காவல்துறை மிருகங்களைக் கண்டித்து விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும் நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ள யுத்தத்திற்கு பதிலடி கொடுக்கும் மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.திருவல்லிக்கேணியில் 29-12-2012 சனிக்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்படும்.பீஜே அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.இன்ஷா அல்லாஹ் இந்தக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும், சிறைக்கு முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்
29 -12-2012 அன்று நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்துக்கும் அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டத்திலும் பங்கு கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது.
அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது, அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் நடந்த அசம்பாவிதங்களால் முஸ்லிம்களின் போராட்டத்தை நாங்கள் இப்படித்தான் எதிர்கொள்வோம் என்று திமிராகப் பேசிய DC கிரி என்பவனையும் AC செந்தில் குமரன் என்பவனையும் பதவி நீக்கம் செய்யாமல் முஸ்லிம் சமுதாயம் ஓயாது என்பதை உணர்த்தி எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.