கிறித்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த விவாத டிவிடிகளை இலவசமாக விநியோகிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டிய தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக அணிதிரளும் கொள்கைக் குன்றுகளைப் பாரீர்.
(கைக்கூலிகள் வெளியிட்ட பிரசுரம்)
வல்ல ரஹ்மானுக்கு பிள்ளை இருப்பதாக கூறி அவன் மீது அபாண்டத்தை சுமத்துவோரிடத்தில் அது தவறு என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதற்கு பல்வேறு பிரச்சாரப் பணிகளின் வாயிலாக டிஎன்டிஜே களம் கண்டு வருகின்றது.
அவற்றில் ஒரு பகுதி தான் கிறித்தவ பாதிரிகளுடனான தவ்ஹீத் ஜமாஅத்தின் தொடர் விவாதங்கள். இந்த விவாத டிவிடிக்களை இலவசமாக பெற வேண்டுமா? எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்ற வாசகங்களை போட்டு தவ்ஹீத் ஜமாஅத்தினர் வேலுர் மாவட்டம் – பேர்ணாம்பட்டில் ஒட்டிய சுவரொட்டிகளுக்கு கண்டனம் தெரிவித்துத்தான் இந்த துரோகிகள் ஓரணியில் திரண்டு இஸ்லாத்திற்கு எதிராகவும், திருக்குர்-ஆனுக்கு எதிராகவும் களம் கண்டுள்ளனர்.
கிறித்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியிலுள்ள சகோதரத்துவத்தை நாம் சீர்குலைக்கின்றோமாம். இப்படிப்பட்ட விவாதங்களை நடத்தி கிறித்தவ பாதிரிகளின் மனதைப் புண்படுத்துகின்றோமாம். எனவே நம்முடைய இந்த சத்தியப் பிரச்சாரத்தால் புண்பட்டுப் போன கிறித்தவர்களிடத்தில் இவர்கள் மன்னிப்பு கேட்கிறார்களாம்.
இஸ்லாமிய துரோகிகளே! நீங்கள் ஏன் இன்னும் இஸ்லாமிய வேடம் போட்டுக் கொண்டுள்ளீர்கள். அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து ஐக்கியமாகி விட வேண்டியது தானே!
இந்த கேடுகெட்டவர்கள் நம்மை ஒழிப்பதாக நினைத்துக் கொண்டு இஸ்லாத்தையும், திருக்குர்-ஆனின் போதனைகளையும் ஒழிக்க எத்தனித்துள்ளனர். நாம் கிறித்தவர்களது மனதை புண்படுத்தி விட்டதாக சொல்லி இவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்களே! இந்தக் கூறுகெட்ட இஸ்லாமிய துரோகிகளுக்கு சில திருமறை வசனங்களை சுட்டிக்காட்டுகின்றோம். இந்த திருமறையின் வசனம் நாம் அடித்த போஸ்டரை விட கடுமையானதாக இருப்பதால் திருக்குர்-ஆனில் அல்லாஹ் தவறாக சொல்லிவிட்டான். அதற்காக நாங்கள் வருந்துகின்றோம் என்று கூறி இந்த துரோகிகள் போஸ்டர் அடித்து ஒட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வல்ல இறைவன் தன்னுடைய திருமறையில் கூறிக்காட்டுகின்றான் :
"உஸைர் அல்லாஹ்வின் மகன்'' என்று யூதர்கள் கூறுகின்றனர். "மஸீஹ்அல்லாஹ்வின் மகன்'' என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?
அல்குர்ஆன் 9 : 30
மேற்கண்ட வசனத்தில் “அல்லாஹ் அவர்களை அழிப்பான்” என்று சொல்லிக்காட்டுகின்றானே, இதற்காக கிறித்தவர்களிடத்தில் மன்னிப்புக் கேட்கப்போகின்றீர்களா?
"மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும்,உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் கூறினார்.
அல்குர்ஆன் 5 : 72
மேற்கண்ட வசனத்தில் “அல்லாஹ் அவர்களுக்கு நிரந்தர நரகம்” என்று சொல்லியுள்ளானே, அதற்காக வருத்தம் தெரிவித்து அடுத்த போஸ்டர் அடித்து ஒட்டி அவர்களிடத்தில் சரணாகதி அடையப்போகின்றீர்களா?
இறுதி எச்சரிக்கை:
இப்படி அவர்களுடன் சேர்ந்து கொண்டு இஸ்லாத்திற்கு துரோகமிழைப்பீர்களானால், அவர்களுடைய தங்குமிடம் தான் உங்களுக்கும் என்பதை இப்போதைக்கு சொல்லி வைக்கின்றோம்.
தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் நரகத்திற்கு இப்பொழுதே முன்பதிவு செய்து கொள்ளாதீர்கள் என எச்சரிக்கின்றோம்.
நன்றி
உணர்வு