Sunday, December 02, 2012

அதிரையில் நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு கண்டன ஆர்ப்பாட்டம்


அதிரையில் கல்லூரி மாணவன் ஹாஜா முஹைதீன் என்பவரை படுகொலை செய்த கொலை குற்றவாளியை குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரி மாபெரும் சமுதாய விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்பாட்டம் அதிரை பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது

இதில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர்.பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார். இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...!

போராட்டத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட இயக்கத்தவர்கள் இரவோடு இரவாக கிழித்துள்ளனர் எப்படியாவது கூட்டத்தை தடுத்துவிடலாம் என்று எண்ணியவர்களின் கனவு கனவாகவே போனது. அல்ஹம்துலில்லாஹ். 

அதிரையில் இவர்களால் தாக்கப்பட்டவர்களையும் அல்தாஃபி அவர்கள் பட்டியல் போட்டார்.

இந்த பேராட்டத்தில் இயக்க வேறுபாடுகளை எல்லாம் மறந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர் 









2 கருத்துரைகள் :

அஸ்ஸலாமு அழைக்கும்
நேற்றைய ஆர்ப்பாட்டத்தை பொருத்தவரையில் எந்த ஓர் அமைப்பும் சாராத கூட்டமாகத்தான் இருக்கும் என்று நினைத்து சென்றேன். ஆனால் போனபிறகு தான் அது டீ.என்.டீ.ஜெ அமைப்பினரால் நடத்தப்படுகின்ற ஆர்ப்பட்டம் என்று தெரியவந்தது,
கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு நமதூர்
எ ஜெ பள்ளிவாசல் சுவற்றை இடித்த கயவனை கைது செய்ய கூறி அணைத்து ஜமாஅத் தார்களும் இணைந்து நடத்திய கண்டன ஆர்பட்டத்தில் டி என் டி ஜெ கலந்து கொள்ளாமல் பின்வாங்கியது ஏன்?

இன்று நடத்திய ஆர்பட்டத்தில் ஏன் உங்கள் அமைப்பு கொடியை பயன்படுத்தியது.
எத்தனை ஊர்களில் உங்கள் அமைபினரால் பிளவு பட்டு பிரச்சனைகள் ஏற்படுத்தி இருகிறிர்கள் அதை எல்லாம் மறைத்து விட்டு நீங்கள் கண்டனம் தெரிவித்தல் என்ன நியாயம்?

//அஸ்ஸலாமு அழைக்கும்
நேற்றைய ஆர்ப்பாட்டத்தை பொருத்தவரையில் எந்த ஓர் அமைப்பும் சாராத கூட்டமாகத்தான் இருக்கும் என்று நினைத்து சென்றேன். ஆனால் போனபிறகு தான் அது டீ.என்.டீ.ஜெ அமைப்பினரால் நடத்தப்படுகின்ற ஆர்ப்பட்டம் என்று தெரியவந்தது, //

வஸ்ஸலாம்

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும். தவ்ஹீத் ஜமாஅத் தான் அந்த பேராட்டத்தை நடத்துகிறது என்று ஊருக்கே தெரியும். தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வால் போஸ்டர், பிட் நோட்டிஸ் வழங்கப்பட்டது உங்களுக்கு தெரியாமல் போனதா ?

//கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு நமதூர் எ ஜெ பள்ளிவாசல் சுவற்றை இடித்த கயவனை கைது செய்ய கூறி அணைத்து ஜமாஅத் தார்களும் இணைந்து நடத்திய கண்டன ஆர்பட்டத்தில் டி என் டி ஜெ கலந்து கொள்ளாமல் பின்வாங்கியது ஏன்?//


ஏ.ஜே பள்ளி பிரச்சினையில் தவ்ஹீத் ஜமாஅத் மிச்சிங் சமாத்துகளுடன் சேர்ந்து போராடவில்லை என்பது 100 சதம் உண்மை. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஒற்றுமையை விட குர்ஆன் ஹதீஸ் போதனைகள் முக்கியம். ஒற்றுமை சமாத் கடையடப்பு என்று இஸ்லாத்திற்கு எதிரான செயலை கையில் எடுத்தது. நியாயத்திற்காக போராடும் தவ்ஹீத் ஜமாஅத் எந்த ஒருநிலையிலும் அப்பாவிகள் பாதிக்கப்படுவதை ஏற்காது. ஏ.ஜே பள்ளி பிரச்சினையில் தவ்ஹீத் ஜமாஅத் தனித்து எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டது என்பது நடுநிலையானவர்களுக்கு நன்றாக தெரியும்.

சமீபத்தில் சென்னையில் அமெரிக்காவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் தனியாக பேராடியது. எந்தவித அசாம்பாவிதமும் நடக்கவில்லை. ஒற்றுமை என்று சொல்லி பல இயக்கங்கள் சேர்ந்து நடத்திய போராட்டத்தில் கல் எறிந்த காரணத்தினால், எத்தனை சகோதரர்கள் காவல்துறையால் அடித்து துவைக்கப்பட்டார்கள் என்று தெரியுமா?

//இன்று நடத்திய ஆர்பட்டத்தில் ஏன் உங்கள் அமைப்பு கொடியை பயன்படுத்தியது. //

தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தும் போது, தவ்ஹீத் ஜமாஅத் கொடியை பயன்படுத்தாமல் யாருடைய கொடியை பயன்படுத்த வேண்டும் என்று நினைகிறீர்கள் ? கொலை செய்யப்பட்ட சகோதரரின் பெற்றோர்களும் உறவினர்களும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கடிதம் கொடுத்து போராட்டம் நடத்த சொன்னார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தில் இருந்த நியாயத்தை உணர்ந்த தமுமுகவினர் கூட இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத்தை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களே வேண்டுகோள் விடுத்தார்கள் தெரியுமா?

ஒரு கொலை நடந்துள்ளது, அதை கண்டிக்க காணோம். தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தில் எப்படி தப்பு கண்டுபிடிக்கலாம் என்று யோசிக்கிறீர்கள்.




//எத்தனை ஊர்களில் உங்கள் அமைபினரால் பிளவு பட்டு பிரச்சனைகள் ஏற்படுத்தி இருகிறிர்கள் அதை எல்லாம் மறைத்து விட்டு நீங்கள் கண்டனம் தெரிவித்தல் என்ன நியாயம்?//




எதையும் மறைத்து ஏமாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. என்ன தவறு செய்தோம் என்று பட்டியல் போடுங்கள்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.