர் அதைத் தமக்குரியதாகக் கருதி விடக் கூடும். அவ்வாறு கருதி விடக் கூடாது என்று அஞ்சியே அவசரமாகப் புறப்பட்டுச் சென்று 'அது பொது நிதிக்குச் சொந்தமானது' என்று கூறி விட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.
'எனது படுக்கையில் ஒரு பேரீச்சம் பழம் விழுந்து கிடப்பதைக் கண்டிருக்கிறேன். அது ஸகாத் நிதியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் இல்லாவிட்டால் அதைச் சாப்பிட்டிருப்பேன்' எனவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.



நூல் : புகாரி 2055, 2431, 2433



நபிகள் நாயகத்தின் வீடு பள்ளிவாசலுடன் ஒட்டி அமைந்திருந்தது. பள்ளி வாசலில் குவிக்கப்படும் ஸகாத் நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்களில் ஒன்றிரண்டு நபிகள் நாயகத்தின் வீட்டுக்குள் வந்து விழுந்திட வாய்ப்பு இருப்பதால் அதைக் கூட சாப்பிட மாட்டேன் என்று அறிவிக்கிறார்கள். பொது நிதியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் கூட அதைத் தவிர்க்கும் அளவுக்கு பேணுதலாக இருந்துள்ளனர்.



இதை விடவும் உயர்வான மற்றொரு பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள்.



'நான் ஆட்சியில் இருக்கும் போது மட்டுமல்ல. என் மரணத்திற்குப் பிறகு எந்த ஆட்சி வந்தாலும் அரசுக் கருவூலத்தின் ஸகாத் நிதியாதாரம் என் வழித் தோன்றல்களுக்குத் தடை செய்யப்படுகிறது. இந்தத் தடை உலகம் உள்ளளவும் நீடிக்கும்' என்பதே அந்தப் பிரகடனம்.



இன்றும் கூட நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களாக இருப்பவர்கள் எந்த அரசிலும் ஸகாத் நிதியைப் பெறுவதில்லை. முஸ்லிம் நாடுகளில் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதும் இல்லை. இஸ்லாமியச் சட்டப்படி நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் ஸகாத் பெறுவதும், அவர்களுக்கு ஆட்சியாளர்கள் வழங்குவதும் குற்றமாகும்.



தமது வழித் தோன்றல்களாக இருப்பதால் மற்றவர்களுக்குக் கிடைக்கும் சலுகையும் கிடையாது என்று அறிவித்ததற்கு நிகரான தூய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் உலக வரலாற்றில் ஒருவரும் இல்லை.



தாமும், தமது குடும்பத்தினரும் ஸகாத் நிதியைத் தொடாதது மட்டுமின்றி தம்முடன் தொடர்புடையவர்கள் கூட அதிலிருந்து தூரமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கட்டளை பிறப்பித்திருந்தார்கள். இதைப் பின் வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.



மக்ஸூம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரை ஸகாத் நிதியைத் திரட்டுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்போது அபூ ராஃபிவு என்பாரும் அவருடன் செல்லலானார். அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஸகாத் எனும் பொது நிதி நமக்கு அனுமதிக்கப்பட்டதன்று. ஒரு சமுதாயத்தால் விடுதலை செய்யப்பட்டவர் அவர்களைச் சேர்ந்தவரே' என்று குறிப்பிட்டார்கள்.



நூல்கள் : நஸயீ 2565, அபூதாவூத் 1407



நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மனிதர்களில் சிலர் அடிமைகளாக இருந்தனர். அடிமைகளை வைத்திருப்பவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) பல நடவடிக்கைகளை எடுத்தார்கள்.



'அடிமைகளை விடுதலை செய்தால் விடுதலை செய்தவரே அந்த அடிமைக்கு வாரிசு' என்பதும் அத்திட்டங்களில் ஒன்றாகும். அதாவது அந்த அடிமை மரணித்து விட்டால் அவரது சொத்துக்கள் விடுதலை செய்தவரைச் சேரும்.



இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப் பட்டவர் தான் அபூ ராஃபிவு. இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு வாரிசாகும் நிலையில் இருந்தார்கள். அவரும் ஸகாத் நிதியில் எதையும் பெறக் கூடாது என்பதற்காக அவரை ஸகாத் வசூலிக்கச் செல்லக் கூடாது எனக் கட்டளை பிறப்பிக்கிறார்கள்.



அரசாங்கப் பணத்தைத் தமக்கோ, தம் குடும்பத்துக்கோ எடுத்துக் கொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி, உலகம் உள்ளளவும் ஒரு காலத்திலும் ஒரு அரசாங்கத்திலும் தமது வழித் தோன்றல்கள் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று பிரகடனம் செய்தது மட்டுமின்றி மற்றொரு புரட்சிகரமான பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள்.



எனது வாரிசுகள், தங்கக்காசுகளுக்கோ, வெள்ளிக்காசுகளுக்கோ வாரிசாக மாட்டார்கள். என் மனைவியரின் குடும்பச் செலவுக்குப் பின்பு, எனது பணியாளரின் ஊதியத்துக்குப் பின்பு நான் விட்டுச் சென்றவை பொது நிதியைச் சேரும். (எனது வாரிசுகளைச் சேராது என்று நபிகள் நாயகம் அறிவித்தார்கள்.)



நூல் : புகாரி 2776, 3096, 6729



நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா (ரலி)க்கு ஏற்பட்ட அனுபவம் அந்த மாமனிதரின் அப்பழுக்கற்ற தன்மையைப் பறை சாற்றும்.



நபிகள் நாயகம் (ஸல்) மரணித்த பின் அவர்களின் உற்ற தோழர் அபூபக்ர் (ரலி) ஆட்சிப் பொறுப்பேற்றார்கள். அவர்களிடம் நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா வந்தார். தமது தந்தை விட்டுச் சென்ற கைபர், பதக் ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு அபூபக்ரிடம் கேட்டார்.



'எனக்கு யாரும் வாரிசாக முடியாது. நான் விட்டுச் சென்ற யாவும் பொது உடமையாகும்' என்று உங்கள் தந்தை நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே, அதை உங்களிடம் தர இயலாது. நபிகள் நாயகத்தின் மகளாகிய நீங்கள் எனது எல்லா உறவினர்களை விடவும் விருப்பமானவராக இருக்கிறீர்கள். ஆயினும், நான் தர மறுப்பதற்குக் காரணம் நபிகள் நாயகத்தின் கட்டளை தான்' என்று கூறி மறுத்து விட்டார்.



நூல் : புகாரி 3093, 3094, 3712, 4034, 4036, 4241, 5358, 6725, 6728



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளார் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தும் தமது அற்பமான சொத்துக்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொது உடமையாக்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அவர்களின் மனைவியர் தமக்குரிய வாரிசுரிமையை ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) இடம் கேட்டுப் பெறுவதற்காக உஸ்மான் (ரலி)யை அனுப்பத் திட்டமிட்டனர். அப்போது ஆயிஷா (ரலி) 'எனக்கு யாரும் வாரிசாக முடியாது; நான் விட்டுச் சென்றவை பொது நிதியில் சேர்க்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லையா?' என்று கேட்டு அம்முயற்சியைக் கைவிட வைத்தார்.



நூல் : புகாரி 6730 

வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரசுக் கருவூலத்திருந்து ஊதியமோ, பரிசோ, அன்பளிப்போ பெறவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்?



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைப் பொறுப்புக்களையும் நிர்வகிக்கவே நேரம் சரியாக இருந்தது.



'அரசாங்கத்தில் எந்த உதவியும் பெறக் கூடாது; அடுத்தவரிடத்திலும் யாசிக்கக் கூடாது' என்ற கொள்கையின் காரணமாக வியாபாரம், அல்லது தொழில் செய்தால் மேற்கண்ட இரண்டு பணிகளையும் செய்ய முடியாது.



தாம் ஏற்றுள்ள சமுதாயப் பணியையும் நிறைவேற்றிக் கொண்டு, கொள்கையையும் விட்டு விடாமல் தமது குடும்ப வருமானத்திற்கு ஒரு வழியைக் கண்டார்கள்.



மக்காவிலிருந்து கொண்டு வந்த பணத்தில் பள்ளிவாசலுக்கான இடத்தை வாங்கியது போக மீதமிருந்த பணத்திருந்து நூறு ஆடுகள் கொண்ட ஆட்டுப் பண்ணையை அமைத்துக் கொண்டார்கள். அதற்கு ஒரு மேய்ப்பவரையும் நியமித்துக் கொண்டார்கள். நூறு ஆடுகளில் ஒரு ஆடு குட்டி போட்டதும் பெரிய ஆடு ஒன்றைத் தமக்காக எடுத்துக் கொள்வார்கள். எந்த நேரத்திலும் நூறு ஆடுகள் குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டார்கள்.



இதைப் பின்வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.



நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர்களின் ஆடு மேய்ப்பவர் அப்போது தான் பிறந்த ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். கிடாய்க் குட்டியா? பெட்டையா?' என்றார்கள். அவர் கிடாய்' என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து விருந்து சமைக்கச் சொன்னார்கள். பிறகு என்னை நோக்கி 'நான் உனக்காகத் தான் இந்த ஆட்டை அறுத்தேன் என்று எண்ண வேண்டாம். நம்மிடம் நூறு ஆடுகள் உள்ளன. அவற்றில் ஒரு ஆடு குட்டியை ஈன்றால் உடனேயே அதற்குப் பதிலாக பெரிய ஆடு ஒன்றை நாம் அறுத்து உண்போம்' என்று கூறினார்கள்.



இதை லகீத் பின் ஸபுரா (ரலி) அறிவிக்கிறார்.



நூல் : அபூதாவூத் 123, அஹ்மத் 17172



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தம் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.



நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த எளிமையான வாழ்க்கையைப் பற்றி முன்னர் நாம் விளக்கியுள்ளோம். இத்தகைய எளிமையான வாழ்க்கையை வாழ்ந்திட இந்த வருமானம் போதுமானதாக இருந்தது.



அரபு நாட்டு ஆடுகள் அதிகமாகப் பால் சுரக்கக் கூடியவை. நூறு ஆடுகள் இருக்கும் போது பத்து ஆடுகளாவது பால் கொடுக்கக் கூடியவையாக இருக்கும். நூறு ஆடுகள் கொண்ட பண்ணையில் மாதம் இரண்டு ஆடுகள் குட்டி போட்டாலே போதுமான வருமானம் கிடைக்கும். இந்த வருமானத்தின் மூலம் தான் தமது தேவைகளையும், தமது மனைவியரின் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டார்கள். ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்தால் இந்த வருமானம் தேவைக்கும் அதிகமான வருமானமாகும். ஆனால் பல மனைவியர் இருந்த காரணத்தினால் அவர்கள் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுக்க வேண்டியிருந்ததால் தான் நாம் முன்னர் சுட்டிக் காட்டிய வறிய வாழ்க்கை வாழும் நிலை ஏற்பட்டது.



(நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் பல மனைவியரை மணக்க வேண்டும் என்று யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால் நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற நமது நூலைப் பார்க்கவும்.)



இவை தவிர இன்னொரு வகையிலும் அவர்களுக்கு வருமானம் வந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் பல்வேறு போர்களைச் சந்தித்தார்கள்.



போரில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித ஊதியமும் அன்றைய காலத்தில் வழங்கப்படுவதில்லை. போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றால் தோற்றவர்களின் உடமைகளை வெற்றி பெற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. போரில் பங்கு கொண்டவர்களுக்கு அதைப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். அது போல் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் தனி மனிதர்களுக்கு உரிமையாக இல்லாத பொதுச் சொத்துக்களும் வெற்றி பெற்றவர்களுக்குச் சொந்தமாகி விடும். அவற்றையும் வெற்றி பெற்ற நாட்டினர் போரில் பங்கெடுத்தவர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தனர்.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்ற வீரர்களைப் போலவே நேரடியாகப் போரில் பங்கெடுத்தார்கள். வாள் வீச்சிலும், குதிரை ஏற்றத்திலும் அவர்கள் தேர்ந்தவர்களாக இருந்ததால் மற்றவர்களை விடத் தீவிரமாகப் பங்கெடுத்தார்கள்.



போரில் பங்கு கொண்ட மற்ற வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பது போல் போர் வீரர் என்ற முறையில் தமக்கும் ஒரு பங்கை எடுத்துக் கொள்வார்கள். குதிரை வைத்திருப்பவர்களுக்கு சாதாரணப் போர் வீரரை விட இன்னொரு மடங்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த அடிப்படையில் குதிரை வீரர்களுக்குக் கிடைத்த பங்குகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தன.



கைபர், பதக் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்கள் நபிகள் நாயகத்துக்கு இவ்வாறு தான் கிடைத்தன. இதையும் மரணிக்கும் போது பொது உடமையாக்கி விட்டார்கள் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.



இந்தத் தோட்டங்களிலிருந்தும் அவர்களுக்கு வருமானம் வந்தது.



நண்பர்கள், மற்றும் அண்டை வீட்டார் அன்பளிப்புகளாக வழங்கினால் அதை ஏற்றுக் கொள்வார்கள். தாமும் அன்பளிப்புச் செய்வார்கள்.



இந்த வகைகளில் தவிர வேறு எந்த வருமானமும் அவர்களுக்கு இருந்ததில்லை. இதிலிருந்து தான் தமது குடும்பத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த அற்புதமான வாழ்க்கை அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாக அமைந்துள்ளது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) என்ற நூலை வாசிக்க:


இஸ்லாம் கூறும் குடும்பவியல் (வீடியோ)

இஸ்லாம் கூறும் குடும்பவியல் (வீடியோ)

இஸ்லாம் கூறும் குடும்பவியல் பற்றி அறிந்து கொள்வது மிக அவசியம். குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை களைய இஸ்லாம் ஒவ்வோரு குடும்ப அங்கத்தினருக்கும் சொல்லும் அறிவுரைகள். இவற்றை அறிய கீழ்காணும் உரைகளை காணுங்கள்.

இது கோவையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற 'குடும்பவியல் மாநாட்டின்' சொற்பொழிவுகள்.

அன்பு மனைவி
 

அருமை கணவன்
 

ஆதரிக்கும் பிள்ளைகள்

அருள்மிகு திருமணம்

குர்ஆன் ஒளியே குடும்ப வழி

Saturday, March 30, 2013

ஜித்தாஹ் ஆன்லைன் நிகழ்ச்சி 29.03.13(வீடியோ )

ஜித்தாஹ் ஆன்லைன நிகழ்ச்சி 29.03.13
இன்றைய இளைஞர்கள் 

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 29.03.13(வீடியோ )


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 29.03.13
உரை :சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி
இஸ்லாமிய பார்வையில் பயணம் -2




Friday, March 29, 2013

மேலத்தெருவில் நடைபெற்ற விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்!

மேலத்தெருவில் நடைபெற்ற விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்!

நிரந்தர நரகத்தை பெற்று தரும் தற்கொலை என்ற கொடிய பாவத்திற்கு எதிராக  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கடந்த 28.03.2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு  அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளி அருகில்    தற்கொலை சம்பவங்களுக்கு எதிராக விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அதிரை கிளை செயலாளர் சகோ.அதிரை Y.அன்வர் அலி அவர்கள்  இறையச்சம் என்ற தலைப்பிலும் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோ. அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் "அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்களும், அதை ஒழிப்பதற்கான வழி முறைகளும்" என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் தற்கொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனைகள் என்றும் அவர்களுக்காக பிராத்தனை  செய்யலாமா..? என்றும் தெளிவாக விளக்கப்பட்டது. மேலும் தற்கொலை செய்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தாதீர் இது நபி காட்டித்தந்த வழி  அல்ல என்று நமதூர் ஆலிம்களுக்கும் மற்றும் ஜமாஅத்தார்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். வரம்பு மீறியும், அநீதி இழைத்தும் இதைச் செய்பவரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே உள்ளது.

[அல்குர்ஆன் 4:29, 30]








Tuesday, March 26, 2013

விரும்பிக் கொடுக்கும் வரதட்சணை, எப்படி வரதட்சணையாகும் (வீடியோ)

விரும்பிக் கொடுக்கும் வரதட்சணை, எப்படி வரதட்சணையாகும் (வீடியோ)

அதிரையில் பெண்ணுக்கு கொடுக்கப்படும் வீட்டை, பெற்றோர்கள் விரும்பியா கொடுக்கிறார்கள்?


Sunday, March 24, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 22.03.13 (வீடியோ)


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 22.03.13
உரை :சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி 
இஸ்லாமிய பார்வையில் பயணம் 

Friday, March 22, 2013

மேலத்தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்


22.03.13 இன்று அசருக்கு பிறகு மேலத்தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரர் அஷ்ரஃப்தீன் அவர்கள் பங்கு பெற்று மண்ணறை வாழ்க்கை பற்றி உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் பங்கு பெற்று பயன் பெற்றார்கள். இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பல கேள்விகள் கேட்டு தெளிவு பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.





Wednesday, March 20, 2013

தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பொய்யா?

கடந்த 15.2.2013 வெள்ளிக்கிழமை அன்று தக்வா பள்ளி அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில்  கீழ்காணும் தீர்மானம் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

"7. கடந்த சில மாதமாக அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுமுறை நாளாக இருந்த வெள்ளிகிழமையை ஞாயிற்று கிழமையாக நிரந்தரமாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் காதிர் முகைதீன் பள்ளி நிர்வாகத்தை கண்டிப்பதோடு சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரியபடுத்திக்கொள்கிறோம். இது மீண்டும் தொடர்ந்தால் அதிரையில் பொதுமக்களை திரட்டி காதிர் முகைதீன் பள்ளி முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம்."

பொதுக்கூட்டம் நடந்த அன்றும் அதில் இருந்து இரண்டு மாதங்கள் முன்புவரை வெள்ளிக்கிழமைகளில் இந்த மேல்நிலைப்பள்ளிகள் வேலை நாளாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் செயல்பட்டு வந்ததை பெற்றோர்களும், வேன் ஆட்டோ ஓட்டுனர்களும் தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகிகளிடம் கூறியதன் அடிப்படையில், அது உண்மை தானா? என்று விசாரித்தபோது 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மாதிரி பரிட்சை நடப்பதாகவும், அதனால் வெள்ளிக்கிழமை தேர்வு இல்லாத மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி நடக்கிறது என்றும் (ஞாயிறு விடுமுறை) கூறினார்கள். பல வருடங்களாக இதுபோல்  அந்த பள்ளி நடத்தும் மாதிரி தேர்வு நடக்கும் போது வெள்ளிக்கிழமை விடுமுறையாகவும்  ஞாயிற்றுக்கிழமை வேலை நாட்களாகவும் நடந்துவந்துள்ளது.

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும்  தேர்வு நேரங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வகுப்பு பல வருடங்கள் நடந்துவருகிறது.

தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் வெள்ளிக்கிழமை தேர்வு இல்லாதவர்களுக்கு விடுமுறை விடுகிறார்கள்.

நாம் இந்த தீர்மானத்தில் சொல்லி இருப்பது கடந்த மாதங்களில் அப்படி நடந்தது இனிமேல் தொடர்ந்தால் போராட்டம் நடத்துவோம் என்பது தான்.

கடந்த காலங்களில் அப்படி நடந்ததால் போராட்டம் நடத்துவோம் என்று தீர்மானத்தில் சொல்லவில்லை .இனிமேல் நடந்தால் என்று தான் சொல்லி இருக்கிறோம் 

இந்த தீர்மானத்தை சிலர் விமர்சனம் செய்ய புகுந்து, உண்மையை மறைத்து பொய்யை பரப்ப ஆரம்பித்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன் இரண்டு மாதங்கள் வெள்ளிக்கிழமைகளில் எல்லா வகுப்பு மாணவ மாணவியர்களுக்கும் பள்ளி நடத்தப்பட்டது உண்மை. இதை தவ்ஹீத் ஜமாஅத் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்க தயாராக உள்ளது. ஒரு அறிவாளி பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று சொன்னார்கள். கேக்கிறவர் எதையும் நம்புவார் என்று தெரிந்தால் அப்படி தான் சொல்லி இருப்பார்கள். வெள்ளிக்கிழமைகளில் தேர்வு வருவதும், அந்த நாட்களில் தேர்வு உள்ளவர்களுக்கு மட்டும் பள்ளி நடப்பதும் பல வருடங்களாக நடந்து வருகிறது. தவ்ஹீத் ஜமாஅத் தீர விசாரித்து வெள்ளிக்கிழமைகளில் பள்ளி வைப்பதனால் ஏற்படும் சில சங்கடங்களை தவிர்க்க செய்த ஒரு காரியத்தில் வேண்டுமென்றே ஒருவர் பொய்யை பரப்பிக்கொண்டு இருக்கிறார் .

இந்த பொய்யை உண்மை என்று நம்பிய நூர் முஹம்மது என்ற அறிவாளி, தவ்ஹீத் ஜமாஅத் பொய் சொல்லி தீர்மானம் போட்டுவிட்டது என்று ஒவ்வொருவருக்கும் மெயில் அனுப்பி திரிகிறார். ஏதோ  இவரோடு பலர் சேர்ந்து நாம் பொய் சொல்லிவிட்டதாக எதிர்ப்பதை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்று போட்டு பரப்பி வருகிறார். என்ன நடந்தது என்பதை தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகளிடம் கூட விளக்கம் கேட்காத இந்த நூர் முஹம்மது என்ற பித்தலாட்ட பேர்வழி, தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமைக்கு கூறுகெட்டத்தனமாக இந்த செய்தியை அனுப்பியுள்ளார். இந்த நூர் முஹம்மது தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எதிராக பொய்யான அவதூறுகளை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக இருக்கும் ஒரு இணையதளத்தில் பரப்பி திரிந்தவர். இந்த விஷயம் சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாஅத் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறது என்றும் உளறி திரிகிறார் நூர் முஹம்மது என்ற அறிவாளி. அங்கே கேட்டேன் இங்கே கேட்டேன் பதில் வரவில்லை என்று சொல்லும் இவர், தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் அதிகாரப்பூர்வ இணையதளமான எமது இணையதளத்தில் இவர் இவரது கேள்வியை முன்வைத்து இருந்தால், நாம் சரியாகவும் தெளிவாகவும் பதில் தந்து இருப்போம். நமக்கு பதில் வந்தால் கேவலப்பட்டு போவோம் என்று கருதி, கேள்வியும் கேட்ட மாதரி இருக்கணும், பதிலும் வந்துவிடக்கூடாது என்று தனது கோர முகத்தை காட்டியுள்ளார்.

தவ்ஹீத் ஜமாஅத்திடம் தவறு இருந்தால், யார் சூட்டிக்காட்டினாலும், அதை திருத்திக்கொள்ளும், மன்னிப்பு கேட்கவும் தயங்காது. எதிரிகள் சுட்டிக்காட்டினாலும் அதை ஏற்று, மன்னிப்பு கேட்க தயங்காது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியானது என்பதை தவ்ஹீத் ஜமாஅத் நிரூபிக்க தயாராக உள்ளது. சவூதியில் இருக்கும் நூர் முஹம்மது என்ற பித்தலாட்டப் பேர்வழி தயார் என்றால் இந்த ஆக்கத்திலேயே இந்த சவாலை ஏற்கலாம்.

தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகிகளின் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் படிக்கின்றன. பித்தலாட்ட பேர்வழி நூர் முஹம்மது என்ற ஈமெயில் சவடால் பேர்வழியை எமது சவாலை ஏற்க அழைக்கிறது தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை.

விடுதலை புலிகளை ஆதரிக்கும் முஸ்லிம்கள் சமுதாய துரோகிகளே (வீடியோ)!

விடுதலை புலிகளை ஆதரிக்கும் முஸ்லிம்கள் சமுதாய துரோகிகளே (வீடியோ)!

தமுமுக போன்ற முஸ்லிம் பெயர் தாங்கி அமைப்புகள் விடுதலை புலிகளை அரசியல் லாபத்திற்காக ஆதரித்து வருகின்றனர். விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்த கொலைகளையும் கொடூரங்களையும் பாருங்கள்...

சமுதாய துரோகிகளை அடையாளம் காணுங்கள்......

இலங்கை காத்தான்குடி படுகொலை



இரண்டு மணி நேர அவகாசம் கொடுத்து, சொந்த மண்மை விட்டு முஸ்லிம்களை துரத்திய புலிகள் என்ற கொடுர மிருகங்கள்


 [மேற்காணும் வீடியோக்களில் வரும் இசைக்கும் நமக்கும் சம்பந்தம இல்லை. வீடியோவை உருவாக்கியவர்களால் இசை சேர்க்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க]

விடுதலைப்புலிகளை தமிழகத்தில் தைரியமாக தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான் எதிர்க்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

புலிகளின் விசயத்தில் மௌனமாக இருப்பது ஏன்?


விடுதலை புலியை ஆதரிக்க மாட்டோம்


விடுதலை புலிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? - 1



விடுதலை புலிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? - 2


மேலத்தெருவில் நடைபெற்ற மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் !


மேலத்தெருவில் நடைபெற்ற மார்க்க விளக்க தெருமுனை கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கடந்த 19.03.2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு MMS வாடி அருகில் மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.



இதில் அதிரை கிளை செயலாளர் சகோ.அதிரை Y.அன்வர் அலி அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விடுதலை புலிகளை ஏன் ஆதரிக்க வில்லை? என்ற தலைப்பிலும் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோ.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் "பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்" என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் இதில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்






இதில் அதிரை கிளை செயலாளர் சகோ.அதிரை Y.அன்வர் அலி அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விடுதலை புலிகளை ஏன் ஆதரிக்க வில்லை? என்ற தலைப்பிலும் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோ.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் "பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்" என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் இதில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

Monday, March 18, 2013

அதிரையில் நடைபெற்ற நபிவழித் திருமணம்!


அதிரையில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

மார்க்கத்தை மக்களுக்கு எடுத்து இயம்ப வேண்டிய ஆலிம்சாக்கள், வரதட்சணை திருமணங்களில்  காசுக்காக சுன்னத்தான தாடியை சிறைக்கும் போது கூட ஃபாத்திஹா ஓதிய கொடுமை எல்லாம் தவ்ஹீத் எழுச்சியின்  விளைவாக ஒரளவுக்கு மறைந்துள்ளது. 

அங்கென்றும் இங்கொன்றுமாக நபி (ஸல்) அவர்கள்  காட்டி தந்த முறைப்படி சில திருமணங்கள் அதிரை நடைபெறுகின்றன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக பல நபிவழித் திருமணங்கள் அதிரையில் நடைபெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். 

இதன் தொடர்ச்சியாக கடந்த 16.03.2013 அன்று மேலத்தெருவில் சகோதரர் S. ஃபைசல் ரஹ்மான் அவர்களுடைய திருமணம் நபிவழி அடிப்படையில் நடைபெற்றது. மணமகன் ரூபாய் 10,000 மஹராக வழங்கினார். 

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் மௌலவி யாசர் அரஃபாத் இம்தாதி அவர்கள் 'நபிவழித் திருமணம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.


நபிவழி திருமணம் எது என்பதை அறிய கீழ்காணும் ஆக்கங்களை பார்வையிடவும்:


இஸ்லாமிய திருமணம் (வீடியோ)

இஸ்லாமிய திருமணம் (நூல்)

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!

பரக்கத் நிறைந்த திருமணம் (எளிமையான திருமணம்) - வீடியோ

உலகமே திரும்பி பார்க்கும் உன்னத மார்க்கம் (வீடியோ)


உலகமே திரும்பி பார்க்கும் உன்னத மார்க்கம் 

நோய் நிவாரணம் (வீடியோ)

நோய் நிவாரணம் 

ஓதி பார்க்கலாமா?

கேள்வி கணக்கு இல்லாமல் சொர்கம் புகும் 70000 பேர்  யார் ?

ஓதி பார்த்து எழுதி தாயத்தாக தொங்க விடலாமா ?

பாவ மன்னிப்பு தேடுவது எப்படி ?

70000 மலக்குகள் நமக்கு துவா செய்ய என்ன வேண்டும் ?

Sunday, March 17, 2013

அகங்காரமும் (ஈகோ) அதன் பின் விளைவுகளும் (வீடியோ)

அகங்காரமும் (ஈகோ) அதன் பின் விளைவுகளும்
உரை : சகோ பி .ஜெய்னுல் ஆபிதீன் 

திருப்பூர் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவி!


திருப்பூர் மஸ்ஜித் அக்ஸா பள்ளிவாசலுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளி 15.3.2013 அன்று ஜூம்ஆவில் வசூல் செய்யப்பட்ட  ரூபாய். 8000 கட்டிட நிதிக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.



ரூபாய் மூவாயிரம் மருத்துவ உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக 13.2.2013 அன்று M.S.M நகரை சேர்ந்த ஒரு சகோதரருக்கு ரூபாய் 3000 மருத்துவ உதவியாக கிளை  துணை செயலாளர் சுலைமான் அவர்களால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


Friday, March 15, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 15.03.13(வீடியோ )

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 15.03.13
உரை:சகோதரர் M.I.சுலைமான் 
தலைப்பு :அர்ஷின் நிழல் யாருக்கு ?



Thursday, March 14, 2013

மிரட்டல் விடுத்து மன்னிப்பு கேட்ட பதுங்கும் புலிகள்!


மிரட்டல் விடுத்து மன்னிப்பு கேட்ட பதுங்கும் புலிகள்

பிரபாகரன் செய்த அட்டூழியங்களையும், விடுதலைப்புலிகள் செய்த அடாவடித்தனங்களையும், இனப்படுகொலைகளையும் ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டி டிஎன்டிஜேவின் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் கரூர் குளித்தலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். மேலும் அவர் பேசிய பொதுக்கூட்ட உரைகள் ஃபேஸ் புக்கிலும் இடம்பெற்றிருந்தது. இதற்கு வாதப்பிரதிவாதங்கள் ரீதியாக பதிலளிக்கத் திராணியில்லாத விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான, “நாம் தமிழர்” கட்சியினர் நமது மாநில நிர்வாகிகள் எம்.ஐ.சுலைமான் மற்றும் சையது இப்ராஹீம் ஆகியோரிடத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளனர்.

பிரபாகரன் முஸ்லிம்களை கொலை செய்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? என்று முதல் கேள்வி எழுப்ப அனைத்திற்கும் தெள்ளத்தெளிவான ஆதாரங்கள் உள்ளன. அதை நீங்கள் மறுப்பீர்களேயானால் அதை நாங்கள் நிரூபிக்கத்தயார் என்று நமது நிர்வாகிகள் பதில் சொல்ல, அது உண்மையென்று வைத்துக் கொண்டால் ராஜபக்சேவை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா? என்று கேள்வியெழுப்பியுள்ளனர். ராஜபக்சே போர் குற்றங்கள் செய்திருப்பாரேயானால் அவரும் குற்றவாளிதான்; அதே நேரத்தில் முஸ்லிம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்காமல் கொலை செய்து படுபாதக செய்லபுரிந்த பிரபாகரனும் அவனுடைய ஆதரவாளர்களும் மரணதண்டனை கொடுக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று நமது நிர்வாகிகள் பதிலளித்துள்ளனர்.

அப்படியானால், மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்திய முஸ்லிம்களை நீங்கள் ஆதரிப்பீர்களா? அவர்களைக் கண்டிப்பீர்களா? என்று அவர்கள் கேள்வி கேட்க, தீவிரவாத செயல்களை யார் செய்தாலும் அதை நாங்கள் ஆதரிக்கமாட்டோம். முஸ்லிம் பெயர் தாங்கிகள் அதைச் செய்திருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை என்று நாம் பதில் கூற பதிலளிக்க முடியாமல் விழிபிதுங்கியுள்ளனர், "நாம் தமிழர்" கட்சியினர்.

இது குறித்து பகிரங்க விவாதம் நடத்த நீங்கள் தாயாரா? என்று விவாதத்திற்கு பகிரங்க அறைகூவல் விடுக்கப்பட்டது. அதற்கு பதில் இல்லை.

நமது கேள்விகளுக்கு பதிலளிக்க வக்கில்லை என்றவுடன், விடுதலைப்புலிகளை எதிர்த்து பேசுவதை நீங்கள் நிறுத்த முடியுமா? முடியாதா? என்று மிரட்டல் தொனியில் கேள்வி வர, “நீ இப்படியெல்லாம் மிரட்டினாயேயானால், இன்னும் அதிகமாக அவர்களைப்பற்றி பேசி அவர்களை தோலுரிப்போம் என்று நமது நிர்வாகிகள் தெரிவிக்க, அப்படியானால் நாளை கரூரில் நடக்கக்கூடாதது எல்லாம் நடக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுபோன்று ஒரு நாளைக்கு நூறுபேரை நாங்கள் சந்திக்கின்றோம். நீ என்னவேண்டுமானாலும் செய்துகொள். உன்னுடைய இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம்” என்று நமது நிர்வாகிகள் கூற தொலைபேசி இணைப்பைத் துண்டித்தனர். அதைத் தொடர்ந்து அந்த விடுதலைப்புலி ஆதரவாளர் நமது கரூர் மாவட்ட பொறுப்பாளர் இர்ஷாத் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார்.

நமது நிர்வாகிகள் உடனடியாக கரூர் டவுன் காவல்நிலையத்தில் அவரது தொலைபேசி எண்ணைக் கொடுத்து புகார் செய்யவே காவல்துறை உடனடியாக களமிறங்கியது. நமது நிர்வாகிகளிடம் அவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் ரெகார்டு செய்யப்பட்டிருந்ததால் அவர்கள் வசமாகச் சிக்கிக்கொண்டனர்.

போலீசார் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தவே அரண்டு போன விடுதலைப்புலி ஆதரவாளர்கள் ஆரம்பத்தில் நாங்கள் அவ்வாறு பேசவே இல்லை என்று மறுத்துள்ளனர். இவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் ரிகார்டு செய்யப்பட்டுள்ளது. அதை மாநிலத்தலைமையிடமிருந்து வாங்கி போட்டுக்காட்டட்டுமா? என்று நமது கரூர் மாவட்ட பொறுப்பாளர் ஹனீஃபா அவர்கள் கேள்வியெழுப்பியவுடன் நமது குட்டு வெளிப்பட்டுவிடும் என்று பயந்த விடுதலைப்புலிகளின் ஆதாரவாளர்கள் தாங்கள் பேசியது உண்மைதான் என்றும், அவ்வாறு நாங்கள் பேசியதற்காக நாங்கள் வருத்தம் தெரிவிக்கின்றோம் என்றும் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துள்ளனர்.

அவர்களிடத்தில் இது குறித்து நேரடியாக விவாதம் நடத்திக் கொள்ளலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதிலிருந்தே அவர்களிடத்தில் உண்மையில்லை என்பது தெளிவாகின்றது.

நாம் தமிழர் மாவட்டத் தலைவர் ராஜா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இஸ்லாமிய அழைப்புப்பணியும் செவ்வனே செய்யப்பட்டது

அமெரிக்காவில் பாதிரியாரிடத்தில் தொடரும் அழைப்புப்பணி!



அமெரிக்காவில் பாதிரியாரிடத்தில் தொடரும் அழைப்பு பணி !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவப் பிரச்சாரம் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் அல்லாஹ்வின் அருளால் செவ்வனே சென்றடைந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே!

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க்கில் கிளை துவங்கப்பட்டு அமெரிக்க பொறுப்பாளர் தஸ்தகீர் அவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோதரர் பீஜே அவர்கள் அமெரிக்க சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் மகாணத்தைத் தொடர்ந்து மினி சோட்டா மகாணத்திலும் உள்ள தமிழ் பேசும் ஏகத்துவ சகோதரர்களை ஒன்றிணைக்கும் பணி நடந்து வருகின்றது. கூடிய விரைவில் அந்த மகாணத்தில் ஏகத்துவ சகோதரர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்த சந்தேகங்களை எழுப்பும், “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சியை நடத்துவதற்குண்டான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஜூன் 21ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் மகாணத்திலுள்ள ஒரு கிறித்தவ பாதிரியாருக்கு சகோதரர் பீஜே அவர்களின், “இயேசு இறைமகனா?” என்ற நூலின் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலப் பிரதி, ஆன்லைன் பீஜே இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

அமெரிக்காவிலுள்ள லாஸ் வேகாஸ் என்ற அந்தப் பகுதியானது அளவுக்கதிகமான சூதாட்டம் மற்றும் கேளிக்கைகள் நிறைந்த பகுதி என்றும், சூதாட்ட நகரமாகத் திகழக்கூடிய இந்தப் பகுதியில் அழைப்புப்பணி செய்வது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்று அமெரிக்க தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர் தஸ்தகீர் அவர்கள் நம்மிடம் தெரிவித்தார்.

டேவ் போர்டு என்ற அந்த பாதிரியார் அமெரிக்காவிலுள்ள மோர்னமென் கிறித்தவ பிரிவைச் சார்ந்தவர். மதப் பிரச்சாரம் செய்வதற்காக ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பிரச்சாரம் செய்து திரும்பியவர்தான் இந்த பாதிரியார் டேவ் போர்டு. அவரிடத்தில் பீஜே அவர்களின் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கொடுத்து ஏகத்துவ அழைப்புப்பணி செய்யப்பட்டது. இந்த செய்தியை ஏற்கனவே நாம் உணர்வு இதழில் வெளியிட்டிருந்தோம்.

அந்தப் பாதிரியார் தான் “இயேசு இறைமகனா?” என்ற நூலை படித்ததாக நமது அமெரிக்க பொறுப்பாளர் தஸ்தகீர் அவர்களிடம் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 13 அன்று லாஸ்வேகாஸ் நகருக்கு திரும்பச் சென்ற சகோதரர் தஸ்தகீர் அவர்கள் அந்த பாதிரியாரை மீண்டும் சந்தித்து, பீஜே அவர்கள் எழுதிய மாமனிதர் என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வழங்கியுள்ளார்.

அடுத்த தடவை தான் சகோதரர் பீஜே அவர்களுக்கு ஒரு புத்தகம் தருவதாகவும் அதைக் கண்டிப்பாக அவரிடம் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.

மேலும், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சில தமிழ், இந்து நண்பர்களை சந்தித்து மாமனிதர், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்ற புத்தகங்களை வழங்கி அழைப்புப்பணி செய்துள்ளார்.

மேலும் அவர்களிடத்தில் பிறமத நண்பர்களுக்காக மிக விரைவில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆன்லைன் இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி பற்றி தெரிவிக்க, அதை தாங்கள் கட்டாயம் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாக அமெரிக்காவில் தமிழ்கூறும் மக்களிடத்தில் ஏகத்துவ எழுச்சி துளிர்விட ஆரம்பித்துள்ளது. அமெரிக்க மக்களிடம் சத்தியப் பிரச்சாரம் செவ்வனே சென்றடைய வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

நன்றி:  http://www.tntj.net/137335.html

Tuesday, March 12, 2013

ரூபாய் பத்தாயிரம் மருத்துவ உதவி!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக 3.3.2013 அன்று மேலத்தெருவை சார்ந்த ஒரு குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம் மருத்துவ உதவியாக கிளை பொருளாளர் மீரா முகைதீன் அவர்களால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


Sunday, March 10, 2013

அதிராம்பட்டிணத்தில் கப்ர் வணக்கத்தை வளர்க்கும் இரு மதரஸாக்கள்!

அதிராம்பட்டிணத்தில் கப்ர் வணக்கம் என்பது 95 சதவீத மக்களால் எதிர்க்கப்படுகிறது. கப்ர் வணக்கத்தை ஆதரிப்பவர்கள் சிலர் மட்டுமே, கப்ர் வணக்கத்தை முழுமையாக ஆதரிப்பதில் ரஹ்மானியா மற்றும் ஸலாஹிய்யா மதரஸாக்களே. கப்ர் வணக்கத்தை எதிர்ப்பவர்கள் இந்த மதரஜாவிற்கு எதிராக வாய் திறக்க மறுக்கின்றனர். 

அதிராம்பட்டிணத்தில் கப்ர் வணக்கத்தை வளர்க்கும் இரு மதரஸாக்கள்! முழு விபரம்

Friday, March 08, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 08.03.13(வீடியோ )


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 08.03.13


உலக அளவில் இரத்த தானத்தில் முத்திரை பதித்து வரும் டிஎன்டிஜே!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேயப் பணிகளில் முக்கிய இடத்தை வகிப்பது இரத்ததான சேவையாகும். தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழகத்தில் இரத்ததானம் செய்வதில் டிஎன்டிஜே அனைத்து அமைப்புகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தொடர்ந்து முதலிடம் வகித்து வருவதே இதற்கு மிகப்பெரிய சான்றாகும். அல்ஹம்துலில்லாஹ்…

கடந்த 2012ஆம் ஆண்டில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்டங்கள் மற்றும் கிளைகள் மூலம் 213 இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 17,622 பேர் குருதிக்கொடை அளித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் தமிழகத்தில் மட்டும் டிஎன்டிஜே சார்பாக  173 முகாம்களில் 12,111 பேர் இரத்ததானம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டிலுள்ள டிஎன்டிஜே கிளைகள் மூலம் 31 முகாம்கள் நடத்தப்பட்டு 3,813 நபர்கள் குருதிக் கொடையளித்துள்ளனர்.

அவசர இரத்ததானமாக 1,698 நபர்களுக்கு குருதிக் கொடை வழங்கப்பட்டுள்ளது.
தனியொரு அமைப்பு இந்த அளவிற்கு கிட்டதட்ட பதினெட்டாயிரம் யூனிட்டுகளுக்கு நெருக்கமாக குருதிக் கொடை கொடுத்திருப்பது இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத புதிய சாதனையாகும்.

டிஎன்டிஜேவின் வருகைக்கு முன்பாக தமிழக அளவில் முதலிடம் பெரும் அமைப்புகள் ஐந்தாயிரம் யூனிட்டுகள் இரத்ததானம் செய்வதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்ட நிலையில் இருபதாயிரம் பேரை தொடக்கூடிய அளவிற்கு இரத்ததானத்தில் புதிய மைல்கல்லை டிஎன்டிஜே எட்டியுள்ளது.

முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் குண்டு வைக்கக்கூடியவர்கள்; தீவிரவாதிகள்; பிறரது இரத்தத்தைக் குடிக்கக்கூடியவர்கள் என்ற ஒரு கருத்தை தமிழகத்து ஊடகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு காலத்தில் விதைத்திருந்தன. ஆனால் டிஎன்டிஜேவின் தன்னலம் பாராத இந்த மனித நேயச் சேவையின் மூலம் முஸ்லிம்கள்தான் இரத்ததானம் செய்வதில் முன்னணியில் உள்ளார்கள். அவர்கள்தான் தங்களது இரத்தத்தைக் கொடுத்து பிறரது உயிரைக் காக்கக்கூடிய மனிதநேயப் பணியில் முதன்மையானவர்கள். அவர்களை முந்துவதற்கு பெரும்பான்மையான இந்து சமுதாய அமைப்புகளால் கூட இயலாது என்று அனைவரும் சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த மனிதநேயப்பணி சொல்ல வைத்துள்ளது.

முஸ்லிம்களில் சிறுபான்மையாக இருக்கக்கூடிய இந்த ஏகத்துவக் கொள்கைக் கூட்டம் மறுமை வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால்தான் இத்தகைய பணிகளை தொடர்ச்சியாக செய்து வரமுடிகின்றது.

மேலும், சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் உள்ள அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் டிஎன்டிஜேவை அறியாத மருத்துவர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை உருவாகியுள்ளது. யாரேனும் வெளிமாநிலத்திலிருந்தோ, சென்னை மற்றும் மதுரை போன்ற பெருநகரங்களுக்கு தொடர்பில்லாத ஊர்களிலிருந்தோ வந்து அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்களேயானால் அவர்களிடத்தில் நீங்கள் டிஎன்டிஜேவை அணுகுங்கள்; எத்தனை யூனிட்டுகள் இரத்தம் உங்களுக்குத் தேவைப்பட்டாலும் அவர்கள் அதை வழங்குவார்கள் என்று அந்தந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர்களே அவர்களை நம்மிடம் அணுகச் சொல்லக்கூடிய அளவிற்கு அனைத்து மருத்துவமனைகளிலும் டிஎன்டிஜே தனி இடம்பிடித்துள்ளது.

இவ்வாறு மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெறும் வெளியூர் சகோதரர்கள் தங்களது அறுவைச் சிகிச்சைக்கான இரத்தத்தை வெளியில் காசு கொடுத்து வாங்கவும் வழியில்லாமல், தங்களுக்கு உதவ யாராவது முன்வரமாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு ஒரு பைசாகூட செலவுவைக்காமல் நமது சகோதரர்கள் அளிக்கும் குருதிக்கொடைக்கு அந்த சகோதரர்கள் அதற்கு பலனாக எவ்வளவோ கைமாறு செய்ய எத்தனித்தாலும் அவர்களிடத்தில் ஆட்டோவுக்கு கூட போக்குவரத்துப் பணம் வாங்காமல் திரும்பும் நமது சகோதரர்களைப் பார்த்து மருத்துவமனையிலுள்ளவர்களும், நோயாளியின் உறவினர்களும் பூரித்துப்போகின்றார்கள்.

அதுமட்டுமல்லாமல், நீங்கள் தரக்கூடிய இரத்தம்தான் தூய்மையானதாக உள்ளது என்றும், பீடி, சிகரட், மது போன்ற தீயபழக்க வழக்கங்கள் உங்களது உறுப்பினர்களிடம் இல்லாதது அதற்குரிய காரணம் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ளவர்கள் கூறுவது இந்த ஜமாஅத்தின் பணிகள் எந்த அளவிற்கு பிறமத சகோதரர்களை சென்றடைந்துள்ளது என்பதையும், இந்த ஜமாஅத்தைப் பற்றி பிறமத சகோதரர்கள் எந்த அளவிற்கு விளங்கி வைத்துள்ளார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.

இரத்ததானத்தில் முதலிடம் பிடித்த தென்சென்னை மாவட்டம் :

கடந்த 2012ஆம் ஆண்டு இரத்ததானத்தில் அதிகமான நபர்கள்  இரத்ததானம் செய்ததன் மூலம் முதலிடத்தை பிடித்த மாவட்டம் தென்சென்னை மாவட்டம் ஆகும். மொத்தம் 46 முகாம்களில் 3,834 நபர்கள் தென்சென்னை சார்பாக இரத்ததானம் செய்துள்ளார்கள்.

திருவள்ளூர் மற்றும் வடசென்னை ஆகிய மாவட்டங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. அரசு தரப்பிலிருந்து பல்வேறு விருதுகளும் டிஎன்டிஜேவின் இரத்த தான சேவையை பாராட்டி வழங்கப்பட்டுள்ளன.

சாதனை படைத்த தேனி மாவட்டம் :

இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள தேனி மாவட்டம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. நமது தேனி மாவட்டத்தின் இந்த சேவையை அறிந்த அரசு மருத்துவமனை நிர்வாகம், அரசாங்க இரத்த வங்கியில் போதிய இரத்த இருப்பு இல்லாத நிலையில், டிஎன்டிஜேவின் தேனி மாவட்ட நிர்வாகத்தை அணுகி முகாம்களை நடத்தும்படி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இரத்ததான முகாம்களை நமது சகோதரர்கள் நடத்தி தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியிலுள்ள இரத்த இருப்பு பற்றாக்குறையை நீக்கியுள்ளனர்.

பரவலாக அரசு மருத்துவமனைகளில் இரத்தம் கையிருப்பு இல்லாவிட்டால் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் டிஎன்டிஜேவின் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு முகாம்களை நடத்தச் சொல்லி கோரிக்கை வைக்கின்றன. அவர்களது கோரிக்கைகளை ஏற்று நமது நிர்வாகிகள் இரத்ததான முகாம்களை நடத்தி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இரத்ததானத்தில் முதலிடம் வகிக்கும் ரியாத் மண்டலம்:

இந்தியாவிற்கு வெளியே உள்ள டிஎன்டிஜேவின் வெளிநாட்டு கிளைகளும் இரத்ததான முகாம்களை போட்டி போட்டு நடத்தி மனிதநேயப்பணியை உலகளாவிய அளவில் செவ்வனே செய்து வருகின்றன.

அந்த வகையில் வெளிநாடுகளில் இரத்ததானத்தில் முதலிடம் வகிப்பது ரியாத் மண்டலம் ஆகும். கடந்த 2012 ஆம் ஆண்டு ரியாத் மண்டலத்தின் சார்பாக 1,214 நபர்கள் இரத்ததானம் செய்துள்ளனர். ரியாத்தைத் தொடர்ந்து தம்மாம் மற்றும் குவைத் ஆகிய மண்டலங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.

சவூதி அரேபியாவில் நமது சகோதரர்கள் வழங்கும் இரத்தங்கள் சேகரிக்கப்பட்டு ஹஜ் செய்ய வரும் ஹாஜிகளுக்கும்,  ரமலான் மாதத்தில் உம்ரா செய்ய வருவோருக்கும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.
இதுவல்லாமல் டிஎன்டிஜேவின் இந்த ஏகத்துவப்படை ஸ்ரீலங்கா, துபாய், அபுதாபி, பஹ்ரைன், ஷார்ஜா, புருனை, கத்தார் ஆகிய நாடுகளிலும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இரத்த தானம் செய்து உலகளாவிய அளவில் இரத்ததானத்தில் தனி முத்திரை பதித்து வருகின்றனர்.

அவசர இரத்த தான சேவையில் மதுரை முதலிடம் :

இரத்ததான முகாம்களில் இரத்தம் வழங்கி உயிர் காக்கும் பணி ஒரு வகை என்றால், திடீரென்று ஏற்பாடு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு உடனடியாகத் தேவைப்படும் இரத்தத்தை அதிரடியாக வழங்கி உயிர்காக்கும் பணி மற்றொரு வகை.

இந்த அவசர இரத்ததான சேவையில் மதுரை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தை பெற்று வருகின்றது. சென்ற ஆண்டு 574 நபர்கள் அவசர இரத்த தானம் வழங்கியுள்ளார்கள். மதுரையைத் தொடர்ந்து திருச்சி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.

டிஎன்டிஜேவின் இந்த தன்னலமில்லாத இரத்ததானப்பணி இன்னும் சிறப்பாக அமைய வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
“ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ அல்குர் ஆன் : 5 – 32
தாயகம் 2012
எண் மாவட்டம் முகாம்கள் நபர்கள் தர வரிசை
1 தென்சென்னை 46 3834 1
2 திருவள்ளூர் 54 3531 2
3 வட சென்னை 19 1760 3
4 தேனி 5 795 4
5 இராமநாதபுரம் 5 221 5
6 காஞ்சி கிழக்கு 3 183 6
7 தஞ்சை தெற்கு 5 179 7
8 விருதுநகர் 2 165 8
9 காஞ்சி மேற்கு 2 130 9
10 விழுப்புரம் மேற்கு 4 126 10
11 நெல்லை 2 93 11
12 நாகை தெற்கு 1 82 12
13 திருவாரூர் 2 74 13
14 புதுக்கோட்டை 2 73 14
15 காரைக்கால் 2 70 15
16 சிவகங்கை 2 69 16
17 கோவை 1 67 17
18 நாமக்கல் 2 65 18
19 தி மலை 1 60 19
20 வேலூர் 1 58 20
21 ஈரோடு 2 56 21
22 திருப்பூர் 1 55 22
23 சேலம் 1 55 23
24 தஞ்சை வடக்கு 1 52 24
25 பெங்களுர் 1 50 25
26 திருச்சி 1 43 26
27 நாகை வடக்கு 1 42 27
28 பெரம்பலூர் 1 42 28
29 கரூர் 1 30 29
30 நிலகிரி 1 26 30
31 திருவாரூர் 1 25 31
மொத்தம் 173 12,111
வளைகுடா (2012)
எண் மண்டலம் முகாம்கள் நபர்கள் தர வரிசை
1 ரியாத் 6 1214 1
2 தம்மாம் 10 868 2
3 குவைத் 3 494 3
4 துபாய் 3 456 4
5 ஸ்ரீலங்கா 2 233 5
6 அபுதாபி 3 233 6
7 பஹ்ரைன் 1 97 7
8 ஷார்ஜா 1 87 8
9 புருனை 1 82 9
10 கத்தார் 1 49 10
மொத்தம் 31 3,813
அவசர தேவை
எண் மாவட்டம் நபர்கள் தர வரிசை
1 மதுரை(அவசரதேவைக்கு) 574 1
2 திருச்சி(அவசரதேவைக்கு) 342 2
3 நெல்லை(அவசரதேவைக்கு) 308 3
4 திருப்பூர்(அவசரதேவைக்கு) 262 4
5 தென்சென்னை(அவசரதேவைக்கு) 111 5
6 விருதுநகர்(அவசரதேவைக்கு) 73 6
7 வடசென்னை(அவசரதேவைக்கு) 22 7
8 ஈரோடு (அவசரதேவைக்கு) 6 8
மொத்தம் 1,698