அல்லாஹ்விடம் நமது கோரிக்கைகளை கேட்பது பாவம், அவ்லியாக்களிடம் தான் கேட்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தமிழக முஸ்லிம்கள் இருந்தார்கள். 1980களில் தவ்ஹீத் பிரச்சாரம் தலை எடுக்க தொடங்கியது முதல் இன்று வரை இணைவைப்பு சின்னங்கள் நாளுக்கு நாள் மங்கி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும், எங்களை நீங்கள் திருத்த முடியாது என்ற முடிவில் இருக்கும் சிலர் கப்ர் வணக்கத்தையும், கந்தூரி திருவிழாவையும் விடுவதாக இல்லை.
இந்த வருடம் மேலத்தெரு அவ்லியாவின் ஆசைகளை நிறைவேற்றும் வண்ணமாக, தாரை தப்பட்டைகளுடன் கந்தூரி ஊர்வலம் சிறப்பாக (?) நடைபெற்றது. தொழுகை நடைபெற்றாலும் தாரை தப்பட்டைகளை நிறுத்தாதே என்ற நஸ்ஸீருத்தீன் அவ்லியாவின் வேண்டுகோளை செயல்ப்படுத்தும் முகமாக தக்வா பள்ளியை கந்தூரி ஊர்வலம் நெருங்கும் போது, அவ்லியா பக்தர்கள் தாரை தப்பட்டை சத்தத்தின் மூலம் தொழுபவர்களுக்கு இடையூர்களை ஏற்படுத்தினார்கள். இதை தட்டி கேட்ட ஒருவரை பலமாக தாக்கியும் உள்ளார்கள், அவ்லியா பக்தர்கள்.
இந்த கட்டுரையில் இன்றைய காலகட்டத்தில் வாழும் முஸ்லிம் பெயர் தாங்கிகளுக்கும் மக்கத்து காஃபிர்களுக்கும் உள்ள ஒற்றுமை பற்றியும், கந்தூரி திருவிழாவை ஒழிக்க கையால வேண்டிய முறைகள் பற்றியும் சிலவற்றை விளக்க கடமைப்பட்டுளோம்.
மக்கத்து காஃபிர்களும் கப்ர் வணங்கிகளும்:
கப்ர் வணங்கிகள் பெயரில் முஸ்லிம்கள் என்று அழைக்கப்பட்டாலும், இவர்களின் செயல்களும் நடவடிக்கைகளும் மக்காவில் வாழ்ந்த காஃபிர்களின் செயல்களை தான் ஒத்துள்ளது. இதிலிருந்தே இந்த கப்ர் வணங்கிகள் எந்த பிரிவை சார்ந்தவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
மக்கா காஃபிர்களை பற்றி அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் போது, சீட்டி (விசீல்) அடிப்பதும் கை தட்டுவதையும் தவிர வேறு எதுவும் அவர்களின் வணக்கமாக இருக்கவில்லை என்கிறான்.
சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) அந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. "நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!" (என்று கூறப்படும்).
அல்குர்ஆன் (8:35)
இதை இன்றைய கப்ர் வணங்கிகளுடன் ஒற்று நோக்கி பாருங்கள். அல்லாஹ்வின் ஆலயத்தில் தொழுகை நடைபெறும் போது தாரை தப்பட்டைகளுனும் குத்துக் கும்மாளலங்களுடனும் வந்து பள்ளியில் தொழுபவர்களுக்கு தொல்லை தரும் இவர்கள் யார்? என்பதை சமுதாயம் என்று உணரப்போகிறது?
விநாயகரும் நஸ்ஸீருத்தீன் அவ்லியாவும்:
பொதுவாக முஸ்லிம்களின் பள்ளிகளுக்கு தொல்லை தருவது, பள்ளிகளில் தொழுகை நடைபெறும் போது தாரை தப்பட்டைகளுடன் வந்து தொந்தரவு செய்வது விநாயகரின் பக்தர்களுக்கு தான் விருப்பமாக இருக்கும். ஆனால், இதை செய்வதில் ஷேக் நஸ்ஸீருத்தீன் ஒலியுல்லாவின் பக்தர்களும் சலைத்தவர்கள் இல்லை என்பது முஸ்லிம்கள் இப்போது தான் உணர ஆரம்பித்துள்ளார்கள். இந்த மட அவ்லியா பக்தர்கள் காலம் காலமாக இவ்வாறு தான் செய்து வருகிறார்கள். இப்போது தான் சமுதாயம் கண்விழிக்க ஆரம்பித்துள்ளது.
யாரு என்றே அறிப்படாத ஒருவரை அவ்லியா என்று பட்டம் சூட்டி, பணம் பார்ப்பதற்காக போலி ஆலிம்கள் ஏற்படுத்திய இந்த செயல் இப்போது மக்கள் மத்தியில் அம்பலப்பட ஆரம்பித்துள்ளது.
கந்தூரி திருவிழாவை எப்படி ஒழிப்பது?
கந்தூரிகளும் கப்ர் வழிபாடும் அனாச்சாரம் என்றும், அது இஸ்லாத்திற்கு புரம்பானது என்றும் சமுதாயத்தில் பெரும்பாலனோர் உணர்ந்துள்ளார்கள். ஆனால், அவற்றை ஒழிப்பது எவ்வாறு என்பதில் சமுதாயத்தில் உள்ளவர்கள் ஒத்த கருத்தில் இல்லை. கந்தூரி விழாவை தடை செய்ய சொல்லி காவல்துறையிடம் முறையிட்டால் இவற்றை ஒழித்து விடலாம் என்று சிலர் நம்புகிறார்கள். காவல்துறையிடம் முறையிடுவதால் இதை கண்டிப்பாக துடைத்து எறிய முடியாது. காவல்துறை ஒரு பிரிவினருக்கு எதிராக செயல்படுவது கடினம். கந்தூரி போன்ற அனாச்சாரங்களை நடத்துபவர்கள் பெரும்பாலும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாக உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கந்தூரி அனாச்சாரங்களை நிறுத்த பாரபட்சனமின்றி சிலவற்றை செய்ய வேண்டும். அதை செய்யாவிடில், இவற்றை ஒரு போதும் தடுக்க இயலாது.
கந்தூரி விழாவில் வருபவர்கள் அனைவரும் மார்க்கம் அறியா பாமரர்கள். இவர்களின் மீது கோபப்படுவதை விட, நாம் பரிதாபம் தான் பட வேண்டும். காரணம், இந்த பாமரர்களுக்கு அவ்லியா பக்தியை ஊட்டி அவர்களை வழிகெடுத்தது யார் தெரியுமா? மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் உள்ள அபுஜஹல்கள் தான். இந்த பாமரர்களின் மீது காட்டும் கோபத்தை இந்த அபுஜஹல்களிடம் தான் காட்ட வேண்டும்.
* கந்தூரி விழாவில் வருபவர்களை கண்டு கோபப்படும் நாம், அதை பாத்திஹா ஒதி துவக்கி வைக்கும் போலி ஆலிம்களை கண்டு கோபப்படாதது ஏன்?
* கந்தூரி விழாவை பாத்திஹா ஒதி துவக்கி வைக்கும் போலி ஆலிம்களை பள்ளியில் இமாமாக வைத்து அழகு பார்த்து, அவர்களின் பின்னால் நின்று தொழுவது ஏன்?
* பள்ளிகளிலேயே அட்டாச்டு பாத்துரும் போல கப்ர்களை கட்டி வைத்துயிருக்கும் அனாச்சாரத்தை கண்டு பொங்கி எழாதது ஏன்?
* கந்தூரி விழாவிற்கு போஸ்ட் அடிக்கும் இயக்கத்தில் இருந்து கொண்டு, கந்தூரியை கண்டிப்பது ஏன்?
* நமது ஊரில் இருக்கும் மதரஸாவில் படித்து வெளியில் வரும் ஆலிம்கள் (?) மவ்லுத் மற்றும் கப்ர் வணக்கத்தை ஆதரிப்பவர்கள் தான் என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?
* ஊரின் மையப் பகுதியில் இருக்கும் ஒரு மதரஸாவின் முதல்வர் ஹஜ்ரத் கிப்லா அவர்கள், தன்னையே மகானாக காட்டி, தனது செருப்பை திருப்பி வைக்கவும், ஜூம்ஆவிற்கு சொல்லும் போது குடை பிடிக்கவும் அப்பாவி மாணவர்களை பயன்படுத்துவதை கண்டு நாம் கோபப்பட்டு இருக்கிறோமா?
* அவர் அந்த காலத்திலேயே குதிரை வண்டியில் இருந்து தவ்ஹீதை சொன்னவர் என்று போற்றப்படுபவர் வசிக்கும் பள்ளியில் ஹஜ்ரத் கிப்லா போடும் ஆட்டத்தை அந்த அறிஞர் என்றாவது கண்டித்து பேசியிருப்பாரா?
* ஊருக்கு ஊர் தப்லீக் சொல்லும் அன்பர்கள், நமது ஊரில் நடைபெறும் இந்த ஆனாச்சாரத்தை தடுக்க என்றாவது முயன்று இருப்பார்களா?
* பித்அத்தையும் ஷிர்க்கையும் ஒழிக்க அயராது உழைக்கும், தவ்ஹீத் ஜமாஅத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக செய்யும் உன்னாத (?) பணியோடு, இந்த ஷிர்க்கை ஒழிக்க என்றாவது யோசித்து இருக்கிறோமா?
* ஹஜ்ரத் கிப்லா நடத்தும் புகாரி சரீபில், கப்ர்களை இடிக்க சொல்லும், இணைவைப்பின் பயங்கரத்தை பற்றியும் பேசும் புகாரீ ஹதீஸ்களை என்றாவது கேட்டுள்ளோமா?
இவற்றை எல்லாம் சிந்திக்காமல், கந்தூரி ஊர்வலத்தில் ஆடும் அப்பாவிகளை கண்டு ஆத்திரப்படுவது சரியா? அவர்களின் மறுமை வாழ்வை நாசப்படுத்தும் போலி ஆலிம்களை களை எடுத்தாலே கப்ர் வணக்கம் தானாக ஒழிந்துவிடும்.
கந்தூரியை தடுக்க வராத அனைத்து முஹல்லா ஒற்றுமை:
ஒற்றுமையாக இருப்போம் என்ற போர்வையில் அனைத்து முஹால்லாவையும் சேர்த்து விட்டேம் என்று பெருமைப்படும், அனைத்து முஹால்லா கூட்டமைப்பு கந்தூரி வைபவத்தை தடுக்க முன்வரவில்லையே ஏன்?
பெண்களின் வாழ்க்கையை பாழாக்கி, பெண் சகோதரிகளுடன் பிறந்த சகோதரர்களின் வாழ்க்கை நாசப்படுத்தும் வரதட்சணையை தடுக்க அனைத்து முஹால்லா முயன்றது உண்டா?
எத்தனையே ஏழை குடும்பங்கள் வரதட்சணையின் கொரபிடியால் சிக்கி தவிர்க்கிறதே! இதை தடுக்காத ஒற்றுமை என்ன ஒற்றுமை?
இஸ்லாத்தை பின்பற்றுவதில் இல்லாத உங்களின் ஒற்றுமை எதற்கு? இனவெறிக்காக தான் உங்களின் ஒற்றுமையா?
கந்தூரியை தடுக்கும் வழிமுறை தான் என்ன?
கண்ணியத்திக்குரிய ஆலிம்கள் (?) எல்லாம் இவற்றை கண்டித்து பேசுவார்கள் என்று நம்பும் மடமையை விட்டெழித்து, கீழ்காணும் இறை வசனத்தில் அடிப்படையில் நமது பிரச்சாரத்தை வீரியப்படுத்தினால், இன்ஷா அல்லாஹ், இந்த இணைவைப்பு காரியம் ஒழிந்து போகும்.
உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!
அல்குர்ஆன் (15:94)
மேலும்,
பகிரங்க இணைவைப்பான கந்தூரி, கப்ர் வணக்கம், மௌலூது போன்ற ஈடுபடும் போலி ஆலிம்களை பள்ளி இமாமாக தொடர அனுமதிக்க கூடாது. இவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்
இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஜமாஅத் திருமணம் போன்றவற்றை நடத்தி வைக்க கூடாது (வரதட்சணை திருமணமத்தை நடத்துவதையும் நிறுத்தணும் சரியா?)
இது போன்ற இணைவைப்பு காரியங்களை பற்றி பேசினால், தங்களின் இமேஜ் போய்விடும் என்பதால், இதை பற்றி வாய்திறக்க மறுக்கும் ஆலிம்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்.