Sunday, April 01, 2012

அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தல்

ராஜ்முகம்மது MISC

இவ்வுலகத்தில் நாம் வாழும் போது இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமே அதே போல் மனிதருக்கு மத்தியில் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவது அதாவது ஒருவருக்கு ஒருவர் நன்மையான விஷயத்தில் உதவ வேண்டும் என்று அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான்.

நன்மையான விஷயத்திற்கு உதவுதல்

 நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் (புனிதச்) சின்னங்கள், புனித மாதம், ப­ப்பிராணி, (ப­ப் பிராணியின் கழுத்தில் அடையாளத்திற்காகப் போடப்பட்ட) மாலைகள், மற்றும் தமது இறைவனின் அருளையும், திருப்தியையும் தேடி இப்புனித ஆலயத்தை நாடிச் செல்வோர் ஆகியவற்றின் புனிதங்களுக்குப் பங்கம் விளைவித்து விடாதீர்கள்! இஹ்ராமி­ருந்து விடுபட்டதும் வேட்டையாடுங்கள்! மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீற­லும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.  அல்குர்ஆன் 5:2

நன்மையான விஷயங்கள் எண்ணற்ற செயல்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது, அதாவது போராட்டகளங்களை சந்திப்பதாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் போரட்டங்கள் நடந்ததில்லை. அதிகமான போர்களை சந்தித்துள்ளார்கள். நம்முடைய காலத்தில் போர்களை நடத்துவதற்கு சாத்தியமில்லை. அப்படி நடத்துவதாக இருந்தால் வீடு வாசல், சொத்து, சுகங்கள் அனைத்தையும் பறி கொடுத்து தன்னுடைய நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அந்தளவிற்கு முஸ்­லிம் சமுதாயம் இல்லை. ஆதலால் அதற்கு பகரமாக இருக்க கூடிய போரட்டங்களை நடத்துவதற்கு இஸ்லாத்தில் அனுமதியுள்ளது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் போராட்டங்கள் இல்லையென்றாலும் மற்ற நபிமார்களிடத்திலும் முன்மாதிரி நமக்கு இருக்கின்றன. நபி மூஸா (அலை) அவர்கள் அநீதி இழைக்க கூடிய, கொடூக்கோல் மன்னனான ஃபிர்அவ்னிடம் போர் செய்யாமல் அநீதியிழைக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்துள்ளார்கள்.
 நபி ஷுஐப் (அலை) அவர்கள் ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததுடன் அவரது சமுதாயத்தில் நிலவிய பொருளாதாரச் சுரண்டலையும், அளவு நிறுவைகளில் மோசடி செய்ததையும் கண்டித்துப் பிரச்சாரம் செய்தார். இதுப் போன்று ஒவ்வொரு நபிமார்களும் போரட்டகளங்களை சந்தித்துள்ளார்கள்.  

அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தல்

18076 عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ (ص) وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ أَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِر *رواه أحمد
அநீதியிழைக்க கூடிய அரசனுக்கு எதிராக உண்மையை எடுத்துரைப்பது சிறந்த ஜிஹாத் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி­), நூல் : அஹமது 18076 

 ஆர்வமூட்டுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு போர்களை பற்றி ஆர்வம் மூட்டியதுப் போல் நம்முடைய சமுதாயத்திற்கு போராட்டங்களையும், அதனால் கிடைக்க கூடிய லாபத்தைப் பற்றி நாம் ஆர்வமூட்ட வேண்டும் என்பதை கீழ்கண்ட வசனத்தி­ருந்து விளங்கிக் கொள்ளலாம்.
நபியே! நம்பிக்கை கொண்டோருக்கு போர் செய்ய ஆர்வமூட்டுவீராக! அல்குர்ஆன் 8:65

அழைக்கப்பட்டால் செல்லுதல்

 அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு நம்மை அழைத்தால் உடனே செல்ல வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''(மக்காவின்) வெற்றிக்குப் பின்னால் (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் (இறைவழியில் தாயகம் துறந்து செல்வது) என்பது கிடையாது. ஆனால்,  அறப்போர் புரிவதும்  (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. போருக்குப் புறப்படும்படி நீங்கள் அழைக்கப்பட்டால் உடனே போருக்குச் செல்லுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி­), நூல் : புகாரி 2783

நபி (ஸல்) அவர்களின் ஆர்வம்

 அல்லாஹ்வின் பாதையில் போராடுவதற்கும், அதனால் கிடைக்க கூடிய லாபத்திற்காகவும் தன் உயிரை தியாகம் செய்தவற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமான ஆர்வம் காட்டிள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!  என்னை விட்டுப் பின்தங்கி விடுவதால் இறைநம்பிக்கையாளர்கள் சிலரது உள்ளங்களில் வருத்தம் உண்டாகாது என்றிருக்குமாயின் மேலும், அவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்களும் என்னிடம் இருந்திருக்குமாயின் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியச் செல்லும் எந்தச் சிறு படையையும் விட்டு நான் பின்தங்கியிருந்திருக்க மாட்டேன். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!  நான் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி, நூல் : புகாரி 2797

ஸஹாபாக்களின் ஆர்வம்

 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு போராடுவதற்கு ஆர்வம் கொண்டார்களே அதே போல் ஸஹாபாக்களும், ஸஹாபி பெண்மனிகளும், சிறிய ஸஹாபாக்களும் அதிமாக ஆர்வம் காட்டிள்ளார்கள்.

ஆண்கள் ஸஹாபாக்கள்

 ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''உன் தாயும் தந்தையும் உயிருடனிருக்கின்றார்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ''ஆம் (உயிருடனிருக்கின்றனர்)'' என்று பதிலüத்தார். நபி (ஸல்) அவர்கள், ''அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­), நூல் : புகாரி 3004
நபி (ஸல்) அவர்கள் சிலை வணங்கிகள், அறிவீனர்களுக்கு மத்தியில் ஓரிறைக்கொள்கை எடுத்து கூறும் போது அதை ஏற்றுக் கொள்ளாமல் நபி (ஸல்) அவர்களையும், அவரை தோழர்களையும் நாட்டை விட்டு விரட்டியடித்தார்கள். இதுப்போன்ற மோசமான செயல்களை பார்த்த சிலர் இணைவைப்பில் இருக்கும் தருவாயில் இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொண்டவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் இஸ்லாத்தில் இணைந்து போர் செய்வதற்கு ஆசைப்பட்டார்கள். ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பிறகு தான் நீ போராட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு கட்டுபட்டு இஸ்லாத்தை ஏற்று, பிறகு போர் செய்தார். அந்த போரில் வீரமரணத்தை அடைந்தார்.
நபி (ஸல்) அவர்களிடம் இரும்பு முகமூடி அணிந்த ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் முதலில் (இறைவழியில்) போர் புரிந்துவிட்டு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''(முதலில்) நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, பிறகு போர் புரி'' என்று கூறினார்கள். ஆகவே, அந்த மனிதர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு (இறை வழியில்) போரிட்டார்; (அதில்) கொல்லப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் (அவரைப் பற்றி), ''இவர் சிறிதளவே செயல்பட்டு அதிக நற்பலனைப் பெற்றுக்கொண்டார்'' என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : பராஉ (ரலி­), நூல் : புகாரி 2808

பெண் ஸஹாபாக்கள்

 ஆண் ஸஹாபாகள் எவ்வாறு போராடுவதற்கு ஆசைப்பட்டார்களே அதே போல் பெண் ஸஹாபாக்களும் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளார்கள் என்பதை கீழ்கண்ட செய்தி­ருந்து விளங்கிக் கொள்ளலாம்.
நாங்கள் (மகளிர்), ''அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?'' என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''(அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்தான்'' என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­), நூல் : புகாரி 1520

சிறிய ஸஹாபாக்கள்

 ஆண் ஸஹாபாக்களும், பெண் ஸஹாபாக்களும் போர் செய்வதற்கு ஆசைப்பட்டதை போல் பருவவயதை அடையாத சிறுவர்களும் ஆசைப்பட்டுள்ளார்கள்.
நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது, உஹுதுப் போர் நடந்த காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதியளிக்கவில்லை. அகழ்ப்போரின் போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­லி), நூல் : புகாரி 2664
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்தினால் போரிடுகின்றார். (மற்றொருவர்) இனமாச்சர்யத்தினால் போரிடுகின்றார். இவற்றில் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் போர் எது?' என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, ''எவர் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே போரிடுகின்றாரோ அவர்தாம் வரிவும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள்.

கேள்வி கேட்டவர் நின்றுகொண்டிருந்ததால்தான் நபி(ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்திப்பார்த்தார்கள்.
அறிவிப்பவர் : அபூமூசா அல்அஷ்அரீ (ரலி), நூல் : புகாரி 123
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் போர் செய்வதற்கு எதற்காக அதிகம் ஆர்வம் காட்டியுள்ளார்கள் என்றால் மறுமையில் கிடைக்க கூடிய பலனை எதிர்ப்பார்த்து தான்.

அல்லாஹ் விரும்புகிறான்

 இவ்வுலகில் வாழும் போது ஒருவர் மற்றொருவரின் நேசத்தையும், பாசத்தையும் எதிர்ப்பார்கின்றார்கள். அதாவது பிள்ளை தாயையும், மனைவி கணவனையும் எதிர்பார்க்கின்றார்கள். அதேப் போல் ஆட்சியில் இருக்க கூடியவர்களின் நேசத்தை பெறுவதற்கு தொண்டர்கள் சில செயல்களை செய்கிறார்கள். ஆனால் இவ்வுலகம் அழியக் கூடியது. மறுமை நிரந்தமானது. அதில் இறைவனுடைய பாசத்தை பெற வேண்டும் என்றால் இறைவன் கூறிய செயல்களை நம்முடைய வாழ்நாளில் கடைப்பிக்க வேண்டும். அதில் ஒன்று தான் இறைவழியில் போரிடுவது. இவ்வாறு செய்தால் அல்லாஹ் நம்மை நேசிக்க கூடியவான இருக்கின்றான் என்பதை கீழ்கண்ட வசனம் உணர்த்துகிறது.
உறுதியாக இணைக்கப்பட்ட கட்டடம் போன்று அணிவகுத்து தன் பாதையில் போரிடுவோரை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர்ஆன் 61:4

உலகத்தை விட சிறந்த செயல்

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் பாதையில்  காலை நேரத்தில் சிறிது நேரம் அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்ததாகும்.  அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), நூல் : புகாரி 2792

 சிறந்த அமல்

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ''எந்த நற்செயல் சிறந்தது?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ''அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை (ஈமான்) கொள்வது'' என்று பதிலளித்தார்கள். ''பிறகு எது?'' என்று கேட்கப்பட்டபோது, ''இறை வழியில் அறப்போர் புரிவது'' என்றார்கள். ''பிறகு எது?'' என்று கேட்கப்பட்டபோது, ''ஏற்றுக் கொள்ளப்பட்ட (பாவச் செயல் கலவாத) ஹஜ்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­), நூல் : புகாரி 26

குறைய செயல் நிறைவான அமல்

 நபி (ஸல்) அவர்களிடம் இரும்பு முகமூடி அணிந்த ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் முதலில் (இறைவழியில்) போர் புரிந்துவிட்டு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''(முத
லில்) நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, பிறகு போர் புரி'' என்று கூறினார்கள். ஆகவே, அந்த மனிதர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு (இறை வழியில்) போரிட்டார்; (அதில்) கொல்லப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் (அவரைப் பற்றி), ''இவர் சிறிதளவே செயல்பட்டு அதிக நற்பலனைப் பெற்றுக் கொண்டார்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : பராஉ (ர­லி), நூல் : புகாரி 2808

முன் ஏற்பாடு செய்தல்

 அகழ்ப் போர் சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள்  இருந்தோம். நபித்தோழர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தனர். நாங்கள் எங்கள் தோள் மீது மண் சுமந்து கொண்டிருந்தோம். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இறைவா! மறுமை வாழ்வைத்தவிர வேறு (நிரந்தர) வாழ்வு கிடையாது. ஆகவே, (அதற்காக உழைக்கும்) முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!'' என்று (பாடியபடி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி),
நூல் : புகாரி 4098

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுக்கிறாரோ அவரும் புனிதப் போரில் பங்கு பெற்றவராவார். எவர் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவரது வீட்டாரின் நலத்தைப் பாதுகாக்கின்றாரோ அவரும் புனிதப் போரில் பங்கு பெற்றவராவார்.  

அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் (ரலி),
நூல் : புகாரி 2843

பொருள் இல்லாவிட்டாலும் தயார் ஆகுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!  என்னை விட்டுப் பின்தங்கி விடுவதால் இறைநம்பிக்கையாளர்கள் சிலரது உள்ளங்களில் வருத்தம் உண்டாகாது என்றிருக்குமாயின் மேலும், அவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்களும் என்னிடம் இருந்திருக்குமாயின் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியச் செல்லும் எந்தச் சிறு படையையும் விட்டு நான் பின்தங்கி யிருந்திருக்க மாட்டேன். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!  நான் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு , மீண்டும் கொல்லப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி,
நூல் : புகாரி 2797

லாபம் கிடைக்காவிட்டாலும் சிறந்த அமல்

 ''(துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் எந்த நற்செயலும் இந்த (அய்யாமுத் தஷ்ரீக்) நாட்களில் செய்யும் எந்த நற்செயலையும் விடச் சிறந்ததல்ல'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அறப்போர் (ஜிஹாத்) கூட (சிறந்தது) இல்லையா?'' என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அறப்போர் கூட(ச் சிறந்தது) இல்லை தான். ஆனால், தம் உடலையும் தமது பொருளையும் (இறைவழியில்) அர்ப்பணிக்கப் புறப்பட்டுச் சென்று எதுவுமில்லாமல் திரும்பி வந்த மனிதரைத் தவிர'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­),
நூல் : புகாரி 969

குறை, நிறைகளை சகித்துக்கொள்வது

 உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். அல்குர்ஆன் : 2:177

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் ஒரு புனிதப் போருக்கு(த் தலைமை யேற்று)ச் செல்ல நாடினால் பெரும் பாலும் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள். தபூக் போர் (நேரம்) வந்தபோது அதற்காகக் கடும் வெயிலில் நபி (ஸல்) அவர்கள் படையெடுத்துச் சென்றார்கள். தொலைதூரப் பயணத்தையும் (பாலைவன) வனாந்தரப் பகுதியைக் கல்ந்துசெல்வதை யும் அவர்கள் எதிர்பார்த்தார்கள். அதிக (எண்ணிக்கையிலான) எதிரிகளைச் சந்திப்பதையும் எதிர்பார்த்தார்கள். தம் எதிர்பார்ப்பை முஸ்லிம்களுக்கு வெüப் படையாக உவ்ர்த்திவிட்டார்கள். முஸ்லிம்கள் தம் பகைவர்களின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தங்களைத் தஸ்ôர்படுத்திக்கொள்வதற்காக இப்படிச் செய்தார்கள். தாம் விரும்பிய (தபூக்) திசையை அவர்களுக்குத் தெரிவித்தும்விட்டார்கள்.

அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக்  (ரலி),
நூல் : புகாரி 2984