அதிராம்பட்டினம் T N T J கிளை சார்பாக 13.5.2012 அன்று தக்வாபள்ளி அருகில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்களும் சகோதரர் அப்துா் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிதராத எந்த செயலும் மார்க்கம் அல்ல என்றும் கந்தூரி தர்கா வழிபாடுகளை அனைத்துமக்களும் புறக்கணிக்கவேண்டும் என்றும்.
2. சமிப காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக எழுதிவரும் தினத்தந்தியை மக்கள் புறக்கனிக்கவேண்டும் என்ற தீர்மானமும்.
3. அதிரை பேரூராட்சி மக்களின் நலன் கருதி பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற அறிவிப்பை வறவேற்றும், இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.