என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46). மேற்கண்ட வார்த்தைகள் ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது கடைசியாகப் புலம்பிய வார்த்தைகள். இதே வார்த்தைகளைத் தான் “திருக்குர்ஆன் இறைவேதமே!” என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் விவாதத்தின் இறுதியில் சொல்லி புலம்பிக் கொண்டு சென்றிருப்பார்கள் என்று நினைக்கின்றோம்.
அந்த அளவிற்கு அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் “திருக்குர்ஆன் இறைவேதமே!” என்ற தலைப்பில் கிறித்தவ போதகர்களுடனான விவாதம் சிறப்பாக நடந்து முடிந்தது.
கடந்த 28, மற்றும் 29 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமயகத்தில் வைத்து நடைபெற்ற விவாதத்தில் பீஜே தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுவினர் கிறித்தவ போதகர் ஜெர்ரி தாமஸ் குழுவினரோடு விவாதித்தனர். தரப்புக்கு தலா 25 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக சான் தரப்பினர் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் நம்முடன் இந்தத் தலைப்பில் விவாதிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு, விவாதத்திற்கு முந்தைய நாள் நள்ளிரவு 1.40க்கு விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்தால் நாங்கள் வரமாட்டோம் என்று கூறி விவாதத்திலிருந்து நழுவி ஓடினர். விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம் என்று நாம் ஒப்புக் கொண்டால் தான் விவாதத்திற்கு வருவோம் என்று விடாப்பிடியாக அவர்கள் இருந்ததால், இவர்களுடன் இந்தத் தலைப்பில் விவாதித்தே ஆக வேண்டும்.
இவர்களை விட்டுவிடக்கூடாது என்று முடிவெடுத்து நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்ற அவர்களது நிபந்தனையையும் ஏற்று இந்த விவாதத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்.
ஆரம்பமே அதிர்ச்சி:
ஜனவரி 21, 22 ஆகிய நாட்களில் நடைபெற்ற “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாதத்தில் அவர்களுக்கு நாம் வைத்த அந்த விஷப்பரீட்சை அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இதுவரை இன்னும் மீளவில்லை என்பது இந்த வாதத்திலும் நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்தது.
சென்ற வாதத்தில், “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் “பைபிள் இறைவேதம் தான்” என்பதற்கு ஒரு சான்றைக்கூட எடுத்து வைக்கவில்லை. மாறாக நாம் பைபிளிலிருந்து காட்டிய ஆபாசங்களுக்கும், கேவலங்களுக்கும், உளறல்களுக்கும் விளக்கம் சொல்ல முடியாமல் திணறிப்போய் பைபிளைப் போலவே தாங்களும் உளற ஆரம்பித்தனர்.
ஆனால், “திருக்குர்ஆன் இறைவேதமே!” என்ற இந்தத் தலைப்பில், இந்த வேதம் படைத்த இறைவனிடத்திலிருந்துதான் வந்தது என்பதையும், இது அவனுடைய வேதம் தான் என்பதையும் நிரூபிக்கும் வகையில் அடுக்கடுக்கான சான்றுகள் எடுத்து வைக்கப்பட்டன.
எதிர்த்தரப்பினரை ஆட்டம் காண வைத்த அடுக்கடுக்கான சான்றுகள் :
- இது போன்றதொரு குர்ஆனை கொண்டு வரமுடியுமா? என்ற திருக்குர்ஆனின் அறைகூவல்
- குறைந்த வார்த்தையில் அதிகப் பொருள் தரக்கூடிய திருமறையின் நடை
- சிந்தித்துப் பார்க்கச் சொல்லி சிந்தனையைத் தூண்டக்கூடிய வான்மறையின் வழிகாட்டல்
- எளியநடையில் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ள திருக்குர்ஆனின் நடை
- முஹம்மது நபிக்கு இந்த வேதத்தில் பங்கு இல்லை என்ற தெளிவான, திட்டவட்டமான அறிவிப்பு
- தீமையைத் தூண்டாத தெளிவான வழிகாட்டுதல்கள்
- இறைவனது இலக்கணக்கங்களைத் தெளிவுபடுத்தும் வேதம்
என்று தர்க்க ரீதியாக “இது இறைவனுடைய வேதம் தான்” என்பதை நிரூபிக்கும் வகையிலான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதிசயிக்க வைத்த அறிவியல் சான்றுகள் :
1400 ஆண்டுகளுக்கு முன் அருளப்பட்ட இந்த வேதத்தில், எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வேதத்தில், இந்த நூற்றாண்டு மனுதனுக்குக்கூட தெரியாத எண்ணற்ற அறிவியல் சான்றுகள் உள்ளனவே? இது எப்படி முஹம்மது என்ற எழுதப்படிக்கத் தெரியாத மனிதனுக்குத் தெரியும்? படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியக்கூடிய பற்பல அறிவியல் உண்மைகளை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லுகிறார்கள் என்றால் இது படைத்த இறைவனிடம் இருந்துதான் வந்துள்ளது என்பது நிரூபணமாகின்றது என்று கூறி அடுக்கடுக்கான அறிவியல் சான்றுகள் அள்ளிவைக்கப்பட்டன.
காட்டப்பட்ட அறிவியல் சான்றுகளில் சில:
- வேதனையை உணரும் நரம்புகள் மனிதனது தோல்களில் தான் உள்ளன
- தேனியின் வயிற்றிலிருந்து தான் தேன் உருவாகின்றது என்ற அதிசயம்
- மலைகளை முளைகளாக ஆக்கியுள்ளோம் என்ற அறிவியல் உண்மை
- மனிதனது மூளையில் முன்னெற்றி பாகம் தான் பொய் சொல்லத் தூண்டுகின்றது என்பதற்கான சான்று
- கால்நடைகளில் பால் உற்பத்தியைப் பற்றி குர்ஆன் தத்ரூபமாக விளக்கும் அதிசயம்
- மலையின் உச்சி அளவுக்கு மனிதன் பூமிக்கு அடியில் போக முடியாது என்று திருக்குர்ஆன் விடுக்கும் சவால்
- விந்து வெளியேறும் இடத்தை விவரிக்கும் திருமறையின் அற்புதம்
- பூமியைக் கடந்து செல்ல முடியும்; அதற்கு ஆற்றல் தேவை என்ற திருமறையின் வழிகாட்டல்
- விண்வெளிப் பயணத்தின் போது இதயம் சுருங்கும் என்று சொல்லும் திருமறையின் அதிசயம்
- குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஆண் தான் தீர்மானிக்கின்றான் என்ற அறிவியல் உண்மை
- திருக்குர்ஆன் விவரிக்கும் பெருவெடிப்புக் கொள்கை
- இரும்பு விண்ணிலிருந்துதான் இறக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம்
இப்படி அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களை நாம் அள்ளிப்போட்டவுடன் செய்வதறியாது திகைத்த கிறித்தவ போதகர்கள் ஏதேதோ சொல்லி சமாளித்துப் பார்த்தனர். முடியவில்லை.
தங்களை அறியாமல் ஒப்புக் கொண்ட எதிர்த்தரப்பினர் :
இறுதியில் இவைகளை மறுக்க வழியில்லாமல், விஞ்ஞான உண்மைகள் இருந்தால் அது இறைவனுடைய வேதமாக ஆகிவிடுமா? என்று அறிவுஜீவிகளைப் போல கேள்வி கேட்டனர். மேலும், மேற்கண்ட அறிவியல் உண்மைகளையெல்லாம் முஹம்மது என்ற எழுதப்படிக்கத் தெரியாத மனிதருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம். வேறு ஏதோ ஒரு சக்திதான் அவருக்கு இதைச் சொல்லிக் கொடுத்துள்ளது. அது கெட்ட ஆவியாகத்தான் இருக்கும் என்று உளற ஆரம்பித்து விட்டனர்.
அப்படியானால், கெட்ட ஆவிக்கு எப்படி இவ்வளவு அறிவியல் உண்மைகளும் தெரியும்? என்று நாம் கேட்க அவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்ல இயலவில்லை.
கடவுளை மகிமைப்படுத்துவது கடவுளுடைய வேதமா? அவரைக் கேவலப்படுத்துவது கடவுளுடைய வேதமா?
மேலும், இறைவனுடைய வேதம் என்றால் அதைப் படித்தாலே இது கடவுளிடத்திலிருந்து தான் வந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். திருமறைக்குர்ஆன் அவ்வாறுதான் உள்ளது. இந்த அற்புத வேதத்தில்,
- உளறல் இல்லை
- முரண்பாடுகள் இல்லை
- ஆபாசங்கள் இல்லை
- அசிங்கங்கள் இல்லை
- தரங்கெட்ட வார்த்தைகள் இல்லை
- அருவறுப்பு இல்லை
- இறைவனைக் கேவலப்படுத்துதல் இல்லை
- கேவலமான சட்டங்கள் இல்லை
- பொய்கள் இல்லை
என்று மேற்கண்ட செய்திகளை நிறுவியதுடன் கிறித்தவ போதகர்களுக்கு உரைக்கும் வண்ணமும், ஏற்கனவே அவர்கள் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் திருக்குர்ஆனை இழுத்ததன் காரணமாகவும் மேற்கூறிய அத்தனை அபத்தங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படும் பைபிள் எப்படி இறைவேதமாக இருக்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டு கீழ்க்கண்ட கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன.
1. யாக்கோபுடன் கர்த்தர் சண்டை போட்டு தொடைச்சந்துக்குள் கையைவிட்டு யாக்கோபின் மர்ம உறுப்பை கர்த்தர் பிடித்தது நியாயமா?
2. தந்தையே தான் பெற்ற மகளை திருமணம் முடிக்கலாம் என்ற கேவலத்தை சட்டமாக பைபிள் சொல்லலாமா?
3. உடலுறவு கொண்ட பின்பு தனது மனைவி கன்னிதானா என்பதை சோதிக்க பாதிரியாரிடம் கூட்டிக்கொண்டு போகச் சொல்லி பைபிள் சொல்லும் சட்டம் சரிதானா?
4. அடிமைப்பெண்களுடன் உடலுறவு வைக்கலாம் என்று அல்லாஹ் கூறும் சட்டத்தை விமர்சிக்கும் நீங்கள் உங்களது வேதத்தில் அண்ணன் பொண்டாட்டியை தம்பி அனுபவிக்கலாம் என்று எழுதி வைத்துள்ளீர்களே இது நியாயமா?
5. உங்களது பைபிளில் புருஷசம்யோகத்தை அறியாத இளசுகளாகப் பார்த்து உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது சரியா?
6. ஒருவன் செய்த தவறுக்காக அவன் பொண்டாட்டியை அடுத்தவன் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி சாபம் போடும் கர்த்தரின் சாபம் சரிதானா?
7. ஊனமுற்றவனும், கூனனும், குருடனும், ஆணுறுப்பு அறுக்கப்பட்டவனும், விதை நசுங்கியவனும் கர்த்தருடைய சபைக்குள் வரக்கூடாது என்று சொல்லி அநீதியிழைக்கும் கர்த்தரின் சட்டம் சரியா?
8. இறந்த சிங்கத்தின் உடலுக்குள் தேனீ கூடுகட்டுவதாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதே! இது நடக்குமா?
9. இராஜாக்களின் முலைப்பாலை குடிக்கச் சொல்லி பைபிள் போடும் கட்டளையை எப்படி நிறைவேற்றுவீர்கள்?
10. சிம்சோன் என்ற நல்லவர்(?) செய்த சில்மிஷங்களின் பட்டியல்களுக்கு பதில் என்ன?
11. ஒரு வயது போன தாத்தாவை வளைத்துப் போட தனது மருமகளுக்கு வழிகாட்டிய மாமியாரின் மன்மத லீலைகளுக்கு பதில் என்ன?
12. வீட்டுக்கு குஷ்டரோகம், ஆடைக்கு குஷ்டரோகம் என்று பைபிள் சொல்லும் அதிசய குஷ்டரோகத்திற்கு உங்களது பதில் என்ன?
13. மாதவிடாய்ப் பெண்களைத் தொட்டால் தீட்டு, அவள் உட்கார்ந்த இடத்தைத் தொட்டால் தீட்டு, தொட்டவனைத் தொட்டால் தீட்டு என்று கொடுமையான சட்டத்தை பைபிள் சொல்லக் காரணம் என்ன?
14. சபையில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லி பெண்ணுரிமையை(?) பைபிள் பேணக்கூடிய லட்சணம் என்ன?
15. ஸ்தீரியிடத்தில் பிறந்தவன் சுத்தமாவதில்லை என்ற பைபிள் கூற்றுப்படி ஏசு அசுத்தமானவரா?
16. விருத்தசேதனம் செய்யாதவன் ஜெருசலத்திற்குள் வரமாட்டான் என்று பைபிள் சொல்லும் முன்னறிவிப்பு பொய்யாகி விட்டதே!
17. சிரங்கு வந்த மொட்டைத்தலையனோ அரை மொட்டையனோ தீட்டு, தீட்டு என்று கத்தினால் சொறி, சிரங்கு போய்விடும் என்று பைபிள் சொல்லும் அற்புதச் சட்டத்தின் விளக்கம் என்ன?
18. பைபிளில் சொல்லிக் காட்டியுள்ளபடி கர்த்தர் அம்மணமாகத்தான் ஓடுவாரா?
19. பைபிளில் சொல்வது போல கர்த்தர் ஆந்தையைப் போல அலறி, நரியைப் போல ஊளையிடுவாரா?
20. கர்த்தர் மனஸ்தாபப்பட்டு இளைத்துப் போவாரா?
21. நான் ஒரு லூசு என்று பவுல் பைபிளில் தன்னைப்பற்றி சுய அறிமுகம் செய்கிறாரே! அந்த பைத்தியம் எழுதி வைத்தவை எப்படி வேதமாக முடியும்?
22. இது எனது அபிப்பிராயம் என்று பவுல் சொல்லுவதெல்லாம் வேதமா?
23. நான் விசாரித்து அறிந்ததை சொல்லுகின்றேன் என்று லூக்கா சொல்லுவது உங்களுக்கு வேதமா?
24. ஏசுவுக்கு முத்தம் கொடுத்து அதுவும் ஓயாது முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்து காலில் தைலம் பூசிவிட்டாளே! அந்தப் பெண்ணை ஏசு தடுக்காமல் காலைக் காட்டிக் கொண்டிருந்ததேன்?
25. விதவையையும், விவாகரத்தான பெண்ணையும் திருமணம் முடிக்கக்கூடாது என்பதுதான் கர்த்தர் சொல்லும் அற்புதச் சட்டமா?
26. ஓணான் என்பவன் தனது விந்தை தனது அண்ணன் பொண்டாட்டியோடு உடலுறவு கொள்ளும் போது தரையில் விட்டதற்காக அவனை தண்டித்த கர்த்தர், அவளோடு விபச்சாரம் செய்ததைக் கண்டிக்காதது ஏன்?
27. ஏசுவை கெட்ட நட்த்தை உள்ளவர் என்று பைபிளை ஆங்கிலத்தில் வெளியிட்ட கிங் ஜேம்ஸ் என்ற மன்னர் சொல்லியுள்ளாரே! அதுக்கு உங்கள் பதில் என்ன?
28. திருக்குர்ஆன் மறுமையில் கிடைக்கும் பேறுகளைக் குறிப்பிட்டு சொல்லும் வசனங்களைக் கொச்சையாகச் சொல்லுகின்றீர்களே, ஒரு மனைவியை விட்டவனுக்கு அது போல நூறு மனைவி கிடைக்கும் என்று சொல்லித்தானே ஏசு உங்களையும் ஊழியம் செய்யக் கூப்பிடுகின்றார். உங்களுக்கு மட்டும் அது நியாயமா?
29. ஒருவனை சபிக்கின்றோம் என்ற பெயரில் கூறுகெட்டதனமாக கர்த்தர் சபிப்பதாக பைபிளில் உள்ளதே! அது சரியா?
30. கடவுளைத் துதிப்பதாக வரும் இடங்களில் கூட மச்சங்களே! ஆழங்களே! கிழவிகளே! குமரிகளே! பெரியோர்களே! தாய்மார்களே! என்ற ரீதியில் பைபிள் வழ வழா என்று பேசுகின்றதே! இதுதான் இறைவேதமா?
இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நாம் கேட்க, ஆடிப்போன சான் தரப்பினர் திருக்குர்ஆனுக்கு முன்னால் சரண்டர் ஆகிவிட்டனர்.
சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை :
மேற்கண்ட பழமொழி இவர்களுக்கு கனகச்சிதமாக பொருந்திப்போகும். காரணமென்னவென்றால், முதலில் திருக்குர்ஆன் அனைத்து விஷயத்திற்கும் தீர்வு சொல்லும் வேதம் என்கின்றீர்களே! அப்படியானால், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற வணக்கங்கள் குறித்து முழுமையாக குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? என்ற ரீதியில் தான் முக்கால் வாசி கேள்விகளை எழுப்பினர்.
அதற்குரிய விளக்கமும் குர்ஆனிலேயே உள்ளது. நபியவர்கள் வசனங்களை ஓதிக்காட்டிய பிறகு, தான் ஓதிக்காட்டிய வசனங்களுக்கு விளக்கம் சொல்லுவதற்காகத்தான் அல்லாஹ் தனது நபியை அனுப்பியதாக கூறுகின்றான். அவர்களது விளக்கத்தில் இதற்கான விபரங்கள் உள்ளன என்று பீஜே சொல்லச் சொல்ல திரும்பத் திரும்ப கேட்ட அதே கேள்வியையே சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பது போல ஜெர்ரி தாமஸ் கேட்டுக் கொண்டே இருந்தது மிகவும் கேலிக்குரியதாக இருந்தது.
குர்ஆனில் முரண்பாடு என்று சொல்லிக் கொண்டு அவர்கள் வைத்த வாதங்கள் சிறுபிள்ளைத்தனமாக அமைந்திருந்தன.
குர்ஆனில் எழுத்துக்கள் மாறியுள்ளனவே! அவைகளை ஒரு சில நபித்தோழர்கள் மாற்றி ஓதியுள்ளனரே! என்று பெரிய பட்டியல் வாசிக்க, அவை எதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஏனெனில் அவை ஓரிருவர் அறிவிக்கக்கூடிய செய்திகள்; திருக்குர்ஆன் என்பது கல்வியாளர்களின் உள்ளங்களில் பாதுகாக்கப்படும் என்று இறைவன் சொல்லியுள்ளான். தற்போது கோடிக்கணக்கான மக்கள் மனனம் செய்து வைத்துள்ள மூலப்பிரதிகளுக்கு மாற்றமாக உள்ள இந்தச் செய்திகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொன்னவுடன் அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் விழிபிதுங்கினர்.
விவாதத் துளிகள் :
- விவாதத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும், அவ்வாறு ஒளிபரப்பு செய்தால் நாங்கள் விவாதிக்க வரமாட்டோம் என்றும் சொல்லி அதை ஒரு நிபந்தனையாக்கியதால், இணையதளத்தில் நாம் ஒளிபரப்பு செய்ய முடியவில்லை
- ஆனால், தமிழகம் மற்றும் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாநிலத் தலைமையகத்தை தொடர்பு கொண்ட நமது சகோதரர்கள் ஆவலோடு அவ்வப்போது விவாதத்தின் நிலவரங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.
- உலகத்தின் பல பகுதிகளிலிருந்துமுள்ள நமது சாகோதரர்கள் வைத்த வேண்டுகோளுக்கிணங்க விவாதம் முடிந்த மறுநாள், 30.04.12 திங்கள் மற்றும் 01.05.12 செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள், “ஆன்லைன் பீஜே” இணையதளத்தில் விவாதத்தை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது.
- இதற்கு பிறகு தான், பல நாடுகளிலிருந்துமுள்ள இணையதள நேயர்களின் அன்புத் தொல்லை கொஞ்சம் குறைந்தது.
- பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத டிவிடிக்களில் ஒளிப்பதிவு செய்யும் போது நாம் எந்தக் கூடுதல் குறைவும் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பிரேமிலும் நேரத்தை குறிப்பிட்டு ஒளிப்பதிவு செய்திருந்தோம்.
- ஆனால், ஒப்பந்தத்திலும் இவ்வாறு தான் நேரத்தோடு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று இருக்கும் நிலையில் சான் தரப்பினர் தங்களது இணையதளத்தில் யூ ட்யூப் இல் வெளியிட்ட வீடியோவில் நேரம் பதிவு செய்யப்படாமல் இருந்ததை சுட்டிக்காட்டி இந்த விவாதத்திலாவது ஒப்பந்த அடிப்படையில் நேரப்பதிவோடு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது.
- நமது தலைமையகத்தில் இந்த விவாதம் நடைபெற்றதால் நம் இடத்திற்கு வருகை தந்திருந்த கிறித்தவ தரப்பு விவாதக் குழுவினர், நல்ல முறையில் நாம் உபசரித்ததற்காக நமக்கு விவாத இறுதியில் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
- விவாதத்தில் ஒரு நபரை அழைத்து வந்திருந்தனர். அவர் திருக்குர்ஆன் வசனங்களை அரபியில் ஓதிக் காட்டினார். அதற்காகவே அவரைத் தேடிப்பிடித்து அழைத்து வந்திருந்தனர் போலும். அவர் குர்ஆன் வசனங்களையும் அரபி உச்சரிப்புகளையும் கொலை செய்தார்
- அவரை வைத்து ஒரு சில பைபிள் வசனங்களை அரபியில் வாசித்துக் காட்டிவிட்டு திருக்குர்ஆனைப் போல நாங்களும் கொண்டு வந்து விட்டோம் என்று ஜெர்ரி அவர்கள் காமெடி பண்ண, அதற்கு பீஜே இவர் அரபியில் வாசித்த லட்சணத்தை அரபி படித்தவர்களிடம் போய்க் கேளுங்கள். இவரைக்கொண்டு போய் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தான் சேர்க்கச் சொல்லுவார்கள் என்று சொல்ல சபையில் ஒரே சிரிப்பலை.
- விவாதம் செய்யும் போது எதிர்த்தரப்பில் விவாதித்த ஒரு நபர் கொஞ்சம் அதிகப் பிரசிங்கித்தனமாக தண்ணியடித்துவிட்டு வந்து உளறும் மனிதரைப்போல பேசிக் கொண்டு எழுந்து நின்று வரம்பு மீறினார். இது போன்ற போதையில் உளறும் ஆட்களையெல்லாம் இனிமேல் விவாதிக்க அழைத்து வரவேண்டாம் என்று பீஜே சொல்ல, ஜெர்ரியும் சபையிலேயே அந்த போதை பார்ட்டியைக் கண்டித்தார்.
- கிறுக்குத்தனமாகவும்,ஏட்டிக்குப் போட்டியாகவும் குர்ஆன் வசனங்களைக்காட்டி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சகோதரர் பீஜே அவர்கள் ஒவ்வொரு குர்ஆன் வசனங்களாக மேற்கோள்காட்டியும், லாஜிக்காகவும், பைபிள் வசனங்களை இணைத்தும் சொன்ன பதில்கள் ஆக்கப்பூர்வமாகவும், அறிவிப்பூர்வமாகவும் இருந்தன.
- கர்த்தர் தொடைக்குள் கையை விட்டு யாக்கோபின் மர்ம உறுப்பைத்தான் பிடித்தார் என்று கலீல் ரசூல் சொல்ல, அதற்கு ஆதாரம் கேட்ட எதிர்தரப்பினருக்கு கிரேக்க மொழியில் ஆணுறுப்பைத்தான் கர்த்தர் பிடித்தார் என்று வரும் ஆதாரத்தை எடுத்துக்காட்டியவுடன் கேட்டவர் கப்சிப்.
- தேனீக்கள் பூக்களில் உண்பதோடு மட்டுமல்லாமல், கனிகளிலும் உண்கின்றது என்று சொல்லும் குர்ஆன் வசனம் பொய் என்று ஜெர்ரி சொல்ல மறு அமர்விலேயே அதற்கான ஆதாரத்தை அள்ளிப்போட்டவுடன் ஜெர்ரியும் கப்சிப். இந்த நூற்றாண்டில் கூட இவர்கள் அறிந்து கொள்ளாத உண்மைகளையும் 1400 வருடத்திற்கு முன்பாக போகிற போக்கில் திருக்குர்ஆன் சொல்லியுள்ளது என்பதை நினைக்கும் போது “இது அல்லாஹ்வுடைய வேதம் தான் என்பது மறுபடியும் நிரூபணமாகின்றது.
விவாதத்தில் பீஜே சொன்னதை உண்மைப்படுதிய கிறித்தவ தரப்பு பார்வையாளர்கள் :
விவாத டிவிடிக்களை வெளியிட வெட்கப்பட்ட கிறித்தவ போதகர்கள்:
வாதத்தை துவக்கிய பீஜே அவர்கள் தனது முன்னுரையில் “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாதத்தில் பைபிள் இறைவேதமில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபித்தோம். எந்த அளவிற்கென்றால், “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாத டிவிடிக்களை நீங்கள் வெளியிட வெக்கப்படுகின்ற அளவிற்கு உங்களை அந்த விவாதம் தள்ளியுள்ளது என்ற உண்மையை தனது துவக்க உரையிலேயே போட்டு உடைத்தார்.
அதற்கு பதிலளித்த சான் தரப்பினர் நாங்களும் டிவிடிக்களை வெளியிட்டுள்ளோம் என்று சப்பைக்கட்டு பதிலை கொடுத்தனர். ஆனால், அவர்களது இந்த மழுப்பல் சில மணி நேரத்திலேயே வெளியானது.
உணவு இடைவேளையின் போது நம்மைச் சந்தித்த கிறித்தவ தரப்பிலிருந்து பார்வையாளர்களாக வந்து அமர்ந்திருந்த கிறித்தவ சகோதரர்கள் நம்மிடம் “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாத டிவிடிக்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. உங்களால் தர இயலுமா? என்று நம்மிடம் கேட்க, விவாத அரங்கத்திற்குள் ஒப்பந்தப் பிரகாரம் எதுவும் கொடுக்கக்கூடாது என்று இருப்பதால் அருகில் உள்ள எங்களது அலுவலகத்தில் டிவிடிக்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று பதிலளித்தனர். இந்த விஷயத்தை பீஜே அவர்கள் தனது உரையில் விவாதத்தின் இரண்டாவது அமர்வில் சுட்டிக்காட்டியவுடன் சான் தரப்பினர் முகம் சுருங்கிவிட்டது.
முதல் நாள் விவாதத்தின் இறுதியிலும், மறுநாள் விவாதம் முடிந்த பிறகும் பல கிறித்தவ சகோதரர்கள் நமது அலுவலகத்திற்கு வந்து விவாத டிவிடிக்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
வரும்! – ஆனா வராது!
ஆரம்பத்தில் பீஜே அவர்கள், தனது உரையில் இறைவனுடைய இலக்கணத்தை சொல்லக்கூடிய வேதத்தில் இப்படி கிறுக்குத்தனங்கள் இருக்கலாமா? என்று கேட்டு பைபிளில் உள்ள சில உளறல்களை பட்டியலிட்டார்.
அதற்கு ஆவேசமாக பதிலளித்த ஜெர்ரி அவர்கள், பைபிள் குறித்து கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் நாங்கள் பதிலளிப்போம் என்று ஒரு வேகத்தில் கூறிவிட்டார். பைபிளில் உள்ள கேவலங்களாஇயும், ஆபாசங்களையும், அசிங்கங்களையும், உளறல்களையும் அள்ளிப்போட்டப் போட செய்வதறியாது திகைத்தவர்கள், “இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லமாட்டோம்” என்று கூறி அந்தர்பல்டி அடித்தனர்.
பெண்ணுரிமை பேணும் லட்சணம் இதுதானா?
பெண்களை இஸ்லாம் அடிக்கச் சொல்கின்றது. பெண்களிடம் இஸ்லாம் தனது இஷ்டத்திற்கு அவர்களது கணவனை உடலுறவு கொள்ளச் சொல்லி அனுமதி வழங்குகின்றது. இது சரியா? என்று ஏதோ பெண்கள் மேல் ரொம்ப அக்கறையுள்ளவர்கள் போல கேள்விகளைக் கேட்டனர்.
அதற்கு விளக்கமும் அளித்துவிட்டு, இதைக் கேட்க உங்களுக்கென்ன அருகதை இருக்கின்றது என்று கேட்டு, கர்த்தர் அடுத்தவன் மனைவியை எடுத்து இன்னொருவனுக்கு கையளித்தாரே! இது தான் பெண்களுக்கு நீதி செலுத்தும் லட்சணமா? பாதிரியாரிடம் அழைத்து சென்று கன்னிப்பரிசோதனை செய்யச் சொல்லுவதும், விபச்சாரம் செய்துவிட்டாளா? இல்லையா? என்பதற்கு மனைவியை நாற்றமெடுத்த தண்ணீரை குடிக்கச் சொல்லுவதும், சபைகளில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லுவதும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களை பாடாய்ப்படுத்தி எடுப்பதும் தான் பெண்ணுரிமை பேணும் லட்சணமா? என்று கேட்க கடைசி வரைக்கும் வாய்திறக்கவில்லை.
விளக்கம் கொடுப்பது ஒப்புக் கொள்வதா?
“முத்ஆ” திருமணம் செய்வது சரியா?, அடைமைப் பெண்களுடன் உறவு வைக்கலாமா? என்ற ரீதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, “திருக்குர்-ஆன் என்பது, சிறுகச் சிறுக 23ஆண்டுகள் இறக்கப்பட்ட வேதம். ஆரம்பத்தில் அந்த மக்களிடத்தில் அறியாமைக்காலத்திலிருந்த பழக்க வழக்கங்களை ஒவ்வொன்றாகத்தான் இறைவன் தனது வேத அறிவிப்பின் மூலம் தடை செய்தான். அந்த அடிப்படையில் ஆரம்பகட்டத்தில் எப்படி வட்டி, மது போன்ற விஷயங்கள் அனுமதிக்கப்பட்டு, பிறகு தடை செய்யப்பட்டதோ அதைப் போல மேற்கண்ட பழக்க வழக்கங்களும் அந்த மக்களிடத்திலிருந்த நிலையில், பின்னர் வேத அறிவிப்பின் மூலம் தடுக்கப்பட்டுவிட்டது என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல பீஜே விளக்கமளித்தார். அனைத்தையும் கேட்டுவிட்டு தாங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்களை பீஜே ஒப்புக் கொண்டுவிட்டார் என்று சொன்னார்களே! பார்க்கலாம். இவர்களது சிந்தனைத்திறன் இவ்வளவு தான் என்பதை அங்கே தெளிவாக அறியமுடிந்தது.
விசித்திரமான விவாதம் :
ஒரு மாணவனுக்கு தான் பரீட்சை எழுதப் போவதற்கு பல மாதங்களுக்கு முன்பே அவனது தேர்வு வினாத்தாளை கொடுத்தால் எப்படியிருக்குமோ அதைப்போலத் தான் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி இவர்கள் ஓட்டமெடுத்த நாள் அன்றே, இப்போது வைக்கப்பட்ட விவாதத்தில் பெரும்பகுதி வைக்கப்பட்ட ஆதாரத்தையும், வாதங்களையும் நாம் வைத்துவிட்டோம். அந்த விவாதத்தை நாம் நேரடியாக “ஆன்லைன்பீஜே” இணையதளத்திலும் ஒளிபரப்பு செய்தோம். அதை நாம் நேரடி ஒளிபரப்பு செய்ததை பார்த்துவிட்டு வந்திருந்த இவர்களுக்கு அந்த வாதங்களுக்கு பதில் சொல்ல இயலவில்லை என்றால் உண்மையிலேயே இது ஒரு விசித்திரமான விவாதம் தான் என்று பீஜே தனது இறுதி உரையில் குறிப்பிட்டார்.
பீஜே தர்காவிற்கு போனது ஆதாரமாகுமா?
1986 ஆம் ஆண்டு பீஜே தனது பத்திரிகையில் சூனியம் உண்டு என்று சொன்னாராம். அதை நாங்கள் ஆதாரமாகத் தருகின்றோம் என்று கூறி சில ஆதாரங்களை மேற்கோள்காட்டினார்கள். நாங்கள் அறியாமல் இருந்த போது செய்த தவறை ஆதாரமாகக் காட்டுகின்றீர்கள். 1986 அல்ல அதற்கு இன்னும் சில வருடங்களுக்கு முன்னால் சென்று தேடிப்பார்த்தால் “தர்கா” தட்டு தகடு தாயத்தை நான் ஆதரித்ததற்கும் உங்களுக்கு ஆதாரம் கிடைக்கும். இதுவெல்லாம் ஒரு ஆதாரமா? என்று கேட்க அந்த கேள்வி அதோடு சப்பையாகிவிட்டது.
புளித்துப்போன பழைய கஞ்சி :
பரவலாக குர்-ஆனின் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு, சல்மான் ருஷ்டி என்ற கிறுக்கன் எழுதிய சாத்தானிய வேதம் என்ற நூலில் அவன் வைக்கும் குற்றச்சாட்டு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அதை குடித்துவிட்டு வந்தது போல வந்து பேசிக் கொண்டிருந்த சான் தரப்பு சகோதரர் ஒருவர், ஏதோ மிகப்பெரிய ஆதாரத்தை எடுத்து வைப்பது போல எடுத்து வைக்க, இதற்கு 1990ஆம் வருடத்திலேயே, “வேதம் ஓதும் சாத்தான்கள்” என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டு பதில் கொடுத்துவிட்டோம் என்று பதிலையும் பிரிண்ட் அவுட் எடுத்துக்காட்ட அந்த வாதம் புஷ் என்று போகிவிட்டது. இது புளித்துப்போன பழைய கஞ்சி என்பது அவருக்கு தெரியவில்லை போலும்.
தேவதூதர்களுக்கு எதுவும் பத்தாதா?
சுவனத்தில் அழகிய பெண்களை மணமுடித்து வைப்போம் என்று அல்லாஹ் சொல்லிக்காட்டும் வசனங்களை மேற்கோள்காட்டி இப்படித்தான் உங்கள் வேதம் உங்களை அழைக்கிறது என்று குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
அனைவரும் மரித்தவுடன் வானுலகத்தில் தேவ தூதர்களாக வாழ்வார்கள் என்பது கிறித்தவ நம்பிக்கை. அப்படியானால், வானிலுள்ள தேவ தூதர்கள் கீழுலகத்திற்கு இறங்கி வந்து இங்குள்ள பெண்களோடு உடலுறவு கொண்டார்கள் என்று ஆதியாகமத்தில் உள்ளதே. தேவதூதர்களுக்கு அங்கே கிடைப்பது போதவில்லை என்று தானே இங்கே இறங்கி வருகிறார்கள் என்றும், ஒரு மனைவியை தியாகம் செய்தால் உனக்கு நூறு மனைவி கிடைப்பாள் என்று சொல்லித்தானே ஏசுவும் உங்களை ஊழியம் செய்யக் கூப்பிடுகின்றார் என்றும் பீஜே கேட்க அமைதியானார்கள் ஊழியக்காரர்கள்.