ஹாஜா ஒலி அப்பா அவ்லியா வைச்ச ஆப்பு! - இணைவைத்த நிலையில் மரணத்தைத் தழுவினார் அதிரை அலாவுதீன்.
ஹாஜா ஒலி அப்பா(?)வால் காப்பாற்ற முடியவில்லை ? அதிரையின் அவுலியா நேசர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
23/12/2012 அன்று அதிரை ஹாஜா ஒலி தர்ஹாவில் ஹத்தத்து இரவு அன்று மண்டகப்படி எடுத்து வந்து அவுலியா(?)வின் கபுரில் சந்தனம் பூசுவதற்காக கபுருக்கருகில் சென்றதும் கதவை மூடி விட்டனர் தர்ஹா நிர்வாகிகள்.
ஏற்கனவே சாம்பிரானி, ஊதுவத்தி எறிந்து கபுர் வைக்கப்பட்டுள்ள அறை முழுவதும் புகை மண்டலமாகி இருந்துள்ளது.
கதவைப் பூட்டியதும் லோ ப்ரஷர் நோயாளியான அலாவுதீன் புகை மண்டலத்தில் சிக்கி மூச்சுத் திணறி இறந்து விட்டார்.
அதிக நேரமாகியும் கதவு திறக்காதது கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் கதவைத் திறக்க தர்ஹா நிர்வாகிகளிடம் கோரியதும் கதவு திறக்கப்பட்டது மரக் கட்டையாக கிடந்த அலாவுதீனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் குடும்பத்தினர்.
ஏக இறைவனுக்கு இணைவைத்த நிலையில் மரணித்த இவருடைய மறுமை வாழ்வை நினைக்கும் போது நெஞ்சு கணக்கிறது.
மன்னிப்பு கிடையாது அல்லாஹ் எச்சரிக்கிறான்.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
திருக்குர்ஆன் 4:48.
இன்னும் எத்தனைப் பேரை நரகிற்கு அனுப்பும் பணியை இந்த தர்ஹா நிர்வாகிகள் செய்வார்களோ தெரியாது ?
மறுமையில் மனிதர்களின் கால்களில் மிதிபடும் தர்ஹா நிர்வாகிகள்.
இவர்களால் நரகிற்கு அனுப்பப்படுபவர்கள் மறுமையில் அவர்களால் காலில் இட்டு மிதிக்கப்படுவார்கள் என்பதை அறிய வில்லை? அல்லது அறிந்தும் மறுக்கின்றனர்.
எங்கள் இறைவா! ஜின்களிலும், மனிதர்களிலும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டு! அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம் என்று (ஏக இறைவனை) மறுத்தோர் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 41:29
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!
திருக்குர்ஆன் 7:194
அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:18)
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் 'நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்' (என்பதைக் கூறுவீராக!)
(அல்குர்ஆன் 2:186)
எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! 'அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 7:191 195)
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:106)
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன் 22:73)
அல்லாஹ்வை தவிர எவரும் யாரையும் அழிக்கவோ காக்கவோ முடியாது என்று உறுதியாக நம்புவோம்.
எந்த அவ்லியாவிற்கும் எந்த சக்தியும் கிடையாது என்று சவால் விடுகிறோம். உண்மையில் அவ்லியாவிற்கு சக்தியிருந்தால், தவ்ஹீத் கொள்கையை ஏற்றுள்ள மக்களின் மீது கை வைத்து பார்க்கட்டும்.
நன்றி அதிரை பாருக் (சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது)
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.