Tuesday, December 04, 2012

பைபிள் கடவுளின் வார்த்தை அல்ல! கிறித்துவ போதகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்!!


பைபிள் கடவுளின் வார்த்தை அல்ல! கிறித்துவ போதகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்!!




கடந்த 28.11.12 புதன் கிழமையன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், அனாரியன் சமாஜ் ஊழியங்கள் என்ற கிறித்தவ சபையினருக்கும் இடையில், “திருக்குர்ஆன் இறைவேதமா? பைபிள் இறைவேதமா?” ஆகிய இரு தலைப்புகளில் விவாதம் பரபரப்புடன் நடந்து முடிந்தது.
டிஎன்டிஜே சார்பாக கலீல் ரசூல் அவர்கள் தலைமையில் எம்.எஸ்.சுலைமான், அப்பாஸ் அலி, தாங்கல் ஹபீபுல்லாஹ், சையது இப்ராஹீம் ஆகியோர் அடங்கிய குழுவினர் விவாதித்தனர்.
காலை 9 மணி முதல் இரவு 8.30 வரை நடைபெற்ற இரண்டு தலைப்புகளிலான விவாதம் அனல் பறந்தது. விவாதம் ஆன்லைன்பீஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
திருக்குர்ஆன் இறைவேதமே!:
முதலில் திருக்குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பிலும், அடுத்ததாக பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலும் விவாதிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
விவாதம் ஆரம்பித்த உடனேயே, “இயேசுவுக்கு முன்னதாக வந்த மோசே கொண்டு வந்தது நியாயப்பிரமாணம் என்றும், இயேசு அதை மாற்றி கிருபையின் பிரமாணத்தைக் கொண்டு வந்தார் என்றும், பின்னர் வந்த முஹம்மது என்பவர் கிருபையின் பிரமாணத்தை மாற்றி, பைபிளில் உள்ள “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்ட வேண்டும்” என்ற அழகிய சட்டங்களை மாற்றி, கண்ணுக்குக்கண், பல்லுக்குப் பல் என்று நடைமுறைக்குச் சாத்தியமில்லாத, குர்ஆன் என்று சொல்லக்கூடிய கிரியையின் பிரமாணத்தைக் கொண்டு வந்தார்” என்றும் கிறித்தவத் தரப்பினர் குற்றச்சாட்டு வைத்தனர்.
முதல் அடியே மரண அடி:
திருக்குர்ஆனுக்கு எதிராக அவர்கள் வைத்த முதல் வாதமே சொத்தை வாதமாக அமைந்தது.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று இயேசு சட்டம் கொண்டு வந்ததாகக் கூறுகின்றீர்களே! அது நடைமுறைக்குச் சாத்தியமான சட்டமா? அந்தச் சட்டத்தைச் சொன்ன இயேசுவாவது அந்த சட்டத்தைக் கடைப்பிடித்தாரா? என்று கேள்வியெழுப்பி, பைபிளில் வரக்கூடிய கீழ்க்கண்ட சம்பவம் சுட்டிக்காட்டப்பட்டது.
கன்னத்தில் அறைந்தவனை கேள்வி கேட்ட ஏசு:
சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன் பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
யோவான் 18 : 22, 23
இயேசுவை ஒருவர் கன்னத்தில் அறைந்த போது தனது மறுகன்னத்தைக் காட்டாமல், என்னை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டுள்ளார். அவர் கூறிய போதனையை அவராலேயே நடைமுறைப்படுத்த முடியவில்லை.
இந்தப் போதனையை எந்த ஒரு கிறித்தவரும் நடைமுறைப்படுத்துவதுமில்லை.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று இயேசு சட்டம் சொல்லுகின்ற அதே வசனத்தில், உனது வஸ்திரத்தை ஒருவன் கழற்றினால் அவனுக்கு உனது அங்கியையும் கழற்றிக் கொடு என்று இயேசு கட்டளையிடுகின்றார். அப்படியானால் தேவாலயங்களில் உண்டியலில் கொள்ளையடித்த கொள்ளையர்களைத் தேடிப்பிடித்து, அந்தக் கொள்ளையர்கள் ஒரு லட்சம் கொள்ளையடித்திருந்தால் இயேசு சொன்ன போதனையை ஏற்று இன்னுமொரு லட்ச ரூபாயை அவர்களுக்கு அன்பளிப்பாக கிறித்தவர்கள் வழங்க வேண்டும். அப்படி எந்த கிறித்தவர்களும் வழங்குவதில்லையே என்று கேள்வியெழுப்பியவுடனேயே போதகர்கள் பேதலித்துப் போயினர்.
இந்தச் செய்தியை நாங்கள் வாதமாக எடுத்து வைக்கவில்லை. ஒரு தகவலுக்காகச் சொன்னோம் என்று அந்தர் பல்டி அடித்தார்களே பாருங்கள். அப்போது ஆரம்பித்த அந்தர் பல்டி, விவாதம் முழுவதும் தொடர்ந்தது. கடைசி வரைக்கும் அந்தக் கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.
முதல் வாதத்திற்கு கொடுத்தது மரண அடியாக இருந்ததால் முதல் அடியில் விழுந்தவர்கள் கடைசி வரைக்கும் எழுந்திருக்கவே இல்லை.
மோசே கொண்டு வந்த நியாயப் பிரமாணத்தை இயேசு மாற்ற வந்தாரா?:
மேலும், மோசே கொண்டு வந்த நியாயப்பிரமாணத்தை இயேசு மாற்றி கிருபையின் பிரமாணத்தைக் கொண்டு வந்தார் என்று தாங்கள் சொல்வதும் பொய் என்று கூறி இயேசு சொன்ன கீழ்க்கண்ட பைபிள் வசனம் எடுத்துக்காட்டப்பட்டது.
நியாயப்பிரமாணத்தையானாலும், தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
மத்தேயு 5:17
மேற்கண்ட வசனத்தை நாம் எடுத்துக்காட்டியதும், அவர்களது ஆரம்ப வாதமே பொய் என்பது அம்பலமானது.
திருக்குர்ஆன் விடும் சவால்:
நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்! உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்!
அல்குர்ஆன் 2 : 23, 24
மேற்கண்ட வசனம் நமது முதல் வாதமாக முன் வைக்கப்பட்டது. திருக்குர்ஆன் இந்த சவாலை 1400 ஆண்டுகளுக்கு முன் விடுத்த போது, அந்த அரபுலகத்தில் அரபி பேசத்தெரிந்த கிறித்தவர்கள், யூதர்கள், இன்னும் பெரும் பெரும் அரபிப் பண்டிதர்கள் எல்லாம் இருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் விடப்பட்ட இந்த சவால் 1400 ஆண்டுகள் ஆகியும் முறியடிக்கப்படாமல் உள்ளது. திருக்குர்ஆன் இவ்வாறு சவால் விட்ட பின்னர் அன்றைய அரபு மொழி பேசும் கிறித்தவர்கள் குர் ஆனை இறைவேதம் என்று ஏற்று இஸ்லாத்தில் இணைந்தார்கள். இதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது என்ற செய்தியை எடுத்து வைத்து திருக்குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு பதிலளிக்கத் திராணியற்ற போதகர்கள், திருக்குர்ஆன் அனைத்து விஷயங்களையும் கூறுவதாகச் சொல்லிக்காட்டுகின்றது. ஆனால் தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், ஹலால் போன்றவற்றை முழுமையாக அது சொல்லிக்காட்டவில்லை என்ற சொத்தை வாதத்தையே திரும்பத் திரும்ப வைத்துக் கொண்டிருந்தனர்.
திருக்குர்ஆன் அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்தும் என்று சொன்னால் அதில் அனைத்தும் இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அனைத்து வரையறைகளும் உள்ளன என்று சொல்கின்றோம். ஆனால், அதில் அனைத்து சட்டங்களும் மிகவும் விலாவரியாக விளக்கப்பட்டு இருக்காது. குறிப்பிட்ட அதிகாரங்களை மாநில அரசுக்கு வழங்கப்பட்டதாகவும், “ஆக்ட்” என்று தனியாகவும் விளக்கப்பட்டு இருக்கும்.
அதுபோலத்தான், தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், ஹலால் போன்றவைகள் இதில் மேலோட்டமாக சொல்லப்பட்டாலும் இறைவன் தனது தூதர் மூலம் அதை விளக்குகின்றான் என்பதை கீழ்க்கண்ட வசனம் தெளிவுபடுத்துகின்றது என்று சொல்லி விளக்கமளிக்கப்பட்டது.
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
அல்குர்ஆன் 16 : 44
மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் அவைகளை விளக்கும் அதிகாரத்தை இறைவன் தனது தூதருக்கு வழங்கியுள்ளான். இந்த அடிப்படையில் பார்த்தால் அனைத்துமே திருக்குர்ஆனில் விளக்கப்பட்டுவிட்டது என்று விளக்கமளித்தும், விளங்காததுபோல கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர் அந்த பேதகர்கள்.
மேலும், திருக்குர்ஆன் வசனங்களை ஒன்றுகிடக்க ஒன்று தவறாக விளங்கிக் கொண்டு இந்த வசனத்திற்கு அது முரண். அந்த வசனத்திற்கு இது முரண் என்று உளறிக் கொட்டினர். அவற்றிற்கும் தக்க முறையில் நமது விவாதக் குழுவினர் பதிலளித்தனர்.
மேலும், திருக்குர்ஆன் வசனங்களில் குறிப்பிட்ட வாசகங்களை மட்டும் இருட்டடிப்புச் செய்துவிட்டு, சில வசனங்களை வேண்டுமென்றே விட்டுவிட்டு இடையிலிருந்து வாசித்து தங்களது கள்ள வேலைகளை விவாத அரங்கத்திலும் அரங்கேற்றினர்.
அப்படி அவர்கள் இருட்டடிப்புச் செய்து வேண்டுமென்றே விட்டுவிட்டு வாசித்த வசனங்களை நாம் திரும்ப வாசித்துக் காண்பித்தவுடனேயே அவர்கள் சாயம் அந்த இடத்திலேயே வெளுத்தது.
எது ஆபாசம்?:
திருக்குர்ஆனில் பல இடங்களில் மனிதனது படைப்பைப் பற்றி இறைவன் சொல்லிக்காட்டுகின்றான். அப்படிச் சொல்லிக்காட்டும்போது மனிதனை விந்துத் துளியிலிருந்து படைத்ததாகச் சொல்லிக்காட்டுகின்றான். இவ்வாறு விந்துத்துளி என்று சொல்லப்படும் வார்த்தை ஆபாசமானதாம். எனவே குர்ஆன் ஆபாசமாகப் பேசிவிட்டது என்று கூறி குற்றச்சாட்டை வைத்தனர் போதகர்கள்.
இவர்களுக்கு ஆபாசம் என்றால் என்னவென்று தெரியாததுபோலப் பேசினர்.
மனிதனே உன்னை விந்துத்துளியிலிருந்து படைத்தோம். இதை நீ சிந்தித்துப்பார் என்று இறைவன் கேட்பது எப்படி ஆபாசம் என்று தெரியவில்லை. அடுத்த அமர்வில் ஆபாசம் என்றால் என்ன என்று விளக்குகின்றோம். பைபிளில் உள்ள ஆபாசங்களை புட்டு புட்டு வைக்கின்றோம் என்று கூற போதகர்கள் கதிகலங்கிப்போயினர்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாம் வைத்த விஞ்ஞான ரீதியான அறிவியல் உண்மைகளை திருக்குர்ஆன் சொல்லிக்காட்டுகின்றது என்ற வாதங்களுக்கு அவர்களால் பதிலளிக்க இயலவில்லை. மேலும் அவர்கள் வைத்த வாதங்கள் அனைத்தும் கிறுக்குத்தனமானவை என்பதை அதற்கு நாம் அளித்த பதில்கள் மூலம் அவர்களுக்கு உணர வைத்தோம். அத்துடன் முதல் அமர்வு முடிந்தது.
பைபிள் இறைவேதமில்லை என்பதை நிரூபித்த அமர்வு:
அடுத்ததாக, “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பில் விவாதம் மாலை 4மணிக்கு ஆரம்பமானது.
ஆரம்பமே அதிரடித்தாக்குதல்:
விவாதத்தின் ஆரம்பத்திலேயே அதிரடித்தாக்குதல் பாணியை கையிலெடுத்து கிறித்தவ போதகர்களை நையப்புடைத்தனர் நமது விவாதக் குழுவினர்.
பைபிளை இறைவேதம் என்று சொல்லுகின்றீர்கள். ஓர் இறைவேதம் என்பது எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ, அப்படியெல்லாம் பைபிள் உள்ளது.
அதில் பொய்கள், உளறல்கள், முரண்பாடுகள், சொல்வதற்கே நாக்கூசக்கூடிய ஆபாசங்கள், பொருந்தாத சட்டங்கள், கேடுகெட்ட சட்டங்கள், கடவுளை இழிவுபடுத்தக்கூடிய வசனங்கள் என்று குவிந்து கிடக்கின்றன. அவைகளின் பட்டியல் இதோ என்று நீண்ட பட்டியல் போட மூச்சுத் திணறிப்போன போதகர்கள் விளக்கம் அளிக்கின்றேன் என்ற பெயரில் உளறிக்கொட்டி மேற்கொண்டு ஆபாசங்களையும், அசிங்கங்களையும் தங்களது வாதத்தில் வைக்க விவாதக்களம் சூடுபறந்தது.
கர்த்தர் சொன்னதல்ல; நானே சொல்கின்றேன்:
முதலில் கிறித்துவத்தை நிறுவிய பவுல் மற்றும் லூக்கா ஆகியோர் பைபிளில் சொல்லியுள்ள ஒரு விஷயத்தை முன் வைத்து இப்படிப்பட்ட வாசகங்கள் அடங்கியது இறைவேதமா? என்று கேள்வியெழுப்பப்பட்டது
ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.
லூக்கா 1 : 2,3
மேற்கண்டவாறு லூக்கா கூறியுள்ளார்.  அதாவது நான் விசாரித்து அறிந்ததை இந்த வேத வரிகளாக எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார். இவர் விசாரித்து கேட்டு எழுதியவைதான் வேதமா?
ஒருபுறம் இப்படியென்றால் மறுபுறம், பவுல் என்பவரோ, “மற்றவர்களைக் குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.
முதலாம் கொரிந்தியர் 7:12
மேற்கண்ட வசனத்தில் கர்த்தர் சொல்லவில்லை; நானே சொல்லுகின்றேன் என்று பவுல் கூறுகின்றார் என்றால் இது இறைவேதமாக இருக்கவே முடியாது என்று ஆதாரங்களை வைத்ததும் கிறித்தவ போதகர்கள் ஆடிப்போயினர்.
அதற்கு விளக்கமளிக்கப் புகுந்த போதகர்கள் விளக்கம் சொல்கின்றேன் என்ற பெயரில் மென்மேலும் உளறிக்கொட்டி பைபிள் இறைவேதமில்லை என்பதை அவர்களே நிரூபித்தனர்.
அதாவது லூக்கா விசாரித்து அறிந்து எழுதியதாக சொல்லும் வசனத்திற்கு முந்தைய வசனத்தில்,
“ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்” என்று உள்ளது. இந்த வசனத்தின் அடிப்படையில் கண்ணாரக் கண்டதைத்தான் எழுதினார்கள் என்று போதகர்கள் விளக்கம் கூற அது அவர்களுக்கு எதிராக வந்து அமைந்தது.
அப்படியானால் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு பைபிள் எழுதப்பட்டதாக சொல்வது சுத்தப் பொய்தானே! விசாரித்து அறிந்ததையும், கண்ணாரக் கண்டதையும்தான் எழுதியுள்ளார்கள் என்றால் அது கர்த்தருடைய வார்த்தை அல்ல என்பது நிரூபணமாகிவிட்டது என்று நாம் சொன்னவுடன் சொல்ல பதிலின்றி வாயடைத்துப் போயினர் போதகர்கள்.
பவுல் கூறிய, கர்த்தர் சொல்லவில்லை; நான் சொல்லுகின்றேன் என்ற வசனம் குறித்து கடைசி வரைக்கும் அவர்கள் வாய்திறக்கவில்லை.
உன்னதப்பாட்டுக்கு அளித்த மன்மத விளக்கம்:
கடவுளுடைய வேதத்தில் சொல்லவே நாக்கூசக்கூடிய அளவிற்கு ஆபாசங்களும், அசிங்கங்களும் இருக்கலாமா? இந்த ஆபாசங்களையும், அசிங்கங்களையும் ஒரு மகளும், ஒரு தந்தையும் ஒன்றாக அமர்ந்து படிக்க முடியுமா? என்ற கேள்வியெழுப்பி பைபிளில் உள்ள உன்னதப்பாட்டு என்ற மன்மதப்பாட்டு குறித்து அதிலுள்ள வசனங்களை வாசித்துக் காண்பித்து கேள்வியெழுப்பப்பட்டது.
உன்னதப்பாட்டு என்பது அண்ணன் தங்கைக்கு சொல்லும் ஆறுதல் வார்த்தைகளாம்:
உன்னதப்பாட்டு என்னும் அதிகாரத்தில், ஒரு ஆண் தனது கள்ளக்காதலியை ஆபாசமாக வர்ணிக்கும் மகாமட்டமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
இப்படி தனது கள்ளக்காதலியை, “தங்காய்! தங்காய்!” என்று அழைத்து கள்ளக்காதல் செய்யக் கற்றுத்தரும் இந்த கேடுகெட்ட நூல்தான் இறைவேதமா? என்று நாம் கேள்வியெழுப்பினோம்.
அதற்கு ஓர் அற்புதமான விளக்கமளித்த போதகர்கள் கிறித்தவ பார்வையாளர்கள் உட்பட அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.
உன்னதப்பாட்டு என்பது ஓர் அண்ணன் – தங்கை இருவருக்குமிடத்தில் நடைபெறும் பாசத்தின் அடிப்படையிலான பேச்சுக்கள். தங்கையானவள் கறுப்பான நிறத்தில் இருக்கின்றாள். கறுப்பாக உள்ள தனது தங்கையைப் பார்த்து அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் அண்ணன் சொல்கின்றார், “தங்கையே! உன் முலைகள் திராட்சைக் குலைகள் போன்றவை” என்று. இப்படி தனது தங்கைக்கு அவளது அண்ணன் ஆறுதல் சொல்வதை தாங்கள் கொச்சைப்படுத்தலாமா? என்று விவாதத்தில் கிறித்தவ போதகர் கேட்டாரே ஒரு கேள்வி. கிறித்தவ பார்வையாளர்களே அவர்களை காரித்துப்பிவிட்டனர்.
ஓர் அண்ணனும் தங்கையும் இப்படித்தான் கேவலமாகப் பேசிக் கொள்வார்களா? இப்படித்தான் கிறித்தவர்கள் தங்களது தங்கைகளுக்கெல்லாம் ஆறுதல் சொல்லிக் கொண்டுள்ளார்களா? இதையும் சிரித்துக் கொண்டே சொல்கின்றீர்களே! உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று கேள்வியெழுப்ப அதற்கும் சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்தனர் கிறித்தவ போதகர்கள்.
உனது வளர்த்தி ஓங்கிய பனையாம், உன் முலைகள் இரண்டும் அதன் குலைகளாம்.
பனை மரமேறி நான் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; உன் முலைகள் திராட்சைக் குலைகள் போன்றவை, உன் மூச்சு கிக்சிலிப் பழங்கள் போல் இனிய மணமுள்ளது
உன்னதப்பாட்டு 7 : 7, 8
மேற்கண்ட வசனத்திலுள்ள, “நீ பனைமரம் போன்றவள். நான் பனை மரத்தில் ஏறி உன் முலைகளைப் பிடிப்பேன். உன் முலைகள் திராட்சைக் குலைகள் போல் ஆகுக!” என்ற உன்னதப்பாட்டு வேத(?) வரியை வாசித்துக் காண்பித்து, இதுதான் இறைவேதத்தின் லட்சணமா என்று நாம் கேள்வியெழுப்பினோம்.
இந்த கேவலப்பட்ட வசனங்களுக்கு விளக்கம் சொன்னால் நாம் நாறிப்போய்விடுவோம் என்று அரண்டு போன போதகர்கள், “முலைகள்” என்ற வார்த்தையே பைபிளில் இல்லை என்றும், நாம் வேதத்தை புரட்டுவதாகவும் அந்தர்பல்டி அடித்து குற்றச்சாட்டு வைத்தனர். முலைகள் என்று பைபிளில் வரக்கூடிய இடங்களையெல்லாம் எடுத்து வாசித்துக் காண்பித்தவுடன் கப்சிப் ஆகிவிட்டனர்.
அடுத்ததாக இதுவெல்லாம் ஓர் ஆபாசமா? என்று கேட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். சாலமோன் என்பவர்தான் இந்த ஆபாச வார்த்தைகளையெல்லாம் பேசியவர். அவரது காலத்தில் இதுவெல்லாம் ஆபாசமே கிடையாது. இதற்கெல்லாம் வெட்கப்படமாட்டார்கள். எப்படி ஒரு சிறுவயது குழந்தை நிர்வாணமாக இருப்பதை தவறாகச் சொல்ல முடியாதோ அதுபோல இதையெல்லாம் தவறாகச் சொல்ல முடியாது என்று அற்புத(?) விளக்கமளித்தனர்.
அதுமட்டு மில்லாமல், காட்டுவாசிகளை இப்போது டிஸ்கவரி சேனலில் காட்டுகின்றார்கள். அவர்களெல்லாம் நிர்வாண கோலத்தில்தான் உள்ளார்கள். அவர்களுக்கு அது தவறில்லை என்பது போல உன்னதப்பாட்டும் தவறில்லை. டிஸ்கவரி சேனலில் தற்போது அந்தக் காட்டுவாசிகளைக் காட்டும் போது அவர்களது குறிப்பிட்ட அந்த பாகங்களை கறுப்படித்துக் காட்டுகின்றார்கள். அதுபோலத்தான் இதுவும் என்று போதகர்கள் விளக்கமளிக்க, வந்திருந்த கிறித்தவ பார்வையாளர்களே முகம் சுளித்தனர்.
சாலமோன் பாடிய உன்னதப்பாட்டு அசிங்கமில்லை; அவர்களுக்கு அது வெட்கமில்லை என்று நீங்கள் சொல்வது சுத்தப் பொய். காரணமென்னவென்றால் உன்னதப்பாட்டின் கடைசி அதிகாரமாக வரக்கூடிய 8வது அதிகாரத்தில் முதல் வசனத்தில் கள்ளக் காதலியானவள் தனது கள்ளக் காதலனைப் பார்த்து சொல்கின்றாள், “நீ எனது தாயின் பால் குடித்த உடன்பிறந்த சகோதரனாக இருந்திருந்தால் நான் கண்ட இடத்திலெல்லாம் உன்னை முத்தமிடுவேனே!” என்று கேட்கின்றாள். அதாவது கள்ளக் காதலனை கண்ட இடத்திலெல்லாம் முத்தமிட்டால் ஊர் மக்கள் இவனை ஏன் முத்தமிடுகின்றாய் எனக் கேட்பார்கள். அதனால் நீ என் கூடப் பிறந்த அண்ணனாக இருந்தால் உன்னை கண்ட இடத்திலெல்லாம் நான் முத்தமிடுவேனே! அப்போது என்னை யாரும் நிந்தனை செய்யமாட்டார்கள் என்று அவள் கூறுகின்றாள். அப்படியானால் அது அசிங்கம் என்பதால்தானே இப்படி கூறுகின்றாள்.
அதுமட்டு மல்லாமல், உன்னதப்பாட்டிற்கு முன்பாகவே மோசேவுடைய நியாயப் பிரமாணத்தில் விபச்சாரம் கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது. சாலமோன் சொன்ன நீதிமொழிகளிலும் விபச்சாரத்திற்கு எதிரான வசனங்கள் உள்ளன என்று நாம் விளக்கம் கூற விழிபிதுங்கியது போதகர் கூட்டம்.
அதுமட்டுமல்லாமல் காட்டுவாசிகளைப்போல நிர்வாணமாகத் திரிவது தவறில்லை என்றால், அந்த அசிங்கங்களை தற்போது நீங்கள் வேதமாக வைத்து வாசித்து வருகின்றீர்களே! அப்படியானால் நீங்கள் என்ன காட்டுவாசிகளா? அவர்களுக்குத்தான் வெட்கமில்லை என்றால் அதை வைத்து வாசிக்கும் உங்களுக்கும் வெட்கமில்லையா? என்று கேட்க கடைசி வரைக்கும் பதிலில்லை.
பைபிள் கூறும் இரசம்:
உன் தொப்பூழ் கலப்பு இரசம் குறையாதிருக்கும் கடைந்தெடுத்த கலசம் போன்றது.
உன்னதப்பாட்டு 7 : 2
மேற்கண்ட வசனத்தில் தொப்புளில் இருந்து ரசம் வருவதாக ஒரு வசனம் உன்னதப்பாட்டில் வருகின்றதே! இதுதான் வேதமா? இதை ஒரு தகப்பனும், மகளும் ஒன்றாக எப்படி வாசிக்க முடியும்? என்று கேள்வியெழுப்ப அப்படி ஒரு வசனமே இல்லை என்று அந்தர்பல்டி அடித்தனர் போதகர்கள்.
உன்னதப்பாட்டு 7வது அதிகாரத்தில் 2வது வசனத்தில் தொப்பூளில் ரசம் வருவதாக அவர்கள் வாசித்துக்காட்டினார்கள். அது பொய். இதோ நான் அந்த வசனத்தை வாசித்துக் காண்பிக்கின்றேன் என்று கிறித்தவ போதகர் அவரது பாணியில் கீழக்கண்ட வசனத்தை வாசித்துக் காண்பித்தார்.
உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம் போலிருக்கிறது; உன் வயிறு லீலி புஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது.
உன்னதப்பாட்டு 7 : 2
இங்கே எங்கே தொப்பூள் என்று உள்ளது. இதிலே எங்கே ரசம் உள்ளது என்று ஒன்றும் அறியாதவர்கள் போல கேள்வியெழுப்பினர்.
மேற்கண்ட வசனத்தில் வரக்கூடிய, “நாபி” என்ற தூய தமிழ்ச்சொல்லின் பொருள்தான் தொப்பூள் என்பதாகும். அது தமிழ் மக்களுக்குத் தெரியாது என்ற அசட்டுத் தைரியத்தில் இந்த பொய்யை அவர்கள் அவிழ்த்துவிட்டனர்.
அதுபோல, “முலைகள்” என்று வரக்கூடிய இடங்களில் அவைகளை வெளியே தெரியாத வண்ணம், “ஸ்தனங்கள்” என்று மொழிபெயர்த்த மொழி பெயர்ப்பை வாசித்துக் காட்டி இங்கே எங்கே முலைகள் என்று உள்ளது என்று கேட்டு பைபிள் வசனங்களை இருட்டடிப்புச் செய்தனர்.
நாபி, ஸ்தனங்கள் என்று மொழி பெயர்த்தவை புராட்டஸ்டாண்ட் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்த மொழிபெயர்ப்பில் பெரும்பாலன மக்களுக்கு புரியாத வண்ணம் வார்த்தைகளைப் போட்டு மொழிபெயர்த்திருப்பார்கள்.
பைபிளில் உள்ள இது போன்ற நல்ல போதனைகள்(?) மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு மற்றும் பொது மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் கொப்பூழ், முலைகள் என்று மொழிபெயர்த்துள்ளார்கள். அந்த வசனங்களை நாம் வாசித்துக் காண்பித்த பிறகும், “இல்லை; இல்லை; அப்படி இல்லை. இல்லவே இல்லை. இதோ பாருங்கள் நாபி என்றுதான் உள்ளது; ஸ்தனங்கள் என்றுதான் உள்ளது என்று மீண்டும் மீண்டும் புராட்டஸ்டண்ட் பைபிளை எடுத்து வாசித்துக் காண்பித்து நல்ல பிள்ளைபோல நாடகமாடினர் கிறித்தவ போதகர்கள்.
நீங்கள் வாசித்தது கத்தோலிக்க பொது மொழிபெயர்ப்பு அல்ல. நீங்கள் மக்களை ஏமாற்றி பொய் சொல்லுகின்றீர்கள் என்று நாம் இறுதியில் சுட்டிக்காட்ட அவர்களது பொய் வேடம் கலைந்து கிறித்தவ பார்வையாளர்கள் மத்தியில் அவர்கள் அசிங்கப்பட்டனர்
ஆட்டம் காண வைத்த ஆபாசங்களின் பட்டியல்:
அதைத் தொடர்ந்து பைபிள் சொல்லிக்காட்டும் ஆபாச கதைகளின் பட்டியல் அள்ளிப்போடப்பட்டது.
ரூத் என்ற அதிகாரத்தில் நகோமி என்ற ஒரு பெண்மணி ரூத் என்ற பெண்மணியின் மாமியாக உள்ளார். அந்த நகோமி மாமி தனது மருமகளுக்கு ஒரு நல்ல(?) வழிகாட்டுதலை காட்டுகின்றார். போவாசு என்ற வயது போன தாத்தா ஒருவரை வளைத்துப் போடுவது எப்படி என்ற வழிகாட்டுதலை வழங்கும் நிகழ்ச்சியை பைபிள் விலாவரியாக விளக்குகின்றது.
போவாசு என்ற தாத்தா இரவில் படுத்திருக்கும் போது, நன்கு குளித்து எண்ணெய் தடவி அவரது இரு கால்களுக்கும் மத்தியில் அவரது போர்வையை தூக்கிக் கொண்டு உள்ளே தலையைவிட்டு நீ படுத்தால், நீ அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே உனக்கு சொல்வார் மருமகளே! என்று அந்த மாமி தனது மருமகளுக்கு வழங்கும் வழிகாட்டுதல்களும், அவ்வாறு போவாசு உடைய இரு கால்களுக்கு மத்தியில் போர்வையை தூக்கிக் கொண்டு ரூத் என்ற பெண்மணி படுத்த செய்தியையும் நாம் வாசித்துக் காண்பித்து இதுதான் புனித வேதமா என்று கேள்வியெழுப்பினோம்.
அதை மறுத்த அந்த போதகர்கள் கூட்டம், இரு கால்களுக்கு உள்ளே போய் படுக்கச் சொல்லி எங்கே உள்ளது? ஒரு காலுக்கு உள்ளேதான் படுக்கச் சொல்லி பைபிளில் உள்ளது. இவர்கள் வேதத்தை புரட்டுகின்றார்கள் என்று சொல்லி விளக்கமளித்தார்களே பார்க்கலாம். இப்படியுமா இவர்கள் கேடுகெட்டத்தனமாக இருப்பார்கள் என்று அனைவரும் காரித்துப்பினர்.
ஆனால் போவாசு என்பவரது இரு கால்களுக்கு மத்தியில் போர்வையைத் தூக்கிவிட்டுப் படுக்கச் சொல்லித்தான் பைபிளில் உள்ளது. இதோ அந்த வசனம்:
அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.
ரூத் 3 : 4
தலையில் குஷ்டம் வந்தால் தீட்டு தீட்டு என்று கத்த வேண்டுமாம்:
அடுத்து பைபிள் சொல்லக்கூடிய ஒரு அற்புதமான(?) சட்டம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
43. அவனுடைய மொட்டைத் தலையிலாவது அரைமொட்டைத் தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாக்கும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக் கண்டால்,
44. அவன் குஷ்டரோகி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.
45. அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, “தீட்டு, தீட்டு” என்று சத்தமிடவேண்டும்.
லேவியராகமம் 13 : 43 – 45
தலையில் ஒருவனுக்கு குஷ்டம் வந்தால் அவன் தனது தாடியை மூடிக்கொண்டு தீட்டு தீட்டு தீட்டு என்று கத்தினால் குஷ்டம் போய்விடும் என்று பைபிள் கூறுகின்றதே! இதுதான் இறைவேதமா எனக்கேட்க அதற்கும் பதில் இல்லை.
ஆடைக்கும், வீட்டுக்கும் குஷ்டரோகம்:
அதுபோல ஆடைக்கு குஷ்ட ரோகம் வந்தால் அதை எரிக்க வேண்டும் என்றும், வீட்டுக்கு குஷ்டரோகம் வந்தால் அதை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்றும் பைபிள் கூறுகின்றதே! இதுதான் இறைவேதமா? எனக்கேட்க தற்போது நாகர்கோவிலில் கூட புளிக்கு குஷ்டம் என்று சொல்கின்றார்கள் அதுபோலத்தான் இங்கும் சொல்லப்பட்டுள்ளது என்று அதையும் நியாயப்படுத்தினார்கள் போதகர்கள்.
அப்படியானால் அந்த குஷ்டரோகம் வந்தால் ஆடையை எரித்து, வீட்டை இடிக்க வேண்டும் என்பதற்கு விளக்கம் என்ன என்று கேட்டதற்கு பதில் இல்லை.
தீண்டாமையை போதிக்கும் பைபிள்:
பின்னும் கர்த்தர்மோசேயிடம் நீ ஆரோனோடும் பேசியதைச் சொல். உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவர்கள் தலைமுறை தோறும் கடவுளின் அப்பத்தைப் படைக்கும் படி கிட்டிவரலாகாது. குருடன், சப்பானி, முகவிகாரமுள்ளவன் அளவுக்கு மிஞ்சி நீண்ட அவையவம் உள்ளவன் கால் ஒடிந்தவன், கை ஒடிந்தவன், கூனன், அதிகம் மெலிந்தவன், பூவிழுந்த கண்ணன், சொறியன், அசருள்ளவன், விதை நசுங்கினவன் ஆகிய இவர்கள் கிட்டிவரலாகாது.
(லேவியராகமம் 21:16-23)
மேற்கண்ட வசனத்தை காண்பித்து தீண்டாமையை அப்பட்டமாக போதிக்கக்கூடிய பைபிள் எப்படி கடவுளுடைய வேதமாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியதற்கு, கூனன், குருடன், நொண்டி ஆகியோர் பலி கொடுக்க இயலாத நிலையில் இருப்பார்கள். அதனால்தான் அவர்களை ஆலயத்திற்குள் வரக்கூடாது என்று கர்த்தர் சொல்லியுள்ளதாகச் சொல்லி மாட்டிக் கொண்டனர்.
அப்படியானால் பலி கொடுக்க இயலாததால்தான் அவர்களை ஆலயத்திற்குள் வரக்கூடாது என்று கர்த்தர் சொல்லியிருபாரேயானால், அதுவும் அநியாயம்தான். காரணமென்னவென்றால், கூனன், குருடனோடு சேர்த்து அங்க அவயங்கள் நீளமாக உள்ளவன் கூட தேவாலயத்திற்குள் வரக்கூடாது என்று கர்த்தர் சொல்லியுள்ளார். அப்படியானால் விவாதத்தில் கலந்து கொண்டுள்ள தங்களுக்குக் கூட மூக்கு நீளமாக உள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால் நீங்கள் கூட தேவாலயத்தில் நுழைய முடியாதே! என்று கேள்வியெழுப்பி, மூக்கு நீளமாக உள்ளவர் பலி கொடுக்க என்ன தடங்கல் உள்ளது என்று கேட்க வாயடைத்துப் போயினர் போதகர்கள்.
அதுமட்டுமல்லாமல், இந்நிலைப்பாடு ஒருவேளைக்கு சரி என்று வைத்துக் கொண்டாலும், இதுபோன்ற குறைபாடு உள்ளவர்கள் தேவாலயத்தினுள் வரக்கூடாது என்றல்லவா கர்த்தர் கூறியுள்ளார். பலி கொடுக்கக்கூடாது என்று கூறுவதுதான் சரியானதாக இருந்திருக்கும்.
மேலும் அப்படிப்பட்ட குறைபாடுள்ளவர்கள் மட்டுமல்ல; அவர்களது தலைமுறை தோறும் யாரும் தேவாலயத்திற்குள் வரக்கூடாது என்று கூறுவது அப்பட்டமான தீண்டாமைதானே என்று கேள்விகேட்க பதிலில்லாமல் திக்குமுக்காடினர் போதகர்கள்.
நாம் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளால் ஆட்டம் கண்ட கிறித்தவ போதகர்கள் கடைசியில் தங்களது வாய்களாலேயே பைபிளில் உள்ள அனைத்தும் கர்த்தரது வார்த்தைகள் என்று நாங்கள் சொல்லவில்லை.
பைபிளில் கர்த்தருடைய வசனங்களும் உள்ளன; அயோக்கியர்களது வசனங்களும் உள்ளன; சாத்தானுடைய வசனங்களும் உள்ளன; மனிதர்களது வசனங்களும் உள்ளன என்று கூறி பைபிள் இறைவேதமில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.
பைபிளில் உள்ள தீவிரவாதத்தைத் தூண்டக்கூடிய வசனங்கள், அடுக்கடுக்கான ஆபாசங்கள், பொய்கள், உளறல்கள், கேவலமான சட்டங்கள், கடவுளை இழிவுபடுத்தக்கூடிய வசனங்கள் என்று இன்னும் அடுக்கடுக்கான பட்டியலை அள்ளிவீச ஆடிப்போன போதகர்கள் கலக்கம் கண்டுவிட்டனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.