Sunday, December 02, 2012

சமூக விரோதிகளை கண்டித்து அதிரையில் நடந்த ஆர்ப்பாட்டம் (வீடியோ )


அதிரையில் கல்லூரி மாணவன் ஹாஜா முஹைதீன் என்பவரை படுகொலை செய்த கொலை குற்றவாளியை குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரி மாபெரும் சமுதாய விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்பாட்டம் அதிரை பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது

இதில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர்.பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார். இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...!

போராட்டத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட இயக்கத்தவர்கள் இரவோடு இரவாக கிழித்துள்ளனர் எப்படியாவது கூட்டத்தை தடுத்துவிடலாம் என்று எண்ணியவர்களின் கனவு கனவாகவே போனது. அல்ஹம்துலில்லாஹ்.

அதிரையில் இவர்களால் தாக்கப்பட்டவர்களையும் அல்தாஃபி அவர்கள் பட்டியல் போட்டார்.

இந்த பேராட்டத்தில் இயக்க வேறுபாடுகளை எல்லாம் மறந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர் 





0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.