புதிய கப்ர் பழைய கப்ர் எல்லாத்தையும் இடிக்கலாம், வாங்க!
சமீபத்தில் அதிராம்பட்டிணம் கடல்கரைத் தெருவில் புதிதாக முளைத்த பெண் அவ்லியா பற்றி நாம் ஒரு ஆக்கம் வெளியிட்டு இருந்தோம். இந்த அவ்லியாவை உண்டாக்கியவர்களை கண்டித்து அதிரை இணைய தளங்கள் பலவும் கட்டுரை வெளியிட்டு இருந்தனர். இந்த கப்ர் வணக்கத்தை தடுப்பதில் அதிரை முஸ்லிம்கள் ஒருமித்துள்ளார்கள் என்றால் அது மிகையல்ல. அல்ஹம்துலில்லாஹ்.
இணையதளங்களில் இந்த இணைவைப்பு காரியங்களை எதிர்க்கும் நாம் இதை தடுக்க என்ன முயற்சிகள் செய்தோம்? இவற்றை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு நாம் வழங்கிய ஒத்துழைப்பு என்ன என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும்.
இணையதளங்களில் இந்த இணைவைப்பு காரியங்களை எதிர்க்கும் நாம் இதை தடுக்க என்ன முயற்சிகள் செய்தோம்? இவற்றை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு நாம் வழங்கிய ஒத்துழைப்பு என்ன என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும்.
ஒரு காலத்தில் கப்ர் வணக்கம் மட்டுமே இஸ்லாம் என்று இருந்தது. அது இன்று உடைக்கப்பட்டு, கப்ர் வணக்கம் என்பது நரகத்தில் நிரந்தர இடத்தை பெற்று தரும் என்பதை பெரும்பான்மையானவர்கள் உணர்ந்துள்ளார்கள். அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.
புதிதாக முளைத்த இந்த கப்ரை அகற்றுவது எப்படி என்று சில வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அல்லாஹ்விற்கு இணைவைக்கும் கொடிய பாவங்களை சமுதாயத்தில் இருந்து களை எடுக்க செய்யப்படும் வாதப்பிரதிவாதங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.
இந்த வாதப் பிரதிவாதங்களில் முன்வைக்கப்படும் முதன்மையான கேள்வி புதிதாக முளைத்த இந்த கப்ரை ஏன் நாம் இடிக்க கூடாது என்பதே! இந்த கருத்து நியாயமானது தான். நாம் எந்த நேரத்திலும் உணர்வுகளுக்கு முன்னுரிமை தராமல், அறிவார்ந்த ரீதியில் செயல்பட வேண்டும்.
முதலில் புதிதாக கட்டப்பட்டுள்ள கப்ர் தர்ஹாவிற்கு சொந்தமான இடத்தில் (மறைவான இடத்தில்) கட்டப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக நாம் இதை எதுவும் செய்ய முடியாது.
நாமே இந்த கப்ரை இடிக்க முற்படுவோம் என்றால் அதில் நன்மையை விட தீமையே அதிகம். நாம் இந்த கப்ரை இடித்தால், அவர்கள் போட்டிக்காக இன்னும் பத்து கப்ரை கூட கட்டுவார்கள். அதே நேரத்தில், கப்ரை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
அதே நேரத்தில் ஊரில் உள்ள பெரும்பான்மையினர் கப்ரை இடிக்க சம்மதம் தெரிவித்தால், அமைதியாக அகற்றிவிடலாம். உதாரணத்திற்கு, தவ்ஹீத்வாதிகள் நிறைந்துள்ள பகுதியில் இருக்கும் தக்வா பள்ளி வளாகத்திலேயே கப்ர் உள்ளது. இதை எப்படி அகற்றலாம் என்று யாரும் சிந்தித்தாக தெரியவில்லை. தக்வா பள்ளியில் உள்ள கப்ரை அகற்ற யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்பது உறுதி. தக்வா பள்ளியில் கப்ர் இருந்தால் பரவாயில்லை, தர்ஹாவில் புதிதாக கப்ர் வரக்கூடாது என்பது எந்தவிதத்தில் சரி?
நோய்க்கு நிரந்தர தீர்வு என்ன?
ஒரு நோயை முற்றிலுமாக தடுப்பதற்கு, நோய்க்கு மருந்திடுவதோடு அந்த நோய் எவ்வாறு பரவுகிறது என்று ஆய்ந்து அறிந்து, அந்த நோய் பரவும் வழியையும் அடைக்க முயல்வோம்.
கப்ர் வணக்கத்தை ஒழிக்க இந்த வழிமுறையையே கையால வேண்டும். மார்க்கம் என்றால் என்னவென்று தெரியாமல் கப்ர் கட்டும் அப்பாவிகளை கண்டு கொந்தளிக்கும் நாம், இந்த கப்ர் வணக்கத்தை பாத்திஹா ஒதி துவக்கி வைக்கும் பாவி ஆலிம்சாக்களையும் லெப்பைகளையும் கண்டு கொந்தளிக்கவில்லை. அவர்களை பற்றி கட்டுரை எழுதவில்லை. அவர்களையும் நம்மில் பலர் ஆலிம்கள் என்றே கூறுகிறோம்.
இமாமா? அல்லது பூசாரியா?
இந்த கப்ர் வணங்கி ஆலிம்களை பள்ளியில் இமாமாக வைத்து அழகு பார்க்கிறோம், அவர்களை பின்பற்றி தொழவும் செய்கிறோம். இது சரியா?
ஒரு குடிகாரனை இமாமாக நிறுத்தி அவர் பின்னால் நின்று தொழுவோமா? குடிப்பதை விட இணைவைப்பு மிகப்பெரிய பாவம் இல்லையா?
கப்ர் வணக்கம் மட்டும் தான் இணைவைப்பா?
கப்ர் வணக்கத்தை எதிர்க்கும் அனைவரும் மௌலூது, தாயத்து, தட்டு, தகடு போன்ற இணைவைப்பு காரியங்களை எதிர்க்கவில்லை. இதற்கு காரணம் என்னவென்று புரியவில்லை. கப்ர் வணக்கம் நரகத்திற்கு அழைத்து சொல்லும் என்பதால் தான் இவர்கள் எதிர்க்கிறார்கள் என்றால், மௌலூது, தாயத்து, தட்டு, தகடு போன்றவைகளை இவர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். இணைவைப்வை எதிர்க்கும் சகோதரர்கள் இவற்றை கவனிக்க வேண்டும்.
கப்ர் வணக்கம் மட்டும் தான் இணைவைப்பா?
கப்ர் வணக்கத்தை எதிர்க்கும் அனைவரும் மௌலூது, தாயத்து, தட்டு, தகடு போன்ற இணைவைப்பு காரியங்களை எதிர்க்கவில்லை. இதற்கு காரணம் என்னவென்று புரியவில்லை. கப்ர் வணக்கம் நரகத்திற்கு அழைத்து சொல்லும் என்பதால் தான் இவர்கள் எதிர்க்கிறார்கள் என்றால், மௌலூது, தாயத்து, தட்டு, தகடு போன்றவைகளை இவர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். இணைவைப்வை எதிர்க்கும் சகோதரர்கள் இவற்றை கவனிக்க வேண்டும்.
கப்ர் வணக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வழி என்ன?
- நமது ஊரில் உள்ள பள்ளிவாசல்களில் சிலவற்றில் இமாமாக இருப்பவர்கள் கப்ர் வணக்கத்தை ஆதரிப்பவர்கள், கப்ர் வணக்க கந்தூரியை துவக்கி வைப்பவர்கள். இவர்கள் தான் அப்பாவிகளின் உள்ளத்தில் நஞ்சை விதைத்து நரகத்திற்கு ஆள்பிடிப்பவர்கள். இவர்களை பள்ளிவாசல்களை விட்டு துரத்த வேண்டும். இவர்களுக்கு எதிராக ஒரு கருத்தாக்கத்தை உருவாக்க வேண்டும்.
- நமது ஊரில் இருக்கும் இரு மதரஸாக்களும் கப்ர் வணக்கத்தை ஆதரிப்பவை. அதை வளர்ப்பவை. இவற்றிக்கு பூட்டு போட வேண்டும். கப்ர் வணக்கத்தை பாத்திஹா ஓதி துவக்கி வைக்கும் கள்ள ஆலிம்சாக்கள் இந்த மதரஸாக்களில் ஆசிரியர்கள் அல்லது இந்த மதரஸாவின் மாணவர்கள்.
- கேரளாவின் குட்டியை கண்டு நமது கண்ணியமிக்க (?) ஆலிம்கள் அலறுகிறார்கள். அவருக்கு எதிராக வாய் திறக்கும் அளவுக்கு கண்ணியமிக்க ஆலிம்களுக்கு ஈமான் இல்லை. கேரளத்து குட்டி கப்ர் வணக்கத்தை ஆதரிப்பவர். இவருக்கு சரியான முடிவு கட்ட வேண்டும். கப்ர் வணக்கத்திற்கு எதிராக வாய் திறக்காத கண்ணியமிக்க ஆலிம்களை பற்றி நமது உள்ளத்தில் இருக்கும் மரியாதையை தூக்கி எறிய வேண்டும்.
- கப்ர் வணக்கத்தை எதிர்க்காத கூட்டமைப்புகள், சங்கங்கள், அமைப்புகள் இவற்றை புறக்கணிக்க வேண்டும்.
- இணைவைப்பு வரிகளை கொண்ட மௌலூது என்ற குப்பை பாடலை பள்ளியில் ஒதுவதை தடுக்க வேண்டும். இதை பகிரங்கமாக கண்டித்து பிரச்சாரம் செய்ய முன்வர வேண்டும்.
- கப்ர் வணக்கத்திற்கு எதிராக ஒயாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
இதுபோன்ற வழிமுறைகளை செய்யாமல், ஏன் கப்ரை நம்மால் இடிக்க முடியவில்லை என்று எழுதுவதால் ஒன்றும் நடக்காது.
இணைவைப்பிற்கு எதிராக நாம் தொடர்ந்து பிரச்சாரத்தை முன்னெடுத்தால் , கீழ்காணும் வீடியோவில் காட்டப்படும் அனாதை தர்ஹாக்களின் பட்டியலில் நமது ஊர் இணைவைப்பு கோவில்களும் சேரும், தர்ஹா நிர்வாகிகளே தவ்ஹீத்வாதிகளாக மாறுவார்கள், இன்ஷா அல்லாஹ்.
மேலதிக விபரங்களுக்கு:
- உயர்த்தி கட்டப்பட்ட கப்ர்கள் இடிக்கப்பட்டதை ஆதரித்த ஷாஃபி இமாம்! கப்ர்களை கட்டி அழகு பார்க்கும் ஷாஃபி மத்ஹபினர்!!
- அதிராம்பட்டிணத்தில் கப்ர் வணக்கத்தை வளர்க்கும் இரு மதரஸாக்கள்!
- கடல்கரைத் தெருவில் காட்சி தந்த ஹாஜா ஒலி அப்பாவின் மருமகள் !
- தங்க காசு கொடுத்து நரகத்திற்கு அழைக்கும் வழிகெட்ட கூட்டம்!
- மீலாதும் மௌலூதும் வழிகேடு - தேவ்பந்த் மதரஸாவின் ஃபத்வா
- இணைவைக்கும் இமாம்களை பின்பற்ற கூடாது! தேவ்பந்த் மதரஸாவின் ஃபத்வா
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.