ஆமதாபாத் : குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து, குஜராத் ஐகோர்ட், அரசிற்கு கோர்ட் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2002ம் ஆண்டில், குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா கலவரத்தின் எதிரொலியாக தொடர்கலவரங்கள் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பலர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்று குஜராத் ஐகோர்ட், கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களாகிய தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்று அவர்களின் சார்பில் குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட 56 பேருக்கு உரிய நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், கோர்ட் உத்தரவை அமல்படுத்தாத குஜராத் அரசு மீது கோர்ட் அவமதிப்பு வழக்கிற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கலவரத்தால் சேதமடைந்த 600க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்களை சீர்படுத்தும் பொருட்டு, நிதியை ஒதுக்க வேண்டும் என்று அரசிற்கு ஐகோர்ட் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி
தினமலர்